புதன், 26 அக்டோபர், 2016

புதிர் 161026


'நெல்லைத் தமிழன் said...

கேள்வி - ஒரு நாடகத்தைப் படமாக எடுத்தபோது நாடகத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில், பெண் நடித்தார். ஒரே கதையை இரண்டாம் முறை படமாக எடுத்தபோது, முதல் படத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில் பெண் நடித்தார். யார் யார், என்ன படங்கள்?


எங்கள் பதில் : 
1)  நந்தனார். (என்று நினைக்கிறோம்) 

2)  சாந்த சக்குபாய்.  


சரியா?  

இந்த வாரக்கேள்வி: 
================== 

A என்ற நாடு.  B என்னும் விசித்திரமான மன்னன் ஆண்டுவந்தான்.  C என்ற ஆளு ஒரு  கிரிமினல் குற்றம் செய்துவிட்டான். D என்னும் விசித்திர தண்டனையை  அவனுக்கு அளித்தான் மன்னன். 


அது இதுதான்:  

சி யை, ஒரு   பெரிய  சிறையில் விட்டு,  கதவைப்  பூட்டி விடுவார்கள்.    

அந்த  அறையிலிருந்து  வெளியே  வர இரண்டு வழிகள். (E1 , E 2)  ஒவ்வொரு  வழியையும்  ஒரு  காவலாளி காத்து நிற்பார்கள். 
     Image result for ancient prison
K1 , K2  என்று  காவலாளிகளை  வைத்துக்கொள்ளலாம் .  

அதில்  ஒருவர் எந்தக்  கேள்வி  கேட்டாலும்  பொய்  சொல்லுவார். மற்றவர் எந்தக் கேள்வி கேட்டாலும், உண்மை சொல்லுவார். 

இரண்டு வழிகளில், ஒன்றின் வழியாகப்  போனால், பழமரங்கள் உள்ள சோலை  வழியாக சென்று, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம்.   

                       Image result for fruit garden
  
மற்றொரு வழியாகச் செல்பவர்களை, கொடிய மிருகங்கள் சாப்பிட்டு, ஏப்பம்  விட்டுவிடும்.   

                               Image result for ancient prisoner
   
சி என்னும் கிரிமினல், ஏதேனும் ஒரு காவலாளியிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு, அந்தக்  கேள்விக்கு, அந்தக் காவலாளி அளிக்கும்  பதிலை  வைத்து, சமயோசிதமாகத்   தப்பிக்கவேண்டும்.  

சி என்ன கேள்வி கேட்டு, எப்படித் தப்பிப்பார்? 

குறிப்பு: 

# இரண்டு காவலாளிகளுக்கும், தப்பிக்கும்  வழி  எது என்று தெரியும். 

# யார் உண்மை சொல்பவர், யார் பொய் சொல்பவர் என்ற விவரம் சி க்கு தெரியாது. ஆனால்  ஒருவர்  உண்மை  சொல்பவர், மற்றவர்  பொய்  சொல்பவர்  என்பது மட்டும், தண்டனை  அளிக்கப்படும்    பொழுதே மன்னன்  கூறிவிட்டான்.  

மேற்கொண்டு  விளக்கங்கள் ஏதேனும் தேவைப்பட்டால், அவ்வப்பொழுது  அளிக்கிறேன். 

================================  

 

14 கருத்துகள்:

  1. ஆஹா... இப்படி ஒரு குழப்பமா.... காத்திருக்கிறேன்! தப்பிச்சாங்களா, இல்லை இரையானாங்களான்னு தெரிஞ்சுக்கதான்!

    பதிலளிநீக்கு
  2. // K1 , K2 என்று காவலாளிகளை வைத்துக்கொள்ளலாம் . //

    K1 காவலாளியிடம் சென்று "ஐயா, இந்த இரண்டு வாயில்களில் (E1, E2) எது வாயியாகச் சென்றால், சோலையை அடையலாம் என 'K2' விடம் கேட்டால், அவர் எந்த வாயிலைக் காட்டுவார்" எனக் கேட்டு, அதற்கு 'K1' காண்பிக்கும், வாயிலை விடுத்து, மற்ற வாயில் வழியில் சென்றால், பழமரங்கள் உள்ள சோலை கண்டு, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம். (Principle : 'Negative' of a 'Positive' and 'Positive' of a 'Negative' are always 'Negative')

    'k1' உண்மை பேசி, 'k2' ' பொய் பேசுபவர் என்றாலும், 'k2' உண்மை பேசி, 'k1' ' பொய் பேசுபவர் என்றாலும், மேற்சொன்னது சரியான வழியாகும்.

    பதிலளிநீக்கு
  3. This version of a famous paradox was presented by English mathematician P. E. B. Jourdain in 1913.
    The following is written on opposite sides of a card:

    Back side:
    THE SENTENCE ON THE OTHER SIDE OF THIS CARD IS TRUE.

    Face side:
    THE SENTENCE ON THE OTHER SIDE OF THIS CARD IS FALSE.

    பதிலளிநீக்கு
  4. K1 காவலாளியிடம் சென்று "ஐயா, இந்த இரண்டு வாயில்களில் (E1, E2) எது வாயியாகச் சென்றால், சோலையை அடையலாம் என 'K2' விடம் கேட்டால், அவர் எந்த வாயிலைக் காட்டுவார்" எனக் கேட்டு, அதற்கு 'K1' காண்பிக்கும், வாயிலை விடுத்து, மற்ற வாயில் வழியில் சென்றால், பழமரங்கள் உள்ள சோலை கண்டு, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம்.

    The same logic can work by asking the same question to the other person also.

    K2 காவலாளியிடம் சென்று "ஐயா, இந்த இரண்டு வாயில்களில் (E1, E2) எது வாயியாகச் சென்றால், சோலையை அடையலாம் என 'K1' விடம் கேட்டால், அவர் எந்த வாயிலைக் காட்டுவார்" எனக் கேட்டு, அதற்கு 'K2' காண்பிக்கும், வாயிலை விடுத்து, மற்ற வாயில் வழியில் சென்றால், பழமரங்கள் உள்ள சோலை கண்டு, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம்.

    So By asking the same question either to K1 or K2, one can escape by opting the other gate which was not pointed out by K1/K2.

    பதிலளிநீக்கு
  5. இங்க வரவங்க யாராவது அவங்கள தப்பிக்க வைப்பாங்க. காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  6. இன்னும் யதாஸ்தானம் வரவில்லை. வந்து யோசிக்கிறேன். அவ்வையார் நாடகத்தில் டி.கே. சண்முகம் அவர்கள் அவ்வையார் வேடமிட்டுச் சிறப்பாக நடித்து அவ்வை சண்முகம் என்று பேர் வாங்கினார். ஜெமினி எடுத்த அவ்வையார் படத்தில் கேபி சுந்தராம்பாள் அவர்கள் அவ்வையாராக நடித்தார். முதல் ந்ந்தனாரில் கேபி சுத்தராம்பாள் ந்ந்தனாராக ஆண் வேடமிட்டு சினிமாவில் நடித்தார். ஜெமினி புரொடக்‌ஷன் ந்ந்தநார் படத்தில் ந்ந்தனாராக எம் தண்டபாணி தேசிகர நடித்தார். அதனால் உங்களுக்கும் கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் மதிப்பெண்கள் இல்லை

    பதிலளிநீக்கு
  7. @நெல்லைத் தமிழன், உங்களுக்கு வயசாச்சு! அதான்! :)

    பதிலளிநீக்கு
  8. @ Thulasidharan.......
    என்னோட பதில் உங்களுக்கு புரியல போல...! 'C' நேத்திக்கே என்னோட பதில படிச்சிட்டு தப்பிச்சுப் போனது, உங்களுக்கு இன்னமும் தெரியாதா... இல்ல தெரியாத மாதிரி நடிக்கறீங்களா?

    பதிலளிநீக்கு
  9. கீதா மேடம்.. நான் கௌதமன் சாரைப் பார்த்ததில்லை. கலாய்ச்சா தப்பா எடுத்துக்குவாங்க என்று ஒண்ணும் எழுதலை. அவர் 'சக்குபாய்' என்று எழுதியதைப் பார்த்தவுடன் அவரைக் கலாய்க்கத் தோணினது.

    நான் 2004ல், பழைய மீரா படமும், நந்தனார் படமும் டி.வி.டி வாங்கிப் பார்த்தேன். என் அப்பாவுக்கும் காண்பித்தேன். அப்புறம் ஒரு பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தேன். (என்னிடம் 88ல் வாங்கின கர்னாடகா இசை டேப்பில், 'தாமரை பூத்த தடாகத்திலே' என்ற பாட்டு கேட்டிருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்தது. அப்போதுதான் தண்டபாணி தேசிகரைப் பற்றித் தெரியும். (அது அவர் பாடிய பாடல்களின் டேப்).

    அவ்வை சண்முகி படத்திற்கு அப்புறம்தான், பல இடங்களில் நாடகக் கலைஞர் டி.கே சண்முகம் அவர்களைப்பற்றியும் சமீபத்தில் அவரது சகோதரர்கள், அவர்களது நாடக வாழ்க்கையைப் பற்றியும் படித்துள்ளேன். அவ்வையாருக்கு, கே.பி.எஸ்ஸுக்கு 1 லட்சம் ஊதியம் கொடுத்ததும் (அவருக்கு நடிக்க இஷ்டமில்லை. கணவர் இல்லாததால். நடிப்பதைத் தவிர்க்க, 1 லட்சம் கேட்டதாகவும், வாசன் அவர்கள் கொடுக்கச் சம்மதித்ததாகவும் படித்திருக்கிறேன். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவரைத் தவிர 1 லட்சத்துக்கு மேல் முதலில் வாங்கியவர் ரத்தக்கண்ணீர் படத்துக்காக நடிகவேள் ராதா அவர்கள்.

    நல்லவேளை, நீங்கள் கிருஷ்ணன், ராமன் இவர்களைப் பற்றியெல்லாம் நிறைய எழுதுவதால், துவாபர யுகத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் நினைக்கவில்லை. (சும்மாச் சொல்றேன். உங்களை மாதிரி பெரியவர்கள் கர்ர்ர்ர்ர்ர் என்பதைவிட, கலாய்ப்பது பெட்டர்).

    பதிலளிநீக்கு
  10. //நல்லவேளை, நீங்கள் கிருஷ்ணன், ராமன் இவர்களைப் பற்றியெல்லாம் நிறைய எழுதுவதால், துவாபர யுகத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் நினைக்கவில்லை. (சும்மாச் சொல்றேன். உங்களை மாதிரி பெரியவர்கள் கர்ர்ர்ர்ர்ர் என்பதைவிட, கலாய்ப்பது பெட்டர்).

    grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr :))))))))))) "grrrrrrrrrrr" is my trademark and copyright irukku! :)))))))

    பதிலளிநீக்கு
  11. "ஒரே கதையை இரண்டாம் முறை படமாக எடுத்தபோது, முதல் படத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில் பெண் நடித்தார். " - கௌதமன் சார்... நந்தனார் என்பது சரியான விடை. ஆனால் கேள்வி தப்பு. தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் இரண்டாவதாக ஜெமினி எடுத்தது. முதலில் வந்த படத்தில்தான் கே.பி.எஸ் நடித்தார் என்று படித்துள்ளேன். யாருமே சொல்லலையே.

    கீதா மேடத்தைப் பற்றித் தெரியும். பதில் சொன்னால் ஒரிஜனல் வயசு தெரிஞ்சுடும்னு பயப்படறாங்க. நீங்களுமா 'குமுதம் அரசு' மாதிரி வயசை மறைக்கணும்?

    பதிலளிநீக்கு
  12. @நெல்லைத் தமிழன், இணைய உலகிலேயே நான் தான் குழந்தைனு கடந்த பத்து வருடங்களாக அனைவரும் அறிவார்கள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் ஏன் ஒரிஜினல் வயசை மறைக்கணும்? அதெல்லாம் இல்லை! :))))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!