வெள்ளி, 26 ஜனவரி, 2018

வெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... கார் கால மேகங்கள்


V. குமார்.   
கேபியின் ஆஸ்தான இசை அமைப்பாளர்.  அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.  அதற்கு முன்னால் கேபியின் மேடை நாடகங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தவர்.  1934 இல் பிறந்து 1996 இல் மறைந்தார்.

1975 இல் வெளியான 'ஏழைக்கும் காலம் வரும்' படத்தில் எஸ் பி பி பாடிய ஒரு இனிய பாடல்.  V. குமார் மெலடி கிங் என்று அறியப்பட்டவர், அழைக்கப்பட்டவர்.  எஸ் பி பியை வைத்து ஏகப்பட்ட மெலடிகளைக் கொடுத்தவர்.  இதுவும் அதில் ஒன்று.  

தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் திறந்தவெளித் திரையரங்கில்  மாதம் ஒரு படம் போடுவார்கள்.  அங்கு பார்த்த படம் இது.   அந்த நினைவுகளே மிக இனிமை!  கதை நினைவில் இல்லை.  பாடல் மனதில் நின்று செல்லில் இன்றும் தங்கிவிட்டது!

வாலியின் வரிகள்.  இதே படத்தில் கே ஜெ யேசுதாஸ் குரலில் மோகம் என்னும் ராகம் பாடும் என்னும் ஒரு சுமாரான பாடலும் உண்டு..  ஒரே பாடலுக்கு இரண்டு ஜோடிகள் வாயசைக்கும் பாடல் அது!  எஸ் பி பி ஜலதோஷம் பிடித்தது போலப்  பாடுவார் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.


தென்றலின் ஓசை பாட்டாக 
தென்னையில் ஆடும் கீற்றாக 
என் மனம் ஆடும் தானாக 
கீதமே நாதமே ஓடிவா 







நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

56 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் காலை ராகம்!! ஸ்ரீராம் அண்ட் துரை செல்வராஜு சகோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கீதாக்கா வாவ்! இன்னிக்கு நீங்க முந்திக்கிட்டீங்களா...காலை வணக்கம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. //ஜலதோஷம் பிடித்தது பொழப்பு பாடுவார் // ??????????

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்
    வணக்கம்...

    குடியரசு தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. துரை செல்வராஜு அண்ணா!!! இன்று எபி கதவைத் தட்டவில்லையா!! என்ன ஆச்சு!!? பணியிலிருந்து இன்னும் வரலையோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு மணிக்கே தட்டினேன்...
      அது என்னவோ திறக்கவில்லை..

      நான் இப்போது வேலையில் தான் இருக்கிறேன்..

      அங்கே ஏழரை மணி ஆகும்போது
      இங்கே வேலை முடிந்து வெளியேறும் நேரம்..

      நீக்கு
  6. அடடே... இனிய காலை வணக்கம் கீதா அக்கா...

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம், இன்னிக்குப் பிள்ளையாரைக் கொஞ்சம் கவனிக்கணும். அதனால் மத்தியானமா வரேன். இன்னிக்கு ஶ்ரீராம் பதிவு வெளியிட்டது எங்க நேரப்படி கொஞ்சம் தாமதம்! :)

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ யார்.

    பதிலளிநீக்கு
  10. ஜலதோஷம் பிடித்தது போன்று பாடுவார்னு வந்துருக்கணுமோ கீதாக்கா...பாவம் ஸ்ரீராம் போனா போறது டைப்போ!!! சரிதானே ஸ்ரீராம்?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..

    பதிலளிநீக்கு
  12. திருத்தி விட்டேன் கீதா அக்கா. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. இந்தப் பாடல் கேட்டு ரொம்ப நாளாச்சு ஸ்ரீராம்...

    குமார் என்றெல்லாம் அப்போ தெரியாது...அப்புறம் ஏதேச்சையாக மாமனார் வீட்டில் இருந்தப்ப எப்போதோ சன்டிவியில் ஏவி ரமணன் நடத்திய... முதன் முதலில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வி குமார் பாடல்கள் என்று ஒரு எபிஸோட் போச்சு அப்போதான் தெரியும்...

    ஆனா வேறு பாடல்கள் எதுவும் நினைவில்லை. ஸ்ரீராம் உங்களுக்குப் பாராட்டுகள். பாடல்களின் இசையமைப்பாளரையும் நினைவு வைச்சுருக்கீங்களே!! அதுக்கு..

    இனிய குடியரது தின வாழ்த்துகள் அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வாங்கோ துரை செல்வராஜு அண்ணா!! ஹப்பா வந்துட்டீங்க!!!! இல்லைனா கேள்விகள் பறந்திருக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. நான் தாமதமாக எல்லாம் வெளியிடவில்லை. எப்பவும் போல இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு ஷெடியூல் செய்துவைத்த பதிவுதான்!

    பதிலளிநீக்கு
  16. குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.. இனிய இசையை நினைவு படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இது ஏதோ முட்டிச் சாத்தான் வேலையா இருக்கும் போல..

    எதுக்கும் spam ல ஒருதரம் பாருங்க...

    என்னோட ரெண்டு கருத்துரையைக் காணவில்லை..

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் காலை வணக்கம் மற்றும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  20. துரை செல்வராஜூ ஸார்.. ஸ்பாமில் ஒளிந்திருந்த அந்த இரண்டையும் காதைப் பிடித்த்துத் திருகி இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டேன்!

    பதிலளிநீக்கு
  21. முட்டிச் சாத்தான்// ஹா ஹா ஹா ஹா

    //துரை செல்வராஜூ ஸார்.. ஸ்பாமில் ஒளிந்திருந்த அந்த இரண்டையும் காதைப் பிடித்த்துத் திருகி இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டேன்!//

    ஹா ஹா ஹா ஹா ஹா.....ரெண்டுபேரோட கமென்டும் பார்த்து சிரித்துவிட்டேன்....இப்படியே நாம் எல்லோரும் சிரித்துக் கொண்டே மகிழ்வாக சின்னக் குழந்தைகளாகவே எப்போதும் இருந்திடனும் நு மனதில் பிரார்த்தனைகள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    பாடல் எந்தக் காலத்திலோ கேட்டமாதிரி நினைவு.

    பதிலளிநீக்கு
  23. குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    பாடல் எந்தக் காலத்திலோ கேட்டமாதிரி நினைவு. (ரெண்டு தடவை எழுதினா SPAMல போகாதுன்னுதான்)

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    அருமையான இசையுடன் கூடிய அருமையான பாடல். இந்த படம் பார்த்ததில்லை, ஆனால் பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். தங்கள் பதிவின் மூலம் மறுபடி ஒரு தடவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.

    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. முன்பு கேட்ட ஞாபகம் வந்தது நல்ல ரசனையோடு பாடி எஸ்.பி.பி. சிறிய சம்பளம் வாங்கியது ஆனால் இன்று ???
    குடியரசு தின நல்வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  26. முதலில் அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.

    ப்ரமாதமாகச் சென்றுகொண்டிருக்கும் குடியரசு தின நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தவருட ஸ்பெஷலாக ஆசியான் (ASEAN Group) குழுமத்தின் 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்கள் நமது குடியரசு தினத்தன்று. பிரதமர் மோதியின் வெளியுறவுக்கொள்கை வெற்றிகளில் மிகவும் சிறப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் முதல் குடியரசு அணிவகுப்பு மரியாதை. ராணுவத்தின் பேராயுதங்கள், ப்ரம்மோஸ், ஆகாஷ், T-90 என பளபளப்பும் வாகனங்களில் கம்பீரமாய் சல்யூட் செய்யும் இந்தியாவின் பெருமைக்குரிய ராணுவ வீரர்கள். புல்லரிக்கவைத்த காலைப்பொழுது. தொடர்கிறது.

    கொஞ்சம் ப்ரேக் கொடுக்க, எபி-பக்கம் எட்டிப்பார்த்தேன். காசுகொஞ்சமாக வாங்கிக்கொண்டு அபாரமாகப் பாடியுள்ள எஸ்.பி.பி.-அதாவது அந்தக்காலக் குரல். முன்பே கேட்டுள்ளேன். இப்போதும் கேட்க நேர்ந்தது நன்றாக இருக்கிறது.

    படிகளிலேயே ஆடிக்கொண்டிருந்துவிட்டு, பாடகன் மயங்கிச்சரிந்தபின் பாலோடு போய் நின்ற பத்தினி யாரோ ?

    பதிலளிநீக்கு
  27. *பளபளக்கும் எனப் படிக்கவும்

    பதிலளிநீக்கு
  28. அன்பின் ஸ்ரீராம்..
    தஞ்சையம்பதியையும் தங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டமைக்கு மகிழ்ச்சி..
    மனமார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  29. // வீட்டு வசதி வாரியாக /

    வீட்டு வசதி வாரிய

    //தென்றலின் ஓசை பாட்டாக
    தென்னையில் ஆடும் கீற்றாக
    என் மனம் ஆடும் தானாக
    கீதமே நாதமே ஓடிவா .. //

    இந்த நாலு வரிகளில் கூட பாருங்கள்.. ஒன்றுமேயில்லை. கத்துக்குட்டி கூட இப்படி நாலு வரிகளைக் கோர்த்து விடுவான். இதற்கு வாலியா?..

    ஆனால் இசை தான் உங்களை மயக்குகிறது. அதனால் பாடல் வரிகள் உங்கள் மனதில் தங்கி விடுகிறது.

    எதுக்குச் சொல்ல வர்றேன்னா....

    //பிடித்தது போலப் பாடுவார் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.//

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லாதீர்கள். எனக்கு பிடித்த இசையமைப்பு என்றானும் தனித்துக் குறிப்பிடலாம்.

    தமிழ் சினிமாவில் இசையமைப்பால் தான் பாடல்கள் பெரும்பாலும் நிற்கின்றன.

    திரைப்பாடலாசிரியர்களில் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு வரிக்கு வரி மேயமுடியாது. கண்ணதாசனைத் தவிர.

    பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கு இவர்கள் இசை அமைக்கவில்லையா?

    அவை மெட்டுக்காக எழுதிய பாடல்கள் அல்லவே?.. (இவர்கள் கொடுத்த மெட்டுக்கு பாரதியார் பாடல் எழுதவில்லை என்ற அர்த்தத்தில்)

    பாடல்களுக்கு ஏற்ற இசையமைப்பு தானே?

    பாரதியாரின் ஒற்றைப் பாட்டைக் கூட வெவ்வேறு ராகங்களில் இசையமைத்த உதாரணங்களும் உண்டு தானே?

    ஆக, பாடலுக்கு ஏற்ற இசையமைப்பு என்றால் திரைக்கவிஞனும் சுதந்திரமாக தன் பாடலை எழுதுவான்.

    அப்படி ஆனால் தான் நீங்கள் இந்தப் படத்தில் இந்தப் பாடலை ரசித்தேன் என்று சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு
  30. பாட்டு முடியும்வரை அந்தக்கா:) படியில படுற பாடு இருக்கே அப்பப்ப்பாஆஆஆ:)) ஹா ஹா ஹா ஏதோ தனக்காகத்தான் பாடுறார் என தானே முடிவெடுத்துத் துள்ளுறது :) என் செக்:) ஐப்போல:))... ஹையோ ஒரு ஃபுளோல வந்திட்டுது:) படிச்சிட்டு மறந்திடுங்கோ:).. ஸ்ரீராம் படிக்கும்போதே மறந்திடுவார் என்பதால கவலை இல்லை:))..

    அருமையான பாட்டு.. முன்பு கேட்டதா நினைவு இல்லை... ஆனா பாட்டுக்குக் குரலுக்கும், நடிப்பவருக்கும் பொருந்தாதமாதிரி இருக்குது... தனியே கண்களை மூடி ரசிக்கும்போது சூப்பரோ சூப்பர்...

    பதிலளிநீக்கு
  31. ஒருகோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்...
    உறவாடும் உள்ளம்.. இசைப் பண்ண்ண்ண்ணோடு:)..

    இதைத்தான் எச்சந்தோசம் வந்தாலும், இதுவும் கடந்து போகும் என அமைதியாக இருக்கோணும் ஓவரா துள்ளப்படாது எனச் சொல்கிறார்கள்:))..
    --------------------------------------------------------
    ///இதே படத்தில் கே ஜெ யேசுதாஸ் குரலில் மோகம் என்னும் ராகம் பாடும் என்னும் ஒரு சுமாரான பாடலும் உண்டு.///

    ஆவ்வ்வ்வ்வ்வ் எனக்கும் மிக பிடிச்ச பாடல்.. பலதடவை காதில் கேட்டிருக்கிறேன்.. ஜேசுதாஸ் அங்கிளை ரொம்பப் பிடிக்கும் எனக்கு.. கண்ணதாசன் அங்கிளைப்போல:)...

    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. இனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  33. எங்களுக்கு இனிதான் குடியரசு தினம். மனதில்
    ர்ழும் நினைவுகளோடு உங்கள் அனைவருக்கும்
    வாழ்த்துகள்.
    ஜீவி சார் சொல்லி இருப்பது போல்
    இசைக்கு தான் நன்றி.
    சினிமாப் பாடல்களை நான்கு
    ஐந்து வரிகள் எடுத்துக் கோர்த்தால் இன்னோன்று உருவாவதைப் போல
    இந்தப் பாடலும் அமைந்திருக்கிறது.
    குமார் அவர்கள் இசை என்றும் மறவாமல்
    நெஞ்சில் குடி இருக்கும். எடுத்து இங்கே பதிந்த உங்களுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.

    அந்தப் படிகள் நங்கை நடிகை பெயர் சுபா. ஸ்ரீகாந்த் படங்களில்
    கதா நாயகியாக வந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  34. நன்றி நண்பர் கில்லர்ஜி. குறைந்த சம்பளம்? எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  35. வாங்க ஏகாந்தன் ஸார்... குடியரசு தின விழா இருக்கட்டும்... இன்றைய பரபரப்பான மேட்ச் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  36. நன்றி துரை செல்வராஜூ ஸார்.. லாங் டியூ!

    பதிலளிநீக்கு
  37. வாங்க ஜீவி ஸார்..

    வீட்டு வசதி வாரியம் மாற்றி விட்டேன்! நன்றி. நீங்கள் சொல்வது சரி. இந்தப் பாடலில் டியூனுக்குத்தான் முதலிடம். இரண்டாவது குரலுக்கு. வரிகள் வெகு சாதாரணம்தான். எனினும் விழவேண்டிய இடத்தில் அழகாக வந்திருக்கின்றன. கண்ணதாசன் மட்டுமல்ல, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் வைரமுத்து பாடல்களில் நிறைய நல்ல வரிகளை என்னால் சொல்ல முடியும். வாலி இந்தப் பாடலில் சாதாரணமாக இருக்கலாம். அவரிடம் நிறைய நிறைய நல்ல பாடல் வரிகள் இருக்கின்றன.

    இளநீரைச் சுமந்துவரும் தென்னை மரம் அல்ல
    மழைமேகம் குடைபிடிக்கும் குளிர்நிலவும் அல்ல
    இங்குமங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
    இதற்கு மேலே இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல..

    உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்த வரிகள்!

    பதிலளிநீக்கு
  38. வாங்க அதிரா... படிகளில் ஆடும் நங்கையை நீங்கள் ரசித்ததை ரசித்தேன். அது நடிகை சுபா. காட்சிகளுடன் இல்லாமல் பாடல் மட்டும் கேட்பது எப்போதுமே இனிமை, சுகம்தான். என்ன செய்வது? வெள்ளி வீடியோ ஆச்சே!

    // இசைப் பண்ண்ண்ண்ணோடு//

    எஸ் பி பி பாடும் வகையிலேயே ஏகப்பட்ட "ண்" களைச் சேர்ந்திருப்பதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  39. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  40. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  41. நன்றி வல்லிம்மா.. சுபா நடிகையை நினைவு வைத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  42. ஶ்ரீராம்.... சிவாஜி... வாலியைப் பார்க்கும்போதெல்லாம், "அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ" அத்துடன் நீங்கள் எழுதியிருக்கும் வரிகளைப் பாடி வரவேற்பாராம். வாலியின் கற்பனை அழகு. அவர் இசையமைப்பாளர்களால் விரும்பப்பட்டதற்குக் காரணம், இசை வடிவம் மாறும்போது சட் சட் என்று மாற்று வார்த்தைகள் அவரிடமிருந்து விழும்.

    பதிலளிநீக்கு
  43. ஶ்ரீராம்.... சிவாஜி... வாலியைப் பார்க்கும்போதெல்லாம், "அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ" அத்துடன் நீங்கள் எழுதியிருக்கும் வரிகளைப் பாடி வரவேற்பாராம். வாலியின் கற்பனை அழகு. அவர் இசையமைப்பாளர்களால் விரும்பப்பட்டதற்குக் காரணம், இசை வடிவம் மாறும்போது சட் சட் என்று மாற்று வார்த்தைகள் அவரிடமிருந்து விழும்... உங்களுக்கு நல்ல ரசனை

    பதிலளிநீக்கு
  44. நெல்லை... வாலி பற்றிய புத்தகம் படித்து நான் இன்னும் .அதிகமாக அவர் ரசிகனாகிப் போனேன். அந்தப் புத்தகம் படித்ததும் அதுபற்றி ஒரு பகிர்வு எங்கள் பிளாக்கில் எழுதினேனா என்று நினைவில்லை. சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது. யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்!

    பதிலளிநீக்கு
  45. ///சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது.////
    Grrrrrrrrrrrrrr 🦅grrrrrrrrrrrrrrrrrr

    பதிலளிநீக்கு
  46. ஸ்ரீராம்... உங்களின் இந்த வரிகள் என் மனதிலேயே வார இறுதியில் ஓடிக்கொண்டிருந்தது.

    "சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது. "

    கண்ணதாசன் வரிகள், அனேகமாக எல்லாப் பாடல்களிலும் மிக அருமையாக அமைந்திருக்கும். வாலியின் ஆரம்பப் பாடல்களும், இறைவன்/பக்தி சம்பந்தமான பாடல்களும் கண்ணதாசன் வரிகளுக்கு இணையாக அமைந்திருக்கும்.

    கண்ணதாசனின் கடைசி திரைப்படப்பாடலான 'தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்' (கண்ணே கலைமானே அல்ல கடைசிப் பாடல்). இருவரையும் கம்பேர் செய்தால், வாலி நிறைய பாடல்கள் கொஞ்சம் 'மலின ரசனை' உடையதாக இருக்கும். அது மக்களின் தரம் குறைந்ததாலா அல்லது ரசனை மாறியதாலா என்று தெரியவில்லை.

    வாலி, எழுதும்போது, பாடல் கருத்துடையதாக வந்தாலும், யாருக்கு எழுதறாரோ அவருக்கு கொஞ்சம் ஜால்ரா சத்தம்போல் எழுதுவார். (ஆழ்வார்பேட்டை ஆண்டவா, ராஜா, கல்லை மட்டும் கண்டால்-ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் போன்று). ஆனாலும் பாடல் பொருத்தமாகத்தான் இருக்கும். கண்ணதாசன், 'சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி', 'விஸ்வனாதன் வேலை வேண்டும்' என்ற பாடலைத் தவிர மற்றபடி வேறு எதுவும் அப்படி எழுதினமாதிரித் தெரியவில்லை.

    வாலியும் கண்ணதாசனும் தமிழகத்தின் கொடை. ஆனால் கண்ணதாசன் பல படிகள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார், வாலியைவிட.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!