திங்கள், 25 ஏப்ரல், 2016

'திங்க'க்கிழமை 160425 :: ரவா தோசை


இது (ஒரு பிராக்டிகல்) ரவா தோசை செய்முறை.
 (செய்து, சுவைத்துப் பார்த்தவர்: கௌதமன்) 

தேவையான பொருட்கள்:
   





ரவா : நான்கு கரண்டி அளவு.
அரிசிமாவு : ஒரு கரண்டி அளவு.
மைதா மாவு : ஒரு கரண்டி அளவு.
உப்பு : தேவையான அளவு.
பச்சை மிளகாய் ஒன்று 
மிளகு : ஒரு டீஸ்பூன். 
கறிவேப்பிலை : ஒரு ஈர்க்கு. 

ரவா, அரிசி மாவு, மைதா ஆகியவற்றை, உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும். 

பிறகு சுத்தமான தண்ணீர் சேர்த்துக் கரைக்கவேண்டும். 
 ==> கவனம்: 
தோசை மாவு எவ்வளவு நீர்க்க இருக்கின்றதோ அந்த அளவுக்கு தோசை மெல்லியதாக, நிறைய ஓட்டைகளுடன் வரும். ரொம்ப நீர்த்துப் போய்விட்டால் தோசைக்கல்லிலிருந்து பிரித்து எடுப்பது பிரச்னை ஆகிவிடும்.  எனவே முதலில் அளவோடு தண்ணீர் சேர்த்து, எப்படி வருகின்றது என்று பார்த்துக்கொண்டு, பிறகு மேலும் நீர் சேர்க்கவேண்டுமா / வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ளலாம். 

சரி, மாவு கரைத்துக் கொண்டாயிற்று அல்லவா? இதில் பச்சை மிளகாயைப் பொடிப் பொடியாய் நறுக்கிப் போடுங்கள். மிளகை முழு மிளகாகவோ அல்லது ஒன்றிரண்டாக உடைத்தோ போடுங்கள். கறிவேப்பிலையை, நன்காகக் கழுவி, கிள்ளி, மாவில் போட்டுக் கலக்குங்கள். 

இப்போ இந்த மாவுக் கலவையை அப்படியே மூடி வைத்துவிட்டு, எழுபத்தைந்து நிமிடங்கள் கழித்து வரவும். அவ்வளவு நேரம் மாவு ஊறவேண்டும். 
     

நான் ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி, தோசை வார்க்கவும். ஒரு பக்கம் வெந்ததும், தோசையைத் திருப்பிப் போடவும். முன்பு கூறியபடி, தோசை மாவுக்கு மேலும் தண்ணீர் சேர்க்கவேண்டுமா / வேண்டாமா என்பதை, இந்த முதல் தோசை எப்படி வருகின்றது என்பதைப் பார்த்துத் தீர்மானித்துவிடலாம். 

மறுபக்கமும் வெந்ததும், தட்டில் எடுத்துப் போட்டு, கொஞ்சம் ஆறியதும், சாப்பிடலாம். 
   

பொதுவாக ரவா தோசைக்கு சைடு டிஷ் எதுவும் தேவை இருக்காது. தேவை என்றால் சட்டினி செய்து, தொட்டுக்கொள்ளவும். 
          

21 கருத்துகள்:

  1. நமக்கு பிடித்த தோசை! ஆத்துக்காரி கிட்டே சொன்னால் போதும். பேஷா செய்து கொடுப்பார்கள். அனால் ஒரு கடினமான கேள்வி! ரவை? என்ன ரவை! இங்கு 147 ரவைகள் கிடைக்கிறது. எல்லா இழவுலேயும் ஹிந்தி பேரு வேற! மே பீபி கோ ஹிந்தி பகுத் அச்சா அத்துப்படி! அனாலும், இங்கே மஞ்ச கலர் ரவை, இட்லி ரவை, வெள்ளை ரவை, coarse ரவை fine ரவை..இப்படி எல்லாவற்றிற்கும் permutation combination போட்டா மண்டை காய்ந்து ரவா தோசை சாப்பிடும் ஆசையே போய்விடும்!

    சொல்லுங்கோ! எந்த ரவை போடணும்!

    பதிலளிநீக்கு
  2. ரவா தோசை நான் சாப்பிட்டதே இல்லை...
    இன்று செய்முறை விளக்கம் கிடைத்தது
    நாளைக்கே செய்ய முயல்கிறேன்....

    பதிலளிநீக்கு
  3. @நம்பள்கி, எம்டிஆர் ரவாதோசை மிக்ஸ் கிடைக்கிறது. அதிலே பண்ணிச் சாப்பிடுங்க. இந்த கரைத்துச் செய்யும் ரவாதோசையில் நான் ஜீரகம், இஞ்சி சேர்ப்பேன். கடுகு தாளிப்பேன். தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி ஆகியவை நல்ல துணை! வெங்காயமும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். பொதுவாகக் கரைச்ச தோசைகளுக்கே இஞ்சி, பமிளகாய் கருகப்பிலை, கொத்துமல்லி, மிளகு, ஜீரகம் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. ரவா தோசை..எப்படி இருக்கும் என்றே தெரியாதபோது..எப்படி செய்து...ம்ம்
    கௌதமன் கொடுத்து வைத்தவர்தான்...

    பதிலளிநீக்கு
  5. ரவா தோசை..எப்படி இருக்கும் என்றே தெரியாதபோது..எப்படி செய்து...ம்ம்
    கௌதமன் கொடுத்து வைத்தவர்தான்...

    பதிலளிநீக்கு
  6. நன்றி!Geetha Sambasivam.
    'எம்டிஆர் ரவாதோசை மிக்ஸ் கிடைக்கிறது.' உண்மை தான். திருமணம் ஆகாதவர்கள் இப்படி ரெடி மேடு உணவுகள் கூட வாங்கி சாப்பிடுவார்கள்.

    அதில் எல்லாம் preservatives போட்டு இருப்பார்கள். அதானால், அவைகளை நாங்கள் முழுவதும் தவிர்ப்போம்! டின் உணவுகளையும் தவிர்ப்போம். என் மனைவி மிக நன்றாக சமைப்பார்கள். ஆனால், எல்லாம் சரியாக இருக்கவேண்டும்! அதான் என்ன ரவை என்று குறிப்பாக கேட்டேன்!

    மறுபடியும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நம்பள்கி, பொதுவாக ரவா தோசையை ரவை+அரிசிமாவு+மைதா மாவு போட்டுக் கரைத்து வார்ப்பவர்கள் தோசை வார்ப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கணும். ஏனெனில் கரைக்கையில் கொஞ்சம் முன்னே பின்னே என்றால் கூட வார்க்க வராது. ஆகவே தான் எம்டிஆர் ரவாதோசை மிக்ஸ் என்று சொன்னேன். நாங்க பெரிய உப்புமா ரவையிலும் ரவாதோசை வார்ப்போம். பொடியான பேணி ரவையிலும் ரவா தோசை வார்ப்போம். பேணி ரவை எனில் அதிகம் ஊற விடக் கூடாது. ஊறிவிட்டால் மாவு கல்லில் ஈஷிக் கொண்டு தோசை எடுக்க வராது. பெரிய ரவையையும் எழுபத்தைந்து நிமிடங்கள் எல்லாம் ஊற விடுவதில்லை. ஏழு மணிக்கு தோசை வார்க்க வேண்டுமெனில் சுமார் ஆறேகால், ஆறரை மணிக்குக் கரைத்து வைப்பேன். பொதுவாகவே எந்த தோசை வார்த்தாலும் கல் நன்றாகக் காய வேண்டும். நாங்க நான் ஸ்டிக் பயன்படுத்துவது இல்லை. இரும்பு தோசைக்கல் தான். ஆகவே அது காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றிப் பரவலாகத் தடவி அதிலிருந்து புகை வர ஆரம்பித்த பின்னரே தோசை மாவை அதில் ஊற்றிப் பரப்ப வேண்டும். சுருண்டு கொள்ளும் போலத் தோன்றினால் முதல் தோசையை மட்டும் கொஞ்சம் சின்னதாக வார்த்த பின்னர் மற்ற தோசைகளை வழக்கம் போல் வார்க்கலாம். வாழை இலை சருகாக இருந்தால் அதைக் கல்லில் எண்ணெயைப் பரப்புவதற்குப் பயன்படுத்திக்கலாம். அல்லது கல் காய்ந்த பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துத் தயார் செய்திருக்கும் ஏதேனும் ஒரு சட்னியில் கலந்த பின்னரும் வார்க்கலாம். நன்றாக எடுக்க வரும்.

    பதிலளிநீக்கு
  8. தோசையைப் பார்க்கும் பொழுது ஆசை வருகின்றது

    பதிலளிநீக்கு
  9. ஆனியன் ராவ தோசை சாப்பிடனும் என்றால் எங்கவீட்டிற்கு வாங்க சூப்பர் ரவா தோசைக்கு நான் கேரண்டி. மாவு கரைத்த அடுத்த நொடியிலே தோசை வார்த்துவிடலாம். ஆனா ரெசிப்பி மட்டும் கேட்காதீங்க வற்புறுத்தி கேட்டா தப்பு தப்பாதான் சொல்லுவேன் ஹீஹீ

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் இந்த தோசைபடம் நீங்க சுட்ட படமா?

    பதிலளிநீக்கு
  11. ரவா தோசையை கீதா மேடம் செய்யும் முறையில் தான் என் காதலியும் செய்வாள்.மாவிலே கொஞ்சம் நெய்யும் சேர்ப்பாள். மிளகாய்ப்பொடி தான் திட்டுக் கொள்ள. முறுகலாய் அப்படியே சாப்பிடலாம். திருச்சியில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. சட்டென்று பேர் நினைவுக்கு வரவில்லை. ர.தோ நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. தவா தோசையை விட சாதா கல்லில் போடும் ரவா தோசையே என் சாய்ஸ் :)

    பதிலளிநீக்கு
  13. ரவா தோசை ரெசிப்பியை போலவே பின்னூட்டகளிலும் சுவை !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  14. பிடிக்கும் என்றாலும் வீட்டில் செய்வதில்லை. மைதா போடவேண்டும் என்பதால். ஹோட்டலில் சாப்பிட்டதுண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில்.

    கீதா: எனக்கும் மிகவும் பிடித்த தோசை.....வீட்டில் சூப்பராக வரும். ஆனியன் ரவா! கரைத்த உடனேயே வார்க்க முடியும். இந்தக் காம்பினேஷனும் செய்து பார்த்துவிடுகின்றேன்...

    நம்பள்கி.... ரவா... பாம்பே ரவாதான்...

    பதிலளிநீக்கு
  15. பிடிக்கும் என்றாலும் வீட்டில் செய்வதில்லை. மைதா போடவேண்டும் என்பதால். ஹோட்டலில் சாப்பிட்டதுண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில்.

    கீதா: எனக்கும் மிகவும் பிடித்த தோசை.....வீட்டில் சூப்பராக வரும். ஆனியன் ரவா! கரைத்த உடனேயே வார்க்க முடியும். இந்தக் காம்பினேஷனும் செய்து பார்த்துவிடுகின்றேன்...

    நம்பள்கி.... ரவா... பாம்பே ரவாதான்...

    பதிலளிநீக்கு
  16. பிடிக்கும் என்றாலும் வீட்டில் செய்வதில்லை. மைதா போடவேண்டும் என்பதால். ஹோட்டலில் சாப்பிட்டதுண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில்.

    கீதா: எனக்கும் மிகவும் பிடித்த தோசை.....வீட்டில் சூப்பராக வரும். ஆனியன் ரவா! கரைத்த உடனேயே வார்க்க முடியும். இந்தக் காம்பினேஷனும் செய்து பார்த்துவிடுகின்றேன்...

    நம்பள்கி.... ரவா... பாம்பே ரவாதான்...

    பதிலளிநீக்கு
  17. //மிளகாய்ப்பொடி தான் திட்டுக் கொள்ள. //

    தம்பி மோகன் ஜி! என்னத்தைத் திட்டுக் கொள்ள? :)))))

    பதிலளிநீக்கு
  18. @துளசிதரன் தில்லையகத்து, மைதா சேர்க்காமலேயே ரவா தோசை வார்க்கலாம். கோதுமை மாவு அல்லது உளுத்தமாவு(மிஷினில் திரித்தது) அல்லது கடலை மாவு சேருங்கள். அல்லது மூன்றையுமே வகைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்குச் சேருங்கள். சுவையான மொறுமொறு ரவாதோசைக்கு நான் உறுதிமொழி கொடுக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  19. ரவா தோசை செய்முறை அருமை. லேட்டா வந்தாலும், ரவா தோசை படம் முறுகலாகத்தான் இருக்கு. தக்காளிச் சட்டினியோ அல்லது, மிளகாய்ப்பொடி + தயிர் சாதம் இல்லாமல், எப்படி ரவா தோசையை வெறும்ன சாப்பிடுவது? ஹோட்டல்ல சாப்பிட்டால், சாம்பாரையும், தேங்காய் சட்னியையும் கலந்து அதில் ரவா தோசையைத் தொட்டு சாப்பிடலாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பிடித்த 'திங்கக்'கிழமையாகி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. ரவா தோசை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு! ஒரு முறை முயற்சித்துப் பார்க்க உங்களின் பதிவு தூண்டுகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  21. ரவா தோசை சாப்பிடுவதில் அலாதி பிரியம்...
    இங்கு அதெல்லாம் செய்து சாப்பிடுவது என்பது கடினமே...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!