Monday, September 18, 2017

"திங்கக்கிழமை 170918 : ஜம்ஜம்ஜாம் - அதிரா ரெஸிப்பி
ஜாம் ஜாம்.. இது வேற ஜாம்:)  
JAM சாப்பிட்டு, என்னைப்போல அழகாக வாங்கோ:)
ங்குள்ள வெள்ளையர்கள் ஜாம் செய்வதில் வல்லவர்கள். அதிலும் இங்கு ஸ்கொட்லாந்தைப் பொறுத்தவரை, கிரான் பெரி, பிளாக்பெரி இவைகளெல்லாம்.. ரோட்டோரம், ஆத்தோரங்களில் நிறைய படர்ந்து பூத்துக் காய்த்துக் குலுங்கும்...

வை மருந்து அடிக்காமல், இயற்கையாக வளர்பவை என்பதால், சாப்பிட யாரும் பிடுங்க மாட்டார்கள், ஆனால் இவற்றைப் பிடிங்கி ஜாம் செய்வார்கள்... சம்மர் முடியும்போதுதான் இவை அதிகம் பழுத்திருக்கும்... அப்போது சூப்பர் மார்கட்டுக்களிலும்.. ஜாம் செய்யும் உபகரணங்கள்.. போத்தில்கள் விற்பனைக்கு வந்திருக்கும்.

தேபோல பெரும்பாலான வீடுகள் ஆப்பிள் பழங்கள் பழுத்துப் பழுத்துக் கொட்டியிருக்கும்.. அவற்றிலும் ஜாம் செய்வார்கள்.

ப்படி எனக்கொரு இங்கத்தைய நண்பி:), நம் வீட்டுக்கு அடுத்த தெருவில் இருக்கிறா(அவவுக்கு வயது இப்போ 76.. ஒரு ரிரயேட் ஹெட் ரீச்சர்:) - இப்போ பின்னூட்டங்கள் பறக்குமே:)]] ஹா ஹா ஹா.

வவுக்கு ஜாம் செய்வது ஒரு பொழுதுபோக்கு.. அவ எனக்கு அப்படி பிளாக்பெரிஸ் இல் ஜாம் செய்து தந்தா, சூப்பர் சுவை.. கடையில் வாங்குவதில் அப்படி சுவை கிடைக்காது...   அவவிடம் செய்முறை கேட்டுவிட்டுக் களத்தில் இறங்கினேன்.. இப்போ எனக்கு விரும்பும் பழங்களில் அப்பப்ப செய்வதுண்டு...

கிரான்பெரி ஜாம்[Granberries]

தேவையான பொருட்கள்:
பழம் -:    250 கிராம்ஸ்
தண்ணி -:   200 மில்லி லீட்டர்
சீனி(சுகர்) -:   200-250 கிராம்ஸ் [பழத்தின் இனிப்புத்தன்மையைப் பொறுத்து]..

இவ்ளோதேன்ன் விசயம்:) முடிஞ்சு போச்சு:)..

செய்முறை:
னைத்தையும் ஒன்றாகப் போட்டு அடுப்பில் வைத்துக் காச்சவும்..


ப்படி நன்கு திரண்டு கொஞ்சம் இறுக்கமாக வந்ததும், அடுப்பால் இறக்கி, ஒரு 5 நிமிடங்கள் ஆறவிட்டால் போதும்.. போத்தலில் போட்டு மூடாமல் விடவும்..

கொஞ்ச நேரத்தால் மூடி விட்டு , பிரிஜ்ஜில் வைத்துப் பாவிக்க, பல மாதம் இருக்கும். ஆகவும் இறுகும்வரை காச்ச வேண்டாம்... கொஞ்சம் தளதளப்பாக இருக்கும்போதே இறக்கிப் போத்தலில் போட வேண்டும், பின்பு கட்டியாகும்.இதேபோல நான் செய்த றூபார்ப் ஜாம்[Rhubarb Jam]


து கொஞ்சம் புளிப்பு அதிகம் என்பதால், சீனியின் அளவு 250 கிராம்ஸ் போட்டேன், தண்டை மெதுவாக, வெளி நாரை நீக்கிவிட்டுக் குட்டிக் குட்டியாக கட் பண்ணிப் போட வேண்டும்..ஊசி இணைப்பு

இது எங்க ஊர் வரவேற்புக் குதிரை.. அயகா இருக்கோ?:). பெயர் ஜிஞ்ஜர்.. உங்கள் எல்லோரையும் வரவேற்க, முன்னங்கையைத்தூக்கி அழைக்கிறார்.. வாங்கோவன்:)
)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(

[எவ்வளவு சுலபம்!  இங்கு கிடைக்கும் பழம் வைத்து செய்து விட வேண்டியதுதான்!  - ஸ்ரீராம் ]தமிழ்மணத்தில் வாக்களிக்க ............

68 comments:

துரை செல்வராஜூ said...

அந்த மாதிரி பழங்களுக்கு நாங்கள் எங்கன போறதாம்?..

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை..

கெடைச்சதை செஞ்சு சாப்பிடுவம்..

துரை செல்வராஜூ said...

இதை சாப்பிட்டா - வாயில இருந்து சத்தம் மிய்யாவ்.... ந்டு வருமாமே!...

மெய்யாலுமா?...

KILLERGEE Devakottai said...

அதிரா மீது நம்பிக்கை வைத்து செய்து ''பார்க்கப்போறேன்'' - கில்லர்ஜி

Geetha Sambasivam said...

ஹாஹா, தக்காளி, பீட்ரூட், காரட், மாங்காயில் செய்திருக்கேன். ஆனால் இங்கே என்னமோ போணி ஆவாது! அதிராவின் ஜாம் "ஜம்"முனு இருக்கானு இனிமேத் தான் பார்க்கணும். :) பார்த்துட்டு மறுபடி வரேன்.

Geetha Sambasivam said...

,// அடுப்பால் இறக்கி, // கையாலே இறக்க மாட்டீங்களா? நாங்கல்லாம் இடுக்கியைப் பிடிச்சுட்டோ, பிடிதுணியைப் பிடிச்சுட்டோக் கையாலே இறக்குவோம். இதென்ன அடுப்பால் இறக்கறது!

ஙே!

அது சரி, இவ்வளவு சுலபமா ஜாம் செய்யறது! நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திருக்கோம்! ஙே!

கரந்தை ஜெயக்குமார் said...

இப்பொழுதே சுவைத்துப் பார்க்க மனம் விரும்புகிறது நண்பரே
தம +1

Avargal Unmaigal said...

தேவையான் பொருட்களில் தண்ணி -: 200 மில்லி லீட்டர் என்று சொல்லி இருக்கீங்க... தண்ணி என்று சொல்லும் போது தெளிவா விஸ்கி ,ரம்,ஒயின் ,பீர், வோட்கா போன்ற தண்ணியில் எந்த தண்ணீர் என்று தெளிவாக சொல்ல வேண்டாமா என்ன?

Avargal Unmaigal said...

TM + 1

middleclassmadhavi said...

Poonai jaam saptuducha?!! :-))
naan tomato jaam senjurukken.... cranberry Rhubarb ellam kidacha panni pakren!!

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா ஜம் ஜம் ஜம் ஜமென்று ஜில்ஜில் ரமாமணி போல உங்கள் ஜாம் ரெசிப்பி எல்லாம் ஓகே!!! நான் சிட்ரிக் மட்டும் அதாவது எலுமிச்சை மட்டும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வதுண்டு. வகுப்பில் கலர், அப்புறம் கெட்டுப் போகாமல் இருக்க பௌடர் எல்லாம் சேர்க்கச் சொல்லிக் கொடுத்தார்கல் அது கமர்ஷியல் பர்ப்பஸுக்காக...ஆனால் நான் வீட்டில் இப்படித்தான் செய்வது. ஆனால் எல்லாம் ஓகே....இப்படியான பழங்களுக்கு நாங்கள் பாவம் பீப்பிள் எங்க போறது. இங்கு இவற்றின் விலை நீங்க போட்டுருக்கற ஜிஞ்செரின் விலை!!!!!!!!இதோ மீண்டும் வரேன்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இப்படி எனக்கொரு இங்கத்தைய நண்பி:), நம் வீட்டுக்கு அடுத்த தெருவில் இருக்கிறா(அவவுக்கு வயது இப்போ 76.. ஒரு ரிரயேட் ஹெட் ரீச்சர்:) - இப்போ பின்னூட்டங்கள் பறக்குமே:)]] ஹா ஹா ஹா.// ஹாஹாஹாஹா வந்துருச்சே!!! பின்னெ பாட்டிக்கு பாட்டிதானே ஃப்ரென்ட்....பாட்டிக்கு எங்கட வயசுல எல்லாம் ஃப்ரென்ட்ஸ் இருப்பாவோ?!!!! ஹிஹிஹிஹிஹி...

சரி சரி நானும் துரைசெல்வராஜு சகோ சொல்லியிருப்பது போல் ஏழைக்க்கேத்த ஜாம்.....ஜாம் இல்லை அது ஒரு வெரைட்டியான ஸ்ப்ரெட் ...அது பற்றிச் சொல்லறேன்...4 நாள் லீவாகிப் போனதால் நிறைய லிஸ்ட் இருக்கு வாசிக்க....ஸோ ரொம்ப கும்மி அடிக்க இயலலை....மத்ததையும் விசிட் அடிச்சுட்டு வாரேன்...

கீதா

கீதா

ராஜி said...

ஜாம் செய்முறை சொன்னவங்க அந்த பழங்களை எங்களுக்கு அனுப்பி உதவலாமே!

Anuradha Premkumar said...

ஜம் ஜம் ஜாம்...ரொம்ப சுலபமா இருக்கு அதிரா...

இங்க திராச்சையில் செய்யலாம் னு நினைக்கிறேன்....செஞ்சு பார்க்கலாம்...

Bagawanjee KA said...

ஜாம் ஜாம் என்று சந்தோசமா இருக்கிற சமயத்திலே ,குதிரை முன்னங்கை(?)யைத்தூக்கி இருக்கிறதைப் பார்த்தா ,காலை கீழே வைக்குமோ ,உதைக்குமோன்னு புரியலியே :)

நெல்லைத் தமிழன் said...

இந்த மாதிரி பெர்ரி வகைல, எனக்கு ஸ்டிராபெர்ரியைத் தவிர எதுவும் பிடிக்காது. ஆனால் என் பெண்ணுக்கு எல்லா பெர்ரியும் மிகவும் பிடிக்கும் (எனக்குத்தான், என்ன ரசனைன்னு தோணும்).

ரொம்ப சுலபமான ஜாம் செய்முறை. இவ்வளவு சுலபமாகவா இருக்கும்? ஸ்டிராபெர்ரில செய்துபார்க்கிறேன். சிட்ரிக் போடவேண்டாமா? (சீசன் வரட்டும்).

"அடுப்பில் வைத்துக் காச்சவும்.." - சாராயம் காச்சற அளவுல எங்களை இறக்கிட்டீங்களே.

ருபார்ப் - அதெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டேன். பழக்கமில்லாத உணவு வகைகள் பக்கமே போகமாட்டேன்.

நல்ல ரெசிப்பி. பாராட்டுகள்.

athira said...

ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் இன்று இதை நான் எதிர்பார்க்கவே இல்ல்ல்ல்ல்ல:) அடுத்த கிழமை எண்டெல்லோ கிளவி சே சே கேய்விப் பட்டேன்ன்ன்ன்ன்:) ...இப்போ எங்கினபோய் ஒளிப்பேன்ன்ன் ஜாமீஈஈஈ:).

நைட் ஸ்ரீராம் நல்ல கனவு கண்டுகொண்டிருந்தபோது மகுடத்தைப் ப்றிச்சிட்டு ஓடிவந்திட்டேன்ன்ன்ன்:).. இப்போ சொப்பனா என் கையில்ல்ல்ல்ல்ல்:).... ஓஓஓஓ லலலாஆஆஆ:).

vimal said...

ஜாம் அருமை இதனுடன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்துக்கொள்ளுங்கள் சுவை மெருகேறும்

விஜய் said...

அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
தமிழ் செய்திகள்

ஏகாந்தன் Aekaanthan ! said...
This comment has been removed by the author.
ஏகாந்தன் Aekaanthan ! said...

Delete செய்தேன் திருத்தத்திற்காக! இதோ corrected version:

திங்கட்கிழமை . .
திங்குற வே. . ளை
ஜாம் பாட்டிலைக்
கையிலெடுத்தேன். .
அதிராவின் நினைவு வர
அப்படியே போட்டுவிட்டு
ஓட்டமாய் ஓடிவிட்டேன்…
ஆஆ. .
ஓட்டமாய் ஓ. .டிவிட்டேன்…
**

காமாட்சி said...

இங்கு ஜெனிவாவில் பழங்கள் ஸீஸனில் தனி வீடு வைத்திருப்பவர்கள், அவர்கள் தோட்டத்தில் கிடைப்பவைகளைக் கொடுப்பார்கள். அந்த வகைில் இவ்வருஷம் செர்ரி,ஆப்ரிகாட்,ஆப்பிள்,இன்னும் பலவகைப்பழங்கள் நிறை கிடைத்தது. செர்ரியில் ஜாம் செய்தேன். இந்தியாவில் பழமாகச் சாப்பிடுவதற்கே உண்டான விலை கொடுக்க வேண்டும். சில இடங்களில் இம்மாதிரி பழங்களைப் பற்றியே தெரியவும் தெரியாது. கிடைக்கவும் கிடைக்காது. ஜாம் நன்றாக இருக்கிறது. நம் ஊரில் கிடைக்கும் மணத்தக்காளிபழங்கூட சிலசமயங்கள் ஞாபகம் வரும் சில பழங்களின் ருசியில்.
எளிமையான இந்தியப் பழங்களில் செய்முறை கொடுங்கள். அதிரா இன்னும் உயர்ந்த ரெஸிப்பி ராணி ஆகி விடுவீர்கள். அன்புடன்

காமாட்சி said...

அந்த வகையில் என்று திருத்தி வாசிக்கவும். அன்புடன்

நெல்லைத் தமிழன் said...

ஏகாந்தன்-வெள்ளிக் கிழமை, விடியும் வேளை, வாசலில் கோலமிட்டேன், வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன் - பாடலின் காப்பிதானே?

புலவர் இராமாநுசம் said...

படித்தேன் !த ம 11

athira said...

////நெல்லைத் தமிழன் said...
ஏகாந்தன்-வெள்ளிக் கிழமை, விடியும் வேளை, வாசலில் கோலமிட்டேன், வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன் - பாடலின் காப்பிதானே?///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவைப் புகழ்ந்து ஒரு கவிதை சொல்ல்லிட்டால் புய்க்காதே நெல்லத்தமிழனுக்கு:)).. அது பாடலின் கொப்பி எல்லாம் இல்லை.. கவித..கவித...கவித:)) ஹையோ ஹையோ.. ஏனையோர் கோபிக்கப் போகினம்.. தோஓஓஓஓஓஒ வருகிறேன்:).

துரை செல்வராஜூ said...

ஜாமீ.. ஜாமீ!..

ஏ.. செல்லப்பா!.. என்னலே ஆச்சு!..

அந்தாக்கில அந்த அதிரா மாமி... ஜாமு..ண்டு கிண்டிக் கிளறிக் கொடுத்தாக..
நானும் ஜம்மு..ண்டு ஜாமிட்டேன்.. இல்லேல்லே.. சாப்பிட்டேன்..
இப்போ இந்த மாதிரி ஆகிப் போச்சு ஜாமீ!.. தொண்டையில ஜாமாயிடுச்சே ஜாமீ!...

athira said...

//[எவ்வளவு சுலபம்! இங்கு கிடைக்கும் பழம் வைத்து செய்து விட வேண்டியதுதான்! - ஸ்ரீராம் ]//

எந்தப் பழத்திலும் செய்யலாம் ஸ்ரீராம், தண்ணித்தன்மை அதிகமான பழமாயின், இங்கு சேர்க்கும் தண்ணியின் அளவைக் குறைப்பது நல்லது... மிக்க நன்றி.. ஜம்..ஜம்.. ஜாம் க்கு:).. இங்கே ஜம்.. ஜம்.. என்பது ஜம்மி.. ஜம்மி என்பதன் சுறு:)க்கம்தானே?:)) ஹா ஹா ஹா இதை நானே தெளிவாச் சொல்லிடோணும்:) இல்லை எனில் இப்போ ஒராள் வருவா.. ஹீல்ஸ் ஐக் கழட்டி வச்சுப்போட்டு ஸ்பீட்டா:))... என்னில் குறை கண்டு பிடிக்க கர்ர்ர்:))..

மிக்க நன்றி ஸ்ரீராம்.. அடுத்த வாரம் உங்கள் ஜாம் ரெசிப்பியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்ன்:).. விடமாட்டனெல்லோ அதிராவோ கொக்கோ?:).

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ நெல்லைத் தமிழன்://வெள்ளிக்கிழமை...//

பி.சுசீலாவின் அந்தப் பாடலேதான். எனக்குப் பிடிக்கும். ஏனோ இப்படி சம்பந்தாசம்பந்தமில்லாமல் சில பாடல்கள் நினைவில் தட்டிவிடுகின்றன. பின்னூட்டம்வேறு அதே மெட்டில் வந்து விழுந்துவிடுகின்றது..!

Angelin said...

/இப்படி எனக்கொரு இங்கத்தைய நண்பி:), நம் வீட்டுக்கு அடுத்த தெருவில் இருக்கிறா(அவவுக்கு வயது இப்போ 76.. ஒரு ரிரயேட் ஹெட் ரீச்சர்:) - இப்போ பின்னூட்டங்கள் பறக்குமே:)]] ஹா ஹா ஹா.

ஹாஆ ஹாங் ஹுரோ :) ஹையோ ஹைய்

Angelin said...

இருங்க நானும் இந்த ஜாமுக்கு ஒரு அடிஷனல் டிப்ஸ் தரேன் ..இது என் ப்ரண்ட் ஷி ஐஸ் 23 இயர்ஸ் ஒன்லி :) அவங்க சொன்ன டிப்ஸ்
இந்த ஜாம் செய்யும்போது ரெண்டு கப் பழங்களுக்கு ஒன்னரை டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ் பழங்கள் வேகும்போது சேர்த்தா நீர்த்தன்மையை இந்த CHIA சீட்ஸ் உறிஞ்சிடுமாம் ..நம்ம ஊர்லயும் கிடைக்குதே ..

Angelin said...

ஒரு கமெண்ட் போட்டாதான் காணாமப்போகுது ஆனா தொடர்ந்து போட்டா கமெண்ட் விழுதே ????????????

Angelin said...

எங்க CANAL பக்கமும் நிறைய பிளாக்கரென்ட்ஸ் இருக்கு :) இப்பவே பாஸ்கெட் எடுத்திட்டு கிளம்பப்போறேன் :)
எங்க வீட்ல ரெட் கரென்ட்ஸ் வளர்க்கிறோம் எல்லாரும் ஜாம் செய்வாங்க நான் மட்டும் அப்படியே பறிச்சி உப்பு மிளகு சேர்த்து சாப்ட்ருவேன் :) நெக்ஸ்ட் சீசனுக்கு ஜாம் செய்ய ஐடியா இருக்கு உங்க போஸ்ட் பார்த்து

Angelin said...

//ஜம்..ஜம்.. ஜாம் க்கு:).. இங்கே ஜம்.. ஜம்.. என்பது ஜம்மி.. ஜம்மி என்பதன் சுறு:)க்கம்தானே?:)) ஹா ஹா ஹா இதை நானே தெளிவாச் சொல்லிடோணும்:) இல்லை எனில் இப்போ ஒராள் வருவா.. ஹீல்ஸ் ஐக் கழட்டி வச்சுப்போட்டு ஸ்பீட்டா:))... என்னில் குறை கண்டு பிடிக்க கர்ர்ர்:))..//

that's yummy YUM JAM

ய வுக்கும் ஜ வுக்கும் யாரது ஜ போட்டது :)
ஜெயராமை யெயராமுன்னா சொல்வாங்க ஹாங் ஹாஆ :)

Angelin said...

நானும் முதலில் கவனிக்கலை ஜம் ஜம்னு ஜாம் செஞ்சதா நினைச்சிட்டேன் :) கர்ர்ர்ர்ர் அது யம் யம் ஜாம் :)

athira said...

//துரை செல்வராஜூ said...
அந்த மாதிரி பழங்களுக்கு நாங்கள் எங்கன போறதாம்?..///

வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
இது சாதாரண பெரீஸ் தான்.. உதாரணத்துக்குத்தான் இதைப்போட்டேன்.. ஊரில் இதே அளவில் விழாம்பழத்தில் செய்து பாருங்கோ சூப்பரா வரும்..

///ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை../// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இக்கரைக்கு அக்கரைப் பச்சை.. நான் விழாம்பழம் கிடைக்குதில்லையே எனும் ஏக்கத்தில் இருக்கிறேன். இப்போ எங்களுக்கு தமிழ்க் கடை வந்திட்டமையால் இனி வரும், அடுத்தமுறை வாங்கிச் செய்திடுவேன்.

///
துரை செல்வராஜூ said...
இதை சாப்பிட்டா - வாயில இருந்து சத்தம் மிய்யாவ்.... ந்டு வருமாமே!...

மெய்யாலுமா?...///

ஹா ஹா ஹா முதலில் செய்து பாருங்கோ பிறகு சத்தம் பற்றி ஆராச்சி செய்வோம்.. ஸ்ரீராம் களத்தில குதிச்சிட்டார் என நினைக்கிறேன்.. கேட்டுப் பார்த்திடலாம்:)..

மிக்க நன்றி துரை அண்ணன்:).

athira said...

///KILLERGEE Devakottai said...
அதிரா மீது நம்பிக்கை வைத்து செய்து ''பார்க்கப்போறேன்'' - கில்லர்ஜி//

வாங்கோ கில்லர்ஜி.. ஹா ஹா ஹா கர்:) நம்பிக்கையை ரெசிப்பிமேல வச்சுச் செய்யத் தொடங்குங்கோ.. யாரங்கே ஸ்ராட் மூசிக்க்க்க்க்.. தோஓஓஓஓஓஓ கில்லர்ஜி ஜாம் செய்வதற்காக கொக்கத்தடியுடன் புறம்படுகிறார்ர்.. பழங்கள் பிடுங்க...:)..

மிக்க நன்றி கில்லர்ஜி.

G.M Balasubramaniam said...

ஒரே ஒரு முறை மிக்செட் ஃப்ரூட் ஜாம் செய்திருக்கிறேன் அதில் கொய்யா சேர்த்ததால் ஒரேயடியாக கொய்யா வாசனையாய் இருந்தது

Asokan Kuppusamy said...

ஜாம் ஜம்மென்று இருக்கிறது படத்தில் சாப்பிட முடியவில்லை. இருந்தாலும் வாக்கு த.ம

athira said...

///Geetha Sambasivam said...
ஹாஹா, தக்காளி, பீட்ரூட், காரட், மாங்காயில் செய்திருக்கேன். ஆனால் இங்கே என்னமோ போணி ஆவாது! ///
வாங்கோ கீதாக்கா வாங்கோ... வர வர ஜி எம் பி ஐயாவைப்போல உங்களுக்கும் ஒண்ணுமே பிடிக்க மாட்டேங்குதூஊஊஉ:).. இதை நான் சொல்லல்ல மீ ரொம்ப நல்ல பொண்ணு.. ஸ்ரீராம் தான்.. ஹையோ டங்கு ஃபுல்லாஆஆஅ ஸ்லிப் ஆஅகுதே:).. அஞ்சுதான் சொல்லச்சொன்னா:)).. ஹா ஹா ஹா ஆமா போணி எண்டால் என்ன?:)).. பேணி தெரியும், வாணி தெரியும் எனக்கு:).

///அதிராவின் ஜாம் "ஜம்"முனு இருக்கானு இனிமேத் தான் பார்க்கணும். :) பார்த்துட்டு மறுபடி வரேன்.///

ஹா ஹா ஹா ஒவ்வொரு தடவையும் அதிராவுக்கு நல்ல பெயர் எடுத்துக் குடுக்கிறதுக்காகவே:).. ஸ்ரீராம் வானத்தைப் பார்த்து மூமியைப் பார்த்து:).. குப்புற மல்லாக்க உருண்டு பிரண்டெல்லாம் ஓசிச்சு.. நல்ல தலைப்பா வச்சால்ல்ல்.. இப்பூடி எதையாவது சொல்லிக் கவுத்துப் போடுறீங்களே!!! ஹா ஹா ஹா..

athira said...

//Geetha Sambasivam said...
,// அடுப்பால் இறக்கி, // கையாலே இறக்க மாட்டீங்களா? நாங்கல்லாம் இடுக்கியைப் பிடிச்சுட்டோ, பிடிதுணியைப் பிடிச்சுட்டோக் கையாலே இறக்குவோம். இதென்ன அடுப்பால் இறக்கறது!

ஙே!
////ஹா ஹா ஹா அதிராவைக் கண்டாலே எல்லோருக்கும் கிள்ளி நுள்ளீ விளையாடத்தோணுது கர்ர்ர்ர்:))...


///அது சரி, இவ்வளவு சுலபமா ஜாம் செய்யறது! நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திருக்கோம்! ஙே!///

ரொம்ப ஈசி கீதாக்கா.. நான்கூட அப்படித்தான் நினைச்சிருந்தேன்.. அது கடையில் விற்பதுக்கு என்னென்னமோ எல்லாம் அட் பண்ணுவினம் நமக்கெதுக்கு, நாம் என்ன பிஸ்னஸ் ஆ செய்யப்போறேன்ன்.. பழங்கள் அதிகமாகக் கிடைக்கும் சீசனில் இப்படிச் செய்திடலாம்.

சிலர் இரு பழங்களைக் கலந்தும் செய்வினம்.

இன்னொரு முறை இருக்கு, பழங்களை தண்ணியோடு சேர்த்துக் காச்சி, பின்பு துணியில் நன்கு வடித்து சக்கையை எறிஞ்சு போட்டு, அத்தண்ணியில் சீனியைப் போட்டுக் காச்சி எடுப்பது. ஆனா எனக்கு இப்படி செய்வதுதான் பிடிச்சிருக்கு.

மிக்க நன்றி.

athira said...

//கரந்தை ஜெயக்குமார் said...
இப்பொழுதே சுவைத்துப் பார்க்க மனம் விரும்புகிறது நண்பரே
தம +1//

வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

athira said...

///Avargal Unmaigal said...
தேவையான் பொருட்களில் தண்ணி -: 200 மில்லி லீட்டர் என்று சொல்லி இருக்கீங்க... தண்ணி என்று சொல்லும் போது தெளிவா விஸ்கி ,ரம்,ஒயின் ,பீர், வோட்கா போன்ற தண்ணியில் எந்த தண்ணீர் என்று தெளிவாக சொல்ல வேண்டாமா என்ன?//

வாங்கோ ட்றுத் வாங்கோ... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) அஞ்சு கொஞ்சம் யெல்ப் பண்ணுங்கோ:) ட்றுத்தை ஒருக்கால், தேம்ஸ் தண்ணியில முக்கி எடுத்தால்தான் தெளிவடைவார்ர்:)).. மிக்க நன்றி ட்றுத்.

athira said...

//middleclassmadhavi said...
Poonai jaam saptuducha?!! :-))
naan tomato jaam senjurukken.... cranberry Rhubarb ellam kidacha panni pakren!!//

வாங்கோ மிகி மாதவி... பூஸார் சாப்பிட்டுத்தான் அவ்ளோ அழகா இருக்கிறாராம்.. அது ஜம் க்கு அட்:)..

இந்தப் பழங்கள்தான் என்றில்லை.. அப்பிள், விழாம்பழம் இப்படியானவற்றிலும் செய்யலாம். மிக்க நன்றி.

athira said...

வாங்கோ கீதா.. எங்கே இடையில் காணாமல் போயிட்டீங்க?:)... நம் தேவைக்குச் செய்யும்போது இப்படிச் செய்தால் ஓகே கீதா, எதுவும் அட் பண்ணத் தேவையில்லை. இப்பழங்கள் புளிப்பானவை என்பதால் சீனிதான் அதிகம் தேவைப்படும். மாம்பழத்தில் செய்ய நினைப்பேன் இன்னும் செய்ததில்லை.. விரைவில் செய்துபோட்டுச் சொல்கிறேன்... எப்படி வந்தது என.

நிஷா said...

இங்கேயும் கோடைகாலத்தில் விளையும் பழங்களை ஜாமாகவும், பிரிஜ்ஜில் போட்டும் பதப்படுத்தி வைத்து வின்ரர் சீஷனுக்கு பயன் படுத்துவார்கள். தக்காளிப்பழத்திலும் இம்மாதிரி தான் ஜான் செய்யலாம். நீர்த்தன்மை அதிகமான பழங்களுக்கு தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும். அத்துடன் சீனி சேர்ப்பதனாலும் பழங்கள் நீர் விடும் என்பதனால் நீர் குறைத்து தான் விடுவேன்.

athira said...

//Thulasidharan V Thillaiakathu said... பின்னெ பாட்டிக்கு பாட்டிதானே ஃப்ரென்ட்....பாட்டிக்கு எங்கட வயசுல எல்லாம் ஃப்ரென்ட்ஸ் இருப்பாவோ?!!!! ஹிஹிஹிஹிஹி..//

கீதா, நீங்க என் இந்த லிங்கில் போய்ப் பார்க்கோணும் சொல்லிட்டேன்ன்.. அதில் இருக்கும் வயசு குறைஞ்சவ இப்போ இல்லை:(.. வயது கூடியவ இன்னமும் நன்றாகவே இருக்கிறா.

உண்மைதான் இப்போ அதிகம் கும்மி அடிக்க முடியுதில்லை.. காலநிலை மாற்றமோ என்னமோ எப்ப பார்த்தாலும் பிஸியாகவும் ரயேட் ஆகவும் இருக்கே:)..

மிக்க நன்றி கீதா,.

http://gokisha.blogspot.com/2011/06/blog-post_23.html

athira said...

//ராஜி said...
ஜாம் செய்முறை சொன்னவங்க அந்த பழங்களை எங்களுக்கு அனுப்பி உதவலாமே!//

வாங்கோ ராஜி.. ஹா ஹா ஹா... உங்களுக்குப் பிடிச்ச, கையில் இருக்கும் பழத்தில ட்றை பண்ணுங்கோ நன்றாக வரும். முதல் தடவை அளவு பிழைச்சாலும் 2ம் தடவை நேராக்கிடலாம்... மிக்க நன்றி.

athira said...

//Anuradha Premkumar said...
ஜம் ஜம் ஜாம்...ரொம்ப சுலபமா இருக்கு அதிரா...

இங்க திராச்சையில் செய்யலாம் னு நினைக்கிறேன்....செஞ்சு பார்க்கலாம்..//

வாங்கோ அனு... திராட்சை பற்றித் தெரியல்ல, தண்ணித்தன்மை அதிகம் எல்லோ.. அப்படி எனில் 50 மி.லீட்டர் தண்ணி மட்டும் சேர்த்து முதலில் ட்றை பண்ணுங்கோ. மிக்க நன்றி.

athira said...

//Bagawanjee KA said...
ஜாம் ஜாம் என்று சந்தோசமா இருக்கிற சமயத்திலே ,குதிரை முன்னங்கை(?)யைத்தூக்கி இருக்கிறதைப் பார்த்தா ,காலை கீழே வைக்குமோ ,உதைக்குமோன்னு புரியலியே :)//

வாங்கோ பகவான் ஜீ... ஹா ஹா ஹா அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது.. அதிராவின் ஊர்க் குதிரை அதிராவைப்போல ரொம்ப நல்ல பொண்ணாகவே இருக்கும்:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

athira said...

//நெல்லைத் தமிழன் said...
//// (எனக்குத்தான், என்ன ரசனைன்னு தோணும்).////
வாங்கோ நெல்லைத்தமிழன்... அப்படியா உங்களுக்கு தோணுது ஹா ஹா ஹா:).. உங்கட இட்டிப்பொடி பிரட்டிய இட்லி அடுத்து அந்த பச்சைமிளகாய் புளிபோட்டுக் காச்சியது இரண்டும் இப்பவும் என் வாயில இனிக்குதே:)..

///ரொம்ப சுலபமான ஜாம் செய்முறை. இவ்வளவு சுலபமாகவா இருக்கும்? ஸ்டிராபெர்ரில செய்துபார்க்கிறேன். சிட்ரிக் போடவேண்டாமா? (சீசன் வரட்டும்).//

எதுவும் வேண்டாம், அப்படி எல்லாம் அது போடோணும் இது போடோணும் எனச் சொல்வதனால்தான் நமக்கு நெருங்கப் பயம். விளாம்பழம் கிடைச்சால் செய்து பாருங்கோ சூப்பரா இருக்கும். இலங்கையில் வூடப்பிள் ஜாம் தான் பிரபல்யம்.

///"அடுப்பில் வைத்துக் காச்சவும்.." - சாராயம் காச்சற அளவுல எங்களை இறக்கிட்டீங்களே.///

சீனி சேர்த்தால் காய்ச்சுவது எனத்தானே சொல்லோணுமாக்கும்.. பால் காச்சுவது, ஆயாசம்:) காய்ச்சுவது:).. ஹா ஹா ஹா உங்களுக்கு மட்டும் ஏன் இப்பூஉடி எல்லாம் நினைவு வருது.. ட்றுத் ஐப்போல கர்ர்ர் ஹா ஹா ஹா:).

///ருபார்ப் - அதெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டேன். பழக்கமில்லாத உணவு வகைகள் பக்கமே போகமாட்டேன்.///

ஒரு இங்கத்தைய நண்பி வீட்டுக்குப் போனேன், அந்த நண்பியின் பக்கத்து வீட்டுக்கார அவவின் நண்பி அவட கார்டினில் புல் பிடுங்கிக்கொண்டு நின்றா.. என் நண்பி மதிலால எட்டிச் சொன்னா.. என் நண்பி வந்திருக்கிறா என, அவ சொன்னா கார்டினுக்குள் கூட்டி வாங்கோ என..

இருவரும் போனோம்... அங்கு ரூபேர்ப் தோட்டம் வச்சிருந்தா.. உடனேயே வேணுமோ என்றா.. வஞ்சகம் இல்லாமல் யெச்ச்ச்ச்ச் எனச் சொல்லிட்டேன்ன்.. ஒரு சொப்பிங் பாக் முட்ட வெட்டித்தந்தா.. எனக்கு புளிப்பு அதிகம் பிடிக்கும்.

இத்தண்டை உடைத்து சீனியில் தொட்டுச் சாப்பிட சூப்பரா இருக்கும். நிறைய என்பதனால் ஜாம் செய்தேன்ன்.. புளிப்பும் இனிப்பும் கலந்து சூப்பரா இருந்துது.

மிக்க நன்றி. இப்போ எங்கள் சூப்பர் மார்கட்டில் சில்ல்லி ஜாம் என இருந்துதே.. வாங்கி வந்தேன்ன்.. சிவப்பு மிளகாயில் செய்திருக்கிறார்கள்.. சுவை பெரிதாக எழும்பேல்லை..

athira said...

//vimal said...
ஜாம் அருமை இதனுடன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்துக்கொள்ளுங்கள் சுவை மெருகேறும்//

வாங்கோ விமல்.. நானும் கேள்விப்பட்டேன் அப்பிள் ஜாம் செய்யும்போது ஒரேஞ் பிழிஞ்சு வடிச்சு விடுவதென.. அப்போ தண்ணியைக் குறைக்கோணும்.. இனி முயற்சிக்கிறேன்ன்.. மிக்க நன்றி.

athira said...

//விஜய் said...
அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி//

வாங்கோ விஜய்.. பறவாயில்லையே முன்னேறிட்டீங்க.. கீப் இட் மேலே:) மிக்க நன்றி.

poovizi said...

இந்த பழம் கேள்வி பட்டத்தில்லை ஆனா பார்ப்பதற்க்கு அழகா இருக்கு...... குதிரையும் சூப்பர்

athira said...

///காமாட்சி said... எளிமையான இந்தியப் பழங்களில் செய்முறை கொடுங்கள். அதிரா இன்னும் உயர்ந்த ரெஸிப்பி ராணி ஆகி விடுவீர்கள். அன்புடன்///

வாங்கோ காமாட்ஷி அம்மா... இந்தியப் பழம் எனில் விளாம்பழம் கிடைத்தால் செய்து பாருங்கோ.. இதே அளவுகளில். அப்போ நான் இன்னமும் ரெசிப்பி ராணி ஆகல்லயோ?:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது அஞ்சுவின் கண்ணில பட்டிடக்கூடாது முருகா:).. ஹா ஹா ஹா.

மிக்க நன்றி.

athira said...

//புலவர் இராமாநுசம் said...
படித்தேன் !த ம 11//

வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

athira said...

///துரை செல்வராஜூ said...
ஜாமீ.. ஜாமீ!..

ஏ.. செல்லப்பா!.. என்னலே ஆச்சு!.//

ஹா ஹா ஹா அதாரது புதுசா ஒரு கரெக்ட்டர் உள்ளே வந்திருக்கிறார்ர் ஜாமியக் கூப்பிட்டுக் கொண்டு...:)

ட்ரபிக் ஜாம் மாதிரி.. தொண்டையில ஜாம் ஆகிட்டுதோ?:)).. ஹா ஹாஅ ஹா அப்போ நாளைக்கு சீதை ராமனை மன்னிச்ச கதை படிக்க மாட்டீங்களே:)) மீள் வருகைகளுக்கு மிக்க நன்றி.

athira said...

//ஏகாந்தன் Aekaanthan ! said...
@ நெல்லைத் தமிழன்://வெள்ளிக்கிழமை.../////

உங்களுக்குப் பாடல் நினைவு வந்துவிடுகிறது.. எனக்கோ பாடலுக்கான கதைகள் சில நினைவுக்கு வந்து விடுகிறது.. விபரம் தெரிந்த வயதிலிருந்தே.. ரேடியோவில் இப்பாடல் போகும்போதெல்லாம் எனக்கு ஒரு பயங்கர டவுட், என்னவெனில் இப்பாடலில் தப்பிருக்குதே.. இதை எப்படி எழுதினார்கள்.. ஏன் யாருமே அதை கண்டு கொள்ளவில்லை இப்படி பல டவுட்..

அதாவது வள்ளிக் கணவன் பெயரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தாள்... இதிலதான் டவுட். வள்ளிக் கணவன் என்பதை யாரோ பக்கத்து வீட்டு வள்ளியின் கணவன் என நினைச்சிட்டேன் அப்போ..

அதனால அது தப்புத்தானே.. தன் கணவனை எண்ணிப் பூ முடித்தா எனத்தானே வரோணும் என பல காலமாக என்னுள் குழப்பம்.. ஆனா பாட்டு முடிந்ததும் மறந்துவிடுவேன்.. யாரையும் கேட்டதில்லை... பின்பு வளர்ந்திட்டேனெல்லோ நான்:) அப்போதான் அர்த்தம் புரிந்தது ஹா ஹா ஹா:).

athira said...

//Angelin said...
/இப்படி எனக்கொரு இங்கத்தைய நண்பி:), நம் வீட்டுக்கு அடுத்த தெருவில் இருக்கிறா(அவவுக்கு வயது இப்போ 76.. ஒரு ரிரயேட் ஹெட் ரீச்சர்:) - இப்போ பின்னூட்டங்கள் பறக்குமே:)]] ஹா ஹா ஹா.

ஹாஆ ஹாங் ஹுரோ :) ஹையோ ஹைய்//

வாங்கோ அஞ்சு வாங்கோ ... என்னாது சிரிப்புப் பலமா இருக்குது கர்ர்:).. எனக்கு குட்டீஸ் உம்[அதாவது என் வயதை ஒத்தோரும்:)] வயதானோரும் தான் அதிகம் ஃபிரெண்ட்ஸ் ஹா ஹா ஹா:).

துரை செல்வராஜூ said...

ஓ.. இன்றைக்கு ஜாம்..
நாளைக்கு ராம் (ராமன்- சீதை)!?...

காய்ச்சிட வேண்டியதுதான்...

athira said...

//Angelin said...
இருங்க நானும் இந்த ஜாமுக்கு ஒரு அடிஷனல் டிப்ஸ் தரேன் ..இது என் ப்ரண்ட் ஷி ஐஸ் 23 இயர்ஸ் ஒன்லி :) அவங்க சொன்ன டிப்ஸ் ////

ஹா ஹா ஹா அதிராவால எல்லோரும் வரவர ரொம்பத்தான் உஷாராகிடுறீங்க:).. வயசை எல்லாம் போட்டிடுறீங்க:).. அந்த 90 வயசு தாத்தா.. கேள் பிரெண்ட்டோடு ஊர் சுத்தப்போனாரே:).. அவர் சொல்லவில்லையோ ஹா ஹா:))

///இந்த ஜாம் செய்யும்போது ரெண்டு கப் பழங்களுக்கு ஒன்னரை டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ் பழங்கள் வேகும்போது சேர்த்தா நீர்த்தன்மையை இந்த CHIA சீட்ஸ் உறிஞ்சிடுமாம் ..நம்ம ஊர்லயும் கிடைக்குதே ..///

ஓ இது புதுத் தகவல்.. ஆனா கடிபடுமே அஞ்சு. பழத்தின் தண்ணித்தன்மையைப் பொறுத்து தண்ணியைக் கூட்டிக் குறைக்கலாம்.. இன்னொன்று கொஞ்சம் நேரமெடுத்துக் காச்சும்போது எந்தப் பழமும் இறுகிவிடும்.

athira said...

//Angelin said...// நான் மட்டும் அப்படியே பறிச்சி உப்பு மிளகு சேர்த்து சாப்ட்ருவேன் :///

நான் உப்புத்தண்ணியில் போட்டு விட்டு எடுத்து எடுத்துச் சாப்பிடுவேன்.

//that's yummy YUM JAM

ய வுக்கும் ஜ வுக்கும் யாரது ஜ போட்டது :)
ஜெயராமை யெயராமுன்னா சொல்வாங்க ஹாங் ஹாஆ :)///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) எப்ப்பூடி கிட்னியை ஊஸ் பண்ணினாலும் அடி விழுதே:).. கண்:) எனத்தானே தலைப்புப் போடக்கூடா எனச் சொன்னீங்க:) ஜம் என்றுமா கர்ர்ர்ர்:))

மிக்க நன்றி அஞ்சு.

athira said...

//G.M Balasubramaniam said...
ஒரே ஒரு முறை மிக்செட் ஃப்ரூட் ஜாம் செய்திருக்கிறேன் அதில் கொய்யா சேர்த்ததால் ஒரேயடியாக கொய்யா வாசனையாய் இருந்தது//

வாங்கோ வாங்கோஒ... ஓ அப்படியாஅ? தனித்தனியே செய்வதுதான் நல்லதென நினைக்கிறேன். மிக்க நன்றி.

athira said...

//Asokan Kuppusamy said...
ஜாம் ஜம்மென்று இருக்கிறது படத்தில் சாப்பிட முடியவில்லை. இருந்தாலும் வாக்கு த.ம//

வாங்கோ வாங்கோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

athira said...

///நிஷா said...
இங்கேயும் கோடைகாலத்தில் விளையும் பழங்களை ஜாமாகவும், பிரிஜ்ஜில் போட்டும் பதப்படுத்தி வைத்து வின்ரர் சீஷனுக்கு பயன் படுத்துவார்கள்//

வாங்கோ நிஷா .. அதேதான் இங்கே இப்படியான பழங்கள் விளைவது அதிகம்.. இப்போ எங்கள் பக்கத்து வளவில் பிளாக்பெரீஸ் நிறையப் பழுத்திருக்கு.. யாரும் தொடவில்லை.. எனக்கும் எட்டிப் பிடுங்க நேரமில்லை.. மழை வேறு.. மிக்க நன்றி நிஷா.

athira said...

///துரை செல்வராஜூ said...
ஓ.. இன்றைக்கு ஜாம்..
நாளைக்கு ராம் (ராமன்- சீதை)!?...

காய்ச்சிட வேண்டியதுதான்...//

ஹா ஹா ஹா ஒரு முடிவோடுதான் இருக்கிறீங்கபோல:).. நானும் அதே.. அதே... பார்ப்போம் யாருடையது வருது என:) ஆனா ஆளம் பார்த்துத்தான் காலை விடுவேன்:).. இல்லையெனில் மருவாதையா ஒரு கொமெண்ட்டோடு ஓடிடுவேன்ன்:)) மிக்க நன்றி..

athira said...

///poovizi said...
இந்த பழம் கேள்வி பட்டத்தில்லை ஆனா பார்ப்பதற்க்கு அழகா இருக்கு...... குதிரையும் சூப்பர்///

இடையில இக்கொமெண்ட்டை மிஸ் பண்ணிட்டனே.. வாங்கோ பூவிழி... புதியவரா இருக்கிறீங்க(எனக்கு).. பார்த்திட்டுப் போயிடாமல் கொமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றி.

Pattabi Raman said...

எந்த நாட்டில் எந்த பழம் கிடைக்கிறதோ அதை வைத்து ஜாம் செய்யலாம். எல்லாம் சுகர் செய்யும். மாயம்.
நம் நாட்டில் நன்றாக பழுத்த பாவக்காயில் (பழுத்த பாவக்காயின் நிறமே அழகோ அழகு -அப்படியே சாப்பிட தோன்றும் ) ஆனால் சர்க்கரை சேர்த்து அல்வா அல்லது ஜாம் செய்தால் சுவையாகவும் இருக்கும்.சுவைக்கு நெய்யும் விட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.பாவக்காய் பழத்தில் செய்தேன் என்று சொன்னால்தான் தெரியும்.உடலுக்கும் நல்லது. நான் பலமுறை செய்து உள்ளே தள்ளியிருக்கிறேன்.( சுகர் என்னை பற்றாத முன்பு.)

athira said...

மிக்க நன்றி பட்டபி ராமன்...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!