Friday, May 25, 2018

வெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன? பூ முகம் சிவந்தா போகும்?     குறுந்தொகைப் பாடல் ஒன்றை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் / படித்திருப்பீர்கள்.  அதற்கு பொருளும் அறிவீர்கள். 

Thursday, May 24, 2018

பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்!


முகநூலில் சில அற்புதமான பதிவுகள், படிக்கக் கிடைக்கின்றன. 

அவற்றில் ஒன்று, இது.

Wednesday, May 23, 2018

கேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்! புதன் 180523இந்த வாரம், நகத்தை .... இல்லை இல்லை விரலைக் கடித்துக்கொண்டிருப்பவர் .... முதல் கேள்விக்கு பதிலாக!   

Friday, May 18, 2018

வெள்ளி வீடியோ 180518 : உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்பழைய பாடல்களையே போடுகிறேன் என்று ஏஞ்சல் குற்றம் சாட்டியுள்ள காரணத்தால் இன்றைய பாடல் இன்னும் ரிலீஸ் ஆகாத ஒரு படத்திலிருந்து...

Thursday, May 17, 2018

மீசை தாடி ராமர்தாடி மீசையுடன் ராமர்! 

Wednesday, May 16, 2018

கேளுங்க ! சொல்றோம் ! புதன் 180516இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண் : திரு எடியூரப்பா ! 
(படம் கிடைக்கவில்லை! ) 


Tuesday, May 15, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.


அன்பு ஸ்ரீராம்,


படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார்,  ஈரத்துண்டு, கை கூப்புதல் எல்லாம் எனக்கு சோகமாகத் தெரிந்தன. அவர் சூரியனைக் கூடத் துதித்திருக்கலாம் 

அன்புடன் அம்மா 

இதோ கதை....  

Sunday, May 13, 2018

ஞாயிறு 180513 : பாதுகாப்பு அரணுக்குள்பொன்னு வைக்கற இடத்துல இல்ல, விளக்கு வைக்கற இடத்துல பூ! 

Friday, May 11, 2018

வெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்     'ஒரு பாடலைப் பல ராகத்தில் உனைப்பார்த்துப் பாடினேன்' என்றொரு எஸ் பி பி பாடல் உண்டு.  அதையும் ஒருநாள் பகிர்கிறேன்!  ஆனால் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பாடலை வெவ்வேறு ராகங்களில் கேட்கப் போகிறோம்!  வெவ்வேறு திரைப்படங்களில் அதே பாடல்!

Thursday, May 10, 2018

மனம் வறண்ட மக்களின் வனம் அழித்த செயல்


படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து....  

Wednesday, May 9, 2018

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்! புதன் 180509


அநேகமாக கேள்வி கேட்டவருக்கே மறந்து போயிருக்கும்!  

Friday, May 4, 2018

வெள்ளி வீடியோ 180504 : முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்


1975 இல் வெளிவந்த இந்தப் படத்திலேயே ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்று சொல்லி இருந்தார்களாம்!  

Thursday, May 3, 2018

பூவின் தற்கொலைபிரேக்கிங் நியூஸ் : யாரும் தன்னைப் பறிக்காத சோகத்தில் பூ ஒன்று செடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது.  

Friday, April 27, 2018

வெள்ளி வீடியோ 180427 : கொடுத்தேன் கண்ணில் முத்தம் ; கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்1971 இல் வெளிவந்த படம்.  ஜெய்சங்கர் நடித்த படம்.  'வீட்டுக்கு ஒரு பிள்ளை'. 

Thursday, April 26, 2018

அத்திரிமாக்கும் அத்து மீறலும்!
​​
என் மகன் ஒரு சம்பவம் சொன்னான்.  அவன் நண்பன் ஒரு 'ஸ்பீச்' கொடுக்கத் தயார் செய்திருந்தானாம்.  நிகழ்ச்சி, காலை என்பதற்கு பதிலாக மாலை என்று மாறியதாம்.  விருந்தினர் பெயரிலும் இரண்டு மாறுதல்கள் இருந்ததாம்.  'அதை மாற்றிப் படி' என்றால்,  'ஐயோ...   இதுவரை மனப்பாடம் செய்து வைத்தது எல்லாம் மறந்து விட்டதே... இதை மாற்றினேன் என்றால் எல்லாவற்றையும் மறந்து மாற்றி விடுவேன்" என்றானாம்...   

Monday, April 23, 2018

Thursday, April 19, 2018

உங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்?


இந்த வார மனம் கவர் சிறுகதை!

இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை 'தளை' படித்தேன்.   ஏனோ ஒன்றிப்போய் படிக்க முடிந்தது.  அல்லது ஏனோ படித்த உடன் மனசில் நின்றது.  ஏனோ, என்ன ஏனோ?  நான் அந்த மாதிரிதான் என்று நினைக்கிறேன்.  அதனால் ஒன்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்!

Wednesday, April 18, 2018

Thursday, April 12, 2018

திருட்டுக்கரும்பு..

சமீபத்தில் நியூயார்க் பரதேசி பதிவில் ஆலைக்கரும்பு, பொங்கல் விற்பனைக்கு கரும்பு பற்றி எழுதி இருந்தார்.  அவர் அந்த ஊரில் வளர்ந்தவர் என்பதால் ஆலைக்கரும்பு அவருக்கு கேட்காமலேயே கிடைத்து விட்டது.  ஆலைக்கரும்புதான் சுவையாக இருக்கும் என்று எழுதி இருக்கிறார்.  இது கருப்பு நிறமாக இல்லாமல் சற்று வெளுத்தாற்போல இருக்கும்.

Wednesday, April 11, 2018

பு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என்ன வித்தியாசம்?


மீண்டும் சொல்லிவிடுகிறேன், நகைச்சுவைதான் எங்கள் பதில்களில் முக்கிய அம்சம். யார் மனதையும் புண்படுத்துவது அல்ல!


ஆமாம் ஆமாம் !
நகை சுவைக்கு முன்னுரிமை!


Thursday, April 5, 2018

உயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.
லாரியில் ஏறினோம்.  எங்களுடன் எங்கள் நாய் டிக்கியும் ஓடி வந்து ஏறியது.  லாரியில் இருந்தவர்கள் ஒரே குரலாக அதை ஏற்றிக் கொள்ளக்கூடாது, இடமில்லை என்று தடுத்தார்கள். 

Wednesday, April 4, 2018

180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு ? அனுஷ்கா / தமன்னா?கேள்வி பதில் பகுதி, நகைச்சுவைக்கு முன்னுரிமை கொடுத்து எழுதப்படும் பகுதி. 

யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.  

Monday, April 2, 2018

"திங்க"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பிஹாய்! ஹாய்! ஹாய்! எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள்! கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள். எங்களின் சிறப்பு விருந்தினர் துரை செல்வராஜு அண்ணாவுக்கும் கை வலி வந்திட, அவருக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அவரது உரையாடலைத் தொடரலாம் என்றிருக்கிறோம். என்றாலும் அவரும் எங்களுடன் கலந்து கொள்வார். ஷோ முடிந்ததும் இனிப்பு பற்றி கருத்து சொல்லுவார்.  

Thursday, March 29, 2018

இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள்!!​வருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.  

Wednesday, March 28, 2018

கே எ ப?


புதன் புதிரை விட்டு, புதன் கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கலாமா என்று ஒரு யோசனை. எந்த சப்ஜெக்டில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஆசிரியர் குழுவினர் பதில் அளிக்க முயற்சி செய்வார்கள். குறும்பு கேள்விகளுக்கு, குறும்பு பதில்கள்தான் கிடைக்கும்! புதன் கே ப பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இங்கு பதியப்படும் கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் கொடுப்போம் ( என்று நம்புகிறோம்) 

Friday, March 23, 2018

வெள்ளி புதிரோடியோ ! 180323


எச்சரிக்கை: 

புதன் புதிருக்கு இந்த  வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். 

=========================  

Thursday, March 22, 2018

ஒற்றை யானையும் ஓராயிரம் கொசுவும்கொசு - ஒரு புலம்பல்.  

Wednesday, March 21, 2018

180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் !


சினிமா அந்தாதி: 

ஒரு படப்  பெயரின் முடிவில் இன்னொரு படத்தின்பெயர் துவங்கும். 

1. சேரனோடு மிஷ்கின் போட்ட சண்டையில் ரஜினிக்கு அவ்வப்பொழுது சித்தம் கலங்கியது.

2. கமல் இதை முத்தமிடும் சத்தம்.

3. ஜெமினி, கமல், ரஜினி மூவரும் சம்பத்தப்பட்ட மூன்று படங்கள் இரண்டு வார்த்தைகளில்.

4. மாதவன் கட்டிய கோட்டை 

5. ____ தங்கை _______ கல்யாணம் பண்ணி _____  ___ தீரும். 
 (கோடிட்ட இடங்களை பொருத்தமான தமிழ் சினிமா பெயர்களால் நிரப்பவும். அவை ஒரு அர்த்தமுள்ள வாக்கியத்தை உருவாக்க வேண்டும்)

உபயம்: திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன். 

Tuesday, March 20, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கிருஷ்ணமூர்த்தி


      திருமதி தங்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முக நூலில் எனது நண்பர்.  ஒரு அழகிய சிறுகதையை அங்கு அவர் எழுதி இருந்தார்.  அவர் அனுமதியுடன் அதை இங்கு பிரசுரம் செய்கிறேன்.  தொடர்ந்து அவ்வப்போது எழுதித்தரவும் கேட்டிருக்கிறேன்,

      நன்றி மேடம்.  

Friday, March 16, 2018

வெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ; கண்ணோடு உறவு கொண்டேன்.   எம் ஜி ஆரின் புகழைக் குறைக்க கலைஞரால் களமிறக்கப்பட்டவர் மு க முத்து - அவர் மகன்.  

Thursday, March 15, 2018

அடி உதவற மாதிரி....அடி உதவற மாதிரி.... 

Friday, March 9, 2018

வெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி...


   இன்றைக்கு இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த படம்!  

Thursday, March 8, 2018

சிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அரட்டைகள்

...சினிமா ஆர்வம் துரத்த, சென்னைக்கு வந்து சேர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் ‘மூன்று பெண்கள்’ தொடங்கி, ‘திருமணம்’, மாய மனிதன்’, ‘பக்த சபரி’ எனச் சிறியதும் சற்றுப் பெரியதுமான படங்களில் நடித்தார்.  நண்பர்கள் உதவியுடன் டைரக்டர் ஜோசப் தளியத் அறிமுகமானார். 

Wednesday, March 7, 2018

Tuesday, March 6, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன்     நெல்லைத்தமிழன் நம்ம ஏரியா வுக்கு எழுதி அனுப்பிய கதையை அவர் அனுமதியுடன் இங்கு கேட்டு வாங்கிப் போடும் கதைக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

     நன்றி நெல்லை.  

Monday, March 5, 2018

"திங்க"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்தமிழன் ரெஸிப்பி(நன்றி.. சமீபத்தில் மீண்டும் பார்த்த ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படம்)  

Friday, March 2, 2018

வெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தாலாட்ட உனைத் தேடினாள் ..
     பத்மப்ரியா பார்க்கக் கொஞ்சம் ஹேமமாலினி போல இருப்பார்.   

Wednesday, February 28, 2018

Friday, February 23, 2018

வெள்ளி வீடியோ 20180223 : அடி இரவில் மலரும் பூவே - எந்தன் இளமை பருகும் தேனே     "மத்தியானம் பன்னிரண்டு மணி, ஒரு மணி இருக்குங்க...   வெய்யில்...   அப்போ என் காதலியைப் பார்த்தேன்..."  என்றோ  

Thursday, February 22, 2018

Wednesday, February 21, 2018

180221 புதிருக்கு அஞ்சேல்


சென்றவாரம்,  நான் நினைத்து கேட்டவை : 


1) மாமியாரும் ஒருவீட்டு மருமகளே


2)  நீலாவுக்கு நெறஞ்ச மனசு 


3) சவரக்கத்தி ( சக்கரவர்த்தி என்பதுதான் சரியான படப் பெயர் . அதை 7 எழுத்துக்களாக சௌகரியத்திற்கு     சுருக்கி   சக்ரவர்த்தி என்று எழுதியவர்கள் எல்லோரும் , மற்றும்  சதிலீலாவதி என்றவர்கள் எல்லாம் ஏறுங்க  பெஞ்சு மேலே) 

   

4) பணம் பந்தியிலே 


5) பூலோக ரம்பை


6) ஸ்கூல் மாஸ்டர் 


7) என் ஆளோட செருப்பக் காணோம்  ( எங்களுக்கும் காலம் வரும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய பதிலே ) 


8) மஹா கவி காளிதாஸ் ( ஹி ஹி கவுண்டிங்ல கோட்டை விட்டுட்டேன்! அதனால் நான் பெஞ்சு மேல ஏறிக்கறேன்!) மலபார் போலீஸ் என்று சொன்னவர்களுக்கு முழு மதிப்பெண் கொடுக்கின்றேன் . மானம் காத்த ம போலீஸுக்கு நன்றி. 


9) எங்க வீட்டுப் பெண் 


10) துகாராம் 


   சரியான  பதில் கூறிய ஒவ்வொருவருக்கும்,  ஒவ்வொரு பதிலுக்கும் நூறு மார்க் . அக்கவுண்ட்ல போட்டு  வச்சிக்குங்க. அப்புறம் வித்டிரா பண்ணிக்கலாம். இந்த வாரம்: 


தமிழ்  படப் பாடலின் முதல் வரி ... முதல் எழுத்து, கடைசி எழுத்து ( கவனிக்கவும் : வரியின் கடைசி எழுத்து ) 


நீங்க அந்தப் பாலின் முதல் வரியை எழுதவும் . 


Note: some have more than one right answer.
1). அ .............................   ளே ! 2). பே ................... யா? 


3).  இ ......................... கை 4).  ஆ ...................  ரோ 5).  தை .....................  வ்    


6). டி .....................    லே 


7) லி ................................. டு 


8)  கா ...................... டு 


9)  டோ ......................  ரா 


10) டை .................... வா Sunday, February 18, 2018

Friday, February 16, 2018

வெள்ளி வீடியோ 180216 : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே


   சச்சின் டெண்டுல்கர் விளையாடும் புயல் விளையாட்டில் அவருடன் விளையாடிய கங்குலியின் ஆட்டமோ, டிராவிடின் ஆட்டமோ கண்ணில், கவனத்தில் படாமல் சென்றுவிடும் பார்த்திருக்கிறீர்களா?  உண்மையில் அதுவும் சிறப்பான விளையாட்டாய்த்தான் இருக்கும்.  ஆனால் இந்தப் புயலில் அது காணாமல் போயிருக்கும்.  

Wednesday, February 14, 2018

180214 சினிமாப் பெயர் தெரியுமா?எல்லாம் சினிமாப் படப் பெயர்கள். தமிழ் சினிமா. 

முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

அடைப்புக் குறிக்குள் மொத்த எழுத்துகள். 

Monday, February 12, 2018

"திங்க"க்கிழமை : கம்பங்-கொள்ளுப் புட்டு:) - அதிரா ரெஸிப்பி

கப்பங்-கொள்ளு சுவீட் புட்டு:)..

கடவுளே.. இண்டைக்கு என் சுவீட் புட்டுக்கு என்ன ஜொள்ளுவினமோ?:))
  

Sunday, February 11, 2018

Friday, February 9, 2018

Wednesday, February 7, 2018

180207. காட்டுத்தனமா ஒரு புதிர்!


Quiz
ஒளிந்திருக்கும் மிருகங்களைக் கண்டுபிடியுங்க.  

1) சேர்க்க வா 

2) பாடு கோந்து 

3) பரிமாற உதவும் கருவியிலிருந்து புள்ளி வெச்ச எழுத்தை 'சுரண்டி' எடுத்துட்டா வருவாரு இந்த டி ஆரு!

4) குங்குமத்தை கொஞ்சம் எடுத்து 'ர'கசியமா பிச்சிப் போட்டா  ....  வருவார்.!   

Monday, February 5, 2018

"திங்க"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ரெஸிப்பி


கடுகோரைக்கான கடுகு பச்சடி/கடுகு குழம்பு ஹை! ஃப்ரென்ட்ஸ் வணக்கம். ரொம்ப நாளாச்சோ?! சரி… நாம இன்னிக்கு கடுகு ரெசிப்பி ஒன்னு பார்க்கப் போறோம். கடுகுன உடனே அங்க யாரு ‘கடுகு தாளிக்கத்தான் யூஸ் பண்ணுவம்’னு கடுகு போல வெடிக்கறது!!! ஓ!! நம்ம பூஸார்! நோ கடுகு தாளிப்பு!! இது ரொம்ப நல்லாருக்கும் பூஸார்! நாம புளியோதரை செய்வோம் இல்லையா? நீங்க கூட நெல்லையின் புளியோதரை ரெசிப்பி செய்திருந்தீங்களே!! (நீங்கதானே செஞ்சீங்க?!!! இல்லை நெல்லையோட ஃபோட்டோவா ஹா ஹா) அது போல இது கடுகோரை செய்ய உதவும். தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.  

Sunday, February 4, 2018

பாம்புப் பாதையில் பரவசப் பயணம்


ஹர்பஜன் மந்திரிலிருந்து கேங்டாக் வரும் வழியில் கடந்து வந்த பாதை.  சுத்தமான மாநிலம் என்று விருது வென்ற சிக்கிம் மாநிலம்.  பிரித்து வேறு இடத்தில கட்டி விடக்கூடிய கட்டிடங்கள்...

Friday, February 2, 2018

வெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்கள் ; விசிறி ஆகும் நாணல்கள்


​     பாடலுக்கேற்ற சூழலை இசையிலேயே கொண்டு வர முடியுமா?  முடியும் என்று பலமுறை நிரூபித்தவர் இளையராஜா.  இந்தப் பாடலும் அதில் ஒன்று.   இசையிலேயே காட்சிகளை உணர வைக்கிறார் இசைஞானி.

Thursday, February 1, 2018

Wednesday, January 24, 2018

வார வம்பு 180124இந்தியக் குடியரசு தினம். 

இது சரியான முறையில் கொண்டாடப்படுகிறதா?  

Tuesday, January 23, 2018

கேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு
  'எங்களி'ன் செவ்வாய்த் தொடரான "கேட்டு வாங்கிப் போடும் கதை" யில் சீனு என்னும் ஸ்ரீநிவாசன் பாலகிருஷ்ணன் கதையை வெளியிட வெகு விருப்பம் எனக்கு.   

Monday, January 22, 2018

"திங்க"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத்தமிழன் ரெசிப்பி


மாங்காய் ஊறுகாய்க்கு ஒரு பதிவான்னு நினைக்காதீங்க. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்று சும்மாவா சொல்லியிருக்காங்க? 

Friday, January 19, 2018

Thursday, January 18, 2018

நெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்?


அன்புள்ள ஸ்ரீராம்,

வியாழன் பதிவு ‘உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள்”., நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனுப்பியிருக்கிறேன்.. 

அன்புடன்
நெல்லைத்தமிழன்  

Wednesday, January 17, 2018

வார வம்பு 180117சில எஃப் எம் சானல்களில் நமது பாரம்பரிய பக்திப் பாடல்களை / சுலோகங்களை , (உதாரணம்: கஜானனம் பூத கனாதி சேவிதம் என்ற சுலோகம் )    அவற்றுக்குரிய ராக, லயம், இல்லாமல், கிடார், டிரம்ஸ் பின்னணியுடன், இஷ்டத்துக்கு இழுத்து பாடுகிறார்களே, அது பற்றி, உங்கள் கருத்து என்ன? 

Tuesday, January 16, 2018

கேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : அதிரா


     இன்றைய "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் அதிராவின் சிறுகதை ஒன்று வெளியாகிறது.


Sunday, January 14, 2018

மேய்ச்சல் மைதானம்!
Friday, January 12, 2018

வெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை1972 ல் வெளியான படம்.  வாலி பாடலுக்கு வி. குமார் இசை.   

Wednesday, January 10, 2018

180110 வார வம்பு.


இந்த வார வம்பு கேள்வி:

இதற்கு ஆதார் , அதற்கு ஆதார் என்று நச்சு பண்ணுகிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்களுக்கு ஆதார் எண் இருக்கா?
இல்லை என்றால், ஏன் எடுக்கவில்லை?

வம்பு ஆரம்பிப்போம் வாங்க!

தமிழ்மணம்


Tuesday, January 9, 2018

Sunday, January 7, 2018

Friday, January 5, 2018

வெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே
வீ தக்ஷிணாமூர்த்தி  இசையில் ஒரு அற்புதமான பாடல். 

Thursday, January 4, 2018

மோகுஸாட்ஸு
     இருபொருள் அல்லது வெவ்வேறு பொருள் கொண்ட வார்த்தைகளால் எப்போதும் கலகம்தான் விளையும் போலும்!  "நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை" என்று சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், விளைவுகள் விளைவுகள்தான்!  சமீபத்திய உதாரணம் எல்லோருக்கும் தெரியும்!  என்ன என்று தெரியாதவர்களை பசித்த புலி தின்னட்டும்!

Tuesday, January 2, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : "வீட்டில ஆருமே இல்லை"​ - அதிராஇன்றைய "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் அதிரா எழுதிய கதை ஒன்று.... 

===============================================================================