Wednesday, February 1, 2017

புதன் கிழமை 170201 :சென்ற  வாரக்  கேள்விகள்:  

1) If yesterday becomes tomorrow, what will be the day after tomorrow?  


2)    What is {(circle - triangle) - right angle} ?   

3)  இயற்பெயர் ஐந்தெழுத்து,
     ஏற்ற பெயர் நான்கெழுத்து, 
     செல்லப்பெயர் மூன்றெழுத்து. 
     கின்னஸ் சாதனையாளர்.  
     யாரிந்த சினிமா பிரபலம்?  


பதில்களைப் பார்ப்போம்.

ஒன்று :  அட  yesterday க்குப்  பைத்தியம்  பிடித்து  அது tomorrow ஆயிடிச்சுன்னா  போய்த்  தொலையட்டும். அதுக்காக, day after tomorrow க்கும்  பைத்தியம் பிடிக்கணும்னு  ஏதாவது  வேண்டுதலா?  அது  டே ஆ ஃப்டர் டுமாரோவாகத்தான்   இருக்கு. 
(No bad words please!  ) 

எனவே. அதிரா  ஆன்சர் ரைட்டு!  தேம்ஸ் நதிக்கரை  / உண்ணாவிரதம்  எல்லாம்  வேண்டாம். தேம்ஸ் நதியை  நல்ல படம்  ஏதாவது  எடுத்திருந்தால், அதை, kggouthaman@gmail.com க்கு  அனுப்புங்கள்.  ஞாயிறு  படமாக போட்டுடறோம்! 


==========================
இரண்டு:  90 is the right answer.  பானுமதி வெங்கடேஸ்வரன் முதலில்  சரியான பதில். பிறகு பாபு. பிறகு பெ சொ வி. 

half circle, semi circle என்று  கூறியவர்களிடம், ரகசியமாக  ஒப்புக் கொள்கிறேன், நான் ஒரு அரைப் ; 

=============================

மூன்று.  மனோரமா என்ற பதில் சரி.  முதல் சரியான பதில் கூறியவர் : பல (!) கணேஷ்.  ஆமாம்!  அவர் மட்டும் ஆச்சியைப்  பூச்சியாக்கி, கோபிசாந்தாவை  காலை  ஒடித்து, கோபிசந்தா  ஆக்கலாமா!  நாங்களும்  கால்  ஓடிப்போமில்ல! 
Jokes apart,  well done Bala Ganesh!

==============================


இந்த வாரக் கேள்விகள்:  

ஒன்று :  

புதன் கிழமை என்றால், செவ்வாய் என்ன?  


இரண்டு :  

எங்கள்  வீட்டு, பழைய சுவர்க் கடிகாரம் ஒன்று, வீதியில் கிரிக்கட் ஆடிய  சிறுவன் அடித்த  பந்து  மூர்க்கமாக  வந்து  தாக்கியதில், அதன் எண் தகடு, பொடிப்பொடியாக  உதிர்ந்து  கீழே  விழுந்தது. அப்படி  உடைந்து  விழுந்த ஒவ்வொரு  துண்டிலும் ஒரு எண் மட்டுமே இருந்தது! 

ஆனால் பெரிய  எண்  கொண்ட துண்டுகள் மொத்தம்  நான்கு  இருந்தன. 

அந்தப்  பெரிய  எண் கொண்ட தகடில்  இருந்த எண்(ணிக்கை) என்ன?  

மூன்று:  

முன்  காலத்து  டி ராஜேந்தர்  யார்?  (குறிப்பு : அவருக்கு தாடி கிடையாது)


    

21 comments:

Dr B Jambulingam said...

ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. இன்னும் புதிர்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றனவா? இவை போன்ற முயற்சிகள் சிந்திக்கும் ஆற்றலை மிகுவிக்கும். நன்றி.

பெசொவி said...

1. செவ்வாய் என்பது தமிழ் இலக்கணப்படி, செம்மை+வாய் அதாவது சிறந்த வாய் அல்லது சிவந்த வாயைக் குறிக்கும்.

Geetha Sambasivam said...

ஜூட்!

KILLERGEE Devakottai said...

பதில் அறிய ஆவல்,,,,

Bhanumathy Venkateswaran said...

3. வழக்கம்போல் மூன்றாவது கேள்விக்கு முதலில் பதில் கூறி விடுகிறேன். அந்தக்கால அந்த அஷ்டாவதானி என் பெயர் கொண்டவர் அதாங்க பானுமதி ராமகிருஷ்ணா.
1. செம்மை+வாய் = செவ்வாய். அதாவது சிவந்த வாய்.

Bhanumathy Venkateswaran said...

2. No.1

Bhanumathy Venkateswaran said...

1, 10, 11, 12 இந்த நான்கிலுமே ஒன்றாம் எண் இடம் பெறும். எனவே எண்ணிக்கை ஒன்று என்பதுதான் சரியான விடையாக இருக்க முடியும்.

Nagendra Bharathi said...

அருமை

athira said...

வாஆஆஆஆவ்வ்வ்வ்வ் நேக்கு லெக்ஸும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல .... என் வைர நெக்லெஸ்ஸ்ஸ்ஸ் ங்ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ???? ....
அஞ்சு ஊஊஉ உப்பூடிப் புகைப் புகையா விட்டது போதும், மோர் கொஞ்சம் குடிச்சிட்டு ஓடியாந்து அதிராவை வாழ்த்துங்கோஒ வரும்போது புஷ்பா அங்கிள் கடையில் நல்ல கிவ்ட்டா வாங்கி வாங்கோ....

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... எனக்கும்தேன்ன்ன்( பின்ன இந்தக் காலத்தில அடுத்தவையோ எங்களை வாழ்த்துவினம்.,, நம்மை நாமேதான் புகழோனுமாக்கும்....).

athira said...

இப்போ ரம் இல்லை அவசரமா எட்டிப் பார்த்தேன், பின்பு வாறேன்ன்
1. விடை.... புதன் என்பது கிழமை எண்டால்ல்ல்ல் செவ்வாயும் கிழமைதேன்ன்ன் பின்ன என்ன கிரகமோ??? :) ஹா ஹா ஹா என்னா இது சின்னப்புள்ளத் தனமால்லோ இருக்கு :) உடைஞ்ச மணிக்கூட்டுக்குப் பதில் நிறைய வருது வாயில ஆனா நேக்கு வாய்தேன் எதிரி என்பதால அவசரப்படாமல் திரும்ப வாறேன்... ஒராளை இங்கு "நல்ல" வார்தையில திட்டவும் போறேன்... நான் கெளதமன் அண்ணனைச் சொல்லல்ல:)

திண்டுக்கல் தனபாலன் said...

அடியேன் தான்...

athira said...

//எங்கள் வீட்டு, பழைய சுவர்க் கடிகாரம் ஒன்று///
அச்சச்சோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எதுக்கு பழச எல்லாம் வீட்டில வச்சிருக்கிறீங்க..:) இப்ப பாருங்கோ அது உடைஞ்சதால எங்கட கிட்னிக்குத்தான் வேலை கூடிப்போச்ச்ச்ச்ச்ச்:)).

////ஆனால் பெரிய எண் கொண்ட துண்டுகள் மொத்தம் நான்கு இருந்தன.

அந்தப் பெரிய எண் கொண்ட தகடில் இருந்த எண்(ணிக்கை) என்ன?////

சத்தியமா இதுக்கு ஆன்ஷர் கெளதமன் அண்ணனுக்கே தெரியாது என்பதுதான் உண்மை:)) என்னை விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்.. குயின் அம்மம்மாவைப் பார்த்து நீண்ட காலமாச்சு.. ஒரு எட்டுப் போய்ப் பார்த்திட்டு வாறேன்..:).

athira said...

///முன் காலத்து டி ராஜேந்தர் யார்? ////
ஹையோ கி நா மூனாக் காலத்துக் கேள்விக்கெல்லாம் ஒரு சுவீட்16 பிள்ளையால எப்பூடிப் பதில் சொல்ல முடியும்?:))..

/// (குறிப்பு : அவருக்கு தாடி கிடையாது)/// ஹா ஹா ஹா ரொம்ப முக்கிய குறிப்பு:)).. சத்தியமா எனக்கு தெரியாது.. இதுக்குரிய பரிசை.. மேலே அவருக்கே கொடுங்கோ...:).

athira said...
This comment has been removed by the author.
Angelin said...

நான் எதையும் அதுவும் பதிவின் முதல் பாராவை பார்க்கவில்லை யாரும் என்னை அழைத்ததும் கேட்கவில்லை :)

Asokan Kuppusamy said...

நீங்களே சொல்லிடுங்கோ

athira said...

///எனவே. அதிரா ஆன்சர் ரைட்டு! தேம்ஸ் நதிக்கரை / உண்ணாவிரதம் எல்லாம் வேண்டாம். தேம்ஸ் நதியை நல்ல படம் ஏதாவது எடுத்திருந்தால், அதை, kggouthaman@gmail.com க்கு அனுப்புங்கள். ஞாயிறு படமாக போட்டுடறோம்! ///

யேஸ்ஸ்ஸ்ஸ் அனுப்புறேன்ன்ன் ஆனா அது தேம்ஸ் நதியாஆஆஆஆஆஆ?:)))

பெசொவி said...

2. That largest number is 10 (Roman letter x) The four pieces are meant for ix, x, xi and xii

பெசொவி said...

@பானுமதி வெங்கடேஸ்வரன் : பெரிய நம்பர்னு சொல்லியிருக்காங்க, அதுதான் 1ங்கறீங்க, அப்போ மத்த துண்டுலலாம், 2,3,4.....9 வரைக்கும் இருக்குமே, அதெல்லாம் 1ஐ விடச் சின்னதா, மேடம்?

Thulasidharan V Thillaiakathu said...

புதன் கிழமைனா செவ்வாயும் கிழமைதான்!!!!! பின்ன வேறு என்னவா?

உடைஞ்சா அதுவும் சில்லு சில்லா உடைஞ்சா ஒன்னு தான் ...எல்லாமே அந்த ஷேப்லதான் இருக்கும்ன்றதுனால ஹிஹீ
அந்தக் காலத்து டி ராஜேந்தர்.....ம்ம்ம்ம்ம் தெரியலைப்பா...

'நெல்லைத் தமிழன் said...

பயணத்தில் இருந்ததனால் அப்போவே பதில் எழுதல. எல்லாக் கேள்விகளும் எடக்கு மடக்காக இருக்கு.

டி.ராஜேந்தரே, நான் 12ம் வகுப்பு படிக்கும்போது (80-81) திரையுலகத்துக்கு வந்த ஆளு. 'அந்தக்காலத்து' அப்படீன்னா, டி.ராஜேந்தருக்கும் முந்தைய காலகட்டமாகத்தான் இருக்கணும். பானுமதி, கவிதை எழுதுவார் ஆனால் திரைப்பாடல்கள் எழுதினாரா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் (அந்தக் கால ஆளு இல்லையா?). அவர் உதவி இயக்குனரைக் காதலித்து மணந்துகொண்டார். டி.ஆர்.ஆர், ஒரு சூழலில் உஷா அவர்களுக்கு வாழ்வுகொடுத்தார். பெரிய வித்தியாசம்... பானுமதி அவர்கள் ஆடும்போது நன்றாக இருக்கும். டி.ஆர்.ஆர். நம்மை வதைப்பதற்காகவே ஆடுவார். (ஒருவேளை ஆண் பார்வை என்பதனால் இப்படித் தோன்றுகிறதோ?). பாபனாசம் சிவன் படங்கள் இயக்கியிருக்கிறாரா?

புதன் கிழமை என்றால் செவ்வாய் என்ன? - இது என்ன கேள்வி? செவ்வாய் (அதாவது சிவந்த கவர்ச்சியான வாயை உடைய பெண்), புதன் கிழமைனா வெறும்வாயாக ஆகிவிடுமா? செவ்வாய், என்றும் செவ்வாய்தான் (புதனானா என்ன வெள்ளியானா என்ன). அதுவும் தவிர, கிழமைகளிலேயே, தமிழில் இல்லாத கிழமை புதன். இது வடமொழி. இதற்கு தமிழ் அர்த்தம் அறிவு அல்லது அறிவன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!