புதன், 3 ஆகஸ்ட், 2016

புதிர் 160803 :: யார்? யார்? எது?


ஒன்று : 

இங்கே ஒளிந்திருக்கும்  வலைப் பதிவரைக்  கண்டு பிடியுங்கள்! 




இரண்டு : 

திரைப்படங்களில்,  இதுவரையிலும், ஆண் வேடத்தில்  நடிக்காத  நடிகை யார்?  

மூன்று :  

அடுத்து வரவேண்டியது  எது? ஏன்? 

a) ABDOMEN

b) BERLIN

c) COLON

------------

எல்லோரும் சமர்த்தா பதில்கள் பதிவு செய்யுங்கள். 
இரண்டாவது, மூன்றாவது  கேள்விகளுக்கு பல  சரியான  பதில்கள்  இருக்கலாம்.  

உபரி கேள்வி :  இது  என்ன? 
முயற்சி "பாலகுமாரன் புதினம்"  இகழ்ச்சி "சென்னை இருபது". 
               

22 கருத்துகள்:

  1. 1. Keyதா சாம்பசிவம்
    3. Doha (4 letter capital of country)(first lr sequence A,B,C ... D)(Alternate between parts of body and capital of country)(number of letters in decreasing sequence).

    பதிலளிநீக்கு
  2. தெரிஞ்சத மொதல்ல சொல்லிடறேன். பொறவு மத்தத யோசிக்கலாம் என்ன..?
    1) கீதா சாம்பசிவம் 2) நயன்தாரா உபரி: உடையார் அடையார்.

    பதிலளிநீக்கு
  3. மூணாவது கேள்வி மட்டும் ட்ரை பண்றேன். நீங்கள் கூறுவது போல ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களும் இருக்கலாம். என் லாஜிக் இது:
    a) ABDOMEN - 7 எழுத்து - உடலுறுப்பு - A

    b) BERLIN - 6 எழுத்து - நகரத்தின் பெயர் - B

    c) COLON - 5 எழுத்து - உடலுறுப்பு - C

    ஆக, நான்காவது ஒரு நகரத்தின் பெயராக இருக்கக்கூடும், இப்போது ஐந்தெழுத்து குறுகி, நான்கெழுத்தாக இருக்கலாம். நான்கெழுத்து நகரம் Dல் தொடங்கலாம். DEVA என்று ஒரு நகரம் ROMANIA வில் இருப்பதாக Rஅறிகிறேன், DIOS கினியாவில் இருக்கிறதாம். கூகிள் சொல்லிற்று.

    பதிலளிநீக்கு
  4. வாவ். எல்லாரும் சொல்லிவிட்டார்கள். முதல் கேள்விக்கு. மிக சந்தோஷம்.

    Abdomen,
    Berlin,
    Colon,
    Davos ..City in Switzerland. a resort.

    பதிலளிநீக்கு
  5. 1. கீதாசாம்பசிவம்....

    2. நிறைய பேர் இருக்காங்களே யாரைச்சொல்ல...

    3.Dili, Doha,

    உபரி கேள்வி: முயற்சி உடையார் (பாலகுமாரனின் நாவல்) இகழ்ச்சி அடையார் (இது சென்னை 20 )

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மூணாவது கேள்விக்குப் பதில் எனக்குத் தெரியலை, ஆனால் முதல் கேள்வியைப் புரிஞ்சுண்டு பதில் கொடுக்கிறதுக்குள்ளே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லோரும் சொல்லியாச்சு! கொடுமை! உடையார், அடையார் என்பதாகத் தான் இருக்கணும்னு நினைக்கிறேன். தில்லையகத்து கீதா சொல்வது சரியான பதில்னு நினைக்கிறேன். அடுத்து ஆண்வேடம் போடாத நடிகை, சினிமா எப்போவோப் பார்த்தா என்ன புரியும்? :)

    பதிலளிநீக்கு
  7. கடந்த எல்லாப் புதிர்ப் பதிவுகளையும் படித்தவர்கள், மூன்றாவது (வில்லங்கக்) கேள்விக்கு பதில் தேடும்பொழுது, D க்கு முன்னாடி E வரும் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஹூம்! நான் என்னத்தச் சொல்ல!

    பதிலளிநீக்கு
  8. முந்தின நாள் என்னா சப்பிட்டேன்னு தெரியவில்லை இதில் ஆமபளை வேசம் போடாத பொம்பளை யாருன்னு கேட்டா நா..எப்படி சொல்வேன்

    பதிலளிநீக்கு
  9. முந்தின நாள் என்னா சப்பிட்டேன்னு தெரியவில்லை இதில் ஆமபளை வேசம் போடாத பொம்பளை யாருன்னு கேட்டா நா..எப்படி சொல்வேன்

    பதிலளிநீக்கு
  10. EDEN? D க்கு முன்னாடி E வரும்னா இதான் இங்கே வரணுமோ? :)

    பதிலளிநீக்கு
  11. இந்த முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் மாதிரியான புதிரெல்லாம் எல்லோருக்கும் ஜுஜுபி! :)

    பதிலளிநீக்கு
  12. 1. கீதா சாம்பசிவம்
    2. திரிஷா இல்லைன்னா நயன்தாரா
    3. EYE / EAR - அனன்யா மஹாதேவன் லாஜிக்கும் "Eக்கு முன்னாடி D" என்ற லாஜிக்கும் கலந்த பதில்
    உபரி கேள்விக்கு இன்னும் சில வேண்டுகிறோம்

    பதிலளிநீக்கு
  13. 1. கீதா சாம்பசிவம்
    2. திரிஷா இல்லைன்னா நயன்தாரா
    3. EYE / EAR - அனன்யா மஹாதேவன் லாஜிக்கும் "Eக்கு முன்னாடி D" என்ற லாஜிக்கும் கலந்த பதில்
    உபரி கேள்விக்கு இன்னும் சில CLUE வழங்குமாறு வேண்டுகிறோம்

    பதிலளிநீக்கு
  14. உபரி கேள்விக்கு பதிலே ரொம்பப் பேருங்க சரியா சொல்லியாச்சு. இப்போ க்ளூ கொடுத்து நான் செத்த பாம்பை அடிக்கவேண்டுமா மாடிப்படி மாது!

    பதிலளிநீக்கு
  15. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை

    பதிலளிநீக்கு
  16. I am sorry to say that 'புதிர்' section goes unworthy these days.

    1st one is reasonable, But...
    Same old 'E' before 'D' and
    who cares abt. "திரைப்படங்களில், இதுவரையிலும், ஆண் வேடத்தில் நடிக்காத நடிகை யார்? ". Certainly not me.

    பதிலளிநீக்கு
  17. முதல் கேள்வி பயங்கர் கஷ்டம் ஹிஹிஹிதாதாதா (எனது பதிவில் வரும் நாயகன்)

    பதிலளிநீக்கு
  18. முதல் கேள்விக்கு ஏற்கெனவே பதில் வந்துவிட்டது கீதா சாம்பசிவம்
    இரண்டாம் கேள்விக்குப் பதில் நிறைய சொல்லலாம்: சமீபத்திய ஹீரோயின்கள் எல்லோருமே like ஸ்ரீதிவ்யா, அனன்யா, த்ரிஷா....
    மூன்றாம் கேள்விக்கு என்னுடைய பதில் : Dawn (Starts with D, Ends with N and four letters)
    உபரி கேள்விக்குப் பதில், உடையார், அடையார்!

    பதிலளிநீக்கு
  19. நான் ஊர் சுற்றி விட்டு வந்து புதிரை பார்ப்பதற்குள் பலர் விடை அளித்து விட்டார்கள். நானும் செத்த பாம்பை அடிக்க விரும்பவில்லை. அடுத்த வாரம் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  20. சூப்பராய் புதிர் போடுகின்றீர்கள்! வாழ்த்துக்கள்! ஹிஹி! நான் பதில்களை படிச்சுட்டு இந்த பக்கம் வந்தேன்!

    பதிலளிநீக்கு
  21. பதில்களையும் கேள்விகளையும் ஒரு சேர பார்த்தாச்சு... ஹி..ஹி...
    ரெண்டு மூணு பதிவுக்கு வராம வந்தால் இப்படித்தான்... அருமை....
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!