Friday, December 29, 2017

வெள்ளி வீடியோ 171229 : சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சுமன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவு எப்படி சாட்சி ஆகுமோ? 

Wednesday, December 27, 2017

171227 வார வம்பு


     சென்ற வார வம்பு பகுதியில் பலரும் தெரிவித்திருந்த கருத்து, நோட்டுக்கு வோட்டு தவறு, ஆரோக்கியமான நிலை அல்ல என்பதுதான்.  

Tuesday, December 26, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : வாசுதேவி - நெய்வேலி மாலா - சீதை 32


     ராமனை மன்னிக்கப் போகும் இன்றைய சீதை நெய்வேலி மாலாவின் படைப்பு.    இவர் முன்பு கூறாமல் சன்யாசம் என்கிற பெயரில் நமது தளத்தில் ஒரு சிறுகதை கேவாபோ வுக்குக் கொடுத்திருக்கிறார்.
   

Saturday, December 23, 2017

மரிக்காத மனிதம்
1)  மாற்றி யோசித்த மாற்றுத் திறனாளியின் புதுமை முயற்சி. 

Friday, December 22, 2017

வெள்ளி வீடியோ 171222 : காசுபணம் சந்தோஷம் தருவதில்ல வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்ல     2007 இல் வெளிவந்த படம் ஒன்பது ரூபாய் நோட்டு.  பரத்வாஜ் இசை.  ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் என்று நினைவு.  

Thursday, December 21, 2017

Wednesday, December 20, 2017

171220 வம்புப் பேச்சு !


சென்ற வார வம்பு பகுதியில் தனி / கூட்டுக் குடித்தனம் எல்லோருமே அழகாக ஆணித்தரமாக இயல்பாக கருத்துகள் கூறியிருக்கிறார்கள். கீதா ரெங்கன் நிறைய கருத்துகள் கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் உண்மைகள், நெல்லைத் தமிழன், ஏகாந்தன், கீதா சாம்பசிவம் , பானுமதி வெ, அதிரடி அதிரா, ஏஞ்சலின், பரிவை சே குமார் ......  வாவ் ..... நீளமான பட்டியல் ...... எல்லோருக்கும் நன்றி.


இந்த வார வம்பு கேள்வி:


தேர்தல்களில், குறிப்பாக இடைத் தேர்தல்களில், வோட்டுக்கு நோட்டு / நோட்டுக்கு வோட்டு என்ற மனோபாவம் வந்துள்ளது.

இது ஆரோக்கியமான நிலையா?

தவிர்க்க வேண்டிய நிலை என்றால்,  எப்படி தவிர்க்கலாம்?

(நான் 1971 முதல், இதுநாள் வரை என்    தொகுதியில் நடந்த எல்லா தேர்தலிலும் ஓட்டுப்  போட்டுள்ளேன் . எந்த தேர்தலிலும் பணம் வாங்கியது இல்லை. எந்தக் கட்சியும் கொடுத்த எந்த இலவசப் பொருளையும் வாங்கியதில்லை.  )

Tuesday, December 19, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : குடிகாரன் மனைவி - பரிவை சே. குமார்.     இன்றைய கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் மனசு குமார் எழுதிய சிறுகதை வெளியாகிறது. 

Monday, December 18, 2017

"திங்கக்கிழமை : கோஸ் குடைமிளகாய் பொரியல் / jamaican style sweet pepper and cabbage poriyal - ஏஞ்சலின் ரெஸிப்பி

இது ஜமைக்கன் நாட்டு ரெஸிப்பி ..  எங்க நண்பர் குடும்பம் ஒரு முறை செய்து தந்தாங்க . 

Sunday, December 17, 2017

ஹர்பஜன் பாபாWednesday, December 13, 2017

புதன் 171213 வார வம்பு


சென்ற வார வம்பு பகுதியில் பங்கேற்று கருத்துக்களைப்  பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி. குறிப்பாக அவர்கள் உண்மைகள் , நெல்லைத் தமிழன், ஏகாந்தன் , கீதா , ஆகியோரது கருத்துகள் சிந்திக்க வைத்தன.

Monday, December 11, 2017

திங்கக்கிழமை :: குழிப்பணியாரம், தேங்காய் பர்பி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி -


தேங்காய் பர்பி என்பது பாரம்பர்யமான இனிப்பு. நிறைய கடைகளில் இதனைக் கெடுத்துவைத்திருப்பார்கள். இது ரொம்ப சுலபமான இனிப்பு வகை. எனக்குத் தெரிந்த வரையில் அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸில் பாரம்பர்யமாகச் செய்வதுபோல் தேங்காய்பர்பி கிடைக்கும்.  

Sunday, December 10, 2017

Friday, December 8, 2017

வெள்ளி வீடியோ 171208 : ஒன்றுபட்ட இதயத்திலே ஒருநாளும் பிரிவு இல்லை
   திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபின் உங்கள்  இளமைக் காலத்தை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?   

Thursday, December 7, 2017

தமன்னா(வுக்கு) ஒரு கவிதைசென்னையில், போலீசாரின் பிடியில் சிக்காமல், புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார் பாரதியார். புதுவையில் இருந்தபடியே, மீண்டும், 'இந்தியா' பத்திரிகையை துவக்கினார். 

Wednesday, December 6, 2017

புதன் 171206 வார வம்புசென்ற வார வம்பு பகுதியில் பங்கேற்று பல கருத்துகளை ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கிற எல்லோருக்கும் நன்றி.   

Monday, December 4, 2017

"திங்க"க்கிழமை : கீரை வடை - அதிரா ரெஸிப்பி


கீரை வடை - அதிராஸ் ஸ்பெஷல்:)  

Friday, December 1, 2017

வெள்ளி வீடியோ 171201 : பொய் சொல்லி விட்டு நிம்மதியாக இருக்க முடியுமா?     சில சமயங்களில் - சில சமயங்களில்தான் - விளம்பரங்களையும் ரசிக்க முடியும்.   

Thursday, November 30, 2017

கடவுளே... இதுங்களை நீதான்பா காப்பாத்தணும்....      பகுத்தறிவுத் திருமணங்களில் தலைமை தாங்கும் அரசியல்வாதியின் பேச்சில் அரசியல் தூக்கலாகவும், வாழ்த்துரை கம்மியாகவும் இருக்கும்.   

Wednesday, November 29, 2017

புதன் கேள்வி 171129 வார வம்பு!


சென்ற வாரக் கேள்விக்கு பெரும் அளவில் பங்கேற்று, பல வித்தியாசமான சுவையான கருத்துப் பரிமாற்றங்கள் செய்த உங்கள் எல்லோருக்கும், எங்கள் நன்றி. 


எனக்கு விசித்திரமாக தோன்றுகின்ற ஒரு கருத்து,

'தமிழனை, தமிழன்தான் ஆளவேண்டும்' என்கிற கருத்து. 

அந்தக் கருத்தை முன் நிறுத்துவோருக்கு, பல காரணங்கள் இருக்கலாம். 

நான் கொஞ்சம் விசித்திரமாக யோசிப்பவன். 

அதனால, தமிழனை, தமிழன்தான் ....... கருத்தைக் கொஞ்சம் கிள்ளிப் பார்க்கின்றேன். யாரும் வேதனை கொள்ளாதீர்கள்! 


# தமிழகத்தில் தமிழனிடம் திருடுவோர் தமிழனாகத்தான் இருக்கவேண்டும். 

# தமிழகத்தில் தமிழர்கள் மட்டுமே தொழில் செய்யலாம். 

# தமிழர்கள் பிற மாநில மக்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாது. 

# தமிழகத்தில் ஆங்கிலம் உட்பட பிற மொழிப் பத்திரிக்கைகள், சினிமா ஆகியவை வரக்கூடாது.

# தமிழ் நடிகர்கள், தமிழ் நடிகைகள் நடித்த படங்கள் மட்டுமே தமிழகத்தில் வெளியிடப்படவேண்டும். 

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். 

உங்கள் கருத்து என்ன? 

(கோபப்படாம கருத்து சொல்லுங்க!)  Tuesday, November 28, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாளா? கீதா ரெங்கன் - சீதை 29


     சீதை ராமனை மன்னிக்கும் தொடரில் தனது  இரண்டாவது படைப்பைத் தருகிறார் கீதா ரெங்கன்.

Friday, November 24, 2017

வெள்ளி வீடியோ 171124 : சூரியனைப் பார்த்து இந்த நாய் குரைத்தது
     தேங்காய் சீனிவாசன் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  

Wednesday, November 22, 2017

புதன் கேள்வி 171122சென்ற வாரம் போட்டது புதிர் அல்ல. சிறு குறிப்பு வரைதல் மட்டுமே!

பெரும்பான்மையான வாசகர்கள் பங்கேற்று, மிகச் சிறப்பான கருத்துகளைப் பதித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.

அந்தக் காலத்தில் சிவாஜியும் எம்ஜியாரும்தான் சினிமா , அரசியல் ரசிகர்களிடையே (!) மிகவும் பேசப்பட்டவர்கள்.

எங்கள் குடும்பத்தில் பெரும்பாலும் சகோதரர்கள் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள். ஆனால் எல்லா திருமதிகளும் எம்ஜியார் ரசிகைகள் !

அப்புறம் நாங்களும் அத்வைதிகள் ஆகிவிட்டோம்! 

இந்த வார புதன் கேள்வி : 

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ? உங்கள் அபிப்பிராயம் என்ன ? ஏன்? 

உங்கள் கருத்துகளை யார் மனமும் புண்படாத வகையில் பதிவு செய்யுங்கள். 

என் கருத்து : 

மாநில மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். இதில் படித்தவர், படிக்காதவர், நடிகன் , நடிகை என்று பேதங்கள் பார்க்கத் தேவையில்லை. 


Tuesday, November 21, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : காதல் தீயே.. - பூவிழி - சீதை 28இந்த வார 'சீதை ராமனை மன்னிக்கும்' கதையை எழுதி இருப்பவர் பூவிழி.

Monday, November 20, 2017

"திங்க"க்கிழமை - ஜீரக ரசம் (ஜீராமிளகு சாத்துமது) - நெல்லைத்தமிழன் ரெசிப்பிரொம்ப சுலபமா, அதே சமயம் குளிர் காலத்துக்கு ஏற்ற ரசம், ஜீரா மிளகு ரசம்.

Friday, November 17, 2017

வெள்ளி வீடியோ171117 : பாடல் பாடி விவாகரத்தை ரத்து செய்து கொண்ட கணவர்     நண்பர் ஒருவர் அனுப்பிய காணொளி.   பார்க்க சற்றே செயற்கையாகத் தெரிந்தாலும் ரசிக்க முடிகிறது. 


Thursday, November 16, 2017

ரசித்த வரிகள் - இறந்த பின்னும் நினைவு கொள்ள...


​     ரசித்த வரிகள் என்பது சிலசமயம் ஒருவரி மட்டுமாய் இருந்துவிடும். 

Wednesday, November 15, 2017

புதன் தி ர் பு 171115


   
சென்ற வாரக் கேள்விகளுக்கு சிறப்பாக, சரியான பதில்கள் சொல்லிய பால கணேஷுக்கு வாழ்த்துகள் !

இந்த வாரம்: 

சிறு குறிப்பு வரைக! 


Tuesday, November 14, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : அவளும் நோக்கினாள் - ராமலக்ஷ்மி - சீதை 27​​
     இந்த வாரம் திருமதி ராமலக்ஷ்மியின் கற்பனையில் ஒரு சீதை தன் ராமனை ஏன், எதற்கு, எப்படி மன்னிக்கிறாள் என்று பார்ப்போம்.  

Friday, November 10, 2017

வெள்ளி வீடியோ : மரகதப் பொன்மேனி மாணிக்கமோ
நினைவிலே மனைவி என்று  

Wednesday, November 8, 2017

த பு ன் 171108


சென்ற வாரத்தில் சீரியசா ஒன்னும் கேட்கலை. 

சுவையான பதில்களைப் பதிந்த 


கில்லர்ஜி , மி கி மா , துளசிதரன், கீதா சாம்பசிவம் , பூவிழி , கோமதி அரசு, வாசுதேவன் திருமூர்த்தி ஆகியோருக்கு நன்றி!.


Friday, November 3, 2017

வெள்ளி வீடியோ 171103 : உண்ட பக்கற மார பக்கற ஹோய் ஹோய் ஹோய்
     எப்போப் பார்த்தாலும் இலக்கியமாகவே பாடல்களை ரசிக்க முடியுமா?  லுங்கியை மடிச்சு கட்டி, கொட்டும் மழையில் ஒரு கெட்ட ஆட்டம் போடவேண்டாம்?  

Wednesday, November 1, 2017

தன் புதி புர் 171101 செ வா எ பெசென்ற வாரம் எல்லோரும் ஃபெயில். 

கிளாஸ்ல எல்லோருமே பெஞ்சு மேல ஏறி நின்னா,  நான் யாருக்குப் புதிர் போடுவது? Tuesday, October 31, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : இதன் பெயர் என்ன - காமாட்சி மகாலிங்கம் - சீதை 25     இந்த வார சீதை ராமனை மன்னிக்கும் கதைக் கற்பனையில் காமாட்சி அம்மா படைப்பு இடம் பெறுகிறது.  

Monday, October 30, 2017

"திங்க"க்கிழமை 171030 : ஸ்வீட் ரெசிப்பி - கீதா ரெங்கன்


ஆண்கள் தங்கள் ஸ்வீட் மனைவியை அசத்த ஒர் எளிதான ஸ்வீட்!   வணக்கம் நண்பர்களே! ஸாரி வரதுக்கு லேட்டாகிப் போச்சு! நீங்க எல்லாம் வெய்ட் பண்ணிட்டிருப்பீங்கனு தெரியும். (அதாங்க ஏஞ்சல், அதிரா, ஸ்ரீராம், நெல்லை, மதுரை, கில்லர்ஜி, எல்லாரும் வெயிட்டிங் அடுத்த ரெசிப்பி செய்ய). அதை ஏன் கேக்கறீங்க இந்த நவராத்திரி ரவுன்ட்ஸ் சென்னை ரோட்ல சுத்திச் சுத்தி 'ஹப்பா'னு ஆயிடுச்சு. அதான் கொஞ்சம் லேட்.

Sunday, October 29, 2017

சங்மா ஏரியும், ஏரியோர வீடும், மேலே மேகங்களும்...சில சமயம் கல்யாண வீடுகளில் எடுக்கப்படும் படங்களில் திரும்பத்திரும்ப பார்த்த முகங்களே வேறு வேறு ஆடைகளிலும் வெவ்வேறு நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் இருக்கும்போது எடுக்கப்பட்டவற்றை மீண்டும் மீண்டும் பார்த்த    ஆல்பப்பக்கங்களையே பார்க்கும் எண்ணம் தோன்றும்.  

Saturday, October 28, 2017

Friday, October 27, 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 171027 :: அ ர வை வ இபோன வெள்ளிக்கிழமை நம்ம எல்லோரும் சேர்ந்து, எப்படி எப்படியோ வம்புக்கு இழுத்தும், அனுஷ்கா ரசிகர் இந்தப் பக்கம் வரவில்லை. 

இப்போ அனுஷ்காவே வந்துட்டார். 

பிலஹரியில் பாடி ஆடுகிறார். 

பாட்டில் பாஹுபலி தூங்கட்டும்; ஆட்டத்தில் அனுஷ் ரசிகர் எழட்டும்! 

உங்களுக்குப் புரியாத மொழியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு நன்றாகப் புரியும்! 

இப்போ பார்க்கலாம் அவர் என்ன செய்கிறார் என்று! 

அதிரா, ஏஞ்சலின், கீதா எல்லோரும் வாங்க ! அ.ர வை வம்புக்கு இழுப்போம்! 

ஸ்டார்ட் மியூசிக்! 

இப்படிக்கு 

பா. ர.          
     

Thursday, October 26, 2017

சும்மா ஒரு பேச்சுக்கு ... வெட்டி அரட்டை!


எச்சரிக்கை: "மனோ தத்துவப் பதிவு."
Don't get emotional. Think logically. 

-------------------

இங்கே காணப்படும் பெயர்கள் , சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் இறுதியில் ஒரு கேள்வி உள்ளது. பதில் பதியுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, October 25, 2017

தி ர் பு ன் த பு 171025சென்ற வாரப் புதிரின் விடை பூசணி அல்வா. சரியான பதில் சொன்னவர்கள் எல்லோருக்கும் அல்வாதான்!


Tuesday, October 24, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : அழகு ரதம் பிறக்கும் - கோமதி அரசு - சீதை 24     இந்த வார கேட்டு வாங்கிப்போடும் சீதை ராமனை மன்னிக்கும் தொடரில் திருமதி கோமதி அரசு மேடம் எழுதி இருக்கிறார்.  

Saturday, October 21, 2017

பெங்களூரு ஜெயம்மா1) திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தளத்தில் படித்த ஒரு நேர்மறைச்செய்தி.

Friday, October 20, 2017

வெள்ளி வீடியோ 171020நான் சிரிச்சா ........Wednesday, October 18, 2017

பு ர் ன் தி த பு 171018எல்லோருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

Image result for deepavali flower pot gif

சென்ற வாரக் கேள்விகளுக்கு , நான் நினைத்திருந்த பதில்கள் :

1) F (leaving the vowels in alphabetic order)

2) 11 (completing the date in title)

3) where. In the question what comes after where.


Tuesday, October 17, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ராமனைத் தேடிய சீதை - துரை செல்வராஜூ - சீதை 23     சீதா - ராமன் கதையில் இன்று திரு துரை செல்வராஜூ அவர்களின் படைப்பு....


======================================================================

ராமனைத் தேடிய சீதை
துரை செல்வராஜூ


திடுக்கிட்டு விழித்த அழகு - அழகேசன் மேலே வானத்தில் நட்சத்திரங்களைப்
பார்த்து கணக்கிட்டார்...

உத்தேசமாக பன்னிரண்டு மணியைத் தாண்டியிருக்கலாம்..

தலைமாட்டுக்கு அருகில் இருந்த சொம்பு தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தார்..

ஒரு வாய் குடித்தார்... அருகிருந்த வெற்றிலையை எடுத்து நீவியபோது -

லோவ்...லோவ்ஹ்!...லோவ்... லோவ்ஹ்!.. - என்றபடி வேலிப்பக்கம் பாய்ந்தது நாய்..

டேய்.. என்னாது?.. - கூவினார்..

வேலிப் படலின் அந்தப் பக்கம் யாரோ நிற்பது போலத் தோன்றியது..

யாரது.. அங்கால.. வேலி ஓரமா?..

நாயின் குரைப்பு அடங்கவில்லை...

மெல்ல நகர்ந்தாற் போலிருந்தது..

யாரது..ன்னு கேக்குறனில்லை?...

அழகு... நாந்தான்.. ராமையா!..

ஏ.. என்ன இந்த நடுச் சாமத்தில.. ஒனக்கும் தூக்கம் வரல்லையா?..- என்றவர்,
டேய்.. சும்மா குலைக்காம இரு!..  - என்று நாயை அதட்டினார்..

என்ன புரிந்து கொண்டதோ என்னவோ -
நாய் மறுபடியும் வைக்கோல் போருக்குள் முடங்கிக் கொண்டது...

வா... ராமையா.. உக்காரு!.. தண்ணி குடிக்கிறியா?..

கொடு.. கொடு.. ஒரே காந்தலா இருக்கு!.. - என்றவாறு தண்ணீரை வாங்கிக்
குடித்தார் - ராமையா...

ராமையா.. உனக்கு உடம்புக்கு ஆகலை..ன்னு கேள்விப்பட்டேன்...

அதெல்லாம் சரியாப் போச்சு...

இப்ப என்ன எழுவது இருக்குமா நமக்கு?..

எழுபத்தொன்னு நடக்குது!...

வயசு ஆகிட்டாலே தொந்தரவு தான்!...

சீக்கு பிணி... நோய் நொடி... இனிமே ஒன்னும் கிடையாது...

டாக்டர் சொன்னாரா!...

டாக்டரு வேற சொல்லணுமாக்கும்!.. நமக்கே தெரியாதா?...

இப்ப வக்கணையா பேசுவே!.. அன்னைக்கு அஞ்சாங்கிளாஸ் படிக்கிறப்ப
அம்மைப்பால் ஊசிக்குப் பயந்து வேலிய முறிச்சிக்கிட்டு ஓடினவன் தானே
நீ!...

ஆனா.. பாரு!.. பத்து வயசுல அம்மைப்பால் ஊசிக்குப் பயந்தேன்..
பதினெட்டு வயசுல வாள்பட்டரை...ல ஏழடி நீளத்துக்கு வாள் புடிச்சி
மரத்தையெல்லாம் சப்பை சப்பையா அறுத்துப் போட்டேன்.. அதெப்படி!..
அதெல்லாம் அந்த அந்த வயசு!..

நீ மட்டுமா!.. நானுந்தானே வந்தேன்!.. ரெண்டு பேரும் தானே வாள்பட்டரை
வேலைக்குப் போனோம்... நான் மேல அறுப்பு.. நீ கீழ இழுப்பு!.. அடடா!..
என்னா வேலை.. என்னா வேலை!..

நாள் முழுக்க வாள் அறுப்பு போட்டா இருபத்து நாலணா. - ஒன்னரை ரூபாய்
கொடுப்பாரு நல்லமுத்து ஆசாரி... நல்ல மனுசன் இல்லே!..

அந்த மாதிரி மனுசனுங்க எல்லாம் அந்தக் காலத்தோட சரி!..

சற்று நேரம் இருவரிடத்தும் மௌனம்...

எனக்கென்னமோ நம்மால தான் ஆசாரி மனசு உடைஞ்சிட்டாரோ..ன்னு இருக்கும்...

நாம என்னா தப்பு செஞ்சோம்.. அழகு?...

ஒரு தப்பும் செய்யலை தான்!.. ஆனா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!...

என்னா..ன்னு சொல்றது.. எப்படிச் சொல்றது?.. அதைச் சொல்றதுக்கான காலமா
அது?.. சொல்லியிருந்தா நம்மளை உசுரோட விட்டுருப்பானுங்களா நம்ம ஆளுங்க?..

நம்ம பிரச்னையை விடு.. அந்தப் புள்ளைய.. சும்மா விட்டுருப்பானுங்களா?...

மீண்டும் அவர்களிடத்தில் மௌனம்...

அந்த வேளையில் இருவரது நினைவிலும் வந்தவள் - பொன்னரும்பு..

நல்லமுத்து ஆசாரியாரின் செல்ல மகள்..

இவர்களை விட ஒரு வயதே இளையவள்...

அழகு.. என்றால் அழகு.. அப்படியொரு அழகு.. கடைந்தெடுத்த சிற்பம் போல!..
நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

உச்சி வேளையில் கலயத்தில் அப்பனுக்கும் அறுப்புப் பட்டரை ஆட்களாகிய
ராமையனுக்கும் அழகேசனுக்கும் கஞ்சி கொண்டு வருவாள்...

நாரத்தங்காய் ஊறுகாய்... நெனைச்சாலே வாய் ஊறும்!..

எருமைத் தயிர்..ல கரைச்ச பழைய சோறு .. சுட்ட கருவாடு..
இல்லேன்னா.. வறுத்து அரைச்ச மிளகாய் துவையல்..

அப்போதெல்லாம் முழுத் தேங்காயே ஒரு அணா தான்..
ஆனாலும், தேங்காய் எல்லாம் நல்ல நாள் பெரிய நாளைக்குத் தான்...

பனை ஓலைல மடக்கு செஞ்சி ஆளாளுக்கு ஒன்னு கையில கொடுத்துட்டு
அந்தப் பழைய சோத்தை மறுபடியும் நல்லா பிசைஞ்சு கையால அள்ளி ஓலை
மடக்கு...ல வைப்பாள்...

சோறு எடுத்து வைக்க அகப்பை இருந்தாலும்
கையால் அள்ளி வைப்பதில் தான் அவளுக்கு சந்தோஷம்..

தளரத் தளர தயிர்சோறும்... முளைக்கீரையும்...
வெயில் நேரத்துக்குக் குளுகுளு..ன்னு இருக்கும்....

யம்மாடி.. சாப்பிடியாடி.. தங்கம்?.. நீயும் ரெண்டு வாய் சாப்பிடும்மா...
எஞ் சீத்தாலச்சுமி!.. - பாசம் மேலிடக் கொஞ்சுவார் நல்லமுத்து..

பொன்னரும்பு..ன்னு பேரு.. ஆனா கூப்பிடுறதெல்லாம் சீத்தாலச்சுமி!...

ஆச்சு.. அவளுக்கும் கல்யாணம் முடிக்கிற வயசு தான்... தாயில்லாம
வளர்ந்துட்டா!... நல்லவனா மாப்பிள்ளை கிடைக்கணுமே!... - என்று தவித்துக்
கொண்டிருந்த போது தான் இவர்கள் இரண்டு பேரும் வேலைக்கு வந்தார்கள்...

கஞ்சி கொண்டு வந்த வேளையில் ஒருநாள் பொன்னரும்பும் ராமையனும் கண்களால்
கலந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்...

இது எங்கே போயி முடியுமோ..தெரியலையே!...

சீத்தாலச்சுமிக்கும் ராமையனைப் பார்க்கிறதுன்னா கொள்ளை ஆசை...

இது அழகேசனுக்கும் சாடை மாடையா தெரியும்...

பையன் கெட்டிக்காரன்.. பொழச்சுக்குவான்.. இருந்தாலும் வாயத் திறந்து
கேக்க வேணாமா?.. - நல்லமுத்து ஆசாரி மருகினார்...

மகளைக் கோவிச்சுக்கிறதா?.. தாயில்லாப் புள்ளை... திடுக்...ன்னு
அழுதுட்டா.. எம்மனசு சல்லி சல்லியா ஒடைஞ்சி போகுமே... பெத்தவ இருந்தா
பொறுப்பா கேட்டு சொல்லுவா!.. நான்.. என்ன பண்ணுவேன்!... - மனம்
தடுமாறினார்...

அன்னைக்கு ராத்திரி..
குடிசை வாசல்ல ஓலைப் பாயில படுத்துக் கிடந்தார் நல்லமுத்து -

சீத்தாலச்சுமியும் தூங்கவில்லை...
பசுஞ்சாணம் இட்டு மெழுகிய திண்ணையில் புரண்டு கொண்டிருந்தாள்..

யம்மாடி.. சீத்தா.. சீத்தாலச்சுமி!..

ம்.. என்னப்பா?..

இங்க வாயேண்டி செல்லம்!.. காலெல்லாம் நோகுதுடா...
அந்த தைலத்தைக் கொஞ்சம் தேய்ச்சி விடேன்!...

காய்ச்சிக் கொண்டாரவா.. அப்பா?..

அதெல்லாம் வேண்டாம்.. சும்மாவே தேய்ச்சி விடுடா!...

தைலத்தை எடுத்து வந்து அப்பனின் கால்களில் தேய்த்து
- இதமாக அழுத்தி விட்டாள்...

மகளின் மீது பாசம் மிகுந்து வர - மளுக்...கென நல்லமுத்து விசும்பினார்...

அப்பா... என்னது.. ஏன் அழுவுறீங்க?.. - சீத்தாலச்சுமி திகைத்தாள்..

இன்னும் எத்தனை நாளைக்கோ எம் பொழப்பு...
ஒன்னை ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுத்திட்டா நல்லா இருக்கும்!...

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நான் உங்க கூடவே இருக்கேன்..

அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ராசாத்தி..
ஊரு ஒலகம் என்ன சொல்லும்?...

..... ..... .....

அப்பன் இப்படிக் கேக்கிறானே..ன்னு தப்பா நெனைக்காதே...ம்மா!.. வாள்
பட்டரைக்கு வருதே ராமையன்... மனசுக்குப் புடிச்சிருக்கா!..

அதெல்லாம் ஒன்னுமில்லை...

நீ சொல்லாட்டாலும் அப்பனுக்குத் தெரியாதா... ம்மா?...

அதெல்லாம் வேண்டாம்..ப்பா.... அவங்கள்ளாம் பணக்காரங்க!..

ராமையனோட அப்பாரு காந்தி கட்சி... நல்லவரு.. பெரிய மனசு...

உங்க இஷ்டம்.. - விருட்.. என எழுந்து உள்ளே போனாள் சீத்தாலச்சுமி...

நமக்கு உறவுமுறை இல்லே... இருந்தாலும்,
விடிஞ்சதும் போய்ப் பேசுவோம்.. தைரியம் கொடுடி.. மகமாயி!...

வானத்தில் நட்சத்திரங்கள் இடம் மாறியிருந்தன..

விடியலில் விழித்தெழுந்த நல்லமுத்து
எதிரில் ராமையனின் தந்தை வருவதைக் கண்டார்...

வாங்க ஐயா.. விடியல்..ல என்ன அவசரம்.. சேதி சொன்னா வந்திருப்பனே!..

நல்லமுத்து.. நாளன்னைக்கு நம்ம வீட்டு...ல விசேசம்.. ராமையனுக்கு எங்க
அக்கா மகளைக் கட்டுறதுன்னு!... பந்தக்கால் நாட்டணும்.. நீ தான்.. முன்னால
நின்னு எல்லாம் செய்யனும் .. உம் மகளை அழைச்சுக்கிட்டு வந்துடு!..

குடிசைக்குள் சீத்தாலச்சுமியின் விசும்பல்...
நல்லமுத்துவின் கண்களில் நீர் வழிந்தது...

அன்றைக்கு சாயங்காலமாக நல்லமுத்து உரல் ஒன்றை செதுக்கிக் கொண்டிருக்க
அருகே பட்டைகளை அள்ளிக் கொண்டிருந்தாள் சீத்தாலச்சுமி..

ராமையனும் அழகேசனும் ஒன்றாக வந்தனர்..

ஆசாரியாரே.. அப்பா சொல்லியிருப்பாங்க.. இனிமே வேலைக்கு வர்றதுக்கு
தோதுப்படாது.. குற்றங்குறை செஞ்சிருந்தா மன்னிச்சுக்கணும்!...

நல்லாயிருப்பீங்க.. தம்பீ.. நல்லாயிருப்பீங்க!..

மெல்ல நிமிர்ந்தான் ராமையன்...

மருத மரத்தின் மறைவில் சீத்தாலச்சுமி..

அவள் கண்களில் கண்ணீர்..

இப்பவாவது ஒரு வார்த்தை சொல்லேன்!.. - கண்ணீர்த் துளிகள் கெஞ்சின..

ராமையனுக்கு நெஞ்சில் உரம் இல்லாமல் போனது..

அடுத்த சில மாதங்களில் சீத்தாலச்சுமிக்கும் கல்யாணம் கூடிவந்தது..

நம்ம குடியானவன் வீட்டு கல்யாணம் என்று ஊரே கூடி வாழ்த்தியது..

வீட்டுக்கு வீடு சீர் வரிசை வைத்தார்கள்... கல்யாணம் முடிந்த கையோடு
மாமனாரையும் அழைத்துக் கொண்டு போனான் மாப்பிள்ளை...

வெயிலும் மழையுமாய் காலம் வெகு வேகமாக ஓடிப்போனது..

தொண்டையைக் கனைத்துக் கொண்டார் அழகு..

அதுக்கு அப்பறம் சீத்தாலச்சுமி..ய பார்த்தியா நீ!..

மாயவரம் பஸ்டாண்டுல ஒரு தரம்.... ஆனா, அவ என்னை கவனிக்கலை...

எம் மனசு உடைஞ்சு போச்சி அழகு.. அந்த ஏழை மனசு என்ன நெனைச்சதோ?..
நேருக்கு நேர் பார்க்கிற தைரியம் வரலையே!..

ஒரு தரம் மட்டையில சோறு அள்ளி வைக்கிறப்ப -
போதும்! ..ன்னு நான் கையை நீட்டினேன்.. அவசரத்துல அவ கையோட
என் கை பட்டுக்கிச்சு... அதுக்கே மூனு நாள் தூங்காமக் கிடந்தேன்...

அதுக்கு அப்புறம் ஒருதரம் கோடாலி கால்..ல விழுந்தப்ப தாவணியக் கிழிச்சு
கட்டி விட்டா... என் காலைத் தொட்டவளை நான் கை தூக்கி விடலையே...ந்னு
மனசு நோகுது...

அன்னைக்கு இருந்த காலக்கட்டத்தில கன்னிப் பொண்ணுங்களப் பார்க்கிறதே பெரிய
விஷயம்!... அதுவும் உங்க வசதிக்கும் அவங்க இருந்த நிலைமைக்கும்!..

என்ன பணமோ.. என்ன கௌரவமோ?.. கடைசியில என்னத்துக்கு ஆகும்?.. போற உசிரை
புடிச்சு நிறுத்துமா?...

அழகு!.. எம்மேல அவ ஆசை வெச்சிருக்கா... ன்னு தெரிஞ்சும் அவ கூட ஒரு
வார்த்தை கூட பேசாம வந்தேனே!... அவ மனசு எப்படி துடிச்சதோ?.. அந்தப்
பாவம் சும்மா விடுங்...கிறே!...

நீ.. உங்க வீட்டுல ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்..

அப்பாருகிட்டே சொன்னா.. என்னைய இழுத்துப் போட்டு ஒதைக்கிறதும் இல்லாம -

ஆசாரியார் வீட்டுக்குப் போயி அங்கேயும் கலாட்டா செய்வாங்க..ன்னு நான்
பயந்திட்டேன்...

எம் மாமன் வகையறாவோ - மகா முரடனுங்க!..

ஏழைய இந்த ஊரு அம்பலத்தில ஏத்தாது... நான் என்னடா செய்வேன்!...

எல்லாத்தையும் மறந்துட்டதா ஒரு பொழப்பு...
அதுக்காக இவளுக்கு எந்த குறையும் வைச்சதில்லை...

ஆலா குருவி மாதிரி அப்பப்போ சீத்தாலச்சுமியோட நினைப்பு
மனசு ஓரமா வரும்... தொண்டைக் குழியை கப்புன்னு அடைச்சிக்கும்...

இனிமே எந்த பிரச்னையும் இல்லை...

சீத்தாலச்சுமி என்னை மன்னிச்சிருப்பாளா?... ன்னு தவிச்சிக் கிடந்தேன்...
அன்னைக்கு அவ வந்தா.. பதினெட்டு வயசுல பார்த்த மாதிரியே வந்தா!...

என்னது.. சீத்தாலச்சுமி வந்தாளா?.. என்னா சொல்றே!..

அதெல்லாம் சொன்ன உனக்கு வெளங்காது அழகு!..

சீத்தாலச்சுமி ஏன் வந்தா?.. எதுக்கு வந்தா?..
என்னை மன்னிச்சிட்டதால அவ வந்தா!...
என் நிலமை அவளுக்குப் புரியாமலா இருந்திருக்கும்?...
அவளப் பார்த்ததும் என் கண்ணு கலங்கிப் போச்சு!...

அப்படியே ஆதரவா நெஞ்சோட அணைச்சுக்கிட்டா...
கண்ணைத் தொடச்சி விட்டுட்டு - வாங்க போவோம் ..ன்னா!..

நீ முன்னால போ.. பின்னாலேயே வாரேன்..ன்னு கிளம்பிட்டேன்!..

ஏ.. ராமையா!.. இந்த இருட்டுக்குள்ள எங்கே கிளம்பிட்டே!..

இனி இருட்டு ஏது?.. அதான் மன்னிச்சிட்டாளே!...
ராமையனை சீத்தாலச்சுமி மன்னிச்சிட்டாளே!..

தெருவில் ஏதோ ஒரு வாகனம் புழுதியைக் கிளப்பி விட்டுச் சென்றது..

சுளுக்கென.. வேலிப் படல் திறக்கின்ற சத்தம்...

குணுக்..குணுக்.. - என்றபடி நாய் ஓடி வந்து -
வாலைக் குழைத்துக் கொண்டு குதித்தது..

அழகேசன் திரும்பிப் பார்க்க - அங்கே அவரது மகன்..

தூங்காம என்னப்பா செஞ்சிக்கிட்டு இருக்கீங்க!..

நம்ம மாடி வீட்டு ராமையன் வந்தான்.. பேசிக்கிட்டு இருந்தோம்.. ராமையா?..

திரும்பினார் அழகேசன்.. அங்கே ராமையனைக் காணவில்லை...

என்னது?.. ராமையா வந்திருந்தாரா?..
அப்பா!.. ஏதாவது கனா கண்டீங்களா?..

கனா கண்டேனா?.. அவன் தானே வந்திருந்தான்...

அவரு இன்னிக்கு சாயங்காலம் தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில காலமாகிட்டார்...
அந்திப்பட்ட நேரத்தில கொண்டு வரவேணாம்..ன்னு - இப்போ தான் வீட்டுக்கு
எடுத்து வந்திருக்காங்க...

பொழுது விடிஞ்சதும் போய் விசாரிச்சுட்டு வாங்க!.. உங்க சின்ன வயசு
கூட்டாளி...  உடனே சொல்ல வேணாம்..ன்னு நினைச்சேன்.. நீங்க என்ன..ன்னா
அவரு வந்து பேசிக்கிட்டு இருந்தார்...ங்கிறீங்க!..

நெசந்தான்... சீத்தாலச்சுமி ராமையனை மன்னிச்சுட்டா!..

அழகேசன் தனக்குள் சொல்லிக் கொண்டார்....

என்னப்பா!.. எதும் சொன்னீங்களா?..

இல்லேப்பா... ஒன்னும் இல்லை...
கையைக் காலைக் கழுவிட்டு வீட்டுக்குள்ள போ...
அந்தப் புள்ளை தனியா தூங்குது!..

சரி.. மனசு பதறாம தூங்குங்க...
நான் வேணா கூட இருக்கவா?.. - மகன் ஆதரவாகக் கேட்டான்...

வேண்டாம்.. நீ உள்ளே போய்த் தூங்கு..

மகன் வீட்டினுள் சென்று விட்டான்...

மெல்ல கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார்..

நானுந்தான் அரும்பு மேல ஆசை வெச்சிருந்தேன்...
ஒரு வார்த்தை நானாவது சொல்லியிருக்கலாம்...
ஆனா அரும்பு என்னய ஏறெடுத்து பார்த்ததில்லையே..

ஆசையும் பாசமும் ராமையனோட கலந்திருக்கும் போல...
அதான் கூடவே வந்து அழைச்சிக்கிட்டுப் போய்ட்டா!..
எங்கேயாவது பொறந்து நல்லா இருக்கட்டும்!..

ராமையனுக்கு இனிமே சந்தோஷந்தான்... ஏன்னா...
சீத்தாலச்சுமி ராமையனை மன்னிச்சுட்டா!...

முணுமுணுத்துக் கொண்டே அழகேசன் கட்டிலில் சாய்ந்தார்..

மேற்கே நட்சத்திரங்கள் இறங்கியிருக்க -
கீழ் வானில் வெள்ளி முளைத்திருந்தது...தமிழ்மணம்.

Saturday, October 14, 2017

Friday, October 13, 2017

வெள்ளி வீடியோ 171013 :: தப்புத் தப்பாய் உப்பைப் போட்டாலும் இலையைப் போடடி.....     வெள்ளி வீடியோவில் என்ன பகிர்வது என்று ஏகாந்தன் ஸாரின் மெயில் பார்க்கும் வரை ஐடியா எதுவும் இல்லை.  அவர் மெயில் கண்டவுடன் தோன்றிய பாடல்...  

Wednesday, October 11, 2017

புதர் புதின் 171011கிடு கிடு புதிர்க் கேள்விகள். 


1) What comes at _ ?


B  C   D   _  G  2)  What comes next ?

17     10    ?? 3) What comes after  ... 

When, Where, What, Why, 


Tuesday, October 10, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : சரவெடி - ஏகாந்தன் - சீதை 22     ராமனை சீதை மன்னிக்கும் கதைத்தொடரில் திரு ஏகாந்தன் அவர்களின் படைப்பு இன்று இடம் பெறுகிறது.   

Friday, October 6, 2017

Thursday, October 5, 2017

விகடன் சிறுகதையும் கல்கி கவிதையும்

​​
​​
     ஒரு சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நம் மனம் சில முந்திரிக்கொட்டை வேலைகள் செய்யும், கவனித்திருக்கிறீர்களா?   அது அறிவாளி "அதான் எனக்குத் தெரியுமே" ரகம்.  

Tuesday, September 26, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சீ ரா ம - கே ஜி கௌதமன் - சீதை - 20     கதைத் தலைப்பினால் கவரப்பட்ட எங்கள் தலைமை ஆசிரியர்  இந்தத் தலைப்புக்கு ஒரு கதை எழுதி அனுப்பி இருக்கிறார்.

Sunday, September 24, 2017

திங்கக்கிழமை 170925 : தென்திருப்பேரைக் கூட்டு - கீதா ரெங்கன் ரெஸிப்பி
தென் திருப்பேரை என்பது தூத்துக்குடி மாவட்டத்தில், திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர். 

ஞாயிறு 170924 : மலைப்பாதையில்...


Saturday, September 23, 2017

தத்து எடுத்துக் கொண்ட தந்தை..1)  இணையம், முக நூலை முறையாக நல்ல இயலுக்குப் பயன்படுத்தும் இளைஞர்கள்

Friday, September 22, 2017

வெள்ளி வீடியோ 170922 : மனவ காடுவ ரூபதியே
பயலு தாரி.     

Thursday, September 21, 2017

கவிதையாகும் ஜெ... ஓவியம்
அன்புள்ள ஸ்ரீராம், 

Wednesday, September 20, 2017

புதன் பு ர் 170920


சென்ற வாரப் புதிர்கள் பகுதியில் சும்மா ரெண்டு சுலபப் பந்துகள் போட்டு , ஒரு கூக்லி போடலாம் என்று நினைத்து கேட்டிருந்தேன். சுலபங்களை மட்டும் attempt செய்து, கசப்பு மருந்து பக்கம் வராமல் ஓடிவிட வாசகர்கள் முயல்வார்கள் என்று நினைத்தேன்.


Tuesday, September 19, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஈரம் - ஏகாந்தன்     இந்த வாரம் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் நண்பர் ஏகாந்தன் அவர்களது சிறுகதை இடம்பெறுகிறது.  


Monday, September 18, 2017

Friday, September 15, 2017

Thursday, September 14, 2017

Wednesday, September 13, 2017

புதன் கி 170913


குடகு  மலைச் சாரலில் குரங்கு ஒன்றைக்  கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது  படகில்  ஏறி, மதகு  பக்கம் போயிடுச்சு. 


இதுதான் கு கு அனுப்பிய கு புதிர். 
மதகு தவிர மற்றவைகள எல்லோரும் சரியாகச் சொல்லிட்டீங்க. பால கணேஷுக்கு முதல் சரியான விடைக்கு பாராட்டுகள். 

Tuesday, September 12, 2017

Sunday, September 10, 2017

ஞாயிறு 170910 :: பள்ளிக்கு நேரமாச்சு!அப்பா...  ஹோட்டலை விட்டு வெளியே கிளம்பிட்டோம்.  

Thursday, September 7, 2017

கருப்பாய்ப் பிறந்த குற்றம்அன்புமிகு ஸ்ரீராம்,  

Wednesday, September 6, 2017

புதன் புதி 170906
Tuesday, September 5, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மன்னிப்பு - ரிஷபன் - சீதை 18     சீதை ராமனை மன்னிக்கும் இந்த வாரக்கதையில் பிரபல எழுத்தாளர் திரு ரிஷபன் அவர்களின் படைப்பு இடம்பெறுகிறது.
   

Sunday, September 3, 2017

Friday, September 1, 2017

வெள்ளி வீடியோ 170901 :: குளிரெடுக்கும் சாரலுக்கு குடை பிடிக்க வா மயிலே...

காட்சியையும் ரசிக்கலாம்,  பாடலையும் ரசிக்கலாம். 

Wednesday, August 30, 2017

புதன் புதிர் 170830 - சொல்லமுடிந்தால் நீங்கள் கில்லாடிதான். - நெல்லைத்தமிழன்
1.  யாருடைய எழுத்து போல் தோன்றுகிறது?  

Tuesday, August 29, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சீதையின் ஓவியம் - ஐயப்பன் கிருஷ்ணன்     இந்த வாரம் சீதா ராமன் கதைதான்.  ஆனால் ராமனை சீதா மன்னிக்கும் கதை அல்ல!!


Friday, August 25, 2017

வெள்ளி வீடியோ 170825 : லூர்துமேரி ராஜேஸ்வரிக்கு மயக்கம்தான் பேசியதோ..


          லூர்துமேரி ராஜேஸ்வரிக்கு 78 வயது!  

Thursday, August 24, 2017

உன்னைப்போல் ஒருவன் - பழசும் புதுசும் - வெட்டி அரட்டை


     உன்னைப்போல் ஒருவன்
     இந்தப் பெயரில் இரண்டு தமிழ்ப்படங்கள்.  

Wednesday, August 23, 2017

புதன் 170823 புதிர்


சென்ற வாரக் கேள்விகளுக்கு பதில்கள் இங்கே: 
முதல் கேள்விக்கு பதில் : mother in law. 
  

Tuesday, August 22, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :கோபம் பாபம் பழி - நெல்லைத்தமிழன் - சீதை 17
     சீதா ராமன் மன்னிப்பு தொடரில் நண்பர் நெல்லைத்தமிழனின் படைப்பு இந்த வாரம்.  ஒரு விசேஷம்...  தான் எழுதிய கதைக்கு தானே படமும் வரைந்து அனுப்பியிருக்கிறார்.Sunday, August 20, 2017

ஞாயிறு 170820 : என்னது? இணையப் போறாங்களாமா?
     எங்கள் வீட்டின் புதிய விருந்தினர்.  

Friday, August 18, 2017

வெள்ளி வீடியோ : அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்மதேவன் சாதனை
      ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி ஒரு வழியாக இளையராஜா பேட்டியை ஆரம்பிக்கிறேன்!

Thursday, August 17, 2017

செல்லாத பத்து ரூபாய் நாணயமும் கல்லா கட்டிய கடைக்காரரும் - அலுவலக அனுபவம்     
     அலுவலக அனுபவம் எழுதி நீண்ட நாட்களாச்சு!  

Wednesday, August 16, 2017

மை ன் கி த பு ழ 170816சென்ற வாரப் புதிர் பதில்கள் இங்கே:
1)

Tuesday, August 15, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பாக்கியம் - துரை செல்வராஜூ     இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் தஞ்சையம்பதி தளத்தின் திரு துரை செல்வராஜூ அவர்களின் கதை இடம் பெறுகிறது..


Monday, August 14, 2017

திங்கக்கிழமை 170814 : பாஸ்தா சாட் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பிஇப்போ இந்த மட்ரியை உபயோகித்துச் செய்த இன்னொரு உணவு!  

Sunday, August 13, 2017

Saturday, August 12, 2017

கோவையில் ராஜா என்னும் ஒரு ஆட்டோ ஓட்டுநர்...1)  நேர்மைக்கு மாறாக அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்க மனது இடம் கொடுக்காததால்

Friday, August 11, 2017

வெள்ளி வீடியோ 170811 :: ஓவியாவின் இரண்டு பாடல்கள்     தமிழகம் முழுவதும் பிக் பாஸ், ஓவியா அலை -  எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் - வீசிக் கொண்டிருக்கிறது.    

Wednesday, August 9, 2017

புதன் புதிர் 170809சென்ற வாரப் புதர் சாரி புதிர் பதில்கள் இவை: 

முதல் கேள்விக்குச் சரியான விடை, பொன்சந்தர் கூறியிருக்கிறார். எண்களை ஆங்கிலத்தில் எழுதினால், எவ்வளவு எழுத்துகளோ அவை சங்கேத வடிவில் எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. 

Monday, August 7, 2017

திங்கக்கிழமை 170807 : மட்ரி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பிஇது ராஜஸ்தான் குஜராத் மாநிலங்களில் ரொம்பவே பிரபலமானது.

Sunday, August 6, 2017

ஞாயிறு 170806 : கேமிராக் கண் டெடுத்த காட்சிகள்...தங்கியிருந்த இடத்தில் சில காட்சிகள்...

Friday, August 4, 2017

வெள்ளி வீடியோ 170804 : மனம் கல்லாலே ஆனதில்லே பொன்னம்மா..எந்தக் குற்றத்துக்கும் மன்னிப்பு  உண்டு.  

Wednesday, August 2, 2017

புதன் புதிர் 1708021)  If 8517   is written as 5435 in a code,   what will be the code for 9623?   


Tuesday, August 1, 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: மூணே மூணு வார்த்தை - வேணுகோபாலன் (சேட்டைக்காரன்) சீதை 15
     இந்த வார சீதா -ராமன் மன்னிப்புக் கதையில் இடம்பெறும் படைப்புக்குச் சொந்தக்காரர்   சேட்டைக்காரன் . (வேணுஜி)


    இந்தத் தலைப்பை வைத்து இப்படி ஒரு கதையைப் படைக்க வேணுஜியால் மட்டுமே முடியும்!Sunday, July 30, 2017

ஞாயிறு 170730 :: மலை மேகம்
சிக்கிமில் ஒரு வழக்கம் உண்டு. 

Friday, July 28, 2017

வெள்ளி வீடியோ : பார்வை ஜாடை சொல்ல... இளம் பாவை நாணம் கொள்ள...


     இளையராஜாவின் இசையும், எஸ் ஜானகியின் குரலும்தான் இந்தப் பாடலுக்கு உயிர்.  அதற்கு துணை கொடுப்பது யேசுதாஸின் குரல்.

Thursday, July 27, 2017

ரெட்டைக் குழப்பம் - இறந்தும் இருப்பவன்​ரெட்டையாப் பொறந்தோம். 

Wednesday, July 19, 2017

நான் செய்தது சரியா?

ஒரு ரசமான சம்பவம். 

Tuesday, July 18, 2017

Wednesday, July 12, 2017

Tuesday, July 11, 2017

Friday, July 7, 2017

வெள்ளி வீடியோ 170707 : தயவு செய்து எழுந்து ஆடாமல் பாடலைப் பார்க்கவும்!     இந்தப் பாட்டுக்கு ஆடி முடித்த உடன் நிச்சயம் அடுத்த ஒரு வாரம் ஆஷா பரேக்குக்கு கால்கள் சுளுக்கிக் கொண்டிருக்கும்! 

Wednesday, July 5, 2017

புதன்..... புதிர் புதன்... பானுமதி வெங்கடேஸ்வரன்
செய்தித் துளிகள்...


Tuesday, June 27, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீதா ரெங்கன் - சீதை 11 (முதல் பகுதி)     சீதா ராமன் கதையில் இந்த வாரம் படைப்பை வழங்கி இருப்பவர் தில்லையகத்து க்ரானிக்கிள்ஸ் தளத்தில் எழுதும் திருமதி கீதா ரெங்கன்.

Monday, June 26, 2017

திங்கக்கிழமை 170626 : பீற்றூட் இடியப்பம் - அதிரா ரெஸிப்பிஅதிராவும் பீற்றூட் உம்:).
ஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா பீற்றூட் சாப்பிட்டு ஒரே பிங்கி மயம்:).


வாங்கோ வாங்கோ யோசிக்காமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ நம்ம வீடுதேன்:)..

Thursday, June 22, 2017

ஜோக்ஸ் பழைய ஜோக்ஸ் அண்ட் துணுக்ஸ்!செண்டிமெண்ட்! 

Monday, June 19, 2017

Sunday, June 18, 2017

Thursday, June 15, 2017

மரணவீடு
இந்த நிமிடத்துத் தேவை   

Wednesday, June 14, 2017

புதன் 170614 : அசத்திட்டாங்க !சென்ற வாரக் கேள்விகளின் பதில்களைப் பார்ப்போம்!

அதற்குமுன் ஒரு அக்கப்போர்!

ச்யவனப்ராஸ் ஞாபகசக்திக்கு சாப்பிடறது இல்லையா? அட! ஆமாம் இல்லே!
அப்போ நான் ஞாபக சக்திக்காக  சாப்பிடும் அந்த மருந்தின் பெயர் என்ன? பதிவின் கடைசியில் சொல்றேன்.

Monday, June 12, 2017

திங்கக்கிழமை 170612 : புளிமிளகாய் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிபுளி மிளகாயை நினைத்தாலே எனக்கு மோர் சாதம் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.

Friday, June 9, 2017

வெ வீ ........ 170609 சா சி