Saturday, September 9, 2017

பெங்களுருவில் கடத்தப்பட்ட இளம்பெண்ணைக் கடத்திய 3 ஆட்டோக் காரர்களை...

1) கோரியா கிராமத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, யாருடைய உதவியுமின்றி, 27 ஆண்டுகளாக, தனித்து குளம் வெட்டியவரை, பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.  ஷியாம் லால்.


2)  சென்னை, ராஜாஜி பவன் அருகே, டென்னிஸ் அரங்கம் முன், 'ஐயமிட்டு உண்' எனும் உணவு சேகரிப்பு கலனை, சேவை மனப்பான்மையோடு நடத்தி வரும், மருத்துவர் பாத்திமா ஜாஸ்மின்.3)  இதையடுத்து, மக்களை ஒன்று திரட்டி, திருவேற்காடு நகராட்சியில் அனுமதி வாங்கி, பூங்காவில் இருந்த கருவேல மரங்களை அப்புறப்படுத்தியதுடன், திருவிழா போல், மரக்கன்று நடும் விழா நடத்தினோம்.  இயற்கை ஆர்வலராக மாறியது குறித்து கூறும் சிவகாமி.4)  பெங்களுருவில் கடத்தப்பட்ட இளம்பெண்ணைக் கடத்திய 3 ஆட்டோக் காரர்களைப் பிடிக்க உதவிய அக்சல் பாஷா.  இவரும் ஆட்டோக்காரரே.  5)  இந்தச் செய்தி சாதாரண செய்தியாக பார்க்கப் படலாம்.  நம் ஊரில் நாய் வண்டியில்  பிடித்துக்கொண்டு போய் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் காணாமல் போகும் மற்றும் தினசரி பல வாகனங்களில் சாலைகளில் அடிபட்டு உயிர் துறக்கும் இந்த  ஜீவனைக் காப்பாற்ற ஒரு நொடியில் முடிவு செய்த  'அவர்'   பாராட்டப்படவேண்டியவர்.6)  இப்படியும் நடத்தலாம் திருமணம்.  அரவிந்த் - சாதனா.


18 comments:

துரை செல்வராஜூ said...

இனிய தொகுப்பு.. நல்ல மனங்கள் வாழ்க.. நாடு போற்ற வாழ்க..

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தமிழ் மணத்திற்கு என்னவானது நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

தமனா எங்கு ஓடிப் போய்விட்டார்? அனுஷ்கா ரசிகர் என்பதால் தமனாவுக்குக் கோபம் வந்துவிட்டதா?!!! ஹாஹாஹாஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துச் செய்திகளும் வழக்கம் போல் அருமை...முதலில் போன வாரம் பங்களூரில் மழையில் நின்ற பெண்ணோ என்று தோன்றியது. வாசித்ததும் தெரிந்தது அவரல்ல இவர் என்று..!!!

கீதா:வேலை ஒன்றிற்க்காகப் போன போது, பெசன்ட் நகரில் உள்ள அந்தச் சேவையை சமீபத்தில் பார்க்க நேரிட்டது....உங்களிடம் சொல்ல நினைத்து விட்டுப் போனது.....நீங்களே போட்டாலும் போடுவீர்கள் என்று நினைத்தேன் இதோ வந்துவிட்டது..அங்கிருந்த காவலரிடம்..மனதாரப் பாராட்டிவிட்டு வந்தேன். இந்தச் செய்தியா இல்லை இதைப் போன்ற ஒரு செய்தி பாசிட்டிவ் செய்திகளில் வந்த நினைவு...

ஷ்யாம் லால் பிரமிப்பு...தனிமனித சேவை எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்துகிறது!!..வாழ்த்துகள்!!

சிவகாமி அவர்களுக்குப் பாராட்டுகள்....மாறியதோடு மட்டுமின்றி செயலிலும் இறங்கியதற்கு!!

அஸ்கர் (அவர் பெயர் இப்படித்தான் செய்தியில் இருக்கிறது ஸ்ரீராம்) பாஷா அசத்தல் பாஷா!!! பொக்கே!! கூடவே அஸ்கர் பாஷாவுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற பிரார்த்தனைகளும்!!

பைரவரைக் காப்பாற்றிய ட்ரெயின் ஓட்டுநர் மீனாவுக்கும் அதைத் தூக்கி எடுத்துக் காப்பாற்றிய அந்த மனிதருக்கும் கோடானு கோடி நன்றிகள்! பாராட்டுகள்! ப்ரேவோ!!!

அரவிந்த் சாதனாவுக்கு அவர்களின் நல் உள்ளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகல்! அவர்களின் இந்த நல் உள்ளம் வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்!!!

Bhanumathy Venkateswaran said...

ஷியாம் லால் மற்றும் சிவகாமியின் மன உறுதியை போற்றுகிறேன். பாத்திமாவின் புது உத்தியை வரவேற்கிறேன். அக்சல் பாஷாவுக்கு வணக்கம்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான தொகுப்பு. ஒவ்வொன்றும் நச்நெசன்று உள்ளது.

Avargal Unmaigal said...

அனைத்துச் செய்திகளும் வழக்கம் போல் அருமை நாட்டில் பலரும் பல நல்ல காரியங்களை செய்கிறார்கள் என்பதை உங்களி தளம் வருவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது உங்களின் தொடர் முயற்சிக்கு பாராட்டுக்கள் ஸ்ரீராம்

விஜய் said...

அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

வெங்கட் நாகராஜ் said...

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நற்செய்திகளின் தொகுப்பு தொடரட்டும்.

Asokan Kuppusamy said...

என்னுடைய வலைத்தளத்திலும் த.ம. காணாமல் போய்விட்டார், விவரம் ஏதேனும் தெரிந்தால் தகவல் தெரிவியுங்கள். அனைத்து நல்ல உள்ளங்கள்நீடுழி வாழ்க, வாழ்கவே

G.M Balasubramaniam said...

செய்திகளைப் பகிர்ந்ததற்கு பாராட்டுகள்

Geetha Sambasivam said...

அருமையான செய்தித் தொகுப்பு. சில அறிந்தவை! சில அறியாதவை!

athira said...

நான் வந்து வோட் போட்டுவிட்டுச் செல்கிறேன்:).

athira said...

//Thulasidharan V Thillaiakathu said...
தமனா எங்கு ஓடிப் போய்விட்டார்? அனுஷ்கா ரசிகர் என்பதால் தமனாவுக்குக் கோபம் வந்துவிட்டதா?!!! ஹாஹாஹாஹா

கீதா//

ஆஹா இது யூப்பர் கண்டுபிடிப்பூஊ:)..ஹா ஹா ஹா.

நெல்லைத் தமிழன் said...

பாசிடிவ் செய்திகள் படிக்க மகிழ்ச்சியாக இருக்கு. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

ராமலக்ஷ்மி said...

தொகுப்புக்கு நன்றி.

கோமதி அரசு said...

அருமையான தொகுப்பு. சில உங்கள் முகநூல் பகிர்வு .
நல்லதை பகிரும் பணி தொடர வாழ்த்துக்கள்.

Saratha J said...

அருமையான தொகுப்பு

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!