சனி, 13 ஜனவரி, 2018

உண்மையோ, பொய்யோ...







1)  ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு கல்விக் கட்டணம், சீருடை, நோட்டு புத்தகம், கல்விக் கூடங்களுக்கு நிதிஉதவி, ஆதரவற்றோருக்கு ஈமச்சடங்கு செய்ய உதவி, கோயில் திருப்பணிகளுக்கு உதவி, அநாதை ஆசிரமங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி, சேவை அமைப்புகள் தொய்வின்றி பணியைத் தொடர நிதிஉதவி, அன்னதானம் வழங்குதல் இப்படி பல்வேறு அறப்பணிகளை கடந்த 34 வருடங்களாக செய்து வருகிறார்.  இல்லையென்று சொல்ல மனமில்லாத கதிரேசன்.






2)  தரவற்றவர்களை, அவர்கள் இருக்கும்போதும் சரி, இறப்புக்குப் பிறகும் சரி, சமூகம் ரொம்பவே ஒதுக்கிவிடுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் சடலங்களை தகனம் செய்து சேவை செய்திருக்கிறார் நாகர்கோவில் இளைஞர் தவசிமணி (33). இதுமட்டுமின்றி, முதியோர், வழிதவறி வந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் ஒப்படைக்கும் பணியையும் செய்து வருகிறார்.  





3)  பொருளாதார பின்னணி இல்லை; உயர் கல்வியை தொடர முடியவில்லை என்று ஏங்கி நிற்பவர்களுக்காகவே இயங்கி வருகிறது புதுச்சேரி அருகேயுள்ள சுவாமி விவேகானந்தர் ஊரக சமுதாயக் கல்லூரி.  ரிசர்வ் வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு இக்கல்லூரியை தொடங்கி 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சுப்பிரமணியன்.





4)  தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கிடைக்கும் அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பணியாற்றி வருபவர். தன் சொந்தப் பணத்தை செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.  ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்.





5)  உண்மையோ, பொய்யோ...  கேட்க (படிக்க) நன்றாய் இருக்கிறது.  யார் வேண்டுமானாலும் பின்பற்றலாமே....




6)  வறுமையை தனது உழைப்பால் வென்று கல்வியில் சாதித்த சின்னப்பன் இப்போது, விளிம்பு நிலையிலிருக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்காக இயன்றவரை உதவி வருகிறார். இதற்காகவே தனது ஊதியத் தில் ஐந்தில் ஒரு பகுதியை எடுத்து வைக்கும் இவர் கடந்த சில ஆண்டுகளில், 275 மாணவ - மாணவியரின் கல்விக்கு உதவியிருக்கிறார்.  தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வியியல் துறை தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன்







தமிழ்மணம்.

31 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம், துரை சகோ...ஏஞ்சல், அனைவருக்கும்..

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் அனைவருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் ஏஞ்சல் பதிவுக்கும் உடனே கமென்ட் போயிருச்சு...

    எபி, துரை சகோ தளங்களில் தான் போக மறுக்குது...ஹா ஹா ஹா ரகசியம் என்னன்னே தெரியலை...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் எங்கள் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் கீதா ரெங்கன். இன்று நான் சற்று தாமதம். போகி! பழையன கழிந்து, இன்று தம கண்ணுக்குத் தெரிந்தது. இணைத்து, லிங்க் கொடுத்துவிட்டேன்!

    பதிலளிநீக்கு
  6. எல்லோருக்கும் காலை வணக்கங்களும், புகையில்லா போகி பண்டிகை வாழ்த்துக்களும்!😊

    பதிலளிநீக்கு
  7. போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்
    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம் ஆமாம் என்னடா ஆளைக் காணலையேனு பார்த்தேன்...ஒரு வேளை வெளில போயிட்டு புகையில வழி தவறிப் போய்ட்டீங்களோனு நினைச்சேன்...ஹா ஹா ஹா ஹா...நான் கண்ணழ்கியை வெளியில் அழைத்துக் கொண்டுப் போய் லைட் போடாமல் வந்த வண்டி எங்கள் மீது மோத இருந்து நல்லகாலம் தப்பித்தோம்....ஓரமாகச் செல்ல முடியலை..எல்லார் வீட்டுலயும் புகை...கண்ணி சூடு கண்டு என்னை நடு ரோட்டில் இழுத்துச் சென்றாள்...அதனால்...புகை போடாம போகியே கிடையாது போல...எனக்குத் திருமணம் ஆகி சென்னை வந்தப்ப ரொம்பப் புதுசா இருந்துச்சு...எங்க ஊர்ல புகை பார்த்தது இல்லை...போகிக்கு...

    பானுக்கா புகையில்லா போகியா...ஹா ஹா ஹா ஹா பங்களூர் எப்படி? இல்ல சென்னை வந்திருக்கீங்களா? சென்னைனா கண்டிப்பா வீடே புகையில சூழ்ந்திருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பழையன கழிதலும் புதுவன புகுத்தலும்...

    ஆமாம்...மனதில் ஊறிப் போன குப்பைகளான வேண்டாத பழையனவற்றைத் தூக்கிக் கடாசிவிட்டு புதிய நல்ல சிந்தனைகளை வரவேற்போம்.....புகை சூழா போகி இதுதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இன்றைய ஹீரோக்கள் அனைவருமே மெய் சிலிர்க்க வைத்துவிட்டனர்...

    உண்மையோ பொய்யோ....அந்த எண்ணம் மிக மிக நல்ல சேவையாகத் தெரிந்தது. நம்மால் புதிய இதழ்கள் வாங்க இயலவில்லை என்றாலும் இப்படிச் செய்யலாமே....இதிலும் எனது தனிப்பட்டக் கருத்து....நானா நானி போன்ற படா இல்லங்களுக்கு அல்ல.....எத்தனையோ முதியோர் இல்லாங்கள் கைவிடப்பட்ட முதியோர்களைக் கொண்டு மிகவும் கடினமான சூழ்நிலையில் பராமரித்து வருகின்றனர். அது போன்ற இல்லங்களுக்கு உதவலாம்...அந்த இளைஞர் வாழ்க!!!! அது போல தவசிமணியும் ரொம்பவே நெகிழ வைத்துவிட்டார்..

    அனைத்து ஹீரோக்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் பொக்கேக்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஆமா ஸ்ரீராம் தமனா பளிச்சென்றிருந்தாள்!!! அவள் கையைப் பிடித்து வாழ்த்தும் சொல்லியாச்சு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பாராட்டுக்குரியவர்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

    பதிலளிநீக்கு
  14. பாராட்டுக்குரியோர். அருமையான பதிவு. முனைவர் சின்னப்பனை நன்கு அறிவேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பழையன கழிதலும், புதியன புகுதலும்ன்ற வாசகம் வீட்டுக்கு மட்டுமில்ல நம் மனசுக்கும்தான். வீணான கெட்ட எண்ணங்களை துரத்தி நல்ல எண்ணங்களை விதைப்போம். போகி தின வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
  16. இனிய வணக்கம் எல்லோருக்கும்!

    அத்தனை பேரும் நாம் போற்றப்பட வேண்டியவர்கள்!
    அருமையான பகிர்வு!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  17. போகியில் புகை ? ஒன்னும் புரியலே! சமையல்கட்டிலிருந்து புகை, ஆவின்னு ஒன்னும் வெளிய வரக்கூடாதா?

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. நீங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். மனிதாபிமானத்துடன் செயல்பட்டு வரும் இளைஞர் தவசிமணியின் செயல் மிகவும் போற்றுதலுக்குரியது. அனைவருக்கும் மனமுவந்த பாராட்டுக்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    இன்றைய போகியின் வாழ்த்துக்களுடன், தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    என் பதிவாக தைமகள் வருகை..
    நேரம் இருக்கும் போது வந்து கருத்திடவும். நன்றி!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. சொல்லப்பட்ட அனைவருமே வாழ்த்தவும் வணங்கவும் தக்கவர்கள்!

    பதிலளிநீக்கு
  20. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
  21. வறுமையிலிருந்து உயர்ந்து, மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும், திரு.கதிரேசன், திரு.சுப்பிரமணியன், மருத்துவர் மாரியப்பன், பேராசிரியர் கு.சின்னப்பன் ஆகியோரை வணங்குகிறேன்.
    நான் ஒரு முதியோர் இல்லத்திற்கு தொலைபேசியில் நான் வாங்கும் வாராந்திர, மாதாந்திரிகளை படித்து முடித்ததும் அனுப்பலாமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நிறைய பேர் பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி இருக்கிறார்கள், ஆகவே புதிதாகவே வருகிறது என்று கூறி விட்டனர்.

    பதிலளிநீக்கு
  22. அனேகன் சார் சென்னையில்,சென்னையில் மட்டும்தான் போகி அன்று பழையன கழிதல் என்பதை செயலாக்க வீட்டிலிருக்கும் பழைய பாய் போன்றவைகளை எரிப்பார்கள். எரிக்க எதுவும் இல்லை என்றால் டயரை எரித்து, சுற்றுச் சூழலை மாசு படுத்துவார்கள். இப்போதெல்லாம் காவல்துறை யாரும் டயர் போன்றவைகளை எரிக்க கூடாது என்று சற்று கெடுபிடியாக இருக்கிறார்கள். அதே போல் ஆயுத பூஜை அன்றும் பூசணிக்காய் உடைக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறது காவல் துறை. மக்கள்தான் வழக்கம்போல மாற தயங்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    பதிலளிநீக்கு
  24. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வாழ்த்துகள். எபி நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. அருமையான தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!