வியாழன், 16 ஜூன், 2016

படைப்பாற்றல் மிக்கவரா நீங்கள்?


படைப்பாற்றல் உள்ளவர்கள், சிறு துரும்பையும் பயன்படுத்திக்கொள்ள புது யோசனைகளைக் கூற வல்லவர்கள். 

எங்கள் கைவசம், சிறு துரும்பு எதுவும் (படம் எடுத்துப் போடும் அளவுக்கு) இப்போது இல்லை. 

ஆனால் வகைவகையாக, ஐநூற்றுக்கும் மேற்பட்ட சிறு பொருட்கள் உள்ளன. 
இதோ, அவற்றில் ஒன்று. 
     
  
இது ஒரு எலெக்ட்ரானிக் (கைக்) கடிகாரம். (மாதவன் வந்து மொக்கைக் கருத்துரை இடக்கூடாது என்று ரொம்ப யோசித்து பதிவு இடுகிறேன்.பார்ப்போம்.) 

இதற்கு சரியான பட்டன் செல் இப்போ மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. 
இதனுடைய பக்கவாட்டுத் திருகை உபயோகித்து, முட்களை நமக்குத் தேவைப்பட்ட நேரத்தைக் காட்டும் வகையில் சுலபமாக அமைக்கலாம். 

படைப்பாற்றல் உள்ள நம் வாசகர்கள், இந்தக் கடிகாரத்தை, எந்தெந்த வகைகளில் உபயோகிக்கலாம் என்று கருத்துரை இடலாம். 

இந்த கடிகாரத்தின் எடை இருபது கிராம் என்று வைத்துக்கொள்ளலாம். 

மேற்கொண்டு தகவல்கள் வேண்டும் என்றால் கொடுக்கப்படும். 

பின்குறிப்பு: நேரம் காட்டுதல் தவிர வேறு கோணங்களிலும் யோசித்துப் பார்க்கலாம். 

நல்ல யோசனை , நகைச்சுவையான யோசனை, அசத்தும் யோசனை எல்லாம் அள்ளி வீசுங்க. 

பரிசு கொடுத்தாலும் கொடுப்போம்! 
     


33 கருத்துகள்:

  1. இதை மேஜை கடிகாரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பின் பக்க மூடியில் ஒரு சிறு துளை போட்டு அதன் வழியாக ஒயர்கள் கொண்டுபோய் பாட்டரி போடும் இடத்தில் + - பார்த்து கனெக்ஷன் கொடுக்கவேண்டும். அநேகமாக கடிகார பேட்டரிகள் 1.5 வோல்ட் ஆக இருக்கும். அந்த வயர்களை வெளியில் ஒரு டார்ச் செல் பாட்டரியுடன் இணைத்து விட்டால் கடிகாரம் பிரமாதமாக ஓடும். அதே பேட்டரி சின்ன சைசில் வைத்துக்கொண்டால் (AAA size) இந்தக் கடிகாரத்தை கையிலும் கட்டிக்கொண்டு போகலாம். பட்டன் செல் பாட்டரியுடனும் கனெக்ஷன் கொடுக்கலாம். அப்படிக்கொடுத்து விட்டு அந்த பட்டன் செல்லை கடிகாரத்தின் பின்னே செல்லோ டேப் உதவியிடன் சேர்த்து வைத்துக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. இப்போதைக்கு இதை வைத்துக்கொண்டு 24 படத்தைவிட ரொம்ப அருமையான ஒரு டைம் ட்ராவல் கதை எழுதலாமென்று தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  3. பரிசு கொடுத்தாலும்....... கொடும்போம் ? சொக்கா அந்த பரிசு எனக்கு இல்லை

    பதிலளிநீக்கு
  4. யோசிப்பதா...???? என் பரம்பரையிலே கிடையாதே..ஹி...ஹி....

    பதிலளிநீக்கு
  5. ஆ...யோசிக்கவா..... இது எனக்கு டேஞ்சராச்சே....!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. மாதவன் வந்து மொக்கைக் கருத்துரை இடக்கூடாது //

    மாதவன் தான் அதைச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது.

    கடிகாரம் 20 கிராம் என்று தெரிகிறது.
    திடப்பொருள் ஒன்றினை உடைத்து பொடியாக்கினால் அதே எடை தானா?

    உதாரணமாக , நாம் 5 சப்பாத்தி சாப்பிடுகிறோம். சப்பாத்தி எடை 121 கிராம்.

    சாப்பிடுவதற்கு முன் உங்கள் எடை 101.5 கிலோ என்றால்,
    சாப்பிட்ட பின் உங்கள் எடை 101.101.621 ஆக இருக்குமா?

    கடிகாரத்தை உடைத்து பொடியாக்கி அதே எடை தானா என்று பார்க்கலாம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  7. தற்போது ஒன்றும் தோன்றவில்லை! மீண்டும் வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  8. ஓடாமல் நின்றபடி சிரிக்கும் இந்த கைக்கடிகாரம் காணும்போது என் ஞாபக கடிகாரத்தின் முட்கள் திருகாணி சுழற்றாமலேயே பின்னோக்கி ஓடுகின்றது. 1980 களில் கொசுவர்த்தி என்றால் டார்ட்டாய்ஸ், பாத்திரம் கழுவும் பவுடர் என்றால்A-ONE, கார் என்றால் அம்பாசிடர் என்பது போல கைகடிகாரம் என்றால் அது HMT மட்டும்தான். நேரம் காட்டிய அந்த கைக்கடிகாரத்தின் அந்திம நேரம் வந்துவிட்டதால் அதன் கடைசி உற்பத்தி தொழிற்சாலையும் இழுத்து பூட்டியாகிவிட்டது. அவசர உலகத்தில் நாமும் கைகடிகார இயந்திரமாய் மாறி ஓடிகொண்டே இருக்கிறோம் கடைசியில் நாமும் திருகாணி சுழற்ற மறந்து ஸ்தம்பிக்க போகும் கடிகாரமாய் மாறுவோம் என்பதை மறந்து.

    பதிலளிநீக்கு
  9. வாட்ச் நல்லபடியா ஓடிக்கொண்டு இருக்குமானால் கையில் கட்டிக்கொண்டு. 50 வருஷத்து வாட்சுன்னு பெருமையா சொல்லிக்கலாம். பழுதாகி போனா பின்னாடி இருக்கும் மூடியை கழட்டி இயந்திர பாகங்களை எடுத்துவிட்டு நமக்கு பிடித்தமானவர்களின் சிறிய அளவு புகைப் படம் ஏதாவது உள்ளே வைத்துக் பொருத்தி கொண்டு கையில் கட்டிக் கொள்ளலாம். நிறைய கடிகாரங்கள் (எடைக் குறைந்த) இருந்தால் மாலையாக கோர்த்து பெண்கள் அணிந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  10. சில சில நல்ல ஐடியாக்கள் வந்துள்ளன. ஒருவரே எவ்வளவு ஐடியாக்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். கடிகார ஓட்டப் பாதையில் மட்டும் சிந்திக்காமல், லேடரல் திங்கிங், அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங் எல்லாம் பண்ணுங்க ...

    பதிலளிநீக்கு
  11. //‘தளிர்’ சுரேஷ் said...
    தற்போது ஒன்றும் தோன்றவில்லை! மீண்டும் வருகிறேன்!//
    அவசியம் வாங்க!

    பதிலளிநீக்கு
  12. Ok.. I understand the seriousness of this post. So No mokkai for this. Infact, I am commenting after a long time, in blogspot. Thanks for pulling me to engalblog comment section.

    பதிலளிநீக்கு
  13. Take the earliest possible photo(hard copy, small sized, but clearly visible image) of your son/daughter or grand(son/daughter) or of yourself/spouse/parent. Open the dial glass properly (make sure you do not break it). Keep the clock hands such that it represents the Time of birth of the person in the photo said above. Now, paste the photo, size is such that it covers only the white portion of the dial (& does not eclipse the numbers) such that now it shows the time of birth of the photo kid/boy/girl/man/woman. At some other clear white background, one may write the Date of birth of the person. Re-fix the dial glass back. Keep it in showcase.. of you may gift to the person too.

    பதிலளிநீக்கு
  14. 1. "ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரம் காட்டும்" என்ற பொன்மொழியை விளக்கப் பயன்படுத்தலாம்.

    2. இந்தக் கடிகாரத்தில் 12 என்ற எண் மட்டும் சிவப்பாக இருக்கிறது. அதனால், கருப்பு, சிவப்பு நிறத்தைக் குழந்தைகளுக்கு வேறுபடுத்திக் காட்ட இந்தக் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

    3. "அண்ணன் தம்பி ரெண்டுபேர் அவங்களைச் சுத்திப் பன்னிரண்டு பேர்" என்ற விடுகதைக்கு விடை இதுதான். அது எப்படி என்று சுட்டிக் காட்டலாம்

    4. பேருதான் கடிகாரம் ஆனா, காரமாலாம் இருக்காது என்று விளக்கிக் காட்ட இதை வாயில் வைத்துக் கடிக்க வைக்கலாம்

    5.

    பதிலளிநீக்கு
  15. அந்த வாட்சில் பெரிய சின்ன முள்ளுங்களை கழட்டிட்டு டயல் அளவுக்கு விண்டாஜ் ஸ்டைலில் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஓட்டுங்க ..அந்த படம் திருமணப்படம் orசமீபத்தில் உங்க வீட்டு பாஸுடன் எடுத்ததாக இருந்தா ஜூப்பர் ..வீட்டு பாஸ் மெரூன் /பச்சை /ப்ளூ போன்ற நிறத்தில் பட்டுப்புடவை கட்டினா போட்டோ அழகா பளிச்சுனு இருக்கும்

    பதிலளிநீக்கு
  16. அந்த ஸ்ட்ராப்ஸ் ரெண்டுபக்கமும் கழட்டிட்டு வாட்ச் டயல் பகுதியில் எண்களை மறைத்து சாமி படம் அல்லது குட்டியா வட்ட அளவுக்கு எழுதின ஸ்லோகம் ஒட்டி விடுங்க வாட்சின் பின்பகுதியில் சிறு துண்டு magnet ஒட்டிட்டா போதும் attractive ப்ரிட்ஜ் magnet ரெடி

    பதிலளிநீக்கு
  17. அட லஞ்ச் டைம் ஆயிடுச்சு.... நான் சாப்பிட்டு வந்துடறேன். அப்புறம் தெம்பா கமெண்ட் போடலாம்! :)

    பதிலளிநீக்கு
  18. அப்புறம் கலக்கியவர்கள், Madhavan, பெசொவி , Angelin.

    பதிலளிநீக்கு
  19. வெங்கட் நாகராஜ்!
    இன்னமுமா லஞ்ச் சாப்பிட்டு முடிக்கலை!

    பதிலளிநீக்கு
  20. லாக்கெட்டா இதை யூஸ் பண்ணி கழுத்து செயின்ல போட்டுக்கலாம்ணே. எல்லார் கண்ணையும் இழுத்துரும்லா...

    பதிலளிநீக்கு
  21. இன்னொரு ஐடியா ..முந்தி சொன்ன மாதிரி சாமி படம் அல்லது விருப்ப படம் ஒட்டவும் ..இந்த வாட்ச்சின் இரண்டு ஸ்டராப்ஸையும் ரிமூவ் பண்ணிட்டு ,ரெண்டுபக்க கம்பிகளை கலர் டிவைன் அல்லது மெல்லிய சணலால் சுற்றி கம்பிகளை மறைத்துவிட்டு .,இன்னொரு சற்று நீண்ட துண்டு சணல் அல்லது வேறு கயிற்றால் அந்த கீ கொடுக்கும் பட்டனை சுற்றி கட்டி காரின் முன் பக்கம் கண்ணாடி அருகில் தொங்க விடலாம், அல்லது வீட்டில் நீண்ட கயிறால் கட்டி ஆணியில் மாட்டி வைக்கலாம் உள்ளே படத்துக்கு பதில் night glow stickers கலர் ஷீட் வாங்கி ஓம் என்ற ஷேப்புக்கு வெட்டி ஓட்டிடுங்க ..நைட் இருட்டிலும் ஓம் ஒளிரும் ..ஓம் க்கு பதில் ஸ்மைலி மாதிரி வரைஞ்சும் வட்டமா ஒட்டலாம்

    பதிலளிநீக்கு
  22. இந்த வாட்ச்சை girls ஹாண்ட் பாக் charms மாதிரி மாற்றலாம் ..பெரிய சின்ன முள்ளுங்களை எடுத்துட்டு அதில் கலர் மணிகளை போட்டுடுங்க(முத்து வைரம் பவளம் கூட அக்ஸப்ட்டட் ) இல்லைன்னா ஏதாவது love ,happy ,God ,trust போன்ற வார்த்தைகளை பெயிண்டால் எழுதுங்க பிறகு ஒரு ஸ்ட்ராப் கம்பியில் கலர் ரிப்பன் கட்டிவிடுங்க அடுத்த கம்பியில் சிறு வளையம் கீசெயின் வளையம் மாட்டி விடணும் அவ்ளோதான் charm தயார் :)

    பதிலளிநீக்கு
  23. நேரம் பொன்னானது - அதை
    வீணாக்காதே என்கிறது
    மணிக்கூடு!

    இதோ மின்நூல் களஞ்சியம்
    http://ypvn.myartsonline.com/

    பதிலளிநீக்கு
  24. // இன்னமுமா லஞ்ச் சாப்பிட்டு முடிக்கலை! //

    இன்னமுமா, பதில்கள் வரல... (ரிஜல்ட் வரல) ?

    பதிலளிநீக்கு
  25. கருத்துரை கூறிய அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
    பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்க எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழு விரைவில் கூடி முடிவெடுக்கும்.

    பதிலளிநீக்கு
  26. எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் ஒன்று கூடி,
    ஏகமனதாக கொடுத்த தீர்ப்பு.
    பரிசுக்குரியவர் :
    ஏஞ்சலின். (Angelin)
    வாழ்த்துகள் ஏஞ்சலின் .
    ஏஞ்சலின் அவர்கள், பரிசு அனுப்பப்பட வேண்டிய முகவரியை,
    kggouthaman@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி
    கேட்டுக் கொள்கின்றோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு


  27. உண்மையில் எதிர்பார்க்கவில்லை :) இனிய அதிர்ச்சி மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  28. இந்த பதிவை நான் பார்க்கவே இல்லையே!
    ஏஞ்சலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. ஆஹா! சொக்கா பரிசு போச்சே! இதுக்குத்தான் தாமதமா வரக் கூடாது. எனிவே என்னைப் போலவே (?????!!!!!!) யோசிக்கும் எனது தோழி ஏஞ்சலினுக்குப் பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  30. ஆஹா! சொக்கா பரிசு போச்சே! இதுக்குத்தான் தாமதமா வரக் கூடாது. எனிவே என்னைப் போலவே (?????!!!!!!) யோசிக்கும் எனது தோழி ஏஞ்சலினுக்குப் பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஹா ஆஹா :) Geethaa உங்களை மாதிரி ஜாம்பவான்ஸ் கண்ணில் இந்த போஸ்ட் படாததால்தான் எனக்கு பரிசு கிடைச்சது :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!