Saturday, July 25, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1)  மாற்றி யோசித்த புதிய யோசனை.  ஊர் சுத்தமானா சரி!   குப்பவண்டி டாட் காம்!
 


 
2)  ஆடை மாற்றுவதை செல்படம் எடுக்க வழியில்லை என்பதோடு நேரம் மிச்சம்.  இன்னொரு புதிய ஐடியா!
 


 
3)  அவசியமாகச் செய்ய வேண்டிய வேலை - அதுவும் சென்னையில்.  மரங்கள் நகர் முழுவதும் வளர ஏதுவாகும்.
 


 
4)  வாடிக்கையாளர்கள் விட்டுச் சென்ற பனிரண்டு மொபைல்களை திருப்பிக் கொடுத்த நேர்மையான் ஆட்டோக்காரர் மூர்த்தி.
 


 
5)  நல்ல அமைப்பு, நல்ல முயற்சி.  அப்படியே இந்தக் கருவேல மரங்களை ஒழிக்கவும் ஏதாவது செய்ங்க ஸார்!
 


 
 


 
7)  பாஸிட்டிவ் ஆட்டோ ஓட்டுனர்.
  
8)  சினிமாவில் நடப்பது போல இருக்கிறது இதைப் படிக்க.  டைம்லி ஆக்ஷன் என்பார்களே..  அது!  சுமார் 5000 கிராமவாசிகளைக் காப்பாற்றிய ஹர்ஷத் பிமானிக்கு இருந்த நேரம் 30 நிமிடங்கள்!
 


 
 
9) பணம் வருவதா வேலை?  மனசுக்குப் பிடித்த சேவைதான் வேலை.  ஸோனல்
 


 
 
10)  இவர் ஒரு விவசாயிதான்.  ஆனால் இவர் சில பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.  எப்படி என்கிறீர்களா?  அவர் சொல்வதைக் கவனியுங்கள் " :'' ஊறாத கிணறு... ஓடாத மோட்டார்... விளையாத நிலமா... வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்'' என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் பிச்சை.
 
 
 

 
 
11)  கௌரங் தமானி.  மும்பை கிங்க்ஸ் சர்கிள் ரயில்வே ஸ்டேஷனை கௌரவமான இடமாக மாற்றிய கதை.
 
12)  வெங்கட் பதிவில் சொல்லப் பட்டிருக்கும் பெயர் தெரியாத அந்த 60 வயது "மனிதர்".  நன்றி வெங்கட்.


32 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கருவேல மரங்களை ஒழிக்க சில அமைப்புகள் இப்போது இறங்கி வேலை செய்கின்றன...

மைதீன் பிச்சை அவர்கள் போல் நிறைய பேர்கள் இருக்க வேண்டும்..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நல்ல விசயங்களைத் தொகுத்து தருவதற்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான செய்திகள்...

எனது தளத்தில் பகிர்ந்த செய்தியையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

த.ம. +1

ஊமைக்கனவுகள். said...

நீண்ட நேரம் ஆனால் என்ன..?

உற்சாகம்.

நன்றி.

G.M Balasubramaniam said...

இம்மாதிரி செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன.

வலிப்போக்கன் - said...

ஊருக்கு ரெண்டு மூனு பேர்தான் நல்லவர்களாக இருப்பார்கள்.

Angelin said...

'குப்பைவண்டி ,தோழன்' அமைப்பை சேர்ந்தவர்கள். சோனாலி கபூர் protashan அனைத்தும் அருமையான தகவல்கள் .இரண்டாம் செய்தி லிங்க் திறக்க முடியலையே எனக்கு

rmn said...

விவசாயி தகவல் அருமை

ஸ்ரீராம். said...

நன்றி DD.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி கிரேஸ்.

ஸ்ரீராம். said...

நன்றி வெங்கட்.

ஸ்ரீராம். said...

நன்றி ஊமைக்கனவுகள்.

ஸ்ரீராம். said...

நன்றி ஜிஎம்பி ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி வலிப்போக்கன்.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி ஏஞ்சலீன்.

ஸ்ரீராம். said...

நன்றி rmn.

ஸ்ரீராம். said...

நன்றி rmn.

‘தளிர்’ சுரேஷ் said...

ஒவ்வொரு மனிதர்களும் வியக்க வைக்கிறார்கள்! அருமையான மனிதர்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி!

Bagawanjee KA said...

ஹர்ஷத் பிமானி,நல்ல மனிதாபிமானி :)

Thulasidharan V Thillaiakathu said...

குப்பைவண்டித் தோழன் நல்ல ஐடியா...
அட ஆடை மாற்று வழியும் சூப்பரா இருக்குதே...
பூங்காக்கள் பறவைகள் சரணாலயங்களாக மாறினால் அருமை!! நல்ல முயற்சி..நாம் வீட்டு மொட்டை மாடிகளிலும் செய்யலாம்...செய்கின்றோம் நாங்கள் வீட்டு பால்கனியில்...
//2013ம் ஆண்டு ஜனவரி மாதம், தி.நகர் பர்கிட் சாலை சிக்னலில் முதல் விழிப்புணர்வு பிரசாரத்தை துவங்கினோம்// கீதா: இந்த தேதியில் நானும் இணைந்தேன். தோழனில். அதைப் பற்றி எங்கள் தளத்தில் பதிவும் செய்தேன்(நான் இணைந்ததைக் குறித்து அல்ல..தோழம் அமைப்பைக் குறித்து...) ஆனால் என்னால் களப்பணிக்குப் போக முடியாதபடி அறுவை சிகிச்சை...இப்போது மீண்டும் தொடர எண்ணம் உள்ளது...அவர்கள் ஞாயிறு தோறும் சிக்னலில் அவர்கள் சொல்லி இருப்பது போல் செய்கின்றார்கள் என்பது உண்மை. மிக அருமையாகச் செய்து வருகின்றார்கள். ஆனால் நம் மக்கள் அதைக் கூடப் பொருட்படுத்தாமல் செல்வதையும் நான் பார்த்துள்ளேன். மனது மிகவும் வேதனைப்படும்...அந்த அளவிற்கு கூட மரியாதை கொடுக்காத மக்களாக உள்ளனரே என்று...திருவான்மியூர் சிக்னலில் அவர்கள் பெரும்பாலும் நிற்பதைப் பார்த்திருக்கின்றேன்...நல்ல பணி பாராட்ட வேண்டும் மட்டுமல்ல பொதுமக்கள் இவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்க வேண்டும்...

ரோஷ்னியின் சத்தமின்றி செய்யப்படும் சேவை ப்ரமிக்க வைக்கின்றது..அவரது சேவை சிறக்க வாழ்த்துகள். பல கிராமத்துக் குழந்தைகளைச் சென்றடைந்தால் மிகவும் நல்லது...
மைதீன் பிச்சை பேசும் விவசாயம் மனதை உற்சாகப்படுத்தி நாமும் நிலம் வாங்கிச்செய்யலாமா என்று தோன்ற வைக்கின்றது...தன் குழந்தைகளையும் விவசாயத்தில் ஈடுபட வைப்பது மகிழ்வாக இருக்கிறது....
கிராமத்தைக் காப்பாற்றிய ஹர்ஷத் பிமானிக்கு எத்தனை பாராட்டுகள் தெரிவித்தாலும் தகும்...
சோனாலுக்கு வாழ்த்துகள்....

கௌரங்க்தமானி எடுத்துக் கொண்ட ஸ்டேஷந் வர்லி பெயிண்டிங்கில் மிளிர்கின்றது!!!

இறுதி...வெங்கட் ஜி பதிவில் வாசித்தது...அன்ரே நினைத்தோம் உங்களுக்கான பாசிட்டிவ் செய்தி அது என்று...


ரூபன் said...

வணக்கம்
ஐயா
தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

பரிவை சே.குமார் said...

நல்ல செய்திகள் அண்ணா....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஹர்ஷத் பிமானியின் சமயோசித அறிவு ஆயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்றியது உண்மையான ஹீரோ
அனைத்து செய்திகளும் அருமை

Geetha Sambasivam said...

இங்கேயே இருந்தும் குப்பவண்டி.டாட்.காம் பத்தித் தெரியலை, பாருங்க! அங்கே போயும் பார்த்துடறேன். நம்ம வீட்டில் வண்டி வண்டியாக எலக்ட்ரானிக் குப்பைங்க இருக்கே! :)//

சேலையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் குறையுதோ, இல்லையோ, யாரேனும் கட்டியதா என்னும் சந்தேகத்திலிருந்து விடுபடலாம். பல சமயங்களிலும் கடையில் வாங்கும் புதிய சேலைகள் கூட மிகக் கசங்கிக் காணப்படும். துவைத்து இஸ்திரி போட்டுத் தான் கட்டும்படி இருக்கும். :)

பறவைகளுக்கு உணவு நல்ல திட்டம் தான். ஆனால் இங்கே ஶ்ரீரங்கம் பறவைகள் இதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுக்காது. என்ன போட்டாலும் வராதுங்க! :)

மொபைலைத் திரும்பக் கொடுத்த ஆட்டோக்காரர்! ஆச்சரியம் தான்.

தோழர்களின் சேவை அருமை

நம்ம வெங்கட்டோட பொண்ணு ரோஷ்ணியாக்கும்னு நினைச்சுட்டேன். அந்தப் பெயர் வைச்சாலே இப்படித் தான் வித்தியாசமா இருப்பாங்களோ?

ஜெய் ஹோ காசம்பர் அலி!

குஜராத்தின் இஞ்சினியருக்கு ஒரு சல்யூட்!

சோனலுக்கு வாழ்த்துகள்

மைதீன் பிச்சையைப் போலவே பஞ்சாபிலிருந்து வந்த சீக்கிய விவசாயிகள் சிலர் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தையும் பசுமையாக்கி இருக்கின்றனர். இராமநாதபுரத்திலும் இம்மாதிரி நடந்துள்ளது. ஆங்காங்கே இம்மாதிரியான மனிதர்கள் இருப்பதால் தான் இன்னமும் மழை பொழிகிறது.

கௌரங் தமானியைப் போன்ற இளைஞர்கள் இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்க வேண்டும்.

வெங்கட் பதிவிலும் பார்த்தேன்; படித்தேன்; ரசித்தேன். தொண்டு சிறக்கட்டும்.

Geetha Sambasivam said...

பல சமயங்களிலும் மேலோட்டமாகப் படிச்சுட்டுப் போயிடுவேன். அப்போக் கருத்துச் சொன்னால் சரியாக இருக்காது என்பதால் சொல்ல மாட்டேன். இன்னிக்குத் தான் நிதானமாக ஆற அமர உட்கார்ந்து எல்லாத்தையும் படிச்சு உள்வாங்கிக் கொண்டு பதில் அளித்திருக்கிறேன். மனதுக்கு நிறைவாக! :)

Kamatchi said...

இந்த விஷயங்களை எல்லாம் ஒருமுரை படித்தால் போரதில்லே. திருப்பி படித்து ஆஹா எப்படித் தொகுத்துக் கொடுக்கிறீர்கள் என்று,விஷயங்களையும் சேர்த்து ஆச்சரியப்பட்டுப் போகிறேன் என்பதுதான் உண்மை. அன்புடன்

கோமதி அரசு said...

விபத்தில்லா தேசம் அமைப்பை சார்ந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விபத்தில் உடன்பிறப்பை பறிக்கொடுத்த எனக்கு அந்த வலி இருக்கிறது.
மற்ற அனைத்து செய்தி தொகுப்பும் நல்ல மனிதர்களை, சமுதாயத்திற்கு நல்லது செய்யும் மனிதர்கள் என்று தொகுப்பு அருமை.
வாழ்த்துக்கள்.

இளமதி said...

வணக்கம் சகோதரரே!

எத்தனை அருமையான விடயங்கள்!
பொறுமையாகச் சேகரித்து எமக்கும் அறிந்துகொள்ளக் கூடியதாகப்
பகிர்ந்துள்ளமைக்கு மிக்க நன்றி சகோதரரே!

வாழ்த்துக்கள்!

r.v.saravanan said...

பாசிடிவ் செய்திகள் ரசிகன் நான் தொடரட்டும் பதிவு

புலவர் இராமாநுசம் said...

தொகுப்பு நன்று! நன்றி!

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்

‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/

ஞா. கலையரசி said...

சினிமா போல சிமெண்ட் மூட்டைகளைப் போட்டுக் கிராமவாசிகளைக் காப்பாற்றிய நிகழ்வு பாராட்டப்பட வேண்டியது. பறவைகளுக்கு உணவு கொடுக்கும் செய்தியும் மகிழ்ச்சியளித்தது! மனதுக்குப் புத்துணர்ச்சி தரும் பாசிட்டிவ் செய்திகள்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!