திங்கள், 30 நவம்பர், 2015

"திங்கக்கிழமை 151130 :: முட்டைக்கோஸ் - உருளைக்கிழங்கு கூட்டுக் குழம்பு.




இது கிட்டத்தட்ட 'பிட்லே' தான்.  "கிட்டத்தட்ட" என்ன "கிட்டத்தட்ட" என்கிறீர்களா?  அதுவும் சரிதான்!

                                                                   
 


என்னைப் பொறுத்தவரை பாகற்காய் பிட்லேயே பிட்லேயன்றி 
 மற்றெல்லாம் பிட்லேயல்ல! Image result for smilies images


எங்கள் வீடுகளில் பெரும்பாலும் உ.கி, சேம்பு போன்ற கிழங்கு வகையறாவை வைத்து குழம்பு வகைகள் செய்வதில்லை. ரொம்ப ரொம்ப ரொம்ப ரேர்! அவியலில் போடுவது, கருணை மசியல் செய்வது வேறு கதை!

  

                                                                   Image result for smilies images
 


முட்டைக் கோசை வைத்துப் பெரும்பாலும் கறி வகைகள்தான்.  ஃபிரைட் ரைஸில்போடுவது உண்டு.


சரி, செய்முறைக்கு வருகிறேன்.


                                                                     Image result for kondai kadalai images

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்துக் கொண்டு, மறுநாள் குக்கரில் வைத்து, வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.


நான்கு பேர்கள் சாப்பிடத் தேவையான அளவு என்று வைத்துக் கொள்வோம்!

           Image result for cabbage images                     Image result for potato images


கால் கிலோ முட்டைகோஸ், மற்றும் சிறிய வகை உருளைக் கிழங்கு இரண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்வோம்.

 
                                                   Image result for dhal images


துவரம் பருப்பு இரண்டு கரண்டி குக்கரில் வைத்து, நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்வோம்.

ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு ஸ்பூன் தனியா, 6 அல்லது 7 மிளகாய் வத்தல், சின்னமூடியாய்த் தேங்காய் ஒரு மூடி, கொஞ்சம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்து வைத்துக் கொள்வோம்.


தேவையான புளியை எடுத்துக் கரைத்துக் கொண்டு, அதில் கோஸ், உருளையைப் போட்டு கொதிக்க விடுவோம். சாம்பார்ப்பொடி சற்றுக் கம்மியாகவே சேர்த்துக் கொள்வோம்.  தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொள்வோம்.


குழம்பு கொதித்ததும் பருப்பைச் சேர்த்துக் கலந்து, அரைத்து வைத்துள்ள பொடியையும், கொண்டைக் கடலையையும் சேர்த்து ஒரு கொதி வரவிட்டு இறக்கி வைத்து, 


                Image result for karuveppilai, kothamalli images     Image result for karuveppilai, kothamalli images


நிறைய கறிவேப்பிலை, கொத்துமல்லி கிள்ளிப் போட்டுக் கொள்வோம்.



கடுகு, வெந்தயம் தாளித்து விட வேண்டியதுதான்.


சாதம் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளவும் சுவையான கூட்டுக் குழம்பு தாயார்... ச்சே... தயார்!









நன்றி  :   படங்கள் இணையத்திலிருந்து.