புதன், 2 ஆகஸ்ட், 2017

புதன் புதிர் 170802



1)  If 8517   is written as 5435 in a code,   what will be the code for 9623?   




2)  Which animal has acted in more no of films?


3) Which hero holds the record for maximum number of films announced but not released? 
+++++++++++++++++++++++++++++++++++சாரி ! 
வால் பகுதியை இணைக்க மறந்துவிட்டேன்! 

சென்ற வார புதன் புதிருக்கான விடைகள்:


1. இவை எல்லாம் சீனர்களின் காலண்டரில் உள்ள ராசிகள். நமக்கு மேஷம், ரிஷபம் என்பது போல. இதற்கு சரியான விடையை முதலில் கூறிய தில்லையகத்து கீதா ரெங்கன், பிடியுங்கள் பாராட்டுக்களை.

2. ஒற்றை எழுத்து வார்த்தைக்கு 42 வார்த்தைகளை கூறிய ஸ்ரீ வரதராஜன் அவர்களை எழுந்து நின்று வணங்குகிறேன்; இருந்தாலும் என்னைக் கவர்ந்தது என்னவோ தில்லையகத்து கீதாதான். ஏனென்றால் ஸ்ரீ வரதராஜன் அவர்கள் அவருக்கு ஏற்கனவே வந்த மெசேஜ் என்று கூறி விட்டார். ஸோ, ஒற்றை எழுத்து வார்த்தைகளை வைத்து அழகாக கதை புனைந்த கீதாவுக்கு மீண்டும் பாராட்டு! முயற்சி செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள். 

திரு. அப்பாதுரை அவர்கள் சுஜாதா ஏன் இதை செய்யச்சொன்னார்? என்று கேட்டிருந்தார். திறமையான சொல்லாடலுக்காகத்தான். சுஜாதாவின் சிறப்பே குட்டி குட்டி வாக்கியங்கள், புதிது புதிதாக சொற்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு தமிழ் வார்த்தை கற்று கொள்வாராம்.

மூன்றாவது கேள்விக்கு சரியான விடையை கூறியிருப்பவர் 
திரு.பெசாவி அவர்கள். பாராட்டுகள்!

கலந்து கொண்ட, கலந்து கொள்ளலாமா என்று யோசித்த,எட்டி நின்று வேடிக்கை பார்த்த அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றியும். 
நன்றி எங்கள் ப்ளாக்.
அன்புடன்,
பானுமதி வெங்கடேஸ்வரன்.


=======================================================================

27 கருத்துகள்:

  1. ரெண்டாவது கேள்வி, 3 வது கேள்வி எந்த மொழி, எந்த நாடு என்பதெல்லாம் இல்லையே..கௌ அண்ணா..இது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று புபுசமுகொஉ எல்லாரும் கொடி பிடிக்கறோம்....அதிரான்னா தேம்ஸ்ல குதிச்சுருவேன்னு போராட்டம் பண்ணுவாங்க. அதுல குதிச்சுரலாம்...இங்க கூவத்துல குதிக்கவா முடியும்?....ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. 2 வதுக்கு கில்லர்ஜி சொல்லியிருப்பது போல பைரவர்னு சொன்னாலும் அதுல ஏதோ வில்லங்கம் இருப்பதால்...அதுவும் டொமஸ்டிக் அனிமலா, வைல்ட் அனிமலா என்று கேட்கப்படாததால்....மனுஷனும் சோசியல் அனிமல்தானே...ஸோ மனுஷனையும் சேர்த்துகலாமில்லையோ....அப்ப மனுஷங்கதான்...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இன்னொண்ணு மனுஷன் domestic as well as wild ரெண்டு லிஸ்ட்லயும் வந்திருவான்ல??!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் தி.து.கீதாவைப்போல சந்தேகம் வந்தது. இருந்தாலும் இந்தியா என்று எடுத்துக் கொண்டு பாம்பு என்று பகர்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. இரண்டாவது கேள்வி குறித்து தி.து.கீதா போல எனக்கும் சந்தேகம் வந்தது. இருந்தாலும் பாம்பு என்று பகர்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. 2. பாம்பு
    3. ராமராஜன்
    அம்புட்டுத்தேன் !!!

    பதிலளிநீக்கு
  8. If 8517 is written as 5435 in a code, what will be the code for 9623?
    EIGHT FIVE ONE SEVEN - 5435
    9623 - NINE SIX TWO THREE - 4335

    பதிலளிநீக்கு
  9. த ம காலைய முதலா போட்டாச்சு. கணக்கு/எண்கள் சம்பந்தமானா, மா.ரா வருவாரே. இன்னும் காணலியே. அப்புறம் பெசோவி.

    1. ரெண்டு எண்கள் மட்டும் கொடுத்தால் பலவிதமால ரிலேஷன்ஷிப் கொண்டுவரலாம். அதனால் சரியான விடை என்று நீங்கள் சொல்வது சரியானதாக இருக்காது.
    2.'ACTED- இதுதான் முக்கியமான வார்த்தை. குதிரை, நாய், மாடு, யானை இவைகளில் குதிரை என்பது சரியாக இருக்கும். பாம்பு விலங்கல்ல. அது ஊர்வன இனத்தைச் சேர்ந்தது.
    3. ஹீரோ கேள்விக்கெல்லாம் எனக்கு விடை தெரியாது. நான் 'பவர் ஸ்டார்'னு சொல்லப்போக, அவருடைய ரசிகர்கள்கிட்ட இருந்து எதுக்கு திட்டு வாங்கணும்?

    பதிலளிநீக்கு
  10. பானுக்கா நெல்லை தானே முதலில் சைனா காலண்டர் சொல்லிருந்தார்
    அப்புறம் நானும் எனக்கு வாட்ஸாப்பில் ஏற்கனவே வந்து இருந்ததால் தான் சொல்லிருந்தேன்...ஸோ நெல்லைதானே 1st

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அதே போல ஒற்றை எழுத்து வார்த்தைகள் பலர் நிறைய சொன்னங்களே.... அக்கா....நான் சொன்னது கொஞ்சம் தானே....

    ஒரு வேளை சுஜாதா ப்ராக்டீஸ் பண்ணத்தான் கொடுத்துருப்பாரோனு நினைச்சு முயற்சி பண்ணினேன்....ஹிஹிஹி

    அந்த பாராட்டுக்கு நன்றி பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நாட்டாமை - பானுக்கா தீர்ப்பை மாத்துங்க!!!! ஹஹஹஹ

    கீதா

    பதிலளிநீக்கு
  13. த ம பொட்டியையும் காணோம், லிங்கையும் காணுமே....லிங்க் கொடுக்கலையா இன்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. நம்ம இனிய நண்பர் ஆனையார் நிறைய நடிச்சிருக்கார்னு நினைக்கிறேன்.

    @பானுமதி வெங்கடேஸ்வரன், நீங்க திட்டினதாலே (ஹிஹிஹி) நான் முழுக்கச் சொல்லலை! இல்லைனா இன்னும் சொல்லி இருப்பேன். பொற்கிழி எனக்கே கிடைச்சிருக்கும். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இப்போக் கிடைக்காமல் போனதோடு என்னைக் கணக்கிலேயே எடுத்துக்கலை! அநியாயமா இல்லையோ!

    பதிலளிநீக்கு
  15. மூன்றாவது கேள்விக்கு விடை எம். ஜி.ஆர். என்பது என் யூகம். அவருடைய கலையுலக வாழ்க்கை சிவாஜியைப்போல flying start கிடையாது. நிறைய ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்தித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  16. எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் பலரில் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு
  17. நெல்லை சொல்லியிருப்பது போல இந்த கணிதப் புதிருக்கு பல விடைகள் (தப்பாகவும்) சொல்லலாம்.. ஒரு ஆதாரத்துக்காக வேணும் இன்னொரு குறி கொடுத்திருந்தால் சரியான விடை சொல்ல வாய்ப்பு அதிகம். ஒரு வேளை சரியான விடையை எதிர்பார்க்கவில்லையோ?

    பதிலளிநீக்கு
  18. பொன்சந்தருக்கு பாராட்டுக்கள்.
    விடையை கொஞ்சம் விவரமாக விளக்கிப் போடுங்க kgg!

    பதிலளிநீக்கு
  19. // If 8517 is written as 5435 in a code, what will be the code for 9623?
    EIGHT FIVE ONE SEVEN - 5435
    9623 - NINE SIX TWO THREE - 4335 //

    Not valid. The whole point of coding is to hide the message and by un-coding one should get back the original.

    So, by this 'TWO' and 'SIX' having the same code as '3' will fail while un-coding (recovering the actual message)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!