வியாழன், 31 ஆகஸ்ட், 2017

முடிவதற்குள் ஒரு முத்தம்






============================================================



கர்ணனின் முடிவு​



     ... இதற்குள் சல்யன் கர்ணனிடம்  "அஸ்திரத்தை அர்ஜுனனின் கழுத்துக்கு குறி வைத்து எய்.  தலையைக் குறி வைக்க வேண்டாம்" என்று யோசனை கூறினான்.  ஆனால் கர்ணன், "ஒரு தடவை வைத்த குறியை கர்ணன் மாற்ற மாட்டான்" என்று கூறி அந்த நாகாஸ்திரத்தை எய்தான்.  (விதிதான் அவனுக்கு அந்த அகம்பாவத்தைக் கொடுத்திருக்க வேண்டும்)


     அஸ்திரம் தீயைப்போல் ஜொலித்துக்கொண்டு வருவதைக் கண்ணபிரான் பார்த்தார்.  தேரை அழுத்தி ஐந்து அங்குலம் தரையிலழுத்தும்படி செய்தார்.  அஸ்திரம் அர்ஜுனனின் ரத்தினம் இழைத்த கிரீடத்தை எடுத்துச் சென்றது.  அவனது தலை தப்பியதும் ஆகாயத்தில் அனைவரும் கண்ணபிரானின் திறமையைக் கொண்டாடினார்கள்.


     உடனே அர்ஜுனன் வெல்

​வெட் துணியைக் கொண்டு தலைமயிரைச் சேர்த்து அடக்கித் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு போருக்குத் தயாரானான்.  அசுவசேனன் அர்ஜுனனின் கிரீடத்தை எடுத்துக்கொண்டு மேலே கிளம்புவதைக் கண்ணபிரான் அர்ஜுனனுக்கு காட்டினார்.  "உன்னைக் கொல்ல வந்த தட்சகன் மகனைக் கொன்று விடு" என்று உத்தரவிட்டார்.  உடனே அர்ஜுனன் திரும்பவும் ஆறு பாணங்களைத் தொடுத்து அந்தப் பாம்பைத் துண்டித்து விட்டான்.


     மீண்டும் கர்ணனும் அர்ஜுனனும் போரிட்டார்கள்.  பெரிய பெரிய அஸ்திரங்களை ஏவிக் கொண்டார்கள்.  இதற்கிடையே கர்ணனுடைய 

​தே​
ரின் இடது சக்கரம் தரையில் அழுந்தியது.  கர்ணன் சட்டென்று கீழே குதித்து அதைத்  தூக்கி நிறுத்திச் சரிப்படுத்த முன்வந்தான்.  அப்போது,  "அர்ஜுனா, நீ சிறந்த வீரன்.  அதர்மமான
​ ​
காரியம் செய்ய மாட்டாய்.  நீ தேரில் இருக்கிறாய்.  நான் தரையில் இருக்கிறேன்.  என்மேல் 
​பா​
ணம் தொடுப்பது முறையல்ல.  இந்தச் சக்கரத்தைத் தூக்கி விடும்
​ ​
வரையில் பொறுத்திரு" என்றான்.

     அப்போது கண்ணபிரான் கர்ணனைப் பார்த்து, அவன் பாண்டவருக்குச் செய்த தீங்குகளை ஒவ்வொன்றாகக் கூறினார்.:  " நீ இப்போது தர்மம் பேசுகிறாயே!  அப்போது இந்த தர்மம் எங்கே போயிற்று?" என்றார்.  கர்ணன் வெட்கித் தலைகுனிந்தான்.  பிறகு கர்ணனும் அர்ஜுனனும் பிரம்மாஸ்திரம் முதலிய அஸ்திரங்களை ஒருவர் மேல் ஒருவர் பிரயோகித்துக் கொண்டார்கள்.

     நெருப்பு போல ஒளிரும் ஒரு கொடிய அஸ்திரத்தைக் கர்ணன் அர்ஜுனன் மேல் ஏவினான்.  அது அர்ஜுனனுடைய மார்பைத் தாக்கியயது.  தலை சுழன்று காண்டீபத்தை அவன் நழுவ விட்டான்.  அந்தச் சமயம் பார்த்துக் கர்ணன் தன் தேர்ச் சக்கரத்தைத் தூக்கிவிட முயன்றான்.  அதற்குள் அர்ஜுனனுக்கு நினைவு வந்து விட்டது.  கர்ணன் தன் தேரில் ஏறுவதற்கு முன் அவனைக் கொ
​ல்லு​
வதற்கு உத்திரவிட்டார் பகவான்.  அர்ஜுனனும் அப்படியே சிறந்த அஸ்திரத்தை எடுத்து, "நான் தவம் செய்திருந்தால், பெரியோர்களைத் திருப்தி செய்திருந்தால், யாகம் முதலியவற்றைச் செய்திருந்தால் இந்த அஸ்திரம் பகைவனைக் கொல்லட்டும்" என்று கூறி அதைக்
​ ​
கர்ணனின் மேல் தொடுத்தான்.  கர்ணனின் தலை அறுபட்டது.  அவன் கீழே விழுந்தான்.  அனைவரும் "ஹா! ஹா!" என்று கூவினா
ர்​
.





-- பைண்டிங் செய்யப்பட புத்தகம் ஒன்றிலிருந்து கிடைத்த வரை...   --

[ தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் வி எச். சுப்பிரமணிய சாஸ்திரி.  ஆனால் எதிலிருந்து என்று தெரியவில்லை!  மஞ்சரி 1963.]


======================================================================

==================

காற்றுள்ளபோதே....





எப்ப வரும்னு தெரியாது 
பிரேக் அப்.  
வா 
அதற்குள் ஒரு 
முத்தமாவது இட்டுவிடுகிறேன்!



காதலிக்கும் காலம்



கோபத்தை மறைக்க வேண்டும்.  
அதிருப்தியை அடக்கவேண்டும். 
நாற்றங்களை மறைக்க வாசனைகளைத் தெளிக்க வேண்டும்.

கொஞ்சகாலம்தான்.   
ஆயிடும் கல்யாணம்.   அப்புறம் காமிக்கலாம் 
அதெல்லாத்தையும் மொத்தமா .

ஆபத்தில்லே..


=================================================================


கலவரக் காக்கைகள் 



​​
காக்கைகள் ராஜ்ஜியத்தில்

திடீர்க் கலவரம்


அந்தி சாயும் நேரத்தில்
அலறிப் பறக்கின்றன
எங்கிருந்து வந்ததென
அறிய முடியாத
ஆயிரம் காக்கைகள்...


'கா...கா...கா..'
கானம் கேட்டு
காரணம் அறிய
மாடியிலிருந்து எட்டிப்பார்த்த
என்
மண்டையில் தட்டி
உள்ளே அனுப்பின
இரண்டு
கோபக் காக்கைகள்.


கலவரத்தின் காரணம்
அறியாமலே
சுற்றிப் பறந்து வட்டமிட்ட
காக்கைகளைப்
பார்த்தபடி கீழே இறங்குகிறேன்


காரணமின்றிக்
கரைவதில்லை காக்கைகள்..
அறியத்தான் முடிவதில்லை

அவைகளின் அரசியலை.


============================================================


படங்கள்   ::  இணையத்திலிருந்து நன்றியுடன் 




62 கருத்துகள்:

  1. கும்பகோணம் பதிப்பு மஹாபாரதம்னு நினைக்கிறேன். எழுத்து நடையைப் பார்த்தால் யோசனையாவும் இருக்கு. மற்றக் கவிதைகள் அதிலும் காக்கைக் கவிதை அருமை/

    பதிலளிநீக்கு
  2. TM 2 முத்தத்தின் சத்தம் கேட்டு ஒடி வந்தேன்

    பதிலளிநீக்கு
  3. முத்தம் கொடுப்பதிலும் கஞ்சத்தனமா என்ன? இப்ப புரியது ஏன் பிரேக் அப் வருதுன்னு

    பதிலளிநீக்கு
  4. மஞ்சரி பகிர்வு அருமை.

    காக்கை கவிதை முன்பே உங்கள் தளத்தில் படித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
    நானும் மாலை கூடு அடைய வரும் போது காக்கைகள் போடும் சண்டையை பார்த்து ஏன் இப்படி சண்டையிடுகிறது என்று பார்ப்பேன்.
    வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயில் புளியமரத்தில் மைனா, காக்கா எல்லாம் சண்டையிட்டு கொக்கை விரட்டும். இந்த மரத்திற்கும் அந்த மரத்திற்கும் பறந்து கொண்டே இருக்கும். இருள் வரும் வரை இந்த சத்தம் கேட்டுக் கொண்டு இருக்கும். ரயில் நிலையத்தில் இருக்கும் ஆலமரம் பறவைகளின் கூச்சலை பதிவு செய்த காணொளியை முக நூலில் பகிர்ந்து பறவைகள் என்ன பேசிக் கொள்கிறது என்று கேட்டு இருந்தேன்.
    மனிதனின் அரசியல் அறிய முடியவில்லை, அது போல் பறவைகளின் அரசியலும் அறிய முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. மஞ்சரி பகிர்வு அருமை.

    கடைசி முத்தம்! :)

    மற்றவையும் நன்று.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  6. கர்ணன் பகிர்வும் காக்கைகளின் படமும் ரசித்தேன். த ம

    பதிலளிநீக்கு
  7. தலைப்பைப் பார்த்ததும் இன்னொரு ‘மருத்துவ முத்தமோ’ என்று பரபரக்க வந்தேன். :-)

    பதிலளிநீக்கு
  8. // காரணமின்றிக்
    கரைவதில்லை காக்கைகள்..
    அறியத்தான் முடிவதில்லை//
    குருப்பெயர்ச்சியா இருக்குமோ? !!

    பதிலளிநீக்கு
  9. உங்களது ’கலவரக்காக்கைகள்’ அதிரசம்!

    என்னுடைய இருபதுகளின் இறுதிகளில் நான் படித்த ஆங்கிலக் கவிஞர் டெட் ஹ்யூஸ்-ன் (Ted Hughes) ‘காக்கைகள்’ கவிதைத் தொடர் நினைவுக்கு வந்தது. அதிலுள்ள கவிதைகளில் ஒன்றான 'Crow-Blacker Than Ever' என்கிற கவிதை இப்படி ஆரம்பிக்கிறது:

    When God, disgusted with man,
    Turned towards heaven,
    And man, disgusted with God,
    Turned towards Eve,
    Things looked like falling apart.
    But Crow Crow
    Crow nailed them together,
    Nailing heaven and earth together-
    So man cried, but with God’s voice
    And God bled, but with man’s blood...

    டெட் ஹ்யூஸ் தான் புகழேணியின் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தபோது கவிஞர் ஸில்வியா ப்ளாத்தைச் சந்தித்தார்; மணந்தார். ஆனால் சில வருடங்களில், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஸில்வியாவின் தற்கொலை நிகழ்ந்தது. சிதறிய மனநிலையில் டெட் ஹ்யூஸ் ‘காக்கைகள்’ எனும் கவிதைத்தொடரை எழுதி வெளியிட்டார். அது படிப்பவர்களை சிந்தனையில் ஆழ்த்தியது ; சிலரை சின்னாபின்னமாக்கியது. ஹ்யூஸிற்குப் பெரும் புகழை அள்ளிக்கொடுத்தது இப்படிச்செல்கிறது அவருடைய கதை..

    பதிலளிநீக்கு
  10. பறக்க முடியாத புறா குஞ்சு தரையில் இருந்தால் ,கொத்தித் தின்ன இப்படி அலறலுடன் வந்து விடுகின்றன காக்கைகள் :)

    பதிலளிநீக்கு
  11. ///முடிவதற்குள் .. .... //
    முடிஞ்சுபோச்சாஆஆஆஆஆ முடிஞ்சு போச்சாஆஆஆஆஆ?:)..

    //// "ஒரு தடவை வைத்து குறியை கர்ணன் மாற்ற மாட்டான்" ////
    ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங் றீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈச்சர்ர்ர் ஓடியாங்கோ.. ஸ்ரீராம் ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டார்ர்ர்:).

    ////தலைமயிரைச் சேர்த்து //
    ஆஆவ்வ்வ்வ்வ் அதிராப்பாசை(இலங்கைப்பாசை) உள்ளே நுழைந்து விட்டதே....:).. அக்காலத்தில் தலைமயிர் எனத்தான் பேசுவார்களாம் அதுதான் சரியான தமிழும் என சுகிசிவம் அவர்கள் சொல்லக் கேட்டேன்ன்.. ஆனா காலப்போக்கில் தமிழ்நாட்டில் மட்டும் அது மருவி.. “முடி” ஆகிவிட்டதாம்.. அது எப்படி ஆச்சூஊஊஊஊ??:).

    பதிலளிநீக்கு
  12. அதிரா, திருஞானசம்பந்தரின் தேவாரத்திலேயே "மயிர்" என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திருக்குறளிலும் உள்ளதே. "மயிர்"நீப்பின் உயிர் வாழாக் கவரிமா" என்று வருகிறது. இது தான் காலப்போக்கில் மாறி இன்று ஓர் கெட்ட வார்த்தையாக ஆகி விட்டது! காதல் என்னும் அரிய சொல் இன்று இரு பாலாருக்கு இடையே ஏற்படும் பாலின உணர்வுகளை மட்டும் குறிப்பது போல்! நாற்றம் என்னும் அழகிய சொல் இன்று "துர்"நாற்றத்தை மட்டுமே குறிப்பது போல்! "குட்டன்"எனப் பெரியாழ்வார் கண்ணனைச் சொன்ன அழகிய தமிழ்ச் சொல் இன்று மலையாளத்துக்குத் தாரை வார்த்தாயிற்று! :( இப்படி நிறையவே இருக்கு!

    பதிலளிநீக்கு
  13. /// கர்ணனின் தலை அறுபட்டது. அவன் கீழே விழுந்தான். அனைவரும் "ஹா! ஹா!" என்று கூவினா ர்​ .///
    இப்போ எதுக்கு இந்தக் கதை உள்ளே வந்தது.. சம்பந்தமே இல்லாமல் எனக் குயம்பியிருக்கிறேன்ன் நான்.. பீஸ்ஸ் என்னை ஆரும் டிசுரேப்புப் பண்ண வேண்டாம்ம்ம்...

    ஊர்ப்பழி ஏற்றாய....... நானும் உன் பழி கொண்டேன........:).. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க.. சேராத இடம்தேடி.. வஞ்சத்தில் வீழ்ந்தாய........ கர்ணாஆஆஆஆஆ வஞ்சகன் கர்ணன..... எனக்கு மிகவும் பிடித்த பாடல்...


    https://www.youtube.com/watch?v=bQvnuMLV_Uo

    பதிலளிநீக்கு
  14. ///எப்ப வரும்னு தெரியாது
    பிரேக் அப்.
    வா
    அதற்குள் ஒரு
    முத்தமாவது இட்டுவிடுகிறேன்!//

    ஹா ஹா ஹா சூப்பரூஊஊஊஊ:).. இப்போதைய தலைமுறைக்கு மிகவும் பொருத்தமாக எழுதிடீங்க.. நான் இங்கே எந்த வெள்ளைக் கப் பிள்ஸ் ஐப் பார்த்தாலும் என் மனதில் தோன்றும் முதல் எண்ணம்.. கடவுளே எப்போ பிரியப்போகினமோ என்பதே.. அது இப்போ நம் இளம் சமுதாயத்துக் காதலர்களைப் பார்க்கும்போதும் வருகிறது.. பயமாகவே இருக்கு.. யாரைத்தான் நம்புவதோ?...

    பதிலளிநீக்கு
  15. நன்றி கீதாக்கா.. உண்மைதான் மாற்றம் ஒன்றுதானே மாறாதது... இலங்கையிலும் தலைமயிர் என சொல்லுவோம்.. அது கெட்ட வார்த்தை ஆகாது.. ஆனா கோபத்தில் அங்கும் சிலர் அதனை கெட்டவார்த்தைக்கு பயன்படுத்துவார்கள்.. அது இடம் பொருள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்:)..

    பதிலளிநீக்கு
  16. ////கொஞ்சகாலம்தான்.
    ஆயிடும் கல்யாணம். அப்புறம் காமிக்கலாம்
    அதெல்லாத்தையும் மொத்தமா .

    ஆபத்தில்லே..///

    ஹா ஹா ஹா சத்தியமான உண்மை.. காதலிக்கும்போது இருவருமே ஒருவருக்கொருவர் பிடித்தவிதமாகப் பயங்கரமாக நடிக்கின்றனர்.. கல்யாணம் ஆனதும்.. இனி என்ன டிவோஸ் வருமோ எனும் தைரியத்தில்.. அத்தோடு நெடுகவும் நடிக்க முடியாதெல்லோ.. அதனாலும் நிஜக் குணத்தை அவிட்டு விட்டிடுகின்றனர்..

    காதலர்களுக்கு இப்பூடியான ஐடியாக்களைக் கொடுக்கும் ஸ்ரீராமை உடனடியாக பிரித்தானிய நீதிமன்றம் வரும்படி.. மேன்மை தங்கிய.. பெருமதிப்புக்குரிய.. அன்பான பண்பான பாசமான.. ஆங்ங்ங் ஒன்றை விட்டிட்டனே.. அதி புத்திசாலியான .. அழகான.. நீதிபதி அவர்கள்[அது நாந்தேன்ன்ன்ன்:)] .. மனு அனுப்புகிறார்:).

    பதிலளிநீக்கு
  17. காக்காக் கூட்டத்தைப் பாருங்க.. அதுக்குக் கத்துக்கொடுத்தது யாருங்க.... கவிதை நன்றாகத்தான் இருக்கு ஏதும் அரசியல் சம்பந்தப்பட்டதோ எனவும் இருக்கு.. சரி அது போகட்டும்...

    ///ஏகாந்தன் Aekaanthan ! said.......
    டெட் ஹ்யூஸ் தான் புகழேணியின் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தபோது கவிஞர் ஸில்வியா ப்ளாத்தைச் சந்தித்தார்; மணந்தார். ஆனால் சில வருடங்களில், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஸில்வியாவின் தற்கொலை நிகழ்ந்தது.
    சிதறிய மனநிலையில் டெட் ஹ்யூஸ் ‘காக்கைகள்’ எனும் கவிதைத்தொடரை எழுதி வெளியிட்டார். ///

    இதிலிருந்து எனக்கொரு உண்மை வெளிப்படுது:).. அதாவது காக்கைகள் பற்றிக் கவிதை எழுதுவோர் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும்போது எழுதுவார்கள் என:).. பின்ன என்ன.. எவ்ளோ பறவைகள் இருக்க ஆரும் காக்கைக்கு கவிதை எழுதுவினமோ?:))... ஹா ஹா ஹா ஹையோ நான் தேம்ஸ்க்கு கோயிங்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

    பதிலளிநீக்கு
  18. ஆங்ங்ங்ங் இன்னும் ஒன்று சொல்ல மறந்திட்டேன்ன்ன்...
    1. முடிவதற்குள் ஒரு முத்தம்.............. ஒரு தரம்...
    2. முடிவதற்குள் ஒரு முத்தம்............. ரெண்டு தரம்...
    3. முடிவதற்குள் ஒரு முத்தம்.............மூண்டு தரம்.... டிங் டிங் டிங்...
    அவ்ளோதேன் முடிஞ்சு போச்சூஊஊஊஊஊஊஊ இனி வருவோருக்கு இல்லையாக்கும்...ஹா ஹா ஹா முக்கியமா அஞ்சுக்கு இல்லேஏ.. அஞ்சு ரொம்ப லேட்டூஊஊஊஊஊஊஊஉ ஓஓஓஓஓஓஓஓஓ லலலாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:))..

    பதிலளிநீக்கு
  19. வாங்க கீதாக்கா... மஹாபாரதம் பற்றி நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். காக்கைக் கவிதை இரண்டு வருடங்கள் முன்பு முகநூலில் பகிர்ந்தது!

    பதிலளிநீக்கு
  20. வாங்க மதுரை.. .. ஒன்றிலிருந்துதானே ஆரம்பிக்கவேண்டும்?

    பதிலளிநீக்கு
  21. வாங்க கோமதி அரசு மேடம். நன்றி. காக்கைக்கு கவிதை முன்னர் முகநூலில் வாசித்திருப்பீர்கள்! அந்தி வரும் நேரம்தான் அதன் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும் போல!

    பதிலளிநீக்கு
  22. வாங்க வெங்கட். தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி! வாக்குக்கும்!

    பதிலளிநீக்கு
  23. வாங்க ஏகாந்தன் ஸார்.. Ted Hughes கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க பகவான்ஜி. புறா குஞ்சுக்கு மட்டுமா வருகிறது? குட்டி நாய்களை வம்பிழுக்கும் பாருங்கள்.... நன்றி கருத்துக்கு.

    பதிலளிநீக்கு
  25. வாங்க அதிரா...

    //ஸ்ரீராம் ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டார்ர்//

    சரி பண்ணி விட்டேன். நன்றி! முடி, மயிர் சர்ச்சைக்குள் நான் புகை விரும்பவில்லை. அதை முடி என்றும் சொல்லலாம். மயிர் என்றும் சொல்லலாம் காயத்ரியைக் கேட்டுப்பாருங்கள். சொல்வார்!

    பதிலளிநீக்கு
  26. மீள் வருகைக்கு நன்றி கீதாக்கா.. அருமையான விளக்கங்களும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  27. @அதிரா... கர்ணன் -அர்ஜுன யுத்தம் சற்றே - சற்றேதான் - வித்தியாசமாக சொல்லப் பட்டிருந்தது. பைண்ட் செய்த புத்தகமொன்றின் அந்தத் தொகுப்பில் ஒட்டி வந்த பக்கம். எனவே அதைப் பகிர்ந்தேன்!

    அவசர பிரிவுகளையும், போலிக்காதல்களையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! அதிலிருந்து தோன்றியதுதான் அது! நான் பிரித்தானிய நீ.ம க்கெல்லாம் வரமாட்டேன்!

    //அதாவது காக்கைகள் பற்றிக் கவிதை எழுதுவோர் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும்போது எழுதுவார்கள் என://

    இது இரண்டு மூன்று வருடங்கள் முன்பு முகநூலில் பகிர்ந்தது. இப்போது எழுதியதல்ல!

    //மூண்டு தரம்.... டிங் டிங் டிங்...
    அவ்ளோதேன் முடிஞ்சு போச்சூஊஊஊஊஊஊஊ இனி வருவோருக்கு இல்லையாக்கும்.//
    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  28. வித்யாச கதம்பம்! தலைப்பில் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் எனக்குப் பிடித்தது காக்கை பற்றியது தான்!! :-))

    பதிலளிநீக்கு
  29. நன்றி மி கி மா. தலைப்பு ஒரு தூண்டில்!

    பதிலளிநீக்கு
  30. அனைத்தும் ரசனையானவை! உங்கள் கவிதைகள் வெகு அருமை ஸ்ரீராம்!

    கீதா: மஞ்சரியிலிருந்து பகிர்வு அருமை!!

    உங்கள் கவிதைகளை மிகவும் ரசித்தேன்.... முத்தம் என்ன கஞ்சத்தனமோ?!! ஹிஹிஹி...அவசரயுகம்?!

    காக்கைகளின் கலவரம் ஆஹா போட வைத்தது!! காக்கைகளின் கலவரம் மிகவும் அரசியல்தான் ஸ்ரீராம் நான் ப்ளாக் ஆரம்பித்த நேரத்தில் காக்கைக் கூட்டம் பற்றி ஒரு பதிவு எழுதிய நினைவு...இப்போதும் ஒரு பதிவு தயாராகி உள்ளது....காக்கைகளின் அரசியல் பல சமயங்களில் புரிவதில்லைதான். இன்று கூட எங்கள் வீட்டருகில் ஒரு மாபெரும் கூட்டம் நடந்ததாக்கும்...என்ன மாநாடோ? அலகு கலப்பும் நடந்தது. (கை கலப்பு ஹிஹிஹி)

    பதிலளிநீக்கு
  31. அதிரா, திருஞானசம்பந்தரின் தேவாரத்திலேயே "மயிர்" என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திருக்குறளிலும் உள்ளதே. "மயிர்"நீப்பின் உயிர் வாழாக் கவரிமா" என்று வருகிறது. இது தான் காலப்போக்கில் மாறி இன்று ஓர் கெட்ட வார்த்தையாக ஆகி விட்டது! காதல் என்னும் அரிய சொல் இன்று இரு பாலாருக்கு இடையே ஏற்படும் பாலின உணர்வுகளை மட்டும் குறிப்பது போல்! நாற்றம் என்னும் அழகிய சொல் இன்று "துர்"நாற்றத்தை மட்டுமே குறிப்பது போல்! "குட்டன்"எனப் பெரியாழ்வார் கண்ணனைச் சொன்ன அழகிய தமிழ்ச் சொல் இன்று மலையாளத்துக்குத் தாரை வார்த்தாயிற்று! :( இப்படி நிறையவே இருக்கு!//

    கீதாக்கா யெஸ் யெஸ் இதைத்தான் என் பதிவிலும் கோடிட்டுக் காட்டியிருந்தேன்....பல நல்ல தம்ழிச் சொற்கள் அசிங்கமான பொருளில் ஆகிவிட்டது இப்போது....மலயாளத்தில் நீங்கள் சொல்லுவது போல் உன்னும் அழகான உயிர்ப்புடன் வழக்கத்தில் இருக்கிறது....

    கீதா

    பதிலளிநீக்கு
  32. கீதா சகோதரி, நீங்கள் சொல்லியிருப்பது போல் மலையாளம் தமிழிலிருந்து பிரிந்த மொழி மட்டுமல்ல தமிழ் மன்னர்கள் இங்கும் இருந்திருக்கிறார்கள்தானே ...சேர மன்னன்....அதன் முன் சோழனின் செப்புத் தகடுகள் மலப்புரத்தில் கண்டெடுக்கப்பட்டன. இன்னும் நல்ல தமிழ்ச் சொற்கள் தமிழில் கைவிடப்பட்டபல சொற்கள் இங்கு நாங்கள் பயன்படுத்திவருகிறோம் தான். ஆனால் அவை ஏதோ மலையாளச் சொற்கள் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள்...நல்ல கருத்து உங்கள் கருத்து..

    பதிலளிநீக்கு
  33. மொட்டை மாடியில் வடாம் காய வைக்கும்போதும் புக் படிச்சிகிட்டே காக்காய்ங்களோட மிக்ஸர் ஷேர் பண்ணி சாப்பிடும்போதே நினைச்சேன் இப்படி மருத்துவ முத்தத்தில் முடிஞ்சிருச்சே ஹஆஹாஆ :)
    இது போஸ்ட்லேபிள் வேற மிக்ஸர் :) சரியான பொருத்தம்

    பதிலளிநீக்கு
  34. சக காக்கை ஒன்று அடிபட்டு விழுந்திருந்தால் இப்படியாகக் கூடிச் சூழ்ந்து காக்கைகள் கரைவது வழக்கம் தான்.

    காக்கைகளை மறந்து வேறொன்றைச் சொல்ல வந்த உருவகக் கவிதையாக இதை நினைத்துப் பாருங்கள்.
    விதவிதமான ஞானோதயங்களுக்குள் மூழ்கடிக்கப் படுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க துளசிரதன்/கீதா, இப்படி ஒரு லிஸ்டே இருக்கு! முடிஞ்சப்போப் பதிவாப் போடலாம். :)

    பதிலளிநீக்கு
  36. ///AngelinAugust 31, 2017 at 4:18 PM////
    ஹலோ மருத்துவ மொத்தம் சொறி முத்தம் இருக்கட்டும் முதல்ல ஓடிவந்து வோட் போடுங்க சொல்லிட்டேன்ன்ன்ன்.... இல்லாட்டில் தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்ன் ....

    ஜாக்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்தை:).... ஹையோ இது நேக்குச் சொன்னேன்:).

    பதிலளிநீக்கு
  37. கவிதைகளில் காக்கா கவிதை மட்டும் சுமார்.. மற்றதெல்லாம் ஹ்ம்ஹூம்... கர்ணனின் கதை ஓகே.

    வெல்வெட்டு துணி என்பதெல்லாம் பார்த்தால் கண்டிப்பாக கும்பகோணம் பதிப்பாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. ////Iyappan KrishnanAugust 31, 2017 at 6:35 PM
    கவிதைகளில் காக்கா கவிதை மட்டும் சுமார்.. மற்றதெல்லாம் ஹ்ம்ஹூம்... ////////

    ஐயப்பனுக்கு ஓவியா கான்சல்ட்ட்ட்ட்ட்ட்ட்...:).

    பதிலளிநீக்கு
  39. வாஆஆவ்வ்வ் மகுடம் இப்போ ஸ்ரீராம் தலைக்கு வந்துவிட்டதூஊஊஊஊஊ..... ஹையோ பகவான் ஜி யைக் கொஞ்சநேரம் பிடிச்சு வச்சிருங்கோ... இல்லையெனில் பறிச்சிடுவார்ர்ர்ர் ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  40. முடிவதற்குள் முத்தம்..

    இதுதான் காரணமாக இருக்குமோ - காக்கைகளின் கலவரத்திற்கு!?..

    பதிலளிநீக்கு
  41. நன்றி துளஸிஜி.

    நன்றி கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  42. வாங்க ஏஞ்சலின். மொட்டைமாடி வடாம் மிக்ஸர் விஷயங்களை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஜீவி ஸார்...

    //வேறொன்றைச் சொல்ல வந்த உருவகக் கவிதையாக //

    அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்!

    :)))

    பதிலளிநீக்கு
  44. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  45. வாங்க அய்யப்பன் கிருஷ்ணன். எங்களின் மற்ற பதிவுகளுக்கும் வருகை தரும் உங்களை வரவேற்கிறேன். கவிதை எல்லாம் உங்கள் லெவலுக்கு எதிர்பார்த்தா முடியுமா!!! நானே வசனங்களை மடக்கி மடக்கிப் போட்டு கவிதை என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்!!!!

    பதிலளிநீக்கு
  46. வாங்க அதிரா...

    //ஐயப்பனுக்கு ஓவியா கான்சல்ட்ட்ட்ட்ட்ட்ட்...:). //

    ஹா..... ஹா.... ஹா....!

    பதிலளிநீக்கு
  47. @ அதிரா..... மகுடமா? எங்களுக்கா? அட! ஆனால் நிலையில்லாததது அது! நீங்களோ, கில்லர்ஜியோ, பகவான்ஜியோ எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றக் கூடியது!

    பதிலளிநீக்கு
  48. வாங்க துரை செல்வராஜூ ஸார்...

    //முடிவதற்குள் முத்தம்.. இதுதான் காரணமாக இருக்குமோ - காக்கைகளின் கலவரத்திற்கு!?.. //

    இருக்குமோ என்னவோ...!!!!

    பதிலளிநீக்கு
  49. /////ஐயப்பனுக்கு ஓவியா கான்சல்ட்ட்ட்ட்ட்ட்ட்.//



    haaaaa haaahaiyo @)))))))))))))))))

    பதிலளிநீக்கு
  50. நல்ல தொகுப்பு. சாகும் வேளையில் தன் புண்ணியங்களைத் தானமாகக் கொடுத்திருக்க இயலாதபடி கர்ணனின் தலை துண்டிக்கப்பட்டு விடுவதாக கதை வித்தியாசமாக இருக்கிறது.

    அனுபவத்தில் கண்ட காட்சியைக் கவிதையாய் வடித்திருக்கும் கலவரக் காக்கைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  51. அந்த கடைசி வார்த்தை..

    அறியத் தான் முடியவில்லை,
    அவைகளின் அரசியலை..

    உருவகம் உள்ளங்கை நெல்லிக்கனி.

    பதிலளிநீக்கு
  52. இதிகாசங்களில் மஹாபாரதம் மிகவும் பிடிக்கும் அதில் இருக்கும் பாத்திரங்கள் எல்லாமே சாத்தியமானவையே காக்கைகள் கொத்த வரும் போல் இருக்கும் ஆஆல் கொத்தியதில்லைஎப்படியும் ப்ரேக் அப் ஆகும் அதற்கு முன் அனுபவிப்போம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!