திங்கள், 26 ஜூன், 2017

திங்கக்கிழமை 170626 : பீற்றூட் இடியப்பம் - அதிரா ரெஸிப்பி



அதிராவும் பீற்றூட் உம்:).
ஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா பீற்றூட் சாப்பிட்டு ஒரே பிங்கி மயம்:).


வாங்கோ வாங்கோ யோசிக்காமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ நம்ம வீடுதேன்:)..


நான் பாருங்கோ நிறைய பேசமாட்டன்:).. எப்பவும் ரொம்ப அமைதி:), அதனால இண்டைக்கும் நான் பேசப்போவதில்லை:).. உங்களுக்கு ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் எடுத்து வந்திருக்கிறேன்... இந்தாங்கோ முதலாவது..


பீற்றூட் கறி...


இதுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் சொல்ல வேண்டிய தேவை இல்லை:). இங்கு நான் பாவித்திருப்பது, இலங்கைக் கறிப்பவுடர். உங்களிடம் இல்லை எனில், நீங்கள் உங்கள் உறைப்புக் கறிக்கு எப்படி தூள்வகை சேர்ப்பீங்களோ அப்படி சேர்த்துக் கொள்ளுங்கள்.

முதலில், எண்ணெய் கொஞ்சம் விட்டு, வெங்காயம் மிளகாய் போட்டு வதக்குங்கள். வதங்கியதும், குட்டிக் குட்டியாக வெட்டிய பீற்றூட் ஐக் கொட்டிப் பிரட்டுங்கள். அதன் பின், இப்படிக் கறித்தூள் போட்டுப் பிரட்டுங்கோ.

பிரட்டியதும், பீற்றூட்டின் மேல் இருக்கும்படியாக தண்ணி சேர்த்து, நெருப்பைக் குறைத்து, நீண்ட நேரம், உப்பையும் சேர்த்து, மூடி அவிய விடுங்கோ.


இடையிடையே, பிரட்டி விடவும், நெருப்பைக் குறைத்து அவியவிடும் போதுதான் நன்கு கனிந்து  அவிந்திருக்கும் இப்படி.

இப்போ கறிவேப்பிலை சேர்க்கவும், இல்லையெனில் ஸ்பிறிங் அனியன் சேர்க்கலாம். நன்கு பிரட்டலாகியதும் இறக்கி, தேசிக்காய்ப் பிளி சேர்க்கவும்.


டொட்டடொயிங்:).. கறி ரெடியாச்சா?:) சரி இப்போ இடியப்பம் அவிக்கலாம் வாங்கோ:).


பீற்றூட் இடியப்பம் - அதிரா ஸ்பெஷல்

முதலில் இந்த இடியப்பம் பற்றிக் கொஞ்ச நேரம் பேசப்போறேனே பீஸ்ஸ்ஸ்ச்:). இது என்ன ஒரு இனிப்புச் சுவை தெரியுமோ? சும்மாவே சாப்பிடலாம் போல இருக்கும். அதிலும் அவித்து ஒரு மணி நேரம் போனபின் பார்க்க என்ன ஒரு டார்க் ரெட் கலர்.. பார்க்கப் பார்க்க அயகோ அயகூஊஊ:).

இப்படிச் செய்து, ஏதும் பார்ட்டி, கெட்டுக்கெதருக்கு வைக்க சூப்பராக இருக்கும்.

இதுக்கு நான் பாவித்திருப்பது, நன்கு அவித்து அரித்து எடுத்த பிளேன் ஃபிளவர் 2 கப்.  பீற்றூட் ஒரு கிழங்கு.

முதலில், பீற்றூட்டை  தோல் நீக்கி கழுவி, Greater  இல் இப்படித் துருவி எடுங்கோ. பின்பு 1 அல்லது 1.5 கப் தண்ணி விட்டு நன்கு அவித்தெடுத்து, வடியால் வடித்து அந்த நீரை எடுத்துக்கொள்ளுங்கோ.

மாவுக்குள் உப்புப் போட்டுக் கலக்கிய பின், இந்த தண்ணியைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, இடியப்ப பதத்துக்கு எடுக்கவும், இந்த தண்ணி போதாமல் போயிட்டால், உங்களிடம் இருக்கும், கொதித்து பின் கொஞ்சம் ஆறிய நீரையும் சேருங்கோ. குழைத்து இப்படித் தட்டில் பிழி/ளிந்து எடுக்கவும்.






ஸ் ரீமரில் அவித்து எடுக்கவும்.



ஸ்ஸ்ஸ்ஸ் வெயிட்:) உண்டகளைப்பு  தொண்டனுக்கும் உண்டு:)






/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/

 
ஊசி இணைப்பு:
இது எங்கட   “சமையல் ஸ்பெஷலிஸ்ட்”  நெல்லைத்தமிழனுடைய,  புளி மிளகாய்... இதில் இரு படங்கள் இணைச்சிருக்கிறேன்..  கறுப்பாக இருப்பது...........> மிளகாயைப் போட்டேன் பொரிந்துவிட்டது, புளியை மட்டும் கரைத்து சேர்த்தேன்ன்ன் ஸ்ஸ்ஸ் என்னா சுவை தெரியுமோ?:) புது ரெசிப்பி:).


சரி இது நெ.த ரெசிப்பிக்கு பொருந்தாதே என, அந்த டிஸ்[கறுப்பு] முடியும்வரை வெயிட் பண்ணி:), முடிஞ்சபின், அவரோட முறைப்படியே மீண்டும் செய்தேன்.. பச்சை மிளகாய் அரைத்துப் போட்டேன்.. ஆனா காரம் அதிகமாகிடுமோ எனும் பயத்தில் ஒரே ஒரு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூவும் சேர்த்து அரைத்தேன். என்னா சூப்பர் தெரியுமோ.. இடியப்பத்துக்கும்.. முக்கியமா “பாண்” உடன் சாப்பிட ஸ்ஸ்ஸ் சூப்பர் ... உறைப்பு, பிளிப்பை விரும்புவோருக்கு ஒரு உன்னதமான டிஸ் இது:). 
ஸ்ஸ்ஸ்ஸ் யாரும் பேசக்குடா:).. 
சகோ நெல்லைத்தமிழன் “பாண்” எண்டால் என்ன?:))


/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\


ஊசிக்குறிப்பு:
ஒரு பழமொழி இருக்குது தெரியுமோ உங்களுக்கு?:).. “அம்பு இருக்க, எய்தவரை நோகலாமோ?:)” என ஒன்றிருக்கு:) இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரிஞ்சிருக்கப்போகுது:).... அதனால, இதில் ஏதும் தப்புத்தண்டா எனில் ஸ்ரீராமைப் பிடியுங்கோ:).. பரிசு தரப்போறீங்கள் எனில், அதிரா பெயர் போட்டு, என் செக்கரட்டறிக்கு அனுப்பி விடுங்கோ பிளீஸ்ஸ்:). நன்றி வணக்கம்_()_.


______________________________________( )________________________________________






இங்கு க்ளிக் செய்து தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம்.

71 கருத்துகள்:

  1. இடியப்பம் அழகாக இருக்கிறதே புதுமைதான்...

    பதிலளிநீக்கு
  2. பீட்ரூட் சாறு சேர்த்து இடியாப்பம் செய்ய நினைத்ததில்லை. பார்க்க அழகாத்தான் இருக்கு. நல்லாவும் படத்துல வந்திருக்கு. இதுக்கு எதைத் தொட்டுக்கொண்டால் சுவையா இருக்கும்னு யோசிக்கிறேன்.

    பீட்ரூட் கறி எப்போதும் செய்வதுதான், காரப்பொடி சேர்க்காமல்.

    உடம்புக்கு நல்ல இரண்டு டிஷ்கள் இந்த வாரம் கொடுத்துருக்கீங்க. வாழ்த்துகள்.

    பாண் (Bun) எனக்கு ஒத்துக்கொள்வதில்லை. பழமொழி நல்லாருக்கு. ரயர்டுல "உண்ட களைப்பு" என்பதை பாதாதிதான் எழுதியிருக்கீங்க. த ம +1

    பதிலளிநீக்கு
  3. நல்வாழ்த்துகள்..

    இருந்தாலும் உண்ட களைப்பு குண்டனுக்கும்... என்ன இது வம்பு?.. தொண்டனுக்கும் உண்டு... தேங்காய் பால் அதிகம் குடித்தேன்... உஸ்..ஸ்ஸ்..

    பதிலளிநீக்கு
  4. நோர்மலான இடியப்பத்துக்கு பீட் ரூட் கறி சேர்த்து கொள்வதுதான். ஆனா பீட்ரூட் (சாறு)இடியப்பம் செய்தது இல்லை. சும்மாவே இடியப்பம் பிழிய தகராறு. நீங்க செய்துபார்த்து சொன்னபடியால் செய்யலாம் என இருக்கேன். பார்க்க நல்லா இருக்கு. இதுக்கு (கத்தரிக்காய்) பொரிச்ச குழம்பு நல்லாஇருக்குமெல்லோ..

    //பிளேன் ஃபிளவர் 2 கப்.// இது என்ன அதிரா. புதுசா இருக்கு...

    இடியப்பம் வித்தியாசமான ரெசிப்பி. வாழ்த்துக்கள்..பிங்கிபூஸ்

    பதிலளிநீக்கு
  5. //ஸ்ஸ்ஸ்ஸ் வெயிட்:) உண்டகளை தொண்டனுக்கும் உண்டு:)//

    இதில் உள்ள வாலையாட்டித் தூங்கும் அனிமேஷன் பூனையார் மட்டும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    அது ’உண்ட களைப்புத் தொண்டனுக்கும் உண்டு’ எனச் சரியாகச் சொல்லப்பட வேண்டும்.

    படித்தவுடனேயே களைத்துப்போய் நான் படுத்துத் தூங்கிவிட்டேன். :)

    எனவே இதிலுள்ள எதுவும் எனக்குச் சாப்பிட வேண்டியது இல்லை. நீங்களே சாப்பிடவும்.

    நான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. சொல்ல மறந்துட்டேன் ..................

    ஒரே பிங்கி மய முதல் பூனையார் அய்ய்ய்ய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்ய்ய்கு !

    பதிலளிநீக்கு
  7. போனாப்போகுதுன்னு த.ம. வோட்டும் போட்டுட்டேன். நினைவில் வைத்துக்கொள்ளவும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! :)

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி கில்லர்ஜி. இன்று ரம்ஸான் பண்டிகை என்பதால் எல்லோரும் லீவு எடுத்திட்டினம்போல... :)

    பதிலளிநீக்கு
  9. //நெல்லைத் தமிழன் said...//
    காரம் சேர்க்காமல் பீற்ரூட் ஆ? ஆகவும் இனிப்பாக இருக்குமே?.

    ///இதுக்கு எதைத் தொட்டுக்கொண்டால் சுவையா இருக்கும்னு யோசிக்கிறேன்.
    //
    இடியப்பத்துக்கு எப்பவுமே பொரிச்சு இடிச்ச சம்பல் தான் பொருத்தம்... சாதாரண இடியப்பம் எனில் தாளிச்சு வைக்கும் பால் சொதி சூப்பர். இதுக்கு சொதி பொருந்தாது.. சம்பல் அல்லது கீழே பிரியசகி சொன்னதுபோல பொரிச்ச கத்தரிக்காய்ப் பிரட்டலும் சூப்பர்ர்... தண்ணித்தன்மை இல்லாத பிரட்டல் கறிகள் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  10. //நெல்லைத் தமிழன் said...//பாண் (Bun) எனக்கு ஒத்துக்கொள்வதில்லை///

    பாண் என்றால் என்ன?:) அது பன் அல்ல.. பன்னை பன் அல்லது பனிஸ் எனத்தான் நாமும் சொல்வோம் ஊரில்.. இங்கு எனில் “றோல்” எனத்தான் சொல்லுவோம்.. இந்நாட்டுப் பாசை:).

    பாண் என்பது அது அல்ல?:).. கண்டுபிடிங்கோ இல்லை எனில்.. நைட் சொல்றேன்:).

    ///ரயர்டுல "உண்ட களைப்பு" என்பதை பாதாதிதான் எழுதியிருக்கீங்க. //
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:).. மியாவும் நன்றி நெ.தமிழன்.

    பதிலளிநீக்கு
  11. //துரை செல்வராஜூ said...//

    //இருந்தாலும் உண்ட களைப்பு குண்டனுக்கும்... என்ன இது வம்பு?.. தொண்டனுக்கும் உண்டு... தேங்காய் பால் அதிகம் குடித்தேன்... உஸ்..ஸ்ஸ்..//

    ஹா ஹா ஹா மின்னாமல் முழங்காமல் கொமெடி பண்ணிட்டீங்க..:)

    மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. //priyasaki said...//

    இல்ல அம்முலு, இடியப்பத்துக்கு எப்பவும் கொதிக்க கொதிக்க தண்ணி விட்டுக் குழைக்கக்கூடாது.. புட்டுக்கு எப்பவும் கொதிக்க கொதிக்க தண்ணி விடோணும்.. இவைதான் நான் கண்டு பிடிச்ச தெக்கினிக்கு:)..

    ////பிளேன் ஃபிளவர் 2 கப்.// இது என்ன அதிரா. புதுசா இருக்கு...//

    கோதுமை மா அம்முலு:).

    //பிங்கிபூஸ்//
    ஹா ஹா ஹா ஓவர் பீற்றூட் பிரியராம் அதனால பிங்கியாகிட்டார்ர்:)..

    மிக்க நன்றி அம்முலு.

    பதிலளிநீக்கு
  13. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ஸ்ஸ்ஸ்ஸ் வெயிட்:) உண்டகளை தொண்டனுக்கும் உண்டு:)//

    இதில் உள்ள வாலையாட்டித் தூங்கும் அனிமேஷன் பூனையார் மட்டும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. //

    சுட்டுட்டிங்களோ?:) ஹையோ இது வேற சுடுதல்:).. ஐ மீன்.. எடுத்துப் போயிருப்பீங்களே அதிரா களவெடுப்பதைப்போல:).

    //அது ’உண்ட களைப்புத் தொண்டனுக்கும் உண்டு’ எனச் சரியாகச் சொல்லப்பட வேண்டும்.//

    கர்ர்ர்ர்:) திரும்பவும் பார்த்தேன் சரியாத்தேனே இருக்கு மேலே:) என்னை எல்லோரும் குழப்பீனம்ம்ம்:) ஆனாலும் அதிரா எப்பவும் ஸ்ரெடிதான்ன்:)

    பதிலளிநீக்கு
  14. //வை.கோபாலகிருஷ்ணன் said...//
    நான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன்.///

    ஹா ஹா ஹா ரொம்ப நல்லது.. இருங்கோ அஞ்சுவையும் உங்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வச்சிட்டுத்தான் ஹொலிடே போவேன்ன்:).

    ///சொல்ல மறந்துட்டேன் ..................

    ஒரே பிங்கி மய முதல் பூனையார் அய்ய்ய்ய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்ய்ய்கு !///
    ஹா ஹா ஹா மியாவும் மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    போனாப்போகுதுன்னு த.ம. வோட்டும் போட்டுட்டேன். நினைவில் வைத்துக்கொள்ளவும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! :)//

    ஹா ஹா ஹா நீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்கோ இல்ல உண்ணாவிரதம் இருங்கோ இல்ல உச்சிப்பிள்ளையாரின் தண்ணி இல்லாக் கேணியில் குதியுங்கோ நான் என்ன வாணாம் என்றா சொல்லப்போறேன்ன்:) பட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் நேக்கு முக்கியம் வோட்டுத்தேன்ன்:).. ஹா ஹா ஹா.

    ஆனா எனக்கு ஹொலிடே ஆயத்தத்தில் இருப்பதனால் பின்னூட்டங்களுக்கு இன்று எப்படிப் பதில் கொடுப்பேனோ... தெரியாமல் குறிப்பை அனுப்பி விட்டேனே... கொமெண்ட் போடுவோருக்கு ஒரு வரியில் நன்றி சொல்லிப் போவது என் வழக்க மில்லையே என்றெல்லாம் யோசிச்சுப் பயந்தேன்ன்.. பரவாயில்லை.. இன்று அதிகம் பேர் லீவில நிற்கிறார்கள்.. எல்லாம் நன்மைக்கே:)..

    மிக்க நன்றி கோபு அண்ணன்.

    எங்கட டெய்சிப்பிள்ளைக்கும் எல்லோ டேகெயார் புக் பண்ணிட்டோம்ம்.. அது ஹோட்டல்போல .. அங்குதான் அவ இருப்பா நாம் திரும்பி வரும்வரை:).

    பதிலளிநீக்கு
  16. //விஜய் said...
    அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு //

    மிக்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இன்னும் ஒன்று சொல்லிட்டு ஓடிடுறேன்ன்..:)

    அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ நான் ஸ்ரீராம் உடன் கோபமாம்ம்ம்ம்ம்ம் எனச் சொல்லிடுங்கோ:) கோபம் போட்டபின்.. கோபம் என நேரில் சொல்லவும் முடியாதெல்லோ:).. ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
  18. நாங்கள் இலங்கை போனபோது உணவு கடைகளில் வித விதமாய் (அரிசி, ராகி, கோதுமை) இடியாப்பங்கள் கொண்டு வந்து வைத்தார்கள்.
    பீற்றூட் இடியப்பம் - அதிரா ஸ்பெஷல் மிகவும் அழகு.
    //ஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா பீற்றூட் சாப்பிட்டு ஒரே பிங்கி மயம்:).//
    அழகு பூனைக்குட்டி.

    பீற்றூட் கறிக்கு புளி சேர்த்தது இல்லை புளி சேர்த்து செய்துப் பார்க்கிறேன்.

    “சமையல் ஸ்பெஷலிஸ்ட்” நெல்லைத்தமிழனுடைய, புளி மிளகாய் அதிரா செய்தது அருமை.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.




    பதிலளிநீக்கு
  19. //asha bhosle athira said...
    இன்று ரம்ஸான் பண்டிகை என்பதால் எல்லோரும் லீவு எடுத்திட்டினம்போல... :)//

    என்னது இன்னிக்கு லீவா கண்ணு வேற திறக்க முடில ..லீவ் முடிஞ்சி வரட்டா :)) ஹஸகஸாஆ

    பதிலளிநீக்கு
  20. அதிரா அதிரடி கலக்கல் ரெசிப்பி ..கலர்புல்லா இருக்கு இடியாப்பம் ..இதுக்கு வெஜ் குருமாவும் நல்லா இருக்கும்

    பதிலளிநீக்கு
  21. அஆவ்வ் நெல்லைத்தமிழன் ரெசிப்பி செஞ்சாச்சா ??? நான் இன்னும் செய்யலை சூப்பரா இருக்கே ஆமா அதென்ன பக்கத்தில் இஸ் இட் தொல் தொல் ?? or குடம் புளி :)

    பதிலளிநீக்கு
  22. எனக்கு எப்பவுமொரு கன்ஃப்யூஷன் இந்த அதிராவுக்கும் ஏஞ்செலுக்கும் பூனையார் அதிரா எலியார் ஏஞ்செல் சரியா படிக்கத் துவங்கியதும் ஸ்ரீராம்தான் அதிரா போல் எழுதி இருக்கிறாரோ என்று மீ ஒரேஏஏஎ கன்ஃப்யூஸ்ட் நமக்கு கையுமோடலே காலும் ஓடலே இப்போதைக்கு எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  23. அதிரா- பாண் என்று நீங்க சொல்றது Breadஐயா? கோதுமை மாவு, சீனி அல்லது உப்பு, ஈஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவைவிட தளர்வா பிசைந்நு அவன்ல வச்சு பிரெட் மாதிரி பண்ணுவதுதானே. அதுக்கு தொட்டுக்க சம்பல்னு படிச்சிருக்கேன். ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம் "சம்பல் கொள்ளைக்கார்ர்கள்". பாண் இலங்கையர்களின் காலை உணவு. ஆனா தமிழர்களுக்கு இட்லி, பொங்கல் வடைதான் காலை உணவு.

    அதுக்குள்ள பாக்கிங் ஆரம்பிச்சாச்சா? நீங்க ரெண்டுபேரும் ஊருக்குக் கிளம்பறத்துக்குள்ள கதையை நம்ம ஏரியாவுக்கு அனுப்பணும்.

    பதிலளிநீக்கு
  24. ஏஞ்சலின்-- அதென்ன பக்கத்தில் இஸ் இட் தொல் தொல் ?? or குடம் புளி -- நாமெல்லாம் சமையல் பண்ணிட்டு, சாப்பிட்டுட்டு தூங்குவோம். சிலர் சமைக்கறதுக்கு முன்னாலேயே சாப்பிட்டுட்டு, அடுப்பில் மிளகாயை கொஞ்சம் வதக்கும்போதே தூங்கிவழிந்ததால் பச்சை மிளகாய், வறுத்த மோர்மிளகாய் கலருக்கு வந்திட்டது. இப்போ என்ன பண்ண? அதுல புளியை விட்டு கொதிக்கவைத்து, அவங்கவீட்டுல உள்ளவங்களுக்கு இன்னைக்கு அதுதான்.

    என்னைக்காச்சும் பார்க்க நேர்ந்தால், அன்னைக்கு கரி மாதிரி ஒண்ணைப் பண்ணியிருந்தீங்களே அந்த ரெசிப்பி எழுதின அங்கிள்தானேன்னு என்னைப் பார்த்து அவங்க பையன் சொல்லாமல் இருந்தாச் சரிதான்

    பதிலளிநீக்கு
  25. //நெல்லைத் தமிழன் said... அதிரா- பாண் என்று நீங்க சொல்றது Breadஐயா?//

    அதிரா ‘பாண்’ என்று சொல்வது இங்கு நம் ஊர்களில் இப்போது தடை செய்யப்பட்டுள்ள போதை வஸ்துவான ‘பான் - பராக்’ என்பதைத்தான் என நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. கோபு சார்.. அதிரா ஊருக்குப் போகுமுன் அவங்ககிட்டேயிருந்து உங்களுக்கு அர்ச்சனை நிச்சயம். அவங்க சாப்பிடற பிரெட்டை, பான-பராக்னு கற்பனை பண்ணிட்டீங்களே.

    பதிலளிநீக்கு
  27. இன்று அதிரா பீட்ரூட்டில் இடியாப்பம் செய்து விட்டாள். இன்னும் காரட்கலரில்,கீரையில், தக்காளிியில்,அவகேடாவில் என்று கலர்மாற்றி எங்கோஒன்று வந்து கொண்டிருக்கும். எதையாவது அரைத்துப் போடலாம். கோங்கூரா கீரை அரைத்து புளிப்பு இடியாப்பம் கதை தொடரும். நல்ல வேலை அதிரா முதலில் பிள்ளைார் சுழி. நல்ல சுவை தித்திப்பு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. //நெல்லைத் தமிழன் said...
    கோபு சார்.. அதிரா ஊருக்குப் போகுமுன் அவங்ககிட்டேயிருந்து உங்களுக்கு அர்ச்சனை நிச்சயம்.//


    அழுக்குப்பெண்களின் ..... ஸாரி ..... டங்க் ஸ்லிப்பூ ...... “அழகுப்பெண்களின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்”ன்னு ஒரு சினிமா பாடல் வரி நினைவுக்கு வருதூஊஊஊஊஊ.

    அதனால் சும்மா ஏதாவது பயமுறுத்தாதீங்கோ, ஸ்வாமீஈஈஈஈஈஈ.

    http://gokisha.blogspot.com/2012/10/blog-post_25.html இதோ இந்த அதிராவின் பதிவினில் கூட இதுபற்றி பின்னூட்டங்களில் நான் நிறையவே பேசியுள்ளேன்.

    அதில் மொத்தம் 309 கமெண்ட்ஸ்கள் உள்ளன. அவற்றை முழுவதுமாகப் படித்து முடிக்க முழுசா ஓராண்டுகூட ஆகலாம்.
    அதனால் என்னுடையதாக மட்டும் தேடித்தேடிப் படியுங்கோ, ஸ்வாமீ.

    பதிலளிநீக்கு
  29. //கோமதி அரசு said...
    நாங்கள் இலங்கை போனபோது உணவு கடைகளில் வித விதமாய் (அரிசி, ராகி, கோதுமை) இடியாப்பங்கள் கொண்டு வந்து வைத்தார்கள். //

    இலங்கைக் கடைகளில் இடியப்பமும் புட்டும் தானே முதலிடம்:)

    ///பீற்றூட் இடியப்பம் - அதிரா ஸ்பெஷல் மிகவும் அழகு///

    ஆவ்வ்வ்வ் உரக்கச் சொல்லுங்கோ கோமதி அக்கா, எல்லோருக்கும் நல்லாக் கேய்க்கட்டும்:).. இது முதன் முதலா செய்தேன், முன்பு எங்கோ பேஸ் புக்கிலோ எங்கோ பார்த்து என் கிட்னியில் சேஃப் பண்ணி வச்சேன்.

    ஆனா உண்மையில் சூப்பர் ரேஸ்ட், இனிப்பாக இருந்துது.

    ///பீற்றூட் கறிக்கு புளி சேர்த்தது இல்லை புளி சேர்த்து செய்துப் பார்க்கிறேன்//

    நாங்கள் இங்கிலிஸ் மரக்கறிகள் அனைத்துக்குமே தேசிக்காஅய்ப் புளி சேர்ப்போம்.. நம்மூர் மரக்கறிகளில்தான் சிலதுக்கு பழப்புளி சிலதுக்கு தேசிக்காய்.. இப்படி சேர்ப்போம்:).

    //“சமையல் ஸ்பெஷலிஸ்ட்” நெல்லைத்தமிழனுடைய, புளி மிளகாய் அதிரா செய்தது அருமை.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

    ஆவ்வ்வ்வ் உண்மையில் சூப்பராக இருந்துது.. மியாவும் மியாவும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  30. //Angelin said...
    //asha bhosle athira said...
    இன்று ரம்ஸான் பண்டிகை என்பதால் எல்லோரும் லீவு எடுத்திட்டினம்போல... :)//

    என்னது இன்னிக்கு லீவா கண்ணு வேற திறக்க முடில ..லீவ் முடிஞ்சி வரட்டா :))///

    ஆமா ஆமா தனக்குத் தனகெண்டால் சுழகு படக்குப் படக்கெண்ணுமாமே:) போன திங்கட்கிழமை எலாம் வச்சு 4 மணிக்கே எழும்பி ஓடிவந்திட்டா கர்ர்ர்ர்:)

    // ஹஸகஸாஆ// என்னாது கசகசவா? எதுக்கூஊஊஊஊஊஊஊ இப்போ பொப்பி சீட்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  31. //Angelin said...
    அதிரா அதிரடி கலக்கல் ரெசிப்பி ..கலர்புல்லா இருக்கு இடியாப்பம் ..///

    அது அது.. இந்த வசனம் வந்திருக்காட்டில் தேம்ஸ்ல தள்ளியிருப்பேன்ன் எங்கிட்டயேவா?:)..

    //இதுக்கு வெஜ் குருமாவும் நல்லா இருக்கும்// கொஞ்சம் காரமான பிரட்டல் கறிகள் கூடப் பொருந்தும் அஞ்சு.. ஏனெனில் சும்மாவே இடியப்பம் ஒரு வித இனிப்பாக இருக்கும்.. இதில வேறு பீற்றூட் இனிப்பு:)

    பதிலளிநீக்கு
  32. //Angelin said...
    அஆவ்வ் நெல்லைத்தமிழன் ரெசிப்பி செஞ்சாச்சா ??? நான் இன்னும் செய்யலை சூப்பரா இருக்கே ஆமா அதென்ன பக்கத்தில் இஸ் இட் தொல் தொல் ?? or குடம் புளி :)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுதானே பக்கத்தில தெளிவா எழுதிட்டனே:) ஒன்றிலிருந்துதானே இன்னொன்று உருவாகிறது:).. இது அதிராவின் அஞ்சாவது விதி:)... அதனால நெல்லைத்தமிழன் ரெசிப்பி செய்யப்போய் இப்பூடி ஒரு புயு ரெசிப்பி:) கொலம்பஸ் எதுக்கோ வெளிக்கிட்டு அமெரிக்காவைக் கண்டு பிடிச்சதைப்போல:) ஹா ஹா ஹா..

    மியாவும் நன்றி அஞ்சு.

    பதிலளிநீக்கு
  33. ///G.M Balasubramaniam said...
    எனக்கு எப்பவுமொரு கன்ஃப்யூஷன் இந்த அதிராவுக்கும் ஏஞ்செலுக்கும் பூனையார் அதிரா எலியார் ஏஞ்செல் சரியா படிக்கத் துவங்கியதும் ஸ்ரீராம்தான் அதிரா போல் எழுதி இருக்கிறாரோ என்று மீ ஒரேஏஏஎ கன்ஃப்யூஸ்ட் நமக்கு கையுமோடலே காலும் ஓடலே இப்போதைக்கு எஸ்கேப்//

    ஹா ஹா ஹா வாங்கோ ஐயா வாங்கோ:).. நீங்க கொன்பியூஸ் ஆனால்தான் எனக்கு சந்தோசம் ஹா ஹா ஹா:).. வர வர எல்லோருடைய எழுத்தையும் அதிரா எழுத்துப்போலவே மாத்திக்கொண்டு வந்திட்டேன்ன்..

    ஜி எம் பி ஐயா ஒன்றுதான் பாக்கி.. எங்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனச் சொல்லுங்கோ:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. //நெல்லைத் தமிழன் said...
    அதிரா- பாண் என்று நீங்க சொல்றது Breadஐயா//

    ஹா ஹா ஹா.. பிரெட் ஐயா என ஆரும் இருக்கினமோ இங்கு?:)..

    அதே அதே பிரெட் தான் ஆனா பிரெட் என்பது ஆங்கில வார்த்தை, அதனால இலங்கையில் தமிழர்கள் எல்லோரும் பாண் எனத்தான் சொல்வோம்ம்ம் தமிழில்.. ஆனா பாண் என்பது சிங்களமாமே அவ்வ்வ்வ்வ்வ்:).. அப்போ பிரெட்டுக்கு தமிழில் என்ன?:) வெதுப்பு ரொட்டி என தமிழ்நாட்டு அண்ணா ஒருவர் சொன்னார்.. அதுவும் பொருந்தாதே. தமிழ்நாட்டில் பிரட் ஐ எப்படி தமிழில் அழைப்பீங்க.. இதுக்கு நெ.தமிழனோடு கோபு அண்ணனும் சேர்ந்து கிட்னியை ஊஸ் பண்ணிப் பதில் சொல்லோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  35. //நெல்லைத் தமிழன் said...
    ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம் "சம்பல் கொள்ளைக்கார்ர்கள்".//
    ஹா ஹா ஹா அதென்ன கொள்ளைக்காரகள்... நாம் சம்பல் என்பதை நீங்க சட்னி என்கிறீங்க.. ஆனா சட்னி என்பதும் ஆங்கிலம்தானே? அப்போ தமிழில் சொல்லுங்கோ அதன் பெயரை?:).. இன்று நெல்லைத்தமிழன் ரம்ளான் லீவில் நின்றது தப்பாப்போச்சே:)

    ///பாண் இலங்கையர்களின் காலை உணவு. ஆனா தமிழர்களுக்கு இட்லி, பொங்கல் வடைதான் காலை உணவு//

    நாங்கள் காலையில் இடியப்பம், புட்டு, பாண் பணிஸ்... இப்படியான உணவுகள்தான் சாப்பிடுவோம் ஊரில்.. வெளிநாட்டில் இப்போ எல்லோரும் பாண் அல்லது சீரியல்கள் தான்..

    புளிக்க வைக்கும் உணவுகள் எல்லாம் இரவுக்குத்தான் சாப்பிடுவோம்ம்.. பொங்கல் பெரிதாக செய்வதில்லை ஏதும் விசேசன்ம் எனில்தான். மற்றும்படி விடுமுறை நாட்களில் சிலசமயம் காலைக்கு தோசை, அப்பம் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  36. //அதுக்குள்ள பாக்கிங் ஆரம்பிச்சாச்சா? //

    பக்கிங் ஐ விட ரென்ஷன் முதலில் வந்திடும் எனக்கு:) ஹா ஹா வீடெல்லாம் கிளீன் பண்ணி, கார்டின் எல்லாம் ஒழுங்கு பண்ணி.. அதோடு டெய்ஷியின் ஒழுங்குகள்...

    // நீங்க ரெண்டுபேரும் ஊருக்குக் கிளம்பறத்துக்குள்ள கதையை நம்ம ஏரியாவுக்கு அனுப்பணும்.///
    ஹா ஹா ஹா கதை எழுதுவதாயின் நைட்டோடு நைட்டாக எழுதியிருப்பேன் ஏனில் எனக்கு நன்கு கற்பனை வரக்கூடிய தலைப்பு, ஆனா எனக்கு போஸ்ட்டை விட, பின்னூட்டக் கும்பி, குழறுபடி, அடிதடி சண்டைதான் அதிகம் பிடிக்கும்:) ஹா ஹா ஹா அதுக்கு இப்போ நேரமில்லை என்பதனால்தான் ஒதுங்கிட்டேன்ன்.. பட் எழுத முடியல்லியே என மீ வெரி சாட்ட்ட்ட்ட்ட்.. :( அஞ்சூஊஊஊஊ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. பிங்க் கலரில நிலைவிருக்கட்டும்:) ஹா ஹா ஹா.

    ஆனா எனக்காக அஞ்சு கதை எழுதி அனுப்புவா:) இது அந்த அஞ்சுவின் லவெரியா மீது சத்தியம்ம்ம்:).

    பதிலளிநீக்கு
  37. ///அடுப்பில் மிளகாயை கொஞ்சம் வதக்கும்போதே தூங்கிவழிந்ததால் பச்சை மிளகாய், வறுத்த மோர்மிளகாய் கலருக்கு வந்திட்டது. இப்போ என்ன பண்ண? அதுல புளியை விட்டு கொதிக்கவைத்து, அவங்கவீட்டுல உள்ளவங்களுக்கு இன்னைக்கு அதுதான்.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா அது ஒரு புது ரெசிப்பியாகி என்னா சூப்பரா இருந்துது தெரியுமோ?:) ஆனா மீ மட்டும்தேன் சாப்பிட்டேன்ன்:).

    //என்னைக்காச்சும் பார்க்க நேர்ந்தால், அன்னைக்கு கரி மாதிரி ஒண்ணைப் பண்ணியிருந்தீங்களே அந்த ரெசிப்பி எழுதின அங்கிள்தானேன்னு என்னைப் பார்த்து அவங்க பையன் சொல்லாமல் இருந்தாச் சரிதான்//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  38. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //நெல்லைத் தமிழன் said... அதிரா- பாண் என்று நீங்க சொல்றது Breadஐயா?//

    அதிரா ‘பாண்’ என்று சொல்வது இங்கு நம் ஊர்களில் இப்போது தடை செய்யப்பட்டுள்ள போதை வஸ்துவான ‘பான் - பராக்’ என்பதைத்தான் என நான் நினைக்கிறேன்.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மகன் குடும்பம் வந்து நிக்கினம், எப்பூடியும் காப்பாத்துவினம் எனும் தைரியத்தில ஓவராக் கதைக்கிறார் கோபு அண்ணன் இருங்கோ.. இண்டைக்கு ஸ்ரெயிட்டாஆஆஆஆ தெப்பைக்குளம்தேன்ன்ன்ன்ன்:))..

    நீங்க எத்தனை தரம் ஸ்வாமி போட்டுக் கூப்பிட்டாலும், இண்டைக்கு லீவு நெ.தமிழன் வந்து காப்பாத்த மாட்டார் ஜொள்ளிட்டேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  39. //நெல்லைத் தமிழன் said...
    கோபு சார்.. அதிரா ஊருக்குப் போகுமுன் அவங்ககிட்டேயிருந்து உங்களுக்கு அர்ச்சனை நிச்சயம். அவங்க சாப்பிடற பிரெட்டை, பான-பராக்னு கற்பனை பண்ணிட்டீங்களே.//

    அதே அதே.. நான் திரும்பி வரும் வரை கோபு அண்ணனைப் புதுப்போஸ்ட் போட விடமாட்டேன்ன் ஜொள்ளிட்டென்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  40. //காமாட்சி said...
    இன்று அதிரா பீட்ரூட்டில் இடியாப்பம் செய்து விட்டாள். இன்னும் காரட்கலரில்,கீரையில், தக்காளிியில்,அவகேடாவில் என்று கலர்மாற்றி எங்கோஒன்று வந்து கொண்டிருக்கும். எதையாவது அரைத்துப் போடலாம். கோங்கூரா கீரை அரைத்து புளிப்பு இடியாப்பம் கதை தொடரும். நல்ல வேலை அதிரா முதலில் பிள்ளைார் சுழி. நல்ல சுவை தித்திப்பு. அன்புடன்//

    ஹா ஹா ஹா காமாட்சி அம்மாவுக்கும்.. அதிராவைக் கண்டால் குசும்பு வருதூஊஊஊ:).. இல்ல இடியப்பத்துக்கு அரைத்துப் போட்டால் களியாகிடும் என நினைக்கிறேன்.

    நாங்க கீரை அல்லது ஸ்பெஷலா குறிஞ்சா இலை போட்டு புட்டு அவிப்பதுண்டு, ஆனா எல்லோருக்கும் பிடிக்காது. கொங்கூரா கீரை வாழ்க்கையில் முதலும் கடசியுமா 2 மதங்களுக்கு முன் வாங்கி வந்து பருப்பு போட்டு கறி செய்தேன், ஆனா அது நமக்குப் பிடிக்கவில்லை:(.

    மியாவும் நன்றி காமாட்சி அம்மா.

    பதிலளிநீக்கு
  41. //வை.கோபாலகிருஷ்ணன் said...//

    அதனால் சும்மா ஏதாவது பயமுறுத்தாதீங்கோ, ஸ்வாமீஈஈஈஈஈஈ.///
    இருங்கோ இருங்கோ சொல்றதையும் சொல்லிப்போட்டு பயம் வேற:) இண்டைக்கு இரவைக்கு கோபு அண்ணனை நித்திரை கொள்ள விடாமல் கட்டிலைச் சுத்தி எலிக்கூட்டமாஆஆஆஆஆஆஆஆ ஓஒடும்:).

    //அதனால் என்னுடையதாக மட்டும் தேடித்தேடிப் படியுங்கோ, ஸ்வாமீ.//
    எந்தப் பதிவெனத் தேடிப் பார்க்கவில்லை இப்போ நான், ஆனா என் 100 ஆவது பதிவாக இருக்கலாம் என நம்புகிறேன்ன்.. வெற்றிலை பாக்கு வச்சு அழைச்ச பதிவு.. கர்ர்ர்ர்ர்ர் அது நிஜாம் பாக்கூஊஊஊஊஊஉ..

    வாய் மணக்க நிஜாம் பாக்கு
    தாம்பூலம் சிறக்க நிஜாம் பாக்கு..
    உனக்கு எனக்கு என
    அனைவரும் போட்டி போட்டு
    வாங்கும் பாக்கு நிஜாம் பாக்கு...

    ஹா ஹா ஹா முந்தி சின்னனாக இருந்தபோது ஓல்/ஆல் இந்தியா ரேடியோவில் போகும் அட்ட்:).

    பதிலளிநீக்கு
  42. தமிழ்நாட்டில் பிரட் ஐ எப்படி தமிழில் அழைப்பீங்க.. - பிரட்டை பிரட்னு சொல்லாம வேற எப்படிச் சொல்லுவாங்க?

    "அண்ணே ஒரு ரொட்டி தாங்கண்ணே"

    "பன்னா"

    "இல்லைண்ணே. பிரெட்டு"

    இப்படிச் சொல்லறதை விட்டுட்டு, 'வெதுப்பு ரொட்டி தாங்கண்ணே'ன்னு சொன்னா, என்னை என்னை "கொழுப்பு"ன்னு திட்டறயான்னு அடிக்க வந்துடுவார். பிளாஸ்டிக் ஷீட் கொடுங்கண்ணேன்னு கேட்பதற்குப் பதிலாக 'நெகிழி குடுங்க'ன்னு கேட்டால் யாருக்குப் புரியும்? மேங்கோ ஐஸ்க்ரீம் கொடுங்கன்னு கேட்காமல் மாம்பழப் பனிக்கூழ் என்றால் இவர் நேரா கீழ்ப்பாக்கத்திலிருந்து வந்த கேசுன்னு நினைச்சுருவாங்க.

    தமிழ்னாட்டுல நாங்க ரொம்ப முன்னேறியாச்சுனால, எல்லாத்துக்கும் நாங்க இங்கிலீஷ்தான் யூஸ் பண்ணுவோம். 'டிவி, நியூஸ் பார்த்தேன், நாளைக்கு லீவு, ஹாலிடே டூர் போறோம், ஆரஞ்ச் ஜூஸ் வாங்கிட்டுவா, சாரி ரொம்ப நல்லாருக்கு, பஸ்ஸ்டாண்ட் போகணும், டிரெயினுக்கு டயமாச்சு... அனேகமா நாங்க 25%க்கு மேல் ஆங்கிலம் உபயோகிப்போம் பேசும்போது'

    சட்னி என்பதும் ஆங்கிலம்தானே - ஏங்க.. ஆங்கிலேயர்களுக்கு தேங்காய் சட்னிக்கு ஆங்கிலத்தில் பெயர் தெரியலை. அதுனால அவனும் சட்னி ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான். நாங்க கட்டுமரம்னு சொன்னதுக்கு கட்டமராங்க் னு சொல்ல ஆரம்பிச்சுட்டான்.

    பதிலளிநீக்கு
  43. @நெல்லை தமிழன் அந்த தீஞ்ச மிளகாய் பார்க்க இருட்டுக்கடை அல்வா மாதிரியே இருந்திச்சி ..கேரளா தொல்தொல் கருப்பு புட்டரிசி அல்வாவை சொன்னேன்
    ஒருவேளை தீஞ்ச ரீஸன் இதுவா இருக்குமோ ..பூனை என்ன செஞ்சிருக்கும்னா :) மேக்கப் போட்டுக்கிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்து அவங்க அழகிலேயே மயங்கிருப்பாங்க அதுக்குள்ளே அங்கே கிச்சனில் எல்லாம் தீஞ்சிருக்கும் :)

    பதிலளிநீக்கு
  44. ஹாஹா :) நாங்க கடையில் போய் குளம்பி வேணும்னு கேட்டா விநோதமா பார்ப்பாங்க அதனால்தான் யாருக்கும் கஷ்டம் வேணாம்னு காஃபி னு சொல்றோம் :) இல்லையா நெல்லை தமிழன்

    ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா எப்டிலாம் சமாளிக்க வேண்ண்டியிருக்கு பூனைக்கிட்ட

    பதிலளிநீக்கு
  45. இப்போது வெளியாகியிருக்கிறது!

    நம்ம ஏரியா க க க போ வில் நெல்லைத்தமிழனின் இரண்டாவது கதை வெளியீடு.

    https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_26.html


    பதிலளிநீக்கு
  46. @அதிராவ் //ஹா ஹா ஹா ரொம்ப நல்லது.. இருங்கோ அஞ்சுவையும் உங்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வச்சிட்டுத்தான் ஹொலிடே போவேன்ன்:).// எதை உண்ணா விரதம்னு தெளிவா சொல்லணும் :))

    பதிலளிநீக்கு
  47. அதிரா ஓடியாங்க இப்போ கொஞ்ச நேரம் நம்ம ஏரியால கலாட்டா பண்ணிட்டு ஹேர் ட்ரெஸ்ஸர் கிட்ட போகணும் ..உடனே வாங்க

    பதிலளிநீக்கு
  48. Angelin said...
    @அதிராவ் //ஹா ஹா ஹா ரொம்ப நல்லது.. இருங்கோ அஞ்சுவையும் உங்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வச்சிட்டுத்தான் ஹொலிடே போவேன்ன்:).// எதை உண்ணா விரதம்னு தெளிவா சொல்லணும் :))//

    ======================================================
    உண்ணாவிரதம் பற்றிய என் விளக்கம் இதோ:
    ======================================================

    ஒரு முறை சாப்பிட்டபிறகு, மறுமுறை சாப்பிடும்வரை நடுவில் (இடைவெளியில்) எதையும் சாப்பிடாமல், மிகவும் கட்டுப்பாடாக இருப்பதன் பெயர் மட்டுமே உண்ணாவிரதம்.

    இந்த இடைவெளி என்றக் கட்டுப்பாடு அஞ்சு நிமிடமாகவோ, அஞ்சு மணி நேரமாகவோகூட இருக்கலாம்.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

    பதிலளிநீக்கு
  49. நல்லாத்தான் இருக்கு... அடியேன் உடம்பிற்கு ஒத்துக்காது...

    பதிலளிநீக்கு
  50. அரைச்சு வடிக்கட்டி சாறுமட்டும் சேர்த்து என்று எழுதணும். கொஞ்சம் நானும் கத்துக்கறேன். குசும்பு இல்லே. நன்றி அதிரா. அன்புடன்

    பதிலளிநீக்கு
  51. //நெல்லைத் தமிழன் said...
    தமிழ்நாட்டில் பிரட் ஐ எப்படி தமிழில் அழைப்பீங்க.. - பிரட்டை பிரட்னு சொல்லாம வேற எப்படிச் சொல்லுவாங்க?//
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றது ஆங்கிலமாக இருக்கட்டும்.. நான் கேட்டது பிரெட்டுக்கு என்ன டமில்ல்ல்ல்?:)) ஹா ஹா ஹா ரொட்டி என்பது சரியாகாது சொல்லிட்டேன்ன்ன்:).. நானும் பலரைக் கேட்டுவிட்டேன்ன் ஆருமே சரியா பதில் சொல்றாங்க இல்லயே:)..

    பதிலளிநீக்கு
  52. நெல்லைத் தமிழன் said...//தமிழ்னாட்டுல நாங்க ரொம்ப முன்னேறியாச்சுனால, எல்லாத்துக்கும் நாங்க இங்கிலீஷ்தான் யூஸ் பண்ணுவோம்//

    ஹா ஹா ஹா சமீபத்தில் எனக்கு ஃபோவேர்ட்டாகி வந்த ஒரு மெசேஜ் ஐ உங்கள் இந்த வசனம் நினைவு படுத்திட்டுது:)..

    “ஒரு காலத்தில நல்லா ஆங்கிலம் பேசறவங்களை
    வியந்து பார்த்த நாங்க, இப்போ நல்லா தமிழ் பேசுறவங்களை,
    வியந்து பார்க்கும் நிலைமைக்கு ஆளாகிட்டோம்ம்”

    பதிலளிநீக்கு
  53. //சட்னி என்பதும் ஆங்கிலம்தானே - ஏங்க.. ஆங்கிலேயர்களுக்கு தேங்காய் சட்னிக்கு ஆங்கிலத்தில் பெயர் தெரியலை. அதுனால அவனும் சட்னி ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான். நாங்க கட்டுமரம்னு சொன்னதுக்கு கட்டமராங்க் னு சொல்ல ஆரம்பிச்சுட்டான்.//

    ஹா ஹா ஹா நல்லாத்தான் சமாளிக்கிறீங்க.. இப்போ நம்மால் ஆங்கிலம் இல்லாமல் தமிழ் பேச முடியாது எனும் நிலைமைக்கு வந்திட்டோம் அதுதான் உண்மை.. இப்படியே போனால் தமிழ் என்னாகுமோ இன்னும் கொஞ்சக் காலத்தில்.. உண்மையில், வெளிநாட்டில் மட்டுமல்ல நம் நாடுகளிலும் பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாமல் தானே வந்து கொண்டிருக்குது.. என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது எனச் சொல்வதில் பல பெற்றோர் பெருமைப்படுகின்றனர்... ஆனா என்ன பண்ணுவது முடியுதில்லை.. நாம் விரும்பினாலும் திணிக்க முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  54. Angelin said...// மேக்கப் போட்டுக்கிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்து அவங்க அழகிலேயே மயங்கிருப்பாங்க அதுக்குள்ளே அங்கே கிச்சனில் எல்லாம் தீஞ்சிருக்கும் :)//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) உண்மையில் அப்படிச் செய்து பாருங்கோ சூப்பரா இருந்துது, நல்லெணியில் நன்கு பொரிஞ்ச பின், புளி கரைச்சு விட்டு வத்தலாக்கி எடுத்தேன்ன் சூஊஊஊஊப்பர்:)

    பதிலளிநீக்கு
  55. ///Angelin said...
    ஹாஹா :) நாங்க கடையில் போய் குளம்பி வேணும்னு கேட்டா விநோதமா பார்ப்பாங்க அதனால்தான் யாருக்கும் கஷ்டம் வேணாம்னு காஃபி னு சொல்றோம் :) இல்லையா நெல்லை தமிழன்

    ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா எப்டிலாம் சமாளிக்க வேண்ண்டியிருக்கு பூனைக்கிட்ட///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) bread க்கு தமிழில் என்ன எனக் கேட்டேன்ன்:) தாங்க படிச்ச இலக்கண இலக்கியம் எல்லாம் எடுத்து விடுறாங்க கர்ர்:) என்னாது குளம்பி என்றால் கோஃபியா?:) அப்போ ரீக்கு என்ன?:)
    ஹா ஹா ஹா ஃபிஸ் நடுக்கடலுக்குள் நழுவி ஓடுதே:)

    பதிலளிநீக்கு
  56. கோபு அண்ணன் கரீட்டாக் கணிச்சு வச்சிருக்கிறார் இந்த விசயத்தை மட்டும்:).

    பதிலளிநீக்கு
  57. //திண்டுக்கல் தனபாலன் said...
    நல்லாத்தான் இருக்கு... அடியேன் உடம்பிற்கு ஒத்துக்காது...//
    பீற்றூட் சுவீட்டான ஆட்களுக்கு நல்லதில்லைத்தான் ஆனா எப்போதாவது சாப்பிடலாம்.. இதில் இருப்பது இயற்கை இனிப்புத்தானே.

    பதிலளிநீக்கு
  58. //கரந்தை ஜெயக்குமார் said...
    சாப்பிடத் தூண்டுகிறது நண்பரே
    தம+1//
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  59. //காமாட்சி said...
    அரைச்சு வடிக்கட்டி சாறுமட்டும் சேர்த்து என்று எழுதணும். கொஞ்சம் நானும் கத்துக்கறேன். குசும்பு இல்லே. நன்றி அதிரா. அன்புடன்//

    ஆஅவ்வ்வ்வ்வ் காமாட்ஷி அம்மாவின் மீள் வருகையை நான் எதிர்பார்க்கவில்லை:)..

    ஹா ஹா ஹா நான் என் பாசையில்..///வடியால் வடித்து அந்த நீரை எடுத்துக்கொள்ளுங்கோ./// இப்படி எழுதிட்டேன்ன், இனிமேல் உங்களைப்போல தெளிவாக எழுதுறேன்ன்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  60. இடியாப்பத்தை வெள்ளை ,கோதுமை நிறத்தில் பார்த்திருக்கேன் ,இப்போதான் பிங்க் நிறத்தில் பார்க்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா இனி விரைவில் பபபச்சை நிறத்திலும் பார்ப்பீங்க பகவன் ஜீ:).. மிக்க நன்றி.

      நீக்கு
  61. நல்லவேளையா நேத்திக்கே எல்லோருமா வந்து சாப்பிட்டுட்டுப் போயிட்டாங்க! எனக்கு பீட்ரூட்டே பிடிக்காது.வாங்கறதில்லை! எப்போவானும் வாங்கினாக் கழுவிட்டு முழுசாக் குக்கரில் வேக வைச்சுத் தோலை உரிச்சு, கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு, தாளித்துக் கொண்டு பச்சைமிளகாய், இஞ்சியை நசுக்கிப் போட்டு பீட்ரூட்டைச் சின்னதாக நறுக்கிச் சேர்த்துக் கொஞ்சம் உப்புச் சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிஷம் வதக்கிட்டுப் பின் இறக்கும்போது தே.து. சேர்ப்பேன். பச்சைக் கொத்துமல்லி, கருகப்பிலை தூவுவேன். அவ்வளவு தான்! ஆனால் அதுவும் அலுத்துடும்! :)

    பதிலளிநீக்கு
  62. நல்ல ருசியா இருக்கும் போலிருக்கே

    பதிலளிநீக்கு
  63. அதிரா சூப்பரா அயகா இருக்கே! பீட் ரூட் ரொம்பப் பிடிக்கும் (எதுதான் பிடிக்காதுனு கேளுங்க எங்கிட்ட!! எல்லாமே பிடிக்குமே) இதுவரை பீட் ரூட் ஜூஸ் சேர்த்துச் செஞ்சது இல்லை...செஞ்சுருவோம்....தங்க்யூ தங்க்யூ அதிரா!! பொட்டி கட்டி போயாச்சோ!! ஊருக்கு?! ஏஞ்சலும் கூட...போறாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  64. //இலங்கைக் கடைகளில் இடியப்பமும் புட்டும் தானே முதலிடம்:)// கேரளத்திலும் கூட!!! இவை அடிக்கடிச் செய்யப்படும்.

    பதிலளிநீக்கு
  65. பிங்க் பிடிக்கும்னு இங்கி பிங்கி பாங்கி னு இட்லியும் பிங்க் கலரில் வருமோ அதிரா...பீட் ரூட் உப்புமா???!! ஹஹஹ் ஒருமுறை சேவையை ப்ரியாணி செய்ய பீட் ரூட்டையும் சேர்க்கப் போக மற்ற வெஜ்ஜிஸ் போட்டாலும் பிங்காக பீட் ரூட் டாமினேட் செய்தது. நன்றாகவே இருந்தது ஆனால் பீட் ரூட் கலர் பிடிக்காதவர்களுக்கு அது பிடிக்காமல் போனது...

    கீதா

    பதிலளிநீக்கு
  66. பிங்கி பூஸாரும், தூங்கும் பூஸாரும் ரொம்ம்ம்ம்ப அழகு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  67. பீட்ரூட் - நான் பச்சையாகவே [சிவப்பாகவேன்னு சொல்லலாம்!] சர்க்கரை சேர்த்து சாப்பிடுவேன் - சின்ன வயதில்! இப்போது சாப்பிடுவதில்லை.

    பீட்ரூட் இடியாப்பம் - புதியதாக இருக்கிறது! செய்து சாப்பிடும் பொறுமை இல்லை! அதிரா கொஞ்சம் தில்லிக்கு பார்சல் ப்ளீஜ்......

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!