சனி, 11 ஜூன், 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்



1)  இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர், இலவச மின்விசிறி, இலவச அலைபேசி... இதெல்லாம் நம் ஊரில்!  ஆனால் இவர்களோ.....!  சபாஷ் மக்களே.
 
 


 
2)  இதற்கு லஞ்சம் கொடுத்தாலும் தப்பில்லை.  ஆனால் மாணவர்கள் இதை வருங்காலத்தில் எல்லாவற்றுக்கும் எதிர்பார்க்காமல் இருக்கவேண்டும்!
 
 


 
3)  சபாஷ் அதிகாரி!  ஆனால், மதுரை மாவட்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர், நேற்று முன்தினம், அலுவலகத்துக்கு மனுக்கள் கொண்டு சென்ற, 50 ஆசிரியர்களுக்கு, உடனடியாக ஆவணங்களை ஆய்வு செய்து தேர்வு நிலை அந்தஸ்து சான்றிதழ் வழங்கி உள்ளார்.
 
 



 
 
 


 
5)   111 சிறார்த் தொழிலாளர்களை மீட்ட இளம் ஜர்னா ஜோஷி.
 
 


 
6)  கடாதர் மண்டல்.  நேர்மைக்கு ஒரு மனிதர்.
 
 



 
7)  ...1933 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஊராட்சி பள்ளிதான், மதுரை மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப்பள்ளி. நகர வாடை வீசாத கிராமப் பகுதி. சுற்றுவட்டாரத்திலுள்ள பதினெட்டுப் பட்டிக்கும் இதாங்க ஒரே பள்ளி. இங்கதான் 2016-2017 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அலைமோதிய கூட்டத்தால் அந்த பகுதியே திணறிப்போனது...  (நன்றி ஆனந்த் விஜயராகவன்)
 
 




 
8)  ஒருவேளை உணவுக்குக் கூட போராடியிருக்கும் நான், இப்போது பல ஏழைக் குழந்தைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி வருகிறேன். தொடர்ந்து, பல பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடனம் ஆடி, மாணவர்களிடையே உற்சாகம், தன்னம்பிக்கையை எற்படுத்த வேண்டும் என்பதே, என் வாழ்நாள் லட்சியம்!  விபத்தில் காலை இழந்தும், தன் விடாமுயற்சி யால் நடனக் கலைஞராக உயர்ந்திருக்கும் கூலித் தொழிலாளி பிரபுதாஸ்.
 
 


 
9) சட்டம் படித்து விட்டு லாரி ஓட்டி மகளை பொறியாளராக ஆளாக்கி இருக்கும் வக்கீலுக்குப் படித்த யோகிதா
 
 



10)  அறிந்து கொள்ளுங்கள் அனில் குமாரை.



13 கருத்துகள்:

  1. சுவிட்சர்லாந்து மக்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்
    நம்மவர்களை நினைத்தால் பெருமூச்சுதான்வருகிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. சுவிட்ஸர்லாந்து மக்களுக்கு நானும் ஒரு சபாஷ் போடுகிறேன்!
    ஆனந்தம் அமைப்பிற்கும் அனிகுமாருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  3. சங்கராபுரம் தலைமையாசிரியரின் செயலுக்கு ஒரு சல்யூட் போடுவோம்
    ஸ்விஸ் மக்கள் பிரமிப்பான மனிதர்களே...

    பதிலளிநீக்கு
  4. அனைத்துமே அருமை. பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை முறை மிகவும் பாராட்டத்தக்கது. யோகிதாவின் மன உறுதிக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. ஒத்தக்கடைப் பள்ளி குறித்து இதுவரை கேட்டதில்லை. மாணவர்களுக்கு ஆயிரம் அளிக்கும் தலைமை ஆசிரியர் சரிதான். ஆனால் அந்தப் பணம் படிப்புக்கே செலவிடப்பட வேண்டும். ஆகையால் மாணவனின் தேவை அறிந்து அதை வாங்கிக் கொடுத்துடலாம்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து செய்திகளும் அருமை.
    ஆனந்தம் அமைப்புக்கும், தன்னம்பிக்கை மிக்க பிரபுதாஸுக்கும் வாழத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான செய்திகள் சிலதை முன்பே அறிந்தேன். பலதை இப்பதிவில் அறிந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் அருமை... பாசிடிவ்காரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

    பதிலளிநீக்கு
  10. "பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்" என
    எங்கள் வலைப்பூவில் (Blog) வரும்
    நல்ல ஆள்களைப் படித்தாவது
    நம்ம ஆளுங்க நல்ல ஆளுங்க ஆகவேண்டும் என வாசகர் படிக்க வேண்டுமெனத் தங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்தேன்.

    சிறார்த் தொழிலாளர்களை மீட்டு அறிவூட்ட வேண்டும். அப்ப தான் நாடு முன்னேறும்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்விஸ் மக்கள் சூப்பர்!

    யோகிதாவும் பிரபுதாசும் பிரமிப்பு! பூங்கொத்துகள்

    தலைமை ஆசிரியர் 1000 ரூபாய் கொடுப்பது சரிதான் ஆனால் பணமாக இல்லாமல் மாணவர்களின் தேவைக்ககான பொருளாகக் கொடுத்தால் நல்லது. நம்மூரில் பணம் என்பது கொஞ்சம் யோசிக்க வைக்கும்.

    சேர்க்கைக்குப் பள்ளி மாணவர்கள் திரள்வது பாராட்ட வேண்டும்.

    அனைத்துச் செய்திகளும் அருமை..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!