Wednesday, February 24, 2016

B P ஏறுமா இறங்குமா? அது ஒரு மெஸேஜ் காலம்!
 Image result for s m s images

ஒரு எஸ் எம் எஸ்....

பெரிய கார்ப்பொரேட் நிறுவனத்தில் வேலை செய்பவரிடமிருந்து... சின்னையா அவர் பெயர்.

'ரத்த அழுத்தம் குறைக்க உங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள்' என்று...

நான் எழுதினேன்.. 

'நாற்காலியில் உட்கார்ந்து, தலையைப் பின் புறம் தள்ளி இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் உருட்டுங்கள்.   மெதுவாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் திருப்பிய பின்,  மேலும் கொஞ்சம் திரும்ப முயற்சி செய்து வலிக்குமிடத்தில 15 வினாடிகள் நிறுத்தி, பின் எதிர் முனையிலும் அதே மாதிரி செய்யவும்' என்று அனுப்பினேன்.


Image result for s m s images

சற்று நேரம் கழித்து, "இன்னும்.. " என்று ஒரு மெஸேஜ்.

மறுபடியும் யோசித்து இன்னொரு யோசனை டைப்பி அனுப்பினேன்.

  மறுபடியும் அங்கிருந்து "வேறு...?" என்று கேட்டது மெசேஜ்.

'ராமாராவ் கிட்டே பேச்சு எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம்' என்று செய்தி அனுப்பிய பின் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. ராமாராவ் எங்களின் இன்னொரு நண்பர்.  அவர் குணம் அப்படி!

பிறகு கான்டீனில் மதிய உணவு அருந்தும் போது எதிரில் வருவது யார்?  வேறு யார்..  அதே ராமாராவ்!  


                                                                Image result for office canteen images

ராமராவ் கிட்டே வந்து "கேஜி!  உங்க கிட்டே ஒண்ணு கேட்கணும்.."  என்று ஆரம்பிக்க,

"சரி, சின்னையாவுக்கு நாம் அனுப்பிய செய்தியை இவரிடம் காட்டி நம்மைப் போட்டுக் கொடுத்து விட்டார் ..நம்ம கதை கந்தல்" என்று அவரைப் பார்க்க,

அவர் ஒரு மிளகாயைக் கடித்தது போல.. 

போல என்ன...?   மிளகாயைத்தான் கடித்திருந்தார்.  ஒரிரண்டு முறை விக்கி விட்டுக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்து விட்டு,
"எப்படிக் கண்டு பிடித்தீங்க?"  என்றார்.
"எதை?"  என்றேன்.

"என்னய்யா தெரியாத மாதிரி கேட்கறே?"

"புரியறமாதிரி சொல்லுங்க"  என்றேன்.  எப்போதுமே அவசரப்பட்டு வாய் விட்டு விடாமலிருப்பது என் சுபாவம்!

"அதான் B P க்கு மருந்து..."  என்றார்.

"அது நண்பர் ஒருவர் சொன்னார் செய்து பார்த்ததில் அழுத்தம் கொஞ்சம் குறைவது தெரிந்தது"  என்றேன்.

"நான் அதைக் கேட்க வில்லை.  ராமாராவிடமிருந்து.. "   என்று ஆரம்பிக்க  'சரி வகையாக மாட்டிக் கொண்டோம்'  என்றெண்ணி,  " இல்லை... அது வந்து.. "  என்று ஆரம்பித்த போது,

"இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம்.  என் ஃபோனில் சார்ஜ் இல்லை என்று நான் சின்னையா ஃபோனை உபயோகித்து sms  செய்ததை எப்படிக் கண்டு பிடித்தீர்?"  என்று கேட்க எனக்கு மயக்கம் வந்தது!

அவர் சுபாவம் 'அப்படி' இல்லை போலும்!


Image result for office canteen clip art  images

39 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஹாஹா நம்பி மெசேஜ் அனுப்ப முடியலையே

வெங்கட் நாகராஜ் said...

ஹா.ஹா.... செம அனுபவம்!

S.P.SENTHIL KUMAR said...

அப்பா bp ஏறிதான் இருக்கும்.
த ம ஒத்துழைக்கவில்லை.

KILLERGEE Devakottai said...

நல்ல அனுபவம்தான் நண்பரே....
தமிழ் மணம் பிறகு வருகிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

ரூபன் said...

வணக்கம்

மிக அருமையான உரையாடல்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

மயக்கம் எனக்கும்... ஹா... ஹா...

Bagawanjee KA said...

இவர், N T ராமராவோட சேர்ந்தவரோ ,நல்ல மனிதரா இருக்காரே :)

வல்லிசிம்ஹன் said...

வசம்மா மாட்டிக்கினான்னு நாகேஷ் வசனம் மாதிரி இருந்தது.

நிஷா said...

இந்த மாதிரி நானும் பேஸ்புக்கில் மாட்டிக்க இருந்தேன், ஜஸ்ட் தப்பிட்டேன்.

வலிப்போக்கன் - said...

ஓகோ.......

மாடிப்படி மாது said...

ஆஹா...இப்ப உங்க BP ஏறிவிட்டிருக்குமே...

மீரா செல்வக்குமார் said...

ஹா...சரியான பதிவு...எனக்கும் சில நேரம் பி பி ஏறியிருக்கிறது இதுபோலவே ...

sury Siva said...

B.P. என்றால் என்ன ? புரியல்லையே !!

பிரியாணி பாக்கட்டோ ?

சுப்பு தாத்தா.

ஸ்ரீராம். said...

நன்றி கிரேஸ். மெஸேஜ் காலத்துக்கும் முன் பேஜர் என்ற ஒரு பேஜார் இருந்தது! நினைவிருக்கிறதா?

ஸ்ரீராம். said...

நன்றி வெங்கட்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி ரூபன்

ஸ்ரீராம். said...

நன்றி தனபாலன்.

ஸ்ரீராம். said...

அவர் அப்பாவி போல.... நன்றி பகவான்ஜி!

ஸ்ரீராம். said...

நன்றி வல்லிமா. நாகேஷ் சொல்லும் அந்த வசனம் எந்தப் படத்தில் என்று யோசிக்கிறேன்! :)))

ஸ்ரீராம். said...

நன்றி நிஷா. அந்த அனுபவத்தை எழுதுங்களேன்.

ஸ்ரீராம். said...

நன்றி வலிப்போக்கன்.

ஸ்ரீராம். said...

நன்றி மாடிப்படி மாது. லாங் டைம் நோ ஸீ?!!!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் மீரா செல்வக்குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி சுப்பு தாத்தா...அது என்னவென்று தெரியவில்லையா... BP என்னவென்று தெரியவில்லையா....தெரியவில்லையா..... தெரியவில்லையா.... இல்லையா....ஆ... BP ஏறுதே...!!!

:)))))

R.Umayal Gayathri said...

ஆஹா...Bp..க்கு மருத்துவம் சொல்லப் போய் அது உடனே நமக்கு வேண்டியதாக போயிடுத்தே...
பாவம் நல்ல மனிதர் போல அவர்....ஹிஹிஹி...
7

ஹேமா (HVL) said...

Ha...ha...ha

ஹேமா (HVL) said...

Ha...ha...ha

பரிவை சே.குமார் said...

ஹா... ஹா... நல்ல மனிதர்... அதான் இப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த, சிந்திக்க வைக்கும் பதிவு

ராமலக்ஷ்மி said...

நல்ல அனுபவம் :))!

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி உமையாள் காயத்ரி. அப்பாவி போல அவர்!

ஸ்ரீராம். said...

நன்றி ஹேமா (HVL)

ஸ்ரீராம். said...

நன்றி பரிவை சே. குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

ஸ்ரீராம். said...

நன்றி ராமலக்ஷ்மி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!