ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை!



     "பனி படர்ந்த மலையின் மேலே..." என்று ஒரு டி எம் எஸ் பாடல் வரும்.  படம் நினைவில்லை.  ஹர்பஜன் மந்திரிலிருந்து கிளம்பி மேலே கஞ்சு லாமா மியூசியம் நோக்கிச் செல்லும்போது மழையையும் காற்றையும் எதிர்த்துப் பயணம்.  ஆளரவமற்ற மார்க்கெட் சாலைகளை பார்த்தால் எப்படி இருக்கும் என்று நிலைமை புரியும்.  இந்நிலையில் தொடர்ந்து படம் எடுத்து வந்தால் எப்படி இருக்கும்.  இப்படித்தான் இருக்கும்.  த்ரில்லான பயணம்.


தூரத்தில் தெரியும் வாகனங்கள் சரி...  பக்கத்தில் தெரியும் அந்த பாறாங்கல் கீழே விழுகிறதா, அங்கேயே இருக்கிறதா?  இல்லை சறுக்கி விழுந்த இடத்திலிருந்து மேலே வர முயற்சிக்கிறதோ!.....



பிரம்மாண்ட யானைகளின் முதுகு மாதிரி இல்லை?!




பாதையா?  பள்ளமா?



மார்க்கெட்!  ஆளையே காணோம்!



புகை வெள்ளத்துக்கு நடுவே கிளர்ந்தெழும் குன்றின் உச்சி!



மழை நின்ற சிறு இடைவெளியில் பளிச்!


மீண்டும் மெல்ல ஒரு தொடக்கம்...



பயமுறுத்தும் காட்சி...



கொஞ்சம் தெளிவான சாலையில் ஒரு பயணம்...



வளைந்து செல்லும் சாலையில் மீண்டும் மீண்டும் 



....சில காட்சிகள்.....




மலையில் மறைந்துள்ள மாமத யானை!


48 கருத்துகள்:

  1. பதிவை இனிமேல் தான் பார்க்கணும்/படிக்கணும். இந்த வாரமும் சிக்கிமா? இன்னுமா கீழே இறங்கலை?????

    பதிலளிநீக்கு
  2. இனிய ஞாயிறு காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா. அப்புறம் தான் இன்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது தளத்திற்கு மாம்பழச் சாமியார் வந்திருக்கின்றார்..

      காண வாருங்கள்..

      நீக்கு
  3. ஹை கீதாக்கா காலை வணக்கம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  6. பனி படர்ந்த மலையின் மேலே, படுத்திருந்தேன் சிலையைப் போலே! படம் ரத்தத் திலகம். நம்ம ஜிவாஜி, சாவித்திரி தான் ஜோடி! சீனப்போரை வைச்சு எடுத்த படம்! :)))))

    பதிலளிநீக்கு
  7. மேகக் கூட்டத்துக்குள் யானை...
    கொஞ்சம் நடுக்கமாகத் தான் இருக்கிறது..

    அந்த யானைப்பாகன் எங்கே போனான்?...

    பதிலளிநீக்கு
  8. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் வரச்சே இங்கே யாருமே இல்லை! அதெப்படி துரை முதலில் வந்தார்? ஜதி! மாபெரும் ஜதி! நான் இதோ போய்க் காவிரியில் குதிக்கிறேன். (தண்ணீர் இல்லாத இடமாப் பார்த்து) :)

    பதிலளிநீக்கு
  9. நடுராத்திரி நம்ம சிவாஜி ஐயா அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன்...

    காலையில் இங்கே பார்த்தால் ஜி.....!...

    பதிலளிநீக்கு
  10. யப்பா! இம்மாதிரி மழையிலும் பனித் துகள் சீவல் சீவலாகவும் ஜவ்வரிசி போலவும். ஆலங்கட்டி போலவும் பெய்கையில் திருக்கயிலையில் செய்த பரிக்ரமா நினைவில் வருது! காற்று! யப்பாடியோவ்! நினைத்தாலே உடலில் ஊசி போலக் குத்தும்!

    பதிலளிநீக்கு
  11. //இந்த வாரமும் சிக்கிமா? இன்னுமா கீழே இறங்கலை?//

    அதெப்படி? எவ்வளவு படம் எடுத்திருக்கோம்....? அதெல்லாம் தூக்கி மலையிலிருந்து கீழே போட்டு விட முடியுமா கீதா அக்கா?!!!

    பதிலளிநீக்கு
  12. //பனி படர்ந்த மலையின் மேலே, படுத்திருந்தேன் சிலையைப் போலே! படம் ரத்தத் திலகம். நம்ம ஜிவாஜி, சாவித்திரி தான் ஜோடி! சீனப்போரை வைச்சு எடுத்த படம்! :))))) //

    அட, நம்ம கீதாக்காவா இது? சினிமா விவரம் கொடுக்கறது?

    பதிலளிநீக்கு
  13. //அந்த யானைப்பாகன் எங்கே போனான்?... //

    ஹா.... ஹா.... ஹா... ஸார்.. சுவாரஸ்யமான கற்பனை!

    //நடுராத்திரி நம்ம சிவாஜி ஐயா அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன்...//

    ஏனோ? என்ன காரணம்? உங்கள் கைவலி எப்படி இருக்கிறது துரை செல்வராஜூ ஸார்?

    பதிலளிநீக்கு
  14. தண்ணீரில் குதித்தால் எப்படியாவது தப்பிக்கலாம்...

    வெறும் தரையில் குதித்தால் என்னாகும்!..

    பதிலளிநீக்கு
  15. //நான் வரச்சே இங்கே யாருமே இல்லை! அதெப்படி துரை முதலில் வந்தார்? //

    கீதா அக்கா... அந்த தக்கினிக்கி அவருக்கு மட்டுமே தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  16. //தண்ணீரில் குதித்தால் எப்படியாவது தப்பிக்கலாம்...

    வெறும் தரையில் குதித்தால் என்னாகும்!..
    //

    மேகத்தில் மிதக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  17. //திருக்கயிலையில் செய்த பரிக்ரமா நினைவில் வருது! காற்று! யப்பாடியோவ்! நினைத்தாலே உடலில் ஊசி போலக் குத்தும்! //

    கொடுத்து வைத்த ஆள் நீங்க அக்கா.. எனக்கெல்லாம் அங்கே போகக் கொடுத்து வைக்குமா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  18. கைவலி மிகவும் குறைந்துள்ளது..
    அதற்கென தனியாக பதிவு உள்ளது..

    சிவாஜி ஐயாவை நினைத்த காரணத்தை அப்புறம் சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு
  19. //சிவாஜி ஐயாவை நினைத்த காரணத்தை அப்புறம் சொல்கிறேன்.. //

    ஓகே ஓகே..

    //கைவலி மிகவும் குறைந்துள்ளது..
    அதற்கென தனியாக பதிவு உள்ளது..//

    அப்போ லீவு என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
  20. ஓ... கீதா சாம்பசிவம் அவர்கள் திருக்கயிலாய தரிசனம் செய்தவர்களா!...

    சிவஸ்ரீ அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்...

    சிவாய சிவ..

    பதிலளிநீக்கு
  21. //அட, நம்ம கீதாக்காவா இது? சினிமா விவரம் கொடுக்கறது?// அந்த சோகக்கதையை ஏன் கேட்கறீங்க? ஏதோ தண்டனை மாதிரி இந்தப் படத்தையும் "உயர்ந்த மனிதன்" படத்தையும் என்னைத் திரும்பத் திரும்ப அழ, அழப் பார்க்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லணும்! :)))))

    பதிலளிநீக்கு
  22. திரு துரை செல்வராஜு சகோதரரே, நம்ம கோமதி அரசு கூட திருக்கயிலை யாத்திரை செய்தவரே! நாங்க போயிட்டு வந்தப்புறம் ஒரு வருஷத்துக்கெல்லாம் போனாங்கனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. காட்சிகளுக்கேற்ப வர்ணனை அபாரம்...!!

    பதிலளிநீக்கு
  24. //அந்த சோகக்கதையை ஏன் கேட்கறீங்க? ஏதோ தண்டனை மாதிரி இந்தப் படத்தையும் "உயர்ந்த மனிதன்" படத்தையும் என்னைத் திரும்பத் திரும்ப அழ, அழப் பார்க்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லணும்! :))))) //

    ஹா... ஹா... ஹா... அடப்பாவமே...

    பதிலளிநீக்கு
  25. //காட்சிகளுக்கேற்ப வர்ணனை அபாரம்...!! //

    நன்றி பாரதி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    மழையோடு மலைகளின் போர்வையாக இருக்கும் பனியோடும் காட்சிகள் கண்ணுக்கு விருந்து. பயணம் கொஞ்சம் திரில்லாகத்தான் இருந்திருக்கும். படங்கள் அருமை. தொடருங்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. @ Geetha Sambasivam said...

    >>> நம்ம கோமதி அரசு கூட திருக்கயிலை யாத்திரை செய்தவரே!..<<<

    மேலதிக தகவல் அறிந்து மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  28. கீதா சாம்பசிவம் காவிரியில் தண்ணீர் இருக்கும் இடமும் இருக்கிறதா எங்கு வேண்டுமானாலும் குதிக்கலாமே

    பதிலளிநீக்கு
  29. சிக்கிமில் சிக்கிய காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  30. இந்த வாரப் படங்கள் நல்லா இருக்கு. ஆரம்பப் பத்தி படித்தவுடன், நல்லவேளை, பயணக் குறிப்புடன் வருதே என்று ஆர்வத்துடன் படித்தால், 4 வரியோடு நிறுத்திக்கிட்டீங்க. பேசாம பயணக் குறிப்பை உங்கள்ட கொடுத்திருந்தாங்கன்னா, நீங்க நல்லா ரசனையோட எழுதியிருப்பீங்க.

    படங்களைப் பார்த்தால், அந்த பனிக் காற்றின் ஊடாக பயணிப்பது போலிருந்தது.

    பதிலளிநீக்கு
  31. @கீதா சாம்பசிவம் மேடம் - இதோ போய்க் காவிரியில் குதிக்கிறேன். (தண்ணீர் இல்லாத இடமாப் பார்த்து) :) - காவிரில தண்ணீர் இருக்கா? எங்கும் மணல் என்றுதானே கேள்விப்பட்டேன். தண்ணீல குதிச்சாலும் அடி படாது. பார்த்து மணலில் குதித்துவிடப்போகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  32. //கீதா சாம்பசிவம் காவிரியில் தண்ணீர் இருக்கும் இடமும் இருக்கிறதா எங்கு வேண்டுமானாலும் குதிக்கலாமே.// ஜிஎம்பி ஐயா, திருச்சிக் காவிரினா சொன்னேன்? காவிரியில் குதிக்கிறதாத் தானே சொல்லி இருக்கேன்! :))))

    பதிலளிநீக்கு
  33. //கீதா சாம்பசிவம் மேடம் - இதோ போய்க் காவிரியில் குதிக்கிறேன். (தண்ணீர் இல்லாத இடமாப் பார்த்து) :) - காவிரில தண்ணீர் இருக்கா? எங்கும் மணல் என்றுதானே கேள்விப்பட்டேன். தண்ணீல குதிச்சாலும் அடி படாது. பார்த்து மணலில் குதித்துவிடப்போகிறீர்கள்.// செக் டேம் இருக்கே! அதிலே தண்ணீர் இருக்குமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தக் கர்நாடகா மக்கள் தண்ணீர் விடாததால் எவ்வளவு கஷ்டமா இருக்கு பாருங்க! காவிரியிலே குதிக்கக் கூட முடியலை! ( நொ.சா. நொ.சா.) அது என்னோட ம.சா. இப்படித் தான் கூவும்!

    பதிலளிநீக்கு
  34. படங்களைப் பார்த்தால், அந்த பனிக் காற்றின் ஊடாக பயணிப்பது போலிருந்தது.

    -- நெல்லைத் தமிழன்

    படங்களைப் பார்த்தால் பயணத்தின் ஊடே பனிக்காற்று நுழைந்தாற் போல இருக்கிறது.

    -- நான்



    பதிலளிநீக்கு
  35. படங்கள் அத்தனையும அழகு! மேகம் சூழ் மலைகள், புகை போல ஒன்றுமே தெரியாமல் ...த்ரில்லான பிரயாண அனுபவமாக இருந்திருக்கும் தான்!! குளிரும் குத்தியிருக்குமே!! இதில் மழை வேறு என்றால் ஹப்பா...!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. கீதாக்கா காவிரிலயா குதிக்கப் போறீங்க! நோ!!! பேசாம அதிரடிக்கிட்ட சொல்லி டிக்கெட் போட்டுத் தரச் சொல்லுங்க...அங்க போய் தேம்ஸ்ல லைஃப்ஜாக்கெட் போட்டுக் குதிங்கக்கா!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  37. படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன. அது மேகமா பனியா? அல்லது இரண்டுமோ? இது போன்ற இடங்களுக்கு எல்லாம் செல்ல முடியுமா தெரியவில்லை. உங்கள் படங்களின் மூலம் கண்டு களிக்க முடிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  38. ஏதோ தேவலோகக் காட்சி மாதிரி இருக்கிறது ஸ்ரீராம். நானே வருவேன்...அங்கும் இங்கும்..பாட நல்ல இடம்.
    எவ்வளவு அழகான் மேகங்கள்.
    தவறிப் போய் பாதையில் இறங்கிட்டால் கரணம் ,மரணம்
    கதையாகும் போல இருக்கே.
    ஊரும் சில்ல்,படங்களும் சில்லா. ஹாஹா.

    பதிலளிநீக்கு
  39. பனி படர்ந்த மலைச்சிகரம் பார்க்க அழகு.
    என்னைப் பற்றி கீதா தகவல் தெரிவித்தமைக்கு நன்றி.
    பனி மூடிய சிகரம் (கைலாயம்) பார்க்க பார்க்க பரவசம்.

    துரை செல்வராஜூ அவர்களுக்கு கைவலியா? (எல் போ வலியா?)

    பதிலளிநீக்கு
  40. எழில் கொஞ்சிடும் காட்சிகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!