செவ்வாய், 2 ஜனவரி, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : "வீட்டில ஆருமே இல்லை"​ - அதிரா



இன்றைய "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் அதிரா எழுதிய கதை ஒன்று.... 

===============================================================================  





வீட்டில ஆருமே இல்லை:)
அதிரா 

ரவு 11.15 ஆகிவிட்டது, நித்திரை வரவில்லை, அப்போது... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஓ என் மொபைல் வைபிரேட் பண்ணுதே.. அடடா இந்த நேரத்தில மெசேஜ் ஆரிடமிருந்து.....

ஓ மைனா அனுப்பியிருக்கு...

 “வீட்டில ஆருமே இல்லை”..மெசேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....

என்னாது வீட்டில் ஆருமில்லாமல் மைனா தனியா இருக்குதா?... இந்தச் சாமத்திலயா? சும்மாவே இருட்டென்றால் நடுங்கும் மைனா, இப்போ எப்படித் தனியே வீட்டில் இருக்கப்போகுது, சே... பாவம், பயத்திலதான் எனக்கு மெஷேஜ் அனுப்பியிருக்கு.. இல்லாவிட்டால் இப்படி மெசேஜ்  அனுப்பாதே... 

அட சீ... என்ன பெற்றோர் இவர்கள், வயசுக்கு வந்த பெண்ணை தனியே விட்டுவிட்டுப் போயிருக்கினம், என்னதான் பாதுகாப்பானா ஏரியாவாக இருப்பினும் பொம்பிளைப்பிள்ளையைத் தனியே விட்டுவிட்டுப் போகலாமோ...  நான் ஒரு காதலனாக இருந்தும் இப்போ போகாவிட்டால் என்ன உபயோகம்?..

 ஓடிப்போய், அக்கா வாங்கி வைத்த சந்தன சோப்பைப் போட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து....

 அந்த ரீ ஷேட்டைத் தேடுறேன்...அன்று நண்பன் கார்த்தியோடு கடைக்குப் போன இடத்தில் ஒரு கொலர் வைத்த, நீல ரீ ஷேட் கண்டு வாங்கிவந்து, போட்டேன்...

அதைக் கண்ட தோழி அதிரா.. ஆ...முகில்.. நீ இந்த ரீ ஷேட்டில் சூப்பர் ஸ்மாட்டாக இருக்கிறாய், ஸ்லிம்மாகவும் தெரிகிறாய் எனச் சொன்னதிலிருந்து எங்கு போனாலும் அதைப்போடச் சொல்லியே மனம் சொல்லுது. அதிரா எனக்கு நல்ல தோழி... எதையும் பட்டெனச் சொல்லி, என்னை உஷார்ப்படுத்திவிடுவார்.

இப்போ அந்த ரீ ஷேட் போட்டு மைனா வீட்டுக்குப் போனால், ஆஹா... மைனா என்ன சொல்லுமோ. நல்ல வேளை, இன்று காலைதான் அம்மா “உதை எத்தனை நாளைக்குத்தான் போடுவாய்?” எனக் கேட்டபடி தோய்க்க எடுத்துப்போனா,  இப்ப தோய்க்காதீங்கோ” என வாங்கி வச்சது நல்லதாகிவிட்டது.

அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.

பின்னேரம் கார்த்தி ஃபோன் பண்ணிக் கேட்டான்,  “மச்சான்!!!! மியாவ் தியேட்டரில ஏழாம் அறிவு படம் ஓடுது, வாறியா போவம்” என...

இல்லடா எனக்கு கால் நோகுது, மோட்டர் பைக் ஸ்ராட் அடிக்க கஸ்டம், இன்னொரு நாளைக்குப் போகலாம் என ஏதோ ஒரு யோசனையில் சொன்னது, இப்போ எவ்வளவு நல்லதாகிவிட்டது.

பல தடவை கடவுளைத் திட்டியிருக்கிறேன், நீ என்ன கல்லா... உனக்கெதுக்கு தேங்காயும் கற்பூரமும் என, ஆனா இப்பூடித்தான் அப்பப்ப எதையாவது செய்து, என் நம்பிக்கையை கூட்டிடுவார்...

 நான் படம் பார்க்கப் போயிருந்தால், இப்போ மைனா வீட்டுக்குப் போயிருக்க முடியுமோ?  ...

“பிள்ளையாரப்பா இப்ப சொல்றேன் கேட்டுக்கொள்.. நாளைக்கு காலையில, முதல் வேலையா, உனக்கு நான், புஸ்பா அங்கிள் கடையில, புகை வராத கற்பூரம் வந்திருக்காம், அதில ஒரு பெட்டி வாங்கிக் கொழுத்துறேன்..”..

என எண்ணியபடி, என் சன் கிளாஸசையும் தூக்கிப் போட்டேன், அதிராதான் சொன்னா.. நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, அதில இருந்து இருட்டிலயும் கழட்டுறேல்லை:))......

மைனா பகிடி பண்ணும்தான், அது இரவில பூச்சி அதிகம் அதுதான் எனச் சொல்லி சமாளிச்சிட வேண்டியதுதான்... நான் என்ன செய்தாலும் மைனாக்குப் பிடிக்கும், என்னில நல்ல விருப்பம் எதுக்கும் கோபிக்காது.

ஆனா சரியான கண்டிஷன் எல்லாம் போட்டிருக்குது மைனா, கிழமையில ஒருநாள் மட்டும்தான்.. நேரில சந்திப்போம், மற்றும்படி ஃபோன் மட்டுமே.

முந்தநாள்தான் சந்தித்தோம், இப்படி திடுதிப்பென இன்னொரு சந்திப்பு வருமென, நான் கனவிலயும் நினைச்சிருக்கேல்லை, இண்டைக்கு விடிய விடியக் கதைக்கலாம். 

ஒரு அடியில மோட்டார் பைக் ஸ்ராட் ஆகிட்டுது, மைனா வீடு நோக்கிப் பறக்கிறேன்....

“செத்தாலும் உனை நான் விடமாட்டேன் - ஆனா
உன் உத்தரவு இல்லாமல் தொடமாட்டேன்” .... 

சே..சே... சிட்டுவேஷனுக்கு ஏற்றமாதிரி அப்பப்ப பாட்டு வேற வந்து தொலைச்சிடுது மனசில....

 ஆனா திருமணமாகும்வரை நான் ஒரு ஒழுக்கமான, நல்ல காதலனாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்... அதையேதான் மைனாவும் எதிர்பார்க்குது,  அதிலிருந்து கடுகளவும் நான் தவறமாட்டேன்.

சரியா 35 நிமிடத்தில மைனா வீட்டு வாசலில் நிற்கிறேன், மாலையானாலே சப்பரத் திருவிளா மாதிரி, எல்லா லைட்டையும் பயத்தில போட்டிடுமாம் மைனா, ஆனா இன்று ஒரு லைட் கூட இல்லையே... பயத்தில போர்த்திட்டுப் படுத்திட்டுதுபோல, பாவம், நான் பதில் மெஷேஜ்ஜும் அனுப்பாமையால், நான் நித்திரையாக்கும் என நினைச்சிருக்கும்.

நொக்....நொக்...
நொக்...நொக்... கதவைத்தட்டுகிறேன்... ம்ஹூம் சத்தமில்லை.... பாவம் பயந்திடப்போகுது, எதுக்கும் ஃபோன் பண்ணுவோம்...

மைனாட  ஃபோன் ரிங் போகுது.....

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்....
நீ பேசாவிட்டால் நானும் பேச மாட்டேன்...

மைனா விழித்துக் கொண்டா...  “ஆஆஆஆஆ.. ஹலோ முகில்.. என்ன இந்த நேரத்தில?”...

முகில்: இல்ல மைனா வாசல்லதான் நிற்கிறேன் பயப்பிடாமல் கதவைத் திறங்க..

மைனா: ...ஙேஙேஙே.... எந்த வாசல்ல?

முகில்: உங்கட வீட்டு வாசல்லதான்...

மைனா: அதுதானே முகில்!!!! மெசேஜ் அனுப்பினேனே பார்க்கவில்லையா? “வீட்டில ஆரும் இல்லை” என்று. 

முகில்: அப்போ நீங்களும் இல்லையா மைனா?:(

மைனா: நாங்க காலையிலயே எங்கட அப்பம்மா வீட்டுக்கு வந்திட்டம், உங்களுக்குத்தான் தெரியுமே, என்னைத் தனியே விட்டு விட்டு, அப்பா அம்மா எங்கேயும் போக மாட்டார்களே!!!!.. ஃபோனில கதைக்க முடியாமல் போச்சா அதுதான் டெக்ஸ்ட் அனுப்பினேன்..., திருப்பி ஃபோன் பண்ணியிருக்கலாமெல்லோ?

முகில்: அது வந்து .. நேரில் (மனதில்... ஃபோன் பண்ணினால் வரவேணாம் எனச் சொல்லிட்டாலும் என்ற பயம்தான்:)) பேசலாம் என.. ஓகே.. ஓகே மைனா, குட்நைட் நாளைக்கு பேசலாம்.....

 “பிள்ளையாரப்பா, நீ எல்லாம் ஒரு கடவுளா:))))? என்னை இப்படி ஏமாத்திப்போட்டியே? உனக்கு புகையில்லாத கற்பூரம் கேட்குதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))”.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்... வரும்போது ஒரு அடியில் ஸ்ராட் ஆன மோட்டர் பைக், இப்போ அடிக்க அடிக்க ஸ்ராட் ஆகாதாமே...

அவ்வ்வ்வ்வ்வ் வலிமை உடலிலல்ல... மனதில்தான்:))))...

“இதுவும் கடந்து போகும்”... வீட்டை நோக்கிப் பறக்கிறேன்.




XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
நன்றி _()_ அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்!!!






116 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்! துரை சகோ, ஸ்ரீராம், ஏஞ்சல், அதிரா கீதாக்கா இன்னும் அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஹை இன்று அதிராவின் கதையா!!! ஆஹா!!!

    அதிரா ஊஞ்சல் ஆடிட்டுருங்க நான் பின்னாடி வரேன்....இன்று ஆருத்ரா தரிசனம்...ஸோ கொஞ்சம் வேலை, கோயில் .....அப்புறமா வரேன் அட்டெண்டென்ஸ் வைச்சாச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இன்னிக்கு கீதாம்மா முதலிடத்தை பிடிச்சட்டாங்க டோய்..... பூனைக்குட்டி எங்க காணோம்......

    மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆ.... கீதா அக்கா ஃபர்ஸ்ட். காலை வணக்கம் கீதா அக்கா... உங்கள் வீட்டிலிருந்துதான் ஓடி வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  6. ஆ... வெங்கட்... காலை வணக்கம். உங்களை இவ்வளவு காலையில் இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இப்பதான் உங்கள் தளத்தில் "கட்டிப்புடிச்சுட்டு" வந்தேன்!

    பதிலளிநீக்கு
  7. ஹாஹா செமயா பல்பு வாங்கி இருக்காரே முகில். ஓவர் அலைச்சல் உடம்புக்கு ஆகாது... என்பது புரிஞ்சிருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. ம்ம்ம்ம்ம், அதிரடியும் பேப்பர் க்ராஃப்ட்ஸும் இல்லாமல் ஃபர்ஷ்டு வருவதில் அவ்வளவு சுவாரசியம் இல்லை! :( அவங்க ரெண்டு பேரும் ஒரு வேளை எனக்காக விட்டுக் கொடுத்துட்டாங்களோ! நினைச்சால் ரொம்ப வருத்தமா இருக்கு! :(

    பதிலளிநீக்கு
  9. வீட்டு..ல ஆருமே இல்லை.. ந்டதும் குலை நடுக்கம் ஆகிப் போச்சு..

    ஏதோ புள்ளையார் சாமி தான் காப்பாத்திப் போட்டார்...

    நாளைக்கே புகை இல்லாத கற்பூரம் வாங்கி ஏத்தி வெக்கோணும்...

    பதிலளிநீக்கு
  10. //நாளைக்கே புகை இல்லாத கற்பூரம் வாங்கி ஏத்தி வெக்கோணும்...//

    அதுவும் புஷ்பா கடையிலிருந்து....!!!

    பதிலளிநீக்கு
  11. //ஒரு வேளை எனக்காக விட்டுக் கொடுத்துட்டாங்களோ! நினைச்சால் ரொம்ப வருத்தமா இருக்கு! :( //

    கீதா அக்கா... ஜெயிச்சும் வருத்தப்படறீங்களே.....!! அப்போ துரை செல்வராஜூ சாரை நீங்கள் போட்டியாகவே நினைக்கவில்லையா? அல்லது ஆண்கள் வரிசை தனியா?!!!

    பதிலளிநீக்கு
  12. ஹிஹிஹி, ஶ்ரீராம், துரையும் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துட்டாரோனு ஒரு எண்ணம்! ஆனாலும் வம்பு வளர்க்க அவங்க ரெண்டு பேர் தான் சரி! :) துரை சாரோடு வம்பு வளர்க்க மனசு வரதில்லை! :)))) ஒரு மரியாதை தான்! வேறே ஏதும் இல்லை!

    பதிலளிநீக்கு
  13. ஏதோ திகில் மர்மம்னு பார்த்தா இப்படி பல்ப் கொடுத்து ஜாலியா ஊஞ்சல் ஆடறீங்களா நீங்க

    பதிலளிநீக்கு
  14. 31/12 அன்றே சொல்ல வேண்டும் என நினைத்தேன்...

    இருந்தும் ஏதாவது ஊசிக் குறிப்பு வருமோ என்று ஊசி (பின்) வாங்கி விட்டேன்...

    என்னவென்றால் புத்தாண்டின் முதல் பதிவை மூன்று பேரில் யாராவது முன்வந்து ஆரத்தியுடன் வரவேற்பு செய்யுங்கள் என்று..

    ஆசைப்பட்டபடியே நடந்தது..
    மற்றபடி போட்டி என்றெல்லாம் கிடையாது.

    வாழ்க நலம் என்றென்றும்..

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் காலை+திருவாதிரை வணக்கங்கள். அதிரா என்றதும் பூனைக் கதை என்றே படிக்க ஆர்ம்பித்தேன்.
    அசடு வழியும் முகில் பாவம்.
    நன்றாக இருக்கிறது கதை.
    வாழ்த்துகள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அதிரா.

    பதிலளிநீக்கு
  16. ஹா ஹா ஹா ஹா ஹா முகிலுக்கு செம ஆப்பு!!! பாவம்....முகில்...

    அது சரி பூஜா எப்போ மைனா ஆனா? இல்ல பூஜாவின் இன்னொரு பெயர் மைனாவா?!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வீட்டுல ஆருமே இல்லயா? அம்புட்டுப் பேருமா தேம்ஸுக்குப் போயிட்டாங்க? 2018 வேலயக் காமிக்க ஆரம்பிச்சிருச்சா!

    பதிலளிநீக்கு
  18. ஆனாலும் வம்பு வளர்க்க அவங்க ரெண்டு பேர் தான் சரி! :) துரை சாரோடு வம்பு வளர்க்க மனசு வரதில்லை! :)))) ஒரு மரியாதை தான்! வேறே ஏதும் இல்லை!//

    யெஸ் கீதாக்கா எனக்கும் அப்பூடியே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. வீட்டிலே யாருமே இல்லை நான் மட்டும் தான்னு அந்த பூனை கண்ணடிக்குது பாருங்க...என்ன லூட்டி பண்ணப் போகுதோ...ஜெஸி வயர எல்லாம் கடிச்சது போல அதிரா வீட்டு வயர எல்லாம் கடிச்சு வைக்கப் போகுது....ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
  20. சுவையான கதை நடை
    ஆனால்,
    பிள்ளையாரைத் திட்டியது
    பிழை பாருங்க...
    முதல்ல phone ல
    Text MSG ஐ பார்த்திருக்கலாமே...

    புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. அதிரா கதை நல்லாருக்கு...ம்ம்ம் காதலியைக் காணனும்னா பில்டப்புதான் போல....தோய்க்காத ரீ ஷர்டுமா...!! ஹா ஹா ஹா ஹா ...மைனா பாவம்!!! ஹிஹிஹிஹி...

    மியாவ் தியேட்டரா!!!! பூஸார்கள்தான் இயக்குவினமோ??!!! மியாவ் தியேட்டர் அங்கு ஏழாம் அறிவு!!படம் இந்த லைன் பிடித்தது அதிரா...ரசித்தேன்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கதையைப் படித்ததும் சிரிப்பு வந்தது. பாவம் அந்தப் பையன் முகில் கலர்ஃபுல்லாகப் போயும் அங்கு யாரும் இல்லாமல் குறிப்பா அவரது மைனா இல்லாமல் போனது...வீட்டில் யாரும் இல்ல..என்ற மெசேஜினால் இந்த முகில் ஏதோ கற்பனை செய்து கொண்டு...ஹாஹாஹாஹா...மைனை நல்ல ட்ரிக்கியா முகிலை கலாய்க்கவே இப்படிப் பொத்தாம் பொதுவா மெஸேஜ் கொடுத்திருப்பாளோ?!!! ஹா ஹா ஹா....பெயர்கள் எல்லாம் ரொம்ப ரசிக்கும்படியாக இருக்கு. கதை நன்றாக இருக்கிறது அதிரா.

    எங்கள் ப்ளாக் மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. முகிலை ஏமாற்றிய பொத்தாம்பொது வசனம் வீட்டில் யாரும் இல்லை. ஹாஸ்யமான வசனங்கள். நல்ல கதை. இளவட்டங்கள். சிரிப்புதான் வருகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. கலக்கிடீங்க அதிரா! முடிவை யூகிக்க முடிந்தாலும் கொண்டு சென்ற விதம் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  25. //அது சரி பூஜா எப்போ மைனா ஆனா? இல்ல பூஜாவின் இன்னொரு பெயர் மைனாவா?!!!!//
    தில்லைஅகத்து கீதா, இதெல்லாம் ஒரு கேள்வியா? பூஜா என்பது பெற்றோர் வைத்த பெயர், மைனா முகில் வைத்த செல்லப் பெயர். அப்படித்தானே அதிரா?

    பதிலளிநீக்கு
  26. சுவாரஸ்யமான கதை பாராட்டுகள் த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
  27. எல்லோருக்கும் இனிய வணக்கம்!

    "வீட்டில ஆருமே இல்லை" அசத்தலான கதை!
    கதாசிரியைக்கு விசேட பாராட்டுகள்!

    அதிராவின் சிறப்பென்னவெனில் எழுதும் போது அதனை வாசிக்கும் எமக்குக்
    காட்சியாகத் தெரிவதுபோல அத்தனை இயல்பாக எழுதுகிறார். திறமைசாலி!
    மேலும், வலிந்து திணிக்காமல் பேசும் டயலாக் அப்படியே அவரெழுத்தில் இருப்பது
    மிகவே ரசிக்க வைக்கின்றது. கதைக் கரு சிறியதாகிலும் அதை அழகாகக்
    கொண்டுசென்றிருக்கிறார்.
    மிகவே ரசித்தேன்! சிரித்தேன்!

    கதாசிரியை அதிராவுக்கும், பதிவிட்ட சகோ ஶ்ரீராமிற்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. கதை சூப்பர். நல்ல ட்விஸ்ட் கடைசியில்.. உங்க ஸ்டைலில் நல்லா எழுதியிருக்கீங்க. அதிராவிடம் சொல்லி முகிலிட்ட சொல்லச்சொல்லுங்கோ டீ சேர்டை தோய்க்க சொல்லி.. அதிரா சொன்னால் கேட்பாரெல்லோ..
    பூஜாவா...மைனாவா..?????
    இனி 'நல்லமனசு தேவதை' வந்தால் என்னென்ன நடக்குமோ.....தெய்வமே.....

    பதிலளிநீக்கு
  29. கதை நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள் அதிரா. இயல்பா இருக்கு. காதலன் என்ன செய்வானோ அதை அப்படியே கொண்டுவந்திருக்கீங்க. புத்தாண்டை நகைச்சுவையா ஆரம்பிச்சிருக்கீங்க. (ஆமாம் இதுல சீதை ஏன் ராமனை மன்னிக்கலை? மைனா, முகிலை மன்னித்தாள்னு வச்சுக்கவேண்டியதுதான். அல்லது புத்தாண்டில், அந்த சீரியலுக்கு END CARD ஸ்ரீராம் போட்டாச்சா? பெண், ஆணை மன்னிக்கணும்னு வரியை மாத்தினால் இன்னும் ரசனையான கதை வரும்னு-சீ.ரா.ம க்கு- ஸ்ரீராமுக்குச் சொல்லிக்கறேன்)

    எழுத்துப்பிழை ஏன் வருது. இதுலவேற நீங்க, 'நான் டமில்ல டீ ஆக்கும்க்கும்க்கும்'னு வேற அப்போ அப்போ (அடிக்கடி) சொல்லிக்கறீங்க. அனேகமா உங்க தமிழ் வாத்தியார்தான் சரியில்லைனு நினைக்கறேன். எய்தவன் இருக்க, அம்பை நோகக்கூடாதுன்னு புலியூர் பூஸானந்தா என்னிடம் நிறைய தடவை சொல்லியிருக்கிறார். அதுனால பிரச்சனை உங்க தமிழ் வாத்தியாரிடம்தான். A போடத் தெரியாமல் D போட்டது அவர் தவறல்லவா? மெஷேஜ் -மெசேஜ் அல்லது மெஸேஜ், கஸ்டம்-கஷ்டம், கொழுத்தறேன்-கொளுத்தறேன். மற்றபடி, ரீ ஷேட் (T. Shirt), 'நொக் நொக் - டொக் டொக், ஸ்ராட்-ஸ்டார்ட் - இதெல்லாம் நாங்களே வேறு வழியில்லாம புரிஞ்சுக்க ஆரம்பிச்சாச்சு. (அந்தத் தமிழும் நல்லாத்தான் இருக்கு)

    இப்படி ஜொள் விட்டுக்கொண்டு போன முகிலை, 'வீட்டை நோக்கிப் பறக்கிறேன்.' என்று முடிக்காமல், 'ஸ்டார்ட் ஆகாத வண்டியை நல்ல குளிரில் தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்' என்று முடித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  30. good morning everyone 😄a bit busy with work will come soon

    பதிலளிநீக்கு
  31. மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ தான்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ:))... என்னாதூஊஊஊஊஊ இண்டைக்கு கீதாக்காவோ 1ஸ்ட்டூஊஊஊஊ ஆவ்வ்வ்வ்வ் கொன்கிறசுலேஷன்ஸ்[ஹா ஹா ஹா நெ.தமிழன் இது கரீட்டுத்தானே:)... என் தமிழால நெல்லைத்தமிழனின் நிம்மதி போகுதே ஹா ஹா ஹா:)] கீதாக்கா என்னா ஃபீலிங்ஸூஊஊஊஊஊஊ.. நீங்க உண்மையில் வின்னர்தான்:).. நான் 1500 மீட்டரில ஓடி 2 வதா வந்ததைப்போல..:))

    ஹையோ சத்தியமா நம்புங்கோ.. ஆறு பொயிண்ட் நோட் நோட் ரைம் க்கு நீங்க லாண்டட்:).. இதுதான் ஜாதனை.. நாங்க வராட்டில் என்ன...

    அது கீதாக்கா வேணுமெண்டெல்லாம் விடவில்லை.. புதுவருசத்தன்று படுக்க 2.30 ஆகிட்டுது.. ஆனாலும் பழக்க தோசம் என்னால மட்டும் 8 மணிக்கு மேல் படுக்க முடியாது, சிலர் கண் முழிச்சிட்டே படுத்திருப்பினம், எனக்கு கண் முழிச்சால் எழுந்திடுவேன் [நெல்லைத்தமிழனைப்போல எங்கட அப்பாவும் படு ஸ்ரிக்ட் கர்ர்ர்ர்:), காலை 6 மணிக்கு மேல் யாரும் நித்திரை கொள்ளக்கூடாது என்பார்.. ஆனா எங்கள் வீட்டில் பெட்டர் 1/2, பிள்ளைகளுக்கு விடுமுறை நாள் எனில் 10 மணிவரையாவது நித்திரை கொண்டால் மட்டுமே அது விடுமுறை:)]..

    சரி அது போகட்டும்.. அதனால நித்திரை எனக்குப் பத்தவில்லை, பகலும் படுக்க விருப்பமிருக்கவில்லை, பிஸியும் கூட.... ச்ச்ச்சோஓஒ நைட் 11 க்கு மேல் தாக்குப்பிடிச்சிருக்க முடியாமல் போச்ச்ச்ச்ச்ச்ச்:)).. அதனால நாங்க விட்டெல்லாம் கொடுக்கவில்லை.. நீங்க வின்னர்தேஏஏஏஏன்ன்ன்ன்ன்:)).... அஞ்சு கெதியா அந்த பபபபபபச்சைப் பொன்னாடை எடுத்துக் கொண்டு ஓடிக்கமோன்ன்:))..

    பதிலளிநீக்கு
  32. வாங்கோ கீதாக்கா.. துரை அண்ணன், கீதா வாங்கோ...
    கீசாக்கா... முதலாவதா வந்தா மட்டும் போதாது:) முதேல் வோட்டும் போடோணும்:) வோட்டில கை வைக்கவே பயப்பிடுறீங்க ஏதோ மசுக்குட்டி படுவதைப்போல:) இது கொண்டினியூ ஆனா தேம்ஸ்ல தள்ளிப்போடுவேன்ன்ன் ஜாக்க்க்க்க்க்க்க்க்க்ர்தை[ஹையோ இது நேக்குச் சொன்னேன்:)]...

    ///hehehehehe good story! laughed heartily! :)))))///

    இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன்.. நான் ஒரு சோக ஸ்ரோறி அனுப்பியிருந்தேன், பின்னர் இன்று வெளிவரும் என அறிஞ்சதும் துடிச்சுப் பதறிப்போய்.. புது வருடத்தில் சோகக் கதை கூடாதே என, இது முன்பு நான் எழுதிய கதையை மாத்தி இங்கு கொடுத்தேன்.. நன்றி.

    பதிலளிநீக்கு
  33. ///Thulasidharan V Thillaiakathu said...
    ஹை இன்று அதிராவின் கதையா!!! ஆஹா!!!

    அதிரா ஊஞ்சல் ஆடிட்டுருங்க நான் பின்னாடி வரேன்///

    என் படத்தை இங்கு பார்த்ததும் நேக்கு ஒரே ஷை ஷையா வருது கீதா:))... அங்கு பார்த்தவர்கள்தானே இங்கும் பார்க்கப்போகினம்:)..

    சரி சரி வாங்கோ.. திருவாதிரை காலையுடன் முடிஞ்சிடும்தானே.. ஊரில எழும்பி பனிக்குளிரிலும் தோய்ஞ்சிட்டுப் பக்கத்துப் பிள்ளையாரிடம் ஓடியது நினைவுக்கு வருது:)..

    பதிலளிநீக்கு
  34. //வெங்கட் நாகராஜ் said...
    இன்னிக்கு கீதாம்மா முதலிடத்தை பிடிச்சட்டாங்க டோய்..... பூனைக்குட்டி எங்க காணோம்......

    மீண்டும் வருவேன்.//

    ஹா ஹா ஹா வாங்கோ வெங்கட்.. நீங்க எப்பவும் சீரியஸ்போல இருப்பீங்க:).. [எங்கட ஜி எம் பி ஐயாபோல ஹையோ ஒரு பேச்சுக்கு ஜொன்னேன்].. அதனால பேசப் பயமா இருக்கும்..:)

    இன்று உற்சாகமா ஓடி வந்திருக்கிறீங்க கீதாக்காவோடு போட்டி போட:))

    //ஹாஹா செமயா பல்பு வாங்கி இருக்காரே முகில். ஓவர் அலைச்சல் உடம்புக்கு ஆகாது... என்பது புரிஞ்சிருக்கும்.///

    ஹா ஹா ஹா அதேதான், ஒரு ஃபோன் போட்டுக் கேட்காமல் ஓடினது அவர் தப்புத்தானே:).. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. அதிரா கீதாக்கா தமன்னாவை டச் பண்ண மாட்டாங்க..எப்ப வந்தாலும்....ஹா ஹா ஹா ஹா ஹா....பரவால்ல ஓட்டு கண்ணுக்குத் தெரியாது...வேலிட் கமென்ட் போட்டுருக்காங்களே!!! என்ன சொல்லறீங்க..!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. வாங்கோ ஸ்ரீராம்... முகிலை [பெயர்க் குழப்பத்தோடு] வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஹா ஹா ஹா:).. கொஞ்சம் பூஜாவை மைனா ஆக்கிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).. வருங்காலத்தில் படிப்போர் குழம்பாமல் இருக்கோணுமெல்லோ:).. பின்ன என் இக்கதை பாருங்கோ பல லட்சம் வியூஸ்களைத்தாண்டப்போகுதூஊஊஊஊ ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  37. ////ஸ்ரீராம். said...
    ஆ... வெங்கட்... காலை வணக்கம். உங்களை இவ்வளவு காலையில் இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இப்பதான் உங்கள் தளத்தில் "கட்டிப்புடிச்சுட்டு" வந்தேன்!//

    ஹையோ ஹையோ ஒட்டகத்தைப் புடிச்சதுக்கே இப்பூடிச் சவுண்டு விட்டால்ல்ல்ல்ல்:)) ஹா ஹா ஹா நான் பேசல்ல பேசல்ல... நான் பேசவே மாட்டேன்ன்ன்ன்ன்:) என் வாய்தேன் நேக்கு எடிரி:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  38. ///அதிரா கீதாக்கா தமன்னாவை டச் பண்ண மாட்டாங்க..எப்ப வந்தாலும்....ஹா ஹா ஹா ஹா ஹா....பரவால்ல ஓட்டு கண்ணுக்குத் தெரியாது...வேலிட் கமென்ட் போட்டுருக்காங்களே!!! என்ன சொல்லறீங்க..!!!

    கீதா///

    ஹா ஹா ஹா என் பக்கம் முன்னமுன்னம் வந்தபோது மட்டும் டச்சூ பண்ணினா:) அது நான் தேம்ஸ்ல தள்ளிடுவேன் எனும் பயமாக்கும்:) இப்போ அப்பயம் போயிடுச்சுப்போல:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  39. ///துரை செல்வராஜூ said...
    வீட்டு..ல ஆருமே இல்லை.. ந்டதும் குலை நடுக்கம் ஆகிப் போச்சு..

    ஏதோ புள்ளையார் சாமி தான் காப்பாத்திப் போட்டார்...

    நாளைக்கே புகை இல்லாத கற்பூரம் வாங்கி ஏத்தி வெக்கோணும்...//

    ஹா ஹா ஹா நீங்க எதுக்கு நடுங்குறீங்க துரை அண்ணன்?:))//

    ///ஸ்ரீராம். said...
    //நாளைக்கே புகை இல்லாத கற்பூரம் வாங்கி ஏத்தி வெக்கோணும்...//

    அதுவும் புஷ்பா கடையிலிருந்து....!!!///

    ஹா ஹா ஹா புஷ்பா அங்கிள் கடியில மட்டும்தான் அது கிடைக்குமாம்... மிக்க நன்றி துரை அண்ணன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  40. ஹா ஹா ஹா அதேதான், ஒரு ஃபோன் போட்டுக் கேட்காமல் ஓடினது அவர் தப்புத்தானே:)..//

    என்ன பூஸாரே முகில போய் அப்படி எல்லாம் சொல்லிட்டீங்க...பாவம் அவர்...காதலியின் மெஸேஜ் பார்த்ததும் உடனே பாவம் அவர் பயந்து போயிடுவார்னு அந்தப் பதற்றத்துல கூட சென்ட் அடிச்சு, டீ ஷர்ட் தேடி எடுத்துப் போட்டு, கூலிங்க் க்ளாஸ் கூட விடாம போட்டு...மைனா மைனா நெஞ்சுக்குள்ள நு
    அருமையான பாடலை அந்த ராத்திரி குளிர்லயும் வெட வெடத்துப் பாடிட்டே "ஓடோடி வந்தேன் மைனா" என்று ஓடியவரை அப்படி எல்லாம் சொல்லலாமோ?!!! அவரை இப்படி பொத்தாம் பொதுவா மெஸேஜ் கொடுத்து வேடிக்கை பார்த்த மைனாவை...ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  41. //ஸ்ரீராம். said...
    //ஒரு வேளை எனக்காக விட்டுக் கொடுத்துட்டாங்களோ! நினைச்சால் ரொம்ப வருத்தமா இருக்கு! :( //

    கீதா அக்கா... ஜெயிச்சும் வருத்தப்படறீங்களே.....!! அப்போ துரை செல்வராஜூ சாரை நீங்கள் போட்டியாகவே நினைக்கவில்லையா? அல்லது ஆண்கள் வரிசை தனியா?!!!///

    ஹா ஹா ஹா குட் கொஸ்ஷன்:)) அப்பூடி எல்லாம் இல்லை ஆண் பெண் பேதம் எல்லாம் இல்லை.. 1ஸ்ட்டூ 1ஸ்ட்டுத்தேன்ன்ன்ன்:))..

    கீதாக்கா நான் தொடர்ந்து வருவதில்லை.. முதலாம் திகதி என்பதால் ஜம்ப் பண்ணுவோம் என நேற்று வந்தேன்ன்.. இனி எப்பவாவது மனம் சொன்னால் ஓடி வருவேன்.. இந்த வீக்குடன் ஹொலிடே முடிஞ்சிடும் பிறகு கஸ்டம்தான்...

    பதிலளிநீக்கு
  42. //துரை செல்வராஜூ said...
    31/12 அன்றே சொல்ல வேண்டும் என நினைத்தேன்...

    இருந்தும் ஏதாவது ஊசிக் குறிப்பு வருமோ என்று ஊசி (பின்) வாங்கி விட்டேன்...

    என்னவென்றால் புத்தாண்டின் முதல் பதிவை மூன்று பேரில் யாராவது முன்வந்து ஆரத்தியுடன் வரவேற்பு செய்யுங்கள் என்று..///

    ஹா ஹா ஹா துரை அண்ணன் மனசில நினைச்சாலும் நீங்க போட்டியில் இருந்து விலகியிருக்கவில்லைத்தானே?:).. நேற்று கீதாக்காவை முந்திட்டீங்களெல்லோ ஹா ஹா ஹா:))...

    பதிலளிநீக்கு
  43. ///அந்த ராத்திரி குளிர்லயும் வெட வெடத்துப் பாடிட்டே "ஓடோடி வந்தேன் மைனா" என்று ஓடியவரை அப்படி எல்லாம் சொல்லலாமோ?!!! அவரை இப்படி பொத்தாம் பொதுவா மெஸேஜ் கொடுத்து வேடிக்கை பார்த்த மைனாவை...ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா///

    ஹா ஹா ஹா கீதா கரீட்டு:)) இருப்பினும் முகில் அவசரப்பட்டதுக்கு மைனா என்ன பண்ணுவா?:) வீட்டில ஆருமே இல்லை எனத் தெளிவாத்தானே சொன்னா:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  44. ///வல்லிசிம்ஹன் said...
    அனைவருக்கும் காலை+திருவாதிரை வணக்கங்கள். அதிரா என்றதும் பூனைக் கதை என்றே படிக்க ஆர்ம்பித்தேன்.///

    வாங்கோ வல்லிம்மா... ஹா ஹா ஹா அது பூனைக் கதையேதான்:).. மைனவுக்கு நான் கொடுத்திருந்த பெயர் பூஸ்:) பின்பு அதனை மாற்ற வெளிக்கிட்டமையாலேயே பெயர்க் குழப்பம் ஆச்சு:).. மிக்க நன்றிகள்.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  45. ///கரந்தை ஜெயக்குமார் said...
    கதை அருமை
    நன்றி நண்பரே
    தம+1

    ///

    வாங்கோ கரந்தை அண்ணன்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. ////
    January 2, 2018 at 7:40 AM
    புலவர் இராமாநுசம் said...
    நல்ல திருப்பம்! அருமை!///

    வாங்கோ புலவர் ஐயா.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  47. ///அது சரி பூஜா எப்போ மைனா ஆனா? இல்ல பூஜாவின் இன்னொரு பெயர் மைனாவா?!!!!

    கீதா///

    ஹா ஹா ஹா கீதா, இது முன்பு என்பக்கத்தில் நான் எழுதிய கதை, அப்போ மைனாவுக்கு ..பூஸ் எனப் பெயரிட்டிருந்தேன்:).. பின்பு மைனாவா மாத்தி இங்கு போட்டேன், மைனா என மாத்தமுன் பூஜா எனப் போடலாம் என நினைச்சேன்... அதனால ஆரம்பம் மாற்றுப்படவில்லை.. ஸ்ரீராமும் அதைக் கவனிக்கவில்லை... ஏனெனில் அவருக்கு அனுப்பிய கதையில் பூஸ் என இருந்துது முதலில்:))... ஹா ஹா ஹா அவர் குழம்பிப்போய் ஒரு கிளவி கேய்ட்டார்:) அதனால பெயரை மாத்தினேன்:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  48. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    வீட்டுல ஆருமே இல்லயா? அம்புட்டுப் பேருமா தேம்ஸுக்குப் போயிட்டாங்க? 2018 வேலயக் காமிக்க ஆரம்பிச்சிருச்சா!//

    வாங்கோ ஏகாந்தன் அண்ணன்... ஹா ஹா ஹா தேம்ஸ்க்கு மீ தனியாத்தான் போவேன்:) ஏனெண்டால் தப்பித்தவறித் தள்ளிப்போட்டாலும் எனும் பயம்தேன்ன்:)).. 2018... என்ன பண்ணப்போகுதெனப் பார்ப்போம்:).. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  49. ///Thulasidharan V Thillaiakathu said...
    வீட்டிலே யாருமே இல்லை நான் மட்டும் தான்னு அந்த பூனை கண்ணடிக்குது பாருங்க...என்ன லூட்டி பண்ணப் போகுதோ...ஜெஸி வயர எல்லாம் கடிச்சது போல அதிரா வீட்டு வயர எல்லாம் கடிச்சு வைக்கப் போகுது....ஹா ஹா ஹா....///

    ஹா ஹா ஹா ஒருவேளை முகிலைப் பார்த்துக் கொண்டிருக்குதோ என்னமோ:)..

    பதிலளிநீக்கு
  50. வீட்டில ஆருமே இல்லை எனத் தெளிவாத்தானே சொன்னா:)) ஹா ஹா ஹா.//

    இல்லையே!!! ஒரு காதலியிடமிருந்து ஒரு காதலனுக்கு இப்படி ஒரு மெஸேஜ் வந்தா காதலன் என்ன பண்ணுவார்!!! அதுவும் நட்ட நடு ராத்திரில...பயப்படும் காதலி...யாரும் இல்லை என்றாலே அது க்ளூதானே பொதுவா காதலர்களின் மொழியில் சொல்லப்போனால்....யாரும் இல்லாததால் மைனா தன்னைப் பார்க்க விரும்பறாள்னு....பாவம் தான் முகில்!! பாருங்க ஹெல்ப் பண்ணப் போய் இப்ப "ஒரு ஃபோன் போட்டுப் போயிருக்கலாம்னு" முகில் திட்டு வாங்குறார்!!! ஹா ஹா ஹா ஹா...
    கதையை ரசித்தேன் அதிரா....சும்மா அப்படி சினிமா போல நினைச்சுப் பார்த்து...இப்படித்தானே நிறைய பசங்க விழுந்தடிச்சு ஓடுறது...ஆனா பொண்ணுங்கனா உஷாரா இருப்பாங்க...ஹா ஹா ஹா
    கீதா

    பதிலளிநீக்கு
  51. //Thulasidharan V Thillaiakathu said...
    வீட்டிலே யாருமே இல்லை நான் மட்டும் தான்னு அந்த பூனை கண்ணடிக்குது பாருங்க...என்ன லூட்டி பண்ணப் போகுதோ...ஜெஸி வயர எல்லாம் கடிச்சது போல அதிரா வீட்டு வயர எல்லாம் கடிச்சு வைக்கப் போகுது....ஹா ஹா ஹா....///

    வாங்கோ ஜீவலிங்கம் அண்ணன்...

    ஹா ஹா ஹா பிள்ளையார் இப்பூடி அடிக்கடித் திட்டு வாங்குவார்.. இதைவிட அதிகமா வைரவர் திட்டு வாங்குவார்:).. அடிக்கிற கைதான் அணைக்கும் என:) அவர்களுக்குத் தெரிஞ்சிருக்கும்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  52. ஹா ஹா ஹா தேம்ஸ்க்கு மீ தனியாத்தான் போவேன்:) //

    வாங்க மாட்டிக்கிட்டீங்களா பூசாரே!!!! அப்ப எப்படி கீதாக்காவை கூட்டிட்டுப் போவீங்க!!!!??? தேம்ஸ்ல தள்ள!! ஹிஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
  53. ///மியாவ் தியேட்டரா!!!! பூஸார்கள்தான் இயக்குவினமோ??!!! மியாவ் தியேட்டர் அங்கு ஏழாம் அறிவு!!படம் இந்த லைன் பிடித்தது அதிரா...ரசித்தேன்.....

    கீதா///

    ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதா...

    ஊசிக்குறிப்பு:
    இம்முறை துளசி அண்ணன், அதிராவுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லவில்லைக் கீதா:(.. அதனால நான் அவரோடு கோபம் எனச் சொல்லி விடுங்கோ[அதெப்பூடி அதிராவுக்கு மட்டும் ஜொள்ளாமல் விடலாம் கர்ர்ர்ர்:)]..

    பதிலளிநீக்கு
  54. ///காமாட்சி said...
    முகிலை ஏமாற்றிய பொத்தாம்பொது வசனம் வீட்டில் யாரும் இல்லை. ஹாஸ்யமான வசனங்கள். நல்ல கதை. இளவட்டங்கள். சிரிப்புதான் வருகிறது. அன்புடன்//

    வாங்கோ காமாட்ஷி அம்மா.. தவறாமல் வருகை தந்து .. ரசிச்சுப் படிப்பமைக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  55. ///Bhanumathy Venkateswaran said...
    //அது சரி பூஜா எப்போ மைனா ஆனா? இல்ல பூஜாவின் இன்னொரு பெயர் மைனாவா?!!!!//
    தில்லைஅகத்து கீதா, இதெல்லாம் ஒரு கேள்வியா? பூஜா என்பது பெற்றோர் வைத்த பெயர், மைனா முகில் வைத்த செல்லப் பெயர். அப்படித்தானே அதிரா?///

    வாங்கோ பானுமதி அக்கா...

    ஹா ஹா ஹா நீங்க சொன்னதும் சரியென்றே படுது, அது செல்லப்பெயர் என ஒரு ஊசிக்குறிப்புப் போட்டிடலாமோ எனவும் நினைச்சேன்.. பின்பு இல்லை பூஜா பெயரை மைனா என்றெ மாத்தி விடும்படி ஸ்ரீராமுக்கு சொல்லியிருக்கிறேன்ன்.. அது தப்பு நடந்து போச்சு... நான் மொத்தத்தில் பூஸ் எனப் பெயர் கொடுத்து பின்பு இல்லை, பூஜா என மாத்துவோம் என தேடித்தேடி மாத்தி, பின்பு இல்ல மைனா ஆக்கலாம் என வெளிக்கிட்டமையால் இக்குழப்பம் ஆச்ச்ச்:))
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  56. ///ஹா ஹா ஹா தேம்ஸ்க்கு மீ தனியாத்தான் போவேன்:) //

    வாங்க மாட்டிக்கிட்டீங்களா பூசாரே!!!! அப்ப எப்படி கீதாக்காவை கூட்டிட்டுப் போவீங்க!!!!??? தேம்ஸ்ல தள்ள!! ஹிஹிஹிஹி..

    கீதா///

    ஹா ஹா ஹா அது, தேம்ஸ்க்குப் பக்கத்தில இருக்கும் விருமாண்டி விலாஸ் ல நெக்டோ சோடா விக்குது, வாங்கித்தாறேன் எனச் சொல்லிக் கூட்டிப் போயிடுவேன்:)).. அத்தோடு 4 அடி தள்ளி நிண்டே பேசோணும் எனவும் சட்டம் போட்டிருக்கிறேன் எல்லோருக்கும்:) ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  57. ஹா ஹா புகையில்லாத கற்பூரம் செம அதிரா நல்ல கற்பனை கலக்கியிருக்கிங்க கதையில் நீங்களும் ஆனாலும் முகிலை இப்படி ஏமாத்த கூடாது பல்பொ பல்பு பையனுக்கு
    'எந்த வாசல்ல' மைனா சிரிச்சி சிரிச்சி முடியலை.......

    //“செத்தாலும் உனை நான் விடமாட்டேன் - ஆனா
    உன் உத்தரவு இல்லாமல் தொடமாட்டேன்” //.... எ ஹா ஹா

    பதிலளிநீக்கு
  58. ///பாவம் தான் முகில்!! பாருங்க ஹெல்ப் பண்ணப் போய் இப்ப "ஒரு ஃபோன் போட்டுப் போயிருக்கலாம்னு" முகில் திட்டு வாங்குறார்!!! ஹா ஹா ஹா ஹா...
    கதையை ரசித்தேன் அதிரா....சும்மா அப்படி சினிமா போல நினைச்சுப் பார்த்து...இப்படித்தானே நிறைய பசங்க விழுந்தடிச்சு ஓடுறது...ஆனா பொண்ணுங்கனா உஷாரா இருப்பாங்க...ஹா ஹா ஹா
    கீதா///

    ஹா ஹா ஹா அது உண்மைதான் கீதா, சில பெண்கள், ஆண்கள் தம்மில எவ்ளோ அக்கறையா இருக்கினம் என செக் பண்ணவும் இப்பூடிச் செய்ய்வினம் எல்லோ:))..

    இப்போ இதுக்கு... நான் உத்தமபுத்திரன்.. நைட்டில் வரமாட்டேன் பத்திரமா இரு என முகில் பதில் போட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்... கதை கந்தலாகியிருக்கும்:)).. நீ எல்லாம் ஒரு ஆணோ.. இப்பூடி அக்கறை இல்லாமல் இருக்கிறாயே.. உனக்குப் போய் மெசேஜ் போட்டனே எனவும் திட்டோ திட்டெனத் திட்டுவினம்:))..

    ஹா ஹா ஹா எங்கோ ஏகாந்தன் அண்ணன் ஜொன்னதைப்போல:)) ஆண்கள் நிலைமை பாவம்தேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  59. ஆமாம் பூஜா ஏன் மைனாவா மாறினா ..............

    பதிலளிநீக்கு
  60. என்னாச்சு கில்லர்ஜியைக் காணவில்லை....அதிசயமாக இருக்கே

    கீதா

    பதிலளிநீக்கு
  61. ///Bhanumathy Venkateswaran said...
    //அது சரி பூஜா எப்போ மைனா ஆனா? இல்ல பூஜாவின் இன்னொரு பெயர் மைனாவா?!!!!//
    தில்லைஅகத்து கீதா, இதெல்லாம் ஒரு கேள்வியா? பூஜா என்பது பெற்றோர் வைத்த பெயர், மைனா முகில் வைத்த செல்லப் பெயர். அப்படித்தானே அதிரா?///

    பானுக்கா ஹையோ இப்படி பூசாருக்குப் பதில் சொல்லிட்டீங்களே...ஹா ஹா ஹா ஹா..இன்னிக்கு ஜெஸியும் பிஸி இங்க வந்து இந்தப் பூஸாரை விரட்டலை ஸோ அந்தப் பங்குக்கு நான் கொஞ்சம் ஓட்டலாம்னு பார்த்தா ஹா ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
  62. இப்போ இதுக்கு... நான் உத்தமபுத்திரன்.. நைட்டில் வரமாட்டேன் பத்திரமா இரு என முகில் பதில் போட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்... கதை கந்தலாகியிருக்கும்:)).. நீ எல்லாம் ஒரு ஆணோ.. இப்பூடி அக்கறை இல்லாமல் இருக்கிறாயே.. உனக்குப் போய் மெசேஜ் போட்டனே எனவும் திட்டோ திட்டெனத் திட்டுவினம்:))..//

    ஹா ஹா ஹா ஹா ஆமாம் ஆமாம்...அப்படியும் நடக்கும் தான்... ஆண்கள் பாவம்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  63. ///Asokan Kuppusamy said...
    சுவாரஸ்யமான கதை பாராட்டுகள் த.ம. வாக்குடன்///

    வாங்கோ மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  64. ///இளமதி said...

    அதிராவின் சிறப்பென்னவெனில் எழுதும் போது அதனை வாசிக்கும் எமக்குக்
    காட்சியாகத் தெரிவதுபோல அத்தனை இயல்பாக எழுதுகிறார். திறமைசாலி! ///

    வாங்கோ இளமதி... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சம் இருங்கோ என்னைக் கொஞ்சம் நுள்ளிப் பார்த்திட்டு வாறேன்ன்:))....
    பிறந்தாப் பிறக்கணும் பிள்ள அதிரா போல:)
    இருந்தா இருக்கணும் ஊஞ்சல் நெட் மேல ஹா ஹா ஹா:))..

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  65. பதிவில் தூளில யாருருருரு?

    பதிலளிநீக்கு
  66. //priyasaki said...
    கதை சூப்பர். நல்ல ட்விஸ்ட் கடைசியில்.. உங்க ஸ்டைலில் நல்லா எழுதியிருக்கீங்க. அதிராவிடம் சொல்லி முகிலிட்ட சொல்லச்சொல்லுங்கோ டீ சேர்டை தோய்க்க சொல்லி.. அதிரா சொன்னால் கேட்பாரெல்லோ.. ///

    வாங்கோ அம்முலு வாங்கோ...

    ஹா ஹா ஹா ரீ ஷேர்ட் ஐ இப்போ தோச்சிருப்பார் என்றே நினைக்கிறேன்:)..

    சகோ ஸ்ரீராமைக் காணம்:) அவர் வந்தால்தான் பெயர் குழப்பம் தீரும் மிக்க நன்றி அம்முலு.

    பதிலளிநீக்கு
  67. ///நெல்லைத் தமிழன் said...
    கதை நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள் அதிரா. இயல்பா இருக்கு. காதலன் என்ன செய்வானோ அதை அப்படியே கொண்டுவந்திருக்கீங்க. புத்தாண்டை நகைச்சுவையா ஆரம்பிச்சிருக்கீங்க.//

    வாங்கோ நெல்லைத்தமிழன்... ஆஹா ஆஹா நெல்லைத்தமிழன் புகழ்ந்திட்டார் இன்று.. அப்போ இங்கேயும் மகுடம் கிடைக்கப்போகுதூஊஊஊஊஊ:)...

    நம்பமாட்டீங்க அருந்தப்பில கதையை மாத்தி விட்டேன், சோகக் கதை ஒன்றுதான் எழுதி அனுப்பினேன், ஸ்ரீராம் எதையும் பொருட்படுத்தாமல் 2ம் திகதி வெளிவரும் என்றிட்டார்ர்.. திகதியைக் கேட்டதும் மீ பதறி அடிச்சு, இக்கதையை மாத்தி அனுப்பினேன்.. வருச ஆரம்பம் கலகலப்பாக இருக்கோணுமெல்லோ:)..

    ///இதுல சீதை ஏன் ராமனை மன்னிக்கலை? மைனா, முகிலை மன்னித்தாள்னு வச்சுக்கவேண்டியதுதான். ///
    ஹா ஹா ஹா இதுவும் நல்லாத்தான் இருக்கு:).. இல்ல இப்புத்தாண்டில் கதைகள் மிக்ஸ்ட் ஆகும்:)) என எதிர்பார்க்கப்படுது:))

    பதிலளிநீக்கு
  68. //// பெண், ஆணை மன்னிக்கணும்னு வரியை மாத்தினால் இன்னும் ரசனையான கதை வரும்னு-சீ.ரா.ம க்கு- ஸ்ரீராமுக்குச் சொல்லிக்கறேன்)///

    ஹா ஹா ஹா மன்னிசதெல்லாம் போதும் இனி ஏதும் புதுசாக் கொண்டு வந்தால், எழுதியோர் திரும்ப எழுத வசதியாகும்:)..

    @ நெல்லைத்தமிழன்
    ///எழுத்துப்பிழை ஏன் வருது. இதுலவேற நீங்க, 'நான் டமில்ல டீ ஆக்கும்க்கும்க்கும்'னு வேற அப்போ அப்போ (அடிக்கடி) சொல்லிக்கறீங்க. ///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ மீ தேம்ஸ்ல ஜம்ப் பண்றேன்ன்ன்ன்ன்ன்:) இந்தப் புத்தாண்டில ஒரு பப்புளிக்குப் பிளேசில வச்சு மானபங்கப்ப்ப்ப்ப்ப்படுத்திட்டார்ர்ர்ர்:)))..

    ////அனேகமா உங்க தமிழ் வாத்தியார்தான் சரியில்லைனு நினைக்கறேன்.////
    நோஓஓஓஓஓஒ எங்கட சிமியோன் றீச்சரை உப்பூடிச் சொல்லப்பூடாது:)).. வாத்தியரில் தப்பில்லை அவ தமிழைத்தானே சொல்லித்தந்தா:).. இது இங்கிலீசைத்தமிழில் சொல்லும்போதுதானே கொயப்பமாகுது கர்ர்:))... நான் பேசுவதை அப்படியே ரைப் பண்ணிடுறேன்ன் அது டப்பாஆஆஆஆஆஆ?:)...

    ரேபிள்.... இதை நீங்க டேபிள் என எழுதுறீங்க.. நான் சொல்லுவதைத்தான் செய்வேன்ன்ன்ன்:) செய்வதைத்தான் ஜொள்ளுவேன்ன்ன்:)) ஹையோ என்னால முடியல்ல ஜமீஈஈஈஈஈஈ:).. எச்சூச்ச்மீ இங்கின எனக்கு ஒரு கப் மோர் கிடைக்குமோ?:))

    ///இதெல்லாம் நாங்களே வேறு வழியில்லாம புரிஞ்சுக்க ஆரம்பிச்சாச்சு////

    ஹா ஹா ஹா நான் இப்பூடித்தான் .. சண்டைப்பிடிக்காமல் கைல கால்ல விழுந்து என் கட்சிக்கு ஆள் சேர்த்திடுவேன்ன் ஹா ஹா ஹா..

    ///இப்படி ஜொள் விட்டுக்கொண்டு போன முகிலை, 'வீட்டை நோக்கிப் பறக்கிறேன்.' என்று முடிக்காமல், 'ஸ்டார்ட் ஆகாத வண்டியை நல்ல குளிரில் தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்' என்று முடித்திருக்கலாம்.///

    ஹா ஹா ஹா நான் முடிவு சொல்லவில்லைத்தானே.. உங்கள் விருப்பப்படி படிப்போர் முடிவை எடுத்துக் கொள்ளலாம்:))..

    மிக்க நன்றி நெல்லைத்தமிழன்...

    பதிலளிநீக்கு
  69. ///PaperCrafts Angel said...
    good morning everyone 😄a bit busy with work will come soon///

    ஹலோஓஓஓஒ சூன்ன்ன்ன்ன் ஆ வாங்கோ.. இங்கின எனக்கு கொஞ்சம் ஹொட்டாஆஆ மோர் கொண்டு வாங்கோ.. என் காய்ச்சல் தடிமன் இன்னும் போகல்ல எனக்கு:))

    பதிலளிநீக்கு
  70. ///பூ விழி said...
    ஹா ஹா புகையில்லாத கற்பூரம் செம அதிரா நல்ல கற்பனை கலக்கியிருக்கிங்க கதையில் நீங்களும் ஆனாலும் முகிலை இப்படி ஏமாத்த கூடாது பல்பொ பல்பு பையனுக்கு
    'எந்த வாசல்ல' மைனா சிரிச்சி சிரிச்சி முடியலை.......

    //“செத்தாலும் உனை நான் விடமாட்டேன் - ஆனா
    உன் உத்தரவு இல்லாமல் தொடமாட்டேன்” //.... எ ஹா ஹா//

    வாங்கோ பூவிழி.. நல்லா சிரிச்சு உருண்டு பிரண்டு படிச்சிருக்கிறீங்க.. இதைப் பார்த்து உங்க வீட்டு வைரவர் குலைக்கேல்லையோ?:))... ஹா ஹா ஹா மிக்க நன்றி.. பெயர்க்குழப்பம் ஸ்ரீராம் லாண்ட் ஆனால் தீர்ந்திடும்:))..

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  71. ///பானுக்கா ஹையோ இப்படி பூசாருக்குப் பதில் சொல்லிட்டீங்களே...ஹா ஹா ஹா ஹா..இன்னிக்கு ஜெஸியும் பிஸி இங்க வந்து இந்தப் பூஸாரை விரட்டலை ஸோ அந்தப் பங்குக்கு நான் கொஞ்சம் ஓட்டலாம்னு பார்த்தா ஹா ஹா ஹா ஹா ஹா....

    கீதா///

    ஹா ஹா ஹா கீதா அவவை மிரட்டி வச்சிருக்கிறேன்:)) என்னைப் பார்த்தாலே இப்போ நடுங்குறா:)).. இண்டைக்கு எங்களுக்குப் பப்புளிக்குக் ஹொலிடே அங்கின இல்லைப்போல:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு காவேரிக்கு அந்தப்பக்கம் எறிஞ்சிடுங்கோ:) இந்தப்பக்கம் கீதாக்கா இருக்கிறா:))..

    அதுசரி எங்கே கீதாக்காவைக் காணம்?:)).. விடிய ஓடி முதலாவதாக வந்து ரயேட் ஆகிட்டாவோ?:) இதுக்கே இப்பூடி ரயேட் ஆனால்:) ஹையோ ஹையோ.. எனக்கெதுக்கு ஊர் வம்பு.. இப்போ அவவும் சேர்ந்து என்னை மொத்தப் போறாவே:))

    பதிலளிநீக்கு
  72. ///G.M Balasubramaniam said...
    பதிவில் தூளில யாருருருரு?///

    வாங்கோ ஜி எம் பி ஐயா... ஹா ஹா ஹா படம் பார்த்து ஐயாவுக்கு ரூஊஊஊஊஊஊ வந்திட்டுது:).. அப்போ அங்கின நீங்க இப்படம் பார்க்கேல்லையோ?:).. இங்கின போட்டது நல்லதாப்போச்சே:))..

    நீங்கதான் அடிக்கடி திட்டுவீங்க முகம் காட்டாப் பதிவர் அட்றஸ் இல்லாப் பதிவர் எண்டெல்லாம்:)).. இப்போ வடிவாப் பார்த்துக்கோங்க இதுதான் அடிரா.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. அதிரா:))..

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  73. ஹலோ மியாவ். போந்ல கஷ்தம் .daughter is using desktop and my other iPad .i find it difficult to type in Tamil garrrrr .varuven ungala ஓட்ட இருஙக

    பதிலளிநீக்கு
  74. ஹலோ மியாவ். போந்ல கஷ்தம் .daughter is using desktop and my other iPad .i find it difficult to type in Tamil garrrrr .varuven ungala ஓட்ட இருஙக

    பதிலளிநீக்கு
  75. ஸாரி அதிரா மியாவ்!! இப்போதுதான் வந்தேன். பார்த்தேன். மாற்றி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  76. அதிரா, மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும்...

    //மன்னிசதெல்லாம் போதும் இனி ஏதும் புதுசாக் கொண்டு வந்தால், எழுதியோர் திரும்ப எழுத வசதியாகும்:)..//

    இப்போ நீங்களே ஒரு கதை எழுதி இருக்கிறீர்கள். இதில் மன்னிப்பு இல்லை இல்லையா?

    கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதிக்கு நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் கதைகள் எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம், அனுப்புங்கள். மன்னிப்பது போன்ற கண்டிஷன் கருவுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் என்றாலும், அப்படி எதுவும் தரும்போது அதையும் எழுதலாம்.

    எனவே நண்பர்களே..

    புத்தாண்டில் கே வா போ வுக்கு கதை அனுப்புங்கள்... அனுப்புங்கள்... அனுப்பிக் கொண்டே இருங்கள்...

    பதிலளிநீக்கு
  77. மிக்க நன்றி ஸ்ரீராம்...


    ///இப்போ நீங்களே ஒரு கதை எழுதி இருக்கிறீர்கள். இதில் மன்னிப்பு இல்லை இல்லையா? ///

    அதைத்தான் நெல்லைத் தமிழனும் கேய்ட்டார்ர்:))... ஓஒகே மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ராட் மூசிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்:))..

    பதிலளிநீக்கு
  78. ///Thulasidharan V Thillaiakathu said...
    என்னாச்சு கில்லர்ஜியைக் காணவில்லை....அதிசயமாக இருக்கே

    கீதா///

    அதுதானே நான் இதை இப்போதான் பார்க்கிறேன்ன்.. ஒருவேளை சொல்லாமல் கொள்ளாமல் உகண்டா போயிட்டாரோ?:).. நெல்லைத்தமிழனைப்போல:))... இல்ல சிறீ சிவசம்போ அங்கிளோடு ஃபிரெண்ட் ஆகி ஏதும்ம்ம்ம்:)).. சே..சே அப்பூடி இருக்காது:))..

    பதிலளிநீக்கு
  79. ///ராஜி said...
    கதை சுவாரசியமா இருக்கு//
    வாங்கோ ராஜி மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  80. ட்றுத் ஐயும் காணல்ல...

    அஞ்சுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  81. ///PaperCrafts AngelJanuary 2, 2018 at 5:47 PM
    ஹலோ மியாவ். போந்ல கஷ்தம் .daughter is using desktop and my other iPad .i find it difficult to type in Tamil garrrrr .varuven ungala ஓட்ட இருஙக///

    இந்த கொமெண்ட் மொபைலில் இப்போதான் தெரியுது... அப்போ கொம்பியூட்டரில் தெரியல்லியே... இட்ஸ் ஓகே அஞ்சு... தெரியும்...

    பதிலளிநீக்கு
  82. நான் வந்திட்டேஎன் :) ஹலோ யாரதுமாடத்தில் இருந்து கண்ணடிக்கிறது ?:)

    பதிலளிநீக்கு
  83. //இந்த கொமெண்ட் மொபைலில் இப்போதா//ஹையோ அப்போ இது எதோ சதி :) என் பின்னூட்டம் தெரியாமப்போகுதுன்னா :)

    பதிலளிநீக்கு
  84. @ கீதாக்கா :) ..ஹாஹாஹா தொடர்ந்து நைட்டெல்லாம் எழும்பி கார்ட்ஸ் செஞ்சிட்டிருந்தேன் அதனால் அந்த டைமுக்கு வர ஈஸியா இருந்தது இன்னிக்கு கணவருக்கு லீவ் முடிஞ்சி work ஸ்டார்ட்டட் அதான் சீக்கிரம் தூங்க போய்ட்டேன் ..மீண்டும் மகள் எக்ஸாமுக்கு படிக்கிற நேரம் தான் அநேகமா இப்படி நள்ளிரவு ஓடி வருவேன்

    பதிலளிநீக்கு
  85. /வீட்டில ஆருமே இல்லை”... மெசேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....

    என்னாது வீட்டில் ஆருமில்லாமல் மைனா தனியா இருக்குதா?... இந்தச் சாமத்திலயா? சும்மாவே இருட்டென்றால் நடுங்கும் மைனா,//

    கர்ர்ர் என்னா பாசம் கர்ர்ர் மைனா இடத்தில மைனர் இருந்திருந்தா இப்படி பதைப்பாரா முகில் ?:))

    பதிலளிநீக்கு
  86. ஹாஹ்ஹா :) எப்படி தனியா இருக்கிற பொண்ணை அப்படியே போட்டிருக்கிற சட்டையோடு போய் பார்த்திருந்தா ஓகே அதென்ன அக்காவாங்கிவச்ச சந்தன சோப்பாம் :) அதிரா நல்ல இருக்குன்னு சொன்ன டீ சர்ட்டாம் :)
    மைனா சொன்ன சர்ட்டா இருந்தாலும் பரவாயில்லை :) மைனா நோட் திஸ்

    பதிலளிநீக்கு
  87. அம்மாவே தோய்க்க எடுத்து போற அளவுக்கா அம்புட்டு சுத்தம் :) எங்க ஊர்ல ஒரு மொழி சொல்வாங்க நெவெர் failing பிரென்ட் :) கிண்டலுக்கு. ஒரு கிறிஸ்துமஸ்க்கு போட்ட சட்டையை அடுத்த கிறிஸ்துமஸ் தன கழட்டுவாங்க :) சிலர் .முகில் அப்படிபோல :)

    பதிலளிநீக்கு
  88. /அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.//

    கடவுளே :) அழுக்கு ck அடிச்சா நாற்றம் எட்டூருக்கு அடிக்குமே

    பதிலளிநீக்கு
  89. ஹாஹ்ஹா :) இவர் கேர்ள் பிரண்டை பார்க்க பிள்ளையாரப்பாவுக்கு லஞ்சமா :)
    ஹையோ விழுந்து புரண்டு சிரிச்சேன் :) நட்ட நடு இரவில் சன் க்ளாஸ் போட்ட ஜொள்ளர் :) முகிலாகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  90. அழுக்கு சட்டை மேலே ck அடிச்சான்னு வாசிங்க :) அப்புறம் ck கம்பெனிக்கார்ரன் அவங்க பெர்பியூமை நானழுக்குன்னு சொன்னதா நினைக்க போறார்ங்க

    பதிலளிநீக்கு
  91. கர்ர்ர்ர் :) கம்பியூட்டர் மீண்டும் சதி :) தமிழ் பிளாக்ஸ்க்கு ரொம்ப தொல்லை குடுக்குதே ..

    ஹாஹா :) இது சோலார் மெர்க்குரி led பவரசேவிங் எல்லா பல்பையும் மொத்தமா வாங்கிட்டாரே முகில் :) நீங்க ஊஞ்சலில் இருந்து முகிலை பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு ஹாஹ்ஹா :)
    ம்மியாவ் செமையா சிரிக்க வச்சிட்டீங்க ..உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் ..எப்பவும் இப்படி காமெடி கதைகளை நிறைய எழுதணும்

    பதிலளிநீக்கு
  92. எல்லாரும் சிரிச்சி நானும் 100வது கமெண்டால் சிரிச்சிட்டு போனேன் :)

    பதிலளிநீக்கு
  93. @ மியாவ்
    //நான் ஒரு சோக ஸ்ரோறி அனுப்பியிருந்தேன், பின்னர் இன்று வெளிவரும் என அறிஞ்சதும் துடிச்சுப் பதறிப்போய்.. புது வருடத்தில் சோகக் கதை கூடாதே என, இது முன்பு நான் எழுதிய கதையை மாத்தி இங்கு கொடுத்தேன்.. நன்றி.//

    வெறி :) குட் ..நல்லவேளை மாத்தினீங்க இல்லைன்னா :)

    பதிலளிநீக்கு
  94. //PaperCrafts Angel said...
    நான் வந்திட்டேஎன் :)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லோரும் நித்திரையான பிறகு வந்து சவுண்டு விட்டுக்கொண்டூஊஊஊ:)..

    ///கர்ர்ர் என்னா பாசம் கர்ர்ர் மைனா இடத்தில மைனர் இருந்திருந்தா இப்படி பதைப்பாரா முகில் ?:))///
    அது வந்து அஞ்சு பெண்டால் பேயும் இறங்குமாம் ஹையோ டங்கு ஸ்லிப்ட்:) இரங்குமாமே:))

    பதிலளிநீக்கு
  95. ///அதிரா நல்ல இருக்குன்னு சொன்ன டீ சர்ட்டாம் :)
    மைனா சொன்ன சர்ட்டா இருந்தாலும் பரவாயில்லை :) மைனா நோட் திஸ்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆசைக்கு ஒரு ஃபிரெண்ட் வச்சிருக்க விட மாட்டீங்களே:).

    //எங்க ஊர்ல ஒரு மொழி சொல்வாங்க நெவெர் failing பிரென்ட் :) கிண்டலுக்கு. ஒரு கிறிஸ்துமஸ்க்கு போட்ட சட்டையை அடுத்த கிறிஸ்துமஸ் தன கழட்டுவாங்க :) சிலர் .முகில் அப்படிபோல :)//

    ஹா ஹா ஹா இது அப்படியில்ல அஞ்சு.. இது எப்படி எனில்.. இந்தச் சட்டை உனக்கு ரொம்ப சூப்பரா இருக்கு என ஆராவது சொல்லிட்டால்ல் ... திரும்பத் திரும்ப அதையே போடுவார்கள்:))

    பதிலளிநீக்கு
  96. ///ம்மியாவ் செமையா சிரிக்க வச்சிட்டீங்க ..உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் ..எப்பவும் இப்படி காமெடி கதைகளை நிறைய எழுதணும்

    January 3, 2018 at 12:12 AM///

    நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்:)) அது அப்பப்ப மூட் க்கு ஏற்ப தானா வரும்:)).. அடுத்து வர இருப்பது ஜோஓஓஓஓஓஓஓஓஒக ஸ்டோரி:) இப்பவே நல்ல பெரிய ரவெல் வாங்கி வச்சுக்கோங்க:)) ஏழியாவே சொல்லிட்டேன்:) அதனால அப்போ வந்து திட்டக்கூடா:)).. மிக்க நன்றி அஞ்சு..

    பதிலளிநீக்கு
  97. இன்னிக்கு கௌதமன் சாரா? வழக்கம் போல் இசையில் மூழ்கி இருப்பார்! தாமதமாய் வருமா?

    பதிலளிநீக்கு
  98. கௌதமன் பெங்களூரு திரும்பி விட்டார் அக்கா.

    பதிலளிநீக்கு
  99. //ஹா ஹா ஹா வாங்கோ வெங்கட்.. நீங்க எப்பவும் சீரியஸ்போல இருப்பீங்க:).. [எங்கட ஜி எம் பி ஐயாபோல ஹையோ ஒரு பேச்சுக்கு ஜொன்னேன்].. அதனால பேசப் பயமா இருக்கும்..:)//

    ஆஹா என்னப் பார்த்தும் பயப்பட ஒரு ஆள் இருக்கே! :) சீரியஸ் - பல சமயங்களில் சிரியஸ் தான் அதிரா!

    பதிலளிநீக்கு
  100. நொக்.... நொக்...
    நொக்... நொக்... கதவைத் தட்டுகிறேன்..

    எங்க ஊருல கதவு தட்டினால் டொக்... டொக் என்றே சப்தம் வரும்
    முடிவை இரசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  101. படித்து ரசித்தேன். நிறையச் சொல்லலாம். ஆனா ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கணும்.
    இத்தனை கமெண்டுகளுக்கு அப்புறம் நான் சொல்றதை ஆரு பாக்கப்போறாங்கன்னுட்டு தான்..

    அடுத்த தடவை ஆரம்பத்திலேயே வந்திடறேன். ஸாரி.. அதிரா..

    பதிலளிநீக்கு
  102. ///வெங்கட் நாகராஜ் said...

    ஆஹா என்னப் பார்த்தும் பயப்பட ஒரு ஆள் இருக்கே! :) சீரியஸ் - பல சமயங்களில் சிரியஸ் தான் அதிரா!///

    அச்சச்சோ சீரியஸாக இருந்து என்னத்தை சாதிக்கப்போறீங்க?:), சிலர் இயல்பிலேயெ சீரியஸ் ஆனவர்கள்.. அவர்களை ஒன்றும் பண்ண முடியாது, ஆனா சிலரோ இயல்பில் நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் ஆனா ஏதோ காரணத்துக்காகவோ எதுக்கு தம்மைக் கட்டாயப் படுத்தி சீரியஸ் ஆக்கி வச்சிருப்போர்ர்.. இதில் நீங்க 2வது வகை என எனக்குத் தோணுது:)...

    வாழும்வரை கலகலப்பாக இருப்பதில் தப்பில்லையே...

    பதிலளிநீக்கு
  103. ///ஜீவி said...
    படித்து ரசித்தேன். நிறையச் சொல்லலாம். ஆனா ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கணும்.
    இத்தனை கமெண்டுகளுக்கு அப்புறம் நான் சொல்றதை ஆரு பாக்கப்போறாங்கன்னுட்டு தான்..

    அடுத்த தடவை ஆரம்பத்திலேயே வந்திடறேன். ஸாரி.. அதிரா..///

    வாங்கோ வாங்கோ உண்மைதான், எங்கள்புளொக்கைப் பொறுத்தவரை, 24 மணி நேரத்தில் தூக்கிடுவார்கள் என்பதால் எனக்கும் அப்படித்தான் நேரமாகிட்டல் பின்பு எதையும் எழுதும் ஆசை வராது:)... இருப்பினும் நீங்க சொல்லியிருக்கலாம் நான் மட்டுமாவது படிச்சிருப்பேனே:) மிக்க நன்றிகள் தாமதமெனினும் கொமெண்ட் போட்டமைக்கு_()_.

    பதிலளிநீக்கு
  104. ///KILLERGEE Devakottai said...//

    அடடா.. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. உகண்டா ட்ரிப்பைக் கான்சல் பண்ணிட்டு என் கதை படிக்க வந்திருக்கிறீங்கபோல:) ஹா ஹா ஹா:).

    மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!