Sunday, December 4, 2016

ஞாயிறு 161204 :: யானையும் வானமும். யானையும் வானமும்.தாய்லாந்தில் யானையைத் தந்தத்திற்காகக் கொல்லக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. தந்தப் பொருட்களை வாங்குவதும் வைத்திருப்பதும் அங்கு தண்டனைக்குரிய குற்றம். 
யானைக்குத் தந்தம் வரமா சாபமா? கோவில்களில் யானைகளை நன்றாகப் பராமரிக்கிறார்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
(‘நாமூவங்க் சஃபாரி பார்க், தாய்லாந்த்)


படங்களும் தகவல்களும் நெல்லைத்தமிழன் 

22 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தாய்லாந்தை மற்றநாடுகளும் பின் பற்றிட வேண்டும் நண்பரே
தம =1

வெங்கட் நாகராஜ் said...

எந்த உடல் பகுதிக்காகவும் விலங்குகளைக் கொல்வது பரிதாபம் தான். அது யானையாக இருந்தாலும் சரி பூனையாக இருந்தாலும் சரி.

படம் அழகு.

பாரதி said...

தாய்லாந்தில் 'வீரப்பன்'கள் இல்லை....!!!

கோமதி அரசு said...

யானையும் , வானமும் அழகு.

திண்டுக்கல் தனபாலன் said...

தாய்லாந்து வாழ்க...

geethasmbsvm6 said...

ஆனையைப் பார்த்ததும் ஓடோடி வந்த என்னை ஏமாற்றிட்டீங்களே! :) அது சரி எந்த ஊர் நிலா?

Ramani S said...

தந்தம் காட்டில் யானைக்கு பாதுகாப்பு
மனிதர்கள் கண்களுக்குத்தான் அது...

Asokan Kuppusamy said...

வாழ்கதாய்லாந்து

middleclassmadhavi said...

யானைக்கு இளமையில் தந்தம் வரமாக இருக்கலாம், வயது முதிர்ந்த பின் சாபம் தான்!!
கோயில் யானைகள் நன்றாக பராமரிக்கப் படுவதாகத் தான் நான் நினைக்கிறேன். என் ஊர் கோயில் யானை நன்றாகவே பராமரிக்கப்படுகிறார்!!
படங்கள் அருமை!!

'நெல்லைத் தமிழன் said...

நன்றி ஸ்ரீராம் படங்களை வெளியிட்டமைக்கு. நன்றி கருத்துரைத்த அனைவருக்கும்.

தந்தம் ஆப்பிரிக்க யானையின் இரு பாலாருக்கும், ஆசிய யானையில் ஆண் யானைக்கு மட்டுமே உண்டு. இந்தோனேஷியா போன்றவற்றில், இரு பாலாருக்கும் தந்தம் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சண்டை போடும்போது தந்தத்தை உபயோகப்படுத்திப் பார்த்திருக்கிறேன்.

கீதா மேடத்துக்கு ஏமாற்றமளித்தது என்ன என்பது புரியவில்லை. இரண்டாவது செட் படங்கள், 'வானத்தில் மறையும் சூரியன், கடற்கரையில் விழும் சந்திரன்... இதில் சந்திரன் உண்மையானதல்ல.

மிடில்கிளாஸ் மாதவி-யானைகள் வாழ்விடம் காடு. அங்கிருந்து கொண்டுவந்து எங்கு வைத்திருந்தாலும், எப்படி வைத்திருந்தாலும், அவைகளுக்குச் சிறைதான். இந்த டாபிக் சென்டிமென்டை உள்ளடக்கியது. எப்படி இருந்தாலும், வாழ்விடத்திலிருந்து தனிமைப்படுத்திக் காட்சிப் பொருளாக வைக்கப்படும் எதுவும் பரிதாபத்திற்குரியதுதான்.

middleclassmadhavi said...

????
//யானைக்குத் தந்தம் வரமா சாபமா? கோவில்களில் யானைகளை நன்றாகப் பராமரிக்கிறார்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?// இதற்கு பதில் அளித்தேன்....ஙே,,,

'நெல்லைத் தமிழன் said...

மிடில்கிளாஸ்மாதவி-நீங்கள் சொன்னது சரிதான். எனக்குத் தோன்றியதை எழுதினேன். நம் மக்களால் (எல்லா தேசத்திலும்), தந்தம் என்பதே யானைக்கு ஒரு சாபமாகத்தான் இருக்கிறது. கோவில் யானைகளையும் முடிந்த அளவு நன்றாகத்தான் பராமரிக்கிறார்கள். ஆனால், அது தன் மனதில் என்ன நினைக்கிறது என்பதற்கு வழியில்லையே.. நன்றி.

Geetha Sambasivam said...

என்னோட கமென்ட் எங்கே? நெல்லைத் தமிழனுக்கு பதில் சொன்னதைக் காணோமே! !!!!!!!!!!!!

Geetha Sambasivam said...

@நெல்லைத் தமிழன், யானை குறித்த தகவல்கள் நிறைந்ததொரு கட்டுரையை எதிர்பார்த்திருந்தேன். இங்கே வந்தா படம் மட்டும் காட்டி இருக்கார். :)

Bagawanjee KA said...

கோவிலில் கட்டி வைத்தால் ஆண்மீகவாதியே விரும்பமாட்டான் ,பாவம் யானை ,அதன் சுதந்திரத்தை மனிதன் பறிப்பது :)

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

படங்கள் மிக அழகு. தாய்லாந்தில், யானை பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.தந்தங்கள யானைகளுக்கு ஒரு கம்பீரத்தை அளிக்கின்றன.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

G.M Balasubramaniam said...

குருவாயூரில் ஒரே இடத்தில் சுமார் நாற்பது யானைகளைப் பராமரிப்பதைப் பார்த்திருக்கிறேன்

G.M Balasubramaniam said...

யானைகளில் சிலவற்றை மோழை என்கிறார்கள் அவை ஆணும் அல்ல பெண்ணும் அல்லவாம்

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் அழகோ அழகு!!! நெல்லைத் தமிழன்!

கீதா: யானைகளை நம்மூரில் பராமரிப்பது மிகவும் குறைவு. முதலில் அவற்றை கோயில்களில் வைத்து மனிதர்களின் விருப்பத்திற்கு அவற்றை இயக்குவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...அப்படி அவற்றை இயக்குவதற்கு அங்குசத்தால் குத்துவதும்...ம்ம்ம்

தாய்லாந்தில் யானையுடன் அவற்றின் சூழ்நிலையில் காட்டில் தங்கியிருந்து அவற்றிற்கு நம்மால் முடிந்த அளவு சேவை செய்து உணவளித்து என்று 2, 3 வாரங்கள் என நினைவு... சுற்றுலா செல்பவர்கள் மற்றும் நாலுகால் பிரியர்களை மகிழ்விக்கவும் தாய்லாந்துநாடு வகை செய்துள்ளாத அறிய நேர்ந்தது. தாய்லாந்து யானைகளுக்குப் புகழ் பெற்றதாயிற்றே!!

கடைசிப் படம் புகைப்படம் மாதிரித் தெரியவில்லையே...!!! கிமிக்ஸ்

'நெல்லைத் தமிழன் said...

கீதா ரங்கன் - கடைசிப் படம் புகைப்படம்தான். மணலில் இதுபோன்ற உருண்டை விளக்குகளை எரியவிட்டிருந்தார்கள். வயர்கள் மணலுக்குள் புதைக்கப்பட்டிருந்தது. கடற்கரை மணல் முழுவதும் நிறைய இத்தகைய விளக்குகளை வைத்திருந்தார்கள். பார்க்க, நிறைய சந்திரன் மணலில் விழுந்துகிடப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

யானை, இவ்வளவு பெரிய தந்தத்தை வைத்துக்கொண்டு, எப்படி நிம்மதியாகப் படுத்துறங்கும்? (ஒருவேளை கீழே உட்கார நினைத்தால்)

பரிவை சே.குமார் said...

யானைக்கு பெரிய தந்தங்கள் என்பது சிரமமே...
ஆனாலும் பழகப் பழக பழகிவிடும்தானே... :)

தாய்லாந்தை எல்லா நாடும் பின்பற்றினால் நலமே...

மாதேவி said...

தாய்லாந்து யானைகள் கொடுத்துவைத்தவை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!