Saturday, August 12, 2017

கோவையில் ராஜா என்னும் ஒரு ஆட்டோ ஓட்டுநர்...1)  நேர்மைக்கு மாறாக அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்க மனது இடம் கொடுக்காததால்
அரசாங்க வேலையை இழந்தவர்.அதுபற்றி கவலையில்லாமல் கிடைக்கும் வேலையை பார்க்க மதுரை வந்தார்  வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிளில் வரும்போது மூடாத பள்ளம்,எரியாத தெருவிளக்கு,அள்ளாத குப்பை என்று கண்ணில்படும் அவலங்களை எல்லாம் குறித்துவைத்துக் கொண்டு அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஒரு கடிதம் போட்டுவிடுவார், ஏழை எளிய மக்களுக்கு பயன்படக்கூடிய விஷயங்கள் என்றால் அதுபற்றி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிவிடுவார்.  கோபால்  என்னும் தேவமைந்தன்.2)  இந்த மனிதர்கள் இல்லா விட்டால், இவர்கள் பணி இல்லா விட்டால் சுத்தம் ஏது?  சுகாதாரம் ஏது?   இவர்களைப் பாராட்டும் இவர்களை நாம் பாராட்டுவோம்!


3)  பெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர். .... தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது.....  ( நன்றி ரமணி ஸார் )


4)  குடிகாரத் தந்தை.  வீட்டுவேலை செய்யும் தாய்.  இளவயதில் படிக்க முடியாமல் பட்ட கஷ்டத்தை, தன்னைப்போல் வேறு யாரும் படக்கூடாது என்று அரசுப்பள்ளிகளில் நன்றாகக் படிக்கும் மாணவர்களுக்கு தன்னுடைய குறைந்த வருவாயிலிருந்து உதவிகள் செய்யும் கோயம்புத்தூர் ஆட்டோ ராஜா.தமிழ்மணத்தில் வாக்களிக்க....

20 comments:

நெல்லைத் தமிழன் said...

அனைத்தும் உத்வேகம் கொடுக்கும் செய்திகள். த ம

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம+1

கோமதி அரசு said...

//லட்சாதிபதிதான் புதைக்கப்படுவான் லட்சியவாதி விதைக்கப்படுவான் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் நிம்மதியுடன் தானும் வாழ்ந்து மற்றவர்களுக்காகவும் வாழும் லட்சியவாதி நான்.//

கோபால் அவர்கள் தேவமைந்தன் தான்.

சுத்தம் செய்பவர்களை பாராட்டி, பணம், துணிமணிகள் கொடுத்தாலும் அவர்களை மேடைஏற்றி அவர்களை பாராட்டியது மிக சிறப்பு.
இருதரப்புக்கும் பாராட்டுக்கள்.

முகநூலில் ரமணி சார் பகிர்வில் படித்தேன் இலஞ்சியில் இவர் சேவையை. இப்போது வலைத்தள பகிர்வை படிக்கவில்லை படிக்க வேண்டும்.
நல்ல சேவை பாராட்ட வேண்டும்.

ராஜாவின் சேவை பாராட்டுக்குரியது. வறுமையிலும் செம்மை. ராஜா வணக்கத்துக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
பகிர்வுக்கு நன்றி.
KILLERGEE Devakottai said...

சிலரால் இன்னும் மனிதம் வாழ்கிறது.

Pandiaraj Jebarathinam said...

மனிதர்கள் இவர்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல உள்ளங்கள்...

பி.பிரசாத் said...

நல்ல உள்ளங்கள் பற்றிய நல்ல தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி !

விஜய் said...

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

mohamed althaf said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

அபயாஅருணா said...

வாரா வாரம் தவறாமல் இது போன்ற விஷயங்களைத் தொகுத்து வழங்கும் உங்களுக்கு முதல் பாராட்டுக்கள் . பதிவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருமே நம்மைப் போன்ற ஒரு சாதாரண நிலையில் இருந்தும் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் . பாராட்டுக்கள்

புலவர் இராமாநுசம் said...

அனைவருக்கும் வாழ்த்துகள் த ம 9

ராஜி said...

பதிவின் இரண்டாவது விசயம்தான் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

கோபால் தேவ மைந்தன் தான்...

துப்புரவுபணி செய்பவர்களைப் பாராட்டுபவர்களை வாழ்த்திப் பாராட்டுவோம்.

தம்புராஜ் செய்யும் பணியும் போற்றத் தக்கது. முன்பு பாஸிட்டிவ் செய்திகளில் வந்த நினைவு..

கோபால் நல்ல முன்னுதாரணம். வாழ்த்துவோம்!

G.M Balasubramaniam said...

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

Geetha Sambasivam said...

தம்புராஜ் சமையல் பத்திப் பல வருடங்கள் முன்னரே அடிச்ச நினைவு. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

Asokan Kuppusamy said...

அனைவருக்கும் பாராட்டுதல்கள் உரித்தாகட்டும்

Bagawanjee KA said...

முகத்தைக் கூட காட்ட நினைக்காத ஆட்டோ ராஜா போற்றுதலுக்கு உரியவர் :)

Avargal Unmaigal said...

அனைத்தும் நல்ல பாசிடிவ் செய்திகள் பகிர்விற்கு பாராட்டுக்கள்

கீத மஞ்சரி said...

எளிய நிலையில் இருந்தாலும் தங்களால் இயன்றவரை இந்த சமூகத்திற்கு உதவும் நல்லுள்ளங்களை அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி. எளிய மனிதர்கள்.. வலிய உள்ளங்கள். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களுக்கும் தகவல் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!