செவ்வாய், 7 ஏப்ரல், 2015

போராட்டங்கள்


யவனராணியும், கடல்புறாவையும் எழுதிய சாண்டில்யனின் பன்முகத் திறமையைச் சொல்லும் நூல்.  அவரது போராட்டங்களை அவரே சொல்லியிருக்கிறார் - நகைச்சுவை மிளிர.
 

Image result for yavanarani images                           Image result for yavanarani images
 
76 இல் குமுதத்தில் வந்த தொடர்.  அவ்வப்போது நிறைய எதிர்ப்புக் கடிதங்களும் வந்திருக்கின்றன என்று தெரிகிறது.  என் வீட்டில் பைண்டிங் கலெக்ஷனில் முன்பே பார்த்த நினைவு.  ஆயினும் இந்தப் பு.க.காயில் வாங்கி விட்டேன்!

கொஞ்சம் வளைத்து நீட்டி, சுருக்கமாகச் சொல்ல வேண்டிய விஷயங்களையும் சுற்றி வளைத்துச் சொல்கிறார் என்று தோன்றியது.  அதுதானே அவர் பாணி!
ஆனாலும்,

ஆங்கிலப் பத்திரிகைக்கு மட்டுமே மதிப்பு என்று இருந்த நாளில் சுதேசமித்திரன், ஹிந்துஸ்தான் போன்ற பத்திரிகைகளின் விற்பனையை உயர்த்த வெகுவாக உதவியது,

பத்திரிகையாளர்களுக்காகச் சங்கம் என்ற ஒன்றை நிறுவ முதன் முதலில் குரல் கொடுத்து, பாடுபட்டு, தான் மதிப்பு வைத்திருந்த பெரியவர்களுடனேயே கருத்து மோதல் ஏற்பட்டு அவர்கள் கருத்துகளையும் ஜெயித்து, சங்கம் அமைத்த வரலாறு,

பத்திரிகையாளர்களுக்காக முதன் முதலில் ரிட்சி ஸ்ட்ரீட்டில் ஒரு இடத்தை விலைக்கு வாங்கி, (நண்பர்களான மகாராஜபுரம் சந்தானம், நாகையா, சித்தூர் சுப்பிரமணியம் போன்ற பெரும் வித்வான்களை வைத்து கச்சேரிகள் நடத்தி) அதில் வசூலான பணத்தைக் கொண்டு கட்டிடம் கட்டியது,

தியாகையா, அம்மா போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்கள் பெரும் வெற்றி பெற்றது, ('என் வீடு' என்ற படத்தைப் பற்றியும் சொல்கிறார்.  பெரும் வெற்றி பெற்ற படம், நாகையா நடித்தது என்றும் சொல்கிறார்)

புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகள் 'மனிதன்' என்கிற அவ்வை டி கே ஷண்முகம் அவர்களின் நாடகம், பின்னர் அதே நாடகம் திரைப்படமாக வந்தபின்னும் அதன் கதைக் கருவை விமர்சனம் செய்து, அதனால் வந்த பதில்களுக்கு பதில் சொல்லி என்று அந்தச் சண்டை பற்றியே எழுதி, பாதி புத்தகம் அதிலேயே போய்விடுகிறது.

நிறைய இடங்களில் ராஜாஜியை வம்புக்கு இழுத்திருக்கிறார்! 

1935 களில் ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர்களின் ஆரம்பச் சம்பளம் 250 ரூபாயாம்.  தமிழ்ப் பத்திரிக்கை என்றால் தினமணியில் 60 ரூபாயாம்.

மகாத்மா காந்தியுடன் ஒரு பத்திரிகையாளராக ஒரு வாரம் தங்கியிருந்திருக்கிறார்.
 
தீரர் சத்தியமூர்த்தி - ராஜாஜி பனிப்போர் பற்றி லேசாக சொல்லி இருக்கிறார். இதற்கும் மறுப்பு வந்து பதில் அளிப்பதில் சில பாராக்கள்!  சத்தியமூர்த்தி இவர் எழுதிய முதல் அரசியல் நாவல் 'பலாத்காரம்' என்கிற புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறாராம்.  விற்பனை வரியை தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ராஜாஜிக்குத்தானாம்! 
 
 
      Image result for sandilyan images                      Image result for sandilyan images
'உதயபானு'வும், 'இளையராணி'யும் அவர் எழுதிய முதல் சரித்திரக் கதைகள் என்று தெரிகிறது.  அவை சுதேசமித்திரன் ஞாயிறுமலரில் வெளியிட்டிருந்திருக்கிறார்!  (அவர்தான் அந்த இதழுக்குப் பொறுப்பு.  வார அனுபந்தம் என்று இருந்த பெயரை ஞாயிறு மலர் என்று மாற்றியதும் இவர்தானாம்)
 
இப்படிச் சுவாரஸ்யங்கள் இருந்தாலும், அவர் எழுதிய புகழ் பெற்ற சரித்திர நாவல்களான யவனராணி, கடல்புறா, ஜலதீபம் காலத்துக்கு எல்லாம் அவர் வருமுன்னரே போராட்டங்களை முடித்து விடுகிறார்.
 
 
 

 
 
 
போராட்டங்கள்
வானதி பதிப்பகம்,
174 பக்கங்கள்,
32 ரூபாய்.

17 கருத்துகள்:


  1. சாண்டில்யன் எழுத்துலகில் புரட்சி வீரன் அவர் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பிண்ணனியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    உண்மைதான் இவர்களின் சுவடுகள் எப்போதும் வாழந்து கொண்டிருக்கிறது த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    பதிலளிநீக்கு
  3. வலைப் பதிவில் சரித்தர நாவல்கள் பற்றி கீதா சாம்பசிவம் எழுதி வருகிறார் . இப்போது நீங்கள் சரித்திர நாவலாசிரியர் பற்றி. இவர்கள் எழுதியதை எல்லாம் படித்து சரித்திர கால மாகிவிட்டதுஒரு சிறு சம்பவத்தையும் வள வளான்னு சாண்டில்யன் எழுதி வந்தது ஏனோ நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  4. யவனராணி, கடல்புறா, ஜலதீபம் பற்றி எல்லாம் எழுதலைன்னா ,அப்புறம் எதுக்கு சாண்டில்யன் என்ற பெயரில் 'போராட்டத்தை ' வெளியிட்டார் :)

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே.!

    எழுத்தாளர் சாண்டில்யனின் போராட்டங்கள் என்ற நூலைப் பற்றி விமர்சனம் சிறப்பாக எழுதியுள் ளீர்கள்.சாண்டில்யன் வர்ணனை அதிகம் கொடுத்து எழுதுவார்.சிறந்த எழுத்தாளர்.அவரை நினைவு ௬ர்ந்தமைக்கு நன்றி.யவனராணி இளையராணி கதைகளை படித்துள்ளேன். ஆனால் கதை இப்போது நினைவில்லை. நேரம் கிடைத்தால் மீண்டும் படிக்கலாம்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. சாண்டில்யனின் தொடர் கதைகள் சுவாரஸ்யமானவை. ஆனால் என் ஓட்டு தேவனுக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  7. போராட்டத்தை வாசிக்க வேண்டும்.... நன்றி...

    பதிலளிநீக்கு
  8. சாண்டில்யன் நாவல்களைத் தேடி அலைந்ததும், வாராவாரம் புத்தகங்களை வாங்கி, தொடரைச் சேமித்து தைத்து தனியொரு நூலாக பாதுகாத்ததும் நினைவிற்கு வருகின்றன நண்பரே
    நன்றி
    போராட்டங்கள் நூலினை அவசியம் வாங்கிப் படிப்பேன்

    பதிலளிநீக்கு
  9. படிக்கணும்னு ஆர்வத்தை தூண்டுதே.. சாண்டில்யன் அவர்களின் படத்தை இன்றுதான் முதன் முதலில் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. படிக்கணும்னு ஆர்வத்தை தூண்டுதே.. சாண்டில்யன் அவர்களின் படத்தை இன்றுதான் முதன் முதலில் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. குமுதத்தில் வந்தப்போப் படிச்ச நினைவு இருக்கு. ஒரு சமூகக் கதையும் குமுதத்தில் எழுதி இருக்கார். அதிலும் வர்ணனைகள் எல்லாம் அதீதமாக இருக்கும். காளிதாசனைக் கரைச்சுக் குடிச்சவர் ஆச்சே! யவனராணி டவுன்லோடு பண்ணி வைச்சிருக்கேன். மன்னன் மகள் பேப்பராக இருக்கு! கடல்புறா குமுதத்திலே வந்தப்போப் படிச்சது. ராஜமுத்திரையும் அப்போப் படிச்சது தான். அதுக்கப்புறமும் மராட்டியர்களை வைத்து ஜலதீபம்னு ஒண்ணு எழுதினார். பாதி படிச்ச நினைவு இருக்கு. முழுதும் படிக்கலை! :))) கன்னிமாடம் ஆதிகாலத்தில் எழுதியவற்றில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  12. கில்லர்ஜீ, ரூபன், ஜி எம் பி ஸார், பகவான்ஜி, கமலா ஹரிஹரன், பழனி.கந்தசாமி ஸார், (முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தேவனுக்கும், இவருக்கும்தான் போட்டி. தேவன் வெற்றி பெற்றாராம். அதைப் பற்றியும் எழுதி இருக்கிறார்), டிடி, கரந்தை ஜெயக்குமார், கோவை ஆவி (நிறைய பேர்களுக்கு அவர் படத்தைப் பார்த்ததும் ஒரு சின்ன ஏமாற்றம் வரும்! அவரா இவர்? என்று!), கீதா மேடம்...

    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சாண்டில்யன் படைப்புகள் என்னிடம் நிறைய இருக்கிறது கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  14. சாண்டில்யன் நாங்கள் இருவருமே நிறைய வாசித்திருக்கின்றோம். சுவாரஸ்யமாக இருக்கும் என்றாலும் சில இடங்களில் கொஞ்சம் என்ன நல்லாவே நீட்டி எழுதியிருப்பார்...ஆனால் சுவாரஸ்யமான எழுத்தாளர் குமுதத்தில் இவரது கதைகள் அப்போது பிரபலம்...

    (கீதா: சாண்டில்யன் என்றாலும் தேவன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது எங்கள் குடும்பம் பெரிது புத்தகத்திலிருந்து பஒரு குறிப்பிட்ட பகுதி எடுத்து அதை நாடகத்திற்க்கா வசனம் எல்லாம் எழுதி என் இயக்கத்தில் கல்லூரியில் நடித்தும் ...செய்திருக்கின்றோம்..நல்ல ஹாஸ்யம் இழையோடும் எழுத்துக்கள். அதனால் மிகவும் பிடிக்கும்...ஜஸ்டிஸ் ஜகன்நாதன், லக்ஷ்மி கடாக்ஷம், மிஸ்டர் வேதாந்தம்...துப்பறியும் சாம்பு மிகவும் பிடிக்கும்..சிஐ டி சந்துரு....இப்படி கல்லூரியில் நிறைய வாசித்தது உண்டு. அதுக்கு அப்புறம் சீரோ.....சுத்தம் வாசிப்பு இல்லாமல் ஆனது ....சூழ்நிலையால். மீண்டும் இப்போது...)

    பதிலளிநீக்கு
  15. அவரின் சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். போராட்டங்கள் எனும் புத்தகம் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்....

    படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மிக அருமை. யவனராணி படித்துக்கொண்டிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  17. போராட்டங்கள் தொடரை வந்தபோதே படித்தது தான். சாண்டில்யனின் மலைவாசல் புத்தகத்தை நான் படித்த போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சில வருடங்கள்முன்வரை அவர் கதைகளின் வருடாந்திர ரிவிஷன் இருக்கும்.. மனப்பாடம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!