திங்கள், 19 அக்டோபர், 2015

"திங்க'க்கிழமை 151019 :: பூண்டுப்பொடி



  
இது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது.

 
எவ்வளவு பேருக்குப் பிடிக்கவில்லையோ,  அவ்வளவு பேருக்குப் பிடிக்கவும் பிடிக்கும்!!!
 
இது என் அம்மா மிக எளிதாக, எளிமையான ஒன்றாக மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ஒரு காலத்தில் செய்து கொடுத்தது.   மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் செய்து கொண்டேன்.
 
என் பாஸுக்கு பூண்டுப்பொடி - பூண்டு வாசனை - முன்னால் எல்லாம் பிடிக்காது.  ஆனால் இப்போது பூண்டின் மருத்துவ குணங்களுக்காக வேண்டி பூண்டு  ரசம், போன்றவற்றை சாப்பிடுகிறார் என்றாலும், இந்த அளவு பூண்டு வாசனை பிடிக்காது .
 
சென்னை பித்தன் ஸாரும் இதற்கு எதிர்ப்பாளர் என்று நினைக்கிறேன்!
 
சரி,  கதை போதும்.  செய்முறைக்கு வருகிறேன்!
 
நாட்டுப் பூண்டு எடுத்துக் கொள்ளவும்.  மலைப்பூண்டில் வாசனை இருக்காது.  பூண்டை உரித்துக் கொள்ளவும்.  எந்த அளவு பூண்டு உரித்துக் கொள்கிறீர்களோ, அதைப் போல மூன்று மடங்கு காய்ந்த மிளகாய் எடுத்துக் கொள்ளவும்.  

                      Image result for garlic images             Image result for garlic images
 
 
மிளகாயை முதலில் மிக்ஸியில் இட்டு லேஸாக அரைத்துக் கொண்டு பின்னர் பூண்டையும் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
                                                                   Image result for red chilli images
 
 
அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் உருட்டி வைத்துக் கொண்டால், மோர் சாதத்துக்கு, (அட, தயிர் சாதத்துக்கும்தான்!) மற்றும் இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.  இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளப் போட்டுக் கொள்ளும்போது சிறிதளவு நல்லெண்ணெய் இட்டுக் குழைத்துக் கொள்ளலாம்.


                                            
 
 
சிலர் மிளகாயை வறுத்துக் கொள்வார்கள்.  சிலர் இலேஸாக புளி சேர்ப்பார்கள்.  சிலர் கொஞ்சூண்டு வெல்லம் சேர்ப்பார்கள்.  சிலர் பூண்டைக் கூட வதக்கிக் கொள்வார்கள்.  ஆனால் நாங்கள் இதில் எதுவுமே செய்வதில்லை.  மேலே சொல்லியிருக்கும்படி.. 
 
அவ்வளவே...!
 
பிடித்தவர்கள் செய்து பார்த்துச் சொல்லுங்கள்.

சகோதரி ஏஞ்சலின் எங்கள் ப்ளாக் ரெசிப்பிகளை அவ்வப்போது செய்து பார்த்துப் பகிர்ந்துகொள்வது பார்க்கும்போது, படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.  நன்றி!  சேனைக் கிழங்கி கோப்தா, தேங்காய் சாதம் போன்றவற்றை செய்து பார்த்துப் பகிர்ந்திருந்தார்.

32 கருத்துகள்:

  1. இப்படி அரைத்து வைத்து கொண்டால் எத்தனை நாள் கெட்டுப்போகாமல் இருக்கும்.காரணம் அதற்கு தகுந்தாற்போல அரைத்து வைத்து கொள்ளதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாள் வைத்துக்கொள்ள முடியும் மதுரைத் தமிழன். ஆனாலும் சுலபமாக செய்ய முடியும் என்பதால் அவ்வப்போது அரைத்துக் கொள்ளலாமே.

      நீக்கு
  2. பூண்டு வாசனை ,நம்மிடம் இருந்து பலரை தள்ளிப் போகச செய்யும் ஆற்றல் பெற்றது ,ஜாக்கிரதையாய் சாப்பிடுவது நல்லது :)

    பதிலளிநீக்கு
  3. பூண்டு எனக்கு பிடித்தமான உணவு அதுபோல பூண்டு ஊறுகாயும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் பூண்டு ரசிகர்என்பதில் சந்தோஷம் கில்லர்ஜி.

      நீக்கு
  4. //சென்னை பித்தன் ஸாரும் இதற்கு எதிர்ப்பாளர் என்று நினைக்கிறேன்!//
    சரிதான்
    மூன்று மடங்கு மிளகாயா?அய்யோ!
    ஆனாலும் எளிய செய்முறைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிளகாய் அளவை வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளலாம் சென்னை பித்தன் ஸார்.

      நீக்கு
  5. நானும் இரண்டையும் லேசாக நல்லெண்ணை விட்டு வறுத்துத்தான்
    பொடியாக்கி வைத்துக்கொள்வேன். சுவை அள்ளும்!..:)

    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  6. எனக்குப் பூண்டே பிடிக்காது. இருந்தாலும் உடலுக்கு நல்லது என்று சிறிய அளவில் என் மனைவி ஆங்காங்கே சேர்த்து விடுவாள்

    பதிலளிநீக்கு
  7. நல்ல குறிப்பு. மலைப்பூண்டு வாங்குவதேயில்லை.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    விளக்கம்அற்புதம்... வாழ்த்துக்கள் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. எம் வீட்டில் செய்வதுதான்.

    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. பூண்டு ஊறுகாய் பிடிக்கும்...
    இதைச் செய்து பார்க்கலாம் அண்ணா.

    பதிலளிநீக்கு
  11. நானும் அடிக்கடி இதைச் செய்வது தான். ஆனால் இவ்வளவு மிளகாய் சேர்க்கமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல குறிப்பு. மிளகாய் அளவு தான் ஓட வைக்கிறது....:) கீதாம்மா எங்கே காணோம்... பிடிக்காத பூண்டைக் கண்டு வரவில்லையோ?

    பதிலளிநீக்கு
  13. @வெங்கட், அதே, அதே! மீ த எஸ்கேப்பு! :) எப்போவானும் பூண்டு ரசம் வைப்பதுண்டு. சப்பாத்திக்குப் பண்ணும் தாலில் ஒன்றிரண்டு பூண்டுப் பற்களைப் போடுவதுண்டு! இவ்வளவு பூண்டு, இவ்வளவு மி.வத்தலோடு,ம்ஹூம், வாய்ப்பே இல்லை! :)

    பதிலளிநீக்கு
  14. வெரி சேம்!!! இதே போன்றுதான்...வீட்டில் செய்வதுண்டு. மிளகாய் கொஞ்சம் குறைவாக. சில சமயம் புளி சேர்த்துச் செய்வதுண்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வெந்தய தோசைக்கு இது நல்ல காம்பினேஷனாக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. பூண்டு ரொம்ப சேர்த்துக் கொள்வதில்லை. என் ஒட்டு பூண்டு ரசத்துக்கே. அதைத் தட்டிப் போடாம, ஒண்ணு ரெண்டு மட்டும் போட்டு. வச்ச ரசம்...

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்,
    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, என் வீட்டில் இல்லாமல் இருக்காது.
    எளிய செயல் முறை விளக்கம். இப்படி தான் செய்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பூண்டுப் பொடி அருமை
    காரம் அதிகமாக இருக்கும் அல்லவா
    தம +1

    பதிலளிநீக்கு
  19. அட எனக்குத் தெரியாது இப்படி செய்வது. செய்து பார்க்கிறேன். நன்றி தகவலுக்கு!

    பதிலளிநீக்கு
  20. நல்ல பொடி!

    ஒரு மாறுதலுக்கு:

    பூண்டுப் பல்:4-5
    மிளகாய் தூள்: 1 டீஸ்பூன்
    தனியாத் தூள்: 2-3 டீஸ்பூன்
    உப்பு: தேவைக்கேற்ப

    இவை அனைத்தையும்
    ( மேற்கண்ட விகிதத்தில், தேவையான அளவுக்கு)
    மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால்
    இன்ஸ்டன்ட் இட்லி மிளகாய்ப் பொடி தயார்.

    சற்றே அதிகமான நல்லெண்ணெயில் கலந்து தொட்டுக் கொள்ளலாம்.
    சற்றே அதிகமான உப்பின் அளவு சுவை கூட்டும் / காரம் குறைத்துக் காட்டும்.

    பதிலளிநீக்கு
  21. பூண்டு சட்னி , காரம் பயமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!