ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

ஞாயிறு 324 இது என்ன ஸ்கூட்டர்? + சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 7/7


ஏழுநாள் தொடரின் முடிவை யூகிக்காதவர்கள் எல்லோரும், இங்கே இருக்கின்ற ஸ்கூட்டர் படம், என்ன பிராண்ட், என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள். 
       
                     

 சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 7/7 
     
முதன் முதலாக முன்பின் தெரியாத முகநூல் நண்பரிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது, என்ன பேசுவது, என்னைப் பற்றி முழுவதும் என் பதிவுகள்  மூலம் அவருக்குத் தெரிந்திருக்கும்.

அவர் என் நண்பர்கள் கூட்டத்தில் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லையே!

சற்றுக் குழம்பியவனாக அவரருகே சென்று ......   " நீங்க ......   ஃபேஸ் புக்குல ....  வந்து ...... நீங்க   ...... இங்கே ....எப்படி  .... "  என்று பேச ஆரம்பித்தேன்.

அவர் உடனே, " ஆஹா! ஆமாம் ஃபேஸ்புக் தான்! கரெக்ட்.  முதலில் நீங்க என்னைப் பார்த்துச் சிரித்தவுடனேயே தெரிந்துகொண்டுவிட்டேன், என்னை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்று."

"இல்லை, நான் வந்து ..... அதாவது ..... உங்களை ...... "

"ஆமாம், ஆமாம் நீங்க என்னை இங்கே  எதிர்பார்க்கலை இல்லியா! ஒரே ஒரு ரிக்வெஸ்ட். நீங்க என்னை இங்கே பார்த்ததாக யாருக்கும் சொல்லிவிடாதீர்கள். கொஞ்சநாளைக்கு யார் தொந்தரவும் இல்லாம இருக்கலாம் என்று வந்திருக்கேன். ப்ளீஸ் ....... " என்று சொல்லியவாறு வேகமாக பார்க்கை விட்டு வெளியேறினார்!  

      
  


(ஹி ஹி அம்புட்டுதான்)
             

15 கருத்துகள்:

  1. இந்த பேஸ் புக் என்பதை பேஸ் லுக் என்று மாற்றினால் தேவலை

    லுக் கிட்டு போறவங்க சிலர்.
    புக் பண்றவங்க சிலர்.
    சிக் எனப் பிடித்துக்
    கொள்பவர்களும் உன்று.
    சிலரோ
    கிக் பண்ராகளே !!

    என்னத்தை சொல்வது !!

    எனி வே,
    ஐ ஆம்
    சிக் அபௌட் திஸ்
    புக்.

    சுப்பு தாத்தா.
    latest news:
    they are exploring, i hear, changing their LIKE.

    பதிலளிநீக்கு
  2. கடைசில முகர கட்ட பொஸ்தக ஃப்ரெண்ட் தானா! :)

    பதிலளிநீக்கு
  3. இது என்ன ஸ்கூட்டர்?
    சூட்டி பப்
    என்று நினைக்கின்றேன்...

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  4. ஸ்கூட்டர் மாடல் பெயரின் பிரதிபலிப்புடன் படம் அருமை

    பதிலளிநீக்கு
  5. கடைசியாக பல்பு கொடுத்துட்டீங்க......

    பதிலளிநீக்கு
  6. honda activa...அதிலேயே இருக்கு ....கண்டுபிடிக்கறது ரொம்ம்ம்ம்ம்பக் கஷ்டம் ஹஹஹஹ்...

    ம்ம்ம் எதிர்பார்த்ததுதான்...முடிவு இல்ல....கண்டிப்பா பல்புதான் அப்படின்னு...அதுவும் ரொம்ம்பவே டல்லா எரியும அப்படினு...அஹ்ஹஹஹ

    பதிலளிநீக்கு
  7. ஹோண்டா அல்லது ஆக்டிவா என்று சொன்னவர்கள் எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு.

    பதிலளிநீக்கு
  8. //mageswari balachandran said...
    படம் அருமை,
    தொடர்கிறேன்.//

    எதை?

    பதிலளிநீக்கு
  9. படத்தைப் பாராட்டியவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அந்த பல்பு அவர் எனக்குக் கொடுத்ததா, அல்லது நான் வாசகர்களுக்குக் கொடுத்ததா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!