Saturday, August 5, 2017

மனக் குப்பைகளை துாக்கி எறிந்து வெற்றி கண்ட பாடகி கல்பனா ராகவேந்தர்.

1)  ஊர் கூடி தூர் வாரி....  மடிப்பாக்கம் மக்களும் சாதனை புரிந்தனர்.


2)  யாராவது விபத்தில் அடிபட்டு சாலையில் கிடந்தால் கூட செல்போனில் படம்பிடிக்கும் உலகம், காலம் இது. அப்படிப்பட்ட நிலையில் இந்தச் சிறுவன் செய்த வீரச் செயலுக்கு நரேந்திர மோடியே விருதுக்கு சிபாரிசு செய்திருப்பதில் வியப்பென்ன?


3)  15 வயதில் செய்யக்கூடிய சாதனையா இது?   CHD நோயால் போராடுபவர்களுக்காக 2 லட்ச ரூபாய் திரட்டிய சிறுவன்....


4)  ஆறு ஆண்டுகளாக பணம் இல்லாத ஏழைகளுக்கு பணம் வாங்காமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவர்.


5) வாழ்க்கை என்னும் போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது?  "மனக் குப்பைகளை துாக்கி எறிந்து வெற்றி கண்டேன்!"  என்கிறார் பாடகி  கல்பனா ராகவேந்தர்.


தமிழ்மணம் வாக்குக்கு.....  

18 comments:

KILLERGEE Devakottai said...

மடிப்பாக்கம் மக்களை வாழ்த்துவோம் இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்

நெல்லைத் தமிழன் said...

அனைவருக்கும் பாராட்டுகள். த ம

ஏகாந்தன் Aekaanthan ! said...

பாடகி கல்பனாவைப்பற்றி நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவருடைய மீண்டெழல் அபாரமான ஒரு நிகழ்வுதான்.

வாழ்வு நம்மை சிதைத்துப்போட்டபின்னே, நம்மை சுற்றி வாய்ப்புகள் சிதறிக்கிடக்கும். பொறுக்கிக்கொள்ளவேண்டியதுதான் என்பதில் உடன்பாடில்லை. அப்படி இருக்கலாம். இல்லாதும்போகலாம். மறுவாழ்வு, மீண்டெழல் என்பதெல்லாம் முயற்சி சம்பந்தப்பட்டதுமட்டுமல்ல. There are many unknown, unexplainable factors in life...

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

த.ம. நான்காம் வாக்கு.

புலவர் இராமாநுசம் said...

அனைவரும் வாழ்க! த ம 5

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்குஉரியவர்கள்
போற்றுவோம்
தம +1

ராஜி said...

மடிப்பாக்கம் ஊரை பார்த்து எல்லா ஊரும் மாறனும்

Asokan Kuppusamy said...

அனைவருக்கும் பாராட்டுகள்

Dhivya Shree said...

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

Thulasidharan V Thillaiakathu said...

மடிப்பாக்கம் மக்கள் வாழ்க! முன்னுதாரணம்! பிற பகுதி மக்களுக்கு!

நீச்சல் அவ்வளவாகத் தெரியாத பையன், ரிஸ்க் எடுத்து, தைரியமாக நீந்திச் சென்று அந்தப் பெண் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதே போன்று சிஎச்டி யினால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளைக் காப்பாற்ற நிதி திரட்டியதற்கும் பாராட்டுவோம்.

மருத்துவருக்கு ஹாட்ஸ் ஆஃப்! மருத்துவ சேவையைப் போற்றிப் பாராட்டுவோம்...

கல்பனா ராகவேந்தர் நல்ல உதாரணம்!Thulasidharan V Thillaiakathu said...

//வாழ்வு நம்மை சிதைத்துப்போட்டபின்னே, நம்மை சுற்றி வாய்ப்புகள் சிதறிக்கிடக்கும். பொறுக்கிக்கொள்ளவேண்டியதுதான் என்பதில் உடன்பாடில்லை. அப்படி இருக்கலாம். இல்லாதும்போகலாம். மறுவாழ்வு, மீண்டெழல் என்பதெல்லாம் முயற்சி சம்பந்தப்பட்டதுமட்டுமல்ல. There are many unknown, unexplainable factors in life...//

ஏகாந்த சார் உங்களின் இந்தக் கருத்தை நான் 100% அல்ல அதற்கும் மேலேயே ஏற்றுக் கொண்டு வழி மொழிகிறேன்..

கீதா

Geetha Sambasivam said...

மடிப்பாக்கம், கல்பனா ராகவேந்தர், நீந்திக் காப்பாற்றிய சிறுவன் ஆகியோர் பற்றி ஏற்கெனவே படிச்சிருக்கேன். மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@Thulasidharan V Thillaiakathu கீதா :
//ஏகாந்தன் சார் உங்களின் இந்தக் கருத்தை நான் ...//
புரிதலுக்கு நன்றி.

Bagawanjee KA said...

காஸ்மெடிக் சிகிச்சையை காசு வாங்காமல் செய்யும் டாக்டர் சசிகுமாரின் தொண்டு போற்றத் தக்கது:)

Geetha Sambasivam said...

திரு ஏகாந்தன் அவர்களின் பதிலைப் பார்த்ததும் தான் அவர் சொன்னதையும் தில்லையகத்து/கீதாவின் வழிமொழிதலையும் படித்தேன். :) திரு ஏகாந்தன் சொல்வது முற்றிலும் சரியே! அற்புதங்கள் எப்போதாவது தான் நடக்கும்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@Geetha Sambasivam : நன்றி கீதாஜி.

கோமதி அரசு said...

பாடகி கல்பனா பற்றி உங்கல் முகநூல் தளத்தில் படித்தேன்.
கல்பனாவிற்கு வாழ்த்துக்கள்.
அனைத்து செய்திகளில் உள்ள நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
பிளாஸ்டிக் சர்ஜரியை ஏஅழைகளுக்கு இலவசமாய் செய்யும் மருத்துவர் வணங்கப்படவேண்டியவர், வாழ்க வளமுடன்.

அபயாஅருணா said...

15 வயதிலேயே இந்த மாதிரி சேவைகளில் அதுவும் 10-12
வகுப்பு வயது . நிஜமாகவே இமாலய சாதனை தான் . மற்றவர்களும் சந்தேகமின்றி சாதனையாளர் தான்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!