திங்கள், 22 ஆகஸ்ட், 2016

திங்கக்கிழமை 160822 : நவதானிய முறுக்கு


          
          ஒரு செமி ஆரோக்கிய ஸ்நாக்ஸ் குறிப்பு!

          கஞ்சி போட எடுப்போமே அந்த நவதானிய சத்துமாவு ஒரு கப் (ஏலக்காய் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்), ஒரு கப் அரிசி மாவு, கால் கப் பொட்டுக்கடலை மாவு எடுத்துக் கொள்ளுங்கள்.  இதில் சேர்க்கும் எள், சீரகம், மிளகு ஆகியவை உங்கள் விருப்பது தேர்வில்.  நவதானிய வாசனை போகவேண்டுமே....  
 
 
 


          தேவையான அளவு உப்பு, பெருங்காயம், காரப்பொடியையும் சேர்ந்து பிசைந்து கொள்ளவும்.  மாவு பிசையும்போது வெண்ணெய் இருந்தால் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.  இல்லையென்றால் ஒரு கரண்டி எண்ணெய் காய்ச்சி ஊற்றி மாவுடன் கலந்து பிசைந்து எடுத்துக் கொண்டு, முறுக்கு அச்சில் போட்டு, கடாயில் எண்ணெய்
ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் (இந்த விவரங்கள் எல்லாம் அனாவசியம் இல்லை?!!) அதில் பிழிந்து எடுத்து விடலாம்.
 
 
 

          சுவையான நவதானிய முறுக்கு தயார்.

41 கருத்துகள்:

  1. பார்க்க நல்லா இருக்கு.. சாப்பிட்டு பார்க்க ஆசை... கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  2. இதுக்குள்ளே க்ராண்ட் ஸ்வீட்ஸ், க்ருஷ்ணாவில் எல்லாம் விற்க ஆரம்பிச்சுருக்கமாட்டாங்க? பார்க்கலாம். வரும் பயணத்தில் கிடைக்குமான்னு.........

    பதிலளிநீக்கு
  3. நீங்க கடாயில் எண்ணெய் ஊற்றிப் பிழிந்தெடுக்க வேண்டியதுதான்னு எழுதிப்பாருங்க, எண்ணெய் சூடாக வேண்டாமான்னு எத்தனை பின்னூட்டம் வரும். இந்த வார இறுதியில் எத்தனை தானியம் கிடைக்கிறதோ அதை வைத்துச் செய்துபார்த்துவிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  4. நவதானிய முறுக்கு ! ஆரோக்கிய முறுக்கு அறிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  5. எண்ணெய் பதார்த்தம் என்பதாலா ,இது செமி ஆரோக்கிய ஸ்நாக்ஸ:)

    பதிலளிநீக்கு
  6. இப்படியும் ஒரு முறுக்கு உள்ளதா? ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
  7. நான் வெளியூர் போவதால் இப்போதுதான் நான்கு கிலோ வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளேன். ஜினிவா போய் செய்து பார்க்கச் சொல்கிறேன். தேன்குழல் சிவந்துபோன மாதிரி கலர். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. நவதானிய உணவென்றாலே
    நீரிழிவுக்காரரின் மருந்து.
    அப்படியிருக்க
    நவதானிய முறுக்கு என்றால்
    நீரிழிவுக்காரர் நம்பி உண்ணலாம்!

    அருமையான பதிவு
    தொடருங்கள்
    தொடருவோம்

    பதிலளிநீக்கு
  9. செய்து பார்க்கவேண்டும் ரிப்பன் பகோடாவாகவும் செய்யலாம்தானே

    பதிலளிநீக்கு
  10. எனக்கு ஆசைதான்!யாராவது செய்து கொடுத்தா சரி!

    பதிலளிநீக்கு
  11. நவ தானிய முருக்கை நண்பர் வீட்டில் சாப்பிட்டு பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  12. நவ தானிய முருக்கை நண்பர் வீட்டில் சாப்பிட்டு பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    ஐயா
    செய்முறைப்படி செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. சத்து மாவு எனில் எளிதாகக்
    கிடைக்கக் கூடியதே
    செய்து பார்த்துவிட வேண்டியதுதான்
    பகிர்வுக்கு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி துளசி மேடம்.. இது ரொம்ப சுலபம் ஆச்சே... வீட்டிலேயே செய்து விடலாமே... !

    பதிலளிநீக்கு
  18. வாங்க நெல்லைத்தமிழன். நான் இப்படி எல்லாம் எழுதிப் பழக்கப்படுத்தவில்லை! அதனால் இங்கு அப்படிச் சொல்ல மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

    :)))

    பதிலளிநீக்கு
  19. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க பகவான்ஜி... சரியாகச் சொன்னீங்க.. அதனால்தான் அப்படிச் சொன்னேன்!

    பதிலளிநீக்கு
  21. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. இதில் எப்படி வேண்டுமானாலும் விதம் விதமாகச் செய்யலாமே!

    பதிலளிநீக்கு
  22. நன்றி காமாட்சி அம்மா.. நீங்கள் ஏற்கெனவே இப்படிச் செய்பவரா.. ஸூப்பர்!

    பதிலளிநீக்கு
  23. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஜி எம் பி ஸார். நமது கற்பனைதானே? எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்!

    பதிலளிநீக்கு
  25. நன்றி புலவர் ஐயா.. அருகில் இருந்தால் தந்து விடலாம்!

    பதிலளிநீக்கு
  26. அருமையான குறிப்பு! அவசியம் செய்து பார்த்து விடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  27. போன வருஷம் தீபாவளிக்கு வரகு அரிசித் தேன் குழல் தான். தேன் குழலைக்கூட முறுக்குனு சொல்றாங்க பெரும்பாலும். எங்களைப் பொறுத்தவரை முறுக்கு என்றால் கை முறுக்குத் தான்! :) இது தேன் குழல், முள்ளாக உள்ள அச்சில் போட்டால் முள்ளுத் தேன்குழல் என்போம். :)

    பதிலளிநீக்கு
  28. துளசி கோபால், ஏற்கெனவே மயிலையில் ஓர் கடையில் இதெல்லாம் கிடைக்கிறது. கேழ்வரகு, தினை, வெந்தயம், குதிரைவாலி போன்றவற்றில் பலகாரங்கள் செய்து விற்கின்றனர். தம்பி வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். வரகில் தேன்குழல் போன வருஷம் நானே செய்திருக்கேன். மயிலையில் எங்கேனு தம்பியிடம் கேட்டுச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. http://sivamgss.blogspot.in/2015/11/blog-post_8.html

    வரகு அரிசித் தேன்குழல் படங்களுடன் பதிவு.

    பதிலளிநீக்கு
  30. மழை தூரல்...போட்டுது...பதிவை பார்க்க சாப்பிட ஆசை வந்து விட்டது...கொஞ்சம் அனுப்புங்க பாஸ்.....:)

    பதிலளிநீக்கு
  31. மழை தூரல் போடுது....தவறுதலாக முதலில் வந்து விட்டது

    பதிலளிநீக்கு
  32. அருமையான ஆரோக்கிய பதார்த்தம். பகிர்ந்தமைக்கு நன்றி!
    த ம 10

    பதிலளிநீக்கு
  33. அருமையான எளிமையான செய்முறை.
    ஏலக்காய், பாதாம், முந்திரி என்று இப்போது சத்து மாவில் சேர்க்கிறோம். அது இல்லாமல் பார்த்துக் கொள்ள சொன்ன குறிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. இந்த மாவை நான் ஏலக்காய் போடாமல் திரித்து வைப்பதுண்டு. கஞ்சி செய்யும் போது,பாலில் கலந்தால் ஏலக்காய் பொடி போட்டுக் கொள்வதுண்டு. மோரில் கலந்தால் உப்பு. அது போல இந்த மாவில் இதுபோன்று தேன் குழல், தட்டையும் செய்ததுண்டு. கொழுக்கட்டை....இப்படி..நல்ல ரெசிப்பி. இந்தக் குறிப்பையும் பார்த்துக் கொண்டேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  35. சத்தான முறுக்கை முத்தாக செய்ய சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  36. இன்றைக்கு ஜெயா டீவியில் சிவப்பு அவல் முறுக்கு செய்து காண்பித்தார் ஆரோக்கிய சமையல் செய்யும் பெண்மணி. இந்தக் கலரில் தான் அந்த முறுக்கும் இருந்தது.
    எனக்கென்னவோ இப்படி பரீட்சை செய்வது பிடிப்பதில்லை. வழக்கமான முறுக்கு,மனோப்பு இவைதான் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!