புதன், 24 ஜனவரி, 2018

வார வம்பு 180124



இந்தியக் குடியரசு தினம். 

இது சரியான முறையில் கொண்டாடப்படுகிறதா?  


(தனியார்) தொலைக்காட்சிகளில், சமூகத் தளங்களில், இவைகள் சரியான முறையில் கொண்டாடப்படுவதில்லை என்று நினைக்கின்றேன். 


உங்கள் பார்வையில், குடியரசுநாள் பற்றி, உங்களுக்குத் தோன்றுவதை எழுதுங்கள். 



      


15 கருத்துகள்:

  1. "இல்லை"

    இந்தநாள் திரைப்பட நடிகைகளை வைத்து ஊடகங்களால் அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலமாகின்றன...

    பதிலளிநீக்கு
  2. குடல் கொதிக்குது!.. கும்பி கருகுது!..

    அப்டி..ன்னு நாப்பது வருசத்து முன்னால கேட்டானுவோ!..

    நாங்க ஆச்சிக்கு வந்தா தயிரும் மோரும் தெருவெல்லாம் ஓடும்..ன்னானுவோ!..

    தயிரும் மோரும் ஓடலீங்கோ..டாசுமாக்கு தண்ணி தானுங்க ஓடுது!..

    ரோட்டுல நல்லா ஓடுன பஸ்சு...ங்களையெல்லாம் புடுங்கிக்கிட்டு

    சோழன் உங்கள் தோழன்...ன்னானுங்க..
    பல்லவன் அவன் நல்லவன்...ன்னானுங்க!..
    என்னாமோ சும்மா ஏத்திக்கிட்டுப் போன மாதிரி...

    அவனவனும் கொள்ளையடிச்சுத் தின்னுப்புட்டு
    இப்போ சொல்றாங்க..

    பஸ்ஸூ எல்லாம் மக்களோடது..
    கஷ்டம் வந்தா தாங்கிக்கிடோணும்...ன்னு!..

    அம்பதாயிரம் கொடு.. வேலைய பர்மனண்டு ஆக்குறேன் ..ன்னு லஞ்சம் கேட்டப்போ
    தஞ்சாவூருக்கும் பட்டுகோட்டைக்கும் பஸ்ஸு..க்கு நாலே கால் ரூவா...

    இன்னைக்கு சாதாரண லொட லொட பஸ்ஸுக்கு நாப்பத்தெட்டு ரூவா ஆயிடிச்சி..
    சூப்பர் லொட லொட பஸ்ஸுக்கு எம்ம்புட்டு...ன்னு தெரியலே..

    அதே குடல் தான்.. கும்பி தான்!..

    எவனுக்கெல்லாம் குளுகுளு..ன்னு இருக்கோ தெரியலை...
    எங்களுக்கு கொதிச்சுக்கிட்டு தான் இருக்கு.. கருகிக்கிட்டு தான் இருக்கு!..

    இதுல குடியரசு...ன்னா என்னான்னு தான் புரியல்லே!...

    பதிலளிநீக்கு
  3. ஓய்.. என்னங்...காணும் ஒளறியிருக்கீர்!...

    கும்பி கொதிக்குது!..குடல் கருகுது!.. அப்டின்னு சொன்னதாத் தான் ஞாபகம்!..

    எப்பிடியோ சொன்னாங்களா இல்லையா?...

    ஆமாம்!...

    ஞாவகத்துல இருந்தா.. சரி..ன்னேன்!..

    பதிலளிநீக்கு
  4. என்னது குடியரசு தினமா?!!! ஹா ஹா ஹா ஹா ஹா...

    தமிழ்நாடு "குடி" அரசு தினம் வேணா கொண்டாடலாம்....அல்லாம குடிமக்களின் (இந்தக் குடி யில் வேறு அர்த்தமில்லையாக்கும்!!!) வாழ்வை உயர்த்தும் அரசு எங்க இருக்குனு தேடணுமா இருக்கு!!! இதுல குடியரசு தினம்....இங்கும் சரி தலைநகரிலும் சரி கோட்டைல கொடி ஏறுவதோடு சரி...மத்தபடி என்ன கொண்டாட்டம்?... சினிமாக்காரங்களுக்குக் கொண்டாட்டம். மற்ற மாநிலங்களில் தெரியவில்லை.நாளைக்கு சும்மானாலும் எல்லாரும் கொடி படத்தைப் போடுவாங்க இல்லை சட்டைல குத்திப்பாங்க...வேற என்ன செய்யறாங்க? ஏந்த பிரஜையாவது குப்பையை தெருல போடக் கூடாது, பொது இடத்தில் புகைக்கக் கூடாது....குடிக்கக் கூடாது, ட்ராஃபிக் ரூல்ஸ் பின்பற்றணும், ஊழல் செய்யக் கூடாது, கலப்படப் பொருளை விற்கக் கூடாது நு ஏதாவது சத்தியப் பிரமாணம் எடுக்கறாங்களா என்ன? மற்றபடி நல்லதாக நமக்குத் தெரிந்த அளவில் கொண்டாடுவதாக அறிவிற்கு எட்டிய அளவில் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. துரை செல்வராஜு அண்ணா ஆஹா பிச்சு உதறிட்டீங்களே!!! சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அங்கே மா..2 புதிய பதிவு வெளியாகியுள்ள்து..

    பதிலளிநீக்கு
  7. முன்னால எல்லாம், தூர்தர்ஷனில் குடியரசு தின அணிவகுப்பைப் பார்க்க ஆவலாக இருக்கும் (நான் சொல்றது 25-30 வருஷத்துக்கு முன்பு). இப்போ 'குடியரசு தினம்' என்ற நினைப்பே வருவதில்லை. சுதந்திர தினத்தின்போது பள்ளிக்கு மிட்டாய் வாங்கச் செல்லும் ஆர்வம் இருக்கும்.

    தனியார் தொலைக்காட்சிகள், ஊடகங்கள் போன்றவை வியாபாரத்துக்காகத்தான் இருக்கின்றன. ஒரு நாள் அவங்க, 'அழுகை சீரியல்'களை நிறுத்திவிட்டு இந்திய சுதந்திரம், குடியரசு போன்ற நிகழ்ச்சிகளைப் போட்டால், 'டாஸ்மாக்'க்குப் பொங்கி எழுந்ததைவிட ரோடில் வந்து நம் பெண்மணிகள் பொங்கி எழுந்துடுவாங்க. அப்புறம் ஏன் விலைபோகாத ஒன்றிர்க்கு தனியார் தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் நேரம் செலவழிக்கப்போகின்றன?

    பதிலளிநீக்கு
  8. 'நேற்றைக்கு 'சர்ஜிகல் அட்டாக்' ஹிஸ்டரி சேனலில் பார்த்தேன் (நவம்பரில் நடந்ததே அந்த சர்ஜிகல் ஸ்டிரைக்). ராணுவத்தில் உள்ளவர்களின் தேசப்பற்றும், உயிரைப் பணயம் வைத்து நாட்டின் மானத்தைக் காப்பதும்... புல்லரிக்கவைத்தது. (ஹிஸ்டரி சேனல், இதுதான் சாக்கு என்று நம் நாட்டு இராணுவ ரகசியங்களை அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கலாம். ஆனாலும் களத்தில் இருக்கும் இராணுவ வீரர்களின் கஷ்டம், சர்ஜிகல் ஸ்டிரைக்னா என்ன, எதிரிகளின் தாக்குதல் களங்களை எப்படி உளவு பார்க்கிறார்கள், எப்படி பாகிஸ்தான், அடர்ந்த காடுகளுடைய தங்கள் எல்லையை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கிறார்கள், அதில் எதிர்பாராதவிதமா கண்ணிவெடியில் கால்வைத்து பெரிய காயம் பட்ட நம் இராணுவவீரரை எப்படி இந்தியாவிற்குள் கொண்டுவருகிறார்கள் என்றெல்லாம் காண்பித்தார்கள்.

    குடியரசு நாளில், நம் இராணுவ வீரர்களைப் போற்றுவோம். அவங்க இல்லைனா, தேசப் பாதுகாப்பே கேள்விக்குரியாகிவிடும். நம் பட்டொளி வீசிப் பறக்கும் தேசக்கொடிக்கு வந்தனம் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  9. குடி அரசு தினத்தன்று எத்தனை பேர் ராணுவ போலீஸ் அணிவகுப்புகளைப் பார்க்கிறார்கள் க்ுடிஅரசு தினமொரு தேசிய விடுமுறைதினம் அவ்வள்வுதான் எப்படிக் கொண்டாட வேண்டும் என்கிறிர்க்சள் ஒரு நாள்விடுமுறையை தொலைக் காட்சிப் முன் இருந்து மகிழ்கிறார்களா இல்லையா

    பதிலளிநீக்கு
  10. நாம் குடியரசு தினத்தன்று கொண்டாடுவதை விட, கிரிக்கெட் மாட்சில் இந்தியா ஜெயிக்கும் அன்று குறிப்பாக பாகிஸ்தானை ஜெயிக்கும் பொழுது சிறப்பாக கொண்டாடுகிறோம்.
    நாம் இந்தியர்கள் என்னும் பெருமித உணர்வு வரும் பொழுதுதான் கொண்டாட முடியும்.
    ஊடகங்கள் தேச பக்தி பாடல், பட்டிமன்றம், சினிமா என்று ஒரு ரெடிமேட் நிகழ்ச்சி நிரல் வைத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  11. குடியரசு தினமா! ம்ம்ம்ம்! எல்லாத் தொல்லைக்காட்சிகளும் சினிமா நடிக, நடிகையரை வைத்து தேச பக்தி பொங்கப் பேச வைக்கும். பேட்டிகள் எடுக்கும். உண்மையான தேசத் தொண்டன் எங்கோ மூலையில் இருப்பான். என்ன தினம் ஒரு படம் போடறதுக்குப் பதிலா அன்னிக்குக் காலம்பர ஒரு படம், மத்தியானம் ஒரு படம், மாலை ஒரு படம்னு ஓட்டுவாங்க! அதான் குடியரசு தினச் சிறப்பு நிகழ்ச்சிகள். இதுக்காகப் பொதிகையைப் பார்த்தால் உருப்படியாக் கொஞ்சம் தேறும்.

    பதிலளிநீக்கு
  12. குடியரசு நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டு இது
    நம் நாடு என்று நினைத்தகாலம் உண்டு. இப்போது வம்புப் பேச்சுகளும் வார்த்தை மீறல்களும்
    மேடைப் பேச்சுகளும் தமிழகத்தைத் துண்டாடுகின்றன.
    அதே தான் இந்தியா முழுவதும்.
    உலகத்துக்காக நடத்தப் பெறும் காட்சிகளுக்குக் கொடுக்கும் பணத்தை எல்லைக் காவலர்களுக்கு அர்ப்பணித்தால்
    புண்ணியம் உண்டு. வாழ்க ஜவான்.வாழ்க கிசான்.

    பதிலளிநீக்கு
  13. /கும்பி கொதிக்குது!..குடல் கருகுது!/
    "கும்பி எரியுது குடல் கருகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா? " என்று இருந்ததாக ஞாபகம்

    பதிலளிநீக்கு
  14. ப்லருக்கும் குடியரசு தினம் சுதந்திர தினம் எதற்கு கொண்டாடுகிறோம் என்று கூட தெரியாமல் ஏன் அதை பற்றி உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை பொருத்தவரை அது ஒரு ஹாலிடே அவ்வளவுதான் மக்கள் அனைவரையும் கட்சி வேறுபாடின்றி ஒன்று சேர்த்து ஒரு பெரிய நிகழ்வுகளை நடத்த வேண்டும் உதாரணமாக கொடியேற்றிவிட்டு பல விளையாட்டு நிகழ்வுகளை நடத்தலாம் அல்லது ராணுவ வீரர்களை அழைத்து அவர்களுக்கு பொதுமக்கள் நேரடியாக நன்றி செலுத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு பண்ணலாம் இப்பியடி நிறைய சொல்லாம் விடுமுறை விட்டு டிவிக்கு முன்னால் உடகார வைப்பதற்கு பதிலாக அன்று விடுமுறை விடாமல் அனைவரையும் வேளைக்கு வர சொல்லி ஸ்கூலுக்கு வர சொல்லி நகரம் முழுவதையும் சுத்தம் செய்ய வைக்கலாம் குளம் போன்றவைகளை தூர்வார வைக்கலாம் மத வழிபாட்டு தளங்களை மத வேருபாடுன்றி வந்து சுத்தம் செய்யலாம்... இப்படி பல நல்ல செயல்களை அன்ருமட்டுமாவது நாட்டுக்க்காக செய்யலாம் அப்போதுதான் நம் நாடு என்று உணர்வு வரும் அப்படியில்லாவிட்டால் பேஸ்புக்கில் மட்டும் தேசபகதியை பேசிக்க் கொண்டு சினிமாக பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!