செவ்வாய், 6 ஜூன், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய மாலினி - இராய செல்லப்பா - சீதை 10



     சீதை ராமனை மன்னிக்கும் தொடர் சிறுகதைத் தொடரில் தன்னுடைய படைப்பை ஒரு சிறு தொடர்கதையாக எழுத வந்திருக்கிறார் திரு இராய. செல்லப்பா அவர்கள்.







======================================================================




தவிக்கிறாள் தான்ய மாலினி -1

- இராய செல்லப்பா

இலங்காபுரி.


அரண்மனை.  இராவணனது அந்தப்புரம். ஓர் பகற்பொழுது.


அமைதியற்றவனாகத் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தான் இராவணன். உலகிலுள்ள கோபம் அனைத்தையும் திரட்டித் தன் கண்விழிகளில் தேக்கி வைத்துக் கொண்டதுபோல் இருந்தான்.


போர்முனைக்குச் செல்வது போன்ற பரபரப்பு அவன் முகத்தில் தெரிந்தது. அடிக்கடி கைகளைப் பிசைந்தான். கலைந்த உத்தரீயத்தைச் சரி செய்துகொண்டான். சட்டென்று எழுந்தான்.


“தான்யா!” என்று அழைத்தான். வலது உள்ளங்கையைத் தன் முகத்துக்கெதிரே காட்டியபடி எதையோ சிந்தித்தான்.


“அழைத்தீர்களா அரசே?” என்று அழகிய புன்முறுவலுடன் உள்ளே நுழைந்தாள், தான்யமாலினி.


“அந்திப் பொழுதில் அல்லவா அரசர் என்னை அழைப்பார்? இன்று பகல் பொழுதுக்கே அழைப்பு வந்துவிட்டதே! நான் வணங்கும் தேவி மகாலட்சுமி எனக்குத் திடீர் அதிர்ஷ்டம் அளிக்க முடிவு செய்து விட்டாளா?” என்று கொஞ்சியவளாக அருகில் வந்தாள்.


“என்ன இது, உள்ளங்கையை உற்று நோக்குகிறீர்கள்? ஏதேனும் காயம் பட்டதா?” என்று அவன் வலது கையைத் தொடப் போனாள்.


“நில்” என்று சற்றே சினத்துடன் அவளைத் தடுத்தான் இராவணன்.இரண்டு கைகளையும் அவளுக்கெதிரில் விரித்தான்.  “இந்தக் கைகளைப் பற்றி உனக்கு என்ன தெரியும், சொல்” என்றான்.


இன்னும் அவனிடம் நெருக்கமாக வந்தாள். கால் சதங்கைகள் இனிமையாக ஒலித்தன. அதைவிடவும் இனிய குரலில் சிரித்துக்கொண்டே சொன்னாள்:


“சக்ரவர்த்தியே, உங்கள் கரங்களின் வலிமையை யார் தான் அறியார்! கை நரம்பையே வீணையாக்கிச் சாம கானம் இசைத்த பெருமையை ஈரேழ் உலகங்களும் அறியுமே! அந்த ஈசனே உங்கள் இசையில் மயங்கித் திளைப்பதை அன்றாடம் காணவேண்டும் என்பதற்காகக் கயிலை மலையையே பெயர்த்து இலங்காபுரிக்குக் கொண்டு வரவும் முயன்ற கரங்கள் அல்லவா இவை! ஆயுதமின்றியே அசுரர், தேவர், நரகர், கின்னரர் மற்றும் எதிர்த்து வந்தவர் எவராயினும் வெற்றி கொண்ட தோள்கள் அல்லவா இவை!...”


“நிறுத்து!” என்றான் இராவணன். “இந்தப் பழங்கதையை என்னிடம் கூறாதே. இந்தக் கைகள் எந்த இடத்தில் தோற்றுப் போயினவோ, அதை மட்டும் சொல்.” அவன் குரலில் இருந்த வேகம் அவளை அதிரவைத்தது. என்ன கேட்கிறார் சக்ரவர்த்தி? எப்போது யாரிடம் தோற்றார் இவர்?


உரிமையோடு அவனைத் தழுவிக்கொண்டாள் தான்யமாலினி.


பகற்பொழுதில் அவனோடு தனித்திருக்கும் வாய்ப்பு அரிதாகவே அவளுக்குக் கிடைக்கும்.  பட்டத்துராணியான மண்டோதரி தான் அவனுடைய பகற்பொழுதுக்குச் சொந்தக்காரி. மற்ற பெண்டிர் அவனாக அழைத்தால் மட்டுமே நெருங்கமுடியும்.


தான்யமாலினிக்குச் சலுகை உண்டு   இங்கிதம் தெரிந்தவள் என்பதால். ஆனால், சலுகையைத் தவறாகப் பயன்படுத்தமாட்டாள்.  அரசனும், சமுத்திரமும், நெருப்பும் எவ்வளவு பழக்கப்பட்டதாய் இருந்தாலும் விலகியிருப்பதுதான் பாதுகாப்பு என்ற பழமொழியை அவள் மறந்ததில்லை.  ஆனால் இன்றோ, அரசன் ஏதோ கலக்கத்தில் இருக்கிறான். கண்களில் சினம் கொதிக்கிறது. அதனால்தான் அழைத்திருக்கிறான்.


அவனைச் சமாதானப்படுத்தும் கடமை அவளுக்கு உண்டு.  இலங்காபுரியின் மலைச்சரிவுகளில் விளைந்த உயர்ரக வெட்டிவேரால் செய்யப்பட்டு, பரதக்கண்டத்தில் விளைந்த வாசனைத் திரவியங்களால் பூசப்பட்டு, சாளரங்களில் தொங்கவிட்டிருந்த தட்டிகளின் குளுமையையும் மீறி அவன் முகத்தில் அரும்பியிருந்த வேர்வைத்துளிகளைத் தன் கைத்துணியால் மெல்லத் துடைத்தாள். துடைத்தவள், அம் முகத்தின் அண்மையை இழக்க விரும்பாதவளாய்த் தன் முகத்தையும் அதன்மேல் சாய்த்துக்கொண்டாள்.


அதை விரும்பாதவனாய் அவளைச் சட்டென்று விலக்கினான் இராவணன். “சொல், நான் தோற்ற இடம் எது, சொல்..” என்றான் மீண்டும் அதிரடியான குரலில்.


அதிர்ச்சியடைந்த தான்யமாலினி, “அரசே” என்றாள், குரலில் மென்மையும் முகத்தில் கவலையும் புலப்படுமாறு.


“அரசே, நான் உங்கள் இளைய மனைவி. என்னிடமா இவ்வளவு கடுமையாகப் பேசுகிறீர்கள்? இன்று என்ன ஆகிவிட்டது தங்களுக்கு ? எனக்கொன்றும் தெரியவில்லையே! மேலும், மாபெரும் வீரராகிய தாங்கள் யாரிடத்திலும் தோற்றதில்லையே! ஏன் இப்படியொரு கேள்வி எழுகிறது உங்கள் மனத்தில்?”


ஆனால் அவளுக்குப் புரியாமல் இல்லை. அசோகவனத்தில் சிறை வைத்திருக்கும் அயோத்தி இளவரசி சீதையிடம் அவனது முயற்சிகள் பலிக்காமல் போனதைத்தான் தோல்வி என்று சொல்கிறான்.


அவளை இறுக அணைத்துக்கொண்டான் இராவணன். “தான்யா, சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இலங்காபுரிப் பட்டணத்தை எனக்கு வடிவமைத்துக் கொடுத்த தேவ சிற்பி மயனின் புதல்வியை - மண்டோதரியை - ஒரே பார்வையில் என்னவளாக்கிக் கொண்டேன். பட்டத்துராணி யாக்கினேன். சிவபக்தியில் இணையில்லாத மாது அவள். என் உயிரோடு உயிராகக் கலந்துவிட்ட சக்திதேவி அவள்.  ஆனால், உன்னைப் பார்த்த அதே கணம் நீயும் எனக்காகவே பிறந்தவள் என்று நெஞ்சம் சொல்லியது.  கால்கள் உன்னைவிட்டுப் பிரிய மறுத்தன. உன்னையும் ஏற்றுக்கொண்டேன். மண்டோதரி மஞ்சள் என்றால் நீ குங்குமம். நீங்கள் இருவரும் என்னிரு கண்கள்....” என்று சொல்லிக்கொண்டே போனவனைத் தடை செய்பவள் போல் அவன் வாய்மீது தன் இருவிரல்களை அழுத்தினாள் தான்யமாலினி.


“அப்படியானால் எதற்காக மூன்றவது கண் வேண்டும் என்று புஷ்பக விமானத்தில் பஞ்சவடிக்குப் போனீர்கள்?” என்று விஷமமாகக் கேட்டாள் தான்யமாலினி. “சீதையைச் சிறைபிடிக்க முடிந்த உங்களால், அவளை அந்தப்புரத்துக்கு அழைத்துவர முடியாமல் போனதைத்தானே தோல்வியாகக் கருதுகிறீர்கள்?” என்றாள். கண்ணில் 
பொய்க் கோபத்தை வரவழைத்துக்கொண்டாள்.


அவளின் அழகிய முகத்தைத் தன்னிரு கைகளாலும் ஏந்திக்கொண்டான் இராவணன். “என் அன்புக்குரியவளே, தான்யா! கோபிக்காதே! எனக்கு மூன்றவது கண் வேண்டும் என்று போகவில்லை. என் தங்கை சூர்ப்பநகையை அந்த இராமன் மூக்கரிந்தானே, அதற்குப் பழிதீர்ப்பதற்கே போனேன். ஆனால் போனபிறகுதான் தெரிந்தது...”


“என்ன தெரிந்தது? அவள் எங்களை விடப் பேரழகி என்றா?  மண்டோதரி , மஞ்சள்;  நான் குங்குமம்;  அவள் வெற்றிலை என்றா?”  முகத்தில் கோபத்தை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டாள் தான்யமாலினி.


அவளை இன்னும் இறுகத் தழுவிக்கொண்டான் இராவணன்.


“முட்டாள்! நீ அசுர குலத்துப்பெண் என்பதை மறவாதே.  மனிதகுலத்துப் பெண் போலப் பேசுகிறாயே!  நம் பெண்களுக்கு என்றும் இளமை மாறாது. அவர்களுக்கோ இளமை என்பதும் அழகு என்பதும் சிறிது காலமே இருக்கும். அதற்கா நான் மயங்குவேன்? வேறொரு முக்கியக் காரணம் உண்டு” என்றான்.


பின், தொடர்ந்தான்.


“ஏர்க் கலப்பையினால் கிடைத்ததால் சீதை என்றும் ஜனகருக்கு மகளானதால் ஜானகி என்றும், மிதிலை நக
த்தவள் என்பதால் மைதிலி என்றும், விதேக நாட்டினள் என்பதால் வைதேகி என்றும் அவளுக்குப் பல பெயர்கள் இருப்பதாகச் சூர்ப்பனகை கூறினாள்.


ஆனால் ஒரு சாம்ராஜ்யத்திற்கு ராணியாவதற்குரிய முழுத்தகுதியும் அவளுக்கு இருந்ததை அவள் கூறவில்லை. அதை வெறும் அழகுக்குள் அடக்கிவிட முடியாது. அந்த உண்மையைத்தான் பஞ்சவடியில் கண்டேன். அந்த ராஜ ரத்தம், வெறும் காய்களையும் கனிகளையும் இலைகளையும் தின்று காட்டில் மரவுரி தரித்து வாழ்வதற்காகப் படைக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன். எனக்கு அவள்மீது காதல் இல்லை. காமமும் இல்லை. ஆனால் அவள் ஒரு நாட்டின் ராணியாகவேண்டும், ராஜ குமாரர்களைப் பெற்றெடுக்கவேண்டும் என்ற பேராசை இருந்தது. அதற்காகவே அவளைக் கவர்ந்து வந்தேன். இதை நீயாவது புரிந்துகொள்வாயா?” என்றான். அவள் கண்களை ஊடுருவுவதுபோல் பார்த்தான்.


தான்யமாலினிக்குப் புரிந்தது. காதல் கணவன் பேசுவது உண்மையா பொய்யா என்பதை எந்த மனைவியாலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியுமே!


“ஆனால், சீதைக்கு மணமாகிவிட்டது. அவள் கணவனுக்கு ஓர் ராஜ்ஜியம் இருக்கிறது என்பதை மறந்துவிட்டீர்களா?”


சிரித்தான் இராவணன். “அந்த இராமன் ஓர் கோழை! ஏதோ சில முனிவர்களோடு போனானாம். அரக்கிகளை அழித்து யாகத்தைக் காத்தானாம். வேறென்ன தெரியும் அவனுக்கு?  மாமன்னர்களுடன் போர் புரிந்து வென்றிருக்கிறானா?  ஆயுதம் உண்டா?  படைபலம் உண்டா?  பதவி இல்லை என்றதும் பதறிக்கொண்டு மனைவியுடன் காட்டுக்கு ஓடிவந்தவனைக் கோழை என்றல்லாது வேறெப்படி அழைப்பது?  முடியாது, என் பதவி எனக்குத்தான், வேறு யாருக்கும் அதை விட்டுத்தர மாட்டேன் என்பதல்லவா வீரம்?


இப்படிப்பட்டவனுக்கா சர்வ ராஜ லட்சணமும் பொருந்திய சீதை மனைவியாக இருப்பது? இயற்கையே அதை ஏற்காதே?  ஆகவேதான் அவளைச் சிறைப்பிடித்தேன். சக்ரவர்த்தி என்ற முறையில் நான் செய்யவேண்டிய ராஜ கடமை அது. காதலோ காமமோ அதில் இல்லை” என்றான் இராவணன்.


சில நிமிடங்கள் அமைதி நிலவியது.


தேக்கு மரத்தில் முல்லைக்கொடி படர்ந்ததுபோல் இருந்த தான்யமாலினி, தன்னை விலக்கிக்கொண்டாள். “அரசே, அந்தச் சீதை பிடிவாதக்காரியாக இருக்கிறாள். நீங்களும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டீர்கள். அவள் உங்களை மனத்தால் ஏற்க மறுக்கிறாளே! ஈரமில்லாத மலைக்கற்கள் மீது விதைபோட்டால் முளைக்குமா? தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அவள் ஒரு மனிதகுலப் பெண். அவர்களுக்கு மனம் தான் முக்கியம். மனம் அனுமதித்தாலொழிய, மங்கையர் ஆடவருடன் சேருவதில்லையாம். உங்களுக்கு அசுரப்பெண்களின் மனம் தெரிந்திருக்கலாம். மனிதப்  பெண்களின் மனம் எப்படித் தெரியும்?”


பேசிக்கொண்டே போனவளை இடைமறித்தான் இராவணன்.


“அதனால் தான் உன்னை அழைத்தேன். இன்றோடு அவள் வந்து 
பத்து மாதங்கள் ஆகிறது. நானும் ஒவ்வொரு காலையும் மாலையும் அவளோடு தர்க்கம் நிகழ்த்தியாயிற்று. சாந்தமாகவும் கோபமாகவும் பயமுறுத்துவதாகவும் பேசியாயிற்று. அவள் மசியவில்லை.  இப்போது விஷயத்தை உன்கையில் விடுகிறேன். இன்னும் ஒரு மாதத்திற்குள் அவள் மசியவேண்டும்.  ஒரு ராஜகுமாரன் அவள் வயிற்றில் உருவாகவேண்டும். அதன்பிறகு அவளைப் பஞ்சவடிக்கே அனுப்பிவிடுகிறேன். இது உறுதி. இதை நீ தான் நிறைவேற்றித் தரவேண்டும். இம்மாதிரிக் காரியங்களை மென்மையாகக் கையாண்டு சாதிக்கும் திறமை உனக்கு மட்டுமே உண்டு. மண்டோதரியால் இது முடியாது. புரிந்துகொண்டாயல்லவா? நீ போகலாம். இன்று முதலே காரியம் ஆரம்பமாகட்டும்” என்று அவளை இறுகத் தழுவி முத்தமிட்டு அனுப்பி வைத்தான் இராவணன்.  திகைப்பும் கலக்கமுமாகத் தன்அறைக்கு நடந்தாள் தான்யமாலினி.




தமிழ்மணத்தில் வாக்களிக்க க்ளிக் செய்யவேண்டிய இடம்...  


                                                                                                                                                         (தொடரும்)




49 கருத்துகள்:

  1. கும்பகோணம் தெரியும் இது புதுக்கோணம் மாதிரி இருக்கு தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. த ம +1 சீதை ராமனை மன்னிப்பதற்குப் பதில், மறந்துபோய் கடமையைச் செய்யவந்த தான்யமாலினியை மன்னித்துவிடப் போகிறாள்.

    பதிலளிநீக்கு
  3. கேட்டு வாங்கிப்போடும் கதையில் தொடர்...ஐயாவின் பாணியில் அசத்தலாக உள்ளது. அவருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தொடர்கதையா? அருமை.
    புது கண்ணோட்டம்.
    தான்யமாலினி என்ன சொல்ல போகிறாள் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  5. மிக மிக வித்தியாசமான கோணம்..!! ராய செல்லப்பா சாரின் பாணியில் மிக அழகாக வந்துள்ளது. சாரின் கற்பனை அசாத்தியம். அவரது எழுத்தினைப் பற்றிச்சொல்லத் தேவையில்லை. ரசித்து வாசித்தோம்...தான்யமாலினி எப்படி இராவணனை மன்னிக்கப் போகிறாள் ...இல்லை ஒரு வேளை அடுத்த பகுதியில், சீதை ராமனை மன்னிப்பதாக வந்துவிடுமோ??!!!

    தொடர்கிறோம்...ஆவலுடன்..

    ....துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  6. எல்லா காலத்திலும் வில்லத்தனம் உண்டு போலும்

    பதிலளிநீக்கு
  7. வோட்ட்ட் பண்ணிட்டேன், தோஓஓஓஓஓ வருகிறேன் லங்காபுரி படிக்க.

    ஸ்ரீராம்ம்ம்ம் வெளில வாங்கோ எனக்கு மகுடம் கிடைச்சிருக்கு:).. அதனால நான் என்ன பேசுறேன்ன்ன்ன் என்ன பண்ணுறேன் என எனக்கே புரியுதில்ல:) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்று ’சீதை ராமனை மன்னித்துவிட்டாள்’ என்ற தலைப்பினையோ அல்லது முடிவினையோக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது.

    அதுவும், அது போன்றதொரு இறுதி வரிகளைக் கொண்டுவர, அவரவர் படும்பாடுகளும் அவஸ்தைகளும் சொல்லி மாளாமல் இருந்து வருகிறது.

    இத்தகைய சூழ்நிலையில் ’இராய. செல்லப்பா அவர்கள்’ இங்கு புது அவதாரம் எடுத்திருப்பதும், இந்தத் தொடரையே ஓர் தொடர்கதையாக மாற்றியிருப்பதும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

    தவிக்கும் கதாநாயகி தான்ய மாலினியை, அந்த இராவணனுக்குப் பிடிக்குதோ இல்லையோ எனக்கு இப்போ மிகவும் பிடிச்சுப்போச்சு.

    அநாயாசமான எழுத்துக்கள். நல்லதொரு எழுத்து நடை.

    நானும் அதே அந்தப்புரத்திற்குள் நுழைந்து இவர்களின் சம்சர்க்கத்தை .... ஸாரி .... (டங்க் ஸ்லிப்பு) சம்பாஷணைகளை நேரில் கேட்டதுபோல குதூகுலம் ஏற்பட்டது, எனக்கு.

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. //உரிமையோடு அவனைத் தழுவிக்கொண்டாள் தான்யமாலினி.//

    ஆஹா ! அற்புதமான கட்டம் இது.

    //தான்யமாலினிக்குச் சலுகை உண்டு இங்கிதம் தெரிந்தவள் என்பதால். ஆனால், சலுகையைத் தவறாகப் பயன்படுத்தமாட்டாள். அரசனும், சமுத்திரமும், நெருப்பும் எவ்வளவு பழக்கப்பட்டதாய் இருந்தாலும் விலகியிருப்பதுதான் பாதுகாப்பு என்ற பழமொழியை அவள் மறந்ததில்லை. //

    நல்ல புத்திசாலிப்பெண்ணாகவும் இருக்கிறாள்.

    //அவனைச் சமாதானப்படுத்தும் கடமை அவளுக்கு உண்டு. இலங்காபுரியின் மலைச்சரிவுகளில் விளைந்த உயர்ரக வெட்டிவேரால் செய்யப்பட்டு, பரதக்கண்டத்தில் விளைந்த வாசனைத் திரவியங்களால் பூசப்பட்டு, சாளரங்களில் தொங்கவிட்டிருந்த தட்டிகளின் குளுமையையும் மீறி அவன் முகத்தில் அரும்பியிருந்த வேர்வைத்துளிகளைத் தன் கைத்துணியால் மெல்லத் துடைத்தாள். துடைத்தவள், அம் முகத்தின் அண்மையை இழக்க விரும்பாதவளாய்த் தன் முகத்தையும் அதன்மேல் சாய்த்துக்கொண்டாள்.//

    அச்சா .... பஹூத் அச்சா !

    //ஆனால் அவளுக்குப் புரியாமல் இல்லை. அசோகவனத்தில் சிறை வைத்திருக்கும் அயோத்தி இளவரசி சீதையிடம் அவனது முயற்சிகள் பலிக்காமல் போனதைத்தான் தோல்வி என்று சொல்கிறான்.//

    ஆண்களின் இந்த வீக்நெஸ் பற்றிப் பெண்களுக்குப் புரியாத விஷயங்களா .... என்ன?

    //அவளை இறுக அணைத்துக்கொண்டான் இராவணன். “தான்யா, சொல்லவே வெட்கமாக இருக்கிறது.//

    இறுக அணைத்துக்கொண்டது இயல்பானதுதான். மேலும் பேரரசனும், மாவீரனும், சிவபக்தனுமான அவன் சொல்லத் தயங்கும் இது மிகவும் நியாயமானதொரு வெட்கம் தான்.

    //தேக்கு மரத்தில் முல்லைக்கொடி படர்ந்ததுபோல் இருந்த தான்யமாலினி, தன்னை விலக்கிக்கொண்டாள்.//

    ஆஹா, ரணம் ஏதும் இல்லாத மிக அருமையான உதா’ரணம்’ இது.

    //“அரசே, அந்தச் சீதை பிடிவாதக்காரியாக இருக்கிறாள். நீங்களும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டீர்கள். அவள் உங்களை மனத்தால் ஏற்க மறுக்கிறாளே! ஈரமில்லாத மலைக்கற்கள் மீது விதைபோட்டால் முளைக்குமா? தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அவள் ஒரு மனிதகுலப் பெண். அவர்களுக்கு மனம் தான் முக்கியம். மனம் அனுமதித்தாலொழிய, மங்கையர் ஆடவருடன் சேருவதில்லையாம். உங்களுக்கு அசுரப்பெண்களின் மனம் தெரிந்திருக்கலாம். மனிதப் பெண்களின் மனம் எப்படித் தெரியும்?”//

    சூப்பரான சொற்கள் .... தான்யங்கள் சிதறியதுபோல வெளிப்பட்டுள்ளன ‘தான்ய மாலினி’யின் வாயிலிருந்து.

    ஸ்வாமீ ....... இராய செல்லப்பா அவர்களே ! விடாதீங்கோ ..... இந்தக்கதையையே ஓர் 10-15 வாரங்களுக்காவது இழுத்துக்கொண்டே போங்கோ. படிக்கப் படிக்க எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், மனதுக்கு ஜில் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

    எழுத்தென்றால் இதுவல்லவோ எழுத்து ! :)

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  10. ஹா ஹா ஹா மிகவும் சுவாரஷ்யமாகப் போகிறது கதை, கம்பராமயணம் கேட்க படிக்க அலுப்பதில்லை எனக்கு.. ஆனாலும் அலட்டல் இல்லாமல் அருமையாக நகர்த்தும்போதுதான் மிகவும் பிடித்துப்போகிறது.. மிக அருமையாக எழுதியிருக்கிறார்ர்.. தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  11. தான்யமாலினி, ராவணன் பேச்சுக்களையே திரும்பவும் படித்தால் ராவணன் சீதையை எதற்குக் கவர வேண்டும்.புதுமாதிரியாகக் கதை போகும்போலுள்ளது. மன்னிப்பு எப்படி வரும்? ஆவலைத் தூண்டி விடுகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. அப்போ ராவணன் சீதையை கடத்தி வந்தது.. காதலாலும் இல்லை காமத்தாஅலும் இல்லை.. ராஜ குமாரி ஆக்கோணும் எனும் ஒரே காரணம்தானோ?:) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) என்னமாதிரிக் கதை விட்டு ஏமாத்துகிறார் தான்யாவை:).. பெண்கள் ஏமாளிகள் என்பது அந்தக் காலத்திலயே ஆரம்பமாச்ச்ச்ச்ச்ச்:)..

    //இன்னும் ஒரு மாதத்திற்குள் அவள் மசியவேண்டும். /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மசிவதற்கு சீதை என்ன கத்தரிக்காயா?:) கீரையா?:)... என் வன்மையான கண்டனங்கள்..... நான் ராவணனுக்குச் சொன்னேன்:).

    பதிலளிநீக்கு
  13. வை.கோபாலகிருஷ்ணன் said...///ஸ்வாமீ ....... இராய செல்லப்பா அவர்களே ! விடாதீங்கோ ..... இந்தக்கதையையே ஓர் 10-15 வாரங்களுக்காவது இழுத்துக்கொண்டே போங்கோ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  14. //தவிக்கும் கதாநாயகி தான்ய மாலினியை, அந்த இராவணனுக்குப் பிடிக்குதோ இல்லையோ எனக்கு இப்போ மிகவும் பிடிச்சுப்போச்சு.
    ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபு அண்ணனை முதலில் தேம்ஸ்ல தள்ளோணும்:)

    ///நானும் அதே அந்தப்புரத்திற்குள் நுழைந்து இவர்களின் சம்சர்க்கத்தை .... ஸாரி .... (டங்க் ஸ்லிப்பு) சம்பாஷணைகளை நேரில் கேட்டதுபோல குதூகுலம் ஏற்பட்டது, எனக்கு.
    //
    உங்களுக்கு வர வர டங்கு அதிகமாகவே ஸ்லிப் ஆகுது.. பீ கெயார்ஃபுல்ல்ல்ல்ல்ல்ல்( இது நேக்குச் சொன்னேன்:).

    பதிலளிநீக்கு
  15. ///Angelin said...
    அருமை.. தொடர்கிறேன்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உதைக் கொஞ்சம் சிரிச்சுக்கொண்டு சொல்லலாமெல்லோ:).

    பதிலளிநீக்கு
  16. haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa >>>:)<<< haaaaaaaaaaaaaaaaaaaஅருமை.. தொடர்கிறேன்

    @athira இது போதுமா

    பதிலளிநீக்கு
  17. சட்டுப்புட்டென்று சீதையை ராமனை மன்னிக்கச் சொல்லுங்கள் சார்

    பதிலளிநீக்கு
  18. //Angelin said...
    haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa >>>:)<<< haaaaaaaaaaaaaaaaaaaஅருமை.. தொடர்கிறேன்

    @athira இது போதுமா///

    ஹையோ ஆண்டவா பிச்சை வாணாம்ம் டோக் ஐப் புய்ங்கோஓஓஒ:)..

    http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89

    பதிலளிநீக்கு
  19. நல்ல 'காரியத்தைச்' செய்யும்படி பணித்து இருக்கிறான் இராவணன் ,இந்த காரியம் செய்பவனை மாமா என்பார்கள் ,தான்யமாலினியை எப்படி சொல்வது :)

    பதிலளிநீக்கு
  20. பாரத்தை தான்யமாலினியின் மீது ஏற்றியிருக்கின்றான் - இராவணன்.. அபாரம்!..

    புதிதாய் புத்தம் புதிதாய் புதுக்கவிதையாய் - புதுக்கதை ஒன்று!..

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்
    தொடருகிறேன் ஐயா பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  22. தவிக்கிறா தான்யமாலினி - தனாவுக்கு தனா படிக்கத் தூண்டியது. தான்யமாலினி யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும் தான்.
    செல்லப்பா அவர்களின் எழுத்தும் நடையும் மனைதை விட்டுச் செல்ல மறுக்குதுப்பா :-)
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. வைகோ, பகவான்ஜி கருத்துக்களின் விளையாட்டு எள்ளல் - ரசிக்க முடிகிறது

    பதிலளிநீக்கு
  24. asha bhosle athira said...

    **இன்னும் ஒரு மாதத்திற்குள் அவள் மசியவேண்டும்.**

    // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மசிவதற்கு சீதை என்ன கத்தரிக்காயா?:) கீரையா?:)...//

    தங்களின் கற்பனையான ‘கீரை மசியல்’ என்பதை நான் மிகவும் ரஸித்தேன். வெரி குட். :)

    //என் வன்மையான கண்டனங்கள்..... நான் ராவணனுக்குச் சொன்னேன்:).//

    இதற்கு வன்மையான கண்டனங்கள் ஏனோ? அதுவும் இப்போது உயிருடன் இல்லாத அந்தப் புராணகால இலங்கைச் சக்கிரவர்த்தியான ராவணனுக்குப்போய்.

    இராய செல்லப்பா சாருக்கு என்றாலும் என்னால் கொஞ்சம் ஒத்துக்கொள்ளும்படியாக இருந்திருக்கும். :)

    சரி ..... எனக்கு எதற்கு அநாவஸ்யமான ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்.

    பதிலளிநீக்கு
  25. asha bhosle athira said...

    வை.கோபாலகிருஷ்ணன் said... **ஸ்வாமீ ....... இராய செல்லப்பா அவர்களே ! விடாதீங்கோ ..... இந்தக்கதையையே ஓர் 10-15 வாரங்களுக்காவது இழுத்துக்கொண்டே போங்கோ**

    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//

    எதற்காக இப்படி ஒரு ’கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)’ இழுத்துள்ளீர்கள்?

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

    பதிலளிநீக்கு
  26. asha bhosle athira said...

    **தவிக்கும் கதாநாயகி தான்ய மாலினியை, அந்த இராவணனுக்குப் பிடிக்குதோ இல்லையோ எனக்கு இப்போ மிகவும் பிடிச்சுப்போச்சு.** - கோபு

    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபு அண்ணனை முதலில் தேம்ஸ்ல தள்ளோணும்:) //

    ஏன் என்னை முதலில் தேம்ஸ்ல தள்ளோணும்? ஏற்கனவே எங்காளு தான்ய மாலினியை தேம்ஸ்ல தள்ளிவிட்டுள்ளீர்களா அதிரா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

    **நானும் அதே அந்தப்புரத்திற்குள் நுழைந்து இவர்களின் சம்சர்க்கத்தை .... ஸாரி .... (டங்க் ஸ்லிப்பு) சம்பாஷணைகளை நேரில் கேட்டதுபோல குதூகுலம் ஏற்பட்டது, எனக்கு.**

    உங்களுக்கு வர வர டங்கு அதிகமாகவே ஸ்லிப் ஆகுது.. பீ கெயார்ஃபுல்ல்ல்ல்ல்ல்ல் (இது நேக்குச் சொன்னேன்:).

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    (இந்த பயம் இருந்தால் போதும் ...... ஓக்கே)

    பதிலளிநீக்கு
  27. சரித்திரத் தொடர் படித்து நாளாகி விட்டது! அழகான நடை!

    பதிலளிநீக்கு
  28. அப்பாதுரை said...

    //வைகோ, கருத்துக்களின் விளையாட்டு எள்ளல் - ரசிக்க முடிகிறது//

    தங்கள் ரசிப்புத்தன்மைக்கு என் நன்றிகள் ஸார். இதில் என் விளையாட்டோ எள்ளலோ எதுவுமே இல்லை சார். ரஸித்துப்படித்து மனம் திறந்து சொன்ன உண்மைக் கருத்துக்கள் மட்டுமே, ஸார்.

    மேலும் இதுவரை இது சம்பந்தமாக எழுதியுள்ளவர்களில் இவர் ஒருத்தர்தான் ‘சீதை ராமனை மன்னித்து விட்டாள்’ என வழுவட்டையாக கடைசியில் முடிக்காமல் ஏதேதோ சுவாரஸ்யமாகச் சொல்லிச் சென்று ‘தொடரும்’ வேறு போட்டுள்ளார்.

    மற்ற வாரங்களில் பலரும் பலவிதமாக எழுதியுள்ளவற்றைத் தாங்கள் படிக்கவில்லை போலிருக்குது. :(

    பதிலளிநீக்கு
  29. இந்த மான்யதாலினியை - சாரி, தான்யமாலினியைக் கொஞ்சம் பாக்கணும்போலிருக்கே..!

    பதிலளிநீக்கு
  30. ////இன்னும் ஒரு மாதத்திற்குள் அவள் மசியவேண்டும். /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மசிவதற்கு சீதை என்ன கத்தரிக்காயா?:) கீரையா?:)... என் வன்மையான கண்டனங்கள்..... நான் ராவணனுக்குச் சொன்னேன்:). //

    இதைப் படித்ததும் நானும் பக்கென சிரித்து விட்டேன். ரசனையான கமெண்ட் அதிரா! ஆதங்கமும் சேர்ந்த ரசனை.

    பதிலளிநீக்கு
  31. /தவிக்கிறா தான்யமாலினி - தனாவுக்கு தனா படிக்கத் தூண்டியது. //

    அப்பாதுரை... செல்லப்பா ஸார் இந்தக் கதைக்கு முதலில் வைத்திருந்த தலைப்பு வேறு. அது என்ன என்று அவரே சொல்லட்டும்!

    பதிலளிநீக்கு
  32. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  33. //ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்று ’சீதை ராமனை மன்னித்துவிட்டாள்’ என்ற தலைப்பினையோ அல்லது முடிவினையோக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது.

    அதுவும், அது போன்றதொரு இறுதி வரிகளைக் கொண்டுவர, அவரவர் படும்பாடுகளும் அவஸ்தைகளும் சொல்லி மாளாமல் இருந்து வருகிறது. //


    //சட்டுப்புட்டென்று சீதையை ராமனை மன்னிக்கச் சொல்லுங்கள் சார் //

    மேலும் இதுவரை இது சம்பந்தமாக எழுதியுள்ளவர்களில் இவர் ஒருத்தர்தான் ‘சீதை ராமனை மன்னித்து விட்டாள்’ என வழுவட்டையாக கடைசியில் முடிக்காமல் ஏதேதோ சுவாரஸ்யமாகச் சொல்லிச் சென்று ‘தொடரும்’ வேறு போட்டுள்ளார்.

    மற்ற வாரங்களில் பலரும் பலவிதமாக எழுதியுள்ளவற்றைத் தாங்கள் படிக்கவில்லை போலிருக்குது.


    சீதை ராமனை மன்னித்தாள் என்னும் வரி கடைசி வரியாக அமையவேண்டும் என்னும் வேண்டுகோளை ஏற்று நம்முடைய நண்பர்கள்
    அனைவரும் எழுதி வருகிறார்கள். அவர்கள் அவர்கள் டர்ன் வரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவரவர் கற்பனைக்கேற்ப அவரவர் எழுதி வருகிறார்கள். வாய்ப்புள்ள "முடிச்சு" (KNOT!) களில் முன்னரே மற்ற நண்பர்கள் எழுதிவிடும்போது அடுத்து வருபவர்களுக்கு அது ஒரு சவாலாகி விடுகிறது. தான் எழுதி முடித்த உடன் சில சமயங்களில் சிலருக்கு இது அலுத்து விடுகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் மற்றவர்கள் எப்படி முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள் என்பதை முடிந்தவரை பாராட்டுவோம், ஊக்குவிப்போம். அவர்களை டிஸ்கரேஜ் செய்ய வேண்டாமே.. ப்ளீஸ்...

    பதிலளிநீக்கு
  34. சுந்தரகாண்டம் படித்தால் நன்மைகள் உண்டாகும் என்றார் நண்பர் ஒருவர். அதனால் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தான்யமாலினியை நான் சந்திக்கமுடிந்தது. அதே சமயம்தான், எங்கள் பிளாக் நண்பர்களும் சீதையை மன்னித்துவிடும்படி சொன்னார்கள். சரி, கம்பனும் வால்மீகியும் மறந்துவிட்ட தான்யமாலினியை நாமாவது ஒரு கதைக்குள் கொண்டுவந்து நிறுத்தி அவளை உலகுக்கு மறு-அறிமுகம் செய்விக்கலாமே என்று தோன்றியது. அதன் விளைவே இந்தத் தலைப்பு. ஆனால் இக்கதைக்கு நான் வைத்திருந்த தலைப்பு வேறு. அதை ஜூன் 20க்குப் பிறகு சொல்கிறேனே!

    இக்கதையை வெளியிட எங்கள் பிளாக் நாயகர் ஸ்ரீராமுக்கும் பின்னூட்டங்கள் அளித்த ஆன்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.இராமகிருஷ்ணன் வரிசையில் நானும் இப்போது சேர்ந்துவிட்டேன்- என்றொரு அற்ப சந்தோசம் உண்டாகிறது. (அவர்கள்தானே இராமாயண, மகாபாரதக் கதைகளை மறு உருவாக்கம் செய்துவருகிறார்கள்!)

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
  35. அதே அதே..மீயும் சகோ ஸ்ரீராமின் கருத்தை படு வன்மையாக ஆதரிக்கிறேன்ன்...

    சட்டுப்புட்டென சீதை ராமனை மன்னிச்சதும் கோபு அண்ணனும் ஜி எம் பி ஐயாவும் அந்தாட்டிக்காவில போய் செட்டில் ஆகப்போகினம்போல இருக்கே கர்ர்ர்ர்ர்:)... மிகவும் சுவாரஷ்யமாகப் போய்க்கொண்டிருக்கிறது ஒவ்வொரு செவ்வாயும் இத்தலைப்பு... சீதை ராமனை மன்னிப்பதென்பது இலகுவான விசயமோ என்ன?:)... ராமன் செய்த குற்றத்துக்கு... மன்னிக்க விடமாட்டேன்ன் சீதையை...

    ஒவ்வொருவரும் எப்படி எல்லாம் யோசித்து முடிவுக்கான வரி, வரும்வரை எப்படி நகர்த்துகிறார்கள் என்பதும் ஒரு சுவாரஸ்யம்தான்... நானே ஒரு கதை எழுத நினைக்கிறேன்ன் நினைக்கிறேன்ன்ன்.. மன்னிப்புக் கட்டத்தை எப்படிக் கொண்டு வருவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்ன்ன்ன்:) அதுக்குள் சட்டுப் புட்டென முடிச்சிடட்டாம்ம் கர்ர்ர்ர்:).. நெல்லைத்தமிழனின் கூட பாதியிலயே நிற்கிறாராம்ம்ம் கேய்விப்பட்ட்டேன்ன்ன்ன்:)..

    அஞ்சு இன்னும் அஞ்சுலாம்புச் சந்தியிலயே நிக்கிறா:)... இந்தக் கதை எல்லாம் முடிஞ்சு அதிராவின் கதையும் வெளியாகோணும்??????[ச்ச்சும்ம்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்ன்:)}.. அதுவரை........:)

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டிட்டமோ:)... சரி சரி ஓடியே தப்பிடலாம் எங்கிட்டயேவா.. நாம ஆரூஊஊஊ.. 1500 மீட்டரில 2வதா வந்தேனாக்கும்:).

    அஞ்சூஊஊஊஊஊஊஉ பீஸ் சேஃப் மீஈஈஈஈஈ:).

    பதிலளிநீக்கு
  36. அன்புள்ள ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

    // அதே சமயம் மற்றவர்கள் எப்படி முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள் என்பதை முடிந்தவரை பாராட்டுவோம், ஊக்குவிப்போம். அவர்களை டிஸ்கரேஜ் செய்ய வேண்டாமே.. ப்ளீஸ்...//

    பொதுவாக விறுவிறுப்பான சிறுகதைகள் என்றாலே எனக்குப் படிக்க மிகவும் பிடிக்கும்.

    கதை எனக்குப் பிடித்திருந்தால், நான் எழுதியவர்களை, நிச்சயமாக பாராட்டியும், ஊக்குவித்துக்கொண்டும் தான் வருகிறேன். இன்றும் அதையேதான் நான் இங்கு செய்துள்ளேன். இந்தத் தங்களின் வலைத்தளத்தினில் பெரும்பாலான செவ்வாய்க்கிழமைகளில் என் பின்னூட்டம் இடம் பெற்றிருக்கும் என்பதே இதற்கு சாட்சியுமாகும்.

    இவரின் எழுத்து எனக்கு வித்யாசமாகவும், விறுவிறுப்பாகவும், என் மனதுக்குத் தோன்றியதால் மட்டுமே, சட்டுப்புட்டென்று கதையை முடிக்காதீர்கள் ..... மேலும் விஸ்தாரமாகத் தொடருங்கள் என்றுதான், நான் SPECIFIC ஆக, என் பின்னூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

    ஒவ்வொருவரும் எப்படி எப்படி யோசித்து, தங்கள் கற்பனையில் எழுதுகிறார்கள் என்பதைப் பார்க்க எனக்கும் மிகுந்த ஆவலாகவே உள்ளது. யாரையும் நான் இது விஷயத்தில் டிஸ்கரேஜ் செய்யவே இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் VGK

    Copy to அதிரா

    பதிலளிநீக்கு
  37. புரிதலுக்கு நன்றி அதிரா.

    உங்கள் கதைக்காக ஐயம் வெயிட்டிங்! (விஜய் குரலில் படிக்கவும்)

    :)))

    பதிலளிநீக்கு
  38. ஒவ்வொருவரும் எப்படி எப்படி யோசித்து, தங்கள் கற்பனையில் எழுதுகிறார்கள் என்பதைப் பார்க்க எனக்கும் மிகுந்த ஆவலாகவே உள்ளது. யாரையும் நான் இது விஷயத்தில் டிஸ்கரேஜ் செய்யவே இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


    புரிதலுக்கு நன்றி வைகோ ஸார்.

    பதிலளிநீக்கு
  39. ////அன்புடன் VGK

    Copy to அதிரா///

    ஹா ஹா ஹா எனக்கின்னும் கொப்பி கிடைக்கவே இல்லை:) ஒரு வேளை என் செக்கரட்டறி கைக்குப் போய் , எனக்குக் காட்டாமல் கிழிச்சு தேம்ஸ்ல எறிஞ்சிட்டாவோ என்னமோ:).. அவ செய்தாலும் செய்திருப்பா.. ஏற்கனவே சம்பளப் பாக்கி இருக்குதென மிரட்டுறா:)..

    கோபு அண்ணன் நீங்க எப்பூடிக் குதிச்சாலும் நான் உங்களை எஸ்கேப் ஆக விடவே மாட்டேன்ன் தெரியுமோ?:) என் கதை கிட்டத்தட்ட வருடக் கடைசியில்தான் இங்கின வரக்கூடும்(இன்னும் எழுதவே இல்லையே:)).. அதுவரை நீங்க பொறுமையா இருந்து எனக்குப் பின்னூட்டமும் போட்டிட்டு பிறகு நீங்க இந்தாட்டிக்காவோ இல்ல அந்தாட்டிக்கா போய்.. அந்தக் குளிருக்குள் இருந்து நடுங்குங்கோ:)) எனக்கென்ன வந்துது:).. ஃபிரிஜ்ஜுக்குள்ளயே பூந்திடுறேன் என்றீங்க:) கர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  40. வாழ்த்துகள் இருவருக்கும்

    பதிலளிநீக்கு
  41. ஒரு பெண்ணை அடைவதற்கு தன் மனைவியிடமே ஐடியா கேட்கிறாரா இராவணன்? அப்பாவியா இருக்காரே? :)

    இக்கதையில் என்னை முதலில் கவர்ந்தது இதன் எழுத்துநடை. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    குங்குமம் மஞ்சள் பின் வெற்றிலை உவமை ரசித்தேன். கதை தொடரடும்..!!

    பதிலளிநீக்கு
  42. கேட்டு வாங்கிப்போடும் கதை பகுதிக்கு நாங்களும் கதை அனுப்பலாமா? விதிமுறைகள் ஏதும் உண்டா.??

    பதிலளிநீக்கு
  43. சூப்பர். செல்லப்பா சார் கலக்குகிறார்.வித்தியாசமான கோணம். தான்யமாலினி அறியாத பாத்திரம்.தொடர் விறுவிறுப்பு

    பதிலளிநீக்கு
  44. திரு செல்லப்பா அவர்களின் கற்பனா வளம் அசாத்தியமாக இருக்கிறது. இப்போ என்ன சந்தேகம்னா இந்தக் கதைப்படி தான்யமாலினியைத் தான் சீதை மன்னிக்கும்படி இருக்கும்! ராமனை எப்படி மன்னிப்பாள்? ஆவலுடன் காத்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  45. ஸ்ரீராமின் கருத்தை 100 அல்ல அதற்கு மேலுமான சதமானத்தில் வழிமொழிகிறேன் ஆதரிக்கிறேன்.

    ஒவ்வொருவரின் கற்பனையும், பார்வைகளும், கதை எழுதும் திறமையும் வெளிப்படும் தருணம். நான் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரின் பார்வையில் சீதை எப்படி ராமனை மன்னிக்கிறாள் என்பதை அறிய ஆர்வமுடன் இருக்கிறேன். ஒவொருவரின் கதைகளிலிருந்தும் ஹப்பா இந்த உலகில் எத்தனை விதமான சூழ்லில் ஒரு சீதை மாட்டிக் கொள்கிறாள், ராமனை மன்னிக்க வேண்டிய சுழல் ஏற்படுகிறது என்பதனை அறிய முடிகிறது. வித்தியாசமான கோணங்கள், கருத்துகள் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள் ஒவ்வொரு எழுத்தாளரும்.

    நான் கதை எழுதிய காலம் ஒன்று உண்டு. கல்லூரி படிக்கும் போது அதன் பின் அது பரணில். எனது திறமை முடங்கி எங்கோ இருந்தது. அதனைத் தட்டி எழுப்பி நீ எழுதியே ஆக வேண்டும் என்று என்னை நன்றாக அறிந்த நண்பர் துளசியும், அதன் பின் இப்போது என்னையும் கதை எழுத வைத்து என்னை மெருகேற்றிக் கொள்ள உதவும் நண்பர் ஸ்ரீராமுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். அதே போன்று எங்கள் தளத்தில் கதை என்னை எழுத வைத்து அதற்கு கருத்துகள் கொடுத்து ஊக்கம் அளிக்கும் சகோதர சகோதரிகளுக்கும் என்ன சொல்ல...நெகிழ்ச்சியான தருணங்கள். இது உணர்ந்து சொல்லப்படும் கருத்து.

    பல இலக்கியப் படைப்புகளைப் படைக்கும் வல்லமை படைத்த எழுத்தாளர்களின் நடுவில் (அவர்களது கதைகளும் இங்கு இடம் பெறுகின்றனவே!!) எங்களை (அதிரா, ஏஞ்சல், அனு, என்னை) எல்லாம் ஊக்குவித்து ஸ்ரீராம் எழுத வைக்கிறார், எங்களைப் பல கதைகளை வாசிக்க வைத்து மெருகேற்றிக் கொள்ள வைக்கிறார் என்றால் அது மிகையல்ல. இதோ இப்போது ராயசெல்லப்பா சாரின் அருமையான நடையில் மிளிரும் கதை! மனதை ஈர்க்கும் எழுத்து....

    எனவே எங்கள் ப்ளாக் இதனைத் தொடர வேண்டும் என்பதே எங்கள் அவா. அப்படியேனும் பல படைப்புகளை வாசிக்க இயலும் அல்லவா.. இன்னும் எத்தனை சீதைகள், ராமன்கள் வர இருக்கிறார்களோ....ராமன் எத்தனை ராமனடி!! ஆவலுடன் தொடர்கிறோம்...மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!