Saturday, December 19, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.

1)  பெருங்குடி, கொடுங்கையூரில் குவிந்துள்ள குப்பை 2000  கோடி கிலோவாம்.  என்ன செய்யப் போகிறோம்?  அதனால் ஒரு எதிர்பார்க்காத பிரச்னை வரும்வரை அரசாங்கங்கள் அதைப் பற்றியே யோசிக்காது. அணிலாக ஒரு சிறுவன்! ஸ்ரீவில்லிபுத்துார் கிராம அரசு பள்ளி மாணவன் விஷ்வா.

                                      


2)  மாணவர்களுக்குக் கை கொடுக்கும் நண்பர்கள் குழு.
3)   வீரக் குழந்தைகள், புத்திசாலிக் குழந்தைகள்.
4)  கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிரைவர்.
5)  மேலும் சில நெகிழ்ச்சியான அனுபவங்கள்.  "எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை.  அவைகளின் உயிரைக் காப்பாற்றுங்கள்."
6)  மகேந்திர ஸ்ரீமாலி.


7)  சும்மா வெல்ல நிவாரணம் திரட்டுகிறேன், கொடுங்கள் என்று திரட்டாமல் ஷூ பாலிஷ் போட்டு பணம் திரட்டிய பாபுராஜ்.
 


8)  இந்த நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் மக்கள்படும் வேதனையை அறிந்ததும் எனது வீட்டிற்கு எதிரே ஒரு டெண்ட் போட்டு உட்கார்ந்து கொண்டேன்,சென்னை மக்களுக்கு எது கொடுத்தாலும் கொண்டு செல்லப்படும் என்று போர்டு எழுதிவைத்தேன், முதல் கட்டமாக என் வீட்டில் இருந்த துணிமணி பண்டம் பாத்திரங்கள் அனைத்தையும் கொண்டுவந்து வைத்தேன். 


அடுத்து கொஞ்ச நேரத்தில் மளமளவென பொருட்கள் குவிந்தன பொருட்கள் தரமுடியாதவர்கள் பணமாக கொடுத்தனர் அந்த பணம் உடனடியாக பொருளாக மாற்றப்பட்டது. பல பெண்கள் வீட்டில் இருந்த அரிசி பருப்பு போன்ற பொருட்களை கொண்டுவந்து குவித்தனர், ஒருவர் கூட தங்களது பெயர்களை குறிப்பிடவில்லை உள்ளூர் நண்பர்கள் பத்து பேர் உதவிக்கு வர நிவாரணபொருட்களை பிரித்து பேக்கிங் செய்யும் வேலை நடைபெற்றது.  கோவைக்காரர் உதவி.


9) பழைய சம்பவமாயிருந்தாலும் பாஸிட்டிவ் செய்தி.  இப்போது இந்தச் செய்தியைப் படிப்பது நமக்கு ஒரு உத்வேகத்தைத் தரலாம்.
10) "துப்பாக்கி எடுத்து எல்லையில் நின்று போரிட்டுத்தான் நாட்டைக் காக்க வேண்டும் என்பதில்லை.  மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்குவோம்"  அபிஷேக் சொல்வதைக் கேளுங்கள் / படியுங்கள்.  வேலையை விட்டார்.  காரை விற்றார்.  ஏன்?

18 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
நன்றி நண்பரே
தம +1

Dr B Jambulingam said...

பல செய்திகள் படிக்கப்பட்டவையே. இருந்தாலும் தொகுப்பாக, தங்கள் நடையில் படித்தபோது பிரமிப்பாக இருந்தது.

KILLERGEE Devakottai said...

2000 ஆயிரம் கோடி கிலோ... இதை என்ன செய்யப்போகிறோம்

புலவர் இராமாநுசம் said...

அனைவரும் நல்லவரே சுயநல அரசியல் வாதிகளைத் தவிர!

வலிப்போக்கன் - said...

தகவல்கள் அருமை....நண்பரே......

Angelin said...

அனைத்தும் அருமையான தகவல்கள் ...மஹேந்திர ஸ்ரீமாலி //“I have no diabetes, no blood pressure, nothing,” says Mahendra cheerfully, and credits the happiness he gets from his work for his good health// மனம் நெகிழ்ந்தது ..

இறை ஆசி தன்னலமின்றி உழைக்கும் அனைவருக்கும் உண்டு ..

Angelin said...

நீரஜா :( நான் ஸ்கூல் படிக்கும்போது நடந்த சம்பவம் ..... எந்த சூழ்நிலையிலும் மனோ தைரியத்துடன் செயல்படணும் என்பதை உணர்த்துகிறது இச்சம்பவம்

G.M Balasubramaniam said...

நெகிழ்ச்சிதரும் செய்திகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

Bagawanjee KA said...

நல்ல சிந்தனை உள்ள அனைவரும் நலமாய் வாழ வாழ்த்துக்கள் !

S.P. Senthil Kumar said...

அனைத்தும் நெகிழ்வை ஏற்படுத்தக் கூடிய அற்புத நிகழ்வுகள். மனிதம் இன்னும் சாகவில்லை என்று உரக்க சொல்ல வைத்த பதிவுகள்.
த ம 11

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பாஸிட்டிவ் செய்திகள்
மாற்றாருக்கு வழிகாட்டும்
பல்கலைக்கழகம்

சிறந்த அறிமுகங்கள்
தொடரட்டும்

http://www.ypvnpubs.com/

Thulasidharan V Thillaiakathu said...

முதலில் மகேந்திர ஸ்ரீமாலி அவர்களுக்கு பாராட்டுகள். சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எந்தவித உடல் உபாதையும் இல்லை..பின்னெ இத்தனைச் செல்லங்கள் அதுவும் உடல் ஊனமுற்றச் செல்லங்களுக்கு உதவும் போது..என்ன அண்டும்?!!!!

விஷ்வா வின் முயற்சி திருவினை ஆனால் நல்லது. 2000 ஆயிரம் கோடி கிலோ யம்மாடியோவ். ஆனால் நிறைய இருக்கும் போல இருக்கே...-கீதா

அபிஷெக் வார்த்தைகள்நிஜம்...

நீரஜா கல்லூரிக்காலத்தில் நடந்த சம்பவம். அப்போதே ப்ரமிப்பை ஏற்படுத்திய ஒன்று...

பாபுராஜ், டிரைவர் அனைவது செயல்களும் போற்றுதற்குரியது..

ராமலக்ஷ்மி said...

தொகுப்புக்கு நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நம்மை சுற்றி நல்ல உள்ளங்கள் பல உள்ளன . நாமும் அந்தப் பட்டியலில் இணைய வேண்டும் என்று தோன்றுகிறது

Chokkan Subramanian said...

ஒவ்வொரு இந்த மாதிரி பாசிடிவ் செய்திகள் கொடுத்து,உலகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். நன்றி ஐயா.

Geetha Sambasivam said...

//சும்மா வெல்ல நிவாரணம் // வெள்ள நிவாரணம்! லக்ஷம் தரம் இம்பொசிஷன் எழுதுங்க! :)

Geetha Sambasivam said...

அம்பத்தூரில் இந்தியன் வங்கி காலனி, மூன்றாவது பிரதான சாலையிலும் ஒரு நாய்கள் காப்பகம் அந்த வீட்டுக்காரங்களே ஏற்படுத்தி இருக்காங்க. நம்ம வீட்டுச் செல்லத்தை நாம் எங்காவது ஊர்களுக்குச் செல்கையில் அங்கே விட்டுச் செல்லலாம். இப்போவும் இருக்கானு தெரியலை!

ஞா. கலையரசி said...

நீரஜா பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தாலும் இப்போது படித்தவுடன் நெகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளம் பல நல்ல உள்ளங்களை உலகுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!