Sunday, April 5, 2015

ஞாயிறு 300 :: எங்களை மறந்துடாதீங்க!

                                   
                             
ஹலோ - உங்க எல்லோருக்கும் இந்த புறா தம்பியின் வணக்கம். 
கோடை வந்துடுச்சு.  
என்னைப் போன்ற பறவைகளுக்காக உங்கள் வீட்டு மேல் மாடியில், தண்ணீர்த்தொட்டி வைத்து, அதில் தினமும் காலையில் தண்ணீர் விட்டு வையுங்கள். 
பறவைகளின் தாகம் தீர்த்தவர்களின் பல தலைமுறைகள் சுகமாய் வாழ்வார்கள். 

மிக்க நன்றி! 

21 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் தண்ணர் வைப்போம்

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக...!

ராமலக்ஷ்மி said...

செய்திடலாம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல எண்ணம். அனைவரும் செய்ய வேண்டும்...

sury Siva said...

Mel maadi open terrace le poyi thanni vechu adutha naal paathiram kaanom
Flats le enna seyyanum
Konjum purave
Konjam sollen
Subbu thatha

middleclassmadhavi said...

கட்டாயமாக!! பாத்திரம் திருட்டுப் போனால், ஒரு கொட்டாங்கொச்சியிலாவது வைக்கிறோம், கீழே கொட்டாதவாறு!!

sury Siva said...

//கட்டாயமாக!! பாத்திரம் திருட்டுப் போனால், ஒரு கொட்டாங்கொச்சியிலாவது வைக்கிறோம், கீழே கொட்டாதவாறு!!//

சூப்பர் ஐடியா ..தாங்க்ஸ் மேடம்.

அந்த காலத்துலே எங்க அம்மா எங்க திருச்சி ஒட்டு வீட்டு மேலே
கொட்டாங்கச்சி லே தான் வைப்பாங்க.. அதையும் நினைவு படுத்தினீர்கள்.

பை த வே,
கொட்டாஞ்கொச்சி யா அல்லது கொட்டங்கச்சி யா. ?

கொட்டாது இருக்கும் கச்சட்டி போன்ற தேங்காய் மூடி பாதி துருவி எடுத்த பின்னே. காரணப்பெயரோ !!

எப்படி இருந்தால் என்ன ? கொட்டான்கொச்சி வாங்க இதோ மார்கெட் கிளம்பிகிட்டே இருக்கேன்.

வெய்யில் கொளுத்தறது. ஒரு ஸ்ப்ரைட் பாட்டில் எடுத்துட்டு போறேன்.

அது சரி, புறாவுக்கு தண்ணீர் ஆர். ஓ. வாட்டரா? இல்ல கார்ப்பரேஷன் வாட்டர் போதுமா ?

சுப்பு தாத்தா.RAMA RAVI (RAMVI) said...

ஆம் கட்டாயம் செய்ய வேண்டியதுதான்..

Angelin said...

//பறவைகளின் தாகம் தீர்த்தவர்களின் பல தலைமுறைகள் சுகமாய் வாழ்வார்கள். ///
அருமையான செயல் ...கட்டாயம் செய்வோம்

ரூபன் said...

வணக்கம்
ஐயா
நிச்சயம் செய்கிறோம்.... த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

எங்கள் பக்கம் பறக்கும் பறவைகளே வருவதில்லை. . காகம்தவிர அவற்றுக்குச் சோறு வைப்பதுண்டு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

புறாத்தம்பியின் வேண்டுகோள் நியாயமானது.

MCM Madam அவர்களின் முன்னெச்சரிக்கை பாராட்டத்தக்கது.

பகிர்வுக்கு நன்றிகள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!


//பறவைகளின் தாகம் தீர்த்தவர்களின் பல தலைமுறைகள் சுகமாய் வாழ்வார்கள். //
தங்கள் சொல் உண்மையானது.
கண்டிப்பாக செய்ய வேண்டிய செயல்.
இங்கு புறாக்கள்தான் அதிகம் அவற்றின் தாகம் தணிந்திட பால்கனியில் தினமும் நீர் வைத்து வருகிறேன் இனி தினமும் அப்பணி செய்கிறேன்.அதைச் செய்ய நினைவுபடுத்திய தங்களுக்கும் நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai said...


எங்கள் வீட்டுப்பக்கமும் வரச்சொல்லுங்கள் நண்பரே...

கோவை ஆவி said...

//கொட்டாஞ்கொச்சி யா அல்லது கொட்டங்கச்சி யா. ?//

சுப்பு தாத்தா - எங்க ஊர்ல அதை கொட்டாங்குச்சி என்று அழைப்பார்கள்.

கோவை ஆவி said...

அனன்யா இப்போதான் காக்கா பதிவு ஒண்ணு போட்டாங்க.. இங்கே புறா பதிவு.. அடுத்து குயில் பதிவு யாராச்சும் போடுவாங்களோ?

Bagawanjee KA said...

கண்ட தண்ணியைக் குடிக்கிற பறவைகள் நல்லாத்தானே இருக்கு ,மனுஷனுக்கு மட்டும் ஏன் இத்தனை நோய்கள் என்று அடிக்கடி நினைப்பதுண்டு ,இருந்தாலும் புறாவுக்கு நல்ல தண்ணியைக் காட்டி விடுகிறேன் :)

கீத மஞ்சரி said...

தேங்கிய நீருக்கும் வழியில்லாமல் தரை உறிஞ்சிய நீரைத் தாகம் தணிக்கத் தேடும் பறவையைப் பார்த்தால் பாவமாக உள்ளது. நம்மால் முடிந்த சிறு செயல் தினமும் தண்ணீர் வைப்பது. அதை செவ்வனே செய்வோம். நினைவூட்டலுக்கு நன்றி.

கொட்டங்குச்சியில் தொடர்ந்து பலநாட்கள் தண்ணீரை வைத்திருந்தால் கொசு உற்பத்திக்கு வழிவகுத்துவிடும். அதனால் தினமும் தண்ணீரை மாற்றிவிடுவது நல்லது.

Geetha Sambasivam said...

பறவைகள் மட்டுமின்றி விலங்குகளின் தாகமும் தீர்க்கப்பட ஆவன செய்யவேண்டும். அதனால் தான் அவை ஊருக்குள் வருகின்றன. காட்டை அழிக்காமல் நீர் நிலைகளை அழிக்காமல் இருந்தால் விலங்குகள், பறவைகள் எல்லாமும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்.

Kalayarassy G said...

கடுங்கோடையில் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க வேண்டியதன் அவசியத்தைப் புறாத் தம்பியின் மூலம் வேண்டுகோள் வைத்து வலியுறுத்தியிருப்பது புதுமை! பாராட்டுக்கள் ஸ்ரீராம்!

Thulasidharan V Thillaiakathu said...

வைச்சாச்சு! வைச்சுடறோம்....எல்லாத்துக்கும் வைப்போம்ல....நாலுகால்களுக்கும், பறப்பன எல்லாத்துக்கும்....நிறைய பேர் வராங்களே! நம்ம மூதாதையரும் வராங்க....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!