புதன், 2 மார்ச், 2016

போதும்


 
 Image result for enough images
 
 
 
"போதும்"

இந்த வார்த்தையை மனதாரச் சொல்லத் தெரிந்தவன்தான் பெரிய பணக்காரனாம்.

மனிதன் "போதும்" என்று மனதாரச் சொல்லும் ஒரே இடம் சாப்பிடும் போதுதான்.  வயிறார சாப்பிடுவதால் மனம் நிறைந்து போதும் என்று சொல்ல முடிகிறது!

சம்பாதிக்கச் சம்பாதிக்கப் பணத்தைப் பார்க்கும் மனிதனுக்கு "போதும்" என்கிற எண்ணமே ஏன் வருவதில்லை?  முதலில் தன் வயிற்றுப்பாட்டுக்காக சம்பாதிக்கத் தொடங்குபவன், பின்னர் அடுத்த வேளைக்காக, நாளைக்காக, தன் சந்ததியினருக்காக என்று தொடர்ந்து பணம் சேர்க்கத் தொடங்குகிறான்.

அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டுதான் என்ன செய்வார்கள்?  


ஒரு கதை சொல்வார்கள்.  ஒரு ஊருக்கு முற்றும் துறந்த ஒரு முனிவர் வந்தாராம்.  ஊர்க்காரர்கள் அவருக்கு உதவி செய்கிறேன் என்று அவர் ஆஸ்ரமத்தில் புகுந்த எலியை விரட்ட பூனை ஒன்றைத் தந்தார்களாம்.  பூனைக்கு தினமும் பால் வைக்க வேண்டி பசு ஒன்று..   பசுவுக்கு புல் போட ஒரு தோட்டக்காரன்.. 

கதை முன்னே பின்னே இருக்கலாம்.  போதும் என்ற மனம் இல்லாமல் ஒரு தேவைக்குப் பார்க்கப் போக, தேவைகள் விரிந்து கொண்டே போவதைச் சொல்லத்தானே இந்தக் கதை..
 
எவ்வளவு பணம் சேர்ந்தால் ஒரு மனிதனுக்கு போதும் என்று தோன்றும்?
 
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று அதனால்தானே சொன்னார்கள்?
 
சில பேர்கள் பேசுவதைக் கேட்கையில் போதும் என்று சொல்லத் தோன்றும்.  

 
இதுவரைப் படித்த புத்தகங்கள் போதும், இனி படிக்க வேண்டாம் என்று தோன்றுமா 
 
வாழ்ந்தது போதும் என்று சொல்ல எத்தனை பேர் தயார்?
 
சண்டை போதும் ; கோபம் போதும் ;  சோகம் போதும் ; ஆத்திரம் போதும் ; மன இறுக்கம் போதும் ;  சரிதான்!
 
அதே சமயம் எதுவுமே அளவாக இருக்க வேண்டும் என்பதால் சந்தோஷம் கூட அளவோடு போதும்,  சந்தோஷம் மட்டுமே இருந்தால் திகட்டி விடுமே....

 
ஊழல் போதும் என்று நாம் சொல்லலாம்.  ஊழலைச் செய்பவர்கள் சொல்ல மாட்டார்களே....

 


==============================
=====================

கே ஜி ஜி

 
போதும் போதும் .......

எப்பொழுது நாம் இப்படிச் சொல்கிறோம்?

இன்பமயமான அனுபவத்திலா அல்லது இன்னல்கள் துன்புறுத்தும் பொழுதா?

பெரும்பாலும் இன்னல்கள் வரும்பொழுதுதான்.

பாயாசம் நன்றாக இருந்தால் நான்கு அல்லது ஐந்து முறை இலையில் போட்டு உறிந்து குடித்துவிட்டு   பிறகு இன்னும் உண்டால் ஆபத்து / இன்னல் என்ற நிலையில் போதும் போதும் என்போம் .

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று இன்னல்களுக்கிடையே பாடியவர்களைப் பார்த்திருக்கறோமே!

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று படித்திருந்தாலும் எனக்கு பொன் மீது ஆசையில்லை எனவே போதும் என்று சொல்லமாட்டேன் என்று நான் வாதம் புரிவேன் .

யாராவது நமக்கு புத்திமதி கொடுத்துக்கொண்டே இருந்தால் போதும் நிறுத்து என்று கூற ஆசைப் படுவோம்.

எப்பவோ பார்த்த பாடல் காட்சி ஒன்றும் நினைவுக்கு வருகிறது. காருக்குள்ளே காதலர்கள் பாடிய 'போதுமோ இந்த இடம் .... ' பாடல்தான் அது.
 

தேர்தல் நேரத்தில் நடிகர் கார்த்திக் கூட்டம் கூட்டி விடுகின்ற அறிக்கையை படிப்பவர்கள் ' போதும் ' போதாதற்கு இவர் வேற ஒரு பக்கம்'  என்று சொல்லி சிரிப்பார்கள்.

தேர்தல் ஊர்வலங்களில் கோஷம் இட்டுச் செல்வதைக் கேட்டிருப்போம் .... ' இந்தக் கூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா!


இது போதுமா அல்லது இன்னும் வேண்டுமா !


==============================================================
 
 

Image result for enough images

32 கருத்துகள்:

  1. போதுமோ .... இந்த இடம் ....
    கூடுமோ ...... அந்த சுகம் ....
    எண்ணிப்பார்த்தால் சின்ன இடம் ....
    இருவர் கூடும் நல்ல இடம் ..... !

    ‘நான்’ என்ற திரைப் படத்தில் நல்ல மழையில் வெள்ளைநிற குட்டியூண்டு ஃபீயட் காருக்குள் கதாநாயகனும் கதாநாயகியும் மழைக்காக ஒதுங்கிக்கொண்டு பாடும் பாடல் இது.

    ஏனோ இந்தப்பதிவைப்படித்ததும் என் வாய் என்னையறியாமல் இந்தப்பாடலை முணுமுணுத்தது. :)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா போதும் போதும் என்று வைத்து போதாது என்று சொல்ல வைச்சுட்டீங்க ஐயா.அருமை உண்மை தான் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

    பதிலளிநீக்கு
  3. போதும் என்கிற சொல்லை
    நிச்சயம் மங்கலச் சொல்லாகவே
    நிம்மதிக்கு ஒரு மந்திரச் சொல்லாகவே கொள்ளலாம்
    மனம் க்வர்ந்த பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வார்த்தைகளில் கூடப் பாருங்கள், சில வார்த்தைகளுக்கு நல்ல வார்த்தைகள் என்று அடையாளப்படுத்தும் அதிருஷ்டம் கிடைத்திருக்கிறது. அதற்கு உதாரணமாக போதும் என்ற ஒற்றை வார்த்தையைச் சொன்னால் கூட போதும்..

    சமீபத்தில் எலெக்டிரிக் டிரையினில் பயணம் செய்த பொழுது கேட்ட உரையாடல்.

    "அந்த இ.காலேஜிலே சீட் வேணும்னா ஆவரேஜா நூற்றுக்கு தொண்ணூறு எடுத்திருந்தால் கூடப் போதாது, தெரியுமிலே?'

    "வேறொண்ணு இருந்தா எண்பது இருந்தாக் கூடப் போதும்.. அது தெரியுமிலே?"

    சில போதாமைகளை சில போதும்கள் தீர்மானிப்பதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  5. "போதும்" இந்த வார்த்தையை மனதாரச் சொல்லத் தெரிந்தவன்தான் பெரிய பணக்காரனாம்.....அப்படியா....

    பதிலளிநீக்கு
  6. "போதும்" இந்த வார்த்தையை மனதாரச் சொல்லத் தெரிந்தவன்தான் பெரிய பணக்காரனாம்.....அப்படியா....

    பதிலளிநீக்கு
  7. போதும் என்று சோற்றைச் சொல்லும் மனிதன் மீண்டும் வேண்டும் என்று சொல்ல வேண்டியது இருக்கின்றதே..

    பதிலளிநீக்கு
  8. போதும் என்ற எண்ணம் இருந்துவிட்டால் இன்பம் தான். ஆனால் தேவைகளை அதிகரித்துக் கொண்டே, போதாது என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  9. போதும் என்ற மனமே பொன் செய்யும்!!!!

    பதிலளிநீக்கு
  10. தம சுற்றிக் கொண்டே இருக்கின்றது பலரது தளங்களிலும்...ஹப்பா ஒருவழியாக ஓட்டு சேர்ந்துவிட்டது

    பதிலளிநீக்கு
  11. நண்பரே சம்பாதிக்கிறவன்
    சம்பாதித்து சம்பாதித்து
    தன் பெலன் கெடும்போது
    போதும் என்பான்....
    நிச்சயமாய் ஒரு தாள்
    ஒருதரமாவது போதும் என்பான்...

    தங்கள் தளத்தில் என் முதல்
    வருகை என்பதை மகிழ்சியுடன்
    தெரிவித்துக் கொள்கிறேன்....

    தாங்கள் விரும்பினால் எம் தளத்திற்கு
    வந்து கருத்துரை இடுங்கள் நண்பரே
    ajaisunilkarjoseph.blogspot.com

    பதிலளிநீக்கு
  12. உண்மைதான் வயிறு நிறையும் போது சொல்லப் படும் போதும்தான் நிஜமானது

    பதிலளிநீக்கு
  13. ஆஹா நல்ல பகிர்வு, இதைப் படித்தவுடன் என் உறவினர் தான் ஞாபகத்தில் வந்தார், அவருக்கு வரிசையாய் 5 பெண் குழந்தைகள் அடுத்தும் பெண் பிறக்க இனிமேல் வேண்டாம் என்பதற்காய் அக்குழந்தைக்கு போதும்செல்வி என்று பெயர் வைத்தார்,,,

    போதும் என்ற வார்த்தை,,,

    தொடருங்கள்,,

    பதிலளிநீக்கு
  14. போதும் ....

    வித்தியாசமான பதிவு (இந்த பதிவு )

    பதிலளிநீக்கு
  15. இதற்கு மேல் யோசிக்க என்ன இருக்கிறது,இதுவே போதும் :)

    பதிலளிநீக்கு
  16. போதும் என்று நினைத்தாலே பல நன்மைகள் விளையும். நீங்கள் சொல்வது போல் உணவு நம்மைப் போதும் என்று சொல்ல வைக்கும்.நல்ல அருமையானப் பதிவு.

    பதிலளிநீக்கு
  17. நன்றி வைகோ ஸார். திரு கௌதமன் தனது வரிகளில் இதே பாடலைக் குறிப்பிட்டு இருக்கிறார் பாருங்கள்!

    :)))

    பதிலளிநீக்கு
  18. நன்றி சகோதரி வைசாலி செல்வம்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி கில்லர்ஜி.. அந்த வேளைக்கு போதும் என்று சொல்கிறார்!

    பதிலளிநீக்கு
  20. முதல் வருகைக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன். நானும் இதேபோல போதும் பொண்ணு போன்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  22. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.

    பதிலளிநீக்கு
  23. என் உள்ளத்தைத் தொட்ட பதிவு
    போதும்
    எந்தளவுக்குப் போதும் என்றால்
    குறித்த வேளையில்
    நம்மாள் நுகருமளவுக்குப் போதும்
    பின்னர்
    போதும் என்பது போதாத வேளை
    நம்மாள் தேடலில் இறங்குவாரே!

    பதிலளிநீக்கு
  24. போதும், போதும்ங்கற அளவுக்குப் பதிவுகளைப் போடுங்க!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!