செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.



           திருச்சி திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை வலை உலகில் அறியாதவர் யார்?  விரல் விட்டு எண்ணி விடலாம்!  வலையுலகில் இதுவரை யாரும் செய்யாத விதமாக சிறுகதை விமர்சனப் போட்டி  ஒன்றையும்,  அவர்தம் பதிவுகளில் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுபவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி ஒன்றையும் நடத்தி பரிசு மழை பொழிந்தவர்.  அன்பானவர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்.    எல்லோர்க்கும் நண்பர்.

          அவரின் தளம் VAI. GOPLAKRISHNAN.

          நான் கேட்டதும் அன்புடன் இந்தக் கதையை எனக்கு அனுப்பி வைத்த வைகோ அவர்களுக்கு நன்றி.  அவர் தன்னுடைய தளத்திலும், மற்ற இடங்களிலும் எனக்கு பதில்  சொல்லும்போதோ விளிக்கும்போதோ "வாங்கோ ஸ்ரீராம், ஜெயராம் ஜெயஜெயராம்" என்றுதான் ஒவ்வொரு முறையும் அன்புடன் ஆரம்பிப்பார்.  அவர் எனக்கு அனுப்பி வைத்த பாணியிலேயே கதையை அப்படியே வெளியிடுகிறேன்.

           திரு வைகோ ஸார் தன்னுடைய படைப்பு பற்றியும், அது எந்தப் புத்தகத்தில்,  எப்போது வெளியானது என்பது பற்றியும் சொல்கிறார் :

"இதுதான் நான் முதன்முதலாக எழுதிய சிறுகதை.  எழுதிய ஆண்டு 2005 

சுனாமி என்ற இயற்கையின் சீற்றம் பற்றிய பல்வேறு துயரச் செய்திகளின் தாக்கத்தினால் மனதில் தோன்றிய கதை இது. 

சுனாமியால் உயிர் இழந்தவர்கள், வீடு மற்றும் பிற உடமைகளை இழந்தவர்கள், சொந்த பந்தங்களை இழந்தவர்கள், பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகள் என சுனாமி பற்றிய அன்றாடச் செய்திகள் என்னை மிகவும் கலங்கடித்தன.

இந்த என் முதல் சிறுகதையை தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டிக்காக நான் எழுதி, தினமலர் - வாரமலருக்கு அனுப்பியிருந்தேன். 

போட்டிக்கு வந்திருந்த 2981 கதைகளில் 13 கதைகள் மட்டுமே (0.436 % only) பரிசுக்குத் தேர்வாகி இருந்தன. என் இந்தக்கதையும் அந்த 13 கதைகளில் ஒன்றாகத் தேர்வாகி ரொக்கப்பரிசும் அளித்து, கதையை அச்சில் ஏற்றி என் புகைப்படம் + சுய விபரக்குறிப்புகளுடன் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள்.  அச்சிடப்பட்ட கதை தினமலர்-வாரமலரில் வெளியிடப்பட்ட நாள்: 06.11.2005

அந்த வார இதழின் அட்டைப்படம்

 
   

 
{வார இதழ் ஓவியரால் வரையப்பட்டிருந்த சில படங்கள்}

மேலும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை நான் உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் எழுத, இந்தப் பரிசுக்குத்தேர்வான என் முதல் கதையே ஓர் உந்துதலாக எனக்கு அமைந்தது.

இந்த என் சிறுகதையை ‘எங்கள் ப்ளாக்’கில் இன்று வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

என்றும் அன்புடன் தங்கள்


(வை. கோபாலகிருஷ்ணன்)






’தாயுமானவள் ’

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச் சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீய்ச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.   

  

 


ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 


வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள அரசமரப் பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டும், இனிய சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் முதலியன தயாரிக்கப்பட்டும் ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 


வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள், கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! 

 


 



 


முனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி ஒரே மழலைகள்கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, புடலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம். 


முனியாண்டியின் உள்ளத்தில் ஓர் உவகை.    இன்று எப்படியும் மாரியம்மன் அருளால் முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி. கடந்த மூன்று வருடங்களாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப்போகிறது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.

காலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை முனியாண்டிக்கு. நாக்கு வரண்டு விட்டது.  நீர் மோரை ஒரு குவளையில் வாங்கி ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, பலூன்களை ஊதுவதும், ஊதியவற்றைக் கயிறு போட்டுக்கட்டுவதும், கேட்பவர்களுக்குக் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து வியாபாரம் செய்வதும், காசை வாங்கி ஜோல்னாப்பையில் போடுவதும் என அவனின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.

இத்தகையத்  தேர்திருவிழாக்களில், முனியாண்டியைச் சுற்றி எப்போதும் குழந்தைகளின் கூட்டம்.  ஆனாலும் தனக்கென இதுவரை ஒரு வாரிசு உருவாகவில்லையே என்ற ஏக்கம் உண்டு முனியாண்டிக்கு. திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஏழு ஆண்டுகள் உருண்டோடிப் போய் விட்டன.

மரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகளுக்குப்போய், சம்பாதித்து வரும் அன்பான அனுசரணையான மனைவி தான்.  முனியாண்டியும் மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகளே. கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்துண்டு, கடன் ஏதும் இல்லாமல் காலம் தள்ளிவரும் ஜோடிகளே. காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை.  

திடீரென்று அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும், தங்கள் காதைப்பொத்திக்கொண்டு, பலூன்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்.

 


போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். முனியாண்டியும் ரோட்டின் ஒரு ஓரத்திற்குத் தள்ளப்படுகிறான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட்பட்டென வெடித்துச் சிதறுகின்றன. 

தேரில் அம்மன் தெருமுனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக்கும்பிட முண்டியடித்து வருகின்றனர். 

அர்ச்சனை சாமான்களுடன் அலைமோதும் பக்தர்கள் முன்னுரிமை எடுத்துக்கொண்டு தேரின் நடுவே நெருங்க, கையில் அதை அப்படியே வாங்கி தேங்காயை மட்டும் தன் கை அரிவாளால் ஒரே போடு போட்டு குருக்கள் அவர்களிடம் எம்பியபடி அனுப்பி வைக்க ஒருசிலர் தேரில் தொங்கிக்கொண்டிருந்தனர். கட்டிக்கட்டியாக சூடம் அம்மனுக்குக் கொளுத்திய வண்ணமாக இருந்தனர். மிக முக்கியமான தெரு முனையானதால் தேர் நகரவே மிகவும் தாமதம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. 

வியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த மாரியம்மனுக்கே வெளிச்சம்.  

”பலூன்காரரே! இந்தப்பாப்பாவைக்கொஞ்சம் பார்த்துக்கோ! பத்தே நிமிடத்தில் தேரிலுள்ள அம்மனைச்சற்று அருகில் சென்று கும்பிட்டுவிட்டு ஓடியாறேன்”  என்று மின்னல் வேகத்தில் சொல்லிச்சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப்பதியவில்லை முனியாண்டிக்கு.

குழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.

நல்ல அழுக்கேறிய ஒரு ஆடை [கெளன்] ; கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள்; காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள்; காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்”என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.


  


”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.

”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே! எப்படி இப்போ வருவாங்க? என்றது அந்தப்பெண்குழந்தை.

அதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.

”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.

”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.

”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.

”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்” என்றது அந்தப்பெண் குழந்தை.

சுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது. 

தேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.

சுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

சூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.

“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.

முனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது? என்ற கவலையையும் அளித்தது.

அம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.

குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.


தன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி. 

ஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.

ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.

மதியம் மூன்று மணி. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி,  “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்”  நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.

உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.

 

  


மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.

அங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் தொன்னையில் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன. 

தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.  

குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.  அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். 

  

குழந்தையின் அருகே உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த்துண்டு ஒன்று தெரித்துத் தட்டி எழுப்பியது. அங்கிருந்த குழாய் நீரில் தன் முகத்தைக்கழுவிய முனியாண்டி, குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாராகிய மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாகச் சுற்றி வந்து, அப்போது தான் தேரில் நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கி விட்டு, தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.

தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கெளன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.

சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்துள்ளத் தன் கணவனை, தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ “அ..ய்..ய்..யா.....தோசை ! மம்மி .... மம்மி ....  ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா?”  எனச்சொல்லி வெட்கம் கலந்த ஆசையுடன், தன் பிஞ்சு விரல்களைக் குவித்தபடி தன் கையை நீட்டியது.    

குழந்தையை ஒருவித வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்திக்கொண்ட மரகதம், தோசையை அதற்கு ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச்சொல்ல கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.

ஆசையுடன் தோசை சாப்பிட்டு முடித்த குழந்தையை பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்தபின், மேற்கொண்டு இந்தக்குழந்தையை நாம் என்ன செய்வது என இருவரும் நெடுநேரம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்துப் பேசிக்கொண்டிருந்ததில், நள்ளிரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

காலையில் எழுந்த குழந்தைக்கு உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.

“காஃபி, டீ ... ஏதாவது வாங்கி வரட்டா? உனக்கு என்னடாக் கண்ணு வேணும்? ஏன் அழுவறே? என்று பரிவுடன் பரிதவித்துப்போய்க் கேட்டனர். 

”எனக்கு ஒண்ணும் வேணாம். என்னயத்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கொண்டுபோய் விடப்போறீங்களே! நேத்து ராத்திரி நீங்க பேசிட்டு இருந்தீங்களே! நான் உங்க கூடவே இருக்கேனே .... ப்ளீஸ் ... என்னய நீங்க எங்கேயும் கொண்டுபோய் விட்டுடாதீங்க .... ப்ளீஸ் ... ப்ளீஸ்”எனக்கெஞ்ச ஆரம்பித்தக் குழந்தையின் மேனியும் நடுங்கிக்கொண்டிருந்தது.


குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்.

குழந்தைத்தலைக்கு எண்ணெய் தடவி, படிய தலைவாரி, ரிப்பன் கட்டி, புதுச்சொக்கா போட்டு விட்டாள், மரகதம்.

திருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி,”செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, அந்த டாக்டரம்மா நம்மிடம் கேட்டிருந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்து விட்டது தாயீ!” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்?” என வினவினான்.


”இதோ பாருய்யா, மச்சான்! அந்த வாணப்பட்டரை மகமாயீ, மாரியாத்தாளே இந்தப்பச்சப்புள்ளைய, நமக்கே நமக்குத்தான் சொந்தம்னு இந்தத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இப்போ இன்னொரு குழந்தை எதுக்குய்யா வேணும்?; 

இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.

திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” 

(தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை ஆசையுடன் அள்ளி அணைக்கச் சென்ற 

முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.  






    


Old Reference Links: 





2014ம் ஆண்டு என் வலைத்தளத்தினில் 
தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு
நடைபெற்ற ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காக 
இந்தக்கதை என்னால் மீள் பதிவாக வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கான இணைப்பு:



சிறுகதை விமர்சனப்போட்டியில், 
நடுவர் உயர்திரு. ஜீவி சார் அவர்களால்
பரிசுக்குத்தேர்வு செய்யப்பட்ட விமர்சனங்களைப் படிக்க 
இதோ இணைப்புகள்:


{மூன்றாம் பரிசு .... ஒருவருக்கு}

திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்


{இரண்டாம் பரிசு .... இருவருக்கு}

(1) Mr. G. RAMAPRASAD 

(2) கீதமஞ்சரி
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்


{முதல் பரிசு .... இருவருக்கு}

(1) திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

(2) செல்வன்: J. அரவிந்த்குமார் அவர்கள்

88 கருத்துகள்:

  1. முதலில் படங்களை எல்லாம் நன்கு ரசித்து பார்த்துவிட்டுத்தான் கதையை படிக்க ஆரம்பித்தேன்.தேரோடும் வீதிகளில் கோலம் எல்லாம் மிக அழகு.அன்னதானத்திற்கு சக்கரபொங்கல் தயிர்சாதம் பாத்ததுமே சாப்பிட தோணுது.நீர் மோர் தாகத்தை தீர்த்தது. வயிறும் மனமும் நிறம்பி விட்டதால் இப்ப கதை பற்றி..... கோபால் சார் எந்த விஷயத்தை கதைக்கருவாக தேர்ந்தெடுக்கறாங்களோ அந்த இடத்தின் வர்ணனை அங்கு இருக்கும் மனிதர்களின் மன உணர்வுகள் எல்லாவற்றையும் படிப்பவர்களின் மனதுக்குள் நுழைத்து விடுவார்கள். படிக்கும் அனைவருமே இதை நன்கு உணற முடியும். முனியாண்டி ஏழை பலூன் வியாபாரியும் அவன் மனைவியும்தான் முக்கிய கதா பாத்திரங்கள் என்று தோன்றுகிறது. சுனாமியின் கோர விளைவுகளையும் சுட்டிக்காட்டி இருப்பது.நெகிழ்ச்சி. ஸ்வாமி அலங்காரம் தேர் சுற்றி இருக்கும் கடைகள் என்று நாமும் தேரோட்ட வீதி நடுவில் நிற்கிறோம். அந்தக்குழந்தை யாரு அதை முனியாண்டியிடம் விட்டுச்சென்ற கைலிக் காரன் யாரா இருக்கும் என்றெல்லாம் நிறைய கேள்விகள். வெயிட்&ஸீ தான்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கதையை மீண்டும் படிக்க சுகமாக இருந்தது. சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கதையை அவரது தளத்தில் வாசித்திருக்கிறேனோ நினைவில்லை. கதை அருமை . அதுவும் முதல் கதை என்பது சிறப்பு. வாழ்த்துக்கள் கோபுசார்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை !ஏற்கனவே தாயுமானவர்களை அவர் தளத்தில் வாசித்திருக்கேன் இங்கு மீண்டும் வாசித்து ரசித்தேன் ...கோபு சாரின் கதைகளில் எப்பவும் ஹாப்பி ending .இந்த கதையும் அவ்வாறே என்பதால் மிகவும் பிடிக்கும் .பகிர்வுக்கு நன்றீஸ்

    பதிலளிநீக்கு
  6. தேர் திருவிழா கூட்டத்தில இடிபட்டு சாமியை கும்பிட்டாச்சு.

    நீர் மோர் வெயிலுக்கு இதமா இருந்தது.

    முனியாண்டியிடம் குழந்தை வரவும் விறுவிறுப்பு கூடிப் போச்சு. சுனாமியில் இது போல் எத்தனை குழந்தைகள் அவதி பட்டு இருக்கும் என மனம் வருந்தமுற்றது. குழந்தைக்கு பொற்றோர்களும், பொற்றோர்களுக்கு குழந்தையும்...இணைந்தது அழகு.

    முதல் கதை சூப்பர் சார். முதல் கதையின்னு நம்பவே முடியலை..அவ்வளவு நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. பலமுறை இந்தக் கதையைப் படித்திருந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் கண்கள் பனிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. குழந்தையின் எண்ணங்களை வார்த்தையில் வடித்திருக்கும் நேர்த்தியை என்னால் வர்ணிக்க முடியவில்லை.

    படங்கள் மிகப்பொருத்தமானவை. இந்தக் கதை வெளியான வார இதழின் அட்டைப் படத்தைக்கூட இவ்வளவு நாட்களாக திரு. வைகோ அவர்கள் பாதுகாத்து வைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அவர் தளத்தில் வாசித்திருந்தாலும் இங்கு வாசித்ததில் மகிழ்ச்சி

    புகைப்படங்கள் அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்,

    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ,,

    பதிலளிநீக்கு
  9. முனியாண்டியோடு கூடவே பயணித்த மாதிரி என்ன ஒரு வர்ணனை!!

    பதிலளிநீக்கு
  10. மிகச் சிறப்பான கதை. அவரது தளத்தில் வாசித்திருக்கிறேன்.

    இங்கேயும் மீண்டுமொரு படித்து ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.....

    பதிலளிநீக்கு
  11. 'தாயுமானவ' கடவுளுக்கே விளம்பரமா :)

    பதிலளிநீக்கு
  12. 'திரு. வை.கோ. சாரை வலையுலகில் அறியாதவர் யார்?' என்று ரொம்ப இயல்பாக ஆரம்பித்து அவரைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது அருமை, ஸ்ரீராம்!

    கோபு சார் மட்டும் என்ன சும்மாவா?. இதான் அவர் முதல் கதையாம். நம்ப முடியாமல் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது, பாருங்கள். அந்த சிறப்புக்கு சுனாமி விளைவித்த அழிவு அவர் மனசைப் போட்டு அளவுக்குப் புரட்டியிருக்கிறது. பிறர் பட்ட துன்பத்தை தான் பட்டத் துன்பகாகப் பார்க்கும் அன்பு உள்ளம். ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான குறைந்தபட்ச தகுதி..

    இந்தக் கதையையும் உள்ளடக்கிய 40 கதைகளுக்கான கோபு சார் நடத்திய சிறுகதைகள் விமரிசனப் போட்டிக்கு நடுவராக இருந்து நிறையப் பேர் எழுதியிருந்த விமரிசனங்களை வாசித்த நினைவு இன்னும் மங்கவில்லை.

    என் பார்வையில் இந்தக் கதைப் பற்றிச் சொல்ல பிறகு வருகிறேன்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  13. முன்னும் படித்திருக்கிறேன். சுனாமி விட்டுச்சென்ற வசதியான குழந்தை காலத்தின்கோலம் எவ்வளவு சமத்தாக ஒட்டிக்கொண்டு விட்டது. அவர்கள் பேசியதைப் புரிந்துகொண்டது. கொண்டு சேர்த்தவனும் தயையுள்ள, தாயாகவேண்டி கஷ்டப்பட்டு மனைவிக்காக காசு சேர்ப்பவனிடமும் கொண்டு சேர்த்தது இவ்வளவு துயரமான ஸம்பவங்களிடையே,ஒரு எள்ளளவாவது நல்ல காலமும் அந்தக் குழந்தைக்கு இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கும்போது கதை வெவ்வேறு நிலையில் சிந்திக்க வைக்கிறது. முதல்கதை,ஸமயா ஸந்தர்ப்பங்களைக்கொண்டு மிகவும் உணர வைக்கிறது எல்லா விதத்திலும். படங்களெல்லாம் அடேயப்பா எவ்வளவு. பாராட்டு மழைதான் உங்களுக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. இந்தக் கதையை அவரது தளத்தில் வாசித்திருக்கிறேன்
    அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  15. வலையுலகில் மீண்டும் V.G.K. அவர்களின் சிறுகதை. மூன்றாம் முறையாக இந்தக் கதையைப் படிக்க வாய்ப்பளித்த ’எங்கள் ப்ளாக்’ நண்பர்களுக்கு நன்றி. கதையில் வரும் திருச்சி தெப்பக்குளம், வாணப்பட்டறைத்தெரு, மாரியம்மன் கோயில், வடக்கு ஆண்டார் தெரு, அரசமரப் பிள்ளையார் கோயில், திருச்சி மலைக்கோட்டை அனைத்தும் V.G.K. அவர்கள் இருக்கும் அபார்ட்மெண்ட்டைச் சுற்றி உள்ள இடங்கள். எனது சின்ன வயதில் நான் சுற்றிய இடங்கள். கதைக்கு ஏற்றவாறு, V.G.K. அவர்கள், இந்த இடங்களுக்கு கற்பனை குதிரையில் வலம் வந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  16. முன்பும் படித்துள்ளேன்...
    மனதில் பதிந்துவிட்டட கதை!

    ஒரே நாளில் மரகதம் 'தாயுமானவள்' ஆகிவிட்டாள்...

    இதில் இன்னொரு அற்புதமும் உள்ளது - குழந்தை விஜிக்கு,
    இறை நாட்டப்படி அப்பாவும் அம்மாவும் கிடைத்தார்களே!!!!!!!

    பதிலளிநீக்கு
  17. அன்புக்கும் பாசத்துக்கும் உரிய கோபு ஷாரைப் பற்றி தாங்கள் முதல் பாராவில் சொல்லி இருப்பது யாவும் முற்றிலும்100% உண்மைதான். அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் நானும் இருப்பது எனக்கு தனி பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. அவர் எழுதியுள்ள இந்த முதல் கதையே முத்தான கதையாக அமைந்து விட்டது.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் பக்கம் பதிவாக போட்டிருந்த போதே அங்கு நானும் நிறைய பின்னூட்டங்கள் போட்டிருந்தது இப்பவும் நினைவில் இருக்கு. அவரும் ரிப்ளை பின்னூட்டம் நிறைய கொடுத்தாங்க. இருப்பினும் அடுத்தடுத்து கோபுஸார் எழுதியுள்ள அனைத்து கதைகளிலும்
    தனது தனித்தன்மையான முத்திரையைப்பதித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. அவர் எழுதியுள்ள அனைத்து பதிவுகளையும் படித்து ரசிக்க எனக்கும் ஒருவாய்ப்பு கிடைத்ததை மிகவும் பாக்யமாகவே கருதுகிறேன்

    பதிலளிநீக்கு
  20. இக்கதையின் கருத்தும் படங்களும் அவரின் எழுத்தாற்றலும் கதைமூலம் நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் சமுதாய கண்ணோட்டமும் மிகவும் பாராட்டத்தக்கதாகும்..

    பதிலளிநீக்கு
  21. அன்புக்குரிய கோபு ஸாரின் கதையை கேட்டு வாங்கி இங்கு தங்களின் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்து எனக்கு மீண்டும் படித்து மகிழ வாய்ப்பளித்துள்ள " எங்கள் ப்ளாக்" வலைத்தளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். கோபு ஸாருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  22. இவ்வளவு எழுதிட்டு கதையைப்பற்றி ஏதுமே சொல்லாம போலாமா????முதல் முறை படிக்கும் போது எப்படி ரசித்து படிக்க முடிந்ததோ அதே மாதிரி இப்பவும் ரசிக்க முடிந்தது. தேரோட்ட வீதி நடுவில் நின்று சுற்றுப்புற அழகை கற்பனையில் காண முடிகிறது. அன்னதான முகாம்கள் நீர்மோர் பந்தல் விளையாட்டு ராட்டினங்கள் பலூன்காரர் என்று பலவித மனிதர்களை காண முடிகிறது. தாயமானவன் தலைப்புக்கு பொருத்தமானவராக முனியாண்டி தம்பதிகள் அறிமுகமும் ஆயாச்சு. போறாததுக்கு அந்த பெண்குழந்தையும் யாராலோ அவர்களிடம் வந்து சேர்திருக்கு. கதை போகப்போக சுவாரசியமாக இருக்கும் என்பதில் டவுட்டே இல்ல.

    பதிலளிநீக்கு
  23. தினமலர் வாரமலர் பத்திரிக்கையில் இந்தக்கதை பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துகள். பலூன் வியாபாரியின் படம் நீங்க வரைந்ததுதானே. சூப்பரா இருக்கு. திருச்சியை ஓரளவு சுறியாச்சி. தேரோட்ட வீதி அப்படியே கண்முன்னால காணமுடிகிறது. பொருத்தமாகபடங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு. பசியுடன் வருபவர்களுக்கு அன்னதானம் நீர்மோர் கொடுப்பது உணவு உபசரிப்பின் பெருமையை நல்லா சொல்லி இருக்கீங்க. பலூன் வியாபாரி முனியாண்டி தம்பதிக்கு குழந்தை இல்லாததால அந்தக்குழந்தை அவர்களிடம் வந்து சேர்ந்ததோ???

    பதிலளிநீக்கு
  24. ஆஹா கோபால் சார் இங்க எழுதி இருக்காங்களா?? ஓ.... ஏற்கனவே எழுதியதா மறைு படி இங்கு போட்டதற்கு எங்கள்ப்ளாக வலைப்பதிவர் அவர்களுக்கு நன்றி. தேரோடும் வீதி தேரின் அழகு அம்பாளின் கருணை. அங்கு குழுமி இருக்கும் வியாபாரிகள் உணவு உபசரிப்புகள் என்று அனைத்தையும் உணர வைக்கும் ஷார்ப்பான எழுத்து திறமை.பலூன்கார தம்பதிகள்தான் மெயின் கதா பாத்திரங்களா?? நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  25. படங்களும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க வரைஞ்சிருக்கும் பலூன் காரர் படம் ரொம்ப நல்லா இருக்கு. உங்கள் கதையை இங்கு கேட்டு வாங்கி போட்டிருக்கும் " எங்கள் ப்ளாக்" வலைப்பதிவருக்கு நன்றிகள். உங்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. முன்னரும் படித்திருக்கிறேன். கேட்டு வாங்கிப் போட்ட கதை எப்போவும் போல் பிரமாதம். அடுத்த எழுத்தாளர் யாரு என்பதில் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. பொதுவாக எழுத்தாளர் மனசிலே கதைக்கான கரு என்ற ஒன்று மேலோட்டமாகத் தோன்றி விடலாம். ஆனால் அந்தக் கதையை எந்த இடத்திலே ஆரம்பிக்கலாம் என்பது தான் யோசனையாகிப் போகும்.

    வை.கோ.சார் இதில் கில்லாடி. திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரை தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர் விழா என்று ஆரம்பமே களை கட்டி விடுகிறது.

    இந்தக் கதையைச் சாக்கிட்டு நிறைய விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று வை.கோ.சாருக்கு ஆசை போலும். பின்னால் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் கதையை ரொம்பவும் முன் கூட்டியே ஆரம்பித்து விட்டது தெரிகிறது.

    தோசை சுட்டுக் கொண்டிருந்த மரகதத்திற்கு தன் புருஷன் குழந்தை ஒன்றுடன் குடிசைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும் 'திக்'கென்று இருந்தது-- என்று கதையை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் வை.கோ.சாருக்கு வாணப்பட்டரை தெரு மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழா கொண்டாட்டத்தின் கோலாகலம், வடல்லு ஆண்டார் தெரு அரசமரப் பிள்ளையார், உச்சிப்பிள்ளையார் கோயில், மாணிக்க விநாயகர், சந்தோஷி மாதா படம்-- என்று ஆசையாக ஆசையாக நிறைய சொல்ல வேண்டும் என்று ஆசை. அதனால் தான் நாகப்பட்டித்து சுனாமி அலையாட்டத்தில் தன் பெற்றோரை இழந்த சின்னஞ் சிறுசு கைலிக்காரனிடம் சிக்கி திருச்சி தெய்பக்குளத்து மாரியம்மன கோயில் தேர்த்திருவிழாவில் கைவிடப்படுகிறாள். குழந்தையில்லாத முனியாண்டி தம்பதிகளிடம் அம்மன் அருளால் அந்தக் குழந்தையைச் சேர்ப்பிக்க வேண்டும் என்ற வை.கோவின் திட்டத்திற்கு தேர்த்திருவிழா சரியான நிலைக்களமாகிறது. கைலிக்காரன் குழந்தையை அநாதையாய் முனியாண்டியிடம் விட்டு விட்டும் போகவேண்டும். அதற்காகத் தான் குழந்தை காதில் தொங்கட்டானையும் பொருத்தமாகக் கதையில் பொருத்தி கைலிக்காரனை கழட்டிவிட்டு முனியாண்டியிடம் குழந்தை வந்து சேர வழி பண்ணுகிறார். முனியாண்டியை ஒரு பலூன் காரனாக்கி கைவிடப்பட்ட குழந்தைக்கும் பலூன் காரனுக்கும் இயல்பான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறார். என்னதான் குழந்தை கிடைத்தாலும் அதை அதன் பெற்றோரிடம் சேர்க்க வேண்டுமே என்ற நெருக்கடியை முனியாண்டி தம்பதிகளுக்கு ஏற்படுத்தாமல் சுனாமியின் பேரழிவும் ஒரு காரணமாகிப் போகிறது. இந்த கதை வெளிவந்த காலத்து சுனாமியின் அலையாட்டம் மனத்தில் ஏற்படுத்திய பரிதாபத்தின் பாதிப்பு கதைசொல்லியின் கதைசொல்லல் வழியே நெக்குருக கசிகிறது.

    இது தான் கோபு சாரின் பிரசுரமான முதல் கதையாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன் அவர் நிறைய எழுதிப் பார்த்திருப்பார் என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் வாசித்தவர்களுக்கு ஒரு திருவிழாவை எழுத்தில் கண்டு களித்த சுகத்தையும் பரிதாபத்தின் நிழலில் சுபமான முடிவையும் ஏற்படுத்துகிற மாதிரி இந்தளவுக்கு அவர் எழுத்து அமைந்திருக்காது.

    வாழ்த்துக்கள், வை.கோ. சார்!

    பதிலளிநீக்கு
  28. நன்றி ஸ்ரத்தா, ஸபுரி. வைகோ ஸார் பதிவு உங்களை எங்கள் பக்கம் கொண்டு வந்திருக்கிறது. நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி. (த ம வாக்கிற்கும்)

    பதிலளிநீக்கு
  30. //திருச்சி திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை வலை உலகில் அறியாதவர் யார்? விரல் விட்டு எண்ணி விடலாம்!//
    உண்மைதான். அவருக்கு ‘வலையுலக பிதாமகர்’ என்று பட்டம் கொடுக்கலாமே.

    இந்தக் கதையை இவர் வலைத்தளத்தில் படித்திருக்கிறேன்.
    இது இவர் எழுதிய முதல் கதை என்று இவரே சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது.
    சரளமான நடை, சுவாரசியம் குறையாத கதைக்கரு, மீண்டும், மீண்டும் படிக்கத்தூண்டும், எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கதைகளுக்கு சொந்தக்காரர் இவர்.
    இவரது கதைக்குப் பரிசு கிடைக்காமல் இருந்தால்தான் ஆச்சரியப் பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  32. நன்றி ஜீவி ஸார். வாசகர்களைக் கவர்வதில் அவர் ஒரு தனித் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  33. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  34. நன்றி நண்பர் முஹம்மது நிஜாமுதீன்.

    பதிலளிநீக்கு
  35. தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி பூந்தளிர்.

    பதிலளிநீக்கு
  36. மீள் வருகைக்கும் நீண்ட அலசலுக்கும் நன்றி ஜீவி ஸார்.

    பதிலளிநீக்கு
  37. என்ன என்று சொல்வது..... பிஞ்சு மனசு ...அன்னை தந்தை குழந்தை எல்லோருக்கும்.
    திருச்சியின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தது. வைகோ சாரின் வர்ண எழுத்து.
    இனிமையாக முடித்துவைத்து மனம் மகிழ வைத்துவிட்டார். மிக மிக நன்றி எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  38. எங்கள் ப்ளாகிற்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    என்றாவது என் கதையையும் கேட்டு வாங்கிப் போடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  39. 1.
    வலையுலகிலிருந்து சற்றே விலகி, நீண்ட இடைவெளி கொடுத்து முழு ஓய்வு எடுத்துக்கொள்ள நினைத்திருந்த என்னை, திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் மின்னஞ்சலும், ’எங்கள் ப்ளாக்’ நம் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களின் மின்னஞ்சலும், தட்டி எழுப்பி விட்டன.

    அதனால் இந்த ’எங்கள் Blog' வலைத்தளத்தில் இந்தப்பதிவும், அவரின் 'எனது எண்ணங்கள்’ வலைத்தளத்தில் http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html அந்தப்பதிவும் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

    >>>>>

    பதிலளிநீக்கு
  40. 2.
    நான் என் வலைத்தளத்தினில் 2014ம் ஆண்டு முழுவதும் சுமார் 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக, தொய்வின்றி, வெற்றிகரமாக நடத்திக்காட்டிய, ‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html பற்றியும், 2015-ம் ஆண்டு நடத்திய ’100% பின்னூட்டமிடும் போட்டி’ http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html பற்றியும், நம் ஸ்ரீராம் இங்கு முதல் பத்தியில் குறிப்பிட்டு சிறப்பித்துச் சொல்லியுள்ளார். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    இந்த இரு போட்டிகளின் அடிப்படை நோக்கங்களே, பதிவுகளிலோ, விமர்சனங்களிலோ, பின்னூட்டங்களிலோ, நம் பதிவுலக நண்பர்கள் பலரையும் உற்சாகமாக எழுத வைக்க வேண்டும் என்பதும், மிகச்சிறப்பான தரம் வாய்ந்த பதிவுலக எழுத்தாளர்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டி சிறப்பிக்க வேண்டும் என்பதும் மட்டுமே.

    2014 சிறுகதை விமர்சனப்போட்டிகளுக்கு நடுவராக பொறுப்பேற்று, பாரபட்சமின்றி மிகவும் நியாயமாகவும், மிகச்சிறப்பாகவும் செயல்பட்டு தீர்ப்புகள் வழங்கிய நம் உயர்திரு. ஜீவி சார் அவர்கள் மற்றும் மேற்படி போட்டிகளில் மிகவும் உற்சாகமாகக் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமைகளை நிரூபித்த மற்ற அனைத்து அன்புள்ளங்களாலும், இந்தப் போட்டிகளின் அடிப்படை நோக்கங்களை ஓரளவுக்கு நம்மால் எட்ட முடிந்ததில், எனக்கும் மகிழ்ச்சியே.

    >>>>>

    பதிலளிநீக்கு
  41. 3.
    என் சிறுவயதிலிருந்தே எனக்கு எழுதுவதில் ஆர்வம் உண்டு. என் எழுத்துகள் அச்சடித்தது போல மிகவும் அழகாக இருக்கும் என்பதாலேயே என்னை, என் வீட்டிலும், அக்கம்பக்கத்து வீடுகளிலும் உள்ள பெரியவர்கள் அனைவரும், போஸ்ட் கார்டு, இன்லண்ட் லெட்டர் போன்றவற்றை எழுத அடிக்கடி அழைப்பார்கள். அவர்கள் சொல்லச்சொல்ல அவற்றை மனதில் வாங்கிக்கொண்டு, நான் அவற்றைக் கோர்வையாக அடித்தல் திருத்தல் ஏதும் இல்லாமல், அந்தக்கடிதத்தின் மொத்த இடத்திற்குள் உள்ளடங்கி வருமாறு திட்டமிட்டு எழுதிக்கொடுக்க வேண்டும். கடிதத்தில் அவர்கள் சொல்லும் விலாசமும் எழுதிக்கொடுக்க வேண்டும். பின் அதனை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுறை வீதம் பொறுமையாகப் படித்துக்காட்டிவிட்டு, பொறுப்பாக தபால்பெட்டியில், குறித்த நேரத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கவும் வேண்டும். நாம் போஸ்ட் செய்த தபால், அந்தத் தபால் பெட்டிக்குள் லொட்டென உள்ளே விழுந்ததா என்பதையும் உறுதி செய்துகொண்டு வரவேண்டும். சமயத்தில் தபால் பெட்டியின் உடலுக்குள் எங்காவது ஒரு பாகத்தில் நாம் போடும் தபால் சிக்கிக்கொள்ளும் ஆபத்துகளும் உண்டு. தொங்கும் தபால் பெட்டிகளாக இருப்பின் அதை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டும் வருவது உண்டு.

    இன்றைய நவீன காலம் போல அன்றைக்கு கணினி, மின்னஞ்சல், தொலைபேசி, அலைபேசி, குறுஞ்செய்தி போன்ற வசதி வாய்ப்புகள் ஏதும் கிடையாது. தினமும் எதற்கும் தபால்காரரை மட்டுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாட்கள் அவை.

    >>>>>

    பதிலளிநீக்கு
  42. 4.
    இதுபோன்று, சிறு வயதிலிருந்தே நான் காணும் காட்சிகள் பலவற்றை, கவிதைகளாகவும், சிறுசிறு கட்டுரைகளாகவும், குறிப்புகளாகவும் என்னிடம் எழுதி வைத்துக் கொண்டிருந்தது உண்டு. அவற்றை யாரிடமும் படிக்கச் சொல்லி கொடுப்பது இல்லை. நானே பல காகிதங்களில் அவ்வப்போது எழுதுவேன். படிப்பேன். பின்பு கிழித்து விடுவேன் அல்லது தொலைத்து விடுவேன். அவற்றை நான் பாதுகாத்து வைத்ததும் இல்லை.

    பின்னால் ஒருநாள் வலைப்பதிவு எழுத இவையெல்லாம் நமக்கு உபயோகப்படக்கூடும் என நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை.

    >>>>>

    பதிலளிநீக்கு
  43. 5.
    1980-1985 காலக்கட்டத்தில், சிறுவர்களுக்கான ’கோகுலம்’ பத்திரிகை என் மகன்கள் படிக்க வேண்டி வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது என் முதல் இரு மகன்களும் 10 வயதுக்குள்தான் இருப்பார்கள். அவர்கள் இருவரையும் ’கோகுலம் குழந்தை எழுத்தாளர்’களாகச் சேர்த்து விட்டேன்.

    முதன் முதலாக நான் எழுதிய ‘இளநீர்’ என்ற கவிதை என் மகன் போட்டோ படத்துடன் கோகுலத்தில் மிகச்சிறப்பாக ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியானது.

    குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பாராட்டுக் கடிதத்துடன் ரூ. 25 மணியார்டர் பணமும் கிடைத்தது. அதுவே அச்சில் நான் கண்ட என் முதல் எழுத்தாகும். ஆனாலும் அது என் பெயரில் இல்லை. என் மகன் பெயரில் மட்டுமே. இருப்பினும் எனக்கும் என் மகன்களுக்கும் தலைகால் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. அதன்பின்னும் நாங்கள் அனுப்பிய மேலும் சில கவிதைகள் கோகுலம் சிறுவர் இதழில் பிரசுரிக்கப்பட்டன.

    >>>>>

    பதிலளிநீக்கு
  44. 6.
    1998 முதல் 2007 வரை, ஓஸியில் கிடைக்கும் எதிலாவது ’போட்டி’ என்ற சொல்லினைப் பார்த்தாலே எனக்கு உடனே கலந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படலாயிற்று. அதைபற்றிய விபரங்களை உடனே ஒரு பேப்பரில் குறித்துக்கொள்வேன். அப்போதெல்லாம் அனாவஸ்யமாக காசு கொடுத்து எந்தப்பத்திரிகைகளோ / வார இதழ்களோ எதுவும் நான் வாங்க மாட்டேன். அதெற்கெல்லாம் என் பட்ஜெட்டில் அன்று இடம் கிடையாது.

    அதுபோலத்தான் ஓஸியில் நான் பார்த்த விளம்பரத்திலிருந்து, விளையாட்டாக என் மனைவி பெயரில் ஓர் கட்டுரை எழுதி ’ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ் நடத்திய போட்டி ஒன்றுக்கு 1998-இல் அனுப்பியிருந்தேன். பிறகு அதனைப்பற்றி நான் சுத்தமாக மறந்தே போனேன்.

    சுமார் ஒராண்டுக்குப்பின் அகஸ்மாத்தாக ஓஸியில் வாங்கி வந்த ஓர் வார இதழை நள்ளிரவு நேரத்தில் நான் புரட்டும்போது என் மனைவி படமும், அகில இந்திய அளவில் முதல் பரிசு ‘தங்க நெக்லஸ்’ வென்றுள்ளவர் எனவும் விளம்பரம் செய்திருந்ததைக் கண்டேன்.

    வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அனைவரையும் நான் தட்டி எழுப்பினேன். அந்த விளம்பரத்தைக் காட்டி மகிழ்ந்தேன். அன்று முழுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்குமே தூக்கமின்றி சிவராத்திரியாகி விட்டது.

    நான் எழுதி அனுப்பிய கட்டுரையின் கார்பன் காப்பியை எங்கே வைத்தோம் எனத் தேடோ தேடு என்று தேடி நான் ஒருவழியாக அதனைக் கண்டு பிடிப்பதற்குள் பொழுதே விடிந்துவிட்டது. நல்லவேளையாக அது என் கைக்குக் கிடைத்துவிட்டது.

    [ஒருபடத்தில் கவுண்டமணி தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டைத் தேடுவாரே ..... அதே கதை தான் எனக்கும் அன்று நடந்தது :) ]

    பிறகு ஒரு வாரம் சென்றபின் ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ் ஆபீஸிலிருந்து அபிஷியலாகக் கடிதமும் எங்களுக்கு வந்ததில் மகிழ்ச்சியே. இதுவே நான் முதன்முதலாக போட்டிக்கு அனுப்பி பரிசும் பெற்ற கட்டுரையாகும். மேலும் விபரங்கள் இதோ இந்த என் பதிவுகளில் கொடுத்துள்ளேன்:

    (1) http://gopu1949.blogspot.in/2013/03/3.html

    (2) http://gopu1949.blogspot.in/2011/07/3.html

    அச்சில் வந்த இதுவும் என் பெயரில் அல்ல. என் மனைவி பெயரில் மட்டுமே இருந்தது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  45. 7.
    அதுபோலவே ஒவ்வொருவரைப் பற்றியும் அவரவர்களின் தோற்றம், நடை, உடை, பாவனை, பேச்சுகள் முதலியவற்றை உற்று நோக்கி மனதில் பதிந்துக்கொண்டு கேரக்டர் ஸ்டெடி செய்வது என்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காகும்.

    அதுபோல என் சின்ன வயதிலிருந்தே இந்த பலூன் வியாபாரிகளின் அருகே நின்றுகொண்டு அவர்கள் செய்யும் பல்வேறு வேலைகளை வேடிக்கை பார்த்து, மனதில் வாங்கிக்கொண்டதும் உண்டு.

    2005-ம் ஆண்டு முதல் நான் தினமும் தினமலர் செய்தித்தாள் மட்டும் காசு கொடுத்து வாங்கிக்கொண்டு வர ஆரம்பித்துள்ளேன். அது இன்றுவரையும் தொடர்கிறது. அத்துடன் ஞாயிறுதோறும் இணைந்து வரும் தினமலர்-வாரமலரில்தான், தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பினைக்கண்டேன்.

    கலந்துகொள்ள நினைத்தேன். எதைப்பற்றி எழுதுவது என பலமாக யோசித்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  46. 8.
    இந்த பலூன் வியாபாரி பற்றி, மாரியம்மன் தேர்த்திருவிழா அமர்க்களங்கள் பற்றி, சுனாமிப் பேரழிவினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய செய்திகள், குழந்தையில்லா தம்பதியினரின் வருத்தங்கள் என என் மனதில் தனித்தனியாக சிதறிக்கிடந்த பல விஷயங்களை மட்டும், ஒருங்கிணைத்து இந்தக்கதையை எழுத நான் பயன் படுத்திக்கொண்டேன்.

    இவ்வாறு என் முதல் கதை 2005-ம் ஆண்டு மட்டுமே உருவானது. அதுவும் பரிசுக்குத் தேர்வானது. என் பெயரிலேயே முதன்முதலாக அச்சாகி வெளியானதோர் ஆக்கமும் இது மட்டுமே.

    முதல் சந்திப்பு, முதல் பார்வை, முதல் நட்பு, முதல் உரையாடல், முதல் காதல், முதல் முத்தம், முதல் இரவு, முதல் உறவு, முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு Thrilling ஆன அனுபவமும், சுகமும், பேரானந்தமும் இருக்க முடியும்?

    அதுபோலவேதான் இந்த என் முதல் கதையும்; அது முதன் முதலாக ஒரு
    பத்திரிகையில் அச்சேறி, என் பெயருடனும், புகைப்படத்துடனும் பிரசுரம் ஆனபோது,
    எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும், பரிசுத்தொகையையும், என்னுடன் அன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்களையும், புதிய எழுத்துலக நண்பர்களையும் பெற்றுத்தந்தது என்பதே, இந்த என் சிறுகதையின் மூலம் நான்
    பெற்ற மிகச்சிறப்பான, மகிழ்ச்சிகரமானதோர் அனுபவம்.

    அந்த என் முதல் அனுபவம் மிகவும் THRILLING ! THRILLING !! THRILLING !!! தான்!

    நான் சொல்லும் இதனை, என்னைப்போலவே நன்கு அனுபவித்து, அதை மனதில்
    அப்படியே என்றும் நிலைநிறுத்தி, அவ்வப்போது நினைத்துப்பார்த்து, மனதால்
    மகிழ்வுடன் அசைபோடத் தெரிந்தவர்களால் மட்டுமே, இந்த சுகானுபவத்தை
    முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியும்.

    பிறகு இதுபோல, ஏன் ... இதையும்விட இன்னும் மேலாகவே, எவ்வளவோ பரிசுகளும், பாராட்டுக்களும், விருதுகளும் என்னைத் தேடி அவைகளாகவே வந்திருந்த
    போதிலும், இந்த என் முதல் அனுபவத்தை மட்டும் என்னால் எப்போதுமே மறக்க
    முடியாமல் உள்ளது என்பதை இங்கு தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    நம் ஸ்ரீராம் அவர்கள் என்னிடம் கேட்ட போது, இதைவிட மிகச்சிறப்பான பிரசுரிக்கப்பட்ட கதைகள் என் கைவசம் இருந்தும்கூட, இது என் முதல் கதை என்பதால் இதனையே அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  47. 9.
    இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்துள்ள தங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  48. 10.
    நம் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு. ஜீவி சார் அவர்கள், இதுபோன்ற வெளியீடுகளில் வாசகர்களின் கருத்துக்களுக்குப்பிறகு, கதாசிரியர் மீண்டும் வருகை தந்து தனது ஏற்புரை போல ஏதாவது எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும், என தன் கருத்தினை சென்ற வாரப்பதிவுகள் ஏதோ ஒன்றில் பதிவு செய்திருந்தார். அவரின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து இதனை நான் இங்கு வெளியிட்டு துவங்கி வைத்துள்ளேன்.

    உயர்திரு. ஜீவி சார் அவர்களுக்கு என் அன்பான நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்படிக்கு
    பிரியமுள்ள
    கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  49. மிக மிக அருமையான கதை. தாயுமானவர் என்பதன் அர்த்தத்தை அழகுறச் சொன்ன கதை. மிகவும் ரசித்து வாசித்தோம். மனம் கலங்கியது. முதல் கதை பிரசுரமானதற்கும் அருமையாக எழுதியமைக்கும் வாழ்த்துகள் வைகோ சார். அதை இங்கு பகிர்ந்த உங்களுக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  50. வாவ்.. அருமையா இருந்தது. ரசித்துப் படித்தேன். அப்போ எல்லாம் ட்விஸ்டே இல்லாம சிறுகதை எழுதியிருக்காங்க. ;)

    பதிலளிநீக்கு
  51. எங்கட குருஜி கதன்னாலே அது சூப்பராதான இருந்திகிடும். படங்க அல்லாமே ரொம்ப நல்லாகீது. தோச சுடுர படம் பாக்காங்காட்டியும் தின்னுபுடோணும்போல கீது.தேரு திருவிளாலா நா கண்டுகிட்டதேல்ல. இங்கன கண்டுகிட்டேன்லா. முனியாண்டி கிட்டால வந்துகிட்ட அந்த பொட்டபுள்ள ஆரு???னன

    பதிலளிநீக்கு
  52. mru said...

    வாங்கோ முருகு, வணக்கம்மா.

    நீங்க நல்லா இருக்கீங்களா? அம்மி நலமா? அண்ணன் + அண்ணி நலமா?

    //எங்கட குருஜி கதன்னாலே அது சூப்பராதான இருந்திகிடும்.//

    ஆஹா !

    //படங்க அல்லாமே ரொம்ப நல்லாகீது.//

    ஓஹோ !

    //தோச சுடுர படம் பாக்காங்காட்டியும் தின்னுபுடோணும்போல கீது.//

    உடனே புறப்பட்டு வாங்க முருகு. நானே என் கையால் ஸ்பெஷலா உங்களுக்கு தோசை சுட்டுத்தாரேன். :)

    //தேரு திருவிளாலா நா கண்டுகிட்டதேல்ல. இங்கன கண்டுகிட்டேன்லா.//

    இதையெல்லாம் உங்களாலே இங்குதான் (என்னிடம்தான்) கண்டுகிட ஏலும் :)

    //முனியாண்டி கிட்டால வந்துகிட்ட அந்த பொட்டபுள்ள ஆரு???னன//

    முனியாண்டி தான் குருஜின்னு வெச்சுக்கிட்டீங்கன்னா, கிட்டால வந்துகிட்ட அந்தப் பொட்டப்புள்ள தான் முருகுவாக்கும். :)

    தங்களின் அன்பான வருகைக்கும், கொச்சைத்தமிழில் கொடுத்துள்ள இனிப்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள குருஜி கோபு

    பதிலளிநீக்கு
  53. கோபால் சார் மறுபடி நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரியுமா????? உங்க கூட (செல்ல) சண்டை போடத்தான்..... உங்களைப்பற்றி பலவிஷயங்கள் பகிர்ந்து கொண்டிருக்கீங்க. அதெல்ஷாம் ஓ..கே தான். இவ்வளவு பேரு ரசித்து ஆசை ஆசையா பின்னூட்டம் போட்டிருக்கோம். நீங்க யாருக்குமே ரிப்ளை பின்னூட்டம் போடாம உங்க செல்ல மின்னலுக்குமட்டும் எப்படி ரிப்ளை பின்னூட்டம் போடலாம்???? அவங்க மேல பொறாமையா வருது....... நான் பின்னூட்டம் போட்ட அடுத்த நிமிஷத்லேந்தே உங்க சுவாரசியமான ரிப்ளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். இப்படி ஏமாத்தலாமா??????

    பதிலளிநீக்கு
  54. கோபால் சார் மறுபடி நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரியுமா????? உங்க கூட (செல்ல) சண்டை போடத்தான்..... உங்களைப்பற்றி பலவிஷயங்கள் பகிர்ந்து கொண்டிருக்கீங்க. அதெல்ஷாம் ஓ..கே தான். இவ்வளவு பேரு ரசித்து ஆசை ஆசையா பின்னூட்டம் போட்டிருக்கோம். நீங்க யாருக்குமே ரிப்ளை பின்னூட்டம் போடாம உங்க செல்ல மின்னலுக்குமட்டும் எப்படி ரிப்ளை பின்னூட்டம் போடலாம்???? அவங்க மேல பொறாமையா வருது....... நான் பின்னூட்டம் போட்ட அடுத்த நிமிஷத்லேந்தே உங்க சுவாரசியமான ரிப்ளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். இப்படி ஏமாத்தலாமா??????

    பதிலளிநீக்கு
  55. ஸ்ரத்தா, ஸபுரி... said...

    வாங்கோ, வணக்கம்.

    //கோபால் சார் மறுபடி நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரியுமா????? //

    நீங்க மீண்டும் இங்கு வருவீர்கள் என எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும். இது நான் மிகவும் எதிர்பார்த்தது மட்டுமே.

    //உங்க கூட (செல்ல) சண்டை போடத்தான்..... //

    இதுவும் நான் நன்கு எதிர்பார்த்தது மட்டுமே.

    //உங்களைப்பற்றி பலவிஷயங்கள் பகிர்ந்து கொண்டிருக்கீங்க. அதெல்லாம் ஓ..கே தான்.//

    ரொம்பவும் சந்தோஷம். :)

    // இவ்வளவு பேரு ரசித்து ஆசை ஆசையா பின்னூட்டம் போட்டிருக்கோம். நீங்க யாருக்குமே ரிப்ளை பின்னூட்டம் போடாம உங்க செல்ல மின்னலுக்கு மட்டும் எப்படி ரிப்ளை பின்னூட்டம் போடலாம்????//

    அவள் மிகவும் சின்னப்பொண்ணு. என் செல்லக் குழந்தை. அவளை நான் பதிவுப்பக்கம் பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. அதனால் ஒரு சந்தோஷத்தில், அவளுக்குப் புரியும் பாணியில் (அதாவது அவளால் புரிந்துகொள்ள ஏலும் என்ற நம்பிக்கையில்) பதில் அளித்துவிட்டேன்.

    இதுபோல நான் ஏதாவது சொல்லி அந்தக்குழந்தையை அவ்வப்போது உற்சாகப்படுத்தா விட்டால், அதுக்கு மனசு மிகவும் வாடிப்போய்விடும்.

    //அவங்க மேல பொறாமையா வருது.......//

    அது இன்னும் ஒருசில மாதங்களுக்குள் 'நிக்காஹ்' (கல்யாணம் கட்டிக்கிட்டு) முடிந்து எங்கோ கண் காணாத வெளிநாட்டுக்கு போய்விடும். அப்புறம் இந்தத் தமிழ்ப் பதிவுலகம், குருஜி கோபு எல்லாம் சுத்தமா மறந்தே போய்விடும். அதனால் நாம் அவள் மேல் இப்போது பொறாமை கொள்ள வேண்டாம். எப்படியோ அது நல்லபடியா கல்யாணம் கட்டிக்கிட்டு, வாழ்க்கையில் சந்தோஷமா செளக்யமா எங்கிருந்தாலும் ஜாலியாகவே இருக்கட்டும் என நாம் வாழ்த்துவோம்.

    // நான் பின்னூட்டம் போட்ட அடுத்த நிமிஷத்லேந்தே உங்க சுவாரசியமான ரிப்ளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். இப்படி ஏமாத்தலாமா??????//

    எனது ரிப்ளையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நபர்களில் தாங்களும் ஒருவர் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

    தாங்கள் தினமும் என் பழைய பதிவுகளில் ஏதாவது ஒன்றைப்படித்து விட்டு, வெகு அழகாகப் பின்னூட்டம் அளித்து வருகிறீர்கள். அதற்கு நானும் உடனுக்குடன் உங்களுக்கு பதில் அளித்துத்தான் வருகிறேன் என்பது உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும்.

    இங்கு என்னால் அதுபோல ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரிப்ளை கொடுக்க முடியாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் நான் மேலும் சொல்ல பலவிஷயங்கள் உள்ளன. எல்லாவற்றையும் இங்கு எப்படி என்னால் ஓபனாகச் சொல்ல முடியும்? தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கோ.

    தங்களின் Mail ID ஐ எனக்குக் கொடுத்தீர்களானால், எல்லாவற்றையும், மனம் திறந்து உடைத்துச் சொல்லிவிடுவேன்.

    இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் (VERY FIRST) வருகைக்கும், இரண்டாவது வருகைக்கும், அழகான ஆச்சர்யம் அளிக்கும் கருத்துக்களுக்கும், மிகவும் நியாயமான முறையில் என்னுடன் ஓர் உரிமையுடன் சண்டை போட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  56. //இங்கு என்னால் அதுபோல ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரிப்ளை கொடுக்க முடியாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் நான் மேலும் சொல்ல பலவிஷயங்கள் உள்ளன. எல்லாவற்றையும் இங்கு எப்படி என்னால் ஓபனாகச் சொல்ல முடியும்? //

    எங்களால் தடையும் இல்லை, எங்களுக்கு ஆட்சேபணையும் இல்லை வைகோ ஸார்.

    :))))

    பதிலளிநீக்கு
  57. நன்றியோ நன்றிகள் கோபால்சார்.சந்தோஷத்துல இதுக்குமேல சொல்ல வார்த்தை இல்லை.

    பதிலளிநீக்கு
  58. நன்றியோ நன்றிகள் கோபால்சார்.சந்தோஷத்துல இதுக்குமேல சொல்ல வார்த்தை இல்லை.

    பதிலளிநீக்கு
  59. ஸ்ரீராம். said...

    வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    //எங்களால் தடையும் இல்லை, எங்களுக்கு ஆட்சேபணையும் இல்லை வைகோ ஸார். :)))) //

    நான் அதுபோலச் சொல்லவே இல்லை ஸ்ரீராம். எனக்கு உங்களைப்பற்றியும் உங்களின் நல்ல குணத்தைப்பற்றியும் தெரியாதா என்ன !

    பின்னூட்டமிட்டுள்ள அனைவருக்கும் தாங்களே தங்கள் வழக்கம்போல் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ளீர்கள்.

    அதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

    என்றும் அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  60. ஸ்ரத்தா, ஸபுரி... said...

    வாங்கோ, வணக்கம். தங்களின் மூன்றாம் முறை வருகை முக்கனி போல எனக்கு இனிப்பாக உள்ளது.

    //நன்றியோ நன்றிகள் கோபால்சார்.சந்தோஷத்துல இதுக்குமேல சொல்ல வார்த்தை இல்லை.//

    தங்களின் புரிதலுக்கும், தங்களின் நியாயமான செல்லமான கோபங்கள் இப்போது கோபங்கொண்டு எங்கேயோ ஓடி ஒளிந்துபோய் உள்ளதற்கும், என் மகிழ்ச்சிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  61. படித்திருக்கிறேன்....மீண்டும் படித்தாலும் அதே நெகிழ்ச்சி....பலூன் தன்னுடன் தானே விளையாடிக்கொண்டதும், வாடை லாரி வாரி இறைத்த தண்ணீரில் வண்ணக் கோலமிட்ட தெருவும், ஆங்காங்கே கவிப்பசிக்கு உணவூட்டுகிறது.............

    பதிலளிநீக்கு
  62. (1)
    ப்ராப்தம் has left a new comment on the post "கேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.":

    //பலூன் வியாபாரியின் படம் நீங்க வரைந்ததுதானே. சூப்பரா இருக்கு.//

    (2)
    srini vasan has left a new comment on the post "கேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.":

    //படங்களும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க வரைஞ்சிருக்கும் பலூன் காரர் படம் ரொம்ப நல்லா இருக்கு. //

    -=-=-=-=-=-=-=-=-=-

    அன்புடையீர், வணக்கம்.

    இந்தப் பதிவின் நடுவிலே காட்டியுள்ள பலூன் வியாபாரியின் படம் நான் வரைந்தது அல்ல என்பதைத் தங்கள் இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ‘தாயுமானவள்’ என்ற தலைப்பிலேயே என் 13 சிறுகதைகள் அடங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் மிகப் புகழ்பெற்ற ’வானதி பதிப்பகம்’ மூலம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் சிறுகதை தொகுப்பு நூலின் அட்டைப்படமே மேலே காட்டப்பட்டுள்ளது. அந்தப்படம் ஓவியர் ஒருவரால் வரைய, வானதி பதிப்பகத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

    சிறுவயது முதலே எனக்கும் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் உண்டு. இருப்பினும் நான் ஓவியங்கள் வரைய முறைப்படி கற்றது இல்லை. என் சிற்சில சிறுகதைகளுக்கு மட்டும் நானே ஓவியமும் வரைந்து என் வலைத்தளத்தினில் வெளியிட்டதும் உண்டு. அவற்றில் சிலவற்றிற்கான இணைப்புகள் மட்டும் இதோ இங்கு தங்கள் தகவலுக்காகக் கொடுத்துள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
    1) மனசுக்குள் மத்தாப்பூ

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
    2) கொட்டாவி

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html
    3) ஏமாற்றாதே ! ... ஏமாறாதே !

    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html
    4) வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ.! புதிய கட்சி ‘மூ.பொ.போ.மு.க.’ உதயம்

    விருப்பமுள்ளவர்கள் இந்த மேற்படிப் பதிவுகளில் உள்ள ஓவியங்களை மட்டுமாவது கண்டு களிக்கலாம், அதனுடன் உள்ள காவியத்தைப் படிக்க நேரமும் ப்ராப்தமும் இல்லாவிட்டாலும்கூட :)

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  63. (1)
    ப்ராப்தம் has left a new comment on the post "கேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.":

    //பலூன் வியாபாரியின் படம் நீங்க வரைந்ததுதானே. சூப்பரா இருக்கு.//

    (2)
    srini vasan has left a new comment on the post "கேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.":

    //படங்களும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க வரைஞ்சிருக்கும் பலூன் காரர் படம் ரொம்ப நல்லா இருக்கு. //

    -=-=-=-=-=-=-=-=-=-

    அன்புடையீர், வணக்கம்.

    இந்தப் பதிவின் நடுவிலே காட்டியுள்ள பலூன் வியாபாரியின் படம் நான் வரைந்தது அல்ல என்பதைத் தங்கள் இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ‘தாயுமானவள்’ என்ற தலைப்பிலேயே என் 13 சிறுகதைகள் அடங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் மிகப் புகழ்பெற்ற ’வானதி பதிப்பகம்’ மூலம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் சிறுகதை தொகுப்பு நூலின் அட்டைப்படமே மேலே காட்டப்பட்டுள்ளது. அந்தப்படம் ஓவியர் ஒருவரால் வரைய, வானதி பதிப்பகத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

    சிறுவயது முதலே எனக்கும் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் உண்டு. இருப்பினும் நான் ஓவியங்கள் வரைய முறைப்படி கற்றது இல்லை. என் சிற்சில சிறுகதைகளுக்கு மட்டும் நானே ஓவியமும் வரைந்து என் வலைத்தளத்தினில் வெளியிட்டதும் உண்டு. அவற்றில் சிலவற்றிற்கான இணைப்புகள் மட்டும் இதோ இங்கு தங்கள் தகவலுக்காகக் கொடுத்துள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
    1) மனசுக்குள் மத்தாப்பூ

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
    2) கொட்டாவி

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html
    3) ஏமாற்றாதே ! ... ஏமாறாதே !

    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html
    4) வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ.! புதிய கட்சி ‘மூ.பொ.போ.மு.க.’ உதயம்

    விருப்பமுள்ளவர்கள் இந்த மேற்படிப் பதிவுகளில் உள்ள ஓவியங்களை மட்டுமாவது கண்டு களிக்கலாம், அதனுடன் உள்ள காவியத்தைப் படிக்க நேரமும் ப்ராப்தமும் இல்லாவிட்டாலும்கூட :)

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  64. எத்தனைமுறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதை!சிறுவயது முதல் வளர்த்துக்கொண்ட ஆற்றல், கூர்ந்து நோக்கி உள்வாங்கும் திறன், அதை கோர்வையாக வெளிப்படுத்துவதில் நேர்த்தி, ஓவியங்கள் வரைதலில் ஆர்வம் மற்றும் தனித்தன்மை,போட்டி என்றவுடன் ஒரு புத்துணர்வு, எழுச்சி இவையெல்லாம் ஒருபுறம், மஹாபெரியவாளின் ஆசி மறுபுறம் திரு கோபு சார் அவர்களை இத்தனை பெருமைகளுக்கும், சிறப்புகளுக்கும் காரணமாய்த் திகழ்கின்றன. படிப்பவர் உள்ளங்களின் ப்ட்டென்று பதியும் வண்ணம் கதைக்கௌ தெரிவு, நடை, நகைச்சுவை இவையெல்லாம் அவருக்கே உரித்தானவை. அவருடைய படைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி! அவரது பணி தொடர வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  65. அருமையான கதை..
    அவர் தளத்தில் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன்...
    ஆனாலும் இந்தக் கதை முதலில் வாசிப்பது போல்த்தான் இருக்கிறது... வாசித்த ஞாபகம் இல்லை.

    பதிலளிநீக்கு
  66. அருமையான கதை விஜிகே சார். திருவிழாவில் சுற்றி தாயுமானவனையும் சுற்றிப் பார்க்க வைத்த கதை. அற்புதமான படைப்பு. விருது பெற்றதில் மகிழ்ச்சி சார் :) பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம் :)

    பதிலளிநீக்கு
  67. விமர்சனப் போட்டிக்காக அணுவணுவாய் ரசித்து வாசித்த கதை இது. சில கதைகள்தான் வாசித்தபின்னும் பலநாள் மனத்துள் சுழன்றுகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கதைகளுள் இதுவும் ஒன்று. திருச்சியில் நடைபெறுவதாகக் கதை இருப்பதால் கூடுதல் ஈர்ப்பு என்று நினைக்கிறேன். விமர்சனப்போட்டியில் நான் பரிசு பெற்றிருப்பதையும் இங்கு குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!