புதன், 27 ஜனவரி, 2016

கல்கி


                                                    Image result for itarsi railway station images      


கடையில் தொங்கிய  கல்கியை வாங்கிக் கொண்டு ஜபல்பூரில் ரயில் ஏறும்போது மணி இரவு 2.45.

அது பிலாஸ்பூரிலிருந்து இந்தூருக்கு மேற்கு நோக்கிச் செல்லும் வண்டி.  சென்னை செல்ல,
இடார்சியில் இறங்கி G T யில் ஏற வேண்டும்.  


பக்கத்து, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் அமர்ந்த வாக்கிலேயே சாய்ந்து அரைத் தூக்கத்தில் இருந்தார்கள்.  இடம் ஏற்படுத்திக் கொண்டு இடையில் என் இருக்கையில் சொருகிக் கொண்டேன்.  அதே அரைத்தூக்கம் என்னையும் ஆட்கொண்டது.


விடிந்த நேரம் விழித்தபோது பெட்டியே விழிப்பில்தான் இருந்தது.  ஜபல்பூரில் வாங்கிய கல்கியைக் கையில் எடுத்தேன்.  மெல்லப் படிக்கத் தொடங்கினேன்.  


                                                                                     Image result for kalki 1972 weekly  images


என் இடுப்பில் முழங்கை ஊன்றியிருந்தவர் சற்றே காக்கை போலத் தலை சாய்த்து என்னுடன் கூடவே படிக்க முயற்சித்ததில் அவரும் தமிழர் என்று புரிந்தது.  கொஞ்சம் இடைவெளி விட்டு கல்கியைக் கீழே வைத்தால் உடனடியாகக் கடன் கேட்கும் அபாயம் இருந்ததால், மெல்ல நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன்.


"சென்னை போறீங்களா?" என்றார்.


திரும்பாமலேயே "ஆமாம்" என்றேன்.


"அவர் தமிழ்னு எப்படித் தெரியும்?" என்றது ஒரு எதிர் இருக்கை.


"கையில் கல்கியைப் பார்த்தால் தெரியலையா?" என்றார் இடுப்பு முழங்கை.


நான் உரையாடலில் சுவாரஸ்யம் காட்டாமல்,  தலை திருப்பாமல் கல்கியை மனனம் செய்தேன்.


பயணங்களில் நாம் வாங்கும் பத்திரிக்கை, செய்தித் தாள்கள் நமக்குச் சொந்தமானவை அல்ல!  நாம் சற்றே கை அயர்ந்து, கொஞ்சம் தாழ்த்தினால் காத்திருந்த கை ஒன்று அதைக் கேட்டு நீளும்.  


சமயங்களில் அது கை மாறி, கைமாறி நம் அனுமதிக்குக் காத்திராமல் எங்கெங்கோ செல்லும்.  இது போன்ற அனுபவங்கள் நிறையவே உண்டு!


கொஞ்ச நேரம் சென்றிருக்கும்.


"ஸார்.." என்றார் அவர்.

கண்டு கொள்ளாதது போல இருந்தேன்.


"ஸார்.." என்று சற்றே உரத்த குரலில் மீண்டும் குரல் கொடுத்தார்.


கல்கி கடன் கொடுக்க விரும்பாததால் மீண்டும் கவனத்தில் பதியாதது போல இருந்தேன்.


"கல்கி ஸார்..."


இதற்குமேல் சும்மா இருக்க முடியாது!   திரும்பினேன், கல்கியைக் கையில் படிக்கும் பாவனையில் மடக்கிப் பிடித்தபடி. 


"சென்னைதானே போறீங்கன்னு சொன்னீங்க?"


"ஆமாம், ஏன்?"


"அப்போ இறங்கி நீங்க G T க்கு மாற வேண்டுமே..."


"இடார்சி வந்தாச்சா?"  வெளியில் பார்த்தேன்.  கல்கி கடன் கவனத்தில் இதைத் தவற விட்டிருக்கிறேன்.


                                                             Image result for itarsi railway station images

"இடார்சி வந்து, நின்று இப்போ இந்தப் பெட்டியை வேறு வண்டியோடு இணைக்கப் போகிறார்கள்.  இப்படியே படித்துக் கொண்டிருந்தால் பம்பாய்க்குத்தான் (இப்போதுதான் அது மும்பை) போவீர்கள்"


சடசடவென என் பொருட்களைச் சேகரித்துக்கொண்டு ஸீட்டை விட்டு வெளியே வந்தேன்.  ஒரு நொடித் தீர்மானத்தில் கல்கியை அவரிடத்தில் நீட்டினேன்.  ஒன்றும் சொல்லாமல் பெற்றுக் கொண்டு புன்னகைத்தார்.


ரயில் நிலையம் சற்றே தாண்டி ஒரு மதகு போன்ற இடத்தில் நின்றிருந்த பெட்டியிலிருந்து குதித்து, இடது கையால் ரயில் பெட்டியைப் பற்றியபடி ஸ்லீப்பர் கட்டைகளில் கால் வைத்து கவனமாக நடந்து பிளாட்பார்ம் ஏறி G T யை அடைந்தேன். 

                                                         Image result for G T express images

44 கருத்துகள்:

  1. அந்த நபர் உதவிதான் செய்திருக்கின்றார் நீங்கள்தான் வேறு மா3யாக நினைத்து இருக்கின்றீர்கள்

    பதிலளிநீக்கு
  2. சில நேரங்களில் இப்படித்தான் நடந்துவிடுகிறது
    எப்படியோ கல்கி காப்பாற்றி விட்டது

    பதிலளிநீக்கு
  3. இப்படித்தான் பல நேரங்களில் நானும் அனுபவபட்டிருக்கேன் :)
    யாரை நாம அதிகம் தள்ளி வைக்கிறோமோ யாரை சந்தேகப்படுகிரோமோ யாரை மதியாமல் விடரோமோ அவர்தான் நமக்கு பேருதவி செய்ய உதவிகரத்தை நீட்டி வருவார் !
    கல்கி சூப்பர்ப் ..

    பதிலளிநீக்கு
  4. சில ஆண்டுகளுக்கு முன் வட இந்தியப்பயணம் மேற்கொண்டபோது இட்டார்சியைக் கண்டோம். கல்கியுடன் அந்நினைவும் எனக்கு வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. சில சமயம் நாம் ஒன்று நினைக்க மற்றொன்று நடக்கும்! வித்தியாசமான அனுபவம்தான்!

    பதிலளிநீக்கு
  6. 'கல்கி'யும் நானும் என்று தலைப்பு வைத்திருக்கலாம். ஹி..ஹி.. இப்பொழுதெல்லாம் பிரபலங்களிடம் இந்த தலைப்பில் தானே கேட்டு வாங்கி கட்டுரைகளைப் பிரசுரிக்கிறார்கள்?.. கதையும் 'கடந்த 30 நாட்களில்..' இடத்திற்குப் போயிருக்கும். :))

    சாதாரணமாக சென்னையிலேயே சில பேட்டைகளில் 'கல்கி' கிடைப்பதில்லையே? ஜபல்பூரில் கல்கியா? வடக்கே போன சமயங்களில் எல்லாம் ரயில் நிலையங்களில் எந்த தமிழ்ப்பத்திரிகையும் கிடைக்காமல் என்ன அவஸ்தைப் பட்டிருப்பேன்?..

    நல்ல வேலை செய்தீர்கள்... அவர் கேட்ட பொழுதே நீங்கள் கொடுத்திருந்தால், அவர் கல்கியில் ஆழ்ந்து நீங்களும் விட்ட தூக்கத்தைத் தொடர்ந்து தூங்கி வழிந்து இடார்சி வந்தும் நினைவு படுத்தாமலேயே போயிருப்பாரோ?.. இப்படியும் யோசனை போயிற்று.

    முடிவு சூப்பர். இந்தப் பத்திரிகை தானே சக பயணியிடம் இடைவெளியை ஏற்படுத்தியது?. எது அந்தக் காரியத்தைச் செய்ததோ, அதையே தானமாக வழங்கி புன்னகையை அவர் முகத்தில் பார்த்த பெருந்தன்மை.

    சின்ன கதையுள் சீரிய கருத்து. வாழ்த்துக்கள்.

    கொசுறு: 'கல்பனா' வரைந்த படமும் ஜோர். அட்டைப்படம் யார் வரைத்தது என்று கதையை முடித்து ஒரு குட்டிப் போட்டியும் வைத்து கொண்டாடியிருக்கலாம். '

    பதிலளிநீக்கு
  7. 'கல்கி'யும் நானும் என்று தலைப்பு வைத்திருக்கலாம். ஹி..ஹி.. இப்பொழுதெல்லாம் பிரபலங்களிடம் இந்த தலைப்பில் தானே கேட்டு வாங்கி கட்டுரைகளைப் பிரசுரிக்கிறார்கள்?.. கதையும் 'கடந்த 30 நாட்களில்..' இடத்திற்குப் போயிருக்கும். :))

    சாதாரணமாக சென்னையிலேயே சில பேட்டைகளில் 'கல்கி' கிடைப்பதில்லையே? ஜபல்பூரில் கல்கியா? வடக்கே போன சமயங்களில் எல்லாம் ரயில் நிலையங்களில் எந்த தமிழ்ப்பத்திரிகையும் கிடைக்காமல் என்ன அவஸ்தைப் பட்டிருப்பேன்?..

    நல்ல வேலை செய்தீர்கள்... அவர் கேட்ட பொழுதே நீங்கள் கொடுத்திருந்தால், அவர் கல்கியில் ஆழ்ந்து நீங்களும் விட்ட தூக்கத்தைத் தொடர்ந்து தூங்கி வழிந்து இடார்சி வந்தும் நினைவு படுத்தாமலேயே போயிருப்பாரோ?.. இப்படியும் யோசனை போயிற்று.

    முடிவு சூப்பர். இந்தப் பத்திரிகை தானே சக பயணியிடம் இடைவெளியை ஏற்படுத்தியது?. எது அந்தக் காரியத்தைச் செய்ததோ, அதையே தானமாக வழங்கி புன்னகையை அவர் முகத்தில் பார்த்த பெருந்தன்மை.

    சின்ன கதையுள் சீரிய கருத்து. வாழ்த்துக்கள்.

    கொசுறு: 'கல்பனா' வரைந்த படமும் ஜோர். அட்டைப்படம் யார் வரைத்தது என்று கதையை முடித்து ஒரு குட்டிப் போட்டியும் வைத்து கொண்டாடியிருக்கலாம். '

    பதிலளிநீக்கு
  8. தயங்காமல் தான் எழுதினேன். போய்ச் சேராமல் போக்குக் காட்டி விட்டதே! மறுபடியும் முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. 'கல்கி'யும் நானும் என்று தலைப்பு வைத்திருக்கலாம். இப்பொழுதெல்லாம் பிரபலங்களிடம் கேட்டு வாங்கி இந்த தலைப்பில் தானே கட்டுரைகளைப் பிரசுரிக்கிறார்கள்?.. கதையும் 'கடந்த 30 நாட்களில்..' இடத்தைப் பிடித்திருக்கும்.

    சென்னையிலேயே சில பேட்டைகளில் கல்கி கிடைக்கவில்லை. ஜபல்பூரில் கல்கியா?.. வடக்குப் பக்கம் போன போதெல்லாம் ரயில் நிலையங்களில் எந்த தமிழ்ப் பத்திரிகையும் கிடைக்காமல் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருப்பேன்?..

    நல்ல காரியம் செய்தீர்கள். அவருக்கு நீங்கள் கல்கியை வழங்கி, அவர் பத்திரிகையில் ஆழ்ந்து, நீங்களூம் விட்ட தூக்கத்தைத் தொடர்ந்து, இடார்சி வந்தும் கோட்டை விட்டிருப்பீர்களோ என்று யோசனை போயிற்று.

    முடிவு சூப்பர். சக பயணியிடம் எந்தப் பத்திரிகை இடைவெளி ஏற்படுத்தியதோ அதையே தானமாக வழங்கி அவர் முகத்தில் புன்னைகையைப் பார்த்த பெருமிதம்.

    சின்ன கதையுள் சீரிய கருத்து. வாழ்த்துக்கள்.

    கொசுறு: 'கலபனா' வரைந்த அட்டைப்படம் அருமை. வேறு சமயங்களில் 'வரைந்தது யார்?' போட்டிக்கு உபயோகப்படும்.

    பதிலளிநீக்கு
  10. மன்னிக்கவும்.. ஏதோ தவறு நடந்து விட்டது. மூன்று தடவைகள் பிரசுரமாகி தொந்தரவு தந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  11. சரியான நேரத்தில் உங்களை எச்சரித்து உதவி செய்த அவருக்குத் தாங்கள் ’கல்கி’ தானம் செய்தது மிகவும் நல்ல செயல். :) பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. இடார்ஸியைப் பற்றிப் படித்ததும், ஒரு தடவை ஜான்ஸியில் ‘பசிக்கிறதே’ என்று ரயிலைவிட்டு இறங்கி, பூரிகிழங்கைத் தின்றுகொண்டிருக்கும்போதே, ஜி.டி.கிளம்பிப்போக, அப்புறம் ஒரு பாஸஞ்சரைப் பிடித்து, இடார்ஸிக்குப் போன அனுபவம் ஞாபகத்துக்கு வந்தது. உங்க அனுபவம் எம்புட்டோ தேவலாம். :-)

    பதிலளிநீக்கு
  13. கல்கி கடன் கவனத்தில் தவற விட்டதை
    கல்கி தானத்தால் சரியாக்கிவிட்டது சிந்திக்கவைத்தது..

    பதிலளிநீக்கு
  14. இடரும் தந்து ,அதற்கு தீர்வும் தந்து இடார்ச்சியில் இறக்கி விட்டது ...கல்கி :)

    பதிலளிநீக்கு
  15. சின்ன கதைதான்! சிந்தனைக்கு விருந்து!

    பதிலளிநீக்கு
  16. அருமையான எழுத்து. யார் எழுதினது மா. அப்படியே நேர நடக்கற மாதிரி இருந்தது.
    இடார்சி முக்கிய ஜங்க்ஷன்.

    பதிலளிநீக்கு
  17. கல்கி காப்பாற்றினார் என்று சொல்லுங்கள் (இது உங்கள் கதைதானே??!!!) அந்த மனிதரிடம் நீங்கள் கல்கியைக் கொடுத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் ஒழுங்காக இடார்சியில் இறங்கியிருப்பீர்களோ!!? அந்த மனிதர் உங்களுக்கு உதவியிருக்கின்றார்... கல்கி பரிசு அவருக்கு. ஜி டி யை மிஸ் பண்ணாமல் ஏறிவிட்டீர்களே..!! நல்ல அனுபவம்!

    பதிலளிநீக்கு
  18. நன்றி கில்லர்ஜி. சாதாரணமாக பயணங்களில் பக்கத்து சீட்காரர் வாங்கும் பத்திரிகையை 15 3கேட்காத பயணி ஏது!

    பதிலளிநீக்கு
  19. நன்றி தனபாலன்! கல்கி வேடிக்கை பார்த்தது!

    பதிலளிநீக்கு
  20. ஆமாம், உண்மை நண்பர் கரந்தை ஜெயக்குமார். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஏஞ்சலின். நீங்கள் சொல்வது சரிதான். தர்மசங்கடங்கள்!

    பதிலளிநீக்கு
  22. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஜீவி ஸார். ம்ம்ம்... தலைப்பை மாற்றி இருக்கலாமோ! கல்கி இஒதுதான் சரியாகக் கிடைப்பதில்லை. சம்பவம் நடந்த காலங்களில் பத்திரிகைகளுக்கு இருந்த மதிப்பு.. அங்கு அப்போது கிடைத்தது! சம்பவம் ஒன்றும் நடந்து, எழுத சந்தர்ப்பமும் கிடைத்தது! பயண அனுபவங்கள் பற்றி எழுதக் கேட்டுக் கொள்ளப்பட்டபோது எங்கள் ஆசிரியர் ஒருவரின் அனுபத்தைச் சுருக்கமாகக் கூறினார். நான் அதை ஜவ்வாக இழுத்து விட்டேன்! :)))

    பதிலளிநீக்கு
  24. இரண்டு மூன்று முறை பிரசுரமாகி விட்டது போல! சமயங்களில் இது போல நடக்கும் ஜீவி ஸார். அதனால் என்ன, பரவாயில்லை! நான் அற்ற தளங்களில் இப்படி பின்னூட்டம் இடும்போது நடப்பதுண்டு. நான் ஒன்றை வைத்து விட்டு மற்றவைகளை டெலிட் செய்து விடுவேன்!

    பதிலளிநீக்கு
  25. தொடர் வருகைக்கு நன்றி சேட்டை ஜி!

    பதிலளிநீக்கு
  26. நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி வல்லிமா... என்ன இப்படிக் கேட்டுட்டீங்க... நான் நான் நாந்தான் எழுதினேன்! மூன்று வரிகளில் கூறப்பட்ட அனுபவத்தை இழுத்...து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  28. நன்றி துளசிஜி. இது எங்கள் ஆசிரியர் ஒருவரின் அனுபவம்! ஆனால் அது நானல்ல! ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  29. ஹா...ஹா...
    கல்கி கேப்பாரோன்னு பயந்து இறங்க வேண்டிய இடத்தை மறந்து விட்டீர்கள்...
    அனுபவம் எப்பவும் இனிமைதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!