புதன், 6 மே, 2015

FBI ரகசியங்கள்



சாதாரணமாக இது போன்ற புத்தகங்களை கிழக்குப் பதிப்பகம்தான் வெளியிடும்.  மதி நிலையம் வெளியிட்டுள்ள, என். சொக்கன் எழுதியுள்ள நூல்.  



                Image result for FBI ரகசியங்கள் .  images                                                                     Image result for FBI ரகசியங்கள் .  images


புத்தகம் பதினாலு சுலபத் தலைப்புகளில் விரிகிறது.

FBI எப்படித் தோன்றியது,  எதனால் அந்தத் தேவை ஏற்பட்டது என்பதில் தொடங்குகிறது புத்தகம்.  இன்றைய தேதி வரை என்னென்ன முன்னேற்றங்கள் FBI யில் ஏற்பட்டுள்ளன என்று சொல்கிறார்.



1933 ல் நடந்த ஒரு கிட்னாப்பிங் வழக்கில் துப்பு துலங்குவது சுவாரஸ்யமான முதல் அத்தியாயமாக வருகிறது.


1865 ல் FBIக்கான வித்து போடப்படுகிறது.  உள்நாட்டுப் பிரச்னை, கள்ள நோட்டுக் கும்பல் போன்றவற்றைப் பிடிக்க வெளியில் தெரியாத ஒரு ரகசிய இயக்கமாக ஆரம்பிக்கப் படுகிறது.


சீக்ரட் சர்விஸ் என்ற பெயர் ஒரு கட்டத்தில் பீரோ ஆஃப் இன்வெஸ்ட்டிகேஷன்  என்ற பெயர் பெறுகிறது.  பின்னர் ஃபெடெரல் கூட ஒட்டிக் கொள்கிறது.


உலகப்போர்களில் உள்நாட்டில் ஊடுருவும் வெளிநாட்டு உளவாளிகள் பற்றி அறிய,  மற்றும் உள்நாட்டிலேயே  இருந்து கொண்டு வெளிநாடுகளுக்கு உளவு சொல்வோர் ஆகியவர்களைப் பற்றியும் ஆராயத் தொடங்குகிறது FBI. 


முக்கியமான வழக்குகளின் மூலம் எப்படி FBI கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பிரபலமானது, எப்படி ஒரு வழக்கில் (வாட்டர்கேட் ஊழல்)  கெட்டபெயர் வாங்கியது, அதிலிருந்து மறுபடி எப்படி வெளிவந்து ஒரு சக்தி வாய்ந்த ஸ்தாபனமாக  மாறியது என்று சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.


சகல விசாரணைகளும் செய்து, ஏகப்பட்ட விவரங்களை சேகரித்து வைத்திருந்தாலும் ஒருங்கிணைப்பு இல்லாததால் மற்ற துறைகளுடன் எப்படி FBI யால் இணைந்து செயல்பட முடியாமல் நிறையக் குற்றவாளிகள் தப்பித்தார்கள், அப்புறம் எப்படி ஒருங்கிணைத்தார்கள்,  எல்லா குற்றவாளிகளின் கைரேகை  உட்பட எல்லா விவரங்களையும் எப்படி, எப்போது முதல் சேகரிக்கத் தொடங்கினார்கள்.....


சார்லி சாப்ளின் மேல் ஒரு கண் அல்ல, பல கண் வைத்து உளவு பார்த்திருக்கிறார்கள்.  அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பாரோ என்ற சந்தேகம். (இளம் சிறுமிகளை அழைத்துச் சென்று அவர்களுடன் பாலுறவில் ஈடுபட்டார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுதி வைத்திருந்தார்களாம்)  வெறுத்துப் போய்விட்டாராம் சாப்ளின்.


சோவியத் யூனியனுடனான அணுகுண்டு ரகசியங்கள் பற்றிய துப்பறியும் அத்யாயம் சுவாரஸ்யம்.  சில இடங்களில் அந்தக் கால காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் நினைவு வருகிறது!


"அமெரிக்கா என்றைக்கும் எதற்காகவும் தன்னுடைய 'முதல்' இடத்தை விட்டுக் கொடுக்க முன்வராது. அப்படி அவர்கள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதற்கு FBI போன்ற அமைப்பு அவசியம்.  அதற்காக அமெரிக்க அரசாங்கங்கள் எவ்வளவு செலவு செய்யவும் தயங்குவதில்லை" என்கிறார்.




சுவாரஸ்யமான புத்தகம்.











FBI ரகசியங்கள்.
என். சொக்கன்.
மதி நிலையம்
180 பக்கங்கள் - 130 ரூபாய்.


11 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    வித்தியாசமான புத்தகம் வித்தியாசமான கதை அம்சம்மாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. fbi ஆயிரங்கால் பூதம் ,எல்லா நாடுகளிலும் காலை ஊன்றி நாசம் செய்வதுதான் அதன் பிரதான வேலை என்பதை வெளிச்சம் போட்டி காட்டி இருக்காரா :)

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான தகவல் அறிந்தேன். என்னைப் பற்றியும் விசாரித்திருப்பார்களோ? நானும் பிரபல பதிவர்தானே?

    பதிலளிநீக்கு
  4. சிறந்த நூல் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. நல்ல நூல் அறிமுகம். நன்றி

    பதிலளிநீக்கு

  7. நூல் வாங்குகிறேன் நண்பரே நன்றி

    பதிலளிநீக்கு
  8. இதுக்கு ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருந்தேன். என்னனு நினைவில் இப்போ வரலை! :)

    எங்கேருந்து தான் இப்படிச் சுவாரசியமான புத்தகங்களாத் தேடிப் பிடிச்சுப் படிக்கிறீங்களோ தெரியலை. இதெல்லாம் யாராவது கொடுத்தால் தான் எனக்குப் படிக்க வாய்ப்பு. பேசாம நீங்களே கொடுத்துடுங்க. படிச்சுட்டுச் சொல்றேன். புத்தக்த்தை ஞாபகமாத் திருப்பிக் கொடுத்துடுவேன். :)

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே.

    இந்த நூலைப் பற்றிய விரிவான தகவல்களுடன் ௬றிய விளக்கங்களுக்கு மிக்க நன்றி நல்ல நூலை அறிமுகபடுத்தியமைக்கும் நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அட சுவாரஸ்யமான புக் போல இருக்கு...துப்பறியும் கதைகள் என்றாலே சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!