திங்கள், 11 மே, 2015

'திங்க'க் கிழமை 150511 :: பிரெட் பட் பட்

                 
கடைக்குச் சென்று மைதா கலக்காத, ஹோல் வீட் (whole wheat) ப்ரெட் வாங்கி வரவும். வெள்ளை பிரெட்டில் சத்து கிடையாது. பிரவுன் ப்ரெட் வாங்கி வரவும். பிரெட் பாக்கெட்டின் மீது எந்தத் தேதிக்குள் அதைப் பயன்படுத்தலாம் என்று தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து வாங்குங்கள். வாங்குகின்ற தேதி தள்ளி, குறைந்த பட்சம் இரண்டு மூன்று நாட்கள் காலாவதி தேதி இருக்கின்ற பிரெட் வாங்குங்கள்
    

(எங்கள் ஊரில், ஒரு ஹோல் வீட் ப்ரெட் (நானூறு கிராம்) பாக்கெட், முப்பது ரூபாயிலிருந்து முப்பத்தேழு ரூபாய்க்குள் விற்கின்றது. 
            
பிரெட் பாக்கெட்டைத் திறங்கள். நாலைந்து பிரெட் துண்டுகள்ஒருவருக்குப் போதும் (என்று நினைக்கின்றேன்அவரவர் வயதைப் வயிறைப் பொறுத்து

உங்களுக்கு யார் மீது அல்லது எதன் மீது கோபமோ, அவரை / அதை நினைத்து, அந்த நாலைந்து பிரெட் துண்டுகளையும் கன்னா பின்னாவென்று பிய்த்துப் போடுங்கள். (குப்பையில் அல்ல; ஒரு பாத்திரத்தில்!)
                      
        
தேவைக்கேற்ப உப்புப் பொடி இட்டு, சிறிது தண்ணீரும் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
               
வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக அரிந்து, வாணலியில் சிறிது சமையல் எண்ணெய் விட்டு, அதில் வெங்காயத்துண்டுகளை இட்டு, வதக்கவும் வெங்காயம் கலர் மாறி வெள்ளை நிறமாகி, கொஞ்சம் பொன்னிறம் ஆகும்பொழுது, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். வதக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
               

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு போட்டு அவை வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு இரண்டு சிறிய துண்டுகள் மிளகாய் வற்றல் போட்டு, வதக்கி, உளுத்தம் பருப்பு பொன்னிறம் வந்தவுடன், பிரெட் கலவையை அதில் கொட்டி, நன்றாகக் கிளறவும்.
                

சிறிது நேரத்தில் இறக்கி, புளித்த மோரை வெந்த பிரெட் கலவை மீது ஊற்றி, கலக்கி, வதக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கலக்கவும்.
                 
பிரெட் பட் பட்  ரெடி.
              
   


(சில ரசனை இல்லாதவர்கள், இதை 'பிரெட் உப்புமா' என்று அழைப்பார்கள்! உப்பு இருந்தாலும் இதிலே மாவு இல்லையே!) 
                      

14 கருத்துகள்:

  1. grrrrrrrrrrrrrrrrr இதை நான் ப்ரெட் உப்புமானு தான் சொல்லுவேன். :P

    பதிலளிநீக்கு
  2. comment moderation??? இது என்ன புதுசா???????????????

    பதிலளிநீக்கு
  3. Comment moderation காரணம் ஞாயிறு 305 பரிசுப் போட்டி.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  5. இதுவும் நல்லாத்தான் இருக்குமோ....

    பதிலளிநீக்கு
  6. நீங்க என்ன சொன்னாலும் இது பிரெட் உப்புமாவேதான். மாவு கோதுமையில் இருக்கு. அதுதான் "வீட் பிரெட்"

    பதிலளிநீக்கு
  7. உப்புமா :) தில்லியில் நிறைய கம்பெனிகளின் ப்ரெட் கிடைக்கும் - பகோடா, டோஸ்ட், சாண்ட்விச் என சாப்பிட்டு அலுக்கும் போது இப்படியும் செய்யலாம்!

    வடக்கில் இந்த ப்ரெட்டுக்கு இன்னும் ஒரு பெயர் உண்டு! யாருக்காவது தெரியுதான்னு பார்க்கலாம்! :)

    பதிலளிநீக்கு
  8. நல்லா இருக்கும் போலருக்கே?

    பதிலளிநீக்கு
  9. உப்புமா என்றே அறிந்திருக்கிறேன்:). இந்தப் பெயர் நல்லாயிருக்கு. புளித்த மோர் சேர்த்ததில்லை. செய்முறையிலும் சில வித்தியாசங்கள். குறிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே.

    இதை நாங்களும் ப்ரெட் உப்புமா என்றே ௬றுவோம். வெங்காயம் வதக்கி அதனுடன் எந்த ஒரு பொருளையும்(ரவை வகைகள், சேமியா, அவல், அரிசிகுருணை,)உப்புடன் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கிளறினால், அது உப்புமாதானே.!
    ஏதோ ஒன்று! பசி அடங்க ருசியுடன் சாப்பிட வேண்டும்.தங்கள் செய்முறை விளக்கமும் நன்றாகவே இருந்தது. புளித்த மோர் சேர்ப்பதில்லை.புளிப்பு வேண்டுமென்றால் தக்காளியை வதக்கி சேர்ப்போம்.பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல ரசனைக்கு பாராட்டுக்கள்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  12. பட் பட்டா. ஹூம் ப்ரெட் உப்பு ரொட்டி.சரியாமா

    பதிலளிநீக்கு
  13. செய்வதுண்டு! டிட்டோ....தயிர் சேர்த்தும் சேர்க்காமலும், வேறு வெஜ்ஜுகள் சேர்த்தும் சேர்க்காமலும் என்று.....ப்ரெட் கிச்சடினு வேணாலும் சொல்லிக்கலாமே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!