புதன், 10 ஆகஸ்ட், 2016

வாசகர் விமர்சனம் - விசிறி வாழை - சாவி பிறந்தநாள் சிறப்புப் பதிவு (சாவி நூற்றாண்டு )



          எம் எஸ் விஸ்வநாதன்.

          உலகம் அறிந்த இந்தப் பெயர்தான் எழுத்தாளர் உலகம் அறிந்த சாவியின் பெயரும்.  மாம்பாக்கம் சாமா (சாஸ்திரிகள்) விஸ்வநாதன்.  


சுருக்கமாக சாவி.

          அன்றைய, இன்றைய பல எழுத்தாளர்களுக்கு குரு, வழிகாட்டி, ஆதர்சம் எழுத்தாளர் சாவி அவர்கள்.  அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வருடம் இது.  அதை ஒட்டிய சிறப்புப் பதிவு.  இன்று ஆகஸ்ட் பத்தாம் தேதி சாவி அவர்களின் பிறந்தநாள்.

                  Image result for writer சாவி images   Image result for writer சாவி images     Image result for writer சாவி images

          எழுத்தாளர் சுஜாதா, மாலன், புஷ்பா தங்கதுரை, பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு என்று ஒரு பிரபல எழுத்தாளர் வரிசையையே உருவாக்கியவர் சாவி அவர்கள்.



                              Image result for writer சாவி images      Image result for writer சாவி images     Image result for pushpa thangadurai images


          அவர் எழுதிய வாஷிங்டனில் திருமணம் கதையைப் படிக்காதோர் மிகக் குறைவான பேர்களே இருப்பார்கள்.  இன்னமும் படிக்காதவர்கள் யாராவது இருந்தால் அதையும், விசிறி வாழையையும் தயவு செய்து வாசித்து விடுங்கள்!  தவற விடக் கூடாத பொக்கிஷங்கள்.

          விசிறிவாழை படிக்க வேண்டுமா...  இங்கு 'க்ளிக்'குங்கள்.

          வாஷிங்டனில் திருமணம் படிக்க வேண்டுமா...  இங்கு 'க்ளிக்'குங்கள்!





          7-8-2016 தேதியிட்டு தினமணியுடன் இணைப்பு கதிர் இதழ் ஒரு பொக்கிஷமாக வெளியாகியுள்ளது.  சாவி பற்றி, அவருடன் இணைந்திருந்தவர்கள் சொல்லிப் பகிர்ந்திருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்.  படிக்க இங்கு க்ளிக்குங்கள்.



 மேலே படத்தில் சி ஆர் கண்ணன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்தான் அபர்ணா நாயுடு என்கிற பெயரில் எழுதியவர்.

          "அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு "ஆஹோ ஓஹோ' என்று அவரால் பிரபலமாக்கப்பட்ட ஒருவர் அவரை விட்டு அகன்றபோது "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்"  என்கிறார் தினமணி எடிட்டர் திரு வைத்தியநாதன்.  அது யாராய் இருக்கும் என்கிற ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  ஒரு யூகம் இருக்கிறது.





          "........சாவி சார் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். முதலில் பேச வந்தபோதே, அவருக்கு முடியவில்லை. ""உட்காருங்கள்'' என்று சொல்லி, தண்ணீரும் மாத்திரையும் தந்தேன். பிடிவாதமாய் மீண்டும் பேச வந்தார். உணர்ச்சிப்பிழம்பாய், ""துரியோதனன் கர்ணனுக்கு நட்பின் பரிசாக அங்கதேசத்தைத் தந்தான் என் நண்பர் எனக்கு குங்கும தேசம் தந்தார்'' என்றவர், மயங்கி என்மேல் சாய்ந்தார். முதல்வரின் காரில், ஏழே நிமிஷத்தில் அப்போலோ கொண்டு சென்றும், ராஜவைத்தியம் செய்தும், கோமாவிலிருந்து மீளாமலேயே நம்மைவிட்டுப் பிரிந்தார்......" என்கிறார் சிவசங்கரி.


          தனது குரு சாவி அவர்கள் பற்றி திரு ரவி பிரகாஷ் எழுதும் தொடர்களை படிக்க இந்த உங்கள் ரசிகன் தளத்துக்குச் செல்லுங்கள்!


           தன் தந்தை சாவியைப் பற்றிச் சொல்லும்போது அவர் மகள்  "எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், அதை நேர்த்தியாக, அழகாக, பட்டு கத்தரித்தாற்போல் செய்ய வேண்டும் என்று விரும்புவார். பத்திரிகையில் "லே-அவுட்'டும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏன், பஜ்ஜி போட்டால்கூட அதற்கு வால் வராமல் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்பாவைச் சாப்பிடக் கூப்பிடவே எங்களுக்கு கொஞ்சம் நடுக்கம்தான்..."  என்கிறார்


          வாஷிங்டனில் திருமணம் கதை பிறந்த கதை பற்றி சமீபத்து விகடனில் போட்டிருந்தார்கள்.  அது கீழே..




     அதேபோல் விசிறிவாழை பிறந்த கதையும்...


 

          விசிறி வாழை படித்து கொள்ளை காலம் (மதுரை பாஷை!) ஆகிவிட்டது!!  சற்றே கதையோட்டம் மறந்தும் போய்விட்டது.  மேலே இருக்கும் அட்டைப் பெட்டிகளில் அது எங்கிருக்கிறது என்று ஒருநாள் தேடி எடுத்துப் படிக்க வேண்டும்.  

          ஒரு தொடர்கதை முடிந்தவுடன் ஓரிரு வாரங்கள் கழித்து அதற்கான வாசகர் கடிதங்கள் வெளியிடப்படும்.  சில தொடர்கதைகள்  'அப்பாடா, இப்போதாவது முடிந்ததே..'  என்று நினைக்காத தோன்றும்.  சில தொடர்கள் 'முடிந்து விட்டதே' என்று வருந்த வைத்து எண்ணி, எண்ணி அசைபோட வைக்கும்.  விசிறிவாழை இரண்டாவது ரகம்.  அதற்கான வாசகர் கடிதங்களை வாசிக்கும்போது கதை லேசுபாசாக நினைவுக்கு வருகிறது இல்லையா?  பாலகணேஷ், வல்லிம்மா, கீதா சாம்பசிவம் போன்றவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருப்பார்கள்!




பாத்திரங்களின் குணச்சித்திர படைப்பும், உயர்ந்த தத்துவங்களும், உன்னத லட்சியங்களும் இடையே இழையோடிய நகைச்சுவையும் ஆசிரியருக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்து விட்டன.  இறுதியில் பார்வதி கல்லூரிக்குச் செல்லும் கட்டம் இதயத்தைக் கலக்கி விட்டது.
சென்னை -8                                                                  ஆர். வேங்கடசுப்ரமணியம்.
'விசிறி வாழை' உள்ளத்தை உருக்கும் ஒரு அற்புதப் படைப்பு.  கடைசி இதழைப் படிக்கும்போது துக்கம் நெஞ்சைப் பிளந்தது.
செங்கல்பட்டு                                                                 வெ. தியாகராஜன்.
"பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது.  அதற்காக நான் எதையும் இழக்கத் தயார்" என்று கூறிய சேதுபதி, பச்சைக்குழந்தை போல ஒரு மூலையில் விசும்பிக் கொண்டிருந்தார்' என்ற வரிகளும், "அவர் கரத்தால் தீண்டிய சரஸ்வதியின் படம், சேதுபதியின் ஆபீஸ் அறையை அலங்கரித்தது.  கருத்தால் தீண்டிய பார்வதியின் படம் முன்வாசல் ஹாலை அலங்கரித்தது." என்ற கடைசி வரிகளும் என்றும் என் நெஞ்சை விட்டகலா!
வத்தலக்குண்டு                                                               ஜே. தாமஸ்
                                                                                           வி. தாமஸ்,
                                                                                           பிரேம்குமார் தாஸ்.
ஒவ்வொரு குருத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி இருந்தது.  பார்வதியின் வெளி உலக வாழ்க்கையின் செழுமை ஒருபுறம், அதற்கு நேர் எதிரிடையாக அமைந்த உள்ளத்தில் நிறைவு பெறாத சொந்த வாழ்க்கை மறுபுறம்.  என் கண்களில் நீர் மல்கியது. என் இதயமும் நெகிழ்ந்தது.  மொத்தத்தில் புனிதமான உணர்ச்சிகளைப் படிப்போர் உள்ளத்தில் பொங்க வைக்கும் மிக நளினமான இலக்கியம்.
பம்பாய்                                                                                க.  சீனிவாசன்,
பார்வதிக்கும், சேதுபதிக்கு உள்ள தூய காதலைப் பிணைத்து வைத்திருக்கலாம்.  சமூகத்தின் நடப்பிற்கு விரோதம் என்று நினைத்திருந்தால் மனப் போராட்டத்தையும் வயோதிகத்தையும் காரணமாக வைத்து இருவரின் உயிரையும் சேர்த்தே பிரித்திருக்கலாம்.
திருச்சி - 1                                                                           என். ஆர். நடராஜன்.
பெறாத குழந்தைக்குத் தாயாக இருந்து, புரியாத இல்லத்தின் தலைவியாக ஒரு தோற்றத்தைத் தானே சிருஷ்டி செய்து கொண்டு, அந்த நினைப்பிலேயே வாழ்வின் இறுதியைக் கண்டு மகிழ்ந்த கன்னித் தெய்வமே !  உன்னைப் போன்ற நிலையில் உள்ள பெண்களின் வாழ்வு சீராக அமைந்து சிறப்புற்று விளங்க அருள் புரிய வேண்டுமம்மா.
தஞ்சாவூர் - 1                                                                                              எஸ். வி லட்சுமி.            






43 கருத்துகள்:

  1. நானும் கூட சாவி வார இதழில் ஜோக் எழுதியுள்ளேன் ,என்ஆதர்ச குருவுக்கு வந்தனம் !

    பதிலளிநீக்கு
  2. எப்போது படித்தாலும் அலுக்காத கதை வாஷிங்கடன் திருமணம் எனக்கு மிகவும் பிடித்த கதை இது ஆசிரியர் சாவியும் எனக்கு பிடித்த எழுத்தாளர்

    பதிலளிநீக்கு
  3. அவருடைய எல்லா எழுத்தும் பிடிக்கும். மேல்விஷாரம் சாயபு உட்பட.
    கடப்பாறை கிச்சா, பட்டாபி இப்படி பல பெயர்கள் உள்ளத்தில் மோதுகின்றன.
    மிக மிக நன்றி. அற்புதமான நாட்களைக் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்.
    லிங்க் கொடுத்திருப்பதால் அங்கே பயணிக்க முடியும். கோபுலுவும் சாவியும் இணைந்து கொடுத்த படைப்புகளில் ஒரு ஓவியம் நினைவுக்கு வருகிறது. ஒரு மங்கை ராமன் படத்துக்கு
    ,தான் தொடுத்த மாலையை இடுவாள். அதை ஹீரோ பார்த்து ஏதோ சொல்ல நினைப்பார்.
    படித்து 50 வருமாகியும் அந்த சித்திரம் மனம் விட்டுப் போகவில்லை.

    பதிலளிநீக்கு
  4. விசிறி வாழை பார்வதியும் சேதுபதியும் மிக மனவெழுச்சி கொடுத்த கதை. முடிந்தவுடன் கண்ணீர் விட்டது நினைவுக்கு வருகிறது.ஹ்ம்ம்...

    பதிலளிநீக்கு
  5. சாவியின் பல படைப்புகளைப் படித்திருக்கிறேன் அவற்றை மீண்டும் படிக்கும்போதுதான் கதையும்பாத்திரங்களும் நினைவுக்கு வரும் வாஷிங்டனில் திருமணம் ஆனந்த விகடனில்தொடராகப் படித்த நினைவு விசிறி வாழை நினைவுக்கு வரவில்லை. லிங்கில் சென்று படிக்க இயலவில்லை. எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கிறது சாவியை நினைவு படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. சாவியின் படைப்புகள் அருமை. சாவியும் இதயம் பேசுகிறதும் அந்தக் காலத்தில் போட்டிப் பத்திரிக்கைகள். சாவியின் 'கேரக்டர்' நல்ல படைப்பு. ஆனாலும் அவர் திமுகாவுடன் (அதன் தலைவருடன்) தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டுவிட்டார். இது ஒருவேளை இதயம் மணியன் எம்.ஜி.ஆருடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டதனால் இருக்கும். சாவி, ஏராளமான படைப்பாளிகளுக்கு வாய்ப்பினைத் தந்து அவர்களைப் பிரபலப்படுத்தியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  7. எழுத்தாளர் சாவிக்கு மரியாதை செய்யும் சிறப்பான பதிவு. வாஷிங்டனில் திருமணம் மற்றும் அவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன், சாவி இதழ் உட்பட.

    பதிலளிநீக்கு
  8. வாஷிங்டனில் திருமணம் அம்மா வீட்ல பைண்ட் புக் இருந்தது பல முறை வாசித்தாச்சு .விசிறி வாழை படித்த நினைவு மீண்டும் படிக்கிறேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சலீன். அவருடைய 'கேரக்டர்' தொடரும் ரொம்ப ரசிக்கத் தக்கது. அப்புறம் பலபேர் அதை முயற்சித்தார்கள்.

      நீக்கு
  9. அடடே... அப்படியா பகவான்ஜி? வாழ்த்துகள். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நன்றி மதுரைத் தமிழன். ஒவ்வொரு முறையும் உங்கள் பின்னூட்டம் வரும்போது எனக்கு ஒரு ஆச்சர்யம். உங்கள் பின்னூட்டம் மட்டும் என் மெயில் பாக்ஸுக்கு வராது. எப்படி என்று புரியவில்லை. பிளாக் வந்து பார்த்தால் உங்கள் பின்னூட்டம் தெரியும்! ஏன்?

    பதிலளிநீக்கு
  11. வாங்க வல்லிம்மா.. அதனால்தான் உங்களை பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெரியும். கோபுலுவும் அவரும் ரொம்ப தோஸ்த் என்று இன்னொரு இடத்தில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. ஜி எம் பி ஸார்.. நீங்களும் படித்திருக்கிறீர்கள் என்று நீங்கள் பகிர்ந்துள்ளது சந்தோஷம் தருகிறது. லிங்க்கில் எழுத்துகளை பெரிதாக்கிக் கொள்ளலாம். கண்ட்ரோல் ப்ளஸ்!

    பதிலளிநீக்கு
  13. வாங்க நெல்லைத்தமிழன். மணியனும் அவரும் நல்ல நண்பர்கள். நீங்கள் சொல்வது போல போட்டிக்கெல்லாம் அவரப்படிச் செய்யவில்லை. மணியனின் இதயம் பேசுகிறது புத்தகத்தில் சாவியும், சாவி புத்தகத்தில் மணியனும் தொடர்கள் எழுதி இருக்கிறார்கள். இது இந்தக் காலம் வரை ஒரு சாதனைதான்.

    பதிலளிநீக்கு
  14. என்னை மறந்துவிட்டீர்களே! போனவருடம் சாவியின் விசிறி வாழை என்று பதிவே போட்டிருக்கிறேனே. நீங்களும் வந்து கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
    சாவியின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஸ்ரீவேணுகோபாலனை புஷ்பா தங்கதுரை ஆக்கியவரும் சாவி தான் என்று நினைக்கிறேன். அவர் உருவாக்கியவர்களும் அனுராதா ரமணனும் ஒருவர். மார்பில் பாய்ந்த கடா யார் என்று தெரிந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ரஞ்சனி மேடம்... உங்களை மறந்துட்டேன் பாருங்க... ஸாரி!

      நீக்கு
  15. வாஷிங்கடனில் திருமணம் எனக்கு பிடித்த கதை . அந்த கதையில் அமெரிக்காவில் கல்யாணத்திற்கு மாக்கோலம் போட்டு செம்மண் அடிப்பதை எல்கோல்ங்கோர்ளும் வியந்து பார்ப்பதை பற்றி தேனம்மையின் சனிக்கிழமை பேட்டி பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    மறக்க முடியாத கதை, விசிறி வாழை நினைவில் இல்லை மீண்டும் படிக்கிறேன்.

    சாவி அவர்களை நினைவு கூர்ந்தது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். இரண்டுக்குமே லிங்க் கொடுத்திருக்கிறேன். படித்து ரசிக்கலாம்.

      நீக்கு
  16. தினமணி இதழ் படித்தேன். தங்கள் பதிவு மூலமாகப் பிறவற்றையும் அறிந்தேன். ஓர் அரிய மனிதரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. சாவியாரின் இனிய வரலாறில் கொஞ்சம இங்கே அறிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  18. திரு ரவி பிரகாஷின் 'உங்கள் ரசிகன் -- சாவி' G+ -- இல் படிக்கிறீர்களா?..
    அற்புதமான தொடர். ரவி பிரகாஷையும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    சுட்டி கீழே:

    http://ungalrasigan.blogspot.in/2016/08/100-ix.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார். சாதாரணமாக நீங்கள் பதிவைப் படிக்காமல் பதில் போட மாட்டீர்கள். சமீபகாலமாக மாறுபட்ட நிலை போலும்! நீங்கள் சொல்லியுள்ள தளம் பற்றியும், அதன் சுட்டியையும் மேலே பதிவிலேயே கொடுத்துள்ளேனே... மேலும் நான் அந்த தளத்தைப் படிக்கிறேன் என்பது இரண்டு வகையில் தெரியும். ஒன்று, எங்கள் ப்ளாக் ஸைட் பாரில் 'நாங்கள் அடிக்கடி மேய்வது'பகுதியில் அந்த தளத்தின் சுட்டி. இரண்டாவது, நீங்கள் அந்த தளம் சென்று படித்திருந்தீர்களானால் அங்கு என் பின்னூட்டம் பார்த்திருக்கலாம்!

      :)))

      நீக்கு
  19. சாவி அவர்களுக்கு மரியாதை செய்யும் அருமையான பதிவு! அவரைப்பற்றி தனியாக பதிவு போட வேண்டும்!

    பதிலளிநீக்கு
  20. பார்த்தேன். இருந்தாலும் இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டத்தில் யாரும் அதைக் கண்டு மொள்ளாததால்
    பின்னூட்டத்தில் அதை மீண்டும் நான் சொல்லி, அதைப் பற்றி நீங்கள் சொல்லி என்று ஆர்வத்தைத் தூண்டத் தான்...

    பதிலளிநீக்கு
  21. இந்தக் கட்டுரையை எங்களுடைய இணைய இதழில் பகிர்கின்றோம்.. உங்கள் பெயருடனும் தளத்தின் முகவரியுடனும் வெளியிடுகிறோம்.. நன்றி

    பதிலளிநீக்கு
  22. இப்பொழுது கூட பாருங்கள் ரவி பிரகாஷின் தளத்திற்குப் போய் படித்துப் பார்த்த அனுபவம் பற்றி யாரும் பகிர்ந்து கொள்ளக் காணோம்.
    பொதுவாக ஒன்றிலிருந்து கிளைத்து அதைத் தொடர்ந்து மனசில் படிகிற விஷயங்களை எழுதுபவர்கள் ரொம்பவே குறைச்சல்.
    அப்படி எழுதினாலும் அதைத் தொடர்ந்து புதுப்புது சிந்தனைகளைக் கிளர்த்துவோர் இல்லவே இல்லை.
    எழுதுவோர் இல்லை. அப்படியான பின்னூட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகவே வீணாகப் போகிறது.
    பின்னூட்டங்கள் என்பவை ஒரு ஃபார்மாலிடியாகவே போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  23. மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஸார். நீங்கள் சொன்ன பிறகும் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை, உண்மைதான். ஆனால் எங்கள்பிளாக் ஸைட் பாரில் பார்த்து அதன் வழி வந்துதானோ என்னவோ நமது ஓரிரு வாசகர்கள் அங்கு பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி அகம் மேகசீன். ஆனால் ஏங்கி இணைத்திருக்கிறீர்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  25. மீள்மீள் வருகைக்கும் நன்றி ஜீவி ஸார். பின்னூட்டம் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. விசிறிவாழை, வாஷிங்டனில் திருமணம் படிப்பதற்கான லிங்க் தந்திருப்பது பற்றி ஜி எம் பி ஸார் தவிர வேறு யாரும் சொல்லவில்லை. ரவி பிரகாஷ் தளம் பற்றி யாருமே சொல்லாதது எனக்கும் குறைதான்.

    இந்தப் பதிவு என்றில்லை. நிறைய பதிவுகளுக்கு அப்படித்தான் வருகிறது. என்ன செய்ய.. அவசர யுகம்! அவரவர்களுக்கு அவரவர் வேலை அவசரம்.. எட்டிப் பார்த்து விட்டாவது செல்கிறார்களே என்கிற திருப்திதான். வேறென்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
  26. ரவி பிரகாஷ் அவர்களின் தளத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இந்த பத்து நாட்கள் தவிர முன்னரே சாவி இதழில் பணிபுரிந்தது பற்றியும், சாவியிடம் கோபித்துக் கொண்டது பற்றியும் அவர் எழுதி இருக்கிறார்.

    சிறப்பான பகிர்வு. நெய்வேலியில் இருந்தவரை சாவி பத்திரிகை தொடர்ந்து படித்திருக்கிறேன் - அப்பா Magazine Club-லிருந்து எடுத்து வருவார். தில்லி வந்த பிறகு வாரப் பத்திரிக்கைகள் படிப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது......

    பதிலளிநீக்கு
  27. எழுத்தாளர் சாவியைப் பற்றி பின்னூட்டத்தில் சொல்லாதது ஒரு குறையாகவே இருந்தது. எனது
    தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய புத்தகத்திலும் சாவி இல்லாததற்கு வேறுபட்ட காரணங்கள் இருந்தன. பக்க நெருக்கடி இன்னொரு காரணம். அதனால் அவர் பற்றி சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவே 'எங்கள் பிளாக்'கின் இந்தப் பதிவு அமைந்து விட்டது.

    'சாவி' தமிழுக்குக் கிடைத்த அற்புதமான எழுத்தாளர். இளம் வயதிலிருந்தே முற்போக்கு சிந்தனைகள் கொண்டிருந்தவராய் இருந்திருக்கிறார். சிரிக்கச் சிரிக்க எழுதியவராய் பொதுவான வாசிப்பு கொண்டோருக்குத் தெரிந்தாலும் ஆழ்ந்த உணர்வுகளைக் கொண்டவர் இவர். ஆனந்த விகடனுக்குப் பெருமை அளித்தது இவரும் மணியனும் துணை ஆசிரியர்களாய் அங்கு பணியாற்றிய பொழுது எழுதிய திருக்குறள் கதைகள்.

    சொந்தப் பத்திரிகை 'சாவி'யின் பக்கங்களை இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகவே இவர் நடத்தினார் என்று சொல்லலாம். புதுசு புதுசாக நிறைய எழுத்தாலர்கள் 'சாவி'யின் அதிர்ஷ்டமான ஊக்குவிப்பைப் பெற்றிருக்கிறார்கள். 'சாவி' பத்திரிகை ஒரு சிறு பத்திரிகை போன்றதான உள்ளடக்கத்தைக் கொண்டு 'லே அவுட்', 'பிரசண்டேஷன்', விற்பனை உத்திகள் போன்றவற்றில் பெரும் பத்திரிகைகளோடு போட்டி போட வேண்டிய சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளித்த காரியம் பத்திரிகை உலகு பற்றிய பரிச்சயம் கொண்டவர்களாலேயெ புரிந்து கொள்ள முடியும்.

    'ஆனந்த விகடன்'-- 'சாவி' பத்திரிகைகளை விட அவர் ஒரு பத்திரிகை
    ஆசிரியராய் பிர்மாண்ட சொரூபம் கொண்டது 'தினமணிக் கதிரில் தான். பத்திரிகை பாரம்பரியம் கொண்ட நிருவனப் பின்னணியும் அவருக்குக் கிடைத்த முழுச் சுதந்திரமும் அவர் நினைப்பதை செயலாற்ற பின்புலமாக இருந்தது.
    உன்மையிலேயே பகாசுர பெரும் பத்திரிகைகளோடு போட்டி போட்டது 'தினமணி கதிரி'ல் தான். கதிருக்கு இவர் ஆசிரியரானவுடனேயே 7 இலட்சம் பத்திரிகை விற்பனையை இலக்காக பகிரங்கமாக அறிவித்தார்
    அல்லும் பகலும் அந்த இலட்சிய விற்பனையை எட்ட வேண்டும் என்பதே அவர் சிந்தனையாக இருந்தது.
    அதற்கான அவர் திட்டங்கள் பிரமிக்க வைப்பதாய் இருந்தன.

    அந்நாளைய பிரபல எழுத்தாளர்களை தினமணி கதிரில் எழுத வைத்தார். ஜெயகாந்தனின் எழுத்துக்களின் போக்கை மிகச் சரியாக புரிந்து கொண்டு அவருக்கு எழுத்தில் முழுச் சுதந்திரம் கொடுத்து எழுத வைத்தவர் 'சாவி' ஒருவரே. விகடனில் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்றால், கதிரில் காலத்தால் அழியாத தடம் பதித்த நாவல்களை எழுதினார் ஜெகே. அவரது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதிரில் தொடராக வந்தது தான்.

    (தொடரும்)





    பதிலளிநீக்கு
  28. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நாவல் 'காலங்கள் மாறும்' என்ற தலைப்பைத் தான் ஆரம்பத்தில் கொண்டிருந்தது. அந்தப் பெயரிலேயே நாவலுக்கான விளம்பரங்கள் செய்யப்பட்டன. நாவல் வெளிவந்த முதல் அத்தியாயத்தில் அந்தத் தலைப்புப் பெயரை 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று மாற்றி அதற்கான காரணங்களை ஜெயகாந்தன் அந்த நாவலுக்கான முன்னுரையில் எழுதியிருந்தார். காலங்களே மாறும் பொழுது ஒரு கதையின் தலைப்புப் பெயர் மட்டும் மாறாதா என்ன' என்று முன்னுரையில் ஜெகே எழுதியிருந்தது இப்பொழுதும் நினைவில் பளிச்சிடுகிறது.

    சாவி சுதந்திரப் போராட்ட காலத்தவர். காந்திஜியுடன் நடை பயணத்தில் பயணித்து 'நவகாளி யாத்திரை' நூலை எழுதினார். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தலைவர்களிடம் கூட தனிப்பட்ட அன்பு கொண்டு பழகியவர்.

    'வெள்ளிமணி' என்ற பத்திரிகை இவர் இளமைக்கால கனவின் நனவாக ஆரம்பித்து எழுத்துலகில் பிரவேசித்தவர். 'கல்கி' தான் ஞானாசிரியர். கல்கி, தேவன், நாடோடி, துமிலன், எஸ்.ஏ.பி., கிவாஜ., தி.ஜ.ர., என்று தமிழுலக பெரும் எழுத்து பட்டாளத்தோடு நெருங்கிப் பழகிய வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டவர் சாவி. தமிழ் பத்திரிகை உலகப் பிதாமகர். மிக எளிமையாக வாழ்ந்தவர். பழகியவர். வாசகர்களிடம் பெரும் மரியாதை கொண்டவர். பத்திரிகை உலகில் பல நல்ல விஷயங்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் சாவி அவர்கள்.





    பதிலளிநீக்கு
  29. சாவி மிகச் சிறந்த எழுத்தாளர்...
    பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
  30. வாஷிங்டன் போனபோது போடமாக் ரிவரைக் கண்டபோது சாவியின் நினைவும்,வாஷிங்டனில் திருமணமும் ஞாபகம் வந்தது.பறக்கும் தட்டுகளாக அப்பளாமும்,பறங்கிக்காய்க்கு பிடி போட்ட நினைவும்,ராக்பெல்லர் மாமியும், நினைக்கும் போது சாவியை மறக்கவே முடியவில்லை. எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். அன்புடன்

    பதிலளிநீக்கு
  31. போன மாதம் வாஷிங்டன் சென்ற எங்கள் பெண்ணிடம் பொடோமாக் நதியையும் ஜெஃபர்சன் மண்டபம் பற்றியும் விசாரித்தேன். அவளும் வாஷிங்டன் திருமணம் தொடரை அங்கே நினைவு கூர்ந்ததைச் சொன்னாள். இத்தனைக்கும் பொண்ணுக்கும், பையருக்கும் அதை நான் தான் படித்துச் சொன்னேன். இரண்டு பேருக்கும் தமிழ் படிக்க வராது! இப்போவும் மனம் சஞ்சலம் அடைந்தாலோ மன ஆறுதலுக்கோ வாஷிங்டனில் திருமணம் புத்தகத்தையோ தேவனின் புத்தகங்களையோ தேடி எடுத்துப் படிப்பேன். இவர்கள் சந்தித்தால், இங்கே போயிருக்கிறீர்களா? காரக்டர் போன்ற சாவியின் பிரபலமான தொடர்கள் இப்போதும் நினைவில் உள்ளன. விசிறி வாழையைத் தரவிறக்கிப் படிச்சேன். சேமிப்பிலும் இருக்கு. பல புத்தகங்களை இப்படிச் சேமித்து வைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!