Wednesday, February 7, 2018

180207. காட்டுத்தனமா ஒரு புதிர்!


Quiz
ஒளிந்திருக்கும் மிருகங்களைக் கண்டுபிடியுங்க.  

1) சேர்க்க வா 

2) பாடு கோந்து 

3) பரிமாற உதவும் கருவியிலிருந்து புள்ளி வெச்ச எழுத்தை 'சுரண்டி' எடுத்துட்டா வருவாரு இந்த டி ஆரு!

4) குங்குமத்தை கொஞ்சம் எடுத்து 'ர'கசியமா பிச்சிப் போட்டா  ....  வருவார்.!   

22 comments:

KILLERGEE Devakottai said...

இதோ வர்றேன்...

துரை செல்வராஜூ said...

வாழ்க நலம்..

துரை செல்வராஜூ said...

அப்பாடி... ஒரு வழியா புதிர் போட்டாச்சு!..

துரை செல்வராஜூ said...

கொஞ்சம் பொறுங்க..
கரடிய விரட்டிட்டு குரங்கை அழைச்சிக்கிட்டு வர்றேன்...

Bhanumathy Venkateswaran said...

ஹை! நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிர். வெல்கம்! வெல்கம்!
1. சிங்கம்
2.......
3. கரடி
4. குரங்கு

Bhanumathy Venkateswaran said...

சாரி! நமபர் மாறி விட்டது.
2. சிங்கம்

Bhanumathy Venkateswaran said...

1. ஒட்டகம்
2. சிஙகம்
3. கரடி
4. குரங்கு

துரை செல்வராஜூ said...

>>> 1) சேர்க்க வா, 2) பாடு கோந்து.. <<<

1) ஒட்ட வா .. 2)பாடு பசை... ன்னு இருந்திருந்தா மூளைக்கு நல்லா இருந்திருக்கும்..

50/100 - எல்லாம் இது போதும்!..

வெங்கட் நாகராஜ் said...

ஒட்டகம், சிங்கம், கரடி, குரங்கு! - ஆஹா.... நான் சொல்லலாம்னு நினைச்சா ஏற்கனவே சொல்லிட்டாங்களே! :)

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா வெட் புதிரா....வந்துட்டேன்...இன்னிக்கு ஆஜர் முதலில் வைக்க முடியலை மாமியார் வீட்டில் என்பதால் இணையம் உண்டு..இன்று..ஸோ வலை உலா...மாலை 3 மணி வரை..இத் புதிருக்கு

மத்த விடை எதுவும் பார்க்காமல் விடை சொல்லறேன்...காப்பினு சொல்லப்படாது...சொல்லிப்புட்டேன்..ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

1. ரொம்பக் கஷ்டம்...ஹா ஹா ஹா ஒட்டகத்தைக் கட்டிக்கோ...கெட்டியாக ஒட்டிக்கோ... ஒட்டகம் வந்துவிட...

2 சிங்+கம் ...சிங்கம் வரார் அப்படினு...

3. கரண்டி ல ண் ந சுரண்டிக்கிட்டு இருந்த ...கரடி.ய.(டி ஆர்!!! ஆ ஹா ஹா ஹா)

4 பிய்ப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்...குங்குமம் இதில் ர வை ரகசியமாகச் சேர்த்து ஷ்ஷ்ஷ்ஷ்ச் மம் என்று வாயில் விரலை வைத்துச் சொல்லி மம் ஐ மறைத்துக் காட்டிட குரங்கு ஒட்டகத்தையும், கரடியையும் சிங்கம் வரார்னு உஷார் படுத்துறார்...

கீதா

KILLERGEE Devakottai said...

இதோ வர்றேன்'னுதானே... சொல்லிட்டு போனேன் அதுக்குள்ளே கும்மியடிச்சுட்டீங்களே.... அதனால சொல்வோமா ? என்று யோசிக்கிறேன்.

பரிவை சே.குமார் said...

ரொம்ப ஈஸியாக் கொடுத்தா நாங்கூட கண்டுபிடிச்சிடுவேனே...
காலையில் பார்த்து என் கணிப்பொறி மூலம் கருத்திட முடியாது என்பதால் அலுவலகம் வந்து பார்த்தால் நிறையப் பேர் 100/100 வாங்கிட்டாங்களே... :)

நெல்லைத் தமிழன் said...

1. Sync come - சிங்கம் or ஒட்ட come - ஒட்டகம்
2. Sing come - சிங்கம்
3. கரண்டி - கரடி
4. குங்குமம், ர, பிச்சிப் போட்டால் - குரங்கு

நெல்லைத் தமிழன் said...

2.Sing Gum (typo error).

கிரேசி மோகன் டிராமாவில் ஒரு வசனம் வரும்.

'மாப்பிளை நீர் எப்போதும்போல் பொய்தான் சொல்லுவீர் என்று எதிர்பார்த்து அதற்கு ஏத்த மாதிரி பேச ஆரம்பிச்ச, அன்னைக்குப் பார்த்து அரிச்சந்திரனாட்டம் உண்மையைத்தான் பேசுவீர்'

அதுமாதிரி, வரும் என எதிர்பார்த்தான் அன்றைக்கு வரவே வராது. இது எங்க வரப்போகுதுன்னு நினைச்சால் அன்றைக்குப் பார்த்து காலங்கார்த்தால வெளியிட்டுடறீங்க.

athiraமியாவ் said...

ஆங்ங்ங் வலி விடுங்கோ:) ஹையோ முதல்கோணல் முற்றும் கோணல் என்பினமே:) ஆரம்பத்திலயே டங்கு ஸ்லிப்பாகித் துலைக்குதே:)).. வழி விடுங்கோ.. பசு வருது பசு வருது:))..

ஆஹா புதிருக்கே புதிரா எனக் கொயம்பிடாதீங்கோ...வியக்கமா டெல்லிடுறேன்:)..

முதலாவதில முடிவு என்ன.. “வா”.. இதனை பிரிச்சால்.. வ் + ஆ.. அப்போ ஆ இருக்கெல்லோ:)) ச்ச்ச்சோ சிம்பிள் ஆ எண்டால் பசு:)..

ரெண்டாவதில “கோ” இருக்கெல்லோ... கோ எண்டாலும் பசுத்தானே:)).. அய்ய்ய்ய்ய் அப்போ 1 க்கும் 2 க்கும் ஆன்சர் பசூஊஊஊஊஊ:))..

3 ஆவதுக்கு டி ஆர் அங்கிளைப்பார்த்து கரடி என இங்கின பலபேர் சொல்லிப்போட்டினம் இதோஓஓஓஓஒ ஜிம்பு:) வுக்கு தகவல் அனுப்புறேன்ன் உடனேயே எங்கள்புளொக்கில் ஆஜராகும்படி:)..

4 வது கரீட்டூஊஊஊஊஊ என் கிரேட் குருவைத்தவிர வேறு ஆரால பிச்சுப் பிச்சுத்தர முடியும் உணவை:)..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

கா.புதிர்.அருமை. இருக்கிற கொஞ்ச மூளைகளை உபயோகித்து புதிரை விடுவிக்கலாம் என்று வந்தால், அனைவரும் முந்தி விட்டார்களே! நன்றி அனைவருக்கும். அடுத்த புதிரில் வெல்ல முடிகிறதா என பார்க்கலாம்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
புதிரா

கோமதி அரசு said...

புதிர் எளிதாக இருந்தது கலந்து கொள்ள முடியாமல் போச்சு. நன்றாக புதிர் போட்டதற்கு வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

ஆஹா! நேத்துப் பதிவே வாந்திருக்காதுனு நினைச்சால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

சேர்க்க= ஒட்ட வா= கம் ஒட்டகம்

பாடு கோந்து= சிங் கம் சிங்கம்

கரண்டி= கரடி

குங்குமம்= குரங்கு இவ்வளவு சுலபமாக் கொடுத்தால் நாங்க கூடச் சொல்லிடுவோமுல்ல! :)

Geetha Sambasivam said...

ஆஹா! நேத்துப் பதிவே வாந்திருக்காதுனு நினைச்சால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

சேர்க்க= ஒட்ட வா= கம் ஒட்டகம்

பாடு கோந்து= சிங் கம் சிங்கம்

கரண்டி= கரடி

குங்குமம்= குரங்கு இவ்வளவு சுலபமாக் கொடுத்தால் நாங்க கூடச் சொல்லிடுவோமுல்ல! :)// இந்த என்னோட கருத்து எனக்கு ஃபாலோ அப்பில் வந்திருக்கு! ஆனால் இங்கே காணோமே! என்ன இது!!!!!!!!!!!!!!!!! பெரிய புதிரா இல்ல இருக்கு?

Geetha Sambasivam said...

லேட்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!