வியாழன், 4 ஜனவரி, 2018

மோகுஸாட்ஸு




     இருபொருள் அல்லது வெவ்வேறு பொருள் கொண்ட வார்த்தைகளால் எப்போதும் கலகம்தான் விளையும் போலும்!  "நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை" என்று சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், விளைவுகள் விளைவுகள்தான்!  சமீபத்திய உதாரணம் எல்லோருக்கும் தெரியும்!  என்ன என்று தெரியாதவர்களை பசித்த புலி தின்னட்டும்!






     எனக்கு எங்கள் வீட்டு கலெக்ஷனில் இது போன்ற ஒரு வரலாற்றுச் சம்பவம் படித்தது - அதுவும் வேறு ஏதோ தேடும்போது சமீபத்தில் கண்ணில் பட்டதால் - நினைவுக்கு வந்தது. அதை உங்களுடன் பகிரலாமே என்று.....

***


     இரண்டாம் உலகப்போர் நடந்து வந்த நேரம். 



     ஏகப்பட்ட இழப்புகளைச் சந்தித்துவிட்ட ஜப்பான், சமாதானத்தை நாடுவது என்று முடிவு செய்கிறது.  நேசநாடுகளிடம் அதை எப்படி தெரிவிப்பது?  ரஷ்யாவிடம் சொல்வது, அவர்கள் மூலம் நேசநாடுகளுக்கு தகவல் போகும் என்று முடிவு செய்து ரஷ்ய தூதரை அழைத்துப் பேசுகிறார் ஜப்பான் பிரதம மந்திரி.  ஆனால் அவரிடம் சொல்லியும் நாட்கள் செல்கின்றதே தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை.  

     ஜப்பானியர்களுக்கு கவலை பிறக்கிறது. இன்னும் சேதாரம் எவ்வளவு அதிகம் ஆகுமோ?  மீண்டும் தூதரை அழைக்கிறார்கள்.  அவர் 'ஜலதோஷம், இப்போ  வரமுடியாது!' என்கிறார்.  அவருக்கு தரப்பட்டிருந்த  கட்டளை "கண்டுக்காதீங்க".   அப்போது ரஷ்ய தூதராக இருந்தவர் பெயர் ஜேக்கப் மாலிக்.

     ரஷ்யாவுக்கு ஜப்பானின் கவலையும், பயமும் முன்னரே தெரியும்.  அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட உளவாளிகளை ஜப்பானில் வைத்திருந்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு இந்த சாக்கில் கொஞ்சம் நாடு பிடிக்கும் ஆசை.  அதை அடைய வேண்டி, நேசநாடுகளிடம் ஜப்பானின் கோரிக்கையை சொல்லாமல் வைக்கிறார்கள். 

     மிகவும் கவலை அடைந்த ஜப்பான் பிரதம மந்திரி,  ஜப்பான் மன்னர் முடி துறக்கவும் தயாராய் இருக்கிறார் என்று  உரியவர்களுக்கு கன்வே செய்கிறார்கள்.  ஜப்பானிய இளவரசரை (கோனாயே)  ரஷ்யாவுக்கு அனுப்பி புல்கானின், ஸ்டாலின், குருஷ்சேவ் போன்றவர்களை சந்திக்க வைக்கலாம் என்று முயற்சித்து அனுமதி கேட்டால், "இப்ப வேணாங்க...  கொஞ்சம் போவட்டும்...  அப்பால வாங்க  என்று பதில் வருகிறது!

     கவலை அதிகரிக்கிறது.  ஏனெனில் ஜப்பான் இனியும் இழப்புகளைத் தாங்கக் கூடிய நிலையில் இல்லை.

     இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி அன்று அமெரிக்க, பிரிட்டன், சீனா மூன்று நாடுகளும் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்று வெளியிடுகின்றன.  அதில் ஜப்பான் உடனடியாக சரணடைய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது.

     "அப்பாடி..." என்று பெருமூச்சு விட்ட ஜப்பான் அந்தத் தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்வதாக செய்தி ஸ்தாபனம் ஒன்றின் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது.  அங்குதான் வருகிறது அனர்த்தமும், ஆபத்தும்!  

     ரஷ்யர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக,  அறிக்கை விஷயம் மூலம் தீர்வு வர வாய்ப்பு வந்து விட்டாலும், தனது உளவாளிகள் மூலம் ரஷ்யா ஒரு தில்லாலங்கடி வேலை செய்கிறது.



     ஜப்பானிய அறிக்கையில் 'மோகுஸாட்ஸு ' என்பதாக ஒரு வார்த்தை கையாளப்பட்டிருந்தது.  அந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள்!  ஜப்பான் மீசையில் மண் ஓட்டவில்லையே என்பது போல 'பொறுத்திருந்து பார்ப்பது' என்கிற அர்த்தத்தில் அதைக் கையாள,  அதன் வேறு அர்த்தமான 'புறக்கனித்தல் என்பதை, அதை வெளியிடும் ஸ்தாபனங்கள் செவ்வனே செய்து ரஷ்யக் கட்டளையை நிறைவேற்றுகின்றன.  மொழி பெயர்த்து முழி பிதுங்க வைத்தவர் டோமே செய்தி ஸ்தாபனத்தில் வேலை செய்து வந்த ரஷ்ய ஒற்றர் ஒருவர்.



     ஜப்பான் கோரிக்கைக்கு இணங்க மறுத்து விட்டது என்று 'புரிந்து கொண்ட' அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை தூக்கிப்போட்டது.   "ஜப்பான் சர்வநாசம் அடையக் கூடாது என்று எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் அதை ஜப்பான் மோகுஸாட்ஸு  ( !! )செய்து விட்டது . எனவே எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார் ட்ரூமன்.

     கதிகலங்கிப்போன ஜப்பான் மீது சந்தடி சாக்கில் ரஷ்யாவும் போர் தொடுத்து மஞ்சூரியாவைப் பிடித்துக் கொண்டது.  கடைசியாக ஜப்பான் சரணடைந்த பின்னும் ரஷ்யா ஆக்கிரமிப்பை நிறுத்தவில்லை   ஜப்பான் கடும் விளைவுகளைச் சந்திக்க மோகுஸாட்ஸு  காரணமானது!


இங்கும் இங்கும்  அதைப்பற்றி படிக்கலாம்.


"ச்சீ....   பாவம் ஜப்பான்" என்று தோன்றுகிறது இல்லை.....  பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் ஜப்பான் பற்றி ஒரு சம்பவம் பகிர்கிறேன்!




தமிழ்மணம்.

66 கருத்துகள்:

  1. வந்தவருக்கும் வர இருப்பவர்க்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. தெரியும்போதே மணி ஆறு ஆகிவிட்டது! ம்ம்ம்ம்ம்ம்! :)

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா அக்கா.. இன்று இரண்டாவதாய்...!

    பதிலளிநீக்கு
  5. இருந்தாலும். ..

    வணக்கம் ஸ்ரீராம்..
    வணக்கம் கீ சா...

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை சகோ கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நான் வாசிக்க அப்புறம் வருகிறேன் ஸ்ரீராம் ஸ்வாரஸ்யமான பதிவு என்று தெரிகிறது...
    சமையலறையிலிருந்து ஓடி வருவதற்குள் 6.2 ஆகி விட்டது!!!!!! அப்படி என்ன அவசரம் என்று கேட்கலாம் ஆனால் இதுவும் ஒரு புத்துணர்ச்சி போல் இருப்பதால்....ஆர்வம்...
    கீதா

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் கீதா ரெங்கன்..

    //இதுவும் ஒரு புத்துணர்ச்சி போல் இருப்பதால்....ஆர்வம்...//

    ஹா... ஹா.. உங்கள் ஆர்வம் எங்கள் மகிழ்ச்சி. உங்கள் மகிழ்ச்சியில் எங்கள் ஆர்வம்!

    பதிலளிநீக்கு
  9. இந்தத் தகவல் முற்றிலும் புதிது! நினைக்கவே வருத்தம். ஓர் நாட்டின் நாடு பிடிக்கும் ஆசையில் இன்னொரு நாட்டின் அப்பாவி மக்கள் எத்தனை பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரோடு இருந்தவர்களிலும் பலர் நடைப்பிணமாக! மனிதனுக்குத் தான் இத்தகைய கொடூர புத்தி! :(

    பதிலளிநீக்கு
  10. அட, துரோகிகளே... ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு போட மூலகர்த்தா ரஷ்யாவோ....???

    பதிலளிநீக்கு
  11. கீதா அக்கா.. நான் அனைவருக்கும் தெரிந்த தகவல் ஒன்றை ஞாபகப் படுத்துவதாய்த்தான் நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  12. அப்படியும் சொல்லலாமோ பாரதி?

    பதிலளிநீக்கு
  13. //கீதா அக்கா.. நான் அனைவருக்கும் தெரிந்த தகவல் ஒன்றை ஞாபகப் படுத்துவதாய்த்தான் நினைத்தேன்.//

    எனக்குத் தெரிந்திருக்கவில்லை ஶ்ரீராம். இதைப் படிச்ச நினைவும் இல்லை!

    பதிலளிநீக்கு
  14. //எனக்குத் தெரிந்திருக்கவில்லை ஶ்ரீராம். இதைப் படிச்ச நினைவும் இல்லை! //

    பகிர்வதன் பலன் புரிகிறது அக்கா. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  15. படித்தேன். விதி வலியது. ஜக்பானியர்கள் செய்த கொடூரம் கொஞ்சநஞ்சமில்லை. லட்சக்கணக்கான இந்தியர்கள், ஆசியர்கள் சாவுக்கு அவர்கள் நேரடிக் காரணம். ஆனால் அதைவிட ஜப்பானியர்களின் எழுச்சி, அவர்களது தேசப் பற்று பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  16. அறியாத தகவல் அறிந்தேன்
    நன்றி நண்பரே
    தம ’+1

    பதிலளிநீக்கு
  17. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி நெல்லைத்தமிழன். ஜப்பானியர் பற்றி ஒரு தகவல் துணுக்கு இதனுடனேயே பகிரலாம் என்று நினைத்துத் தனியாய் எடுத்து வைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  19. என்னே கொடூரம்!...

    விபரீதமாக மொழி பெயர்த்தவனின் மனசாட்சி - அப்படி ஒன்று இருந்திருக்க வாய்ப்பு இல்லை..

    இருந்தாலும் குத்தியிருக்கும் தானே..

    பதிலளிநீக்கு
  20. //.. என்ன என்று தெரியாதவர்களை பசித்த புலி தின்னட்டும்!//

    சே! அதிரா பாவமில்லையா ?

    பதிலளிநீக்கு
  21. காலை வணக்கம். என்னவொரு சதித்திட்டம். எத்தனை உயிரிழப்பு.

    பதிலளிநீக்கு
  22. எனக்கு புதிய தகவல்கள் நன்றி ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
  23. @ ஏகாந்தன் Aekaanthan ! said...

    >>> சே! அதிரா பாவமில்லையா ?..<<<

    ஆகா.. இப்போது தான் கம்பேனி கல்லா.. !?.. இல்லை..இல்லை.. களை கட்டியிருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  24. ஜிஜி.. சாரி, ஸ்ரீஜி, இப்பொழுது நடப்பனவற்றையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை, இரண்டாம் உலகப் போர் காலத்து ராஜதந்திர நடவடிக்கைகள் என்றால்..

    பதிலளிநீக்கு
  25. ஆஹா இண்டைக்கு ஜப்பானுக்குப் போயிட்டாரோ ஸ்ரீராம்:)...
    குண்டுபோட்டதுதான் போட்டாங்க... ஹையோ எங்களைப்போட்டுப் படுத்தியபாடூஊஊஊ... வானம் பார்த்துப் பூமி பார்த்து குப்புறக்கிடந்து பார்த்து உருண்டு பிரண்டெல்லாம் படிக்க வச்சிட்டாங்கோ... குண்டில அழிஞ்ச நகரங்கள்... ஹீரோசிமா, நாகசாயி... ஹையோ பாடமாக்கப்பட்டபாடூஊஊ:)..

    இந்த ஒரு சொல் இரு கருத்துபற்றி நான் ஒரு போஸ்ட் போட்டேன் பின்பு தேடி லிங் தாறேன்ன்ன்...
    பலத்த காத்து குளிர் மழையால ஏதோ சிக்னல் கட்டாச்சாம்ம்ம் வீட்டு வைபை சிவப்பு விளக்கில நிக்குது இப்போ ஹையோ ஹையோ...

    பதிலளிநீக்கு
  26. ////ஏகாந்தன் Aekaanthan !January 4, 2018 at 8:55 AM
    //.. என்ன என்று தெரியாதவர்களை பசித்த புலி தின்னட்டும்!//

    சே! அதிரா பாவமில்லையா////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் நான் அரசியலில் குதிக்க மாட்டேன் என அடம்பிடிப்பது:)... அதில வேறு ச்ச்ச்ச்ச்சும்மா புலி இல்ல... பசித்த புலியாஆ ரோக்கியோப்ப் புத்தரே என்னைக் காப்பாத்துங்ங்ங்:)..

    பதிலளிநீக்கு
  27. ////ஆகா.. இப்போது தான் கம்பேனி கல்லா.. !?.. இல்லை..இல்லை.. களை கட்டியிருக்கின்றது..////

    ஹா ஹா ஹா துரை அண்ணன்... புலி அதிராவைத் தின்னப்போவது.. :) உங்களுக்கு கம்பேஏஏஏஏனி களை கட்டுதோ கர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்கு மேலயும் இந்த உசிறு:) இந்த உடம்பில இருக்கும் எண்டோ நினைக்கிறீங்க.... இப்பவே போறேன்ன்ன்ன்ன்ன் :) விருமாண்டி விலாசுக்கூஊஊ:)... ஏன் தெரியுமோ நல்லாச் சாப்பிட்டால்தானே தெகிறியமா தெம்ம்ம்ம்பா தேம்ஸ்ல ஜம்ப் பண்ணலாம்ம்ம்ம்ம்ம்ம்:)..

    பதிலளிநீக்கு
  28. முதல் 'மோகுஸாட்ஸு'வாக படித்தேன். ஒரு இரட்டை அர்த்த வார்த்தைக்காக போரா, பெரும் அக்கப்போர் ஆயிற்றே !!!

    பதிலளிநீக்கு
  29. அப்பாவி அதிரா..
    புலியா .... நீங்களா... பார்த்துடுவோம்...ஒரு கை!!..

    அதுக்காகத் தான் நான் அப்பிடிச் சொன்னன்..

    இதென்ன .. புலி ஆரு.. புல்லு யாரு ..ந்டு தெரியாம்ப் போச்சே!...

    பதிலளிநீக்கு
  30. முதலில் ஸ்ரீராம் என்னைப் பசித்த புலி தின்றுவிடும்...ஹா ஹா ஹா ஹா..பின்ன அந்து என்ன சமீபத்திய நிகழ்வு தெரியலையே!!!ஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
  31. அதிபயங்கரம்! குள்ளநரித்தனம் தான் என்றாலும் ஜப்பானும் ஒன்றும் லேசுப்பட்டது இல்லை. அவர்களும் பல அழிவுகளூக்குக் காரணமானவர்கள்தான். ஆனால் என்ன பாவம் அதில் அப்பாவி மக்களும் பலியானார்கள் என்ற வருத்தமே. ஆனால் அதன் பின் ஜப்பானின் வளர்ச்சியைக் கண்டு இப்போதும் அமெரிக்காவுக்குப் பயம் உண்டுதான்.

    மோகுஸாட்ஸு இந்தச் செய்தி இதுவரை வாசித்ததில்லை. மிக்க நன்றி ஸ்ரீராம் பகிர்ந்ததற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. ஏகாந்தன் சகோ என்னையும் சேர்த்துக்கோங்க...அதிரா லிஸ்டில் என்னையும் பசித்த புலி தின்னும்...ஹா ஆனால் ஒரு சந்தோஷம் அதிராவும் என்னுடன் என்பதில்...ஹிஹிஹி..

    அதிரா நீங்க எப்படித் தப்பிப்பீங்களோ என்னையும் அதுல சேத்துக்கோங்க...தேம்ஸ்ல ஒளிஞ்சுக்கலாமா அதிரா..

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கீதா அவர்களுக்கு..

    தங்களது மின்னஞ்சலைக் கவனிக்க வில்லையா!..

    பதிலளிநீக்கு
  34. அதிரா கூவம் பெட்டர்....புலி பக்கத்துலயே வராது..ஆனா நாம சகிச்சுக்கணுமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  35. துரை அண்ணன் புலியா பூஸாஆஅ அதையும் பார்த்திடலாம்:)...

    கீதாஆஆஆ இந்த இருட்டுக்கு டமார் எண்டு என் கிட்னியில ஒரு பயமொயி உதிச்சுதே:).... புலி பசித்தாலும் புல்லுத் தின்னாதாமே.... அப்போ ச்ச்ச்சோஓஓ ஈசி... ஆதிகால ஆடை தச்சிட வேண்டிய்துதேன்ன்ன்:)

    என்ன இருந்தாலும் ரோக்கியோப் புத்தர் என்னைக் காப்பாத்திட்டார்ர்ர்ர்ர்ர்:)..

    பதிலளிநீக்கு
  36. சமீபத்திய உதாரணம் எது அல்லதுஇதையா சமீபத்திய என்கிறீர்கள் எப்படியானாலும் மொகுஸாட்ஸு

    பதிலளிநீக்கு
  37. மிகவும் அருமை பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  38. மிகவும் அருமை பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  39. மோகுஸாட்ஸு எனக்கும் படித்ததாக ஞாபகம் இல்லை. புதிய வார்த்தை . அன்புடன்

    பதிலளிநீக்கு
  40. @miyaav athira miyaav :)
    //ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் நான் அரசியலில் குதிக்க மாட்டேன் என அடம்பிடிப்பது:)... அதில வேறு ச்ச்ச்ச்ச்சும்மா புலி இல்ல.//
    மேடம் யார் சொன்னது இது அரசியல்னு உங்களுக்கு :))

    பதிலளிநீக்கு
  41. ஹ்ம்ம் மனுஷங்க எப்பவுமே மோசமானவங்க அந்தக்காலத்தில் எதிரிநாட்டை இப்படி அழிச்சிப்போட்டவங்க இனிவர்ற காலத்தில் தன நாட்டு வீட்டு ஆட்களையே கொன்னு தினனானலும் ஆச்சர்யமில்லை .
    நானும் கேள்விப்பட்டதில்லை மோகுசாட்சு பற்றி ஆனால் ரஷ்ய அமெரிக்காஜப்பானின் கேடுகெட்ட குணங்களை வாசித்துளேன்

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் சகோதரரே

    இதுவரை படித்ததி்ல்லை! ஒரு வார்த்தைக்கு இரு அர்த்தங்கள்.விளைவுகள் பயங்கரம். நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. தகவலுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  43. புதிய தகவல்! தவறான புரிதல் எத்தனை பெரிய விபரீதத்தை விளைவித்து விட்டது..? நிற்க! நான் பசித்த புலியிடமிருந்து தப்பி விட்டேன்,ஏனென்றால் நான் ஒரு ஆன்மீகவாதி, சரிதானே?

    பதிலளிநீக்கு
  44. //இருந்தாலும் குத்தியிருக்கும் தானே..//

    வாங்க துரை செல்வராஜூ ஸார்... இருக்கலாம்!!

    பதிலளிநீக்கு
  45. //சே! அதிரா பாவமில்லையா ?//

    ஹா... ஹா... ஹா... அதுசரி ஏகாந்தன் ஸார்.. பதிவு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
  46. வாங்க வெங்கட். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. வாங்க கில்லர்ஜி. எல்லோரும் புதிய தகவல் என்றே சொல்லி இருப்பது மகிழ்ச்சி. தெரியாத ஒன்றைப் பகிர்ந்து விட்டேன் என்கிற சிறுபிள்ளை சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  48. //ஜிஜி.. சாரி, ஸ்ரீஜி, //

    வாங்க ஜீவி ஸார்...ஏன் இப்படி அழைக்கிறீர்கள் என்று அபுரி!

    பதிலளிநீக்கு
  49. வாங்க அதிரா...

    குண்டு போட்டது பற்றிச் சொன்னதும் உங்கள் சொந்தக் கதை நினைவுக்கு வந்து விட்டதா? வருத்தமாக இருக்கிறது.

    //இதுக்குத்தான் நான் அரசியலில் குதிக்க மாட்டேன் என அடம்பிடிப்பது//

    அதுதான் எங்கள் எல்லோருக்கும் தெரியுமே.... நீங்கள் தேம்ஸில் அல்லவா குதிப்பீர்கள்!

    பதிலளிநீக்கு
  50. ஹலோ ஸ்ரீகாந்த்.. வார்த்தைக்காக போர், அக்கப்போர்... ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க கீதா ரெங்கன்.. சமீபத்து நிகழ்வு என்ன என்று தெரியவில்லையா? ஹா... ஹா... ஹா... நல்லது!

    //குள்ளநரித்தனம் தான் என்றாலும் ஜப்பானும் ஒன்றும் லேசுப்பட்டது இல்லை//

    அதுதான் உலகத்துக்கே தெரியுமே!

    //அதிரா கூவம் பெட்டர்....புலி பக்கத்துலயே வராது//

    புலி கிட்ட வர்ற வாசனைக்கு கூவமே பெட்டர்!!!

    பதிலளிநீக்கு
  52. நன்றி ஜி எம் பி ஸார். பின்னூட்டம் பாதியில் நிற்கிறதோ?

    பதிலளிநீக்கு
  53. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  54. இன்னும் இதுபோன்ற வரலாற்றின் இருண்ட பக்கங்கள் வெளிவராமலே பல மறைக்கப் பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
  55. சொன்ன வார்த்தைக்கும் சொல்லாத அர்த்தத்துக்கும் ஒரு போர்
    நடந்து முடிந்தது.

    அடிபட்டவர்கள் அடிக்கவும் செய்தவர்கள்.
    மாண்டவர்கள் அறியாத மனிதர்கள்.
    எத்தனையோ அனியாயங்கள்.
    பாதிக்கப் பட்டவர்கள் எதிலும் சம்பந்தப் படாத இன்னொசெண்ட்ஸ்.
    அறியாத தகவலைப் பகிர்ந்ததற்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  56. பின்னூட்டம்பதியில் நிற்கிறமாதிரிய இருக்கு எது சமீபத்திய உதாரணம் புரியவில்லை ஒன்று இருக்க இன்னொரு அர்த்தம் கூடாது அக்ல்லவா அதனால்தான் மொகுஸட்ஸு என்றேன்

    பதிலளிநீக்கு
  57. //ஜிஜி.. சாரி, ஸ்ரீஜி, //

    //வாங்க ஜீவி ஸார்...ஏன் இப்படி அழைக்கிறீர்கள் என்று அபுரி! //

    எத்தனை ஜி இருக்கிறது பாருங்கள்.. ஜி+ஜி = ? ஆக,

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!