வியாழன், 18 ஆகஸ்ட், 2016

குரைக்கற நாய்...



     குடியிருப்புகள் நிறைந்த பகுதி.  அங்கு ஒருவர் நாய் வளர்த்து வந்தார்.


     அது பகலிலும் அவ்வப்போது குரைக்கும்.  ஆனால் இரவின் அமைதியில் அது குரைப்பது,  உரிமையாளருக்கே தொந்தரவாகத் தோன்றும்போது, அருகாமை குடித்தனக் காரர்களை சொல்லவும் வேண்டுமோ!


                                   Image result for barking dog images    Image result for barking dog images  Image result for barking dog images


     அவர்கள் தினமும் இரவில்  நாய் குரைப்பதால் தங்கள் தூக்கம் கெட்டுப் போவதாகப் புகார் செய்த வண்ணம் இருந்தனர்.


Image result for barking dog images


     நாள்பட, இது ஒரு பிரச்னையாகிப் போனது.  என்னென்னவோ முயற்சித்தும் இரவில் நாய் குலைப்பதை நிறுத்த முடியவில்லை.



     இரவு தூக்க மாத்திரை கொடுக்கலாமா என்று கூட யோசனை செய்து கொண்டிருந்த போது நண்பர் அறிவு ஜீவி வந்தார்.



                                        Image result for barking dog images                Image result for barking dog images


     அறிவுஜீவியைத் தெரியும்தானே?  ஏற்கெனவே வாசகர்கள் அறிந்தவர்தான்..  என்ன,  வந்து நீண்ட நாட்களாகி விட்டது!



      இவரையும் ஒரு தடவை கலந்து ஆலோசிக்கலாம் என்று அவரிடம் நடந்த விவரங்களை சொல்லி,  அதற்குத் தீர்வு கேட்டார்.


Image result for barking dog images


      அறிவுஜீவி சிரித்து விட்டார்.  "என்னய்யா..! இவ்வளவு சுலபமான விஷயத்துக்கு இவ்வளவு சிரமப்படுகிறீர்?" என்று சொல்லியவர்,  மறுநாள் வரும்போது ஒரு கழுத்துப்பட்டையுடன் வந்தார்.

          Image result for tying a dog images        Image result for tying a dog images


     அதில் நாய் சொந்தக்காரர் பற்றிய விவரம் நாயின் பெயர் போன்ற விவரஙகள் வைக்க ஒரு பை இருந்தது. அதில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு பட்டையை நாயின் கழுத்தில் சுபயோக சுப தருணத்தில் அணிவித்தார்.


     பின்னர் அதை அதன் இடத்தில் பிணைத்து, இரவு முழுவதும் காத்திருந்தார்கள்...  பார்த்திருந்தார்கள்.



                                                                          Image result for tying a dog images


     நாய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து,  ஆனால் குரைக்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது.  காத்திருந்து காத்திருந்து அதிசயத்தில் ஆழ்ந்துபோன நண்பர், 


      "அறிவு..  என்ன ஆச்சரியம்?"  என வினவ ..


      "எங்க பாட்டி சொல்லிக் கேட்டிருந்தேனே தவிர இதுவரை சோதித்துப் பார்த்ததில்லை. இப்போதுதான் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது" என்றார் அ. ஜீ.


      "உங்கள் பாட்டியும் எங்க பாட்டியும் ஒரே ஊர்க்காரர்கள் தானே..
பின்னே ...?"  என்று நண்பர் இழுக்க...


      "ஏன்யா நாய் with a காசு குரைக்காது என்று கேள்விப்பட்டதில்லை?"  என்றதும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க..


      ஜிம்மியும் "ஊஃப்.....  ஊஃப்"  என்று சிரிப்பில் கலந்து கொண்டது.



Image result for barking dog images

- கேஜி -

23 கருத்துகள்:

  1. ஹா ஹா... :)

    நாய் with a காசு குரைக்காது! :)

    பதிலளிநீக்கு
  2. நன்றாயிருக்கிறது .புதிய கோணத்தில் .

    பதிலளிநீக்கு
  3. புதிர்களுக்கான பதிலைச் சொல்லாமல் என்ன இது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  4. என்னவோ சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தால் கடைசியில் இப்படி கடித்து விட்டீர்களே :-)

    பதிலளிநீக்கு
  5. என்னவோ சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தால் கடைசியில் இப்படி கடித்து விட்டீர்களே :-)

    பதிலளிநீக்கு
  6. இந்த பழமொழி நமக்குத்தான் தெரியும் என்றிருந்தேன் ,நாய்க்கும் தெரியும் போலிருக்கே ப்:)

    பதிலளிநீக்கு
  7. இரவில் நாய் குறைப்பது எங்கள் தெருவிலும் தினமும் நடக்கும் விஷயம் தான். எங்கள் எதிர் வீட்டில் இருப்பவர்கள் அவற்றிக்கு தினமும் உணவு போட்டுவிட்டுக் கதவை சாத்திக்கொண்டு போய்விடுவார்கள். ஒருநாள் இரவில் அந்தக் கதவைத் திறந்து எல்லா நாய்களையும் (சுமார் 6 நாய்கள்!) அவர்கள் வீட்டில் விட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொள்வோம்.
    அதுசரி. நாய் with a காசு குறைக்காது என்பதற்காக அத்தனை நாய்கள் குறைக்கும் படங்களைப் போடவேண்டுமா? இங்கு வந்தாலே பௌ பௌ சத்தம் காதைப் பிளக்கிறதே!

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா! ஆனாலும் இப்படி எங்களை கடிக்க கூடாது கே,ஜி சார்!

    பதிலளிநீக்கு
  9. நாய்க்’கடி’ (ஜோக்) சிரிப்பாக உள்ளது. :)

    பதிலளிநீக்கு
  10. இரண்டு கால் நாயைவிட ..நாலுகால் நாய்கள் பரவாயில்லை...

    பதிலளிநீக்கு
  11. இரண்டு கால் நாயைவிட ..நாலுகால் நாய்கள் பரவாயில்லை...

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. நிச்சயம் அறிவு ஜீவி
    அறிவு ஜீவிதான்
    நாம் அவரைப் புரிந்து கொண்டது
    பெரியவிஷயமே இல்லை
    நாயும் காசுக் கட்டியதைப் புரிந்து கொண்டு
    குரைக்காமல் இருந்ததுதான் ஆச்சரியம்

    பதிலளிநீக்கு
  14. ஹா ஹா...

    நாய் with a காசு குரைக்காது! ஹஹஹ நல்ல டெக்னிக்....நல்ல சுவாரஸ்யமான நகைச்சுவை...

    கீதா: மேல் சொன்ன எங்கள் இருவரின் கருத்துடன்...அந்தப் பை கட்டியவுடன் நாய்க்கு ஒரு பொறுப்புணர்ச்சி வந்து விடும்..அதாவது அது தன்னுடையது...அதை வேறு யாரும்/நாய்கள் வந்து எடுத்துவிடக் கூடாது. நமது பாஸ் இதைக் கட்டியுள்ளார் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மேலிட்டுவிடுவதால் அவை அமைதியாகிவிடும். இது ஒரு அனிமல் சைக்காலஜி....எங்கள் செல்லங்கள் அவ்வளவாகக் குறைக்காது. தேவையிருந்தால் மட்டுமே. ஆனால் இப்படி ஏதேனும் அவர்கள் முன் வைத்து விட்டால்போதும்...அவர்கள் ஏதோ சொத்து போன்று பாதுகாப்பார்கள் பாருங்கள்...அவர்களுக்குப் போரடிப்பதால் தான் இப்படிக் குரைத்தல்...ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  15. நாய் வித் எ காசு.... ஹா... ஹா....
    என்ன ஒரு அழகான யோசனை.... வாய் விட்டு சிரிக்க வைச்சிட்டார்.... நம்ம அறிவு ஜீவி.

    பதிலளிநீக்கு
  16. வார்த்தை விளையாட்டு . ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  17. ஆர்வத்தோடு படித்துக்கொண்டே வந்தேன்..... கடைசியில் கமல் கத்துவாரே அதுபோல.. “ஆஆஆஆஆஆஆஆஆஆ.....” என்று கத்த வேண்டும் போல் இருந்தது.... அப்புறம், எனக்கும் பட்டை கட்டும் எண்ணம் வீட்டிலுள்ளவருக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கப்சிப் ஆகிவிட்டேன்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!