Saturday, March 18, 2017

அனுரத்னா என்னும் அரசு மருத்துவர்.....1)  சென்னையில் பார்வையற்றவர்களுக்கு என்று ஸ்பெஷல் பஸ்.  நல்ல திட்டம்.  ஆனால் எப்போ வருமோ!  இப்போது Near Futureல எதுவும் கண்ணில் படவில்லை.  கொஞ்ச நாட்கள் முன்பு உடல் ஊனமுற்றவர்களுக்கு என்று சில ஸ்பெஷல் பஸ்கள் (கொஞ்ச வருடங்கள் முன்பு) இயங்கின.  இப்போது அவை கண்ணிலேயே படவில்லை! அதேபோல் இவையும் அறிவிப்போடு நின்று விடாமல் வந்தால் சரி!  (சென்னை) அரசியல்வாதிகளை நம்ப முடியாதே!
 
 
 
 
 
 2)  "பணி நியமனக் கலந்தாய்வில் நான் விரும்பும் எந்த மருத்துவமனையையும் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு என்னிடம் இருந்தது. ஆனால் சக மருத்துவர்கள் பொன்னேரிக்கு மட்டும் போகாதே, மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்றனர். ஆனால் நான் பொன்னேரியைத்தான் தேர்வு செய்தேன். மக்கள் பிரச்சினை செய்கிறார்கள் என்றால், அதில் ஒரு நியாயம் இருக்கும். அதை என்னால் சரி செய்ய முடியும் என்று நம்பினேன்” என்கிறார் அனுரத்னா.....
 
 
 

இப்படியும் ஒரு அரசு மருத்துவர்.  கை தட்டலாம்.3)  ‘இன்னொரு மதர் தெரசா பிறக்கணும் என்று  நாம் காத்திருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் மதர் தெரசாவாக மாறணும்.’ என்கிறார் கர்நாடகா வாழ் தமிழர் ஆட்டோ ராஜா (49).  கடந்த 25 ஆண்டுகளில் இவர் பெங்களூரு சாலையோரத்தில் உணவு, உடை, பராமரிப்பு, ஆதரவு இல்லாமல் அழுகிய, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய 10 ஆயிரம் பேரை மீட்டு பராமரித்துள்ளார்.
 
 
 4)  சுசித்ரா.  "கர்நாடக மாநிலத்தில் பின்தங்கிய மாவட்டமான சாமமராஜநகர், கம்மரஹல்லி கிராமத்தில் படிக்கிற 11 வயது சுசித்ராவும் அவள் தோழிகளும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே பள்ளிக்கு வந்து, அங்கேதான் கழிவறையைப் பயன்படுத்தினாங்க. சுசித்ரா வீட்டில் மட்டும் கழிவறை இருக்கு. பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளிடம் சுசித்ரா தன் ஊரோட நிலைமையைச் சொல்லியிருக்காங்க. ஆச்சரியப்பட்ட அதிகாரி, சுசித்ராவைக் கழிவறை அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பிரச்சாரகராக ஆக்கியிருக்கார். சுசித்ராவின் முயற்சியால் இப்ப 300 வீடுகளில் கழிவறை வந்திருச்சு..."
 
 
 5) எதிரில் நிற்பது மரமா? மனிதனா? காசு கேட்பதா? சாப்பாடு கேட்பதா? என திக்கற்ற நிலையில் இருந்த அலுமேலுவை நல்ல மனிதர் ஒருவர் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.
 
 
 

   
சென்னை அம்பத்துார் கள்ளிகுப்பம் பகுதியில் இயங்கிவரும் ஆனந்தம் முதியோர் இல்லம் முழுக்க முழுக்க உறவுகளும்,வருமானமும் இல்லாத முதியோர்களை ஆதரித்து பாதுகாத்துவரும் இல்லமாகும்.
 
 


இதன் நிர்வாக அறங்காவலர் பாகீரதி, பாங்க் ஒன்றில் முதியோர் பென்ஷன் வழங்கும் பிரிவில் வேலை பார்க்கும் போது அவர்கள் படும் சிரமத்தை பார்த்து ரொம்பவே மனம் பாதிப்பு அடைந்தவர்.
 
 


இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தவிப்பு காரணமாக விஆர்எஸ் வாங்கிக்கொண்டு ஒரு சிறு வீட்டில் ஆனந்தம் முதியோர் இல்லத்தை கடந்த 2003ம் ஆண்டு துவக்கினார்.நல்லவர்கள் நன்கொடையாளர்கள் உதவியால் இப்போது பதினைந்து கிரவுண்டில் 24000 சதுர அடி கட்டிடத்தில் 73பெண்கள் 28 ஆண்களுடன் சிறப்பாக இயங்கிவருகிறது.

 
 
6)  மூன்று போலீஸ்காரர்களா? மூன்று தெய்வங்களா?   குறுகிய இடைவெளியில் ஒரே ஏரியாவிலிருந்து காணாமல்போன 95 குழந்தைகளை அவரவர்கள் குடும்பத்தோடு சேர்த்திருக்கிறார்கள்.
 
 
 
 


7)  மூன்று வருடங்களில் 3000 தெருக்குழந்தைகளைக் காத்து கல்வி தந்தவர்கள் இந்த  டெல்லி போலீஸார்.
 
 
 8)  
"என்ன செய்யப் போகிறோம் என்று தவிக்காமல், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முயற்சியை நிறுத்திவிடக் கூடாது; மனதில் உறுதியுடன் இருக்க வேண்டும்...."  'எபிலிட்டி பவுண்டேஷன்' விருது பெற்றவரும், மகேந்திரா வேர்ல்டு பள்ளியில் தமிழாசிரியையாக பணிபுரிந்து வருபவருமான, பார்வையற்ற மாற்றுத் திறனாளி, சுகுணா.
 
 
 9)  நாம் நமது கடமையை செய் தால் இயற்கை அதன் கடமையை சற்று காலம் தாழ்த்தியாவது செய்யும் என்பதை புதுக்குறிச்சி ஏரி புனரமைப்பு நிகழ்வு நிரூபித் துள்ளது. இளைஞர்களின் முயற் சிக்கு இயற்கை தனது கொடையை சற்று தாமதமாக மழையாகப் பொழிந்து அளித்துள்ளது.
 
 
 

 


10)  ஈரோடு அரசு மருத்துவமனை அருகே ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு தரும் ஏஎம்வி ஹோம்லி மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் இன்னமும் தன் சேவையை விரிவு படுத்தித் தொடர்வதைச் சொல்கிறது இந்து நாளிதழ்.  நாமும் மீண்டும் பாராட்டுவோம்.
 
 
 


11)  நேரில் வந்த தெய்வம்.  அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று...
 
 
 


12)  வறட்சியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் விவசாயிகள்.  அவர்களுக்கு உதவ ஒரு கருவியுடன் வருகிறார் தோட்டாக்களைத் துறை  உதவி இயக்குனர் திரு டேவிட் ராஜா பியூலா.17 comments:

Chellappa Yagyaswamy said...

சிறப்பான பதிவுகள். அரிய தொண்டாற்றியவ்ரகளை அறிய ஒரு வாய்ப்பு... சுகுணா வைப்பற்றி நேற்று படித்தேன். ஆனந்தம் முதியோர் இல்லம் பற்றியும் படித்திருக்கிறேன். டாக்டர் அனுரத்னா, ஆட்டோ ராஜா இவர்களை இப்போதுதான் படிக்கிறேன். தொடரட்டும் உங்கள் முயற்சி.

- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

பாலகிருஷ்ணன் said...

சிறப்பு

KILLERGEE Devakottai said...

ஆனந்தம் முதியோர் இல்ல முகவரி கிடைத்தால் அனுப்பவும் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம+1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது அற்புதமாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

சில தகவல்கள் புதியவை... நன்றி...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

Avargal Unmaigal said...

நல்லதொரு தொகுப்பு

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

முன்மாதிரி அறிஞர்களின் பணியை
பின்னாடி வருவோர் தொடர்ந்தால்
நாட்டில் மாற்றம் காணலாம்!
பதிவைச் சிறப்பித்தோருக்குப் பாராட்டுகள்!

athira said...

வோட் போட்டிட்டேன்ன்.. ஸ்பெஷல் பஸ் மிக நல்ல விஷயமே... சாதாரண பஸ்களில்.. சாதாரணமானவர்களாலேயே பயணம் செய்ய முடியாது நம் நாடுகளில்.. அப்போ பார்வை குறைந்தவர்கள் என்ன பண்ணுவார்கள்.

2. அனுராதா.. நல்லதொரு தகவல்.

3. ஆட்டோ ராஜா.. நானும் சமீபத்தில் இவரைப் பார்த்தனே ஆனா சொல்ல மாட்டேன்ன் எல்லோரும் அடிப்பீங்க.. எந்த நிகழ்ச்சியில் பார்த்தேன் என அறிஞ்சால்:)... ஆனா அந்த நிகழ்ச்சி பார்த்ததனால்தானே எனக்கு இவரை தெரிஞ்சுது... இப்போ நீங்க சொல்லும்போது இவ்ளோ இருக்கா இவருக்குப் பின்னால் என நான் வியக்கேன்ன்ன் :)

athira said...

///4) சுசித்ரா. "///
அச்சச்சோ சகோ ஸ்ரீராம் ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய் புகைக்கூட்டுக்குக் கீழே ஒளியுங்கோ:)... இந்தவார பொஸிடிவ் செய்திகள் என வேறு சொல்லிட்டீங்க:)... சரி சரி இருங்கோ எதுக்கும் உள்ளே போய்ப் படிச்சிட்டு வாறேன்ன்ன்:)..

athira said...

ஏனைய அனைத்து தகவல்களும் எனக்கு ப்புதுமை + அருமை. ஹையோ நாளைக்கு என்ன கிழமை?? ஞாயிற்றுக் கிழமை.. ஓடுங்கோ ஓடுங்கோ எல்லோரும் ஓடிப்போய் மேசைக்குக் கீழ ஒளியுங்கோ.. நீந்தத் தெரிஞ்சோர் தேம்ஸ்ல குதிங்கோ:)) ஏன் தெரியுமோ?:) போன வாரம் கொஞ்சமா கஞ்சல்தனம் பண்ணி:) மிச்சம் பிடிச்சு... 2,3 மே.. மேஏஏஏஏஏஏஏஎ... படங்கள் வச்சிருக்கிறார்.. போனதடவை கொம்பு.. இத்தடவை வாலும் கால்களும்... வரப்போகுதேஏஏஏஏ.. மீ எஸ்கேப்ப்ப்.. மே...மே....:)

பாரதி said...

நல்ல பதிவு.

Angelin said...

தான் படித்த மருத்துவம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அனுரத்னா வாழ்க உங்கள் பனி சிறக்கட்டும்
ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் மெஸ் வெங்கடராமன் வாழ்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும் உங்களை \
டேவிட் ராஜா பியூலா பற்றி முன்பும் ஒரு செய்தி இங்கே வாசித்த நினைவிருக்கு ..பூச்சிகளை கொல்லும் சூரியஒளி விளக்கு வடிவமைத்தவர்
அந்த எளிய மூதாட்டி தெய்வமன்றி வேறு யார் தெய்வமேதான்
புதுசேரி ஏறி புனரமைப்பு ..பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கு சாட்சி பொறுத்தோருக்கு இயற்கையும் உதவும் .
பாகீரதியும் அவரது தன்னலமற்ற உதவிகளும் வாழ்க ..ஊருக்கு போனா போகணும் அங்கே .
முதியோர் வங்கிகளில் கால்கடுக்க நிற்பது மற்றும் பென்ஷன் வங்கி forms நிரப்ப கஷ்டப்படுவாங்க பாவம் அவர்களை மனதிற்கொண்டு உதவும் பாகீரதி நீடுழி வாழ்க ..
அணைத்து தகவல்களும் சிறப்பு

Geetha Sambasivam said...

அம்பத்தூரில் இப்படி ஓர் முதியோர் இல்லம் இயங்குவதே தெரியலை! :( மற்றபடி அரசு மருத்துவர் ஆன அனுரத்னாவுக்குப்பாராட்டுகள். மற்றச் செய்திகளுக்கும் நன்றி.

Asokan Kuppusamy said...

அனைவருக்கும் இதயம் கனிந்த பாராட்டுகள் வெற்றி கிடைக்கட்டும்

Bagawanjee KA said...

யாரை சொல்வது ?யாரை விடுவது ?அனைவரின் பணியும் போற்றுதலுக்கு உரியது :)

கோமதி அரசு said...

பெரம்பலூர் மாவட்டம், நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்றம் போல் ஊருக்கு ஒரு ந்ற்பணி மன்றம் வந்தால் த்ண்ணீர் தட்டுபாடு இருக்கவே இருக்காது காலத்துக்கு ஏற்ற நற்பணி. அனைவரும் வாழ்க வாழ்க!
முதியோர் இல்லம் பாகீரதி வாழ்க!
அனுதாதாரத்னா வாழ்க! மருத்துவர்கள் எல்லாம் இவரைப் போல் இருந்தால் நாடு நலம் பெறும்.
அனைத்து பாஸிட்வ் செய்திகளும் அருமை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
உங்களுக்கு நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!