ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஞாயிறு 342 :: எப்போ வருவாரோ?

                     
                      

14 கருத்துகள்:

  1. கைப்பை பற்றிய கவலை இல்லாது ஆழ்ந்த உறக்கம்..... அத்தனை களைப்போ?

    பதிலளிநீக்கு
  2. எப்போ வருவாரோ - யம ராஜன்
    எப்போ வருவாரோ !!
    எருமை மேல் அமர்ந்து
    அருமையாக அழைக்க எனை,
    எப்போ வருவாரோ !

    வருந்தி வாடும் உறவும் இல்லை.
    உழைக்கும் சக்தி உடலில் இல்லை.
    உலகில் இன்னும் நாட்டம் இல்லை எனினும்
    பொறுமை இன்னும் போகவில்லை.

    எத்தனை நாள் இனி ஏங்கிக்கிடப்பேன் !
    எத்தனை இரவுகள் தூங்கி விழிப்பேன். !!
    எத்தனை கனவுகள் கண்டு வியப்பேன் !
    எத்தனை பித்தங்கள் கொண்டு தவிப்பேன் !!

    எப்போ வருவாரோ என் கலி தீர்க்க..

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. வருவார்...ஆனா வரமாட்டார்.

    பதிலளிநீக்கு
  4. இதை மையமா வைச்சு ஒரு சிறுகதை எழுதலாம் போலிருக்கே...? :-)

    பதிலளிநீக்கு
  5. எந்த ஊர் ரயில் நிலையம்? கைப்பையைக் கீழே வைச்சிருக்காரே? கூட்டமே இல்லையோ? அல்லது அதில் விலை பெற்ற மதிப்புக்குரிய பொருட்கள் இல்லையோ? நிம்மதியாய்த் தூங்கறாரா? அல்லது சும்மா கண்ணை மூடி இருக்காரா?

    பதிலளிநீக்கு
  6. இந்த உறக்கம் அம்பானிக்கு கிடைக்குமா ?

    பதிலளிநீக்கு
  7. நிம்மதியான தூக்கம்...
    நித்திரையைக் கொல்லும்
    சப்தங்களோ சம்பவங்களோ
    எப்போதும் வரவேண்டாம்...

    பதிலளிநீக்கு
  8. அட பொது இடத்தில், வெயில் அடித்தும் கூட இப்படித் தூங்க முடிகிறது என்றால் பல நாட்கள் தூங்காமல் இருந்திருப்பார் இல்லைப் பயணப்பையைப் பற்றிய கவலை இல்லை போலும். இல்லைக் குடித்திருக்கலாம்...என்னவோ ஆழ்ந்த உறக்கம்...ஹும் கொடுத்துவைத்தவர்தான்..

    பதிலளிநீக்கு
  9. ஏதோ நிம்மதி. எப்போது வந்தாலும் வரவேற்பார்.கஷ்டம் உள்ளவராகத் தெரியவில்லை.கவலைப்படுபவராகவும் தெரியவில்லை. எல்லோர் விமர்சனமும் எதற்காக? எழுந்திருந்து நடையைக் கட்டுங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. 'எப்போ எழுவாரோ' என்று தலைப்பிருந்தால் தான் என்னவாம்?..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!