Friday, November 18, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161118 :: குழந்தை(கள்) தினம்!

   
வீடியோ : வாட்ஸ் அப். 

பாடலை  இணைத்தவர்:  கௌதமன். 

   

10 comments:

KILLERGEE Devakottai said...

பாஸ்ட் எடிட்டிங் பிரமாதம் தெரியாதவாறு செய்தது திறமைதான்
அழகான குழந்தை சரி........ சைனாக் குழந்தைக்கு தமிழ்ப்பாடல் விளங்குமா ?

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிக அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

S.P.SENTHIL KUMAR said...

குழந்தையை பார்க்கும்போதே தெரிந்தது. சாப்பிட்டதும் உறுதியாகிவிட்டது.
த ம 4

middleclassmadhavi said...

குழந்தை டயட்டில் இருப்பது போல் தெரிகிறதே? கோதுமை ப்ரட், ஃப்ரூட், கீரை, காளான் போல...வாயிலே குத்திக் கொள்ளாமலும் முடிந்த வரை நீட்டாகவும் சாப்பிடுகிறது வேற... ஹஹஹ்ஹஹ்ஹஹா!!

கோமதி அரசு said...

குழந்தை சாப்பிடுவதை பார்க்க ஆனந்தம். எவ்வளவு அழகாய் சாப்பிடுகிறது!
பாடல் பகிர்வு அருமை.

Bhanumathy Venkateswaran said...

கொடுத்து வைத்த அம்மா! குழந்தை எத்தனை சமத்தாக சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுகிறது! ஒரு கரண்டி சாதம் ஊட்டுவதற்குள் நமக்கு நாக்கு தள்ளிப் போகிறது. குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க வேண்டுமே என்றும் கவலையாக இருக்கிறது.ஊரு கண்ணு, உறவு கண்ணு, பாவி கண்ணு, பரப்பா கண்ணு எல்லாம் படாமல் இருக்கட்டும் தூ! தூ! தூ!

பொருத்தமாக பாடலை இணைத்த கௌதமனுக்கு பாராட்டுக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

பாவம்.... சாப்பிடும் போது கூட வீடியோ எடுக்கணுமா! :)

பாடல் இணைப்பு நன்று!

'நெல்லைத் தமிழன் said...

காணொலி நல்லா இருக்கு. பொருத்தமான பாடலா என்பது சந்தேகம். (நகைச்சுவைக்காக என்றாலும்). பொதுவாக குழந்தைகள் சாப்பிடுவதை மற்றவர்கள் காணவிட மாட்டார்கள்.

உலகத்திலேயே குழந்தையைச் சிறப்பாக வளர்ப்பவர்கள் சைனா பெண்கள் என்று படித்திருக்கிறேன். ஆங்கிலக் குழந்தைகளைப் பொதுவாக வளர்ப்பவர்கள் employed வேலையாட்கள் (அதற்கெனத் திறமைபெற்ற). இதுவும் ஒரு நல்ல டாபிக். (சைனா அரச குடும்பக் குழந்தைகளைப் பால் கொடுத்து வளர்க்க, தனிப்பட்ட பெண்கள் உண்டு. அம்மா அதனைச் செய்வதில்லை. ஆங்கில அரச குடும்பங்களில், அவர்கள் பெரியவர்களாக ஆகும்வரை, ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் அதற்கெனத் திறமை பெற்ற ஆசிரியர்கள் உண்டு. பெற்றோருடன் அவ்வளவு நெருக்கம் இருக்காது. இந்தியக் குடும்பங்கள் பெற்றோர்கள் அவர்கள் இறப்புவரை மகனை, மகனாகவே எண்ணி வளர்க்கும் இயல்பு உள்ளவர்கள்)

Geetha Sambasivam said...

குழந்தையைத் தானாகச் சாப்பிட நன்கு பழக்கி இருக்கிறார்கள் தான்! ஆனாலும் ஏன் இவ்வளவு அவசரம்? கொஞ்சம் மெதுவாய்ச் சாப்பிடக் கூடாதோ! :( இந்த சீரியல்கள், சினிமா போன்றவற்றில் சாப்பிடுவதைக் காமெடி என்ற பெயரில் அள்ளிப் போட்டுக்கறாப்போல் காட்டுவாங்களே அப்படி இருக்கு! :(

Thulasidharan V Thillaiakathu said...

குழந்தை அழகு! சிரிப்பாக வந்தது. எடிட்டிங்கில் விளையாடியிருக்கிறார்கள்! ஆனால் குழந்தை சாப்பிடுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்களே பாவம்!!! குழந்தை...

கீதா : சாப்பிடும் போது அதான் கல்யாணங்களில் சாப்பிடும் போது வீடியோ எடுத்தாலே பிடிக்காது....ம்ம்ம் பாவம் குழந்தை..குழந்தை அழகுதான்!!! சைனாக்காரர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் சமர்த்தர்கள்...ஃபில்ம் ஃபெஸ்டிவலில் படம் கூட பார்த்தேன்...கிட்டத்தட்ட இந்தியக் குடும்பங்கள் போலதான்...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!