சனி, 24 அக்டோபர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.



1)  வசதி படைத்தவர்களிடம் மட்டும், 10 ரூபாய் கட்டணமாக வாங்குகிறேன். சிரமப்படுவோர் எனத் தெரிந்தால், அதுவும் வாங்க மாட்டேன்.  சிலர், 'எனக்கு சம்பளத் தேதி வரவில்லை. கரன்ட் பில் கட்டுற தேதி முடியப் போகுது; நீங்களே பணம் கட்டி பிறகு வந்து வாங்கிக்குங்க...' எனக் கூறுவர். அவர்களுக்கு என் பணத்தைக் கட்டி, பொறுமையாக வாங்கிக் கொள்வேன்.   வீடு தேடி வந்து கரன்ட் பில் கட்டி உதவி வரும் துரைராஜ்.
 


 
2)  நோயாளிகளை கசக்கிப் பிழிந்து கண்ணீரை வரவழைத்து கட்டணம் வாங்குவதை விட, ஆத்ம திருப்தியுடன் அவர்கள் கொடுக்கும் இந்த ஐந்து ரூபாயே, மனநிறைவைத் தருகிறது.  அதன்படி, 1958 முதல், இன்று வரை, நோயாளிகளிடம் நான் கட்டணம் கேட்பதில்லை. ஆரம்பத்தில் கட்டணமாக, ஒரு ரூபாய் கொடுத்தனர். அதனால் அனைவரும் என்னை, 'ஒரு ரூபாய் டாக்டர்' என்றே அழைத்தனர்.  மருத்துவர் ராமமூர்த்தி
 


 
3)  லட்சங்கள் வேண்டாம்.  லட்சியமே போதும்.  என்ஜீனியர் மாதவன்.
 


 
4)  கால்கள் இல்லாவிட்டால் என்ன?  நம்பிக் 'கை' இருக்கிறதே!  ஜிவாத்ஸ்கோ.
 



 
5)  சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், உயர்கல்வி கற்க வழியின்றித் தவிப்பவர்களுக்கும், கல்வி கற்க ஆசையிருந்தும் வசதியில்லாமல் கலக்கமடைபவர்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்து சத்தமின்றி உதவிகளைச் செய்து வருகிறார் கிராமத்து இளைஞர் ரா.நாராயணன்.
 


 
 
7)  தனிராம் ஜிக்குக் கிடைத்த பிரிவுபச்சாரம்.
 



 
8) அரசுப் பள்ளிகள் குறித்தும் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்தும் வெகுஜனங்கள் மத்தி யில் நிலவும் தவறான எண் ணத்தை உடைத்தெறியும் ஆசிரியர்களில் செங்குட்டுவனும் ஒருவர்.
 




9) மகனின் நினைவில் பிரதீப் - தமயந்தி தம்பதியரின் சேவை,






 

10) கணவனை இழந்த பெண்கள், குடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்து பெண்கள், கைவிடப்பட்ட பெண்களுக்கு கணினி பயிற்சி மற்றும் அவர்கள் விரும்பும் துறையில் இலவச பயிற்சியை, 'சீட்' வழங்கி வருகிறது.  ஒருமுறை அப்துல் கலாமிடம், 'சிறந்த பெண் தொழிலதிபர்' விருதும் பெற்ற விஜயலட்சுமி.



16 கருத்துகள்:

  1. இப்போது இருக்கும் மனநிலைக்கு ஒவ்வொரு செய்தியும் ஊக்கத்தையும் மனநிறைவையும் தருகிறது... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மனதுக்கு இதமளிக்கும் செய்திகல். இதுல நம்ம பெரும் வரனும்ன்னு ஆசைப்பட வைக்கும் பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நிறைவளிக்கும் செய்திகள்! அனைத்தும் சிறப்பு! அன்பர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அரசுப் பள்ளிகள் பற்றிய செய்திகள் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்தது.. 'பிடித்தது' என்பதை விட அவருக்கு என் சல்யூட். இதுபோன்ற ஆசிரியர்கள் மூலமாவது அரசுப் பள்ளிகளின் மீது மக்கள் கொண்டிருக்கும் அவ எண்ணங்கள் ஒழிந்து கல்வியை வியாபாரமாக்கும் தனியார் பள்ளிகளை நிராகரித்து தத்தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது என் அவா.

    பதிலளிநீக்கு
  5. அரசுப் பள்ளியில் தன்னார்வத்துடன் பணியாற்றும் செங்குட்டுவன் அவர்களைப் பற்றியே பாராட்டே என் முந்தைய காமென்ட்

    பதிலளிநீக்கு
  6. தகவலுக்கும் செய்திகளுக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  7. தகவலுக்கும் செய்திகளுக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு

  8. 'ஒரு ரூபாய் டாக்டர்' களும்
    நம்பிக் 'கை' களும்
    நம்மாளுங்க பின்பற்ற வேண்டிய
    வழிகாட்டிகள்
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  9. மனதிற்கு இதமும் ஆறுதலும் அளிக்கும் செய்திகள்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  10. மனிதாபிமானிகளின் சேவை வாழ்க ,வாழ்க !

    பதிலளிநீக்கு
  11. விவசாயத்தில் வெற்றி கண்ட எஞ்சினியர் மாதவன், ஆசிரியர் செங்குட்டுவன், நலிந்த மாணவர்களின் கல்விக்கு உதவும் நாராயணன், 1 ரூபாய் டாக்டர் இவர்களுக்கு எல்லாம் ஜே ஜே!!

    ஜிவாத்ஸ்கோ பிரமிப்பு!! நம்பிக்"கை" தான்!!

    பதிலளிநீக்கு
  12. துரைராஜுக்கும் ஒரு ஜே போட மறந்துவிட்டோம்!

    பதிலளிநீக்கு
  13. அனைத்துமே அருமையான செய்திகள்..... தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!