சனி, 21 அக்டோபர், 2017

பெங்களூரு ஜெயம்மா



1) திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தளத்தில் படித்த ஒரு நேர்மறைச்செய்தி.








2) சபாஷ் ஆட்சியர்!

மாவட்ட கலெக்டர் வருகை என்றால் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்களிடையே இந்த கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், எனக்காக மக்களை யாரும் காக்க வைக்க வேண்டாம் என்று கர்ராராக உத்திரவிட்டதோடு, அவரே ஏற்கனவே, அதாவது எப்போதும் டிராபிக் ஆகி விடும் இடத்தை சரி செய்த காட்சி மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.






3)  ஆற்றை கடந்து செல்ல, அரசு தரைப்பாலம் அமைக்காததால், போடியப்பனுார் கிராம மக்கள், சொந்த செலவில் மூங்கில் பாலம் அமைத்துள்ளனர்.









4)  மக்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் பணியிலிருந்து முன்னதாகவே விருப்ப ஒய்வு பெற்று, ஓய்வொஓதியப் பணத்திலிருந்து பெருமளவு பணத்தை உதவிகளுக்காகவே செலவு செய்யும் ஜலஜா - ஜனார்த்தனன் தம்பதியர்.  ( தகவல் அறிந்த தளம்.நன்றி திரு சத்யானந்தன். )










5)  பெங்களூரு பேய் மழையில் தன் உயிரைப் பணயம் வைத்து 8 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய 65 வயது ஜெயம்மா.








தமிழ்மணம்

21 கருத்துகள்:

  1. நல்ல செயல்களுடன் இனிய காலைப் பொழுது... வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. லக்னோவின் சரோஜினி அகர்வாலிலிருந்து பெங்களூர் ஜெயம்மா வரை அத்தனையும் முத்துக்கள். மனிதர்களில் மாண்பு காண்பிப்பவர்கள். இந்த நாட்டுக்கு எந்த ஆபத்துமில்லை.

    பதிலளிநீக்கு
  3. 60 களில் எல்லாம் இப்படியான மூங்கில் பாலம் தான் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும்... ஆற்றின் இக்கரையையும் அக்கரையையும் அக்கறையுடன் இணைத்தனர் அன்றைய மக்கள்..

    அதன் பின் என்ன கோளாறோ தெரியவில்லை... பாலங்கள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிலையங்கள்,ஓய்வு அறைகள் எல்லாம் இடிந்து மக்கள் தலையில் விழுகின்றன..

    பதிலளிநீக்கு
  4. ஜெயாம்மாவை போற்றுவோம் நல்ல மனம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  5. போற்றுதலுக்குஉரியவர்கள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  6. லக்னோ சரோஜினி அவர்களுக்கும் பங்களூர் ஜெயம்மா அவர்களுக்கும் ஜனார்த்தனன் ஜலஜா தம்பதியருக்கும் பல கோடி வணக்கங்கள். எத்தனை சொன்னாலும் தகும்.

    முங்கில்பாலம் பயனுள்ளதாகவும் அழகாகவும் இருக்கிறது...அம்மக்களுக்குப் பூங்கொத்து. கலெக்டர் கோவிந்தராஜ் அவர்களுக்கும் பூங்கொத்து பாராட்டுகள் வாழ்த்துகள்!! முன்னுதாரணம்!

    பதிலளிநீக்கு
  7. நல்ல செய்திகளின் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான பகிர்வு அவர்கள் எல்லாம் இறைவனால் விழநடத்த படுவார்கள் புண்ணையும் செய்ப்பவர்களை காண்பதே புண்ணியம்

    பதிலளிநீக்கு
  9. ஜெயம்மாவும் ஜலஜா, ஜனார்த்தனனும் படிச்சேன். மற்றது புதிது. அந்த மூங்கில் பாலத்தைப் பார்த்ததும் மலரும் நினைவுகள். கல்யாணம் ஆகி முதல் முதலாப் புக்ககம் போகையில் அந்தப்பாலத்தில் நடக்கப் பயந்ததும்!பின்னர் ஆற்றில் அப்போ தண்ணீர் அதிகம் இல்லாததால் ஆற்றில் இறங்கிப் போனதும், புடைவையைத் தூக்கிக்க வெட்கப் பட்டுக் கொண்டு பட்டுப்புடைவை நனைய நனையப் போனதும்!

    பதிலளிநீக்கு
  10. Geetha Sambasivam

    //..புக்ககம் போகையில் அந்தப்பாலத்தில் நடக்கப் பயந்ததும்பின்னர்.. ஆற்றில் இறங்கிப் போனதும்..//

    இந்த romantic journey-பத்தி ஒரு பதிவு போடலாமே !

    பதிலளிநீக்கு
  11. @ ஏகாந்தன், போட்டிருக்கேனே! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே! :)

    பதிலளிநீக்கு
  12. @Geetha Sambasivam :

    ஓ! எதனையும் விட்டுவைப்பதில்லை என்பதன்றி வோறொன்றறியேன் பராபரமே!- என்றிருக்கிறதோ உங்கள் பக்கம் !

    பதிலளிநீக்கு
  13. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்

    பதிலளிநீக்கு
  14. வழக்கம்போல தேர்ந்தெடுக்கப்பட்ட அருமையான செய்திப் பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. காஜல் அகர்வாலைத் தெரிந்த அளவுக்கு ,நல்ல சேவையை செய்து வரும் லக்னோவின் சரோஜினி அகர்வாலைப் பற்றி தெரியாதது சாபக் கேடு !
    நேர்மறையான செய்திக்கு என்றும்போல் என் நேர்மறையான + த ம வாக்கு :)

    பதிலளிநீக்கு
  16. அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். மூங்கில் பாலம் கட்டினால், மழைக்காலத்தில் பாம்புகள் ஒதுங்காதோ? (பாதி நடந்துகொண்டிருக்கும்போது பாம்பு எட்டிப் பார்த்தால்?). பாசிடிவ் செய்திகள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!