Saturday, June 27, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1)  கடந்த வாரம் பெங்களுரில் அடர்ந்த இரவில் சாலையின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பசுமாட்டின் மீது கார் ஒன்று மோதி நிற்காது சென்று விட்டது.அந்த வழியே சென்ற சிலர் அந்த வழியே சென்ற சிலர் தோல் கிழிந்த தொங்கிக் கொண்டிருந்த நிலையில் பரிதாபமாக நின்ற அந்த கர்ப்பிணிப் பசுவின் தோலை தைக்க உதவினர். கூட்டத்தில் இருந்த கால்நடை உதவி மருத்துவர் சையத் அப்பாஸ் அறுவை சிகிச்சை செய்து கிழிந்த தோலைத் தைத்து உதவினார்.
தெருவிளக்கு எதுவும் எரியாத நிலையில், இருட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இந்த ஆபரேசனைச் செய்து முடித்தனர்.


மகத்தான மனிதாபிமானச் செயலை பாராட்டுவோம்... தினகரன்.


2)  "கூடலூர் தேசீகம் நண்பர்கள் குழு'வினர் சப்தமின்றி செய்து வரும் உதவி தன்னிகரற்றது.  குழுவில் கூடலூரைச் சேர்ந்த இளங்கோவன், கோபால், பாண்டிக்கண்ணன், சரவணன் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். மன நலம் பாதித்தவர்களுக்கு சேவை செய்வதுதான் இவர்களின் முக்கியமான தொண்டு. 
3)  உழைப்பே உயர்வு.  வனஜா.
4)  Sankara Eye Care -ன் சாதனைகள் பற்றி.  இலவசமாக பதிமூன்று லட்சம் கண் அறுவை சிகிச்சைகள்...
5)  தேனீ மாவட்டம் காக்கிவாடன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கணித ஆசிரியர் பால கிருஷ்ண குமாருக்கு, பூஜ்ஜியம் சதுர அடியில் பள்ளியில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்துள்ளமைக்குப் பாராட்டுகள்.

6)  பொழுதுபோக்காக  பொதுச்சேவை.  
7)  ஸாயிபா தாஜ்.  தனது ஒவ்வொரு நாளையும் இவர் கழிக்கும் விதம் அற்புதமானது.
8)  ஐந்து பெரியவர்களும், 40 இளைஞர்களும் ஏற்படுத்திய உணவு வங்கி.
9)  பஞ்சாப் வங்கியின் சேவை.
10)  பிரமிக்க வைக்கும் ரவீந்திரநாத்.  

11)  மேல் பெர்த்தில் இடும் கிடைத்தால் வரும் சிரமம் எல்லோரும் அறிந்ததே.  ரஞ்சனி மேடம்...  சரிதானே?  அதற்கு ஒரு தீர்வு வருகிறதாம்.  ஒத்து வருமா?  நடைமுறைக்கு வருமா?  பார்ப்போம்.
12)  பாராட்டுகள் அஞ்சும் அரா.  நாட்டிலேயே இப்போதுதான் இரண்டாவது இஸ்லாமியப் பெண்.  
13) உமா கண்ணன்.
14)  சீமா - ஒரு இன்ஸ்பிரேஷன்!

15) கிராமத்துக்கே வெளிச்சம் காட்டிய முன்னோடி லாலா தேஹ்ராஜி தாகோர் .


19 comments:

Geetha Sambasivam said...

போன வாரம் படிச்சேனா நினைவில் இல்லை. இந்த வாரம் அனைத்தும் அருமை. முக்கியமாக சூப் விற்கும் வனஜா!

அது என்ன பூஜ்ஜியம் சதுர அடி? புரியலை!(கணக்கு மணக்கு எனக்கு ஆமணக்கு)

பசுமாட்டு விஷயம் நெகிழ வைத்தது.

கூடலூர் ? எந்த கூடலூர்?

Geetha Sambasivam said...

ஜாய்பா தாஜ்! அதிசயிக்க வைக்கிறார்.

Geetha Sambasivam said...

பல சமயங்களிலும் எங்க வீட்டில் வீணாகும் உணவை நினைக்கையில் மனம் வருந்தும். ஆனால் வாங்க ஆள் இல்லை என்பதே உண்மை.அம்மாமண்டபம் பிச்சைக்காரர்களுக்கு எடுத்துச் சென்று கொடுக்கும் அளவுக்கு நிறைய இருக்காது. புதிதாய்ச் சமைத்த உணவு தான் என்றாலும் கொஞ்சம் தான் இருக்கும். ஆனாலும் அதையும் யாருக்கும் கொடுக்க முடியாது! வேண்டாம்னு சொல்லிடுவாங்க. பொதுவாக இப்போது யாரும் உணவாக வாங்கிக் கொள்வதை ஏற்பதில்லை என்பதே என்னுடைய அனுபவம்.

Ramani S said...

எனெர்ஜி ஊட்டிப் போகுது
தங்கள் பாஸிடிவ் செய்திகள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

பூந்தோட்டம் ரொம்பவே அழகு... உமா கண்ணன் அவர்கள் உட்பட பலரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்...

நன்றி...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எவ்வளவு செய்திகள்!. மருத்துவரின் மிருகாபிமானம் உட்பட அனைத்து செய்திகளும் அருமை

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான செய்திகள். சில செய்திகள் முன்பே படித்திருந்தாலும் மீண்டும் ரசித்தவை.

புலவர் இராமாநுசம் said...

அறையே சிறையாக முடங்கிப் போன எனக்கு தங்கள் பதிவு பல்சுவைக் களஞ்சியமாகி நான் அறிந்திராத பல செய்திகளை தருகிறது! நன்றி நண்பரே!

G.M Balasubramaniam said...

வரந்தோறும் வரும் பாசிடிவ்செய்திகள் நம்மிலும் சிறந்தோர் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது தரம் தாழவில்லை. வாழ்த்துக்கள்.

பரிவை சே.குமார் said...

பாஸிட்டிவ் செய்திகள் அருமை அண்ணா...
சில படித்தவை... பல இப்போதுதான் படித்தேன்...
நல்ல தொகுப்பு.

‘தளிர்’ சுரேஷ் said...

இந்த வாரம் நிறைய பாசிட்டிவ் செய்திகள் போல! அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

Kamatchi said...

எல்லா செய்திகளும் மனதைக் கவரும் அருமையான செய்திகள். பசுதானத்தைவிட அதற்கு ஸமயத்தில் அதுவும் இரவில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை ஞாபகம் வந்தது. எல்லா நல்ல காரியங்களும் தொகுத்துக் கொடுக்கிறீர்கள். நல்ல காரியம். அன்புடன்

Kamatchi said...

உங்கள் மேய்ச்சல் நிலத்தில் நானும் ஒரு புல்லாக இருப்பதற்கு விரும்பினதை பூர்த்தி செய்தது மிக்க ஸந்தோஷமும்,நன்றியுமாக இருக்கிறது. அன்புடன்

Bagawanjee KA said...

ips அதிகாரியான அஞ்சும் அரா, அஞ்சாமல் இன்னும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள் :)

mageswari balachandran said...

வணக்கம்,
அனைத்தும் அருமை, அதிலும் மாட்டுக்கு வைத்தியம் போற்றப்பட வேண்டியவர், எந்த வசதியும் இல்லாமல் அவர் பார்த்த வைத்தியம், வாழ்க,
தங்களுக்கு நன்றி.

சென்னை பித்தன் said...

பாசிடிவ் செய்திகளைப் படித்தால் நம் சிந்தனையும் பாசிடிவ் ஆக மாறி விடுகிறத்!

Angelin said...

அனைத்துமே அருமையான செய்திகள்

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துமே பாசிட்டிவ்தான்...அந்த கால்நடை மருத்துவர் முதன்மை வகிக்கின்றார்....பாராட்டுகள். வாழ்த்துகள் அவருக்கு!

KILLERGEE Devakottai said...

All Super.....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!