வியாழன், 15 பிப்ரவரி, 2018

எம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி...


(1)







"...  அதனால்தான் யாருக்கு பட்டம் பதவி வந்தாலும் நான் அது பற்றி கவலைப்படுவது கிடையாது.  அப்படிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தால், இந்த 56 வயதில் துணிந்து பல விஷயங்களை என்னால் செய்து கொண்டிருக்க முடியாது...."

இப்படி எம் ஜி ஆர் சொல்லி இருப்பது 1971 இல்.  பாரத் பட்டம் பெற்றதற்காக நடந்த ஒரு பாராட்டு விழாவில்.

அதே கட்டுரையில் தான் கடந்த 36 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருப்பதாக ஒருமுறை அல்ல, இரண்டு முறை பேசி இருக்கிறார் எம் ஜி ஆர்.



"சுமார் 36 ஆண்டு காலம் சினிமாவில் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  என்னால் பலன் பெற்றவர்கள் எத்தனை பேர் என்று கூறி என்னை உயர்த்திக்கொள்ள விரும்பவில்லை" என்று ஒரு இடத்திலும்,

"36 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்கு ஒரு பரிசு கிடைக்கும்போது அதை நான் ஏன் வாங்க மறுக்கவேண்டும்?" என்று இன்னொரு இடத்திலும் பேசியிருக்கிறார்.  இதெல்லாம் ஒரே மேடைப்பேச்சில் எம் ஜி ஆர் பேசியதுதான்.

ஆயின், எம் ஜி ஆர் 1915 இல் பிறந்தவர் என்றாகிறது.  ஏனெனில் அவர் சினிமாவில் நடித்த முதல் படம் எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் 'சதி லீலாவதி'.  அது 1935 இல் தயாரிப்பில் இருந்து 1936 மார்ச் மாதம் வெளியான படம்.   எனவே முப்பத்தாறு வருடங்கள் என்று அவர் பேசி இருப்பதும் தெரியாமலோ, தவறாகவோ பேசி விடவில்லை என்று தெரிகிறது.  அப்படி இருக்க தன் வயதை அவர் தவறாகச் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இணையங்களிலும், எல்லா இடங்களிலும் விக்கியிலும் எம் ஜி ஆர் 1917 ஜனவரி 17 இல் பிறந்தவர் என்றே சொல்லப் படுகிறது.  எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவும் இந்த வருடம்தான் நடத்தப படுகிறது.  



யார் சொல்வது பொய்?  

இந்த உரையில் அவர் மறைமுகமாக சிவாஜி கணேசனைத் தாக்கியிருக்கிறார்.  அதுவும் மிகை நடிப்பைச் சொல்லி!



========================================================================================


(2)




இந்த வீடியோ உங்களுக்குள் என்ன எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது?  


மனநிலை பிறழ்ந்த நிலையிலும் அவர் உள்ளத்தில் பதிந்திருக்கும் இளையராஜா இசை பற்றி சிந்திக்கிறேன்.  பாடலின் Bhaaவங்களில்தான் என்ன ஒரு ஆவேசம்!

காணொளி காண முடியாத ஒளியாக இருக்கிறதா, காண முடிகிறதா என்று சொல்லுங்கள்.  எனக்கு வாட்ஸாப்பில் வந்தது.



====================================================================================================


[3]


பகிரப்பட்டதில் படித்ததில் ரசித்ததில் (எத்தனை 'தில்?) பிடித்த ஒரு வரி...

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!





======================================================================================================


[4]


ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் நான் கேட்ட பாடல்கள்...   எந்தெந்தப் பாடல்கள் தெரிகிறதா?

>  அருவிமகள் அலையோசை இந்த அழகுமகள் வளையோசை
பொதிகைமலை மழைச்சாரல் உந்தன் பூவிதழின் மதுச்சாரல்...


>  புது அறையில் புகுந்து மணவறையில் கலந்திருக்கக் கல்யாண நாள் வருமோ...


>  தோள்களில் சாய்ந்திட, தோகையை ஏந்திட , யார்... நீ...!


>  நூலை நான் மாலையாக்கிச் சூடட்டுமா...  சூடாக முத்தக்கலை கூறட்டுமா...



>  அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்கச் சொன்னதென்ன... என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்தித்து நின்றதென்ன...
நினைக்கையில் இனிப்பாக இருக்கறா ..
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறாள்


>  கண்ணுக்குள்ளே வா.. நெஞ்சுக்குள்ளே போ போ..





====================================================================================================

[5]







=============================================================================================================




101 கருத்துகள்:

  1. ஆஜர்....உள்ளேன் ஐயா குட்மார்னிங் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு செகன்டில் கண்ணைக் கட்டிடறாங்கப்பா!

    பதிலளிநீக்கு
  4. ஓ இன்னும் moderatio ன் எடுக்கல...ஓகே....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அனுக்கா...வைப் பார்த்ததுக்கு அப்புறமும் ஏண்டா கண்ணு அழுவுறே!!.

    பதிலளிநீக்கு
  6. இப்போ தான் பார்க்கிறேன்....

    அதோகதியா!....

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் கீதா ரெங்கன். இன்று நீங்கதான் ஃபர்ஸ்ட்!!

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம்...
    கருத்துரைத் தடையை எடுத்து விடுங்களேன்....

    புதிரின் விடைகளை மட்டும் பூட்டி வைக்கலாமே...

    அன்பு உள்ளங்களின் கருத்துரையைக் காணாமல் ஏதோ போல்ச் உள்ளது...

    பதிலளிநீக்கு
  10. கருத்துத்தடையை எடுத்து விட்டேன் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  11. ஹாஹாஹா, எம்ஜிஆர் பற்றிய தகவல்கள் சுவாரசியம் எனில் அந்தக் குடிகாரர் பாடுவதையும் ரசித்திருப்பது சகிக்கவில்லை எனில், கடவுளைப் பற்றிக் கூறி இருப்பதை ரசிக்கும் அதே சமயம், நீங்கள் கேட்ட பாடல்கள் எதையும் நான் கேட்டதில்லை என்னும்போது மன்மதனைக் குறித்து நீங்கள் சொல்லி இருப்பது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. ஐகான்களிலேயே கருத்துச் சொன்னதும் அருமை! நல்ல கற்பனை!

    பதிலளிநீக்கு
  12. நன்றி...

    ஆனாலும் நான் சொன்ன வாழ்த்து போனது எங்கே??..

    அனுக்காவிடமோ!..

    பதிலளிநீக்கு
  13. ஒரு வேகமான விமர்சனத்துக்கு நன்றி கீதா அக்கா...

    பதிலளிநீக்கு
  14. // ஆனாலும் நான் சொன்ன வாழ்த்து போனது எங்கே??..//

    ஸ்பாமிலிருந்து இங்கு அதையும் தள்ளி விட்டு விட்டேன் துரை ஸார்.

    பதிலளிநீக்கு
  15. குடிகாரர் வீடியோ அதற்குள் பார்த்து விட்டீர்களா கீதா அக்கா?!!! அப்படீன்னா காணொளி ரன் ஆகுது!

    பதிலளிநீக்கு
  16. துரை தான் ஃபர்ஷ்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))) இந்த தி/கீதாவும் முந்திட்டாங்க! நறநறநறநற :))))))))

    பதிலளிநீக்கு
  17. குடிகாரர் பாடுவது கே.ஜே.யேசுதாஸின் குரல் போலவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலும் 'குடி'காரர் பாடுவது 'தோடி'ராகம் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  18. வணக்கம்
    மக்கள் மனதை விட்டு அகலாத மாமனிதர் பற்றி சொல்லியமை சிறப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. காலையின் அழகைக்கெடுக்கும் கொடூரம்... அந்த இனிய பாடலை அந்த ஆள் குதறுவது....!!!!!

    பதிலளிநீக்கு
  20. இப்போ தான் பார்க்கிறேன்....

    அதோகதியா!..//

    துரை அண்ணாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நீங்கதான் ஃபர்ஸ்டூஉ ஆனா பாருங்க இந்த ப்ளாகர் செய்த கோலத்தை!!! ஹும்..ரொம்ப கொழுப்பு கூடிப் போச்...ப்ளாகருக்கு!!

    ஹா ஹா ஹா ஹா கீதாக்கா உங்கலை நற நற/கர்ர்ர் னு சொல்ல வைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் எனக்கு!!! ஹா ஹா ஹா அதை மிகவும் ரசிக்கிறேன் கீதாக்கா!!!! சின்னக் குழந்தைகளா இங்க நாம் எல்லாரும் விளையாடறதுக்கு ரொம்பப் புத்துணர்வா இருக்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. துளசி: எம்ஜிஆர் பற்றிய தகவல்கள் அவரது மேடைப் பேச்சு பற்றி எப்போதோ என் கல்லூரிக் காலத்தில் வாசித்த நினைவு. ஏதோ ஒரு பழைய இதழில்..சரியாக நினைவில்லை..மறந்து விட்டது. இப்போது உங்கள் பதிவில் அறிய முடிகிறது. அவருடைய வயது எது சரி என்பது எனக்கும் எழுந்தது உண்டு...

    கீதா: இன்று காலை எம்ஜிஆர் இங்கு கண்ணில் பட்டார்...உடனே என்ன விசேஷமா இருக்கும் இன்று அப்படினு தோன்றியது....சுவர்களிலும் போஸ்டர்கள்...கண் கண்ட தெய்வம் என்றெல்லாம்....போட்டிருக்காங்க. உங்க பதிவிலிருந்து அவர் பிறந்த நாளும் இல்லைனு தெரியுது...

    எம்ஜிஆர் தகவல்கள் ஸ்வாரஸ்யமா இருக்கு

    பதிலளிநீக்கு
  22. ஸ்வாரஸ்யம். காணொளி காணமுடிகிறது. கேட்கத்தான் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  23. எம்.ஜி.ஆர். பற்றிய தகவல் ஸ்வாரஸ்யம்!.
    சங்கீதத்தில் முன்னேற வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் இப்படி ஆகி விட்டாரோ?
    முதல் பாடல் என்னவென்று நீங்களே கூறி விட்டீர்கள்.
    இரண்டாவது பாடல் "கூந்லிலே நீர் தடவி குளிர் விழியில் மை தடவி..."
    வேலன்டைன்ஸ் டே சிறப்பு கவிதை அருமை!
    அனுஷ்கா படத்தை பார்த்ததும் நினைவுக்கு வருகிறது,பாகமதி பார்த்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  24. Back in Delhi after frequent travels.

    எம்.ஜி.ஆர்.பற்றி என்னத்தச் சொல்ல. செகப்பு பேண்ட்டு, மஞ்ச சட்ட, ரோஸ் கலர்
    டை, கட்டிப்பிடித்து உருள கொழு கொழு நடிகைகள்.. நடிக்கத்தெரியாத ‘நடிகன்’. ஏதோ முப்பது நாப்பது வருசம் சுக்ர தெசை! இந்த ஆளு சிவாஜியின் ஓவர் நடிப்பைப்பற்றிக் கமெண்ட் அடிச்சிருக்காரா, வேணும் சிவாஜிக்கு!

    ‘யார்டா அவன்? நடிகனா? போய் மூட்ட தூக்கச்சொல்லு..அதுக்குத்தான் அவன் லாயக்கு !’ – புரட்சி நடிகர்பற்றி சந்திரபாபு சொன்னதாகப் படித்திருக்கிறேன். சரி விடுங்க.

    **
    Video is disturbing. இது மனம்பிறழ்ந்த நிலையிலும் இசையின் தாக்கம்.
    மனம் சரியாக இருக்கையிலும், இசையின் உன்னத நிலையில்..அது கூட்டிச்செல்லும் ஆழத்தில் - இசைப்பவனுமில்லை..கேட்பவனுமில்லை.
    **
    கடவுள் எதற்காக ‘தெரிய’வேண்டும்? புரியவில்லை.

    **
    பகிர்ந்த பாடல்வரிகளில்…கல்யாண நாள் வருமோ..’ என்கிற வரிகள் நினைவில் வந்தும் வராமலும்..
    ‘கண்ணுக்குளே வா..நெஞ்சுக்குளே போ.’ என்ன இது புலம்பல்? காதலல்ல இது. ஏதோ ஒரு
    அரேஞ்சுமெண்ட்டுக்கான அப்ளிகேஷன்.

    **
    கையில் தாமரை, ரோஜா மல்லிகை, முல்லை, என்று விதவிதமான புஷ்பங்களுடன் அனுஷ்கா படங்கள் நிறைய ஸ்டாக்கில் இருக்கிறதோ!

    பதிலளிநீக்கு
  25. உங்கள் மன்மதக் கவிதையில் கடைசிவரிக்கு முந்தைய ‘எதிர்வினையன்றி’ என்கிற வரி அவசியமில்லை எனத் தோன்றுகிறது.

    இந்த மன்மதனைப்பற்றி அதிகம் நான் சிந்தித்ததில்லை. பல வருடங்களுக்குமுன், மனம் பிறழ்ந்த ஒரு நிலையில், சிந்தனையில்அவன் வந்தபோது, இப்படி எழுதினேன் ஒரு கவிதை :

    மன்மதா !
    உலகெங்கும் நீ
    மலரம்பு எய்தி
    மகிழ்விப்பதாய்க் கேள்வி..
    என்மீது மட்டுமேன்
    நிஜ அம்பையே எய்துவிட்டாய் ?

    -ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
  26. கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!//

    இருவரும் ரசித்தோம்...

    கீதா: நான் அடிக்கடிச் சொல்லுவது...நாம் தான் கடவுள்னா இப்படி இருப்பார் என்று ஒரு உருவம் வடித்து வைத்துள்ளோம்...நமக்கு மனதில் நினைத்து எளிதாகப் பிரார்த்தனை செய்வதற்காக அதுவும் கலர்ஃபுல்லாக...ஆனால் தெய்வம் எந்த ரூபத்திலும் நம் முன் இருக்கலாம்...நமக்கு அதை அறியும் அறிவு...விஸ்டம் இல்லை என்று...ரொம்ப ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்...

    பதிலளிநீக்கு
  27. காணொளி அவர் குடிகாரனோ, மனநிலை பிறழ்ந்தவரோ...மனம் என்னவோ செய்தது..

    கீதா: அவரை முதலில் நான் குடித்துவிட்டுப் பாடுகிறார் என்று தோன்றியது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது மனநிலை சரியில்லாதவர் என்று...பாவம் எந்த நிலையிலும் ராஜாவின் இசை அவருள் பதிந்திருப்பது இசையின் தாக்கம் என்பது அதை விரும்புவர்களுக்கு எந்த நிலையிலும் வெளிப்படலாம்...

    பதிலளிநீக்கு
  28. >>> சின்னக் குழந்தைகளா இங்க நாம் எல்லாரும் விளையாடறதுக்கு ரொம்பப் புத்துணர்வா இருக்கு!... <<<

    - கீதா

    விடியற்காலையில் பனிச் சாரலில் நின்று கொண்டு முதல் கருத்தைப் போட்டதும் -

    உன் கருத்தை அப்புறமா காட்டுறோம்.. இப்போ போயி வேலையப் பாரு!.. போய்யா.. போ!..

    - அப்படி..ன்னு புளாக்கர் சொன்னதும் மனசு தாங்க முடியலை..

    என்னடா இது.. எங்க(!) பிளாக்கு..க்கு வந்த சோதனை.. - ந்னு ஆயிடிச்சு...
    இனிமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்.. நற..நற..நற..நற..நற..நற..நற.. - இதையெல்லாம் ரசிக்க முடியாதா..ன்னு இருந்துச்சு..

    இருந்தாலும் மனசை தேத்திக்கிட்டு ராமுக்கு விண்ணப்பம் போட்டு விட்டேன்...

    கணப் பொழுதில் சரசர... ந்னு கருத்து மழை!... ஆகா...ன்னு இருந்துச்சு...
    விண்ணப்பம் போட்டதுக்கு தேங்காய்ப்பால் ஆப்பம் சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு..

    எல்லாம் அந்த புதிர் பரிட்சையினால் வந்தது!.. கர்ர்ர்ர்ர்ர்ர்!...

    (ஏ... சாமீ.. மறுபடியும் கர்ர்ர்ர்ர்ர்ர்!... - ஆ!)

    இல்லை.. இது சும்மா!...
    என்றென்றும் வாழ்க எங்கள் பிளாக்!...

    பதிலளிநீக்கு
  29. எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன்' புத்தகம் என்னிடம் இருக்கிறது. பார்த்துச் சொல்கிறேன். அவருக்கு 'பாரத்' கிடைத்ததே controversy யினால்தான். தேர்வுக்குழு சிவாஜிக்கு என்று நினைத்திருந்தது. ஆனால் ஒரு தவறினால், எம்ஜியாருக்குக் கொடுக்கப்பட்டது.

    'கடவுளுக்கு உருவம்' - சிந்தனைக்கு உரியது. நாம் சக்கையை எடுத்துக்கொண்டு சாரத்தை தூரப்போட்டுவிடுகிறோம். கான்செப்டைப் புரிந்துகொள்ளாமல், உருவத்தை மாத்திரம் புரிந்துகொள்கிறோம். (அறை எண் 305? ல் கடவுள் படம் பார்த்தீர்களோ?)

    "அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்கச் சொன்னதென்ன, வரத் தாமதம் செய்ததென்ன
    என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்தித்து நின்றதென்ன..வாழ்வைச் சந்திக்கச் சென்றதென்ன" என்று இருந்தால், 'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன்.. பாடலின் சரணம் போல் வரும்'. மற்றபடி எந்தப் பாடலையும் அடையாளம் காணத் தெரியலை.

    அனுஷ்கா படங்களை வச்சுக்கிட்டு, ஒண்ணொண்ணுக்கா கவிதை எழுதிப் பார்க்கறீங்களா (இல்லைனா எப்படி வெளியிடறது) அல்லது கவிதை எழுதிட்டு, அனுஷ்காவை (படத்தைச் சொன்னேன்) தேடறீங்களா?

    பதிலளிநீக்கு
  30. கவிதை அருமை ஸ்ரீராம். ரசித்தென்..

    கீதா: ஹப்பா இப்படி மாஞ்சு மாஞ்சு ஒரு காலத்துல எழுதினீங்க போல!!! இப்பல்லாம் இப்படி எழுதறது இல்லையா?!!!! ரசித்தென் ஸ்ரீராம். நல்லாருக்குது...அது சரி எல்லா பொம்மையும் அழகா சூப்பரா போட்டுருக்கீங்க...ஆனா எதுக்குக் கவிதைக்குப் போட்டது மட்டும் கண்ணீர் விடுது??!!! அனுஷ்காவுக்குக் கல்யாணம் ஃபிகக்ஸ் ஆகி தன் படத்தை இங்குப் போடக் கூடாதுனு சொல்லிட்டாங்களா? ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  31. பாடல்கள் முதல் வரி என்றாலாவது தெரிய சான்ஸ் இருக்கு ஆனா இப்படி இடையில்கொடுத்தால் எனக்கெல்லாம் கஷ்டம் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  32. தகவல் அனைத்தும் அருமை பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  33. அட!!!!!!!! இதான் அனுஷ்காவா? அப்படி ஒண்ணும் அழகா இல்லையே! (ஹிஹிஹி) எல்லோரும் சொன்னதும் அடடா, பார்க்காமல் விட்டுட்டோமேனு ஓடோடி வந்தா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவங்க முகம் தெரியும். பெயர் இன்னிக்குத் தான் தெரியும்! :))

    பதிலளிநீக்கு
  34. கீசா மேடம்... உங்களுக்கு என்ன ஆச்சு? சமீப காலங்களில் ஸ்ரீராம் போட்ட அனுஷ்கா படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த வாரம் போட்டிருக்கும் படம்தான். 'அழகா இல்லையே' என்று சொல்றீங்க? (எந்தப் பெண் இன்னொரு பெண்ணை அழகு என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்? ஆண்கள் போல் magnanimity பெண்களுக்கு வராது என்று சொன்னால் அதில் உண்மை இல்லாமலில்லை. (நான், எனது என்று ஆண்கள் selfishஆக இருப்பதில்லை. மற்றவர்களையும் (மற்றவர்களைத்தான்? ) இன்னும் பாராட்டுவோம்)

    பதிலளிநீக்கு
  35. நெ.த. ஹிஹிஹி போட்டும் :))))) போட்டும் இதை சீரியஸா எடுத்துட்டு இருக்கிறதாலே ஶ்ரீராமை விட நீங்க தான் அனுஷ்காவின் ரசிகர்னு நினைக்கிறேன். ஹிஹிஹி
    அந்தக் கருத்து ஶ்ரீராமை வம்பிழுக்கப் போட்டது. அவர் பார்த்தால் புரிஞ்சுட்டு இருப்பார்.

    அப்புறமா இன்னொரு தகவல் நடிகைகளில் அழகானவர், உண்மையிலேயே சித்திரத்தில் எழுதுவது போல் அழகானவர் முன்னாள் முதல்வர் மட்டுமே! அதுக்கப்புறமாக் காஞ்சனாவைக் கொஞ்சம் சொல்லலாம். ஆனாலும் ஜெ மாதிரி அழகான கதாநாயகியை அப்புறம் கூடப் பார்த்தது இல்லை. அந்த உயரம், நிறம், கன்னத்தில் ரொம்பச் சின்னதாய் நுணுக்கமாய்க் கவனித்தால் மட்டுமே தெரியும் சுழி, கண்கள், தலைமயிரின் நீளம், உடல் வாகுனு அணு அணுவாய் வர்ணிக்கலாம். காஞ்சனா நல்ல நிறம். அழகான கண்கள். வாய்ப்பக்கம் கொஞ்சம் சப்பையா இருக்கிறாப்போல் தோணும்.

    பதிலளிநீக்கு
  36. >>> காஞ்சனா நல்ல நிறம். அழகான கண்கள்!..<<<

    ஆகா!...

    அந்த இயற்கை எனும் இளைய கன்னி எனும் பாடல் தான் எத்தனை இனிமை..

    மறுபடியும் -

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  37. காணொளி கண்டேன் . எந்த அளவு அவர் இசையை ரசித்திருக்கிறாரா என்பதை விட இளையராஜா எந்த அளவு இவர் மனதில் ஆழ ஊடுருவியிருக்கிறார் என் வியப்பளிக்கிறது .

    கடவுள் !!..
    எங்கும் எதிலும் மனிதர் செய்யும் நற்செயல்களிலும் இருக்கிறார் :) வெவ்வேறு வடிவத்தில்

    கேட்ட பாடல்கள் லிங்கோட தந்திருந்த நாங்களும் கேட்டிருப்போம்ல :)
    தேர்ந்தெடுத்த வரிகள் எல்லாம் சூப்பர் :
    //
    கண்ணுக்குள்ளே வா.. நெஞ்சுக்குள்ளே போ போ..// அட்டகாசம்

    கவிதை .

    என்னது // கிளித்தேரா // இருங்க மேனகா காந்திகிட்ட போட்டுக்கொடுக்கிறேன்
    கிளியை தேரோட்ட விட்டவரை விட அதை ரசிச்சவருக்கு தான் பனிஷ்மெண்ட்டாம் :)

    பதிலளிநீக்கு
  38. யெஸ் எஸ் :) கீதா அக்கா நான் உங்களை அப்படியே வழிமொழிகிறேன் ஹை 5 :)
    முன்னாள் முதல்வர் ஓவியம் போன்ற அழகு அந்த குரல் நிறம் நளினம் ஒய்யாரம் அவங்க மட்டுமே .
    மற்ற நடிகைகள் அழகுதான் ஆனாலும் இவங்களை காலம் கடந்தும் ரசிக்கிறோம் அதுவே க்ரேட்

    பதிலளிநீக்கு
  39. வெட்டி ஆராய்ச்சியும் நல்லாதான் இருக்கிறது.
    நிறைய விஷயங்கள் எம்.ஜி.ஆர் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.
    பாடல்களில் ஒரு பாடல் தெரிந்தது அதை பானுமதி சொல்லி விட்டார்.
    உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
    நேற்று தானே காதலர்தினம் !
    இன்று காதல் பாட்டுக்கள் காதல் கவிதை என்று பதிவு அன்பு உலா வருதே!

    பதிலளிநீக்கு
  40. ஹா ஹா ஹா ஹையோ சத்து இருங்கோ சிரிச்சு உருண்டிட்டு வாறேன்ன்:) பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்:)) இண்டைக்கும் கீசாக்கா 1ஸ்ட்டு இல்லேஏஏஏஏஏஏஏ:) சவுண்ட் மட்டும்தேன் வருது:) ஹா ஹா ஹா..

    எம் ஜி ஆர் அவர்கள் பற்றிய அலசல் தெரிந்து கொண்டேன்.. எனக்கென்னமோ அவரிலும் அவர் பற்றிய விடயங்களிலும் ஆர்வம் இல்லை, ஆனா அவரின் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  41. ///இந்த வீடியோ உங்களுக்குள் என்ன எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது? ///
    ஹா ஹா ஹா உடனே பாய்ஞ்சு வீடியோவை ஓஃப் பண்ணோனும் எனத்தான் தோன்றியது.. நிறுத்திட்டேன்:)..

    //​ கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!//

    நிஜமான வரிகள்.. நிறைய சிந்திக்க வைக்கும் வரி.. இவ்ளோ காலமும் எத்தனை கடவுள்களை எல்லாம் மிஸ் பண்ணிட்டேனோ:))...

    பதிலளிநீக்கு
  42. ///ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் நான் கேட்ட பாடல்கள்... எந்தெந்தப் பாடல்கள் தெரிகிறதா?//

    மயக்கம் வந்ததோ ஸ்ரீராம்?:).. இதில் எந்தப் பாட்டும் எனக்குத்தெரியுதில்லை.. கேட்டதாக நினைவில்லை.

    ஆஹா ஆஹா அனுக்கா அழகில் சொக்கிட்டேன் எனச் சொல்கிறார் கவிஞர்:)..

    ஆர் என்ன ஜொன்னாலும் அனுக்கா அழகுதான் ஆனா நான் அனுக்கா ரசிகையில்லை:), அனுக்கா மன்ற உறுப்பினரும் இல்லை:).. மீ ஹன்ஷிகா ரசிகை... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ன ஒரு அழகு என்ன ஒரு துடிப்பு அவ்வ்வ்வ்வ் எனக்கு ஹன்ஷிகாவைத்தான் ரொம்பப் பிடிக்குமாக்கும்:)).. ஹாஅ ஹா ஹா நானும் ஒரு மன்றம் ஆரம்பிக்க ஓசிக்கிறேன்:) கீசாக்கா நீங்க சேருவீங்களோ இதிலயாவது?:)..

    பதிலளிநீக்கு
  43. @நெல்லைத்தமிழன்

    // ஆண்கள் போல் magnanimity பெண்களுக்கு வராது என்று சொன்னால் அதில் உண்மை இல்லாமலில்லை//

    noo :) அப்படி சொல்லக்கூடாது எனக்கு எதுக்குன்னே தெரியாது ஏன்னு தெரியாதது ஆனா ஓவி செல்லத்தை பிடிக்கும் :) அப்புறம் ஒரு கானா பாட்டு அட்டு னு ஒரு படம் அதில் வரும் ஹீரோயின் அழகுன்னா அழகு தெரியுமோ :)
    பாட்டு பேர் கை நிறையக்கண்ணாடி வளையல் சத்தம் ..
    கேரளா ஹீரோயின்ஸில் பார்வதி பிடிக்கும் இப்படி நிறைய சொல்வேன் .

    பதிலளிநீக்கு
  44. நான் அழகுன்னு சொல்றது அவங்க சின்ன சின்ன முக அசைவுகள் அப்புறம் மேக்கப் இல்லா முகம் :)

    பதிலளிநீக்கு
  45. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏஞ்சலுக்குக் கொடுத்த பதில் கருத்து காக்கா ஊஷ்! :( ஏஞ்சல், நான் ஜெ. அவர்களை வெண்ணிற ஆடை படத்திலே நடிக்கும்போதே பார்த்திருக்கேன். எங்க வீடு மதுரையின் மேலாவணி மூல வீதியில் இருந்தது. அதுக்கு நேர் எதிரே சித்ராலயா சினிமாக் கம்பெனி அலுவலகம். ஊழியர்கள் முதல்லேயே சொல்லிடுவாங்க இந்த நடிகர், நடிகை வரப் போறாங்கனு! நாங்களும் தயாரா இருப்போம். கிட்டக்கன்னா ரொம்பக் கிட்டத்திலே தொட்டு விடும் தூரம்! பார்த்திருக்கேன். முத்துராமன், காஞ்சனா, ராஜஶ்ரீ, ரவிச்சந்திரன், மூர்த்தி, நாகேஷ், சச்சு ஆகிய எல்லோரையும் பார்த்திருக்கேன். ஒரு முறை காஞ்சனா சாப்பிடும்போது ஊறுகாய் கேட்க, எங்க வீட்டில் வந்து வாங்கிட்டுப் போனாங்க. மாவடு. அதைச் சாப்பிட்ட காஞ்சனா இதே மாதிரிப் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கனு சொல்லி எங்க அம்மாவும் போட்டுக் கொடுத்திருக்காங்க! இப்போ நினைச்சாலும் அதெல்லாம் கனவு மாதிரியும், இப்படி எல்லாமா நடந்தது என்னும்படியும் இருக்கு! :)))) கே.ஆர்.விஜயா, ஜிவாஜி, எம்ஜார்னு எல்லோரையும் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  46. ரவிச்சந்திரன் மட்டும் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். ஜெ. அப்போதே பேசலை! அவங்க அம்மாவெல்லாம் அவங்க கூட வரலை! வேறே யாரோ ஒரு பெண்மணி கூட வந்திருந்தார். ரொம்ப அழகுன்னா அழகு! உள்ளார்ந்த சோகம் கண்களிலே தெரியும்.

    பதிலளிநீக்கு
  47. @geethaa akka
    ஆமாங்க்கா :( அந்த உள்ளார்ந்த சோகம் நானும் கவனிச்சிருக்கேன். அவங்க ஒரு captive பிரின்செஸ் .என்னமோ தெரில ஒரு பரிதாப உணர்வு வருவதை தடுக்க முடில .முன்னாள் முதல்வரை எங்கம்மா ஸ்கூல் டேஸில் சந்திச்சிருக்காங்க 14 /15 வயசில் முமு அப்போ சர்ச் பார்க் கான்வென்ட் எங்கம்மா செயின்ட் ஜோசப்ஸ் எதோ பள்ளிக்கூட ஸ்போர்ட்ஸ் விழாவில் பார்த்ததா சொன்னாங்க அப்போவே அனைவருக்கும் நடுநாயகமா தெரிஞ்சாங்களாம் .. .காஞ்சானா வும் ஏர் ஹோஸ்டஸா இருந்தவங்க செம் அழகு .

    பதிலளிநீக்கு
  48. ஹாங்..! சொல்ல நினைத்து மயங்கி சீ, மறந்து விட்டேன். அந்த கடவுள் விஷயம் சூப்பர்! பல மகான்களே நேரே வந்த கடவுளை புரியாமல் கோட்டை விட்டிருக்கிறார்களே.

    பதிலளிநீக்கு
  49. வாவ் !! இத்தனை பேரை பார்த்திருக்கீங்களா .இந்த காலாம்னா சட்டுனு செல்பி எடுப்பாங்க நினைவுகள் மனசில் இருப்பதும் அழகுதான் நினைத்து பார்க்கலாம் எப்பவும்

    பதிலளிநீக்கு
  50. 'அந்தி கருக்கலில்..' இது 'ஏழு கடல் சீமை, அதை ஆளுகின்ற நேர்மை, இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா' பாட்டில் வரும் வரிகள்தானே? காலையிலிருந்து மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்த பாடலின் ஆரம்பம் இப்போதுதான் பளிச்சிட்டது. செம ட்யூப் லைட் இல்ல? நேற்று இந்த பல்ப் கூட எரியவில்லை.

    பதிலளிநீக்கு
  51. கீதா அக்கா வைஜயந்தி மாலாவையுவம், பத்மினியையும் எப்படி மறந்தீர்கள்? அந்த நிறம், உயரம், பேசும் கண்கள்.. மறக்க கூடியவையா?
    வை.மா.வின் ஸ்பெஷல் எல்லா உடைகளும் அவருக்கு சிக்கென்று பொருந்தும்.
    காஞ்சனா அழகுதான் ஆனால் நடிகர் களுக்கு அத்தியாவசியமான ஸ்கீரீன் ப்ரெசன்ஸ் கொஞ்சம் குறைவு.ஸ்கீரீன் ப்ரெசன்ஸ் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ரஜினிகாந்திற்கும், அனுஷ்காவிற்கும் ஸ்கீரீன் ப்ரெசன்ஸ் 200%

    ஜெ.நிகரில்லாத அழகுதான் ஆனால் எந்த கதாநாயகனோடும் ஓட்டாமல் தனித்து நிற்பார்.

    பதிலளிநீக்கு
  52. பானுமதி! வைஜயந்தியை நேரில் பார்த்தது இல்லை. அதோடு மிகப் ப்ழைய நடிகை. பத்மினியையும் பார்த்ததில்லை. என்றாலும் அவர்கள் மூவரில் லலிதா கொஞ்சம் அழகோடு சேர்த்தி! பத்மினியின் நாட்டியமோ, உடல் மொழியோ, அசைவுகளோ எதுவுமே எனக்குப்பிடிக்காது. நளினம் என்பது இயல்பாக வர வேண்டும். பத்மினிக்கு வரவழைத்துக் கொண்ட நளினம். நாட்டியத்தில் நளினம் எனில் முதலில் பாலசரஸ்வதி(ஹிஹிஹி, அவங்க வயசாகி ஆடினதைப் பார்த்தேன்.எனக்கு அப்போச் சின்ன வயசு) அடுத்து என்றென்றும் குமாரியாக இருக்கும் கமலா! கமலாவின் நடனத்தைப் பார்த்தால் பத்மினியெல்லாம் கிட்டேயே வர முடியாது! கடுமையான பயிற்சி பத்மினிக்கு. கமலாவுக்கு நடையே நாட்டியம் தான். இயல்பாக அவர் இருப்பதே அபிநயம்! கண்கள் மட்டும் இல்லை. உடல் மொத்தமும் பேசும்! இவருக்கும் கொஞ்சம் சப்பை வாய் தான். எனினும் அவர் நடனம் அதை மறக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  53. ஹையோ குமாரி கமலா டான்ஸ் எங்கம்மா என்னை டிவி முன்னே உக்கார வச்சி பாக்க வப்பாங்க ரெண்டு ஜடை போட்டு பாவாடை சட்டை போட்டு கியூட் .மஹா !காந்தி மஹான் என்னமா ஆடுவாங்க சூப்பர் :) ரொம்ப வருஷம் கழிச்சி யூ டியூபில் இன்னிக்கு உங்க புண்யத்தில் பார்த்து ரசித்தேன் :)
    பாலசரஸ்வதி பார்த்ததில்லை இப்போ லிங்க் தேடி பார்த்தேன் .செம நளினம் ..கிருஷ்ணா நீ பேகனே !! பார்த்திட்டே இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  54. ஆமாம், ஏஞ்சல், கிருஷ்ணனே நீ பேகனே பாரோ என அவங்க அழைக்கையில் அந்தக் கண்ணனே ஓடோடி வந்துடுவான். அவ்வளவு அழகான நளினமான பாவம்,அபிநயம். இதெல்லாம் பத்மினியின் நாட்டியத்தில் வலிந்து வரவழைக்கப்பட்டிருக்கும். வைஜயந்தியும் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். என்றாலும் இந்த எண்பது வயது தாண்டியும் அவங்க நடனம் ஆடுவது பாராட்டத் தக்கது.

    பதிலளிநீக்கு
  55. அது சரி, ஶ்ரீராம் எங்கே? மறுபடி பயணம்? அல்லது மைக்ரேன்? அல்லது உறவினர் வருகை? அல்லது வேலையில் பிசி? இப்போல்லாம் ஒண்ணும் சொல்லறதே இல்லையா, அதான் எதுவுமே தெரியலை! :)))))

    பதிலளிநீக்கு
  56. பத்மினியின் நடனத்தில் கிரேஸ் கொஞ்சம் குறைவுதான். அவயம் பாலமுரளி கிருஷ்ணா ஒரு முறை,"இந்த வழுவூரார் பாணி வந்து கிரேஸ், கிரேஸ் என்று நாட்டியத்தையே கெடுத்து விட்டார்கள்" என்று கூறினார். கலாஷேத்ரா பாணியில் கூட கிரேஸ் குறைச்சல்தான். நீங்கள் சொல்லியிருப்பது போல கிரேஸ் என்பது இயல்பாக வர வேண்டிய விஷயம். பத்மினியின் நடனம் தீர்மானமாக இருக்கும். அதற்காக அவர் அழகு குறைச்சல் என்று கூறிவிட முடியாது.

    ஏஞ்சல் கூறியிருப்பதை போல பார்வதி கூட மிக அழகாக இருப்பார் நான் நேரில் பார்த்திருக்கிறேன். கீதாவை பார்த்து விட்டு சொக்கிப் போனேன். ஐஸ்வர்யா ராயை எப்படி மறந்தோம்?

    ஆங்கில பட நாயகிகளில் ஜெனிஃபர் லோஃபர்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ் இருவரும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  57. ஹாஹா :) பானுக்கா ஐஸ் லாம் மஸ்காரா ரூஜ் அழகி :)
    நாங்க நேச்சுரல் பிய்யூட்டிஸ் மட்டுமே கணக்கெடுப்போம் :)
    ஆவ் !!j .lo வா :) எனக்கு ஜெனி அனிஸ்டன் .பெனிலோப் க்ரூஸ் பிடிக்கும் :)

    @நெல்லைத்தமிழன் இந்த கமெண்ட்ஸையேல்லாம் நல்லா வாசிக்கவும்

    ஸ்ரீராம் நெல்லைத்தமிழணலாம் கடுப்பாகரத்துக்குள்ளே மீ எஜிகேப் :)
    வாங்க கீதாக்கா ஓடிடலாம் :)

    பதிலளிநீக்கு
  58. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அனைத்தும் நன்றாக இருந்தது. எம் ஜி ஆர் சுவாரஸ்யமான தகவல். கவிதை மிக அருமை. கடவுள் பற்றி கூறியிருப்பது உண்மை. குடிகாரர் போல் காணப்பட்டாலும், மனநிலை பாதிக்கபட்டவர் என நீங்கள் சுட்டி காட்டியிருப்பதால், அவரை பார்க்கும் போது கஸ்டமாக இருக்கிறது.பாவம்.
    புதிர் பாடல்களில் முதல் பாட்டும் இரண்டாவதாக "கல்யாணநாள் வருமோ" அடிக்கடி கேட்டிருக்கிறேன்.மற்றவை தெரியவில்லை.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.



    பதிலளிநீக்கு
  59. எம் ஜீ ஆர் தொட்டு, வைமா, பத்மினி எல்லாம் அலசியாச்சு.
    குடித்துவிட்டு வெறியோடு பாடும் மனிதரைப் பார்த்தால் பரிதாபம் தான். எங்கே ஏமாந்தாரோ.இளைய ராஜவுக்காகவ பாடியிருக்கார்.
    பாட்டுக்கு உயிர் கொடுக்க முயற்சித்திருக்கிறார்,.

    எம் ஜி ஆரின் 66 வரைக்குமான படங்கள்பிடிக்கும். பிறகு ஒரே சப்பாத்தி மாவுப் பிசைதல் தான்.
    ந்னடிகைகளில் வைஜயந்தி மாலவின் முக அழகை மதுமதியில்பார்க்க வேண்டும். வாழ்க்கை படத்திலும்தான்.
    பத்மினிக்கு ஆண்மை நடை. நளினம் குறைவுதான்.
    ஜெ சூப்பர்.உடல்வாகு வெகு சிக்.
    நடனம் சூப்பர்.
    நடிப்பும் சொல்லி முடியாது. பாவப்பட்ட மனுஷி.
    காஞ்சனா அழகிதான். நடிப்பு சோபிக்கவில்லை.
    ஸ்ரீராம் கவிதை சூப்பர். வீட்டில பாஸ் படிச்சாங்களோ.

    பதிலளிநீக்கு
  60. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  61. வாங்க கில்லர்ஜி...

    //கே ஜெ யேசுதாஸ் குரல், தோடி ராகம்...//

    செம கலாய்!

    பதிலளிநீக்கு
  62. வாங்க ரூபன்... ரொம்ப நாளாய் ஆளைக்காணோம்?

    பதிலளிநீக்கு
  63. பாரதி.. சும்மா சுவாரஸ்யம். அதையும் ரசிக்கலாம். அது சரி, மற்றவைகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...

    பதிலளிநீக்கு
  64. வாங்க கீதா... காலை நேரம் புத்துணர்ச்சி... விளையாட்டு.. ஆஹா...

    வாங்க துளஸிஜி... எம் ஜி ஆர் பற்றிய சந்தேகம் உங்களுக்கும் வந்ததா? அட!

    கீதா... எம் ஜி ஆர் பற்றி சமீபத்தில் யாருடைய பதிவிலோ பின்னூட்டமிட்ட நினைவு. அப்போது இதை எழுதி வைத்திருந்த நினைவு வந்தது. அதான்!

    பதிலளிநீக்கு
  65. வாங்க பானு அக்கா.. சங்கீதம் அவர் மனதில் இருக்கிறது. அதுதான் தன்னை மறந்த நிலையிலும் இசை வெளிவருகிறது. பாடல்கள் என்னென்ன என்று கடைசியில் சொல்கிறேன். கவிதை (என்று) ரசித்ததற்கு நன்றி. பாகமதி நல்ல பிரிண்ட் இன்னும் கிடைக்கவில்லை!!!

    :)))

    பதிலளிநீக்கு
  66. வாங்க ஏகாந்தன் ஸார்.. உங்களைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன். சந்திரபாபு எம் ஜி ஆரை மிஸ்டர் ராமச்சந்தர் என்றுதான் அழைப்பாராம். எம் ஜி ஆரால் தன்னுடைய ஆதங்கத்தைக் கூட சந்திரபாபுவிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் ஆதங்கப்படுவாராம். இசை பற்றிய பார்வை உங்கள் பார்வை. கடவுள் "தெரிவது" இல்லை. உணர்வது. தெய்வம் நேரில் வந்த அனுபவங்கள்! இதைப்பற்றியே நம் நண்பர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர் எழுதும் எண்ணம் உண்டு எனக்கு. பகிர்ந்த பாடல் வரிகளை அனைவரும் சரியாய்க் கண்டுபிடித்து விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். 'விழியில் விழுந்து இதயம் நுழையும்' வைர வரிகள் களவாடப்பட்டவைதான் போல! அனுஷ் படம் இணையத்தில் இல்லாத ஸ்டாக்கா...?!! என்று ஒத்துக்கொண்டதே விஷயம். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  67. கடவுள் விஷயம் வாட்ஸாப்பில் வந்த ஒரு நீண்ட பதிவின் கடைசி வரிகள் கீதா / துளஸிஜி. ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  68. வாங்க துரை செல்வராஜூ ஸார்... காலையில் மறுதலிக்கப்படும் பின்னூட்டங்கள் காப்பாற்றிய உங்கள் வரிகளை ரொம்பவும் ரசித்தேன்!

    // கணப் பொழுதில் சரசர... ந்னு கருத்து மழை!... ஆகா...ன்னு இருந்துச்சு...
    விண்ணப்பம் போட்டதுக்கு தேங்காய்ப்பால் ஆப்பம் சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு..//


    ஆஹா....

    // இல்லை.. இது சும்மா!...
    என்றென்றும் வாழ்க எங்கள் பிளாக்!...//

    நன்றி ஸார்.

    பதிலளிநீக்கு
  69. வாங்க நெல்லை.. நான் கூட "நான் ஏன் பிறந்தேன்" வாங்கவேண்டும் என்று நினைத்தேன். இன்னும் வாங்கவில்லை. பாரத் பட்டம் தனக்கு கிடைக்காத வருத்தம் சிவாஜிக்கும் .எம் ஜி ஆரை அவர் தாமதமாகவே பாராட்டி இருக்கிறார்!

    கடவுளுக்கு உருவம் என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்? ஆனால் அப்படியும் சொல்லலாம். உன் எதிரில் பல முறை வந்தேன் நீ என்னை உணரவில்லை என்று ஏசுபிரான் சொல்வதாகப் படித்திருக்கிறேன் (உபயம் : நற்கருணை வீரன்)

    நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் தவறு. சரியாய்ச் சொல்லி விடுவீர்கள் அனைவரும் என்றே நம்பி இருந்தேன். குறைந்த பட்சம் துரை செல்வராஜூ ஸார் கண்டுபிடித்து விடுவார் என்றும் நினைத்தேன். எனக்கென்னவோ அவர் தெரிந்திருந்தும் சொல்லாமல் இருக்கிறார் என்றே தோன்றுகிறது. கவிதை எழுதிட்டுதான் அனுஷ் படம் இணைப்பேன். விளையாட்டாய் முக நூலில் ஆரம்பித்தது! கோவை ஆவி நஸ்ரியா பற்றி ஒரு கவிதை புத்தகமே வெளியிட்டார். அப்போது விளையாட்டாய் தொடங்கியது.

    பதிலளிநீக்கு
  70. வாங்க துளஸிஜி,,, நீங்க எப்பவுமே என் கவிதையை ரசிப்பீர்கள்! நன்றி.

    கீதா...

    // ஆனா எதுக்குக் கவிதைக்குப் போட்டது மட்டும் கண்ணீர் விடுது??!!! //

    மறுபடியும் கவிதை, அனுஷ் என்று ஆரம்பிக்கிறானே என்று பொம்மைக்கு(ம்) சோகம்!!!

    பதிலளிநீக்கு
  71. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  72. / அட!!!!!!!! இதான் அனுஷ்காவா? அப்படி ஒண்ணும் அழகா இல்லையே!//


    ஹா.... ஹா... ஹா... கீதா அக்கா.. grrrrrr கூட சொல்ல மாட்டேனே...! தெரியுமே எனக்கு!

    // ஶ்ரீராமை விட நீங்க தான் அனுஷ்காவின் ரசிகர்னு நினைக்கிறேன்//

    ஆ... அப்படி இருக்குமோ! அவரையும் மாற்றி விட்டேனா!

    அப்புறம் இந்த அழகானவர் என்று நீங்கள் சொல்லியிருக்கும் லிஸ்ட் படித்தேன். அது முழுக்க முழுக்க உங்கள் கருத்து! காஞ்சனா ஓகே. ஜெ சில படங்களில் மிக அழகாய் இருப்பார். "காத்திருந்த கண்களே" பாடலில் ஒல்லியாய் நன்றாய் இருப்பார். அதுபோல சில பாடல் காட்சிகள் உண்டு அப்புறம் "கட்டழகுத் தங்கமகள் திருநாளோ.."

    பதிலளிநீக்கு
  73. வாங்க ஏஞ்சல்...

    காணொளி நீங்கள் உணர்ந்து ரிசித்திருப்பது புரிகிறது. நண்பர்கள் அனைவரும் அவர் பாடலைக் கொலை செய்வதை மட்டுமே பார்க்கிறார்கள்! கேட்ட பாடல்களை லிங்க்கோட தந்திருந்தால் ரசித்திருப்பீர்களா.. நிறையவர் பார்க்க மாட்டார்கள். மேலும் அதைக் கண்டு பிடிக்கிறீர்களா என்றும் ஒரு சுவாரஸ்யம்.

    // என்னது // கிளித்தேரா // இருங்க மேனகா காந்திகிட்ட போட்டுக்கொடுக்கிறேன் //

    படிச்ச உடனேயே சிரித்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  74. வாங்க கோமதி அரசு மேடம்.. நேற்று வேறு பதிவு வெளிவரும் நாள் என்பதால் காதல் பற்றி இன்று பகிர்ந்தேன் என்று சும்மா சொல்லி வைக்கலாம்! ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  75. வாங்க அதிரா...

    // இண்டைக்கும் கீசாக்கா 1ஸ்ட்டு இல்லேஏஏஏஏஏஏஏ:) சவுண்ட் மட்டும்தேன் வருது:) ஹா ஹா ஹா..//

    // எனக்கென்னமோ அவரிலும் அவர் பற்றிய விடயங்களிலும் ஆர்வம் இல்லை, //

    அவர் பற்றிய விஷயங்களில் மர்மம் அதிகம் (முன்பு) எனவே தேடித்தேடிப் படிப்போம்.

    உங்களுக்கு அக்காவை வம்பிழுக்காமல் பொழுது போகாதே...!!!!



    வீடியோவை நிறுத்திட்டீங்களா... அச்சச்சோ...

    தினம் தினம் சில கடவுள்களை உணராமல் இருக்கிறோம்!

    // மயக்கம் வந்ததோ ஸ்ரீராம்?:).. //

    பாட்டு கேட்டாலே மயக்கம்தான் அதிரா...

    // ஆர் என்ன ஜொன்னாலும் அனுக்கா அழகுதான் ://
    ஆ.... அது சரி...!

    // ஆனா நான் அனுக்கா ரசிகையில்லை//

    இது நம்ப மாட்டேன்!!! தப்பு... தப்பு!

    பதிலளிநீக்கு
  76. கீதா அக்கா... நிறைய பிரபலங்களை நீங்கள் அருகில் பார்த்திருப்பது ஆச்சர்யம் + சந்தோஷம். காஞ்சனா உங்கள் வீட்டு மாவடு செய்துதரச்சொல்லி வாங்கிப் போனார்களா? அட! ஜெ கொஞ்சம் கர்வ டைப்!

    பதிலளிநீக்கு
  77. வாங்க பானு அக்கா... கடவுள் விஷயம் மெத்த சரி! ஆதிக் கருக்கலில் பாட்டைத் தப்பா சொல்லி இருக்கீங்க. நான் என்ன பாட்டுன்னு சொன்னதும் எத்தனை பேர் நாக்கைக் கடிக்கப் போறீங்களோ...! பத்மினிக்கு வையஜயந்தி தேவலாம். வஞ்சிக்கோட்டை வாலிபன், மற்றும் ஒரு ராஜ் கபூர் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள் இல்லை?

    பதிலளிநீக்கு
  78. கீதாக்கா.. எங்கப்பா குமாரி கமலாவின் பயங்கர ரசிகர். பயங்கர ஜொள்ளு என்று மனதுக்குள் நினைத்திருக்கிறேன். அவர் மறைவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு கூட டியூபில் குமாரி கமலா வீடியோ போடச்சொல்லி ரசித்ததோடு, பேரன்களையும் அழைத்து அழைத்துக் காட்டினார்!

    // அது சரி, ஶ்ரீராம் எங்கே?//

    இங்கேதான் அக்கா இருக்கிறேன். பயணம் எல்லாம் எல்லை. நீங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக உரையாடும்போது குறுக்கிட வேண்டாம் என்றுதான். நாம் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டுமா என்ன?

    // இப்போல்லாம் ஒண்ணும் சொல்லறதே இல்லையா, அதான் எதுவுமே தெரியலை! //

    இது அநியாயம். இந்தக் குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  79. ஏஞ்சல்...

    // நெல்லைத்தமிழன் இந்த கமெண்ட்ஸையேல்லாம் நல்லா வாசிக்கவும் //
    நீங்க அவர் ஆளை ஒன்றும் சொல்லவில்லையே... அவர் ஏன் கடுப்பாகணும்?!!!

    :)))

    பதிலளிநீக்கு
  80. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  81. வாங்க வல்லிம்மா...

    நான் எழுதும் எதையும் என் பாஸ் படிப்பதில்லை என்பது ப்ளஸ்ஸா, மைனஸா வல்லிம்மா? காஞ்சனாவுக்கெல்லாம் எதற்கு நடிப்பு? அழகு பொம்மை! ஆனால் அந்தக் கால நடிகைகள் குண்டாயிருப்பதுதான் அழகு என்று நினைத்திருப்பார்கள் போலும். இவர்களை வைத்துக் கொண்டு அந்தக் காலக் கவிஞர்கள் "ஒடிவது போல் இடையிருக்கும்" என்று பாடல்கள் எழுதினார்களே... அதுதான் கொடுமை!!!!

    பதிலளிநீக்கு
  82. ஏகாந்தன் ஸார்... மிர்பூர் T 20 மேட்ச் பார்த்தீர்களா? பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா... த்ரில்!

    பதிலளிநீக்கு
  83. இனி பாடல்களின் "விடைகள்:

    1. அதே பாடல். ஜீவனாம்சம் படப்பாடல். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, யேசுதாஸ் பாடிய பாடல்.

    2. கே ஜெ யேசுதாஸ் ஒரு பெண் குரலுடன் பாடும் "கூந்தலிலே நெய் தடவி " 'கல்யாண ஊர்வலம்' பாடல். காட்சியில் நாகேஷ், தன் அண்ணன் மகளாக நடிப்பவருடன்!


    3. 'தென்றலே என்னைத்தொடு' படத்தின் "கண்மணி நீ வரக் காத்திருந்தேன்" பாடல். யேசுதாஸ் - சித்ரா.

    4. 'எங்க முதலாளி' படப்பாடல். காட்சியில் விஜயகாந்த்-கனகா. பாடல் யேசுதாஸ் ஜானகி


    5. 'மச்சானைப் பார்த்தீங்களா' படத்தில் வரும் யேசுதாஸ் சுசீலா குரலில் "மாம்பூவே... சிறு மைனாவே" பாடல்.

    6. 'நீதியின் மறுபக்கம்' படப்பாடல். யேசுதாஸ் ஜானகி குரலில் "மாலிக் கருக்கலில் சோலைக் கருங்குயில்"

    பதிலளிநீக்கு
  84. MGR வயது - டக்குன்னு இதான் ஞாபகம் வந்தது ' வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார் '.

    காணொளி பார்க்க/கேட்க முடிகிறது - ஆகா என்ன ஒரு சாரீரம்.

    தில் msg - சிந்திக்க வைக்கிறது.

    Anushka - பார்க்கவும், படிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  85. நன்றி ஸ்ரீகாந்த். ஒவ்வொன்றையும் தொட்டு பின்னூட்டமிட்டதற்கு.

    பதிலளிநீக்கு
  86. ஸ்ரீராம், BD-SL மேட்ச் பார்க்கவில்லை. ஸ்ரீலங்காவின் form அல்லது lack of it - உச்சம்-பாதாளமென எந்த தெசை நடக்கிறது எனத் தெரியவில்லை!

    தென்னாப்பிரிக்கா-இந்தியா 5-ஆவது மேட்ச்சைப் பார்த்தேன். சில ரோஹித் ஷாட்டுகள் செம. நாளைக்கு கோஹ்லி& கோ. என்ன செய்யுதுன்னு பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  87. ஐஸ்வர்யா ராயெல்லாம் அழகோடு சேர்த்தியே இல்லை பானுமதி! :) ஜெ.யை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கேன். சித்ராலயா அலுவலகத்தில் முகம் கழுவிக் கொண்டு துண்டால் ஒற்றி எடுத்துக் கொண்டபோது பார்த்திருக்கேன். அந்தக் கண்கள், வளைந்த புருவங்கள், (திருத்தியதெல்லாம் பின்னால்), கன்னங்கள்,நெற்றி என ஒவ்வொன்றும் தனித்தனியாக என் மனதில் பதிந்தது. காஞ்சனாவை நான் நல்ல நிறம் என்றே சொன்னேனே தவிர ரொம்ப அழகுனு ஒத்துக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  88. என்னதான் ஶ்ரீராம் இதெல்லாம் என்னோட கருத்து மட்டும் என்று சொன்னாலும் பலரும் ஜெ அழகுன்னே ஒத்துப்பாங்க. அவருடைய பின்னாட்களின் நிலையைப் பார்த்துட்டுச் சொல்லக் கூடாது! பலவிதங்களிலும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பின் விளைவு அது! சூழ்நிலைக் கைதி! சந்தர்ப்பங்கள் வாய்த்தும் அவற்றிலிருந்து வெளியேறவே இல்லை. ஆழ்ந்த சிந்தனைகள் கொண்டிருந்தும் அவர் ஏன் தன்னை இப்படி மாற்றிக் கொண்டார் என்பது இன்னமும் புரியாத புதிர்! :(

    பதிலளிநீக்கு
  89. கொஞ்சம் கஞ்சிக் கடமை ஆற்றப் போகணும். அதனாலே இன்னிக்கு லேட்டுத் தான். :)

    பதிலளிநீக்கு
  90. எம்ஜியார் விஷயத்திலெல்லாம் ஆராய்சியே கூடாது.. அதுவும் வெட்டியாய்! :)) அவர் வயது ஆராய்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.

    கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்து விட்டபடியால், நீங்களே கடவுளராய் இருக்கும் பொழுதும் அது உங்களுக்குத் தெரிவதில்லை.. என்றல்லவா இருந்திருக்க வேண்டும்?.. (அத்வைத பாதிப்பிலிருந்து கிளர்ந்த சிந்தனை)

    //அவள் மீது பாணம் தொடுக்க மறந்து
    மயங்கி நின்றாயோ..//

    இந்த விஷயத்தில் மன்மதனுக்குக் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது!
    தொடுக்க வேண்டியது யார் என்று தெரியாத தடுமாற்றம்!

    பதிலளிநீக்கு
  91. ஜீவி ஸார்...

    // எம்ஜியார் விஷயத்திலெல்லாம் ஆராய்சியே கூடாது.. அதுவும் வெட்டியாய்! :)) அவர் வயது ஆராய்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.//

    ஹா... ஹா... ஹா... ஆமாம், அவர் மர்மங்களின் மஹாபுருஷர்!

    அத்வைத சிந்தனை ஸூப்பர். மன்மதன் தொடுப்பதால்தானே மனத்தடுமாற்றம் வரும்?!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!