சனி, 29 அக்டோபர், 2016

கேரளக் கல்லூரி மாணவிகளின் இந்தச் செயல்...



1) தனது  80%  சொத்துகளை நலிவடைந்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எழுதி வைத்த பர்வீன் பாபி. அறக்கட்டளை ஒழுங்காய்ச் செயல்படவேண்டும்!

 
 
2)  "பாஸிட்டிவ் செய்திகள் படிப்பதனால் ஆன பயன் என் சொல்!"  இப்படி ரீமா சாத்தேயைக் கேட்க முடியாது.  அவர் செய்தே காட்டி விட்டார். 
 
 
 

 
 
3)  நல்ல காரியம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல.  க்ஷீரஜா ராஜே ஒரு உதாரணம்.  வயது 13.
 
 

 
 
4)  பெரிய அளவில் செய்தால்தான் உதவியா?  தன் கடையை நாடி வரும் முடியாதவர்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக உதவி வரும் இந்த வடநாட்டு சிறுகடைக் காரர் ஒரு உதாரணம்.  அதற்குக் காரணம் அவர் மகன் கேட்ட ஒரு கேள்வி. ஜோகேஷ் யாதவ்.
 
 

 
 
5)   "....நீ ஒரு கிளார்க். உன்னால எல்லாம் ஆய்வு செய்ய முடியாது", என்று கூறிய ஆசிரிய நண்பர் சில நாள்களுக்கு முன்பு என்னை நேரில் பார்த்து தான் அப்போது சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று இருக்கையில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். "உங்களைப் போன்றோரின் கருத்துகளே என்னை ஓர் ஆய்வாளனாக ஆக்கிவிட்டன" என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன்....."
 
 



நம்மிடையே ஒரு பாஸிட்டிவ் மனிதர்.  அடையாளம் காட்டிய தேனம்மைக்கு நன்றி.  முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.


 
 
6)  "...இந்த மரத்தை இருந்த இடத்திலேயே வெட்டி விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாயோ மூன்றாம் ரூபாயோ கிடைத்திருக்கும் ஆனால் இப்படி மாற்று இடத்தில் நடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு முப்பதாயிரம் ரூபாயாகும், 'அவ்வளவு ரூபாய்க்கு மரம் மதிப்பு இல்லையேம்மா'? என்ற போது முப்பதாயிரம் அல்ல அறுபது ஆயிரம் ரூபாய் ஆனாலும் அதை காப்பாற்றியே தீருவேன் என்று சொல்லி பணத்தையும் நேரத்தையும் மட்டுமின்றி யாரும் கொடுக்கமுடியாத மதிப்பையும் மரத்திற்கு கொடுத்த நிர்மலாதான் முதல் சொம்பு தண்ணீரை விட்டார்...."



 
 
7)  பாஸிட்டிவ் பெண்மணி நடிகை லலிதா.
 
 

 
8)  சிங்கதுரை என்னும் சிங்கம்,.  "...சுமார் 10 லட்சம் ரூபாய் செலவானது. அதுல பாதியை சிங்கதுரை அய்யா தனிப்பட்ட முறையில ஏத்துக்கிட்டார்..."  மது குடிப்பதை நிறுத்தினால் ரூ. 5,000 டெபாசிட்.  குளத்தைச் சீரமைத்து அழகு படுத்தியிருக்கிறார்.





9)  ஏதாவது போராட்டம் என்றாலே பொதுச் சொத்துக்களை நாசமாக்கும் நபர்களை கேரளக் கல்லூரி மாணவிகளின் இந்தச் செயல் ஒரு கணமாவது சிந்திக்க வைக்காதா?


 

"

12 கருத்துகள்:

  1. நல்ல நல்ல நம்பிக்கையூட்டும் செய்திகளை ஒருங்கே பார்க்கும்போது வருங்கால நம் சந்ததியினர்மீது ஒரு நம்பிக்கை பிறக்கிறது.....!!!

    பதிலளிநீக்கு
  2. நல்ல நல்ல நம்பிக்கையூட்டும் செய்திகளை ஒருங்கே பார்க்கும்போது வருங்கால நம் சந்ததியினர்மீது ஒரு நம்பிக்கை பிறக்கிறது.....!!!

    பதிலளிநீக்கு
  3. முனைவர் ஐம்புலிங்கம் அவர்கள் அருமையான பாசிடிவ் மனிதர்தான்
    தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
    தம =1

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் முனைவரின் செயல்பாடு பலருக்கும் பாடமாக அமையும் வாழ்த்துகள்.
    பர்வீன் பாபி அறக்கட்டளை நிறைவாக நடக்கும் என நம்பி வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  5. பாசிடிவ் செய்தியில் நமது பதிவருமா ?சந்தோசமா இருக்கு !முனைவர் ஐம்புலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே நன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை. எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

    எங்கள் பிளாக் ஆசிரியர்களுக்கு உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களது பணி, நம் பதிவர்கள் மத்தியில் சிறப்பாகப் பேசப்பட்டாலும் அவரது ஆய்வுப் பணி தமிழுலகம் போற்றும் செயல் என்பேன். அவரது பணி தொடர எனது வாழ்த்துகள்.

    தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
    யாழ்பாவாணன்

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் நல்ல செய்திகள். முனைவர் . ஐம்புலிங்கம் சார், பாஸிடிவ் மனிதர் தான். அவரின் உழைப்பு வரை மேன்மை படைத்தி உள்ளது.
    சிங்கதுரை அவர்கள் பாராட்டபட வேண்டியவர்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.





    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துவோம்...
    தீபாவளி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!