வியாழன், 11 ஜனவரி, 2018

உங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும்அட்வைஸ்கள் பற்றி ஒரு பதிவு போட்டு மதுரைத்தமிழன் ஒரு தொடர்பதிவு தொடங்கி வைத்திருக்கிறார்.   

தொடர்பதிவு அழைப்புக்கு நன்றி.

அட்வைஸ் -  வாங்கி கொள்வதில் தயக்கமில்லை.  கொடுப்பதில் உண்டு!  உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மருத்துவரிடமிருந்து வாங்கிய அட்வைஸ்களையே சிறிது காலமே கடைப்பிடித்தவன் நான்!!
அம்மா என்றால் அன்பு ; அப்பா என்றால் அறிவு என்று கவிஞர் வாலி சொல்லி இருக்கிறார்.  ஆனால் எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்து அப்பா எதுவும் ஆலோசனை சொன்னதில்லை.  சில சமயம் அடி பின்னி எடுத்து இருக்கிறார்.  அதிலிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டிருந்திருக்கிறேன் -  தப்பு செய்துவிட்டால் சில மணிநேரம் அவர் கையில் அகப்படும் தூரத்தில் இருக்கக் கூடாது என்று!  

அவருக்கு அவர் வேலையுண்டு, எழுத்துண்டு...  மார்க் ஷீட்டில்  கையெழுத்து வாங்கும்போது மட்டும் அட்வைஸ் செய்து மிதமான அளவில் அடி கொடுப்பார்.  பின்னர் அந்தச் சிரமத்தையும் அவருக்கு நான் கொடுத்ததில்லை!
பின்னாட்களில் என் பணியில் சில சங்கடங்கள் வந்து நான் மனச்சோர்வு அடைந்த சில சந்தர்ப்பங்களில் அவருடைய அனுபவங்களைக் கூறி ஆற்றுப்படுத்தி இருக்கிறார். (இந்த ஆற்றுப்படுத்துதல் என்கிற வார்த்தையை நெடுநாட்களாய் நான் உபயோகிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.  அப்பாடி...  இப்போதுதான் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது)  மனம் ஒரு சமநிலைக்கு வந்து விட்டால் அந்தப் பிரச்சனைகளை எளிதில் கையாளும் பக்குவம் வந்துவிட்டதாக நினைத்து அந்தப் பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறேன்.  (இல்லாவிட்டால் மட்டும் அவை ஓரமாகப் போய்விடுமா, என்ன!)

சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு பெரும் வியாதி.   கவனமின்மை அல்லது மறதி.  எடுத்ததை எடுத்த இடத்தில வைக்காமல் எங்காவது வைத்துவிட்டு அவஸ்தைப்படுவேன்.   என் அம்மா சிறு வயதில் என்னிடம் சொன்னது "ஒவ்வொரு பொருளுக்கும் இதுதான் இடம் என்று தீர்மானம் செய்து கொள்.  எப்போது எடுத்தாலும் அதை அந்த இடத்தில வைக்கும் பழக்கத்தைக் கொண்டு வா".  

இன்றளவும் முடிந்தவரை இதைக் கையாண்டு ஓரளவு சரியாய் இருக்கிறதாய் நினைத்துக் கொள்கிறேன்.  உதாரணத்துக்கு என் இடது பேண்ட் பாக்கெட்டில் காசு இருந்தால் அது என்னுடையது இல்லை.  நண்பர்கள் ஏதாவது ஒரு (பொதுக்) காரணத்துக்காக, அல்லது வேறு காரணத்துக்காகக் கொடுத்து வைத்திருக்கும் பணம்.  

"ஸார்...  அன்னிக்கி இவங்க கிட்ட தரச் சொல்லி 500 ரூபாய் தந்தேன் இல்லையா..."

"அப்படியா?  எப்போ கொடுத்தீங்க..."  என்னடா இது நினைவுக்கு வரமாட்டேன் என்கிறதே என்று இடது பாக்கெட்டில் கைவிட்டால் 500 ரூபாய் அங்கு இருக்கும்!

( "ஸ்ரீராம் நான் அன்று உங்களிடம் -------- ரூபாய் தந்திருக்கேன்" போன்ற கமெண்ட்களை கண்டிப்பாகத் தவிர்க்கவும்!!!) 

அப்படியும் நிறைய பொருள்களைத் தொலைத்து விட்டு தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்!

அப்பா எனக்கு வரவு செலவுக் கணக்கு எழுதக் கற்றுக் கொடுத்தார்.  ( "அப்போ அப்பா ஒன்றுமே சொல்லித் தரவில்லை என்பது பொய்" என்று ஒரு குரல் கேட்கிறது)  பணியில் சேர்ந்த நாளிலிருந்து 2002 வரை அதை நான் கடைப்பிடித்ததில் சிலபல நன்மைகள் ஏற்பட்டதுதான்.  அம்மா மறைவுக்குப் பின் ஏனோ நான் அதைத் தொடரவில்லை.

மற்றபடி நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் நல்ல குணங்களை சுவீகரித்துக் கொள்கிறேன்.  அல்லது சுவீகரித்துக் கொள்ள முயற்சிக்கிறேன். 

அப்பாவின் கோபம், அண்ணனின் கோபம் பார்த்து நான் கோபப்படக் கூடாது என்று தீர்மானம் செய்தேன்.  பிறர் சொல்லில் என் மனதைப் பாதிக்கும்  வார்த்தைகளை / விஷயங்களை நான் பேசக்கூடாது என்று தீர்மானம் செய்வேன்.  இப்படி சில அனுபவங்கள்.
சில சினிமாப் பாடல்கள் உத்வேகமாக இருந்திருக்கின்றன.  பிரச்னையில் இருக்கும்போது சில பாடல்வரிகள் காதில் விழுந்து ஆற்றுப்படுத்தி இருக்கின்றன (மறுபடி!).   "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்..  இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்"   "என்றும் ஒன்றே செய்யுங்கள்...  ஒன்றும் நன்றே செய்யுங்கள்...  நன்றும் இன்றே செய்யுங்கள்"  "ஆபத்தைச் சந்திக்கத் துணிந்துவிடு...  அழுவதை மட்டும் விட்டுவிடு".  "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்" (இன்னும் நான் மாபெரும் சபைகளில் நடக்கவில்லை!!)இன்றைய தினமலரிலிருந்து....நம் எண்ணங்கள் நல்லதாக இருப்பின் "மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும்" என்பதில் நம்பிக்கை உண்டு.  (அதிராவின் பதிவில் அந்த முதல் படம் நினைவுக்கு வருகிறது)

இதைத் தொடர யாரை அழைக்கலாம் என்று புரியவில்லை.  நெல்லைத்தமிழன் விரைவில் ஒரு பதிவு எழுதிக் கொடுத்தால் பிரசுரிக்கலாம்.  யார் யார் இதுவரை அழைக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.  எனினும் 


ஆகியோரைத் தொடர அன்புடன் அழைக்கிறேன்.

படங்கள்  :  நன்றியுடன் இணையத்திலிருந்து...


தமிழ்மணம்.

105 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 2. ஹை...தொடர்...இனியா காலை வணக்கம்.. ஸ்ரீராம், துரை சகோ,

  ஆஜர்..

  கீதா

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஸ்ரீராம்..

  நல்லதொரு பதிவை வழங்கியிருக்கின்றீர்கள்..

  பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன..

  பதிலளிநீக்கு
 4. //நல்லதொரு பதிவை வழங்கியிருக்கின்றீர்கள்..//

  நன்றி துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 5. நண்பர்கள் யாரேனும் இந்தப் பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்து விடவும்!

  பதிலளிநீக்கு
 6. ஹிஹிஹி, என்னை இரண்டாம் முறையா நீங்க அழைச்சிருக்கீங்க. ஏற்கெனவே சேவலைக் காத்த சேயிழை அழைப்பு விடுத்திருக்காங்க! அதுக்கே திணறிட்டு இருக்கேன் என்ன எழுதறதுனு! இப்போ நீங்க! பார்க்கலாம், பார்க்கலாம், எதுவானாலும் 16 தேதிக்கூ அப்புறமாத் தான்! :)

  பதிலளிநீக்கு
 7. சில இடங்களில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதிவு! எங்க அப்பாவும் எதுக்கெடுத்தாலும் அடி தான் பின்னி எடுப்பார். அம்மாவும் ஆலோசனைகள் வழங்கினதில்லை! பார்க்கலாம் என்ன எழுதறதுனு!

  க்ளிக்கோ க்ளிக்குனு க்ளிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கிட்டே இருந்தால் அப்புறமாவும் அரை மனசாப் போகுது! :(

  பதிலளிநீக்கு
 8. வாங்க கீதா அக்கா.. கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. சிரிக்க சரி, ஜிந்திக்க வைத்த இடங்கள் எது கீதா அக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் சிரித்துவிட்டு, பிறகு ஏன் சிரித்தோம் என்று ஜிந்தித்திருப்பாங்களோ?

   நீக்கு
 10. ஶ்ரீராம், முக்கியமா அப்பா, அண்ணாக்களின் கோபம் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த்து! ம்ஹூம், என்னளவில் நான் அப்படி எல்லாம் சிந்திக்காமல் "கோபம் எங்கள் பிறப்புரிமை!" என்பது போல் நடந்து கொண்டேனோ என சிந்திக்க வைத்தது. ஆனாலும் என்னுடைய கோபம் என்பது சமூக அநீதிகளுக்கானது. அதில் எங்க வீட்டு அநீதிகளும் சேர்ந்ததே! :)))))) ஆணுக்கு ஒரு மாதிரி, பெண்ணுக்கு ஒரு மாதிரி என்பது அதில் முக்கியம்! :)))) இப்போ நினைச்சால் சிரிப்பு வருது!

  பதிலளிநீக்கு
 11. காலை வேளையில் மலை போல் வந்த துன்பங்கள் யாவும் பனி போல் நீங்கும் என்னும் பாஸிட்டிவ் செய்தி உற்சாகமூட்டுகிறது. நன்றி👍😊

  பதிலளிநீக்கு
 12. அட்வைஸ் ஆஹா. நிறைய வாங்கி இருக்கிறேன். இன்னமும் தான். அப்போ அடிப்படையிலியே என் கிட்ட தவறு இருக்கலாம்..போனாப் போயிட்டுப் போகிறது.
  யோசித்துப் பதிவு அனுப்பறேன். இனிய காலை வணக்கம் மா.
  என்னை அழைத்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அனுபவத்தைப் பற்றி எழுதும்போது வாலியின் வரிகளே நினைவுக்கு வந்திருக்கிறதே... எதேச்சையா?

  பதிலளிநீக்கு
 14. ஸ்ரீராம் நல்ல கருத்துகள் பொதிந்த பதிவு..சூப்பர்!! உங்கள் அனுபவங்கள் ஹிஹிஹிஹி எனக்கும் உண்டு...இதோ வரேன் ஒவ்வொன்றாய்...

  //எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்து அப்பா எதுவும் ஆலோசனை சொன்னதில்லை. // யெஸ் அப்பாவுக்கு நாங்கதான் ஆலோசனை சொல்லணும்..இப்போதுவரை அப்படியே ஆகிவிட்டார்...

  // சில சமயம் அடி பின்னி எடுத்து இருக்கிறார். அதிலிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டிருந்திருக்கிறேன்// இதில் அப்பாவுக்குப் பதில் அம்மா என்று எனக்கு. ரொம்பவே பின்னி எடுத்திருக்கார். என் சிறுவயதில் எனக்கு அம்மா என்றாலே வெறுப்பு என்ற ஒரு காலக்கட்டம் இருந்தது. நான் செயத தவறுக்காக இல்லை...ஏனென்றால் எனக்கு நான் செய்த தவறுகள் எதுவும் குடும்பத்தாரால் சுட்டிக் காட்டப்பட்டதில்லை. கூட்டுக் குடும்பம்...நான் வாங்கிய விறகு அடிகள் எல்லாமே நான் என் கஸின்ஸ் போல மார்க், ரேங்க் வாங்கவில்லை என்று....நான் குடும்பத்தில் அப்பா சைடும் சரி அம்மா சைடும் சரி ஒரெ விதமாகப்பழகுவேன். வேற்றுமை கிடையாது ஆனால் அம்மா ஒரு காலக்கட்டம் வரை என்னை அப்பா குடும்பத்துடன் பழகினால் அம்மாவும் அவரது அம்மாவும் சேர்ந்து அடி பின்னி எடுப்பார்கள்....அதிலிருந்து நான் கற்ற பாடங்கள் ஒரு வேளை நான் கல்யாணம் என்று ஒன்று செய்து கொண்டால் (அப்போ என் வீட்டுச் சூழல் கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்ற கான்ச்கெப்ட்டையே வெறுக்கச் செய்திருந்தது...) குழந்தை பிறந்தால் நான் இப்படி இருக்கக் கூடாது என்று மிகப் பெரிய பாடம் கிடைத்தது. அதன் பின் நான் வளர்ந்து அம்மாவைப் புரிந்து கொண்டு அம்மாவும் தான் செய்தது தவறு என்று உணர்ந்த 3 வது மாதம் காலமாகிவிட்டார். அதிலிருந்து கற்ற பாடம் நாம் வாழும் காலம் குறைவு எனவே கூடியவரை எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் எதிர்பார்ப்பின்றி..

  கீதா

  பதிலளிநீக்கு
 15. மறதி!! ஹா ஹா ஹா ஸ்ரீராம் மீ டூ....உங்களுக்கு அம்மா சொன்னதை அப்பா என்னுடன் இங்கு இருந்த வரை சொல்லியிருக்கிறார். அவர்தான் எனக்குப் பல சமயங்களில் வலது கை!! ரொம்பக் கரெக்ட்டாக நான் எங்கு வைத்திருக்கிறேன் என்பதை நினைவு கொண்டு எடுத்துத் தருவார்...தேடியும் தருவார்...அவர் சொல்லிச் சொல்லி நானும் முயற்சி செய்து இப்போது ஓரளவு பரவாயில்லை...

  நானும் இப்படித் தொலைத்த பொருட்கள் பல...ஹிஹிஹி..

  ஆற்றுப்படுத்த// தெரிந்து கொண்டேன் இவ்வார்த்தையை...நன்றி ஸ்ரீராம்..

  கீதா

  பதிலளிநீக்கு
 16. எண்ணங்கள்!! யெஸ் அட்டிட்யூட் இஸ் எவ்ரிதிங்க்...எண்ணங்கள் நல்லதாய் இருந்தால் எல்லாமே நல்லதே!! எண்ணங்கள் வலிமை மிக்கது!! சூப்பர்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 17. மற்றபடி நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் நல்ல குணங்களை சுவீகரித்துக் கொள்கிறேன். அல்லது சுவீகரித்துக் கொள்ள முயற்சிக்கிறேன். //

  ஹைஃபைவ்! ஸ்ரீராம்...

  அப்பாவின் கோபம், அண்ணனின் கோபம் பார்த்து நான் கோபப்படக் கூடாது என்று தீர்மானம் செய்தேன். பிறர் சொல்லில் என் மனதைப் பாதிக்கும் வார்த்தைகளை / விஷயங்களை நான் பேசக்கூடாது என்று தீர்மானம் செய்வேன். இப்படி சில அனுபவங்கள்.//

  யெஸ் யெஸ் நானும் அப்படியே!!!...பட் அப்பாவுக்குப் பதில் அம்மா எனக்கு, அம்மாவின் அம்மா, அப்புறம் வேறு சில நெருங்கிய உறவினர்...

  கீதா

  பதிலளிநீக்கு
 18. நானும் வரவு செலவு கணக்கு எழுத்க் கொண்டிருந்தேன். இப்போது எழுதுவதில்லை...

  கீதா

  பதிலளிநீக்கு
 19. ஆற்றுப்படுத்துதல் என்றால், மணலை அள்ளி அள்ளி , ஆற்றைப் படுத்துதல், பிறகு அந்த நீரில்லா ஆற்று மணலில் படுத்து உறங்குதல் என்று நினைத்திருந்தேன்!

  பதிலளிநீக்கு
 20. கௌ அண்ணா உங்க ரெண்டு கமென்டுமே ஹா அஹ ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ

  ஸ்ரீராம் காவேரி/வைகை ஆற்று மணலில் படுத்துப் புரண்டு உறங்கியதில் கனவுல நிறைய பாடம் கற்றிருப்பாரா இருக்கும்!!! ஹா ஹா ஹா

  //முதலில் சிரித்துவிட்டு, பிறகு ஏன் சிரித்தோம் என்று ஜிந்தித்திருப்பாங்களோ?//

  கீதாக்கா நீங்களும் அப்படியா ..ஹாஹாஹா நான் தான் சில சமயம் அப்படினு நினைச்சிருந்தேன்....ஹிஹிஹீ

  கீதா

  பதிலளிநீக்கு
 21. ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஸ்ரீராமின் அட்வைஸ் போஸ்ட் வந்திட்டுதோஓஓ... ஹையோ இன்று பார்த்து என்னால கும்மி கோலாட்டம் போட முடியாமல் போகப்போகுதே... இருப்பினும் விட மாட்டேன்ன்ன்ன்:)...

  போஸ்ட் பார்த்து கெள அண்ணனுக்குப் பொறுக்குதில்லைப்போல அங்கின இங்கின ஜம்ப் பண்றார்... :)
  ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 22. தொடர் பதிவு. ஜமாய்த்துவிட்டீர்கள். நான் சரி என்று கூறினேன், இதுவரை எழுதவில்லை. கில்லர்ஜி என்ன செய்யப்போகிறாரோ?

  பதிலளிநீக்கு
 23. இன்னும் டமில்மனம்:) கண்ணில் தெரியேல்லைப்போல ஸ்ரீராமுக்கு... இந்தாங்கோ கச் இற்:))

  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1481935

  பதிலளிநீக்கு
 24. ///கேட்டால் கேளுங்கள் - மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும்///

  ஹா ஹா ஹா இதை ஜி எம் பி ஐயாவைப் படிக்கச் சொல்லோணும்:)).. சரி சரி அதெப்பூடி மலையை ஸ்ரீராம் பனியாக்கினார் எனப் படிச்சிட்டு வாறேன்ன்:))..

  பதிலளிநீக்கு
 25. //உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மருத்துவரிடமிருந்து வாங்கிய அட்வைஸ்களையே சிறிது காலமே கடைப்பிடித்தவன் நான்!!//

  ஹா ஹா ஹா பின்பு விட்டிட்டீங்களோ?:)

  ///ஆனால் எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்து அப்பா எதுவும் ஆலோசனை சொன்னதில்லை. ///
  டப்பு ஸ்ரீராம் டப்பூ:) அப்பா சொல்லியிருப்பார்.. அது ஆண்பிள்ளைகளுக்கு அட்வைஸ் ஆகத் தெரியாது ஏதோ கத்துறார் என்பதுபோல இருந்திருக்கும் அப்போ:)).. இப்போ நினைச்சுப் பாருங்கோ... ஓ வெரி சோரி உங்களுக்குத்தான் மறதி அதிகமெல்லோ.. மறந்திருப்பீங்க ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 26. அப்பா..
  மிய்யாவ் வந்தாச்சு...
  மிய்யாவ் வந்தாச்சு...

  இனிமே தான் கலகலப்பா இருக்கும்...

  ( வீட்டுக்குள்ள வேற வேலை இல்ல தானே.. ஏதாவது கதைச்சுக் கொண்டு இருங்கோள்..)

  பதிலளிநீக்கு
 27. அதிரா த ம லிங்க் கொடுத்ததுக்கு நன்றி...

  கீதா

  பதிலளிநீக்கு
 28. ///சில சமயம் அடி பின்னி எடுத்து இருக்கிறார். அதிலிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டிருந்திருக்கிறேன் - தப்பு செய்துவிட்டால் சில மணிநேரம் அவர் கையில் அகப்படும் தூரத்தில் இருக்கக் கூடாது என்று! ///

  ஹா ஹா ஹா யூப்பர் அட்வைஸ்ஸ்ஸ்:)) எனக்கொரு அண்ணா சொல்லித்தந்த அட்வைஸ்... உனக்கு நன்கு பிடிச்சிருக்கு ...அதில் தப்பில்லை என நீ நினைச்சா... அதைச் செய்திட்டு பின்பு அடி வாங்கு பறவாயில்லை என:)).. ஏனெனில் கேட்டு பெர்மிஷன் க்கு வெயிட் பண்ணினா விட மாட்டினமெல்லோ:)) ஹா ஹா ஹா இப்பூடிப் பல:))

  பதிலளிநீக்கு
 29. ///அவருக்கு அவர் வேலையுண்டு, எழுத்துண்டு... ///

  இப்போ நீங்க எப்பூடி?:)) ஹா ஹா ஹா :))..

  // (இல்லாவிட்டால் மட்டும் அவை ஓரமாகப் போய்விடுமா, என்ன!)///
  ஹா ஹா ஹா உண்மைதான்..

  // (இல்லாவிட்டால் மட்டும் அவை ஓரமாகப் போய்விடுமா, என்ன!)///
  இவர் இலை வகைகளே சாப்பிட மாட்டாரோ:))

  ////உதாரணத்துக்கு என் இடது பேண்ட் பாக்கெட்டில் காசு இருந்தால் அது என்னுடையது இல்லை. நண்பர்கள் ஏதாவது ஒரு (பொதுக்) காரணத்துக்காக, அல்லது வேறு காரணத்துக்காகக் கொடுத்து வைத்திருக்கும் பணம்.
  //
  ஹையோ என்னால முடியேல்லை ஜாமீஈஈஈஈஈ:)) இந்த வியாதிக்கு மருந்திருக்கோ தெரியேல்லையே:)) ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
 30. @ kg gouthaman :

  //..ஆற்றுப்படுத்துதல் என்றால், மணலை அள்ளி அள்ளி, ஆற்றைப் படுத்துதல், பிறகு அந்த நீரில்லா ஆற்று மணலில் படுத்து உறங்குதல் என்று நினைத்திருந்தேன்!//

  தோஷமில்லை!

  //..மணலை அள்ளி அள்ளி, ஆற்றைப் படுத்துதல்..// மிகச்சரியாகவே நினைத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 31. ///"ஸ்ரீராம் நான் அன்று உங்களிடம் -------- ரூபாய் தந்திருக்கேன்" போன்ற கமெண்ட்களை கண்டிப்பாகத் தவிர்க்கவும்!!!) ///

  ஹா ஹா ஹா இப்போ நாம் கதையும் குறிப்புக்களும் எல்லோ அனுப்பிட்டு இருக்கிறோம்ம்:)) நல்லவேளை மெயில் வசதி இருப்பது:).. பிளீஸ் பாஸ்வேர்ட்டை எங்காவது எழுதி வச்சிட்டு எனக்கொரு மெசேஜ் போடுங்கோ :)) இல்லை எனில் எங்கு எழுதினீங்க என்பதையும் மறந்திடப்போறீங்க:))

  ///அப்படியும் நிறைய பொருள்களைத் தொலைத்து விட்டு தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்!///

  வாழ்வில் தேடல் உள்ளவரைதான் சுவை இருக்கும் என ஸ்நேகா பாடியிருக்கிறாவெல்லோ:))..

  ///(இன்னும் நான் மாபெரும் சபைகளில் நடக்கவில்லை!!)///

  ஹா ஹா ஹா உங்க தன்னடக்கம் பார்த்து நான் சிலிர்க்கிறேன்ன்:))

  பதிலளிநீக்கு
 32. ஆவ்வ்வ்வ்வ் இம்முறை 4 ஃபீமேல் லாப் ரட்ஸ் ஆஆஆஆஆஆஆ?:))

  நல்ல நகைச்சுவையோடு எழுதி முடிச்சிருக்கிறீங்க அருமை... [முடிவில இப்பூடி எழுதோணுமாம்:)] ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம் உண்மையில் ரசிச்சுப் படிச்சேன்ன்ன்..

  அதுசரி கடேசிப்படம்:)) எங்கினமோ இடிக்குதே:)).. பூஸாருக்கு அட்வைஸ் நடக்குதோ?:) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 33. அருமை. Bracesஇல் வரும் குறிப்புகள் (sarcasm) மிக அருமை

  பதிலளிநீக்கு
 34. ஆற்றுப்படுத்துதல் வார்த்தையை இரசித்தேன் ஸ்ரீராம்ஜி

  பதிலளிநீக்கு
 35. உங்க அப்பா மாதிரிதான் எங்கப்பாவும். சின்ன தப்புக்கும் அடி பின்னிடுவார்.

  பதிலளிநீக்கு
 36. ஸ்ரீராம் உங்கள் அனுபவப்பாடங்களில் முதல் அனுபவம் மருத்துவ அனுபவம் நானும் அப்படித்தான். கூடியவரை மருத்த்வரிடம் செல்வதற்கே ரொம்பத் தயங்குவேன்...யோசிப்பேன்...வேறு வழியில்லாமல் போனாலும் அந்த அறிவுரையைக் கேட்பது ஓரிரு நாட்கள் மிஞ்சிப் போனால் ஒரு வாரம்.

  நானும் அடி வாங்கியதுண்டு. ஆனால் ரொம்பச் சொல்லும் படி எல்லாம் இல்லை. நானும் ஒவ்வொருவரிடமிருந்தும் என்னைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து தான் நிறைய கற்கிறேன். கூடியவரை யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. சிறிய வயதில் கோபம் வந்ததுண்டு அப்புறம் வெகு அபூர்வம். அப்படியே வந்தாலும் அமைதியாகிவிடுவது வழக்கமாக உள்ளது. எல்லோரையும் அப்படியே ஏற்றுக் கொள்ள முயற்சி...

  நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ரொம்ப நாளாகிவிட்டது பதிவுகள் வாசித்து.

  பதிலளிநீக்கு
 37. ஸ்ரீராம் ப்ராக்கெட்டுகளில் இருந்தவை புன்னகைக்க வைத்தன்...சிரிக்கவும் வைத்தன்!!!!

  அதான் இங்கு எல்லோரது வலை மேடைகளிலும் உலா வந்து கொண்டிருக்கின்றீர்களே ஸ்ரீராம்....அவையடக்கம்.!!!

  இந்தக் கமென்டை அப்போவே போட்டு காக்கா உஷ் ஆகி ஹோ எங்க போச்சு கமென்டுனு தேடி இப்போ மீண்டும் போடுறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 38. ஸ்ரீராம் ஏஞ்சல் கீதாக்காவை கூப்பிட்டாச்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 39. அனுபவம் என்றதும் அம்மா, அப்பாதான் முதலில் மனதில் வருகிறார்கள். குழந்தைகளின் அனுபவ உலகம் அங்கேதானே ஆரம்பிக்கிறது. ஸ்ரீராம் - அப்பா என்றதும் அடியும், கண்டிப்பும் உங்களது உடனடி நினைவில் . கீதாவுக்கு அம்மா என்றதும் டிட்டோ! என் கதை கொஞ்சம் வித்தியாசம்தான் இந்த விஷயத்தில். அப்பா சிறுவயதிலிருந்தே கொஞ்சமாக புத்தி சொன்னவராக, அடிக்காதவராக இருந்திருக்கிறார். எப்போதாவது ஒரிருமுறை தலையில் குட்டியிருக்கிறாரோ! புத்திமதி கொஞ்சம், பொதுவிஷயங்கள், அரட்டை அதிகம். அம்மா கொஞ்சம் ஜாஸ்தியாகத் திட்டுவார் - நாங்களும் அவ்வபோது அம்மாவின் பிராணனை வாங்கியவாறு இருந்ததால்!

  பதிலளிநீக்கு
 40. காலைப் பின்னூட்டம் காணாமல் போயிட்டது. வெளியிட்டுவிடுங்கள் ஸ்ரீராம்.

  எங்க அப்பா, வரவு செலவுக் கணக்கு ரொம்ப ஸ்டிரிக்டா எழுதுவார். வாரம் ஒரு முறை பாக்கி உள்ள பணத்தையும் எண்ணிப்பார்ப்பார். இது அவர் கிட்டத்தட்ட நாங்கள் வேலைக்குப் போகும்வரையோ அல்லது அதற்குப் பிறகுமோ இருந்தது. கணக்கு எழுதும்போது நமக்கு எவ்வளவு செலவாகிறது என்று சரியாத் தெரியும். எதுல பணம் வேஸ்ட் பண்ணறோம்னு தெரியும். முக்கியமா, காசு தொலையாம இருக்கும். என் ஹஸ்பண்டுக்கு இதில் நம்பிக்கை இல்லாததால், பிறகு நானும் கண்டுக்கலை. ஆனா கல்யாணம் ஆகி பல வருடங்கள் கணக்கு எழுதிக்கொண்டிருந்தேன் (இங்கதான் அட்வைஸ் சமாச்சாரம் வருது. எங்க அப்பா என்னை, எம்.எஸ்.ஸி ஹாஸ்டலில் இருந்தபோது, கணக்கு மெயின்டெயின் செய் என்று சொல்லித்தான் பணம் தருவார். நாமதான் ஒழுங்கான விஷயத்துக்குச் செலவு செய்தால் கணக்கு எழுதுவதில் என்ன சங்கடம் வரப்போகிறது. ஹோட்டலுக்கும், சினிமாவுக்கும் செலவு செய்தால் எப்படி கணக்கு காண்பிக்கமுடியும்? இடையில் ஒரு தடவை 'கணக்கு நோட்டு கொண்டுவா' என்றதும், அங்க வச்சுட்டு வந்துட்டேன் என்று கதைவிட்டேன். இரண்டு வருட எம்.எஸ்.ஸி படிப்பு முடித்தபின்புதான் என் அப்பா ஒரு நாள், கொண்டு வா உன் கணக்கு நோட்டை என்று கேட்டார். வேற என்ன செய்யறது... அங்க வச்சேன், இங்க வச்சேன், தொலைஞ்சு போச்சு என்றேன். 14,000 ரூபாயும் ஸ்வாஹாவா என்று கேட்டதுடன், அப்புறம் ஒண்ணும் சொல்லலை. அப்புறம் நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும், அதுவும் துபாய் வந்தபோது, ஸ்டிரிக்டா நானாவே கணக்கு எழுத ஆரம்பித்தேன். அப்போல்லாம், அட... சர்வ சாதாரணமா 25,000 ரூபாயை (93ல்) பைல வச்சுக்கிட்டுப் போறோமே என்று பெருமிதமாக நினைத்தேன். நம்ம ஊர்ல 500 ரூபாய் பைல வச்சிருந்தாலே சட்டைப் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டு பஸ்ஸில் போவேன்)

  "பணியில் சில சங்கடங்கள் வந்து" - நானும் இதில்தான் என் அப்பாவை மிஸ் செய்கிறேன். அவர்கிட்ட எல்லா சப்ஜெக்டும் பேசி அவரது ஆலோசனையைக் கேட்கலாம்.

  "அதிராவின் பதிவில் அந்த முதல் படம்" - ஆமாம். அதை நினைத்துத்தான் (எண்ணம் அழகானால்), அவங்க போடற முளைப்பயிறு, ரோல்ஸ் போன்றவற்றையெல்லாம், 'நல்ல மனசோடத்தான் செய்முறை' போட்டிருக்காங்க என்று நம்பி படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 41. கவனமின்மை அல்லது மறதி. ஊரில் தொண்ணுத்தி ஒன்பது சதவிகிதம் பேருக்கு இருக்கு ,
  நானும் என் மூக்குக் கண்ணாடியை வைத்து விட்டு ஒரு வாரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 42. என் அப்பா என்னுடன் நண்பன் மாதிரியே பழகி இருந்தார்

  பதிலளிநீக்கு
 43. சின்ன சின்ன மறதிகள் வயது ஆகிக் கொண்டிருக்கிறது என்பதின் அறிகுறி AAADD என்பார்கள்

  பதிலளிநீக்கு
 44. /////துரை செல்வராஜூJanuary 11, 2018 at 11:48 AM
  அப்பா..
  மிய்யாவ் வந்தாச்சு...
  மிய்யாவ் வந்தாச்சு...

  இனிமே தான் கலகலப்பா இருக்கும்...

  ( வீட்டுக்குள்ள வேற வேலை இல்ல தானே.. ஏதாவது கதைச்சுக் கொண்டு இருங்கோள்..)////

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... இந்தக் கொமெண்ட் என் ஐ க்கு தெரியவே இல்லையே:)... ஒளிச்சு வச்டு இப்ப்போ வெளியிட்டிருக்கினம்:)... அதனால இண்டைக்கு துரை அண்ணன் தப்பிட்டார்ர்ர்ர்:))) புறொம் மீ:)..

  பதிலளிநீக்கு
 45. நல்ல பகிர்வு....

  அனுபவங்களின் அணிவகுப்பு....

  பதிலளிநீக்கு
 46. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 47. மிகவும் அழகான சுய அலசல் ..உங்க அப்பா ஸ்ட்ரிக்ட்டா :) ஒருவேளை நானா ஆண்பிள்ளையாக இருந்திருந்தால் எனக்கும் விழுந்திருக்கும் .எங்கப்பா பேசியே அட்வைஸா கொடுத்தே எங்களை மிரட்டி வச்சிடுவார் :) ஒரு பார்வையில் நாங்க பெட்டிப்பாம்பா சுருண்டுடுவோம் :) ஊருக்கு முந்தி போகும்போது எனக்கும் கணவருக்கும் அட்வைஸா பொழிவார் ..எதுக்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்கன்னு ஆனா அவர் சொன்னதெல்லாம் உண்மைதானே லேட்டாவாவது புரிஞ்சுகொண்டோம் நாங்க பணத்தின் அருமையை அப்புறம் அப்பாவின் அருமையை அருகாமையை இன்னமும் நான் மிஸ் செய்கிறேன் :(

  பதிலளிநீக்கு
 48. எனக்கு மனசோர்வு வரும் போதெல்லாம் நேர தனியா pond பக்கம் நடக்க ஆரம்பிப்பேன் .வெதர் மாற்றத்தால்தான் எனக்கு எப்பவும் சோர்வு வரும் ..இப்போ அதுக்கு கூட அவசியமில்லை என் செல்லக்குட்டி மல்ட்டி கிட்ட போனா அவளே தலையை தடவி விடுவா .
  இப்பெல்லாம் சோர்வு வருதோ அப்போல்லாம் காக்கா குருவி கூட பேசிப்பாருங்க சோர்வு ஓடிப்போய்டும்
  அப்புறம் அது மறதின்னு சொல்லமுடியாதது ஸ்ரீராம் :) அந்த தூங்கபோகுமுன் குடிக்கிற விவாவை நிறுத்துங்க மூணு நாளைக்கு அப்புறம் பாருங்க மறதி வராது :)
  மாபெரும் சபையில் நீங்க இப்பவும் நடக்கிறீங்க ஸ்ரீராம் :) அதுமட்டுமில்லாம எங்களையும் கைபிடிச்சி கூட்டிட்டு போறதே நீங்கதான் :)

  பதிலளிநீக்கு
 49. /ஆபத்தைச் சந்திக்கத் துணிந்துவிடு... அழுவதை மட்டும் விட்டுவிடு". //
  அதேதான் எங்கப்பா அடிக்கடி சொல்வார் எது வந்தாலும் எதிர்கொள்ளணும் அழுறத்தாலோ முடங்குவதாலோ சுயபட்சாதாபத்தாலோ ஒன்றும் நடக்கப்போவதில்லை

  எனக்கு ஒரு ஐடியா தோணுது இனிமே மியாவ் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டா இந்த சுயபட்சாதாபம்,ஆற்றுப்படுத்தல் போன்ற வார்த்தைகளை இம்போசிஷனா எழுத வைக்கலாம் :)

  பதிலளிநீக்கு
 50. //தப்பு செய்துவிட்டால் சில மணிநேரம் அவர் கையில் அகப்படும் தூரத்தில் இருக்கக் கூடாது என்று! ///

  ஆஹா இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே இது தெரிந்திருந்தால் பூரிக்கட்டையால் அடி வாங்காமல் தப்பித்து இருக்கலாமே...

  தொடர் பதிவு எழுத சொன்னதன் நோக்கம் நிறைவேறிவிட்டது... நல்ல அட்வைஸ் நான் கற்றுக் கொண்டேன்

  பதிலளிநீக்கு
 51. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 52. குழந்தை பருவம் 16 வயதுக்கு கீழே உள்ள பருவம் எவ்வளவு கவனமுடன் கையாளப்படணும் என்பதை பல இடங்களில் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிந்துகொள்கின்றேன் ..சில வடுக்கள் அழியாமல் மனதோடு ஓட்டிடும் எத்தனை பெரிய இடத்துக்கு வந்தாலும் பழைய வடுக்கள் எட்டிப்பார்க்கும் . .பாவம் அப்படிப்பட்ட குழந்தைகள்/அப்படி கஷ்டப்பட்ட அனைவருக்கும் எனது கைகளை நீட்டி அன்பான hugs தரேன்

  பதிலளிநீக்கு
 53. ///( "ஸ்ரீராம் நான் அன்று உங்களிடம் -------- ரூபாய் தந்திருக்கேன்" போன்ற கமெண்ட்களை கண்டிப்பாகத் தவிர்க்கவும்!!!)///


  ஹீஹீ நான் தவிர்த்துவிட்டேன் ஆனால் அதிரா சொன்னங்க அவங்க நெக்லஸை என்னிடம் தர சொல்லி உங்களிடம் கொடுத்தார்களாமே அது என்னிடம் இன்னும் வந்து சேரவில்லை... கொஞ்சம் உங்கள்து பாக்கெட்டை செக் ப்ண்ணுறீங்களா ஒரு வேளை உங்களிடம் இல்லையென்றால் அதிரா என்னிடம் பொய்தான் சொல்லி இருக்கனும்

  பதிலளிநீக்கு
 54. இங்கே பலர் பேர் அப்பாவிடம் அடி வாங்கியதாக சொல்லி இருக்கீங்க அதனால்தான் என்னவோ நன்றாக இருக்கிறீர்கள் ஆனால் நான் என் அப்பாவிடம் அடி வாங்கியதே இல்லை (உண்மையாகத்தான்) அதனால்தான் என்னவோ இப்ப அடிவாங்கி கொண்டிருக்கிறேன். என் வீட்டில் அப்பாவிடம் அடி வாங்குவதற்கு என்றே பிறந்தவர்கள் எது இரண்டாவது அண்ணனும் மூன்றாவது அண்ணனும்தான்.. நான் கடைக்குட்டி நான் என் கல்லூரிப் பருவத்தில் என் அப்பாவை திட்டி இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 55. எனக்கு பிடித்தப்பாட்டு தோல்வி நிலையன நினைத்தால்

  பதிலளிநீக்கு
 56. படித்து ஆற்றுப்படுத்தி கொண்டேன் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 57. ////அதுமட்டுமில்லாம எங்களையும் கைபிடிச்சி கூட்டிட்டு போறதே நீங்கதான் :)///

  @ anju .... ஹலோ மிஸ்டர்:) நல்லா இருக்கிற குடும்பத்தில போய் எதுக்கு இப்போ குழப்பத்தை உண்டு பண்றீங்க கர்ர்ர்ர்ர்:)... இதைப் பார்த்தா கெள அண்ணனே பத்த வச்சிடுவார் :)... கர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 58. @truth...
  Sriram இன் வலது பொக்கட்டை செக் பண்ணுங்கொ என கரெக்ட்டாச் சொல்லோணும்:)

  பதிலளிநீக்கு
 59. வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!

  இன்று உங்கள் தொடரோ?.. அருமை! அற்புதமாக எழுதிவிட்டீர்களே!
  நானும் அஞ்சு சொன்னதையே //மிகவும் அழகான சுய அலசல் ..// சொல்லவந்தேன்.
  அழகாக உங்களைப் பற்றியும் உங்கள் அனுபவங்களையும்
  கோர்த்து மாலையாக்கிவிட்டீர்கள்.
  இன்று நான் வலைத்தளத்திற்கு வரவே மிகுந்த தாமதமாகிவிட்டது..
  வீட்டில் நெட் கனெக்‌ஷன் ஏதோ கோளாறாகிச் சற்றுமுன்னர்தான் மீளவந்துள்ளது.

  பதிலளிநீக்கு
 60. @நெல்லைத்தமிழன்
  ///"அதிராவின் பதிவில் அந்த முதல் படம்" - ஆமாம். அதை நினைத்துத்தான் (எண்ணம் அழகானால்), அவங்க போடற முளைப்பயிறு, ரோல்ஸ் போன்றவற்றையெல்லாம், 'நல்ல மனசோடத்தான் செய்முறை' போட்டிருக்காங்க என்று நம்பி படிக்கிறேன்////

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” வசனத்தை 2007 இலிருந்தே காவிக்கொண்டு திரிகிறேன்... அப்போ உங்களுக்கு வயசென்ன எனக் கிளவி எழுமே கர்ர்ர்ர்ர்:) அப்பவும் சுவீட் 16 தேன்ன்ன்ன்ன்ன்ன்ன் :)

  இப்போ கொமெண்ட் கண்ணில தெரியவே ஜாமமாகிடுதே கர்ர்ர்ர்ர்ர்:)...

  பதிலளிநீக்கு
 61. நான் சொல்வதற்கு ஒன்றும் புதிதாக இல்லை. எல்லோரும் கூறியதுதான்...

  ஆற்றுப்படுத்துகை நீங்கள் சந்தர்ப்பம் பார்த்து இட்டதை நினைத்துச் சிரித்தேன்.

  மறதி: என்னிடமும் ஒட்டிக்கொண்டிருக்கின்ற ஒரு பெரிய எதிரி! என்னை அடிக்கடி தோற்கடித்து விழிபிதுங்க வைக்கிறது.
  இது வியாதி அல்லவாம். எங்கள் மூளை அதிகப்படியான விடயங்களை உள்வாங்கும்போது முன்னே வந்த காதை பின்னே வந்த கொம்பு மறைச்ச கதையாகிப் போகிறது. புதிதாக வரும் விடயம் மனதை மூளையை ஈர்க்க முதல் வந்த விடயம் காணாமல் போகிறது...:))
  மனதை அடக்க அவ்வப்போது மூளைக்கு எங்கள் எண்ணங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கும் பயிற்சி செய்தால் சரியாகும் என்று அறிந்தேன். அமைதியாவதற்கு அடங்க வேணுமே மனசு..:)

  பதிலளிநீக்கு
 62. சில சினிமாப் பாடல்களின் வரிகள் என்னையும் ஆற்றுப்படுத்தியிருக்கின்றன. வீட்டில் தனியாக இருக்கும் நேரம் செல்லப் பூனைக்குட்டி மீராவும் தமிழ் வானொலியில் போகும் பாடல்களுமே எனக்குத் துணை! மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், தத்துவம் எல்லாமே கலந்து வரும். அதைக் கேட்பதிலும் ஒருவகை நிறைவு காண்பேன்.

  அருமையான பல விடயங்களை அழகாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள் சகோ!
  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 63. //ஹிஹிஹி, என்னை இரண்டாம் முறையா நீங்க அழைச்சிருக்கீங்க.//

  கீதா அக்கா.. அப்போ நீங்க ரெண்டு தரம் எழுதணுமாக்கும்.

  பதிலளிநீக்கு
 64. வாங்க பானுமதி மேடம்... காலையில் உங்களை உற்சாகப்படுத்தி விட்டோம் என்பது எங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது என்பது உங்களுக்கும் உற்சாகத்தைத் தரும் என்று எங்களுக்குப் புரிகிறது....!!

  பதிலளிநீக்கு
 65. வாங்க வல்லிம்மா... பதிவை உங்கள் தளத்திலேயே வெளியிட வேண்டும்! தொடர்பதிவு நினைவில்லையா?!!

  பதிலளிநீக்கு
 66. வாங்க நெல்லை... வாலியின் வரிகள் நினைவுக்கு வந்தது யதேச்சையே!

  பதிலளிநீக்கு
 67. கீதா... வாங்க... போட்டுத் தாக்கி விட்டீர்கள். ஆனால் இத்தனை கமெண்ட்ஸும் உள்நுழைய த்தனை நேரம் பிடித்திருக்கும் என்பது மனதில் வரும்போது பிரமிப்பாக இருக்கிறது. பொறுமைதான் நீங்கள்... ஹூம்... இவளவு பதில்களையும் எப்படித்தான் பதிவேற்றப் போகிறேனோ?

  வரவு செலவுக் கணக்கு, அப்பாவின் கோபம், நல்ல வழக்கங்கள் ஸ்வீகாரம்... நிறைய விஷயங்களில் நாம் எல்லோரும் கொஞ்சம் ஒரே மாதிரிதான் இருக்கிறோமோ?

  பதிலளிநீக்கு
 68. வாங்க கேஜிஜி... மெயில் படிப்பதில்லை.. இங்கேயே கேட்கிறேன்.. இதே தலைப்பில் நீங்களும் எழுதவேண்டும் என்பது மதுரைத்தமிழன், அதிரா, ஏஞ்சல் போன்றோரின் விருப்பம்!

  பதிலளிநீக்கு
 69. வாங்க அதிரா... கீதாவுக்கு சொன்ன அதே பிரமிப்புதான் உங்களுக்கும். கும்மி அடிக்க இதனை கமெண்ட்ஸும் போட எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதோ பிளாக்கர்? வைரவா.. இதெல்லாம் எப்போ சரியாகுமா? சீக்கிரம் சரியானா அதிராவிடம் சொல்லி ஒரு வைர நெக்லெஸ் போடச் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 70. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா... சீக்கிரம் நீங்களும் எழுதி விடுங்கள்!

  பதிலளிநீக்கு
 71. நன்றி அதிரா.... இதோ தமிழ்மணம் வாக்களித்துவிட்டு, லிங்க் இப்போதுதான் கொடுத்திருக்கிறேன்.

  அப்பாவிடம் அட்வைஸ் கேட்டுக்கொள்வதில் ஆண்பெண் பேதம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. வயசுதான்! பக்குவமில்லா மனசு!

  பதிலளிநீக்கு
 72. வாங்க துரை செல்வராஜூ ஸார்... ஆமாம் மியாவ் வந்தால்தான் களை கட்டுகிறது. இதை அவரிடமிருந்து கற்கவேண்டும். வரமாட்டேன் என்கிறதே!

  பதிலளிநீக்கு
 73. அதிரா...

  //இப்போ நீங்க எப்பூடி?:)

  ஆமாம்.. நானும் என் அப்பா போலத்தான் இந்த விஷயத்தில்!

  //இவர் இலை வகைகளே சாப்பிட மாட்டாரோ:))//

  அபுரி!

  பதிலளிநீக்கு
 74. அதிரா...

  //பிளீஸ் பாஸ்வேர்ட்டை எங்காவது எழுதி வச்சிட்டு எனக்கொரு மெசேஜ் போடுங்கோ :)) இல்லை எனில் எங்கு எழுதினீங்க என்பதையும் மறந்திடப்போறீங்க:))//

  அதையும் மறந்து, எழுதி வைத்திருந்ததும் காணாமல்போய் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்!

  //வாழ்வில் தேடல் உள்ளவரைதான் சுவை இருக்கும் என ஸ்நேகா பாடியிருக்கிறாவெல்லோ:))..//

  ஒவ்வொரு பூக்களுமே பாடலிலா?

  //அதுசரி கடேசிப்படம்:)) எங்கினமோ இடிக்குதே:)).. பூஸாருக்கு அட்வைஸ் நடக்குதோ?:) ஹா ஹா ஹா..//

  இல்லை அதிரா நானும் பூனையாகிப் போனேன்! கதையை முடித்து ஆசுவாசமாக நடந்து செல்கிறேன்!!

  பதிலளிநீக்கு
 75. வாங்க துளஸிஜி... என் மருத்துவம் பற்றி கீதாவுக்குத் தெரியும்! (மைக்ரேன்) பாராட்டுக்கும் அன்புக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 76. கீதா ரெங்கன். புன்னகைத்ததற்கு நன்றி. //ஸ்ரீராம் ஏஞ்சல் கீதாக்காவை கூப்பிட்டாச்!!! // பரவாயில்லை இரண்டு தரம் எழுதட்டும் கீதா அக்கா!

  பதிலளிநீக்கு
 77. வாங்க ஏகாந்தன் ஸார்... அட்வைஸ் என்றால் அப்பா அம்மா பாட்டி என்றுதான் யோசிக்கிறோம் இல்லை? பாஸ், நண்பர்கள் என்று ஏன் தோன்றவில்லை? என் மண்டையைத் தட்டிக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 78. வாங்க நெல்லை...

  //காலைப் பின்னூட்டம் காணாமல் போயிட்டது. வெளியிட்டுவிடுங்கள் ஸ்ரீராம்.//

  ஆச்சு! நான் செலவுக்கணக்கை நிறுத்தியது அம்மாவின் மரநாத் செலவுகளில் பங்கு பற்றி எழுதிய காரணமும் அப்புறம் வழக்கமான சோம்பேறித்தனமும்!

  பதிலளிநீக்கு
 79. வாங்க அபயா அருணா... நன்றி. மூக்கு கண்ணாடியை நூலில் கட்டி கழுத்திலேயே தொங்க விட்டுவிட வேண்டியதுதான்!

  பதிலளிநீக்கு
 80. வாங்க ஜி எம் பி ஸார்.. மறதி பற்றி நானே உங்கள் தளத்தில் என் பயத்தை வெளியிட்டிருந்தேனே...!

  பதிலளிநீக்கு
 81. வாங்க ஏஞ்சல்... மற்ற தளங்களில் நீங்கள் என்ன பின்னூட்டங்கள் விட்டீர்கள் என்று போய்ப்பார்க்க வேண்டிய தேவை இல்லாது அவற்றை இங்கேயே வாசிக்கக் கொடுத்தமைக்கு எங்கள் முதற்கண் நன்றி!

  //அந்த தூங்கபோகுமுன் குடிக்கிற விவாவை நிறுத்துங்க //

  ஆ... இதை நான் எப்போ சொன்னேன் என்று யோசிக்கிறேன்!

  //மாபெரும் சபையில் நீங்க இப்பவும் நடக்கிறீங்க ஸ்ரீராம் :) //

  இது சிற்சபை! பெரிய சபை கண்ணிலேயே படவில்லை ஏஞ்சல்! நன்றி உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும்!

  ///ஆபத்தைச் சந்திக்கத் துணிந்துவிடு... அழுவதை மட்டும் விட்டுவிடு". //// உண்மையில் அழுவதை மட்டும் நிறுத்தி விடு என்று வந்திருக்கவேண்டும்!

  //இந்த சுயபட்சாதாபம்,ஆற்றுப்படுத்தல் போன்ற வார்த்தைகளை இம்போசிஷனா எழுத வைக்கலாம் :)//

  ஹா... ஹா... ஹா... அதுவே சுய பச்சாதாபம்! ட் வராது!

  பதிலளிநீக்கு
 82. வாங்க மதுரைத்தமிழன்... தொடர்பதிவு போடச் சொன்னதன் காரணம் இதுதானா? ஹா..... ஹா... ஹா...!

  பதிலளிநீக்கு
 83. மதுரை... அதிரா நெக்லெஸ்ஸை உங்களிடம் தரும்போது தவறுதலாக என் வைரமோதிரமும் உங்களிடம் வந்து விட்டது. அதைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! தோல்வி நிலையென நினைத்தால் பாடல் அருமையான பாடல்.

  பதிலளிநீக்கு
 84. வாங்க அசோகன் குப்புசாமி ஸார். நன்றி.

  பதிலளிநீக்கு
 85. வாங்க அதிரா... குடும்பத்தில் குழப்பம் வராது. பாஸை எங்கள் பிளாக் பக்கம் நான் விடுவதே இல்லை! என் வலது பாக்கெட் காலி!

  பதிலளிநீக்கு
 86. வாங்க சகோதரி இளமதி...

  பாராட்டுகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 87. அழகான படங்களுடன் நல்ல பதிவு!

  எங்கள் வீட்டில் அப்பா அடிக்க மாட்டார்.ஆனால் கொடுமையான வார்த்தைகளால் கொல்லுவார். அட்வைஸும் அதிகம் கொடுக்க மாட்டார். அம்மாவும் அட்வைஸ் கொடுத்ததில்லை. அம்மாவைப் பார்த்து கற்றுக் கொண்டேன்.
  மூக்கு கண்ணாடியை எங்காவது வைத்துவிட்டு தேடாதவர்கள் உண்டா?

  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் பாடல் எனக்கும் மிகவும் பிடித்தது.இந்த பாடலைப்பற்றி என் அண்ணா," உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றுதான் சொல்லியிருக்கிறார், ஜெயிக்கலாம் என்று சொல்லவில்லை. போராடவே நம்மை நாம் அறிய வேண்டும்" என்பார்.

  பதிலளிநீக்கு
 88. Garrr for google:) சுயபச்சாதாபம் விஷயத்தில் என்னை ஏமாத்திடுச்சி

  பதிலளிநீக்கு
 89. //அந்த தூங்கபோகுமுன் குடிக்கிற விவாவை நிறுத்துங்க //

  ஆ... இதை நான் எப்போ சொன்னேன் என்று யோசிக்கிறேன்//! That was in 2016எனக்கு வந்த அதிகாலை கனவு பதிவு கமெண்ட்சில்

  பதிலளிநீக்கு
 90. அருமையான எண்ணங்கள்
  அட்வைஸ் வாங்கிறது எளிது
  வழங்கிறது கொஞ்சம் சிந்திக்க வேணும் தான்...

  தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 91. நான் இன்றுதான் உங்கள் பதிவையே பார்த்தேன். உள்ளது உள்ளபடி படிக்க பலவிஷயங்கள். அனுபவங்கள் எல்லாம் பலவிதம். என்னையும் எழுத கூப்பிட்டுள்ளீர்கள். என்னிடம் விஷயங்கள் இருக்குமா. சமையல்கூட விட்டுப் போயாச்சு. நானும் இருக்கேன் நண்டு வளையிலே என்று சொல்வார்களே. அம்மாதிரியா. என்ன அர்த்தம் இந்த வரிக்கு. அன்புடன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!