திங்கள், 30 நவம்பர், 2015

"திங்கக்கிழமை 151130 :: முட்டைக்கோஸ் - உருளைக்கிழங்கு கூட்டுக் குழம்பு.




இது கிட்டத்தட்ட 'பிட்லே' தான்.  "கிட்டத்தட்ட" என்ன "கிட்டத்தட்ட" என்கிறீர்களா?  அதுவும் சரிதான்!

                                                                   
 


என்னைப் பொறுத்தவரை பாகற்காய் பிட்லேயே பிட்லேயன்றி 
 மற்றெல்லாம் பிட்லேயல்ல! Image result for smilies images


எங்கள் வீடுகளில் பெரும்பாலும் உ.கி, சேம்பு போன்ற கிழங்கு வகையறாவை வைத்து குழம்பு வகைகள் செய்வதில்லை. ரொம்ப ரொம்ப ரொம்ப ரேர்! அவியலில் போடுவது, கருணை மசியல் செய்வது வேறு கதை!

  

                                                                   Image result for smilies images
 


முட்டைக் கோசை வைத்துப் பெரும்பாலும் கறி வகைகள்தான்.  ஃபிரைட் ரைஸில்போடுவது உண்டு.


சரி, செய்முறைக்கு வருகிறேன்.


                                                                     Image result for kondai kadalai images

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்துக் கொண்டு, மறுநாள் குக்கரில் வைத்து, வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.


நான்கு பேர்கள் சாப்பிடத் தேவையான அளவு என்று வைத்துக் கொள்வோம்!

           Image result for cabbage images                     Image result for potato images


கால் கிலோ முட்டைகோஸ், மற்றும் சிறிய வகை உருளைக் கிழங்கு இரண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்வோம்.

 
                                                   Image result for dhal images


துவரம் பருப்பு இரண்டு கரண்டி குக்கரில் வைத்து, நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்வோம்.

ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு ஸ்பூன் தனியா, 6 அல்லது 7 மிளகாய் வத்தல், சின்னமூடியாய்த் தேங்காய் ஒரு மூடி, கொஞ்சம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்து வைத்துக் கொள்வோம்.


தேவையான புளியை எடுத்துக் கரைத்துக் கொண்டு, அதில் கோஸ், உருளையைப் போட்டு கொதிக்க விடுவோம். சாம்பார்ப்பொடி சற்றுக் கம்மியாகவே சேர்த்துக் கொள்வோம்.  தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொள்வோம்.


குழம்பு கொதித்ததும் பருப்பைச் சேர்த்துக் கலந்து, அரைத்து வைத்துள்ள பொடியையும், கொண்டைக் கடலையையும் சேர்த்து ஒரு கொதி வரவிட்டு இறக்கி வைத்து, 


                Image result for karuveppilai, kothamalli images     Image result for karuveppilai, kothamalli images


நிறைய கறிவேப்பிலை, கொத்துமல்லி கிள்ளிப் போட்டுக் கொள்வோம்.



கடுகு, வெந்தயம் தாளித்து விட வேண்டியதுதான்.


சாதம் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளவும் சுவையான கூட்டுக் குழம்பு தாயார்... ச்சே... தயார்!









நன்றி  :   படங்கள் இணையத்திலிருந்து.



45 கருத்துகள்:

  1. படிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கே...செய்து பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி கீதா எம். செய்து பார்த்துச் சொல்லுங்க!

      நீக்கு

  2. இதுவரை நான் அறியாத ரிசிப்பியாக இருக்கிறதே? செஞ்சு பார்த்திட வேண்டியதுதான். ஆமாம் பண்ணிமுடித்த பிறகு எப்படி வந்திருக்கிறடு என்படை படமாக போட்டு இருந்தால் அதை செய்யவா வேண்டாமா என்று ஒரு ஐடியா கிடைத்திருக்கும். நான் எப்பவுமே ஒரு ரிசிப்பையை பார்த்தால் அதன் பைனல் வெர்ஷன் எப்படி வந்து இருக்கும் என்று பார்த்து அது மனதிற்கு பிடித்தால் மட்டுமே செய்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மதுரைத் தமிழன். அப்படி எல்லாம் சந்தேகப்படாமல் தைரியமாக செய்து பாருங்கள். பெரும்பாலும் இந்த ரெசிப்பிகளை வீட்டில் செய்து, அவற்றை அப்போதே படம்பிடித்து போடுவது வழக்கம்தான். ஆனால் இது கடைசிமுறை வீட்டில் செய்தபோது நான் மதுரை சென்றிருந்தேன் என்பதால் படமெடுத்தது இணைக்க முடியவில்லை.

      நீக்கு
  3. இது சாம்பார் கூட்டு செனா மசாலா எல்லாத்தையும் சேர்த்து ஒரு கதம்பம் ஆக இர்ருக்கிறதே
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜேகே ஸார். செய்து பாருங்கள். (பார்க்க மட்டும் இல்லை, தைரியமாகச் சாப்பிடலாம்) ஸூப்பராக இருக்கும்! :)))

      நீக்கு
  4. இதுக்குப் புளி சேர்க்காமல் வறுத்து அரைப்பதில் தனியா, க.பருப்பு சேர்க்காமல் ஒரு டீஸ்பூன் மிளகும் வறுத்து அரைத்துக் கொண்டு பாசிப்பருப்புப் போட்டுச் செய்வோம். பொரிச்ச குழம்பு என்னும் நாமகரணம் சூட்டி மகிழ்வோம். எனக்கென்னவோ இந்த உ.கியை நம்ம தமிழ்நாட்டு சமையலில் குழம்பு, கூட்டில் எல்லாம் சேர்க்க அவ்வளவாப் பிடிக்காது. அவியல்னா நாட்டுக் காய்கள் தான். சேப்பங்கிழங்குக்குக் கூட அவ்வளவா ஓகே சொல்ல மாட்டேன். மசியல்னா கருணைக்கிழங்கு,(பிடிகருணை) தான். எப்போவானும் சேனைக்கிழங்கு மசியல், அபூர்வமா! இங்கே சேனைக்கிழங்கு நல்லாவும் இல்லை. பொரிச்ச குழம்புன்னா புடலை, கத்திரி, கொத்தவரை, அவரைக்காய், கீரைத்தண்டு இவற்றிற்கு அப்புறமாத் தான் மற்றவை. பிட்லைனா முதல் ஓட் பாகற்காய்ப் பிட்லைக்கு, அடுத்துக் கத்திரிக்காய். அடுத்துச் சேனைக்கிழங்கும், காராமணியும் போட்ட பிட்லை! மற்றவற்றை எல்லாம் பிட்லைனு சொல்வதில்லை. ஒரு சிலர் வெண்டைக்காய் போட்டுப் பிட்லை செய்தேன் என்பார்கள். கடைசியில் பார்த்தால் வெண்டைக்காய் போட்டு சாம்பாரில் பொடி சேர்த்துக் கொஞ்சம் போல் மேல் சாமான் அரைத்து விட்டிருப்பார்கள். நம்மளோட முறையில் அரைத்துவிட்டால் நோ பொடி! அது பொரிச்ச குழம்போ, பிட்லையோ, சாம்பாரோ எதுவானாலும் அரைத்து விடுவது தான். இதிலே சாம்பார்னா மி.வத்தல், கொ.விதை, க.பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தேங்காய். பொரிச்ச குழம்புன்னா மி.வத்தல், உ.பருப்பு, மிளகு, பெருங்காயம், தேங்காய்! பிட்லைன்னா மி.வத்தல், கபருப்பு, உபருப்பு, மிளகு, தேங்காய், ஒரு டீஸ்பூன் அரிசி! சுவை, மணம்,குணம் எல்லாம் தனித்தனியாக மாறுபட்டுத் தெரியணும். வாசனையை வைச்சே இது பிட்லை, இது சாம்பார், இது பொ.கு.னு சொல்ல வைக்கணும்.

    அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா, கை வலிக்குது! எம்புட்டுப் பெரிய கருத்துரை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா மேடம். நீங்க சொல்லும் அனைத்தும் நாங்களும் செய்வதுண்டு. இதையும், இதே போல செய்து பாருங்களேன்... சரவணபவன் சாம்பார் மாதிரி மாமாவுக்கு இதுவும் பிடித்துப் போகலாம். :))

      நீக்கு
  5. அப்பாடா இப்படி ஏதாவது எமக்கு உதவி செய்தால் நலம். எதுவும் தெரியவில்லை என்று திட்டு வேற வாங்க வேண்டியிருக்கிறது.
    எளிய செயல்முறை தான் செய்கிறேன். நல்லா இல்ல நான் பொறுப்பல்லப்பா,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன். துணிஞ்சு செய்து பாருங்க.. கூட்டுக்குழம்புக்கு நாங்க கியாரண்டி!

      :)))

      நீக்கு
  6. வணக்கம்.

    பார்த்தால் பசி தீரவில்லையே..!

    செய்து பார்க்க வேண்டும்!

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கூட்டுக் குழம்புன்னா, வாழைப்பூ, கச்சல் வாழைக்காய், கொத்தவரை, அவரை, கத்திரிக்காய் போன்றவற்றிற்குப் பின்னரே மற்றவை! :) ஹிஹிஹிஹி, அதுவும் தாளிக்கையில் குழம்புக்கருவடாம் வறுத்துச் சேர்த்தால் அலாதி ருசி! இப்போல்லாம் அந்த மாதிரிக் கூட்டுக் குழம்பு என் அண்ணன் வீட்டிலேயோ, தம்பி வீட்டிலேயோ கூடப் பண்ணுவதில்லை. இங்கே ரங்க்ஸ் முகம் பார்த்துட்டுச் செய்ய வேண்டி இருக்கும். அவர்ட்டே இது பொரிச்ச குழம்புனு சொல்லிப் பரிமாறிடணும். இதுக்குத் தொட்டுக்க எங்க வீட்டிலே அப்பளம்தான். பொரித்த அப்பளம்! :) எப்போவானும் பச்சடி!

    பதிலளிநீக்கு
  8. பிட்லே, சேம்பு, மசியல் ஆகிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  9. பிட்லே, பிட்லை, பிட்ளை ஆகிய பெயர்களில் வழங்கும் இது ஒரு வகை அரைத்து விட்ட சாம்பார். பொதுவாக இதற்குப் பொடி போடுவதில்லை. ஆனால் இங்கே ஶ்ரீராம் வீட்டில் போட்டிருக்காங்க! கும்பகோணத்துக்காரங்க சமையலில் சாம்பார்ப் பொடி அதிகம் இடம்பெறும். அங்கே கல்யாணச் சமையல்காரங்க கூட முன்னெல்லாம் (காடரிங் கான்ட்ராக்ட் வரும் முன்னர்) கல்யாண சமையலுக்குத் தேவைப்படும் என சாம்பார்ப் பொடி சாமான்கள் லிஸ்ட் கொடுத்து வாங்கிக் காய வைத்து மிஷினில் திரித்து வைக்கச் சொல்லுவாங்க. இதை என் நாத்தனார் கல்யாணத்தில் பார்த்திருப்பதோடு என் மாமியார் சொல்லியும் கேட்டிருக்கேன். ஆனால் தென் மாவட்டங்களில் பொடி தயாரிப்பு இருந்தாலும் பெரும்பாலும் ரசப்பொடி தான். சாம்பார், பிட்லைக்கு அப்போதைக்கப்போது சாமான்களை வறுத்து அரைத்துத் தான் சேர்ப்பார்கள். என் சமையலும் பெரும்பாலும் இப்படியே! பொடி போட்டால் கட்டாயமாய் ருசி மாறும்.

    சேம்பு என்பது சேப்பங்கிழங்கு. இதையும் நாங்க சாம்பாரில் போட்டதில்லை. திருவாதிரைக் குழம்பு தவிர! :)

    மசியல், பிடி கருணையிலும், சேனையிலும் பெரும்பாலும் செய்வது. நன்கு குழைய வேகவைத்துக் கொண்டு மசித்துக் கொண்டு கொஞ்சமாய்ப் பருப்புச் சேர்த்துக் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை தாளித்து எலுமிச்சம்பழம் பிழியலாம். புளி சேர்த்த மசியல் எனில் மி.வத்தல், கொ.விதை, வெந்தயம் வறுத்துப் பொடித்துச் சேர்த்துக் கடுகு, உபருப்பு, மி.வ.கருகப்பிலை தாளிப்பார்கள். எலுமிச்சை சேர்த்த மசியல் எனில் அது சைட் டிஷாக தொட்டுக்கப் பயன்படுத்துவாங்க. புளி சேர்த்த மசியல் எனில் குழம்புக்குப் பதிலாகச் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடுவார்கள். (இது எங்க வீட்டு வழக்கம்)

    பதிலளிநீக்கு
  10. எனக்கு யார் செய்து தருவார்....

    பதிலளிநீக்கு
  11. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் செய்து பார்க்கின்றேன்! புதுவகை ரெசிபிக்கு நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  12. அருமையான குறிப்பு. நானும் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான குறிப்பு. நானும் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. என்னைப் பொறுத்தவரை பாகற்காய் பிட்லேயே பிட்லேயன்றி
    மற்றெல்லாம் பிட்லேயல்ல! 100% ஏற்றுக் கொள்கிறேன்.கத்தரிக்கய் பிட்லை தெரியும்;இது புதிது!

    பதிலளிநீக்கு
  15. நன்றி டாக்டர் நம்பள்கி..

    உங்கள் கேள்விகளுக்கு கீதா மேடம் பதில் சொல்லி விட்டார்!

    :))

    பதிலளிநீக்கு
  16. மீள் வருகைகளுக்கு நன்றி கீதா மேடம்.

    //பிட்லே, பிட்லை, பிட்ளை ஆகிய பெயர்களில் வழங்கும் இது ஒரு வகை அரைத்து விட்ட சாம்பார். பொதுவாக இதற்குப் பொடி போடுவதில்லை. ஆனால் இங்கே ஶ்ரீராம் வீட்டில் போட்டிருக்காங்க!//

    இது பிட்லே அல்ல. பிட்லே அல்ல. பிட்லே சாயலில் இருப்பது. ஒரே மாதிரி இல்லாமல் வேறு மாதிரி! உருளைக் கிழங்கெல்லாம் போட்டுக் குழம்பு செய்யறோம்னா வித்தியாசத்தைப் பாருங்களேன். நீங்கள் கட்டாயம் இந்த முறையில் ஒருமுறை செய்து பார்க்கவும்!

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கு நன்றி கில்லர்ஜி.

    உங்கள் கேள்வி என்னைத் தாக்குகிறது.

    பதிலளிநீக்கு
  18. நன்றி நிஷா. அவசியம் செய்து பாருங்க..முடிந்தால் எங்களுக்கும் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி ராமலக்ஷ்மி. அவசியம் செய்து பாருங்க..முடிந்தால் எங்களுக்கும் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

    :)))

    பதிலளிநீக்கு
  20. நன்றி சென்னை பித்தன் ஸார்.

    இது பிட்லே அல்ல! பில்டே!!! கொஞ்சம் வித்தியாசமான முயற்சி. என் பாஸுக்கு அவர் அப்பா சொல்லிக் கொடுத்தது!

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும், வாக்குக்கும் நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  22. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் ஜொள்ளு விட்டுப் படிச்சிட்டு வந்தேன் ஃபைனல்படம் போடாமல் ஏமாத்தியதுக்காக உங்க கூட டூ போங்க ஸ்ரீராம். :( :( :(

    வீட்டம்மாவிடம் எடுத்து வைக்கச் சொல்லலாம்தானே.


    சரி இது கீதா மேம் சொன்னமாதிரி எல்லாம் கலந்த கதம்பமா இருக்கே. :) கோஸ் கூட்டு பொரியல் மசாலா பராத்தா செய்வோம். உருளையுடன் சேர்த்து செய்ததில்லை. அப்புறம் கீதா மேம் சொன்னமாதிரி இந்தமாதிரி குழம்புக்கெல்லாம் வறுத்து அரைச்சு விடுறதுதான் பொடி போடுறதில்லை. டேஸ்ட் மாறிடும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லியிருக்கிறார் மாதிரி ஒருவாட்டி செய்து பாருங்க தேனம்மை! அப்புறம் சொல்லுங்க!

      :)))

      நீக்கு
  23. நன்றாக இருக்கிறது இந்தக் குறிப்பு! முட்டைக்கோஸுடன் கொண்டகடலையையும் சேர்ப்பதால் தனி ருசியாக இருக்கும்! புகைப்படம் இல்லாதது தான் குறை!

    பதிலளிநீக்கு
  24. இது பிட்லையா??!!! ம்ம்ம்ம்ம்ம்ம் எங்கள் ..அதாவது எங்கள் வீட்டில் செய்யும் பிட்லை இப்படி இல்லையே..

    பாகற்காய், கத்தரிக்காய் பிட்லை -

    இது கொஞ்சம் சாம்பார், கூட்டு, எல்லாம் கலந்த கலவை போல இருக்கிறதே.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரமாக படிச்சுட்டுப் போறீங்களா கீதா? :)))

      இது பிட்லே இல்லை. பிட்லே நினைவுக்கு வரும் சுவையில் இருக்கும்!


      வருகைக்கும், வாக்குக்கும் நன்றி.

      நீக்கு
  25. செய்துபார்த்துட்டா போச்சு..

    கீதா

    பதிலளிநீக்கு
  26. பாசிட்டிவ் செய்திகளுக்கு நாளை விசிட் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே... செவ்வாய்க்கிழமைகளில் பாஸிட்டிவ் செய்திகள் படிக்கக் கூடாதோ!!! :P

      நன்றி கீதா!!

      நீக்கு
  27. அருமையான குழம்பு! செய்து பார்த்து சாப்பிட்டு சொல்கிறேன்.
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாக்குக்கும் நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  28. அருமையாக இருக்கிறது படிக்க. செய்து பார்த்தால் சுவையாக இருக்கும்என்று நினைக்கிறேன் . நன்றி. அடுத்த முறை செய்யும் போது படம் எடுத்து இணைத்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  29. நாளைக்கு எங்க வீட்ல பண்றதா பேச்சு... கீதா சாம்பசிவம் போட்டு தாளிக்கிறாங்களே!

    பதிலளிநீக்கு
  30. ஹாஹா, தம்பி,(மோகன் ஜி, நாங்க ஒரு தரம் ஸ்வீகாரம் எடுத்துட்டோம்னா மாறமாட்டோமுல்ல) நீங்க செய்து வைங்க. நான் கடைசியில் வந்து தாளிக்கிறேன். (உங்களையும் சேர்த்துத் தான்)

    பதிலளிநீக்கு
  31. கீதா சாம்பசிவம் அவர்களே...
    மிக்க நன்றி!
    கீரை மசிக்கிறது என்பதை எங்கள் வீட்டில் கீரை கடையரது என்று சொல்வார்க்கள்'
    ஒரு சிறிய கேள்விக்கு இவ்வளவு பொறுப்பான பெரிய பதிலா? மிக மிக நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!